தூரம் போகாதே என் மழை மேகமே!! - 71

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer



“இதோ வருகிறேன் ராதை.” என்றவள் மற்ற எதை பற்றியும் யோசிக்காமல் ராதையுடன் இணைந்து நடந்தாள்.


ஆனால் சிம்லாவின் மாலை பொழுதின் குளிர், அவசரமாக மகனை பார்க்க போகிறாள் என்று அப்படியே வெளியில் வந்த ஆதிரையை மட்டும் பாவம் என்று விட்டுவிடுமா என்ன. ஆம். வெறும் நூல் சேலை அணிந்திருந்த ஆதிரையின் உடலெல்லாம் குளிரினால் சிலிர்த்து மயிர்கால் குத்திட்டு நின்றது. போதாத குறைக்கு இந்த காற்று வேறு அவளது சேலையை விலக்கி வெற்று வயிற்றை தடவிச் சென்று அவள் பற்களை தந்தியடிக்க செய்தது. சேலையை எவ்வளவு இழுத்து பிடித்தும் குளிரலிருந்து விடுபடும் வழி தெரியவில்ல.


"அறையில் இருக்கும் வரையில் இப்படி வெளியில் குளிருமென்று தெரிந்திருக்கவில்லையே. " என்று சில நொடி யோசித்த ஆதிரை, மின்னல் அடித்தார் போல, அந்த அறையில் சில மரவிரகுகளால் தணல் எழுப்பிப்பட்டிருந்தது என்பது நினைவு வர "ஒ அதனால்தான் அறையில் குளிர் தெரியவில்லை. மதியம் வந்த போது இருந்ததற்கும் இப்போதுக்கும் நன்றாக குளிர் அதிகரித்திருப்பதுப் போல் தெரிகிறதே. ராஜாவை பார்க்கும் ஆர்வத்தில் வெளியில் வந்த போது ஸ்வட்டர் போடாமல் வந்துவிட்டோமே" என்று குளிரின் வேகத்தில் நினைத்தாள். அதே நினைவில், “ராதை தோட்டத்தில் அதிகம் குளிருமோ" என்று கேட்டாள் ஆதிரை.


அப்போதுதன ஆதிரையின் நிலையை பார்த்த ராதை "என்ன அண்ணி. இது குளிர் பிரதேஷமில்லையா? ஏதேனும் கனத்த உடை அணிந்திருக்கலாமே. இங்கு வெயிற்காலம் என்றப் போதும் எப்போதும் குளிராகதான் இருக்கும். அதுவும் மாலை பொழுதில் புதிதாக இங்கு வந்திருக்கும் உங்களால் உரிய உடையில்லாமல் வெளியில் செல்வதென்பது நடக்கிற காரியமில்லை. இப்போதாவது பரவாயில்லை. இன்னும் குளிர் காலத்திலெல்லாம் வெளியில் பனி மழை பொழிந்துக் கொண்டே இருக்கும். " என்று உரிமையாக எடுத்துக் கூறினாள் ராதை.


சேலையின் முந்தானையை எடுத்து தன் உடலை வளைத்து போர்த்திக் கொண்டே , " இப்போது புரிகிறது ராதை. மிகவும் குளிர்கிறது. நான் போய் ஸ்வெட்டர் போட்டுக் கொண்டு வருகிறேன். நீ குழந்தைகளிடம் போ. தோட்டத்திற்கு எப்படி வர வேண்டுமென்று மட்டும் சொல்லு. நானே ராஜாவை வந்து பார்த்துக் கொள்கிறேன்" என்றாள் ஆதிரை.


"சரிங்க அண்ணி. என்னை கேட்டால் ஏதேனும் கனத்த உடை மாற்றிக் கொண்டும் வாருங்கள் என்பேன். இது போன்ற சேலையெல்லாம் இந்த குளிருக்கு சரி வராது. அம்மு அக்காவை போலவும் என்னை போலவும் மேல் சட்டை பாவடை உங்களுக்கும் தைக்க அம்மு அக்காவிடம் சொல்லட்டுமா? இனி நீங்க இங்குதானே இருக்க போவதாக பாட்டி சொன்னாங்க. அப்படி இருக்க உங்களுக்கு வசதியாக உடையும் இருந்தால்தானே அண்ணி விருப்பம் போல நாம் நினைக்கும் போது எங்கு வேண்டுமானாலும் போகலாம்" என்று புன்னகித்து குழந்தையாக சொன்னாள் ராதை.


ராதை சொன்னது போல, அந்த ஊரில் யாரும் சேலை அணிந்து ஆதிரை காணவில்லை. எல்லோரும் போர்வையின் துணிப் போல கனத்த துணியினால் கணுக்கால் மறைய பாவடையும் , இடை மறைக்கும் விதமாக மேல் சட்டையும் போட்டிருந்தனர். ஒரு சிலர் இடை தெரிய மேல் சட்டை அணிந்து சேலையின் முகப்பு போல முந்தானை போட்டு தலையில் முக்காடு அணிந்திருந்தனர். ஆதிரை கண்டவரையில் பெண்களின் உடை இவற்றில் ஒன்றாக தான் இருந்தது. அவள் அண்ணியும் பாவாடை மேல் சட்டையே அணிந்திருந்தாள். அதனால் ராதை கேட்கும் போது வேறுபாடாக எதுவும் தோன்றாமல், “சரி ராதை. அப்படியே சொல். இப்போது நான் ஆடை மாற்றிக் கொண்டு வருகிறேன். நீ கிளம்பு . நின்று பேச முடியாமல் குளிர்கிறது" என்று சிரித்தாள் ஆதிரை.


" அதுவும் சரிதான் அண்ணி. நீங்க் போங்க. இதோ இந்த கதவை திறந்து இடதுபுறம் நேரே சென்றால் வீட்டின் பின்புரம் வந்துவிடும். பாட்டி எப்போதும் குழந்தைகளுடன் இருக்க சொல்லியிருகீறார்கள். அதனால் நான் இப்போதே குழந்தைகளிடம் போகிறேன். நீங்களே வந்துவிடுவீர்கள் தானே. அப்படி இல்லையென்றாலும் அறையிலே இருங்க நானே அவர்கள் விளையாடி முடித்ததும் அழைத்து வருகிறேன்" என்று சொல்லிவிட்டு ஓட்டமாக துள்ளி குதித்துக் கொண்டு சென்றாள் பதினாறு வயதுதக்க ராதை.


அவள் போவதையே சில நொடி பார்த்திருந்த ஆதிரை பெருமூச்சுவிட்டு , வேகமாக வந்த வழி நோக்கி திரும்பி நடந்தாள். அப்போது அவள் எதிர் பட்ட அரவிந்த், “ஆதி… குளிரில் இப்படி இங்கு என்ன செய்துக் கொண்டிருக்கிறாய்.” என்று தன் கழுத்தில் சுற்றியிருந்த muffler -ஐ அவள் காது மறைக்க அவளது கழுத்தில் சுற்றிவிட்டு கேட்டான்.


அவனை நோக்கி புன்னகித்த ஆதிரை, “அது.. அண்ணா ராஜாவை பார்க்கவென்று போனேனா, உறங்கி எழுந்து அப்படியே சென்றுவிட்டேன். அறையில் குளரவில்லை. வெளி வாசல் நெருங்க மிகவும் குளிரியது அதுதான் ஸ்வெட்டர் எடுக்க வந்தேன்.” என்று தன்னிலை விளக்கம் தந்தாள் ஆதிரை.


அவள் சொன்னதில் "ஓ.. இன்னும் அறியாபிள்ளையாகவே இருக்கிறாய் ஆதி.." என்று சொல்லி, எதையோ சொல்ல யோசனையுற்ற அரவிந்த் அவள் முகத்தை பார்த்தான். அவன் எதையோ சொல்ல தயங்குவதாக உணர்ந்த ஆதிரையும் "என்ன அண்ணா? ஏதேனும் என்னிடம் சொல்ல வேண்டுமா? ஏன் அப்படி பார்கிறாய். " என்று ஊக்க படுத்தினாள்.


அவள் குரலில் நிமிர்ந்த அரவிந்த் உடனே புன்னகித்து, “ஒன்றுமில்லை ஆதிமா.. ராஜாவை பார்த்துவிட்டாயா?” என்றான் உணர்ச்சி துடைத்த குரலில்.


“இன்னுமில்லை அண்ணா.. ஸ்வெட்டர் அணிந்துக் கொண்டு வருவதாக ராதையிடம் சொல்லிவிட்டு வந்தேன். அதன்பிறகுதான் போகவேண்டும்" என்றாள் ஆதிரை.


“சரி சரி...” என்று ஒரு நொடி தாமதித்து,”ஆதிமா. ஒரு இரண்டு நாட்கள் ராஜா உன்னை பார்க்காமல் இருந்தால் நல்லது என்று எனக்கு தோன்றுகிறது.” என்று ரிதிகா அரவிந்திடம் சொன்னத்தை மறைத்து அவனாக சொன்னான் அரவிந்த்.


இப்படி தன் அண்ணன் சொல்ல கூடுமென்று எதிர்பார்த்திராத ஆதிரை , “ஏன் அண்ணா.. அவனை பார்த்து, அணைத்து குறைந்தது மூன்று மாதங்களாவது ஆகியிருக்கும். phone -ல் அவன் குரல் கேட்டதுமே என் உடலின் அணுவெல்லாம் அவனை காண துடித்தது. இப்படி என் நிலையிருக்க . நீ ஏன் அண்ணா அவனை இப்போது பார்க்க கூடாது என்று சொல்கிறாய்?” என்று கண்ணில் கேள்வியுடன் பரிதவித்து கேட்டாள்.


அவள் தவிப்பது புரிய அரவிந்த் அருகில் வந்து அவள் தலையை வருடிய வண்ணம் ,”உனக்கு பார்க்க வேண்டுமென்றால் நீ போய் பாரம்மா. ஆனால் நீயே யோசித்து பார். இன்று இரவிலிருந்து உனக்கும் அர்ஜூனுக்கும் இந்த ஊர் மரபுபடி திருமண சடங்குகள் ஆரம்பிக்கும். இப்போது ராஜா உன்னை பார்த்தால் உன் மடியிலே இருக்க துடிக்க மாட்டானா? அப்படி இருக்க அவனால் உனக்கும் மற்றவர்களுக்கும் சங்கடம் நேரிடுமே என்று சொன்னேன். சேகர் அங்கிள் சொன்னரே, ஏதோ theme park -ல் 2 மணி நேர பிரிவிற்கே உன்னை அணைத்துக் கொண்டு அழுதானாமே! அதனால் சொன்னேன்" என்று அவன் சொன்னதின் காரணம் சொல்லி அவள் புரிந்துக் கொள்ள உதவினான்.


ஆனால் உண்மையில், அர்ஜுனுக்கும் ஆதிரைக்கும் இன்னும் நெருக்கம் உண்டாகததுப் போல உணர்ந்தும், ஆதிரை அந்த தீவில் இருக்கும் போது உங்க தம்பி என்ற ஒரு காரணம் போதாதா. அர்ஜூனை விரும்பாமல் இருக்க என்று சொன்னதை உணர்ந்தும் ரிதிகா, "அவர்களிடையில் நெருக்கம் உண்டாகாத இந்த நிலையில் இருவர் இடையில் ராஜா இடையூறாக போய்விட கூடுமோ என்று அஞ்சிகிறேன் அரவிந்த் " என்று கவலையுற்றதன் விளைவுதான் அரவிந்த் ஆதிரையிடம் இவ்வாறு பேசியது.


இவ்வாறாக உண்மை இருக்க இங்கு ஆதிரை, அரவிந்த் சொன்னதை மட்டும் வைத்துக் கொண்டு கற்பனையில் ராஜா திருமண நிகழ்வில் சுட்டிதனம் செய்வது போலவும் , அவள் மடியை விட்டு இறங்க மறுப்பது போலவும் கற்பனை செய்தாள். அவள் அண்ணன் சொல்வதும் சரி என்பதுப் போல உணர்ந்து. “நீ சொல்வதும் சரிதான் அண்ணா. நான் எல்லா சடங்குகளும் முடிந்தப் பின்னே அவனை பார்கிறேன். ராதையிடம் நீ சொல்லிவிடுகிறாயா அண்ணா? அவள் என் அறைக்கு குழந்தைகளை அழைத்து வருவதாக சொன்னாள். அவளிடம் வேண்டாமென்று" என்று அவள் அண்ணனுக்கும் ஒரு வேலை வைத்தாள் ஆதிரை.


ஆதிரையை ஏற்கனவே உணர்ந்த அரவிந்த், “சரி ஆதிமா. நீ ராஜாவை பார்க்க வேண்டுமென்றால் அவன் உறங்கும் நேரம் சொல்ல சொல்கிறேன். வந்து பார்த்துவிட்டு போ. இப்போது உன் அறைக்கு போ" என்றான் .


அதற்கு புன்னகித்த ஆதிரை, “சரி அண்ணா.. “ என்று தன் அறை செல்ல எத்தனித்தவள், ராஜாவை பற்றியே யோசித்து கொண்டு சென்றதில் தன் அண்ணனிடம் கேட்க வேண்டுமென்று தீவிலே நினைத்த ஒன்றை இப்போது கேட்க எண்ணினாள், “ அண்ணா, ஒரு நிமிடம்" என்றாள்.


“என்னமா.. இன்னும் என்ன வேண்டும்" என்று வெளியில் செல்ல நினைத்தவன் நிதானித்து நின்றான் அரவிந்த்.


“அண்ணா. இரண்டு வருடத்திற்குமுன்பு கிடைத்த ராஜாவைப் பற்றிய ஓலைச் சுவடி பற்றி தெரிய வேண்டும்.” என்று அவனை பார்த்துக் கொண்டு நின்றாள் ஆதிரை.


அவளை யோசனையாக ஏறிட்ட அரவிந்த்,” அதனை பற்றி உனக்கு எப்படி தெரியும் ஆதி" என்றான்.


" அந்த தீவில் அண்ணியிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவங்க சொன்னாங்க, இரண்டு வருடத்திற்கு முன்பு ஏதோ ஓலைச் சுவடியை பார்த்த பிறகுதான் என்னிடம் ராஜாவை தனியாக விட்டு நீங்க லண்டன் செல்ல முடிவெடுத்ததாக சொன்னாங்க. அது பற்றி கொஞ்சம் பேச வேண்டும் அண்ணா" என்றாள் ஆதிரை.


“ம்ம்… எல்லாம் சொல்லிவிட்டாளாஅ? அர்ஜுனுக்கும் எல்லாம் தெரியுமா?” என்று மனதில் கவலையுற கேட்டான் அரவிந்த்.


அதை உணராமல் ,"ஆமாம் அண்ணா. அர்ஜுனுக்கும் எனக்கும் சேர்த்துதான்சொன்னாங்க. ஆனால் எல்லாம் சொல்லவில்லை. ஒன்றை தவிர. அதுதான் உங்களிடம் கேட்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். " என்றாள் ஆதிரை.


புன்னகையுடன் "ஓ.. என்ன அது , கேள் ஆதிமா" என்று சொல்லிக் கொண்டு நின்றான்.


"அந்த ஓலையின் படி அண்ணி சொன்னாங்க , ராஜாவின் உயிருக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்றுதான் என்னிடம் அவனை தனியாக விட்டுச் சென்றதாகவும் . பிறகு தாத்தாவின் மூலம் உண்மை தெரிய அதன் பிறகு நீங்க என்னையும் ராஜாவையும் அழைத்து செல்ல வர முயன்றதாகவும் , அப்படி வரும் போதுதான் அந்த flight விபத்து ஏற்பட்டது. என்றும் சொன்னாங்க. அந்த ஓலை சுவடி என்ன பொய்யான ஓலைச் சுவடியா அண்ணா. உண்மையில் என்னதான் நடந்தது." என்று ஒருவேளை இதில் ஏதேனும் விஸ்வாவின் வேளை இருக்குமோ என்று அச்சம் பரவ கேட்டாள்.


ஆனால் அரவிந்த் சொன்ன பதிலில் அப்படியில்லை என்பது தெரிந்தது. " ஓ.. அதுவா.. அந்த ஓலை சுவடி உண்மைதான் ஆதி. ஆனால் நான்தான் அதனை ஒழுங்காக விளக்கம் அறியாமல் தவறாக புரிந்துக் கொண்டேன். அதில் உண்மையில் என்ன இருந்தது என்றால் ,என்னுடைய முதல் குழந்தை பிறந்ததிலிருந்து அதன் தாய் மாமனை 300 நாட்களில் நேரிடையாக பார்க்க நேர்ந்தால், பார்த்த 10 நாட்களில் ராஜாவின் உயிர் உடலை விட்டு பிரியுமென்று இருந்தது. அந்த ஓலை சுவடிப்படி நடந்தும்விட்டது. “ என்றான் மனதில் வேதனை படற.


பதற்றத்துடன், “என்ன அண்ணா சொல்கிறாய்.. என்ன நடந்தது.” என்று படப்படப்பாக கேட்டாள்.


வேதனையை விழுங்கி, " சொல்கிறேன்மா. எங்களுடைய முதல் குழந்தை அஸ்மிதாதாமா. குட்டி ராஜா இல்லை போலும். அந்த கணக்கில் நம்முடை கணிப்பு தப்பாகி போனது. ரிதிகாவின் தாத்தாதான் அதனை சொன்னார். அதனோடு ஓலை சுவடியில் சொல்லப்பட்ட ராஜா உண்மையில் நம் குட்டி ராஜாயில்லை. ரிதிகாவின் தாத்தா ராஜேந்திர ராஜா. அவர்தான் அந்த ஓலைச் சுவடி படித்து அதன் விளக்கம் தந்தார். அவருக்கு இதுப் போல ஓலை சுவடிப் படிப்பது பழக்கம் என்பதால் அவரால் எளித்தில் புரிந்துக் கொள்ள முடிந்தது.


அந்த ஓலை சுவடியின் படி , அஸ்மிதாவை அர்ஜூன் பார்த்த 10வது நாளில் அவர் இறந்து போனார். இறக்கும் தருவாயில் ரிதிகாவின் தாத்தா இதனை எங்களிடம் சொன்னப் பிறகே எனக்கும் ரிதிகாவிற்கும் உண்மை உறைத்தது. என்ன செய்ய காலம் கடந்தது. அஸ்மிதாவும் அர்ஜூனும்தான் பார்த்துவிட்டார்களே. தாத்தாவும் இறந்தார். இந்த உண்மை யாருக்கும் தெரியாது. அர்ஜூனுக்கு தெரிந்தால் வேதனை படக்கூடுமென்று அவனிடம் உண்மையை மறைத்துவிட்டோம். தேவையில்லாமல் குழந்தை அஸ்மிதாவின் மீதும் எந்தவித மனகசப்பும் வரக் கூடாது என்று ரிதிகாவின் தாத்தாவும் உறுதி வாங்கிக் கொண்டார். தாத்தா இறந்த பிறகு குழந்தை ராஜாவை நாங்க இனி பிரிந்து இருப்பதில் அர்த்தமில்லையே அதனால்தான் நானும் ரிதிகாவும் உன்னை காணவும் குட்டி ராஜாவை காணவும் கிளம்பி வந்தோம்.” என்றான் அரவிந்த்.


அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த ஆதிரை அந்த ஓலை சுவடியின் தீவரம் அறிந்தப்பின், உண்மை உணர்ந்தவளாக, “ அச்சோ இப்படி ஆகிவிட்டதா? தாத்தாவை இழக்க நேர்ந்ததா? அண்ணி மிகவும் தவித்திருப்பார்கள் இல்லை" என்று வேதனையுற்று சொன்னாள்.


“ஆமாம். மிகவும் அழுதாள் . என்ன செய்ய விதியை மதியால் வெல்ல முடியுமா என்ன" என்று சொல்லி ஆதிரையை ஆருதல் படுத்தினான்.


அவளும் ஆசுவாசபடுத்திக் கொண்டு " அது இருக்கட்டும் அண்ணா. என்னிடம் ஏனண்ணா எதுவுமே சொல்ல வில்லை. அதற்கும் அண்ணி ஏதோ சொன்னாங்க. எது எப்படி இருந்தாலும் எனக்கு எவ்வளவு கவலையாகிவிட்டது தெரியுமா? லண்டன் சென்றதிலிருந்து உங்களிடமிருந்து எந்த செய்தியும் வரவில்லை குறைந்தது மீண்டும் எங்களை பார்க்க வருமுன்னாவது ஒரு phone செய்திருக்கலாமே அண்ணா. என்னையே எவ்வளவு நொந்துக் கொண்டேன் தெரியுமா? போதாதற்கு அண்ணியின் தம்பியையும் திட்டி தீர்த்தேன்" என்று மனதில் அழுத்திக் கொண்டிருந்த பாரத்தை பல நாட்கள் கழித்து கிடைத்த ஆதாரமாக தன் அண்ணனிடம் கொட்டி தீர்த்தாள்.


அவள் தலையை ஆருதலாக வருடிய அரவிந்த், “தெரியும் நீ தவித்திருப்பாயென்று.. சொல்லாமல் ஆச்சரியமூட்டலாமென்று நானும் உன் அண்ணியும் எண்ணினோம். கடைசியில் சொல்லாமலே காணாமல் போனோம். இனிதான் எல்லாம் சரியாகி போனதே செல்லமே. இனி பழையதை எண்ணி கவலை படக் கூடாது. சரியா? “ என்று ஆதிரையை தோளோடு சாய்த்துக் கொண்டு பேசினான்.


லேசாக கண்ணில் ஈரம் பனிந்த போதும் அண்ணனின் ஆதரவில் சில நொடியில் மனம் தெளிந்த ஆதிரை இனி எந்த கவலையும் இல்லை என்று வெகு நாட்களுக்கு பிறகு நிம்மதி பெருமூச்சுவிட்டு, “சரி அண்ணா. நான் அறை போகிறேன். ராதையிடம் அண்ணி அணிந்திருப்பதுப் போல எனக்கும் ஆடை தைக்க சொல்லியிருக்கிறேன் அண்ணா. நான் என்னமோ எல்லாம் நூல் சேலையாக கொண்டு வந்திருக்கிறேன். அர்ஜூனும் இங்கு இவ்வளவு குளிரும் என்பது பற்றி என்னிடம் சொல்லவே வில்லை. “ என்று குறைப்படவளாக சொன்னாள்.


அதற்கு சிரித்தவன், “ இன்னுமும் அர்ஜூனிடம் குற்றம் கண்டுக் கொண்டிருக்கிறாயா. எப்போதும் அவனிடம் சண்டைக்குதான் நிற்பாய் போல. சிம்லா குளிரென்று தெரியாத சின்ன பிள்ளையா என்ன நீ. இது மலைகளின் ராணியல்லவா. என் மச்சானை குறை சொல்லாமல் போய் குளிருக்கு இதமாக வேறு உடை மாற்று போ. நான் ரிதிகாவிடம் உனக்கு ஏற்றார் போல உடை கொடுத்த அனுப்ப சொல்கிறேன். இன்னும் சின்னப்பிள்ளைப் போல . என் தங்கையே ஒரு குழந்தைப் போல இவள் ராஜாவை எப்படிதான் இவ்வளவு நாள் பார்த்துக் கொண்டாளோ? உள்ளே போ மிகவும் குளிர்கிறது" என்று சொல்லி பெரிய விட்டடித்ததுப் போல் சிரித்துக் கொண்டே நகர்ந்தான் அரவிந்த்.


“அண்ணா….” என்று சிணுங்கி கோண்டே அங்கிருந்து நகர்ந்தாள் ஆதிரை.


"அந்த அர்ஜூன் உங்களையும் நன்றாக மயக்கி வைத்திருக்கிறார். அவரை ஒன்று சொன்னால் உங்களுக்கு பொறுக்கவில்லையா? அண்ணா" என்று வாயில் முனுமுனுத்த வண்ணம் அப்போதைய தன் அறையான அர்ஜூன் உறங்கிக் கொண்டிருந்த அறைக்கு சென்றாள்.


"எல்லோரும் அர்ஜூனுக்கே சாதகமாக பேசுகிறார்கள். என் ஆடைகளை எடுத்து வைக்கும் போது பார்த்துக் கொண்டு அருகில் தானே நின்றான். அப்போதே சொல்லியிருக்க வேண்டாம். இவற்றை இங்கு அணிய முடியாது என்று, புன்னகையோடு பார்த்து சிரித்துக் கொண்டு நின்றது அவன். அங்கே சொல்லியிருந்தால் இங்கு போடுவதற்கு தகுந்தாற் போல் சில உடைகளை பார்த்து வாங்கியிருக்கலாமே. இப்போது இங்கு எனக்கு அவதியாக இருந்திரருக்காதே" என்று அர்ஜூனை வாய்விட்டே அர்ச்சனை போட்டுக் கொண்டு தான் கொண்டு வந்த பையை கையோடு எடுத்துக் கொண்டு , அங்கு அனல் பரப்பிக் கொண்டிருந்த தணல்கூண்டுக்கு அருகில் சென்று அங்கிருந்த மூங்கில் நாற்காலியில் அமர்ந்தாள்.


பையை ஆராய்ந்தவளுக்கு எல்லாம் நூல் சேலைகளாக இருப்பது சலிப்பை ஏற்படுத்தியது. இரண்டே இரண்டு பட்டு புடவைகள். அவற்றை இப்போது அணிய முடியாது. கனமான சேலை அணிய ஆதிரைக்கு எப்போதுமே பிடித்ததில்லை. அவை இருக்கும் இடம் விட்டு விலகி கீழறங்குமோ என்று அதிக கவனம் செலுத்த வேண்டுமே என்று அவற்றை வாங்கியதில்லை. அந்த பையில் இல்லாததை தேடினாள் எப்படி கிடைக்கும். அதனால் அவளிடமிருந்த நான்கு சுடிதாரில் எதை அணிந்தால் வசதியாக இருக்கும் என்று குளிர் காய்ந்துக் கொண்டே தேடினாள்.


கடைசியாக ஒரு சுடிதாரை எடுத்தவள் அதனை அணிய எத்தனித்தாள். ஆனால் அந்த அறையில்தான் அர்ஜூன் இருக்கிறானே. என்று அவனை திரும்பி பார்த்தாள். அர்ஜூன் இன்னமும் சின்ன பிள்ளையை போல உறங்கிக் கொண்டுதான் இருந்தான். எந்த கவலையும் இல்லாமல் நிம்மதியான உறக்கம் போலும் அவன் முகத்திலே அது பிரதிபலித்தது. அவனை ஒரு நொடி பார்த்தவள். “அர்ஜூன்.. அர்ஜூன்…" என்று இருமுறை அழைத்து பார்த்தாள். அவனுள் எந்த சலனமோ அசைவோ இல்லை.


பின் ,"ஹப்பா.. உண்மையில் உறங்க தானே செய்கிறான். இங்கேயே உடை மாற்றிக் கொள்ளலாம். குளியல் அறையில் சேலை ஈரமானால் அது வேறு சங்கடமாக இருக்கும். ஆடை மாற்றிக் கொண்டு வெளியில் சென்று ராஜாவையும் அவன் அறியாமல் ஒளிந்திருந்து பார்த்துவரலாமே! அவன் என்னை பார்த்தால்தானே பிரட்சனை" என்று சின்னப் பிள்ளையாக தனக்கு தானே பேசிக் கொண்டு திட்டம் தீட்டினாள். இருந்தும் இன்னொருமுறை அர்ஜூனை அழைத்து பார்த்து அவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என்பதை உறுதி செய்துக் கொண்டு உடை மாற்ற எத்தனித்தாள்.


சேலையின் கொசுவத்தையும் முந்தானையையும் பிரித்து அங்கிருந்த கட்டிலின் மீது சேலையை போட்டுவிட்டு மேல் சட்டையின் பொத்தானை கழட்டுமுன் மற்றொருமுறை அர்ஜூனை ஒரு பார்வை பார்த்தாள். ஒரு வேளை பாதி உடை மாற்றிக் கொண்டிருக்கும் போது அர்ஜுன் எழுந்துவிட்டால் தேவையில்லாமல் இருவருக்கும் சங்கடம் என்று தோன்ற சுடிதாரினை எடுத்துக் கொண்டு குளியல் அறை செல்ல நினைத்தாள்.


அவள் எண்ணி முடிக்குமுன்னரே, “ஆதிரை...” என்று அர்ஜூனின் குரல் கேட்டது.


அவன் குரலில் திடுக்கிட்டு திரும்பியவள் அப்படியே உறைந்து போனாள். அர்ஜூன் படுக்கையிலிருந்து எழுந்து அவளை நோக்கி வந்துக் கொண்டிருப்பதை பார்த்து ஆதிரைக்கு அந்த குளிரிலும் வியர்க்க ஆரம்பித்தது. அவன் அருகில் வருவது உணர்ந்த போது அவனிலிருந்து விலகிவிட எண்ணி அர்ஜூனுக்கு பதிலேதும் சொல்லாமல் சுடிதாரை மார்போடு அணைத்த வண்ணம் நிதானமாக குளியல் அறை செல்ல அடியெடுத்து வைத்தாள்.


“ஆதிரை.. கூப்பிடுவது காதில் விழவில்லையா" என்று உயரமான அர்ஜூனின் இரண்டெட்டில் ஆதிரையின் பின்புரம் வளைத்து கொண்டு அவளை பின்புரமாகவே மார்போடு அணைத்துக் கொண்டு அவள் காதில் கிசுகிசுத்தான்.


அவனை நிமிர்ந்து பார்த்தவள் அறைகுறை ஆடையுடன் கணவனே என்றாலும் அவளை முழுமையாக ஏற்று கொள்ளாத அர்ஜுனின் கைகளுள் அடங்கி நிற்கமுடியாமல் தவித்தாள். தலை தாழ்த்தி மனதில் இல்லாத நிதானத்தை குரலில் காட்டி , “ எ.. என்னை விடுங்க அர்ஜூன். கூச்சமாக இருக்கிறது. நான் உடை மாற்றி வந்துவிடுகிறேன்.” என்று மீண்டும் அவனை பாராமலே விலகி செல்ல முயன்றாள்.


ஆனால் அவளை விடும் எண்ணம் இருப்பதாகவே அவனுக்கு இல்லை போல, "என்னிடம் என்ன கூச்சம்." என்று சரசமாக கூறி அவளது முதுகில் இதழ்பதித்தான். அந்த சைகையில் உடலெல்லாம் சூடேறுவதை என்ன முயன்றும் ஆதிரையால் தடுக்க முடியவில்லை. உள்ளத்தில் குளிர் பரவ தன் இடையை வளைத்து நின்ற அவன் கைகளை பிரித்துவிட முன்னிலும் அதிகமாக முயன்றாள்.


அவள் முயற்சி தெரிந்தோ என்னமோ , திடீரென்று அவளை இழுத்து அவள் உடல் அவன்புரம் முகம் திரும்ப அவளை வளைத்தான். அதனால் நிலை தடுமாறி கையிலிருந்த துணிகளை நழுவவிட்டாள். அன்னிச்சை செயலாக அவளது கைகள் அவன் மார்பின் சட்டையை இறுக்க பற்றியது. பேசும் சக்தியற்று அவன் விழிகளையே பார்த்தாள். அவனும் அவள் விழியினையும் ஈரம் காய்ந்த உதடுகளையும் மாறி மாறி பார்த்தான்.


ஆதிரைக்கு இதுவும் முன் இரு தினங்களைப் போல என் பெண்மையின் வேட்க்கையை அதிக படுத்தும் முயற்சியா? இதுவும் முன் இரு இரவுகள் போல பாதியில் நின்று போகுமா? இன்றும் அர்ஜூன் தூங்குவது போல பாசாங்கு செய்வானா? என்று கண்களை இறுக்க மூடி திறந்து பார்த்தாள். முன் போல அவன் கைகளில் நெலிந்து பின் மனம் நோக ஆதிரைக்கு இப்போது விருப்பமில்லை. அதனால் பேச முடியாமல், “அ.. அர்ஜூன். எ… என்னை.. வி.. விடுங்க" என்று திக்கி சொன்னாள். அவளது பந்தய குதிரை இதயம் அதன் வேலையை செய்ய அதன் வெளிப்பாடாக அவளுக்கு மூச்சு வாங்க ஆரம்பித்தது.


அவள் மனம் அப்படியிருக்க அர்ஜூனுக்கு அவளழகை பார்க்க கண்கள் போதவில்லை போலும். அவள் சொல்வதை அசட்டை செய்து அவள் இதழ் நோக்கி குனிந்தான். அவன் என்ன செய்ய இருக்கிறான் என்பதை உணர்ந்த ஆதிரை அவசரமாக தன் கைகளால் தன் உதடுகளை மூடிக்கொண்டு " என்னை விடுங்கள்" என்று கத்தினாள்.


இப்படி ஆதிரை செய்ய கூடுமென்று எதிர்பாராத அர்ஜூன் அவளை விடுத்து விலகி அவளுக்கு முதுகு காட்டி நின்றான். அவன் விடுத்தவுடன் ஓட்டமும் நடையுமாக கீழே விழுந்திருந்த சுடிதாரை எடுத்துக் கொண்டு குளியல் அறைச் சென்று உடை மாற்றி வந்தாள்.


அவளது வருகைக்காகவே காத்திருந்ததுப் போல் அங்கிருந்த மூக்கில் நாற்காலியில் அமர்ந்துக் கொண்டு , “ ஏன் ஆதிரை. என்னை விலக்குகிறாய்?” என்று இரண்டு நாட்களாக ஆதிரை நடந்துக் கொள்ளும் விதத்தில் நேரிடையாக எங்கோ பார்த்த வண்ணம் அவளிடம் கேட்டான் அர்ஜூன்.


அவனை நிமிர்ந்து பார்த்த ஆதிரை, “ ஆவலுடன் நெருங்கி வந்துவிட்டு பின் பாதியிலே விருப்பமில்லாமல் மனம் நோக விலகுவதை விட , நெருங்காமல் இருப்பதே மேல். அதனால் அவ்வாறு செய்தேன்" என்று அவனின் மனதிற்காக எண்ணியே சொல்லிய வண்ணம் கட்டிலிலிருந்த சேலையை மடித்து வைக்க முயன்றாள்.


அதனை தவறாக புரிந்துக் கொண்ட அர்ஜூன் , " என்னடி சொன்ன? விருப்பமில்லாமல்தான் அன்று என்னை கட்டி தழுவிக் கொண்டு இருந்தாயா" என்று கோபம் கொண்ட வேங்கையாக ஓரெட்டில் அவள் அருகில் வந்து அவள் இரு கைகளையும் வலிக்கும் அளவு பற்றி அவளை அவன்புரம் திருப்பி அவள் திமிர திமிர அவள் இதழ்களில் அவன் இதழ்பதித்தான். இவ்வாறு அர்ஜூன் செய்ய கூடுமென்று சற்றும் எதிர்பார்த்திராத ஆதிரை முதலில் திகைத்து நின்ற போதும், அவனிலிருந்து விலகிட முயன்றாள். ஆனால் தன் கையும் காலும் நகரமுடியாமல் அர்ஜூனின் கைகளும் காலும் வளைத்திருப்பதை உணர்வதற்குள் ஆதிரை தன் வசமிழந்தாள். இந்த ஆக்ரோஷமான இதழணைப்பு ஆதிரையை பயத்தினால் மயக்கமடைய செய்தது.


அவள் மயங்கி விழுவதை பார்த்த அர்ஜூன், உடனே பயந்து சட்டென விலகி அவளை படுக்கையில் படுக்க வைத்தான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top