தூரம் போகாதே என் மழை மேகமே!! - 63

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer



ஆச்சரியமாக கண்களை விரித்த ஆதிரை, “என்ன? விஸ்வா என்னிடம் உன்னை தெரியும்னு ஒரு நாளும் சொன்னதில்லையே! சொல்ல போனால் நீ என்னைப்பற்றி college -ல பேசுரதெல்லாம் அவன்தான் என்னிடம் சொல்லுவான். உன்ன அவனுக்கு பிடிக்காதா?” என்றாள்.


“ம்ம் பிடிக்காதாவர்களாவா? நாங்க இப்போதும் நண்பர்கள்தான். ஆனால் முன் போல் இல்லை. இவ்வாறு உன்னிடம் நடந்துக் கொள்வதுதான் அவனுடைய திட்டமே. என்னுடைய செய்கையால் அவனை நீ விரும்ப செய்ய திட்டமிட்டான்.” என்றாள் லாவாண்யா.


அதை கேட்டதும் ஆதிரைக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. ஆதிரைக்கு ஏனோ நட்பு வட்டம் அதிகம் இருந்திருக்கவில்லை. அவளுக்கு யாருடனும் எந்த நேரத்திலும் சார்ந்து இருப்பது பிடிக்காது. அதனோடு நல்ல நண்பர்கள் அவளுடன் நீண்ட நாள் நிலைத்து இருந்ததில்லை. அதனால் யாருடனும் நெருங்கி நட்பு பாராட்டாமல் விட்டுவிட்டாள். அவள் அண்ணன் அண்ணி வந்த பிறகு நண்பர்கள் வேண்டுமென்ற கவலை இருந்திருக்கவில்லை. கொஞ்சம் நெருங்கிய நண்பன் என்றால் அது விஸ்வா மட்டும்தான். அவன் இவ்வளவுக்கும் திட்டமிட்டிருப்பான் என்று திரும்ப திரும்ப நம்ப முடியாமல் தவித்தாள்.


இவ்வாறு ஆதிரை திகைத்து இருக்கும் போதே லாவண்யா மேலும் பேசினாள் , "உன்னிடம் விஸ்வா எதுவரை என்னை பற்றி சொன்னான் என்று எனக்கு தெரியவில்லை. இதற்கு மேலும் எதுவும் தெரிந்துக் கொள்ளாமல் நீ இருப்பது சரியல்ல.. நான் விஸ்வாவைப் பற்றிதான் உன்னிடம் சொல்ல வேண்டும்" என்றாள் .


ஆதிரைக்கு ஒரு நொடி வியர்த்தது. ‘ஒரு வேளை தன்னைப் பற்றி கல்லூரியில் தவறாக சொல்லியதும் விஸ்வாதானோ. லாவண்யா தவறாக பேசியதாக என்னிடம் மாற்றி கூறியிருப்பனோ' என்று சந்தேகம் வந்து கேட்டேவிட்டாள் ஆதிரை.


ஆதிரையின் சந்தேகமே உண்மையாக ஆமாம் என்றாள் லாவண்யா. ஆதிரை அதிர்ச்சியில் உறைந்திருக்க விஸ்வாவை பற்றிய உண்மையை சொல்ல ஆரம்பித்தாள் லாவண்யா.


“ஆதி.. விஸ்வா என்னோட school -லருந்து friend. அவன் உன்ன first time பார்த்ததும் விரும்ப ஆரம்பிச்சிட்டான். ஆனா நீ அவசியமில்லாம யாரோடையும் பேசரது இல்ல. அது ஆணா இருந்தாலும் சரி பெண்ணா இருந்தாலும் சரி. அதனால நல்லா படிச்சிட்டு இருந்த அவன் கொஞ்சம் புரியாதவன் போலவும் உன்ட்ட doubt கேட்கிற மாதிரியும் பழகினான். நீயும் அவனோட ஒரு நல்ல friend – அ ஆன.. ஆனால் friend ங்கிறதுக்கு மீறி வேறேதுவும் பேச முடியாதப்படி உன்னோடைய பேச்சும் நடையும் இருந்ததால விஸ்வா உன்ட்ட அவன் விரும்பிறத சொல்லல ரொம்பவும் தயக்க பட்டான் . அப்போதான் என்ட்ட help கேட்டான். நான் உன்ன பிடிக்காததுப் போலவும் , உன்னப்பத்தி தப்பு தப்பா lecture எடுக்கிற டாக்டர்ஸ் கிட்டயும் சொல்ல சொன்னான் விஸ்வா. அப்படி செஞ்ச ஒரளவுக்கு ஒழுங்க பேசுர அவன்ட்டதானே மனம்விட்டு பேசுவ. அப்படி பேசும் போதும் நெருக்கம் அதிகமாகி காதல் அதிகம் ஆகும்னு விஸ்வா நினைச்சான். அதனால நான் உனக்கு கொஞ்ச்ம மன உளைச்சல கொடுக்க ஆரம்பிச்சேன்" என்று நிறுத்தினாள் லாவண்யா.


“அவன் சொன்னான் என்று நீயும் செஞ்சியா.. அவனை விரும்பியிருந்தா, அவன் எதுவும் செய்யாமலே எனக்கு தெரிந்திருக்கும். அவன் மீது எனக்கு என்றுமே நண்பன் என்ற உணர்வை தவிர வேறு எதுவும் வரவில்லை. இப்படியெல்லாம் செய்தால் எனக்கு காதல் வருமென்று எண்ணியதே முட்டாள் தனம். அதற்கு அறிவுறை கூறாமல் நீயும் என் வாழ்வில் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறாய். கட்டாய படுத்தினால் காதல் வராது லாவண்யா" என்று கொஞ்சம் வார்த்தையில் கடுமையுடன் சொன்னாள் ஆதிரை.


“சாரி ஆதிரை. எனக்கு தெரியும். ஆனால் 15 வருட நண்பன் கெஞ்சி கேட்கிறபோது எனக்கு வேற என்ன தோன்றும் நீயே சொல்லு. அதனால அவனுக்கு உதவி பன்ன நினைச்சு , நானும் அவன் சொன்னப்படியெல்லாம் செஞ்சேன். ஆனா நீ என்னுடைய செய்கைகள கண்டுக்கவே இல்ல. உன் வேலைல சரியா இருந்த. அதனால உன்ன பத்தி எது சொன்னாலும் யாரும் உன்னில் ஒரு குற்றமும் கண்டுபிடிக்கல.


அதனால வேறவழியில்லாம உங்க அண்ணா அண்ணிட்டயே விஸ்வா உன்ன விரும்பிறத பத்தி பேச கிளம்பினோம். உங்க வீட்ல சொன்ன நீ மாட்டேனு சொல்ல மாட்டனு அவன் நம்பினான். உங்க வீட்ல் நீ இருப்பனு , உங்க அண்ணாவும் அண்ணியும் கோவிலுக்கு வந்த போது தனியாக பேசினோம். அது உங்க அண்ணிக்கு குழந்தை பொறந்த புதிது நினைக்கிறேன். நீ college -க்கு வராத அந்த ஒரு வருடமும் , உன்னை பார்க்க bike -ல தலை கவசம் போட்டுட்டு எல்லா நாளும் உன் வீட்டுக்கு முன்னாடி வருவான் விஸ்வா . உன்னுள் எந்த சலனமும் இல்லாததாலையும் , இது போன்று வீட்டின் முன் வந்து நிற்கும் பசங்களை நீ எப்போதுமே முக்கியதுவம் கொடுத்து பார்த்தில்லை. அதனால் அப்படி வர பையன் விஸ்வாவா இருக்குமுனு நீ அறியல. சொல்ல போனா அவன்ட்ட bike இருக்குங்கிற விசயமும் உனக்கு தெரியாது. உன் வீட்ட கண்கானிச்சதுல, உன் அண்ணாவும் அண்ணியும் கோவிலுக்கு போர நேரம் ஏற்கனவே விஸ்வாவுக்கு தெரிந்திருந்தது.


அவர்களிடம் பேசயதற்கு , ‘தன் தம்பிக்கு ஆதிரையை திருமணம் செய்யலாமென்று இருக்கிறோம். ஒரு வேளை ஆதிரைக்கு உன் மீது விருப்பமென்றால் நிச்சயம் உனக்கே திருமணம் செய்து வைக்கிறோம். ஆனால் எங்களால் எதற்கும் ஆதிரையை கட்டாய படுத்தமுடியாது. ‘ என்று உறுதியாக சொல்லிவிட்டனர். அந்த நேரத்தில் தான், என்ன மாயமோ தெரியவில்லை உன் அண்ணாவும் அண்ணியும் ஒற்றை குழந்தையுடன் லண்டன் கிளம்பிவிட்டனர். அவர்கள் கிளம்பிய பின் நானும் விஸ்வாவும் உன்னை பார்க்க உன் வீட்டுக்கு வந்தோம்" என்றுவிட்டு தண்ணீர் பாட்டிலிலிருந்த தண்ணீரை வாங்கி குடித்தாள் லாவண்யா.


“என்னை பார்க்கவா.. எனக்கு உங்களை என் வீட்டில் பார்த்ததாக நினைவில்லையே..” என்றாள் ஆதிரை.


“ம்ம்… நீ எங்களை பார்க்கவில்ல… மாறாக நாங்க நீ சேகர் சார்கிட்ட அழுத வண்ணம் பேசிக் கொண்டிருந்ததை கேட்டோம். அப்போது ரிதிகா அண்ணியின் தம்பியிடம் phone number கொடுத்திருப்பதாகவும் அவர் உன்னை விரைவில் அழைப்பார் என்றும் சேகர் சார் சொல்வதை நாங்க உணர்ந்தோம். நீ குழந்தையை மடியில் போட்டுக் கொண்டு loud speaker -ல் பேசியதால் விஸ்வாவிற்கு வசதியாகிப் போனது. தினமும் உன் வீடு வந்ததால் உன் மனனிலையும் அர்ஜூன் சார் உனக்கு இன்னும் phone செய்யாததும் விஸ்வா அறிந்துக் கொண்டான். அதனை பயன் படுத்திக் கொண்டு அர்ஜூனைப் போல குரல் மாற்றி உன்னிடம் தவறாக பேசினான். அவ்வாறு பேசினால் நீ ஒரு நாளும் அர்ஜூன் சாரை மணக்க மாட்டாய். என்று திட்டமிட்டான். அது போதாதென்று , உன்னைப் பற்றி college – ல் குழந்தையுடன் வருவதை வைத்து தேவையில்லாமல் கதை கட்டிவிட்டான். உனக்கு தெரிந்திருக்குமே, இந்த உலகில் உண்மையைவிட வதந்திதான் வேகமாக பரவுமென்று. அந்த மோசமான செய்தியும் பரவியது.ஆனால் அந்த செய்தியை சத்தியமாக நான் சொல்லவில்லை ஆதி. அது விஸ்வாவே சொன்னதால்தான் college – ல் எல்லோரும் நம்பினார்கள். எல்லோர் முன்னிலையில் நீங்க இருவரும் நண்பர்கள் தானே. அதனால் யாரும் விஸ்வாவை சந்தேகிக்கவில்லை. மாறாக உன்னை அருவருப்பாக நடத்தினர். இது போதாதென்று சேகர் அங்கிள் ஏற்பாடு செய்த இந்த கிராமத்திலும் அதே போன்ற வதந்தியை பரப்பிவிட்டு. அவன் நிம்மதியாக அங்கு வந்து MS படித்தான்.


இவ்வாறெல்லாம் செய்தால் உன்னை யாரும் திருமணம் செய்துக் கொள்ள நினைக்க மாட்டார்கள். எப்படியும் நீ அன்பாக பேசும் ஒரே ஒருத்தனான விஸ்வாவையே திருமணம் செய்துக் கொள்வாய் என்று நினைத்தான். இதனை அவன் வாயாலே கேள்வியுற்றப் போது என்னாலே பொறுக்க முடியாமல் அவனை வெகுவாக திட்டினேன். ஆனால் அவன் என்னை பற்றியே உன்னிடம் வேறுவிதமாக பேசி என்னை உன் முன்னிலையில் மிகவும் மோசமானவலாக மாற்றிவிட்டான். அதன்பின் அவனிடம் பேசுவதையே நிறுத்திவிட்டேன். வெகு நாள் கழித்து எனக்கு போன வாரம் தான் phone செய்தான். உன் திருமணம் முதற்கொண்டு எல்லாம் அவன் மூலமே அறிந்தேன். இருந்தும் அவன் செய்த மிக பெரிய தவறை என்னாலும் மன்னிக்க முடியாமல் அதிகம் பேசாமல் phone -ஐ வைத்துவிட்டேன்.


இதுதான் உண்மையில் நடந்தது ஆதிரை. உண்மையில் எனக்கு உன்னோடு தோழியாக வேண்டுமென்று மிகவும் ஆசை.. ஆனால் விஸ்வாவால் எல்லாம் கெட்டது" என்று தன் பாரம் இறங்கியதுப் போல சொல்லி முடித்தான் லாவண்யா.


ஆனால் ஆதிரையின் உள்ளத்தில் பாரம் ஏறியது. ‘இவ்வளவு நாள் அர்ஜூன் தவறாக பேசியதாக எண்ணி அவனை தவறாக எண்ணியிருந்தாளே! அவன் எத்தனை முறை மறுத்தும் பிடிவாதமாக முகம் திருப்பிக் கொண்டேன். அப்படி நான் செய்ய வேண்டுமென்றுதானே விஸ்வா தந்திர ஆட்டம் ஆடியிருக்கிறான்.’ என்று எண்ணி நெஞ்சம் கொதித்தாள். கூடவே " சே.. இவன் ஏன் இப்படி நடந்துக் கொள்ள வேண்டும். அவனிடம் தவறான உணர்வு உண்டாகும்படி ஒரு நாளும் நான் பார்த்ததில்லை. பேசியதில்லை. “ என்று புலம்பினாள்.


“நீ யாரும் நெருங்க முடியாமல் இருந்ததே அவனுக்கு பிடித்ததாக ஒருமுறை சொல்ல கேட்டிருக்கிறேன் ஆதிரை. இது வரை சொன்னேன்.. இன்னொரு உண்மையையும் சொல்லிவிடுகிறேன். உண்மையில் நான் விஸ்வாவை பள்ளி நாட்களிலிருந்தே விரும்பினேன். ஆனால் அவனிடம் சொல்ல எனக்கு துணிவில்லை. ஆனால் அவன் உன்னை விரும்ப உதவ கேட்டதும் என் காதலை துறந்து அவனுக்கு உதவ சென்றேன். ஆனால் அது இவ்வளவுக்கு விபரீதமாகுமென்று நான் ஒரு நாளும் நினைக்கவில்லை. இப்போது என் காதலை இழந்தும் , அவனும் கஷ்டப்படுவதை பார்க்க முடியாமலும் , உன்னையும் கஷ்ட படுத்திக் கொண்டும் நிற்கிறேன். “ என்று கண்ணில் நீர் வர சொன்னாள் லாவண்யா.


“ஏ.. லாவாண்யா. விடு.. எல்லாம் சரியாகிடும். எனக்கென்னமோ அவனுக்கு என்மேல் இருப்பது காதல் என்பதே சந்தேகம் தான். என்னைக் கேட்டால் நீ அவனுடன் இப்போது இருந்தால் அவனுக்கு ஆருதலாகவும் இருக்கும் . ஏன் அவனுக்கு உன் மீது காதல் வரவும் வழியாகும். ஏனென்றால் அவனிடம் நான் தெளிவாக சொல்லிவிட்டேன். எனக்கு திருமணம் ஆகிவிட்டது. என்னால் வேறு ஒருவரை இந்த ஜன்மத்தில் நினைக்க முடியாது என்று. அதனால் அவன் உன்னிடம்தான் வருவான் உன் மீது அவனுக்கு அன்பிருந்தால். அவனோடு பேசு. phone -ஐ துண்டிக்காதே. அவன் வேறேதும் தவறாக யோசிக்குமுன் அவனுக்கு நல்ல அறிவுறை கூறி நல்வழி படுத்து. college -ல் உதவியதுப் போல தவறு செய்ய உதவாதே..” என்று அவளை அணைத்தவண்ணம் ஆருதல் சொன்னாள் ஆதிரை.


“சரி ஆதி. ரொம்ப தாங்க்ஸ் ஆதி.. இவ்வாறெல்லாம் செய்வதால் என் விருப்பம் நிறை வேறுமா என்று தெரியல.. ஆனால் விஸ்வா மாறனும். அவன் ரொம்ப நல்லவனாதான் இருந்தான். திடீரென்று உன்னை பார்த்ததிலிருந்துதான் இந்த மாற்றம். நீ சொன்னது போல நான் அவனுடன் இருக்க முடியுமா என்று பார்கிறேன். உடன் இருந்து அவனை நல்வழி படுத்த முடியுமா என்றும் பார்க்கிறேன்." என்றாள் சின்னப்பிள்ளைப் போல தேம்பிய வண்ணம் லாவாண்யா.


“ம்ம் அப்படியே செய்... இப்போது கவலைப்படாமல் தூங்கு.” என்று அவளை உறங்க சொல்லிவிட்டு ஆதிரையும் படுத்தாள். ஆனால் நித்திரா தேவியை நெருங்கவிடாமல் ஆதிரையின் மனம் அங்கும் இங்கும் பறந்துக் கொண்டிருந்தது. கொஞ்ச நேரம் கழித்து தண்ணீர் எடுக்கவென்று அறையைவிட்டு காலியான தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டுச் சமயல் அறைக்கு செல்ல எத்தனித்தாள்.


Hall – ல் அர்ஜூன் கயிற்று கட்டிலில் படுத்திருந்தான். இரவு விளக்கின் வெளிச்சத்தில் அர்ஜூனின் முகம் தெளிவாக தெரிந்தது. கவுந்து குழந்தையைப் போல படுத்திருந்த அர்ஜூனின் முகத்தில் அவனது சிகை இங்கும் அங்கும் ஆடிக் கொண்டிருந்தது. அவனை கண்டதும் அவன் அருகில் சென்று தரையில் முட்டி போட்டுக் கொண்டு அவன் முகத்தை அந்த விடிவிளக்கின் வெளிச்சத்தில் பார்த்தாள்.


‘இவனை புரிந்துக் கொள்ளவே முடியவில்லையே. சில நேரங்களில் தேனாக இனிக்கிறான். சில நேரங்களில் பாகற்காயாய் கசக்கிறான். செய்யாத குற்றத்திற்கு இரண்டு வருடங்காளாக இவனை திட்டிக் கொண்டிருந்தேனே. என்னை மன்னிப்பியா அர்ஜூன் "’ என்று அவன் தலைமுடியில் கோதிட நினைத்து கையை தூக்கியவள் தொடாமலே விட்டாள்.


“உண்மையில் நீ என் ராஜாவைப் போலவே இருக்கிறாய் அர்ஜூன். அதே புருவம். அதே கன்னம். அதே உதடு. அதே மூக்கு. தூங்கும் விதமும் அவனைப் போலவே. என் கணவன் குழந்தைகளே பொறாமைபடும் அளவிற்கு அழகந்தான். என் மன்மதன். ஆனால் சில நேரங்களில் முழு விவரம் அறியாமல் கத்தும் கோபக்கார பூனை. கடுவன் பூனை.. எப்போதுதான் என்னை புரிந்துக் கொள்ள போகிறாயோ. இந்த கன்னத்தில் எப்போதுதான் என் செவ்விதழ் ஆசையுடன் பதியுமோ. இல்லை என் ஆசையெல்லாம் கனவாகவே உன்னை பிரிந்து போய்விடுவேனோ" என்று ஏக்கத்தின் பெருமூச்சை விட்டவண்ணம் எழுந்துச் சென்றாள் ஆதிரை.


Hall-ல் விளக்கை போடாமல் விடி விளக்கின் வெளிச்சத்திலே சமயல் அறைக்கு சென்று அந்த அறையின் விளக்கை ஒளிரவிட்டு தண்ணீர் பிடித்துக் கொண்டு மீண்டும் நத்தைப் போல சப்தமிடாமல் நடந்து வந்தாள். வந்தவள் மீண்டும் அர்ஜூனை ஒருமுறை பார்க்க எண்ணி அந்த கயிற்று கட்டிலில் பார்க்க அவன் அங்கு இருப்பதுப் போல தெரியவில்லை. "இங்கு தானே இருந்தான். எங்கே " என்று அவளுள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே வேகமாக வந்த அர்ஜூனின் கைகள் அவளை இழுத்து அணைத்து அவனுடன் இணைந்த வண்ணம் கயிற்று கட்டிலில்போட்டது. கிட்டத்தட்ட முழு உடலும் அவனை அணைத்த வண்ணம் இருக்க ஆதிரையின் இதயம் படபடக்க ஆரம்பித்தது. அந்த விடிவெள்ளியின் வெளிச்சத்தில் ஆதிரையின் விழிகள் அர்ஜூனின் விழிகளை ஒரே ஒரு நொடிதான் பார்த்தது.

அதன் பின் இருக்கும் நிலை உணர்ந்து வேகமாக அர்ஜுனிடமிருந்து விலகிட எண்ணி அவசரமாக அவன் கையினை பிரித்து , “ அர்ஜூன் என்னை வி" என்று சொல்லி முடிக்கும் முன்னரே அர்ஜூனின் இதழ்கள் ஆதிரையின் செவ்விதழ்களை மூடியிருந்தது. எதுவும் பேச முடியாமல் திக்குமுக்காடினாள். கால் முதல் காது மடல் வரை உடலெல்லாம் சூடேறுவதை ஆதிரையால் தடுக்க முடியவில்லை. சில நொடி என்று இருந்த அந்த இதழணைப்பு எவ்வளவு நேரம் நீண்டதோ ஆதிரைக்கு தெரியவில்லை. அர்ஜூனின் கைப்பிடி தளர்ந்ததும் நினைவு வந்தவள் போல, வேகமாக சென்று அந்த அறையின் விளக்கைப் போட்டாள்.


ஆச்சரிய படும் விதமாக அர்ஜூன் முன்பு எப்படி படுத்திருந்தானோ அப்படியே உறங்கிக் கொண்டுதான் இருந்தான். அவனுள் எந்த சலனமும் இல்லை. ‘ஆனால் இந்த இதழில் " என்று தன் இதழை தொட்டு பார்த்தாள் இன்னும் ஈரம் காயவில்லை. “இது … இந்த ஈரம் நான் தண்ணீர் குடித்தால் வந்ததோ. இவன் எழவே இல்லையா? இதெல்லாம் என் கனவா? என்னதான் நடந்தது?” என்று ஒன்றும் புரியாமல் மீண்டும் அர்ஜூனின் அருகில் வந்து அவனை உத்து பார்த்தாள்.


ஆதிரை, இப்போது நடக்கும் போதே கனவு கான ஆரம்பிச்சிட்டியா. இவ்வளவு நாள் மழை மேகம் கனவு காட்டுச்சு. இப்போ நீயே கற்பனை பண்ணீக்கிறீய?” என்று அவளுக்குள்ளே புலம்பிக் கொண்டு மீண்டும் தண்ணீரை குடித்துவிட்டு விளக்கினை அனைத்துவிட்டு தூங்க சென்றாள். ஆச்சரியமாக படுத்த மறு நிமிடமே உறங்கியும் போனாள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top