தூரம் போகாதே என் மழை மேகமே !! - 75

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer



ராஜாவின் சுட்டிதனத்தையே முதலீடாய் கொண்டு அவனிடம் மேலும் பேசினான் அர்ஜூன், "ராஜா. நீங்க சமத்துகுட்டி. நாளைக்கே கார் உன் கையில் இருக்கும். ஆனால் நீ அதற்கு பதிலாக இன்னொன்று செய்ய வேண்டும்" என்று ராஜாவை கண்ணில் சிரிப்புடன் பார்த்தான்.




“என்ன மா.மா. டாஜா என்ன செஞ்சி . கார் வாங்கி " என்று கேட்டு கிளுக்கி சிரித்தான்.




“ஏன் பேரன் பெரிய அவன் தாத்தாவை போலவே பெரிய வணிகனா வருவான்டா.. பாரேன் எப்படி பேரம் பேசுகிறான்" என்று வாய்மீது கை வைத்து அதிசயத்தாள் சுமித்ரை.




ராஜாவிடம் ஏதேனும் செய்ய சொல்ல வேண்டுமென்றால் அவனுக்கு பிடித்த ஒன்றை சலுகையாக கொடுத்து எளிதில் செய்ய வைத்துவிடலாம். அது தனக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்று. அதனால்தான் முதலில் சென்னை வந்த போது அவன் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அவனை அடக்க இதே யுக்தியை ஆதிரை கையாண்டிருந்தாள். ஆனால் அது எப்படி அர்ஜூனுக்கு தெரிந்தது. தெரிந்தது மட்டுமில்லாமல் எவ்வளவு அழகாக அதை ராஜாவிடம் கையாள்கிறான் என்று பெருமையாக நினைத்தாள் .




ராஜா கேள்வி நிட்டு உறுதியாய் நிற்பதை பார்த்துவிட்டு ஆதிரையை ஒரு பார்த்துவிட்டு , “ராஜா இவங்க. உன் அத்தை.. அம்மா இல்லை… .. இவங்களை நீ அத்தை என்று சொல்லி அழைக்க வேண்டும். அப்படி செய்தால் உடனே கார் உன் கையில் வரும். எங்கு சொல் பார்ப்போம்.” என்று சேர்த்து சொல்ல ஆதிரை திகைத்து நின்றாள்.




என்ன சாமர்த்தியம் இவனுக்கு. இதற்குதான் ராஜாவிடம் அதை கேட்குமுன் என்னை பார்த்தானா.? என் ராஜாவை என்னிடமிருந்து பிரிக்க ஏதேனும் திட்டமா.. என்று அர்ஜூனின் கண்களை மீண்டும் வியப்பாக பார்த்தாள் ஆதிரை. அவனது கண் சிமிட்டல் ஆதிரைக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அதனோடு ராஜாவினிடம் பேசுவது என்று ஆதிரையை உரசிக்கொண்டு அமர்ந்தது வேறு ஆதிரையின் கோபத்தை இன்னும் அதிக படுத்தியது. இருக்கும் சூழல் அவளை கட்டுபடுத்த குரலை மட்டும் மாற்றி ,”இ.. இருக்கட்டும் விடுங்களேன் அர்ஜூன்.”என்று சொல்லி பார்த்தாள்.




அதற்கு பார்வையாலே அவளை அமர்த்தி , “ நீங்க சொல்லுங்க ராஜா. சமத்துதானே நீங்க. அஸ்மி பாப்பாக்கு அத்தைனா .. உங்களுக்கும் அத்தைதானே. எங்கே அத்தை என்று சொல்லுங்க..” என்றான் அர்ஜூன்.




அர்ஜுனையும் ஆதிரையையும் மாறி மாறி பார்த்த ராஜா, குழப்பமாக நின்றுக் கொண்டு விழித்தான். ஒரு காருக்காக இது மிக பெரிய விலையல்லவா. பின் சுற்றி இருக்கும் எல்லோரையும் பார்த்தான் ராஜா. பின் அவனுக்கு என்ன தோன்றியதோ ஆதிரையின் அருகில் சென்று அவளது கன்னத்தில் இதழொற்றி ஒரு நொடி தயங்கி நின்றான்.




ராஜாவின் செய்க்கை அங்கிருந்த அனைவரின் உள்ளத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இருந்தும் யாரும் அர்ஜூனை தடுக்கவில்லை. அங்கிருந்த அனைவரின் உள்ளம் உணர்ந்ததாலோ என்னமோ அர்ஜூன் ராஜாவிடம், "ராஜா.. கார்..” என்று கண்களாலே சிரித்து ஊக்க படுத்தினான். அவனது கண் செய்த மந்திரமோ என்னமோ ராஜா மீண்டும் ஒருமுறை ஆதிரையின் கன்னத்தில் இதழொற்றி, “அத்தைம்மா" என்று அர்ஜூன் சொன்னதையும் அவனுக்கு பிடித்ததையும் சேர்த்து புது சொல் கொண்டு அழைத்து ஆதிரையை கட்டுக் கொண்டான்.




அதனை கேட்டதும் அங்கிருந்த அனைவரும் சிரித்த போதும் எல்லோர் முகத்திலும் தெரிந்த நிம்மதி ஆதிரைக்கு ஆச்சரியமானது. ஆதிரையை தவிர இந்த அத்தை அழைப்பில் அங்கிருந்த அனைவருக்கும் மகிழ்ச்சி அதைதானே அர்ஜூனின் விழிகளும் மற்றவரை கவனி என்பது போல் சைகை செய்தது. ஆனால் என் ராஜா அப்படி விட்டுவிடுபவன் இல்லையென்பது உடன் சேர்ந்து வந்த அம்மாவிலே ஆதிரை நிம்மதி கொள்ள வேண்டியிருந்தது.




அவர்களின் நிம்மதியை நிரூபிப்பதுப் போல், “இந்த பிரட்சனை எப்படி சரியாக போகிறது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். சிறுவயதிலிருந்து அம்மாவாகி போன ஆதிரையை அத்தையாக ராஜா ஏற்க வேண்டுமே என்று கவலையாக இருந்தது. நல்ல வேலை செய்தாய் கண்ணா" என்று சுமித்ரை தன் மகனை மெச்சினாள்.




கண்ணா என்று பல நாட்களுக்கு பிறகு ஆதிரை மூலம் கேட்ட ராஜா.. சுமித்ரையும் அவனை பற்றிதான் சொல்வதாக எண்ணி, "நான்.. நல்ல.. வேலை.. செஞ்ச... " என்று துள்ளி குதித்தான்.




அவனது செயலில் அங்கே மீண்டும் சிரிப்பலை பரவியது. அழகாக சிரித்த அர்ஜுனை பார்த்த ராஜா அவனது கன்னத்திலும் எட்டி இதழ் பதித்து, “அத்தைம்மா தூக்கி மாமா..” என்று முன்பு சொன்னதையே மாற்றி சொல்லி சிரித்தான் ராஜா. அந்த செயலில் ஆதிரையின் விழியில் ஏதோ ஏக்கம் பரவுவதை அவளால் தடுக்க முடியாமல் பெருமூச்சுவிட்டாள். இதனை ஓரகண்ணால் அவளையே பார்த்திருந்த அர்ஜூனின் கண்ணிலும் விழாமல் போனால்தான் அதிசயம்.




கற்பூரம் போல அர்ஜூன் சொன்னதை அழகாக உள் வாங்கிக் கொண்ட ராஜாவை நினைத்து பெருமித படுவதாக இல்லை தன் உரிமை பரிபோனது போல் இருக்கும் நிலையை எண்ணி வருத்தபடுவதா என்று தெரியாமல் தடுமாறிய ஆதிரை , “நா.. நான் உடை மாற்றி வருகிறேன்..” என்று சொல்லிய வண்ணம் அந்த இடத்தை விட்டு அவசரமாக எழுந்தாள். ஆனால் பல நாட்கள் பிறகு பார்த்த தன் அம்மாவை ராஜா விடுவதாக இல்லை. அவள் அறை வாசல் செல்லும் முன்னரே "அம்மாஅத்தை" என்று மீண்டும் குழப்பியடித்து அடம்பிடித்துக் கொண்டு ஆதிரையின் பாவாடையை பற்றிக் கொண்டான்.




அதனை பார்த்த சுமித்ரை, “கொஞ்சம் நேரம் அவனுடன் இருந்துவிட்டே போயேன் ஆதிரை. குழந்தை தவிக்கிறானே. “ என்றார்.




ஆதிரைக்கும் அதுவே சரியென்று பட, “ சரிங்க அத்தை.” என்று ராஜாவை கையில் தூக்கிக் கொண்டு அந்த கட்டிலில் அமர்ந்தாள் ஆதிரை. சுற்றி இருந்த எல்லோரையும் ஒருமுறை பார்த்த ஆதிரை அங்கு அர்ஜூன் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருப்பதும் கண்ணில் பட்டது.




இது என்ன பார்வை? ஆளையே விழுங்குவதுப் போல் எல்லோர் முன்னிலையிலும். என்னன்னமோ செய்கிறது. என்று ஆதிரை சலிப்புறும் போதே ஆதிரையின் உடல் சூடேறுவதை தடுக்க முடியவில்லை.




அதிலிருந்து தப்பிக்கும் எண்ணமாய் , ஒரு தயக்கத்துடன், “அ.. அத்தை.. நான் கொஞ்ச நேரம் என் அறையில் ராஜாவை வைத்திருக்கட்டுமா?” என்று அனுமதிப் போல கேட்டாள். அவளை கேள்வியாக பார்த்த போதும் சுமித்ரை மறுத்து பேசவில்லை. “ம்ம் அப்படியே செய்யேன்" என்றார் மனதில் தோன்றியதை மறைத்து.




அதற்கு புன்னகித்தை ஆதிரை, அதே குதுகலத்துடன், " தாங்க்ஸ் அத்தை.. ராதை அவனது ஆடையை எடுத்து கொடுமா.. நானே அவனுக்கு உடை மாட்டிவிடுக்கிறேன். கொஞ்சம் நேரம் என் கண்ணனுடன் இருந்துவிட்டு அழைத்து வருகிறேன்.” என்று முகத்தில் மலர்ச்சியுடன் ராஜாவின் உடையை வாங்கிக் கொண்டு டவலுடனே ராஜாவை தன் அறைக்கு தூக்கி சென்றாள் ஆதிரை. அவர்கள் போவதையே பார்த்திருந்த போதும் அங்கு யாரும் எதுவும் பேசவில்லை.




ராதை முன்னோக்கி வந்து , “ஏ அஸ்மி குட்டி இங்க வாடி, நீயும் இந்த சட்டை பாவாடை போட்டுக் கொள். வா.. வா" என்று அர்ஜூனிடமிருந்து அஸ்மியை அழைத்து அவளுக்கு ஆடை மாட்டிவிட்டாள். ராஜா புது அத்தையுடன் எங்கோ செல்வதையே பார்த்திருந்த அஸ்மிதா ஏதோ ஏக்கம் தோன்ற அவர்கள் போன திக்கையே பார்த்த வண்ணம் ராதையிடம் வந்தாள்.




ராஜாவிற்கு உடை மாற்றிவிட்டு அங்கு மேஜை மீதிருந்த தன் பையிலிருந்து அவளுக்கென்று ஒரு ஆடையை தேடிக்கொண்டு நின்றிருந்தாள் ஆதிரை. ராஜா ஆதிரையின் காலினை பிடித்துக் கொண்டு " அம்மா. அம்மா..” என்று அழைத்துக் கொண்டிருந்தான்.




ஆதிரையும், “ம்ம்… ம்ம்..” என்று அவனுக்கு பதிலுறுத்திக் கொண்டே இருந்தாள். ஆனால் ராஜாவும் அதற்கு மேலும் எதுவும் பேசினான் இல்லை. ஆதிரையின் காலையே சுற்றி சுற்றி வந்துக் கொண்டிருந்த ராஜாவினை பார்க்கும் போது ஆதிரைக்கு பழைய நியாபகம் வந்தது. ராஜாவை எப்போதும் தன்னியல்பாக இருக்கும்படியே ஆதிரை வளர்த்திருந்தாள். அதனால் தன்னையே சார்ந்திருக்கும்படி அவனை பார்த்ததில்லை. மழை நேரங்களில் இடிஇடிக்கும் போதும் , தீபாவளி நேர பட்டாசு வெடிப்பு சத்தம் கேட்கும் போதும் மட்டுமே பயந்துக் கொண்டு இப்படி அம்மா சபம் போடுவான். அந்த பயம் போகும் வரை கந்தனிடம் கூட கொஞ்சம் நேரம் இருக்க மாட்டான்.




உடனே அவனுக்கு எதனாலோ பயமோ என்று சந்தேகம் வர , அவள் வேலையை அப்படியே போட்டுவிட்டு , “அம்மா அம்மா " என்று ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்த ராஜாவினை தூக்கிச் சென்று கட்டிலில் அமர வைத்து உடன் அமர்ந்து அவன் முகத்தை பார்த்த வண்ணம், “என்ன கண்ணா? என்ன செய்கிறது. அம்மாவிடம் என் ராஜாகுட்டிக்கு என்ன வேண்டும். அம்மாவையே பிடித்துக் கொண்டு இருந்தால் அம்மா அடுத்த வேலை எப்படி செய்வது" என்று முன்பு போல அப்படி சொன்னால் புரிந்துக் கொள்ளும் ராஜாவாக எண்ணி சொன்னாள் ஆதிரை.




ஆனால் ஆதிரை அப்படி பேசவே காத்திருந்தவன் போல , தன் நெஞ்சில் கையை வைத்து "அம்மா.. பய்.. அம்மா பய்..” என்று தன் பயத்தை அறைகுறை வார்த்தைகளில் எப்போதும் இந்த சைகையிலே புரிந்துக் கொள்ளும் தன் அம்மாவிடம் சொல்லிவிட்டு அவளது மார்பில் சாய்ந்துக் கொண்டான் ராஜா.




ஆதிரை நினைத்ததுப் போலவே அவன் வார்த்தைகளில் மட்டுமல்ல ராஜாவின் முகத்தில் தெரிந்ததும் பயமே. முகம் வெளுப்புற்று , மிரண்டு தெரிந்த ராஜாவின் கண்கள் ஆதிரையை காரணம் புரியாமல் துணுக்குற செய்தது. இங்கு எதுவும் வெடி சத்தமில்லையே . அல்லாமல் எதையேனும் பார்த்து பயந்துவிட்டானா? என்று சுற்றும் முற்றும் பார்த்தாள். அவர்கள் இருவரை தவிர வேறு யாருமில்லை. சந்தேக படும்படியாக எதுவுமில்லை. முன்பை விட அதிகம் பேசுவதுப் போல தெரிந்த ராஜாவிடம் காரணம் அறிய அவனிடமே கேட்டிட எண்ணினாள்.




“கண்ணா.. என்ன ஆச்சு.. எதனால பயம். அம்மா உன் கூட இருக்கும் போது யார் உன்னை என்ன செய்துவிட முடியும் . சொல்லுங்க.. ஏன் பயம்" என்று அவன் தலையை வருடிய வண்ணமே கேட்டாள் ஆதிரை.




அதற்கு நிமிர்ந்த ராஜா கலங்கிய முகத்துடன், “அம்மா.. விட்டு போவ கூடா… .. பய் பய்..” என்று மீண்டும் தன் நெஞ்சில் கையை வைத்து செய்தான்.




விழிவிரித்து அவனையே பார்த்த ஆதிரைக்கு கண்ணில் நீர் பளபளத்தது. இவனை விட்டு எப்படி போவது. இதை எதையும் யோசிக்காமல் அந்த அர்ஜூனிடம் அவன் மறுமணம் செய்துக் கொள்ள அனுமதி போல விலகுவதாக உறுதிகொடுத்துவிட்டேனே. என் நிலை சொன்னால் இந்த சின்ன பிள்ளை புரிந்துக் கொள்ளுமா. நானே புழுவாக துடித்துக் கொண்டிருக்கிறேன். என் மீது பாசம் வைத்துவிட்ட காரணத்திற்காக இந்த பிஞ்சு என்ன பாவம் செய்தது. இப்படி தவிக்கிறதே என்று ஆதிரையின் உள்ளம் மௌனமாக அழுதது.




இவ்வாறாக ஆதிரையின் மனம் சஞ்சல பட்டுக் கொண்டிருக்க தன் அம்மாவிடமிருந்து பதிலேதும் வராமல் போகவே ராஜா மேலும் பிடிவாதமாக , “அம்மா என்ன விட்டு போக கூடா.. போக கூடா… " என்று அடம்பிடித்து அவளிலிருந்து விலகி அந்த பெரிய கட்டில் முழுதும் உருண்டு கத்தினான்.




ஆதிரையின் வளர்ப்பில் ராஜாவின் அடம்பிடிப்பது இவ்வளவு தீவிரம் இருந்ததில்லையே தன் பிரிவால் மிகவும் தவித்திருக்கிறான் எனபதை உணர்ந்த மாத்திரத்தில் ஆதிரை அவனிடம் சென்று சமாதனம் செய்ய "ராஜா.. அம்மா.. சொல்வதை கேள்" என்று முயன்றாள், ஆனால் அவன் இன்னும் விலகி நகர்ந்து , “அம்மா… சொன்னா தா.. என்ன விட்டு போக கூடா..” என்று அதே நிலையில் உறுதியாக இருந்தான்.




என்ன செய்வது என்று புரியாமலும், குழந்தையிடம் பொய்யாக வாக்கு கொடுக்க பிடிக்காமலும் சோர்ந்த ஆதிரை ஒரு நொடி தவித்தாள். ஆனால் ராஜாவின் அழுகை அதிகரிப்பதுப் போல தெரிய வேறு வழியில்லாமல், “கண்ணா. அம்மா சொல்வதை கேட்பதானால் அம்மா உன்னை விட்டு போக மாட்டேன்..” என்று சொன்னாள். அதனை கேட்டதும் மாயம் போல ராஜா சட்டென அழுகையை நிறுத்தினான். படுத்திருந்தவன் எழுந்து அமர்ந்து அவளை பார்த்து, “நிஜம்மா...” என்று கண்களில் நீர் தேங்க கேட்டான்.




அதனை பார்த்த ஆதிரைக்கு அவனை ஏமாற்றுகிறோமே என்று மனம் வேதனை பட்டது. திடீரென்று ஒன்று தோன்ற, முன்பே என்னிடம் அண்ணி ராஜாவை விட்டுவிட்டுதானே போனாங்க, நான் பிரிந்து போகும் போதும் ராஜாவையும் அழைத்து செல்ல அனுமதி கேட்க வேண்டியதுதான். அண்ணிக்கு என் மீது ரொம்ப பாசம் கண்டிப்பாக சரி என்று தான் சொல்லுவாங்க , என்று தனுக்குள்ளே ஒரு முடிவெடுத்து அதன் நிம்மதியிலே, “ஆமாம்...” என்று கண்ணில் குறும்பு மின்ன சொன்னாள்.




“ஐ… . அம்மா என் கூடவே. டாஜா… jolly.. சொன்ன டாஜா எல்லா செய்வான்… .. ஆமாம் செய்வான். அம்மா என்ன விட்டு போக மாட்டா" என்று சொல்லிக் கொண்டு எழுந்து குதித்தான். அவனை பார்த்த ஆதிரைக்கு அவளது முடிவினாலும் மகிழ்ச்சி தோன்றிட சிரித்திட்டாள்.




அவளை திரும்பி பார்த்த , “ அம்மா டாஜா என்ன செய்ய..? அம்மா என் கூட..” என்று அவன் காரியத்திலே கண்ணாய் கேட்டான் ராஜா.




என்னவென்று சொல்வது. சும்மா அவனது அழுகையை நிறுத்த அப்படி மிரட்டும் குரலில் கேட்டாள். என்னவோ இவன் ஏதோ பெரிய விசயம் செய்து நானும் அர்ஜூனும் பிரியாமல் தடுக்க முடியும் போல இது என்ன குட்டி அரசனை போல தோரானையாக கேட்கிறானே. என்று ஆதிரைக்கு மேலும் சிரிப்பு வந்துவிட்டது. இருந்தும் ராஜா அப்படியே நிற்பதை பார்த்து என்ன தீவிரம் இவனுக்கு அர்ஜூனை போல செயலிலே கண்ணாய் இருப்பான் போல அப்பப்பா என்று பேச ஆரம்பித்தாள்.




எதையும் சொல்லாமல் ராஜா நான் அவனை போக மாட்டேன் என்பதை நம்ப மாட்டான் என்பது இது போல சில தருணங்களில் ராஜாவின் பிடிவாதத்தை உணர்ந்த ஆதிரை உணர எதையோ சொல்லி சமாளிக்க எண்ணி, “ம்ம் அப்படியா.. என்ன செய்ய சொல்லலாம்.." என்று யோசிப்பதுப் போல் ஒற்றைவிரலால் தன் முகவாயின் மீது கை வைத்து எடுத்துக் கொண்டே ஓரக்கண்ணால் அவனை பார்த்தாள்.




அவனும் ,"டாஜா என்ன செய்ய" என்று அவளை போலவே யோசனை செய்ய ஆதிரை," ம்ம்.. கண்டுபுடிச்சுட்டேன்.. என் கண்ணா இதுதான் செய்ய வேண்டும் “.. " என்று குறும்பாக சொன்னாள்.




“ஐ.. என்ன செய்.. என்ன செய்ய...” என்று மீண்டும் துள்ளி குதித்தான்.




"எனக்கு இங்க ஒரு முத்தா கொடுத்தா. நான் உன்னை விட்டு போகவே மாட்டேன். “ என்று அவனுக்கு கன்னம் காட்டி கண்கள் மூடி அவன்புரம் கைகளை நீட்டிய வண்ணம்அமர்ந்திருந்தாள்.




“ஐ… டாஜா வரான்..” என்று சொல்லிக் கொண்டு வந்தவனின் குரல் சட்டென நின்றது போல தோன்றவும் , அவன் கைகளுக்குள் இன்னும் ராஜா வராததையும் உணர்ந்தும் "ராஜா இன்னும் வரலையே. அம்மா கண் திறக்கும் முன்னாடி முத்தா தந்தாதான் அம்மா என் கண்ணன விட்டு போக மாட்டேன்" என்று சொல்லி ராஜாவை ஊக்குவித்த ஆதிரைக்கு சட்டென வீசிய அர்ஜூனின் வாசம் படபடப்பை ஏற்படுத்த அவசரமாக கண்ணை திறந்தாள் ஆதிரை. அவள் கண்களை திறக்கும் முன்னரே ஆதிரையின் கன்னத்தில் அர்ஜூனின் இதழ் பதிந்திருந்தது. துள்ளி குதித்துக் கொண்டு எழுந்த ஆதிரைக்கு "நீங்க… இங்க என்ன செய்றீங்க.. யாரை கேட்டு என்.. என் கன்னத்தில்… என்று ராஜாவின் முன் சொல்ல முடியாமல் அவனை கோபமாக பார்த்த வண்ணம் குறுகுறுத்த தன் கன்னத்தை தடவிய வண்ணம் கேட்டாள்.




அவளது கேள்வியில், ராஜாவின் கண்களில் வைத்திருந்த தன் கைகளை விலக்கி ,“ஏன் நான் இங்கு வர கூடாது. யாரை கேட்க வேண்டும். " என்று விட்டேற்றியாக கேட்டான்.




இன்று அதிகாலை நிகழ்ந்த நிகழ்வுக்குப் பின் அர்ஜூனுடன் பேசி வதை படுவதை முழுதும் நிறுத்த எண்ணியிருந்த ஆதிரைக்கு அது கனவாகியே போகும் போல அர்ஜூனின் சீண்டாலான பேச்சும் ராஜாவினை பார்த்ததால் உண்டான பழைய நிகழ்வுகளும் ஆதிரைக்கு பழைய துடுக்குதனத்தை மீட்டு தந்தது. அதே துடிப்பில் அவனிடம் , “என் விருப்பமில்லாமல் என்.. என்னிடம்… .. “ என்று தயங்கி ,” அப்படி செய்ய மாட்டேன் என்று பெரிய கன்னியவான் போல பேசிவிட்டு இது என்ன வேடம்" என்று பொறிந்து கொட்டினாள்.




“ இப்போது நான் என்ன செய்துவிட்டேன். நீதானே சொன்ன, கண்ணா உன் கன்னத்தில் முத்தமிட்டால் அவனை விட்டு போக மாட்டாயென்று.. ராஜா குட்டி அப்படிதானே உன் அத்தை சொன்னாங்க " என்று அவர்கள் பேசுவதை மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்த ராஜாவினை துணைக்கு அழைத்தான் அர்ஜூன்.




“ஆமாம்.. நான் அத்தைம்மாக்கு முத்தா" என்று அர்ஜூனை பார்த்ததும் அத்தையையும் சேர்த்து சொல்லி கிளுக்கினான்.




புரியாமல் குழந்தையின் வார்த்தையை தவிர்த்து ,அர்ஜூனை முறைத்த ஆதிரை, “ அது என் கண்ணனை சொன்னது. உங்களை அல்ல.. அவனும் அதுதான் சொல்கிறான்" என்றாள். முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க.




“நானும் கண்ணன்தான். இந்த வீட்டின் கண்ணன். " வெண்பற்கள் தெரிய சிரித்தான் அர்ஜூன். அவன் சொல்லில ஆதிரை அப்படியே அதிசயித்து போனாள். "நானும் நீ என்னைவிட்டு போக கூடாது என்று நினைத்தேன். ராஜாவிடம் சொல்லும்போது கேட்டத்தில் உன்னுடைய நிபந்தனை மிகவும் எளிதாக இருந்தது. அதனால் சிறிதும் தயக்கமே இல்லாமல் அதனை நிறை வேற்றிவிட்டேன். இப்போது உன் முறை. நீதான் என்னவிட்டு போகாமல் உன் பக்கத்து ஒப்பந்ததை நிறைவேற்ற வேண்டும். என்ன ராஜா.. நான் சொல்வது சரிதானே" என்று ராஜாவை தன் கைகளில் ஏந்தினான்.




இப்போது உண்மையிலே ஒன்றும் புரியாமல் வாயடைத்து போனது ஆதிரைதான். கண்களும் உதடுகளும் விரிய நின்ற இடத்திலே சிலையாக நின்று அவனை வியப்பாக பார்த்தாள். அவளது நிலை புரியாமல், “ஆமாம்.. மா...மா… " என்று அர்ஜூனின் கைகளில் உய்ர்ந்த ராஜா, “டாஜா உயரமாகி..” என்று சிரித்தான். இவை எதுவும் ஆதிரையின் கவனத்தை ஈர்க்கவில்லை.




“ராஜா.. நீயும் அத்தைக்கு முத்தா கொடுத்துவிடு.. அப்போதான் உன்னையும் விட்டும் போக மாட்டாள்" என்று சொல்லிக் கொண்டு வந்து ராஜாவை தூக்கிய வண்ணமே ஆதிரையின் கன்னத்தில் முத்தமிட வைத்தான். அதனையே சாக்கிட்டு வேண்டுமென்றே ஆதிரையினை இங்கும் அங்கும் தொட்டு அவள் முக மாற்றத்தை ரசித்தான். ஆதிரையால் அவனிடம் என்னவென்று பேச முடியாமல் மூச்சு திணறும்படி ஆனது.




அப்போது அங்கு கதவை தட்டிக் கொண்டு உள்ளே வந்த ராதைக்கு தன் சிவந்த முகத்தையும் காட்டமுடியாமல் பையிலிருந்து துணி எடுக்கும் சாக்கில் முகம் தாழ்த்திக் கொண்டு நின்றாள் ஆதிரை. “ அண்ணா.. அஸ்மி ராஜா இல்லாமல் சாப்பிட மாட்டேன் எங்கிறாள். ராஜாவும் இன்னும் எதுவும் சாப்பிடவில்லை. காலையில் குடித்த ஒரு டம்ளர் பால் மட்டும்தான். இருவரும் உணவருந்தியதையும் இங்கு அழைத்து வருகிறேன்.” என்றாள் ராதை.




"சரி மா.. ராஜா. நான் உன் அத்தையை அழைத்து வருகிறேன். நீங்க போய் சப்பிடுங்க" என்று ராஜவை இறக்கி ராதையிடம் அனுப்பினான். ஆதிரையால் எதுவும் சொல்ல முடியவில்லை.




"ராஜா. என்னோடு வாடா. அஸ்மி பாப்பா நீயில்லாமல் அழுகிறா" என்றதும் , ஓடி ராதையின் கையை பற்றிக் கொண்டு சென்றுவிட்டான் ராஜா.




"என்ன ஆதிரை.. உன்னுடைய ஒப்பந்தத்தை நினைவில் வைத்துக் கொள்" என்றான் மறுபடியும். அவனை ஒரு நொடி நிமிர்ந்து பார்த்த ஆதிரை விளையாடுகிறானா அல்லது உண்மையா., என்று புரியாமல் அவனது முகத்தில் எதையும் அறிய முடியாமல் அவனை முறைத்தாள். மறுமணமென்று பேசிவிட்டு காலையிலும் குத்தி கிளறும் விதமாக பேசிவிட்டு இப்போது எவ்வளவு இளகுவாக எதுவுமே நடக்காததுப் போல பேசுகிறான். என்று நினைத்தாள். அதே நினைவில் அவனுக்கு பதிலேதும் சொல்லாமல் ஆடைகளை எடுத்துக் கொண்டு தட் தட் என்று காலினை எடுத்து வைத்து கோபமுடனே அவசரமாக குளியல் அறைக்குள் ஓடி மறைந்தாள்.




அவளது செயலில் வாய்விட்டே சிரித்தது ஆதிரையின் கோபத்தை இன்னும் அதிக படுத்தியது. “சே இவனிடம் பேசவே கூடாது.” என்று இன்னும் குறுகுறுத்த தன் கன்னத்தை தடவி விட்டாள்.




அதன் பிறகு ராஜாவையும் அஸ்மிதாவையும் கொஞ்ச நாள் என்னுடன் என் அறையிலே இருக்கட்டுமே அண்ணி என்று ரிதிகாவிடமே கேட்டுக் கொண்டு குழந்தைகளுடனே முழு நேரத்தை செலவிட்டாள். ஆதிரை அர்ஜூனிடம் பேச கூடிய தருணங்களை தவிர்க்க ஆரம்பித்தாள். அர்ஜூனும் முன் போல் அவளிடம் வம்பிழுக்காமல் அவன் உண்டு அவன் வேலையுண்டு என்றிருந்தான். சிவசக்தி பாட்டி அவனுக்கு ஏதேதோ வேலை தந்துக் கொண்டே இருந்தார்களோ என்னமோ, உறங்கும் நேரம் தவிர அர்ஜூன் ஆதிரை இருக்கும் அறைப்பக்கமே வரவில்லை.




அதற்கேற்ப ஆதிரையும் நாள் முழுதும் குழந்தைகளுடன் நேரம் போவதே தெரியாமல் போனது. சொல்ல போனால் மற்ற எதுவும் நினைவில்லாமல் அவள் கடமையும் நினைவில் இல்லாமல் அவர்களின் போன ஜன்ம கதை அறியும் ஆவலும் கூட மறந்து போனது. எல்லா இரவுகளிலும் கட்டிலின் ஒருபுரம் ஆதிரையும் , நடுவில் குழந்தைகள் இருவரும் அந்த புரம் அர்ஜூனும் என்று அந்த பெரிய கட்டிலினை நிரப்பிக் கொண்டு உறங்கினர். பெரும்பாலும் அர்ஜூன் எல்லோரும் உறங்கிய பிறகுதான் வந்தான். காலையில் குழந்தைகளை குளிக்க வெளியில் செல்லும் தருணங்களிலே எழுந்து வெளியில் சென்றுவிடுவான். அதனால் அவனுடன் பேச வாய்ப்பும் ஆதிரைக்கு ஏற்படவில்லை. அதுவே நிம்மதி என்பதுப் போல ஆதிரைக்கு இதமாயிருந்தது. ஏடாகூடமாக பேசும் அவனுடன் வாயடிக்க ஆதிரைக்கும் விருப்பம் இருக்கவில்லை. அப்படி நினைக்கும் போதே ஏக்கமாக பெருமூச்சுவிடுவதும் இயல்பாகவே அவளறியாமல் நடந்துவந்தது.




எதற்கும் நேரம் இல்லாமல் எதை பற்றியும் கவலையில்லாமல் குழந்தைகளுடன் குழந்தையாக ஆதிரையும் அவர்களுடன் விளையாடிக் கொண்டு சுற்றியதை பார்த்து பழைய ஆதிரையை பார்த்தது போன்ற நிம்மதியில் ரிதிகாவும் அரவிந்தும் மகிழ்ச்சியுடனே இருந்தனர். இப்படியெ இரண்டு வாரம் இரண்டு நாள் போல கரைந்தது. இடையில் சேகர் அங்கிள் தான் கிளம்புவதாக சொல்லி சொன்றதும் கூட பெரிதாக எதுவும் தோன்றால் ஆதிரைக்கு இந்த இந்திரபிரதேஷின் வாசம் மிகவும் வழக்கமாகி போயிருந்தது. கஜேந்திரனும் சுமித்ரையும் கூட லண்டனில் தங்கள் தொழில்களை விற்றுவிட்டு இங்கே வந்துவிடுவதாக அர்ஜூனுக்கும் ஆதிரைக்கும் திருமணமான அடுத்த நாளே லண்டன் கிளம்பி போய்விட்டனர். அதனால் ஆதிரையிடம் தன் அத்தையிடம் மேலும் பேச முடியவில்லை. ஆனால் எப்படியும் சிவராமன் தாத்தாக்கும் சுமித்ரை அத்தைக்கும் இருக்கும் சொந்தத்தை வெளிபடுத்தி அவர்கள் சந்தோஷமாக்க வேண்டுமென்ற உறுதி மட்டும் ஆதிரைக்கு உறுதியாய் இருந்தது.




வழக்கமாக மதியம் குழந்தைகள் உறங்கும் போது ரிதிகா சேர்த்து வைத்திருந்த புத்தகங்களில் ஒன்றை எடுத்து படித்துக் கொண்டிருப்பாள். அன்று ஏனோ ஆதிரைக்கு புத்தகம் படிக்கும் எண்ணமில்லாமல் ராதையை குழந்தைகளுடன் இருக்க சொல்லிவிட்டு தன் அறையை விட்டு வெளியில் சென்று வருவதாக சொல்லிக் கொண்டு வீட்டின் பின்புறம் தோட்டத்து பூங்காவுக்கு சென்றாள்.




வீட்டு பின்புரத்தில் விளையாடுவதற்காக ஊஞ்சல் , சருக்குமரம் , இன்னும் சில சில விளையாட்டு அமைப்புகள் ஏற்பாடுகள் செய்ய பட்டிருந்தது. தினமும் வீட்டு குழந்தைகள் மட்டுமின்றி ஊர் குழந்தைகளும் மாலையில் அங்கு வந்து விளையாடிவிட்டு போவார்கள். சில மர தின்னைகளும் ,கல் தின்னைகளும் ஆங்காங்கே போட பட்டிருந்தது. அங்கு அமர்ந்துக் கொண்டு கம்பிகளால் போடப்பட்ட சுற்று சுவர் தாண்டி தெரிந்த காடுகளின் எழிலும் , மலையின் மேல் உச்சியையும் பார்க்கவே ரம்பியமாக இருக்கும். குழந்தைகளுடன் வரும் போது அவர்களையே கவனித்திருப்பதால் வேறு எதிலும் அதிகம் கவனம் செலுத்த முடிந்ததில்லை. இன்று ஏனோ அதனை காணவென்று தோன்ற அந்த பூங்காவுக்கு சென்றாள்.




இந்த நண்பகலில் யாரும் இருக்க மாட்டார்கள் என்று எண்ணியே ஆதிரை அங்கு சென்றது. ஆனால் சிம்லாவின் இதமான குளிர் நண்பகலையும் இதமாக்கி இருந்தது . அதனால் அவளை போலவே வேறு இருவரும் அங்கிருந்த கல் திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். ஆம் சிவராமன் தாத்தாவும் சிவ சக்தி பாட்டியும் அமர்ந்து அந்த குளிரிலும் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு குளரவில்லையோ என்று ஆதிரைக்கு சந்தேகம் வந்தது. ஆதிரை பெரிய சால்வையை போத்திக் கொண்டல்லவா வந்திருந்தாள்.
 

periyauma

Well-Known Member
Adhi seeikram antha oolai chu vadi ya padima .adhukulla adhutha ammavasai ye vandhuda poguthu pornami. Varapoguthu

Feelings of raja as well as others portrayed excellently .
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top