தூரம் போகாதே என் மழை மேகமே!! - 66

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer


“இல்லை… நான் அப்படி போயிருக்க வாய்ப்பே இல்லை.” என்று கத்தியே விட்டாள் ஆதிரை. நல்ல வேளையாக யாருமில்லாத மலை படிகள் என்பதாலும் கந்தன் வெகு தொலைவில் இருந்ததாலும் ஆதிரை கத்தியது யாருடைய கவனத்தையும் ஈர்க்க வாய்ப்பில்லை.


அவளது கத்தலில் அர்ஜூனுமே ஒரு நொடி ஸ்தம்பித்து நின்றான். பின் "என்ன இல்லை. எனக்கு நடந்தவையெல்லாம் நினைவுக்கு வந்தது. உன்னிடம் சிவராமன் திகேந்திர சித்தரின் கதை சொல்லியிருப்பார். அவை எனக்கு அவர் சொல்லுமுன்னரே தெரியும். அவை உண்மையாக இருக்கும் போது நீ என்னை தவிக்கவிட்டு சென்றது மட்டும் பொய்யாக என்ன வாய்ப்பிருக்கு. அதனோடு அது போன ஜன்மம். அதனால் நீ உன் மனதை போட்டு குழப்பிக் கொள்ளாதே. அவை முடிந்தவை. அவற்றை உன்னுள் உலவவிட்டு இந்த ஜன்மத்தில் மனதை வேதனை படுத்திக் கொள்ளாதே" என்று பொறுமையாக ஆதிரையை அமைதி நிலைக்குக் கொண்டு வர முயன்றான் அர்ஜூன்.


அர்ஜூன் சமாதனமாக சில வார்த்தைகள் சொல்லிய போதும் ஆதிரையின் மனதில் ஏதோ மிக பெரிய பாரம் ஏறியதாகவே உணர்ந்தாள். மேலும் படிகளில் ஏறுவதற்கு பதிலாக, “ நீங்க முன்னே போங்க. நா சில நொடி இங்கு அமர்ந்துவிட்டு பின்னோடு வருகிறேன். “ என்று படிகளின் ஓரத்திலிருந்த திட்டில் அமர்ந்தாள்.


அவளது இருண்ட முகத்தை பார்த்த அர்ஜூனுக்கும் , ‘அதை பற்றி பேசாமல் இருந்திருக்கலாமோ’ என்று காலம் கடந்து சிந்த்னை வந்தது. பின் , "பரவாயில்லை. நீ அமர்ந்திருக்கும் வரை நானும் இங்கேயே நிற்கிறேன். எப்போது போகலாமோ அப்போது சொல்லு" என்று சொல்லிவிட்டு முன் போல பேண்ட் pocket-ல் கையை விட்டுக் கொண்டு படிகளின் ஓரத்திட்டுக்களுக்கு அருகில் இருந்த புதர் போன்ற இடத்தை பார்த்துக் கொண்டு நின்றான்.


அதிக நேரம் அர்ஜூனைக் காக்கவிடாமல் சில நிமிடங்களுக்கு பின் ஆதிரையே எழுந்து அவனை நோக்கி கேட்டாள். “அப்பறம் என்ன நடந்தது.”


‘என்ன கேட்கிறாள். இப்போதுதான் அப்படி கத்தினாள். அதற்குள் அடுத்து என்ன நடந்தது என்று கேள்வி’ என்று அவளை விசித்திரமாக பார்த்தான் அர்ஜூன். இன்னும் அவளுள் தெரிந்துதான் ஆக வேண்டுமென்ற தீவிரத்தை உணர்ந்த அர்ஜூன் , “ இப்போது எதற்கு ? நீ ரொம்ப உணர்ச்சிவச படுகிறாய். நீ என் அக்காவிடமே கேட்டுக் கொள்" என்று தட்டி கழிக்க முயன்றான் அர்ஜூன்.


அவனை போல் இயல்பாக ஆதிரையால் இருக்க முடியவில்லை. அவன் அவ்வளவு சொல்லியும் பிடிவாதமாக , " இல்லை. எனக்கு எல்லாம் இப்போதே தெரிந்தாக வேண்டும். அவ்வளவு கோபம் இருப்பவர் ஏன் என் கழுத்தில் மஞ்சள் கயிற்றை கட்டினீங்க என்று.” என்று கேட்ட வண்ணம் அவன் முகத்தையும் பார்க்காமல் எழுந்து நடக்க ஆரம்பித்தாள்.


அவளது இந்த அலட்சியம் அர்ஜூனை சிறிது கோப படுத்தியதுதான். இருந்தும் சொல்ல ஆரம்பித்தான். " சரி.. உன் இஷ்டம்.. சொல்கிறேன் கேட்டுக்கொள்.” என்று உடன் சேர்ந்து நடந்த வண்ணம் சொன்னான் அர்ஜூன்.


"நான் உன் மீது கோபமாக இருந்த போதும் நீ இருந்த நிலை கண்டு எனக்கும் அச்சம் வந்தது. என்னை எப்படி கண் விழிக்க செய்தார்களோ அப்படியே உனக்கும் செய்ய சொன்னேன். எனக்கு போல உனக்கும் என் அக்கா உனக்கெதிரே இருந்த பால் அருவியிலிருந்து தண்ணீரை அள்ளி தெளித்தனர். ஆனால் உன்னில் எந்த மாற்றமும் இல்லை. நீ கண் விழிக்க வில்லை. பார்வதியை துதிப்பதையும் விடவில்லை. சரியென்று சிவன் மீது விழுந்த பால் நீரை எடுத்து தெளித்தனர். அப்போதும் எழவில்லை. எனக்கு நினைவிருந்தது உன் முன் இருந்த பார்வதி சிலை எங்கிருக்கிறது என்பது . அதனை என் அக்காவிடம் சொன்னதும், என் அக்காவுக்கும் மாமாவுக்கும் முன் ஜன்ம நினைவு லேசாக வர ஆரம்பித்தது. அந்த நினைவில் என் அக்கா அவசரமாக அந்த குகையில் எதையோ தேடுவதுப் போல தெரிந்தது. அந்த குகையில் பார்வதியம்மன் இருந்த இடத்தில் பால் வண்ண அருவிக்கு பின் இருந்த ஒரு கல்லை நகர்த்தி , போன ஜன்மத்தில் நம் திருமணத்திற்காக உண்டாக்கிய மஞ்சள் கயிற்றை அங்கு வைத்ததாக நினைவு வந்து என் அக்கா எடுத்தாங்க. அதனை என் கையில் கொடுத்து ஒரு நொடியும் காத்திராமல் உன் கழுத்தில் கட்ட சொன்னாங்க.” என்று நிறுத்தினான்.


அதுவரை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த ஆதிரை, அதனை கேட்டது, “ என்ன!! ஏன் அண்ணி அப்படி சொன்னாங்க. என்ன செய்தும் கண் விழிக்காத என்னை அந்த நிலையில் திருமணம் செய்வது எப்படி சரியாகும். சரி அண்ணிக்குதான் எதுவும் தெரியாது. உங்களுக்குதான் என் மீது அவ்வளவு வெறுப்பாயிற்றே! பின் எதற்கு அவர்கள் சொன்னார்கள் என்று கழுத்தில் இந்த கயிற்றை கட்டினீர்கள்" என்று கோபம் குரலில் தொனிக்க கேட்டாள் ஆதிரை.


ஆதிரையின் இந்த குற்றம்சாட்டும் குரல் அர்ஜூனின் பொறுமையையும் சோதித்தது. அதனால் அர்ஜூனும் கோபத்தில் கண்டனம் தெரிய, "பார் ஆதிரை. நான் உன்னிடம் hospital -ல் கண் விழித்தப் போதே. உன்னை திருமணம் செய்துக் கொண்டு மகிழ்ச்சியில் திளைக்கவில்லை என்று சொன்னேன். அப்படியிருக்க என் அக்கா சொன்னதும் கண்ணை மூடிக் கொண்டு உன் கழுத்தில் மஞ்சள் கயிற்றை கட்டியிருப்பேன் என்று நீ இப்படி பேசுவது சரியில்லை. " என்றான்.


“தெரியும் நினைவு இருக்கிறது. நீங்க என்னால் மகிழ்ச்சியை இழந்தது தெரிகிறது" என்று சொல்லிவிட்டு வெட்டுவதுப் போல அர்ஜூனை பார்த்தாள். ‘தன் மனஒழுக்கத்தை அது போன ஜன்மமே என்றாலும் எப்படி என் திகேந்திரன் சந்தேகிக்கலாம்’ என்ற கோபம் ஆதிரையின் உள் கொதித்துக் கொண்டு இருந்தது. அதன் வெளிப்பாடே அவளது வார்த்தைகளும் இருந்தது.


அவளது குரலில் புரியாமல் , “ஆதிரை" என்று அவளது கையை பற்றி அவன்புரம் அவளை திருப்பி, “என்ன பேசுகிறோமென்று தெரிந்துதான் பேசுகிறாயா? அது அப்போது சொன்னது. நீ கண் விழித்ததும் விழிக்காததுமாக விஸ்வாவை உன்னுடன் நெருங்கி பேசியதை பார்த்ததால் சொன்னது. விஸ்வாவை ஒருவேளை நீ விரும்பி இருக்கக் கூடுமோ! உன் விருப்பமில்லாமல் அக்கா சொல்லை கேட்டு உன்னை அவசரபட்டு திருமணம் செய்துக் கொண்டு உங்க காதல் நிறைவேறாமல் போக காரணமாகி போனேனோ என்ற கோபத்தில் என் மீது இருந்த கோபத்தையே நான் அவ்வாறு சொன்னேன். “ என்று அவள் முகத்தின் மேவாயை உயர்த்தி பொறுமையாக அவள் கண்களை ஊடுருவிய விதமாக கேட்டான்.


அர்ஜூனின் அந்த செய்கை ஆதிரையின் கோபத்தை குறைத்தது என்ற போதும் மீண்டும் கொக்கரிக்க அவனிடமிருந்து விலகி நின்று, “எது எப்படி இருந்த போதும் மனதில் என் மீது வருத்தம் வைத்துக் கொண்டு என்னை திருமணம் செய்ந்தது தவறு" என்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியது ஆதிரையின் வார்த்தைகளும் புத்தியும்.


“சே!.. “ என்று தலையை கோதிய அர்ஜூனும் கோபத்தில் கொதித்தான். மீண்டும் அவளருகில் வந்து அவள் கையை அவளுக்கு வலிக்கும் வரை அழுந்த பிடித்து " தவறு… தவறுதான் என்ன செய்ய சொல்கிறாய்!” என்று கண்கள் சிவக்க உறுமினான். “ உன் மீது வெறுப்பு இருந்த போதும் விரும்பியும் வைத்துவிட்டேனே! என் விருப்பு வெறுப்புகளுக்கு மேல் எனக்கு நீ உயிரோடு இருந்தால் போதுமென்று தோன்றியது. போன ஜன்மங்கள் போல இளம் வயதிலே இறந்துவிடுவாயோ பயந்தேன். தவித்தேன். நான் உன்னை திருமணம் செய்யாமல் விட்டிருந்தால் செத்து போயிருப்பாயடி.. நீ செத்து போயிருப்பாய். என்னால் இன்னுமொருமுறை உன்னை இழக்க முடியாதடி முடியாது .” என்று கத்தியவன் ஆதிரையை இழுத்து ஒருமுறை இறுக்க அணைத்துவிட்டு அவளை திரும்பியும் பாராமல் விட்டுவிட்டு வேகமாக படிகளில் ஏறி மலை மீது போனான்.


ஆதிரை என்ன நடந்தது என்று புரியாமல் ஸ்தம்பித்து நின்றாள். அர்ஜுன் அவளை விரும்புகிறான். அத்தனை வெறுப்புகளுக்கு மத்தியிலும் விரும்புகிறான். என்பதை அவள் உணர்வதற்குள் அர்ஜூன் மலையின் உச்சிக்கே சென்று விட்டிருந்தான். அவனை அவளிருந்த இடத்திலிருந்த வண்ணம் பார்த்தாள்.


செய்வதறியாது தவித்தது ஒரு நொடியே பின் அவனது வேகத்திற்கு வேகம் கொடுப்பதுப் போல வேகமாக அவளும் படிகளில் ஏற ஆரம்பித்தாள். ஆனால் அந்த தீவில் அடிப்பட்ட கால் தசைபிடிப்பு அதிக நாட்கள் கழித்து நடந்த இந்த நடைபயணத்திலும் திடீரென்று வேகமாக படிகளில் ஏறியதுமாக மீண்டும் வலிக்க ஆர்மபித்தது. “ஆ… " என்று அப்படியே சில நொடிகள் படிகளில் அமர்ந்தாள். அவளையும் அறியாமல் அவள் கண்ணில் நீர் தெரிந்தது. அதனை அவசரமாக துடைத்து. கையோடு கொண்டு வந்திருந்த கைக்குட்டையால் இழுத்துபிடித்து காலினை கட்டினாள். பொறுமையாக படிகளில் ஒன்றன் பின் ஒன்றாக எடுத்து வைத்து மலை கோவிலினை அடைந்தாள். அதற்குள் அர்ஜூனும் கந்தனும் ராம் சீத்தாபழங்களை அங்கிருந்த சின்ன அருவியில் கழுவி தேக்கு மர இலையில் வைத்துக் கொண்டிருந்தனர்.


ஆதிரை தத்தி தத்தி வருவதை கந்தந்தான் முதலில் பார்த்தான். “அக்கா… என்ன ஆச்சுக்கா?” என்று அவளிடம் வேகமாக ஓடி வந்து அவளது கையை பற்றினான். அர்ஜூனின் முகத்திலும் சிறு அதிர்ச்சி தெரிந்தப் போதும், தீவில் அடிப்பட்ட அதே கால் என்றதும் அவனுக்கு எல்லாம் புரிந்து போனது. அவனும் வேகமாக ஆதிரையின் அருகில் வந்து அவளது இடை வளைவில் அவன் கையினை செருகி அவளை தாங்கிபிடித்தான்.


அர்ஜூனின் இந்த செய்கையில் ஒரே ஒரு நொடி ஆதிரை அர்ஜூனின் விழிகள் பார்த்துக் கொண்டது. இருந்தும் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. அர்ஜூனும் அவளிடம் என்ன ஏது என்று கேட்கவில்லை. அதனால் அவன் கையை பற்றியிருந்த போதும் அவனிடம் பேசாமல் கந்தனிடம் பேசினாள்.


“ஒ..ஒன்னுமில்லடா. உன் மாமாவோடு போட்டி போட்டுக் கொண்டு ஓடி வந்தேனா.. ஏற்கனவே அடிப்பட்ட கால் மீண்டும் சுலுக்கு போல பிடித்துக் கொண்டது என்று நினைக்கிறேன். சரி வா.. கொஞ்ச நேரம் உட்கார்ந்தால் சரியாகிடும். சாமி கும்பிட்டு உட்கார்ந்து பேசலாம்.” என்று அவள் மூச்சுக்கு பேசினாள்.


“போ அக்கா. இதுக்குதான் சொன்னே காரில் வந்துவிட்டு பொறுமையாக வந்து சாமியை பார்த்துவிட்டு போயிருக்கலாம். வீட்டுக்கு போனால் சேகர் அங்கிள் என்னை திட்ட போகிறார். எனக்கும் கவலையாக இருக்கிறது. “ என்று சோகமாக சொன்னான் கந்தன்.


“அட தம்பி… இதெல்லாம் ஒன்றுமில்லையடா. உன் மாமாவோடு ஊருக்கு போய் எவ்வளவு நாள் முடியுமோ அவ்வளவு நாள் ஓய்வெடுக்க தானே போகிறேன். இதற்கே கவலை பட்டால் எப்படி சொல் " என்று கந்தனின் தலை முடியை களைத்துவிட்டாள்.


“என்னமோ போங்க அக்கா. “ என்று சலிப்புற்று பின் " நானும் மாமாவும் ராம் சீத்தாபழம் பறிச்சு வச்சிருக்கோம். சாமி கும்பிட்டு சாப்பிடலாம்.” என்று சொல்லிவிட்டு ,” நான் பூசாரி எங்க இருக்காருனு பார்க்கிறேன்" என்று வேகமாக ஓடினான்.


எங்கோ அமர்ந்து யாருடனோ பேசிக் கொண்டிருந்த பூசாரியைக் கையோடு அழைத்துக் கொண்டும் வந்தான் கந்தன். நேரே கோவிலுக்குள் சென்று முருகனை மூவரும் வணங்கினர்.. மூவரும் வணங்கி வெளியில் வர, “இன்னும் 10 நிமிடம் தாமதாகியிருந்தாலும் நான் நடையை சார்த்திவிட்டு கிளம்பி இருப்பேன் தம்பீ. நல்ல வேளையாக சரியான நேரத்தில் வந்தீர்கள்" என்றார் பூசாரி.


அதற்கு பதிலாக புன்னகித்தனர் ஆதிரையும் அர்ஜூனும். அர்ஜூன் பூசாரியின் தட்டில் 500 ரூபாய் தாளை போட்டுவிட்டு, “அப்போ கிளம்றோம் சாமி.” என்றான்.


“ம்ம். உடனே கிளம்பினால் எப்படி, சில நாழி அந்த பாறை மீது உட்கார்ந்திருந்துவிட்டு போங்க. நான் கிளம்புறேன். கோவிலில் சில நிமிடம் இருந்துட்டு போனால் மனம் வெகுவாக நிம்மதியாக இருக்கும். கந்தா பத்திரமாக உடன் இருந்து கூட்டி வந்துவிடுடா. ” என்று சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டார் பூசாரி.


“சரிங்க தாத்தா… " என்று சொல்லிவிட்டு, பறித்து வைத்திருந்த சீத்தாபழத்தை எடுத்து வந்து ஆதிரையிடம் கொடுத்தான் கந்தன்.




மூவரும் பழத்தை பிரித்து உண்டுவிட்டு அங்கிருந்த சின்ன அருவியில் கைகளை கழுவிக் கொண்டு கிளம்ப எத்தனித்தனர். ஆதிரையின் உடைந்து சேர்ந்த கால் தசை நார் மீண்டும் வலிக்க ஆரம்பித்தது. “டே தம்பி கால் வலிக்குதுடா. என்னால் அவ்வளவு தூரம் திரும்ப நடக்க முடியுமா என்று தெரியவில்லையே" என்று வலியின் வேதனையில் கந்தனின் தோள் மீது கையினை அழுந்த வைத்து அப்படியே கீழே மீண்டும் அமர்ந்தாள் ஆதிரை.


“அச்சோ.. என்ன அக்கா.. ஏன் இப்படி சொல்றீங்க. இப்போ என்ன செய்ய அக்கா...மாமா நீங்களே சொல்லுங்க. அவ்வளவு தூரம் அக்காவ தூக்கிக் கொண்டா போக முடியும் .” என்று புலம்பினான் கந்தன். வலியில் தவித்த ஆதிரை எதுவும் பேசாமல் அருவி நீரில் கால் வைக்க எழுந்து மெதுவாக செல்ல முயன்றாள்.


“ஆதிரை … நில் எங்கும் செல்லாதே. என்று அவளை நடக்கவிடாமல் இழுத்துப்பிடித்து அவளது இடையில் தன் கையினை கொண்டு அணைத்த வண்ணம் கந்தனிடம் பேசினான் அர்ஜுன். “கந்தா.. நீ எங்களுக்கு முன்னால் விரைவாக சென்று யாரிடமாவது bike இல்லன scooty வாங்கி வருகிறாயா? அதுவரை ஆதிரையை நான் மெதுவாக தூக்கிக் கொண்டு வந்த வழியே வருகிறேன்.” என்று கோர்வையாக சொன்னான் அர்ஜூன்.


“ம்ம்.. நல்ல idea மாமா. நான் ஓடி போய் வாங்கி வருகிறேன். நீங்க பார்த்து வாங்க. வரும் போது சேகர் அங்கிள் phone வாங்கி வருகிறேன். எங்கு இருக்கிறீங்க என்று தெரிந்துவிடும். இல்லையென்றால் படிகளிலிருந்து இறங்கி மலையடிவாரத்தில் நீங்க காத்திருந்தாலும் சரிதான். நான் விரைவில் வந்துவிடுகிறேன்.” என்று சொல்லிக் கொண்டு ஓடிச் சென்றான் கந்தன்.


“ம்ம். நீ phone செய். நாங்க மெதுவாக வந்துக் கொண்டிருக்கிறோம். “ என்றான் அர்ஜுன். அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்த ஆதிரை, ‘சே என் காலில் பட்ட அடி எப்படி எனக்கு மறந்து போனது.’ என்று புலம்பினாள்.


“சாரி… என்னால் எல்லோருக்கும் கஷ்டம்" என்று மென்று விழுங்கி அர்ஜூனிடம் சொன்னாள் ஆதிரை.


“ பரவாயில்லை. நீ சேலையில் இருப்பதால் என்னால் உன்னை உப்பு மூட்டைப் போல தூக்க முடியாது. கையில்தான் ஏந்த வேண்டும் பரவாயில்லையா?” என்று கேட்டான் அர்ஜுன்.


“அ.. இ.. இல்லை.. உங்களுக்கு ஏன் சிரமம். கை பிடித்துக் கொள்ளுங்கள் நானே நடந்து வருகிறேன். “ என்று சொல்லிவிட்டு ஒரு அடி எடுத்து வைத்தாள். அவளது வலியின் வேதனையை அவள் பல்லினால் செவிதழை கடிப்பதை பார்த்து அர்ஜூன் உணர்ந்துக் கொண்டான்.


“சிறு பிள்ளை போல பிடிவாதம் செய்யாதே!. நீ ஒன்னும் அவ்வளவு எடை கிடையாது. சொல்ல போனால் உன்னை முதலில் பார்த்ததற்கும் இப்போதுக்கும் மிகவும் மெலிந்து இருக்கிறாய். அதனால் எனக்கு எந்த சிரமமும் இல்லை.” என்று சொல்லி அவளை தன் இரு கைகளில் ஏந்தினான்.


“அ.. அர்ஜூன்.. வே..வேண்டா" என்று சொல்லியவளின் உதடுகள் அர்ஜூனின் கோபப்பார்வையில் வார்த்தைகளை சொல்லாமலே மூடிக் கொண்டது.


ஆனால் அர்ஜூனின் கைகள் ஆதிரையின் இடையில் தழுவி அவளது வெற்று வயிற்றில் குறுகுறுத்தது. அவனது கைகளில் குழந்தையாக சுருண்டு போனாள் ஆதிரை. இருந்தும் அவன் கைகளை எடுத்துவிடவும் முடியாமல், கூச்சமும் குறையாமல் ஆதிரையின் முகம் செவந்தது. என்ன செய்தும் அவள் நாணத்தை தடுக்க முடியாமல் தவித்தாள். சில படிகள் இறங்கியதும். கொஞ்சம் நேரம் நான் அமர வேண்டும் என்று சொல்லி வேண்டுமென்ற படிகளின் ஓரத்தில் தென்பட்ட மதிலில் அமர்ந்துக் கொண்டாள். அர்ஜூனையும் அமரவைத்தாள். மீண்டும் அர்ஜூன் தூக்கு வதற்குள் தன் சேலையை இழுத்து வயிற்றை சுற்றி மறைத்துக் கொள்ள முயன்றாள். ஆனால் வேண்டுமென்றே அர்ஜூன் அவள் ஆடையை விலக்கி வெற்று வயிற்றில் தன் கை படற அவளை தூக்குகிறானோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. அவளுக்குள் கோபமாக வந்தது. இருந்தும் ஏன் இப்படி செய்றீங்க என்று கேட்கவும் துணிவில்லை. எங்கு நான் அப்படி நினைத்து செய்யவே இல்லை. உன்னுள் ஏன் அப்படிப்பட்ட எண்ணம் வருகிறது என்று கேட்டாள் என்ன செய்வது. அதனால் எதுவும் பேசாமல் அமைதி காத்தாள்.


தன் மனதை வேறுபுரம் திருப்ப எண்ணி அந்த தீவில் அதன் பிறகு என்ன நடந்திருக்கும். இவனிடம் இனி கேட்க முடியாது. கண்டிப்பாக சொல்ல மாட்டான். அதனை தெரிந்துக் கொள்ளாமல் அவளுக்கு மண்டையே வெடித்துவிடும் போல இருந்தது. அதனால் அவள் அண்ணியிடம் கேட்கலாமா என்று நினைத்தாள்.


அவளையே ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டு வந்திருந்த அர்ஜூன், “மிகவும் யோசிக்காதே. நானே அடுத்து என்ன நடந்தது என்று சொல்கிறேன். ஆனால் சொல்வதை அமைதியாக கேட்க வேண்டும். எந்த கேள்வியையும் கேட்க கூடாது" என்று படிகளிலே கண்ணாய் பேசினான் அர்ஜூன்.


அவளை கண்டுக் கொண்டானே என்று இருந்த போதும் அவளுக்கு என்ன நடந்தது என்று தெரிய வேண்டும். அதனால் அவனிடம் , “ச.. சரி அர்ஜூன்.. நான் எதுவும் கேட்க மாட்டேன். எனக்கு அப்பறம் அந்த தீவில் என்ன நடந்தது என்று சொல்லுங்க" என்று சொல்லிவிட்டு அவளது செவ்விதழை அவள் பற்களால் கடித்து மேலும் எதுவும் கேட்டுவிடாமல் அவள் உதடுகளை தடுத்தாள்.


அதனை பார்த்து உள்ளுக்குள் மென்னகையிட்ட அர்ஜூன் , அதே மனனிலையுடன் , சொல்ல ஆரம்பித்தான்.


"உன்னை திருமணம் செய்துக் கொள்ள சொன்னதும் என் அக்காவிடம் முடியாதுக்கா. நினைவில்லாமல் இருக்கும் அவள் அறியாமல் இப்படி செய்வது தவறு என்றேன். அதற்கு என் அக்கா சொன்னது, போன ஜன்மத்தில்தான் நாங்க ஆதிரையையும் உன்னையும் இழந்தோம். உங்களை எண்ணி எங்க வாழ்வையும் நாங்க மகிழ்வுடன் வாழவில்லை. இந்த ஜன்மத்தில் எங்களால் உங்களுக்கு எந்த தவறு நடப்பதையும் பார்த்திருக்க முடியாது. சொல்ல போனால் நீங்க திருமணத்திற்கு முன்பு தவமிருந்ததுக்கு பதிலாக திருமணத்திற்கு பின் தவமிருந்திருந்தால் இவையெல்லாம் நடந்திருக்காதோ என்று எத்தனை நாள் எண்ணினோமென்று எனக்கும் இவருக்கும்தான் தெரியும். அதனால் போன ஜன்மம் போல பிடிவாதம் செய்யாமல் சொல்வதை செய்யுங்க. என்று கண்டிப்புடன் சொன்னாங்க.


நீங்க இந்த ஜன்மத்தில் ஒன்றாக வாழ்வதை பார்க்கவே நாங்க இருவரும் உங்களோடு இந்த பிறவி எடுத்து வந்திருக்கோம். அதனோடு நீ இன்னும் இரு நாளுக்குள் அவளை திருமணம் செய்யவில்லையென்றால் அவள் இறந்து போக கூடும். நான் இரவெல்லாம் படித்த கல்வெட்டின் அவசியம் இப்போதுதான் புரிகிறது. உங்களை இழந்து எங்களால் இருக்க முடியாது. அதனை எங்களால் இன்னொரு பிறவியிலும் தாங்கவும் முடியாது. அதனால் முதலில் அவள் கழுத்தில் இந்த மஞ்சள் கயிற்றை கட்டு. மற்றதை பிறகு பேசலாம். என்று உறுதியாக சொல்லிவிட்டனர். எனக்கும் வேறு வழியும் இருக்கவில்லை. நீ தொடர்ந்து சொன்ன ஓம் சக்தியே போற்றி என்ற மந்திரம் பார்வதியம்மனை பார்க்காமல் ஓயாது. இந்த இரண்டு நாளில் யாராலும் பார்வதியை இந்திரபிரதேசிலிருந்து இந்த தீவுக்குள் உன் முன் கொணரமுடியாது. எனக்கும் தெரியும் உன்னாலன்றி அந்த சிலையை யாராலும் இந்த தீவிற்குள் கொணர முடியாது என்பது. அதனால் உன் கழுத்தில் மஞ்சள் கயிற்றை கட்டினேன்.


நம் திருமணம் நடந்தப்பின்னும் உன்னுள் எந்த மாற்றமில்லை. கவலையுடன் நான் என் அக்காவை பார்த்தேன். பின் சிவன் மீது விழுந்த பால் நீரை அள்ளி உன் மீது தெளித்தார்கள். பின் உன் மீதிருந்த புற்று உடைந்து விழுந்தது. திருமணத்திற்கு பின்பு நாம் இருவரும் ஒருவர் போல அதனால் நான் தவமிருந்த சிவன் உனக்கும் அருள் புரிந்தார் என்று என் அக்கா சொன்னாங்க. ஆனால் நீ கண்விழிக்கவில்லை. உன்னோட நாடி துடிப்பு மட்டும் இருந்தது.


அப்போது பெரிய சப்தம் கேட்டது. திடிரென்று குகைக்குள் வெளிச்சம் வருவதுப் போல தெரிந்தது. என்னவென்று பார்த்தால் அந்த தீவு கடலின் மேல் வந்திருந்தது. பௌர்ணமி அல்லாத அன்று நம் திருமணத்திற்கு பின் அந்த தீவு கடலுக்கு மேல் மீண்டும் வந்தது. அதனை உணர்ந்ததும் ஒரு நொடியும் நாங்க காத்திராமல் , விரைந்து வந்து நாம் வந்த படகில் ஏறினோம். உன்னை தூக்கிக் கொண்டுதான் வந்தோம். நீ நினைவுக்கு வரவேயில்லை. பின் சென்னை சேர்ந்தபின் உன்னை நாம் இருந்த அந்த hospital -ல் சேர்த்தோம். அங்குதான் அக்காவுக்கு இரண்டாவதாக குழந்தையும் பிறந்தது. நீயும் கண் விழித்தாய். அதன் பிறகு நடந்தது எல்லாம் உனக்கு தெரியும். அவ்வளவுதான்" என்று எல்லாம் சொல்லிவிட்டதாய் நிம்மதி பெருமூச்சுவிட்டான் அர்ஜூன்.


“ஓ… அப்படியா? ” என்று பெரிய கண்கள் விரித்து அர்ஜூனை பார்த்து கேட்டாள்.


அதற்கு பதிலேதும் சொல்லாமல் வானத்தை நிமிர்ந்து ஒரு நொடி பார்த்தான். “ஆதிரை.. இந்த phone -லிருந்து வெளிச்சத்தை ஒளிரவிடு" என்று அவளிடம் phone –ஐ எடுத்துக் கொடுத்து மீண்டும் அவளைத் தூக்கிக் கொண்டு மலையடிவாரம் வரை வந்துவிட்டான்.


கீழே இறங்குவதற்குள் முழுதுமாக வெளிச்சம் மறைந்து இருள ஆரம்பித்தது. ஆதிரையின் இதயம் பல மடங்கு வேகமாக துடுக்க ஆரம்பித்தது. அர்ஜூனிடம் தன் இருளின் மீதான பயத்தை சொல்ல ஆதிரை தயக்க பட்டாள். அமைதியாக கண்களை மூடிக் கொண்டு அர்ஜூனின் கழுத்து வளையில் மாலையாக போட்டிருந்த தன் கையின் இறுக்கத்தை அதிக படுத்தி அர்ஜூனை கிட்டத்தட்ட அணைத்தார் போல அவன் கைகளில் இருந்தாள். அவ்வாறு ஆதிரை நடந்துக் கொள்வதை பார்த்து அர்ஜூனின் கண்கள் இங்கும் அங்கும் அலை பாய்ந்தது. வரும் போது ரம்யமாக இருந்த வழி இப்போது யாருமற்ற மாந்தோப்புகளும் தென்னங்காடுகளும் , பனங்காடுகளும் , இருளில் பயங்கரமாகவே தெரிந்தது. இப்படியே இனி கடந்து செல்வது சரியாகாது. அதனோடு phone -ல் battery -ம் தீர்ந்துவிடும் அதனால் எங்கேனும் காத்திருப்பதுதான் உசித்தம். வழி மாறி போய் எந்த மிருகத்திடமோ இருளில் அகபடுவது விவேகமாகாது. என்பதை உணர்ந்த அர்ஜூன் வழியில் ஏதேனும் வீடோ, அல்லது குடிசையோ தெரிகிறாதா என்று பார்த்துக் கொண்டு வந்தான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top