தூரம் போகாதே என் மழை மேகமே!! - 64

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer



மூன்று வாரங்களுக்கு முன்பு ..


ரிதிகா மற்றும் அர்ஜூனும் மீண்டும் கடலிலிருந்து மீண்டுவிட்டனர் என்று அறிந்ததுமே சுமித்ராவும் கஜேந்திரனும் இந்திரபிரதேஷிலிருந்து சென்னைக்கு கிளம்பி வந்தனர். அவர்கள் எப்படி கடலிலிருந்து மீண்டு வந்தனர் என்ற கதையை அவர்களிடம் சொன்னப்போது எவருமே நம்பவில்லை. அதனால் அதை பற்றி மேலும் பேசி பயனில்லையென்று ஒருமித்தமாக ரிதிகாவும் அரவிந்தும், அர்ஜூனுமே விட்டிருந்தனர்.


ஏன் ஆதிரை கண் விழித்தப் போதும் "ஆதிரையிடமும் நாம் சென்று வந்த தீவைப் பற்றி யாரிடமும் பேச வேண்டாம் என்று சொல்லிட வேண்டும் அர்ஜூன்" என்று ரிதிகா சொல்லியிருந்தாள்.


ஆதிரையுமே "இந்த உலகில் இப்படி ஒரு அதிசிய தீவு இருக்கிறது என்றால் யார்தான் நம்புவார்கள். மாறாக எனக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது என்று கதை கட்டிவிடிவார்கள். அதனால் பேசாமலிருப்பதே மேல். அதனோடு எனக்கே அந்த தீவிலிருந்து எப்படி தப்பித்தோம் என்று தெரியாதே! முதலில் நான் அண்ணியிடம் பேச வேண்டும். அது வரை அதை பற்றி நான் யாரிடமும் பேசுவதற்கில்லை. " என்று ஆதிரை உட்பட அந்த தீவை பற்றிய உண்மையை அனைவருமே பேசாமல் விட்டனர்.


ரிதிகாவிக்கு குழந்தை பிறந்த பின் ரிதிகாவும் அரவிந்தும் இந்திரபிரதேஷ்க்கு பாட்டியையும் ஊர் மக்களையும் பார்க்க சென்றனர். அனைவரும் மகிழ்வுடன் அவர்களை வரவேற்று ஒரு சின்ன திரு விழாவைப் போல ஊரே ஆர்பரித்தது. கிட்டத்தட்டு 2 வருடதிற்கு முன்பு பார்த்த தன் இரு குழந்தைகளையும் கண்டு கட்டியணைத்து தங்கள் பிரிவாற்றமையை அரவிந்தும் ரிதிகாவும் போக்கினர். முதலில் புரியாமல் விழித்தப் போதும் ராஜாவும் அஸ்மிதாவும் அவர்களின் பாசத்தை புரிந்துக் கொண்டு அவர்களின் பெற்றோரோடு தங்கள் மழலை மொழியில் ஆசையாக பேசவும் செய்தனர்.


அதனை தொடர்ந்து அர்ஜூனுக்கு திருமணம் ஆகிவிட்டது என்றும் ஒரு இக்கட்டான சூழலில் அவசரமாக திருமணம் முடிக்க நேர்ந்தது என்றும் அந்த பெண் இப்போது சுயனினைவில்லாமல் மருத்துவமனையில் இருக்கிறாள் என்றும் ரிதிகா ஊர் மக்களிடம் சொன்னாள்.


இதனை கேட்டதும் ஊர் மக்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.


அப்போது சிவசக்தி, "அந்த பெண்ணுக்காகதான் நாம் இத்தனை காலம் காத்திருக்கிறோம். அதனோடு உங்க அர்ஜூனின் உண்மையான பெயர் திகேந்திரன். அன்று என் அண்ணன் சொன்ன சித்தரின் மறு ஜன்மம்தான் என் பேரன். இந்த நேரத்திற்கு அவனுக்கு இந்த உண்மை தெரிந்திருக்கும். இந்த திருமணம் ஏற்கனவே இப்படிதான் நடக்க வேண்டுமென்று நிற்ணயிக்கப்பட்டிருக்க வேண்டும். அதனால் யாரும் குழப்பமடைய வேண்டாம்" என்று சொல்லி ஊர் மக்களை சமாதனம் செய்தார்.


"ஓ… இப்படியும் இருக்க வாய்ப்பிருக்கமா.. எது எப்படி இருந்தாலும் அர்ஜூன் தம்பிக்கு நல்லது நடந்தால் சந்தோஷம்தான். இன்னும் 5 மாதத்திற்குள் இந்த ஊரைவிட்டு போக வேண்டுமென்று நினைக்கும் போதும் கவலையாகிறது. கடந்த சில வருடங்களாகவே நடப்பவை எவையும் பிடிபட மாட்டேன் எங்கிறது. சந்திரகுளிர் குகை கோவிலை பற்றியும்தான். “ ஒருவர் மாற்றி ஒருவர் சொல்லிக் கொண்டே இருந்தனர்.


“எதற்கும் கவலைபட வேண்டாம். இந்த 5 மாதத்திற்குள் இதற்கான தீர் வந்துவிடும்.” என்று அமைதிபடுத்தினார் சிவசக்தி.


“உண்மைதான். இன்னும் 5 மாதத்திற்குள் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்துவிடதான் வேண்டும். இல்லையென்றால் நினைக்க முடியாத விபரீதங்கள் நிகழ வாய்ப்பிருக்கு. அதனால் நீங்கள் எல்லோரும் நம்பிக்கை இழக்காமல் தைரியமாக இருக்க வேண்டும்" என்று அவர்களிடம் ரிதிகாவும் எடுத்துச் சொன்னாள்.


பிறகு ஒருவாரம் கழித்து ஆதிரை கண் விழித்த செய்தி கேட்டதும் , ஏற்கனவே அர்ஜூனுக்கு திருமணம் நடந்திருந்த போதும் ஆதிரை சந்திரகுளிர் சென்று அம்மன் சிலையை எடுத்துக் கொண்டு வரவேண்டும் என்றும் ராஜேந்திர ராஜாவின் குடும்ப வழக்கப்படி எல்லா சடங்குகளையும் அவளுக்கு கட்டாயம் செய்ய வேண்டும் என்று சிவராமன் அறிவுறுத்தினார். அதன்ப்படியே சிவசக்தி பாட்டியும் எல்லார் ஏற்பாடுகளும் செய்தனர். உடன் இருந்து உதவும்படி அரவிந்திற்கும், ரிதிகாவிடமும் சொல்லிவிட்டு சிவராமன் சென்னை கிளம்பி வந்தார்.


ஆதிரையிடம் சொல்ல வேண்டியவற்றை சொல்லிவிட்டு , நம்பி மலையில் வைத்திருந்த ஓலை சுவடியை எடுத்து வந்து ஆதிரையிடம் தந்துவிட்டு தன்னுடைய மிக பெரிய கடமை முடிந்ததாக மீண்டும் கிளம்பி இந்திரபிரதேஷுக்கு சென்று அம்மாசை தினத்திற்காகவும் ஆதிரையின் வருகைக்காகவும் காத்திருந்தார். அவருடன் சேர்ந்து ஊர் மக்களும் காத்திருந்தனர்.


இன்று..


ஆதிரையின் நேற்றைய கனவு இல்லை இல்லை நிகழ்வு அவளை காலை விடிந்த பின்பும் உறங்கச் செய்தது.


அர்ஜூன் எதுவுமே நடக்காததுப் போல் கந்தன் வந்து அழைத்ததும் ஆற்றில் குளிக்க ஒரு துண்டினை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டிருந்தான்.


வெகு நேராம் கழித்து கண்விழித்த ஆதிரை வெகுவாக வெளிச்சம் அடிப்பதை உணர்ந்து நேரத்தை பார்த்தாள் மணி 10 ஆகியிருந்தது. அவசரமாக எழுந்து வெளியில் வந்து பார்த்தால் லாவண்யா மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.


ஆதிரை வருவதை பார்த்து , “ ஹப்பா.. எழுந்துட்டியா? நான் வேற hospital போகனுமா? சேகர் சார் ஊர் தலைவர் வீட்டுக்கு போயிருக்காரு. இந்த கந்தனும் அர்ஜூன் சாரும் ஆற்று பக்கமா போனாங்க இன்னும் வரல. நீயும் எழலயா எப்படி தனியே தூங்கற உன்ன விட்டுட்டு போறதுனு யோசிச்சிட்டு இவ்வளவு நேரம் ஆகிடுச்சு. ஆதிரை.. நான் அவசரமாக கிளம்பனும். நீ குளிச்சிட்டு சாப்பிட்டுகிறியா. சேகர் சார் உன்னுடன் சாப்பிட சொன்னார். ஆனா ஏற்கனவே இரண்டு phone call வந்துடுச்சு. நான் கிளம்பனும்.” என்று கோர்வையாக சொன்னாள் லாவண்யா.


“ஏ.. பரவாயில்ல லாவண்யா.. நீ முதல்ல கிளம்பு என்ன அவசரமோ. நான்தான் கொஞ்சம் அதிகம் நேரம் தூங்கிட்டேன். நான் பாத்துகிறேன். “ என்று சொல்லிவிட்டு ஆதிரை குளித்துவிட்டு வர துண்டு சகிதங்களை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குச் சென்றாள் .


குளிக்கும் போதே, ‘அர்ஜூனும் கந்தனும் எதற்காக ஆற்றுக்கு போனாங்க? மீனா பிடிக்க போறாங்க. சாப்பிட்டாங்களா இல்லையானு லாவண்யாவை கேட்கவே இல்லையே. எப்போதும் தோசை மாவு அறைத்து வைப்பது என் பழக்கம் லாவண்யா தோசை மாவு வச்சிருக்களானு தெரியவில்லையே.’ என்று பலதும் நினைத்துக் கொண்டு குளித்துவிட்டு பாவாடையையும் மேல் சட்டையையும் போட்டுக் கொண்டு ஒரு டவலை மேலே போர்த்துக் கொண்டு வீட்டினுள் ஓடினாள்.


ஓடியவள் சேலையை மாற்றிக் கொள்ளாமல், துண்டினை போர்த்திய வண்ணமே முதலில் சமயல் அறைக்குச் சென்று மாவிருக்கிறதா என்று fridge – ஐ திருந்து பார்த்தாள். ஆனால் Hall-ல் கயிற்று கட்டிலின் மீது அமர்ந்துக் கொண்டு தன் தலையினை துவட்டிய வண்ணம் phone – ஐ பார்த்துக் கொண்டிருந்த அர்ஜூனை பார்த்தாள் இல்லை. ஆதிரை உள்ளெ நுழைந்ததும் அவளை பார்த்த அர்ஜூன் குளித்ததும் ஆடை கூட மாற்றாமல் சமயல் அறையில் என்ன செய்கிறாள் என்று பின்னோடு வந்து பார்த்தான்.


“ஹப்பா.. மாவிருக்கிறது. ஒரு சட்னி செய்துவிட்டு தோசை செய்து கொடுத்துவிடலாம். முதல் முதலாக என் கையால் சாப்பிட போகிறான். என் கணவன்" என்று முனுமுனுத்து ஒருவிதமாக கிளுகிளுத்துக் கொண்டு திரும்பி வர எத்தனித்தாள்.


ஆனால் அர்ஜூனை எதிர்பாராமல் கண்டதும் பயத்தினால் ஒரு சிறு கதரலிட்டு தன் மீதிருந்த துண்டினை தவறவிட்டாள். ஆதிரை பயத்திலிருந்து மீள்வதற்குள் அர்ஜூனும் அவளழகில் நிலை குழைந்தான். அர்ஜூனின் பார்வை சென்ற இடமெல்லாம் சூடாவதை ஆதிரை உணர்ந்தாள். அவசரமாக அவனுக்கு முதுகு காட்டி நின்றாள்..


“அ… அர்ஜூன்.. நீ .. நீங்க கொஞ்சம்..” என்று ஆதிரை பேசிக் கொண்டிருக்கும் போதே அர்ஜூன் கீழே விழுந்திருந்த துண்டினை எடுத்து அவள் மீது போர்த்துவிட்டான்.


அதன்பின், அவசரமாக ஓடிச் சென்று அறை கதவை தாழிட்டுக் கொண்டாள் ஆதிரை. ஆதிரை ஆடை மாற்றி வருவதற்குள் அர்ஜூன் , வெளியில் நின்றுக் கொண்டு இளனீர் குடித்துக் கொண்டிருந்தான். கந்தன் மரத்திலிருந்து பரித்து வந்து தந்திருந்தான். இருவரும் அளவளவிக் கொண்டிருந்தனர்.


“கந்தா… இருவரும் சாப்பிட வாங்க" என்று பொதுவாக அழைத்தாள்.


அர்ஜூன் அருகாமை ஆதிரையால் எதிர்க் கொள்ள முடியவில்லை. அர்ஜூன் மீது ஆதிரை வைத்திருந்த சந்தேகம் பொய் என்று நிரூபணம் ஆன பின்பும் , "அர்ஜூனுக்கு என்னுடன் வாழ விருப்பமா என்று அறிந்துக்கொள்ள வேண்டும். இல்லை அண்ணி சொன்னதற்காக என்னை கட்டாய திருமணம் செய்துக் கொண்டானா? உண்மையில் அந்த தீவில் நடந்தது என்னவென்று அறிந்துக் கொள்ள வேண்டும். அதுவும் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில். “ என்று அவளுள் பேசிக் கொண்டே. அவன் முகத்தையும் பாராமல் அவர்களுக்கு தோசை செய்துக் கொடுத்துவிட்டு அவளும் சாப்பிட அமர்ந்தாள்.


கந்தனுடன் பேசிக் கொண்டிருப்பதுப் போல் இருந்தப் போதும் ஆதிரையின் கருவிழிகளையே பார்த்திருந்த அர்ஜூனுக்கு அவளுள் எத்தனை கேள்விகள் என்று தோன்றியது .


பின்பும் கயிற்று கட்டிலில் அமர்ந்துக் கொண்டு தன்னுடைய phone ஐ நோண்டிக் கொண்ட ஆதிரையை பார்த்துக் கொண்டிருந்தான்.


“ கந்தா மாலை அந்த மயில்பாறை முருகன் கோவிலுக்கு போய் வரலாமா? ஏனோ அங்கு போக வேண்டும் போல தோன்றியது.” என்றாள் ஆதிரை.


“ம்ம்.. சரிக்கா.. போய் வரலாம். நான் நீங்க மாமா .. எல்லோரும் போலாம்" என்றான் கந்தன்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top