தூரம் போகாதே என் மழை மேகமே!! - 62

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer



“ஆமாம் ஆதி.. நானே தான். உன்னோடு சிதம்பரத்துல படிச்ச பொண்ணு .. நீ எப்படி இருக்க? நாம் ஒருவரை ஒருவர் பார்த்து இரண்டு வருடம் இருக்கும் இல்ல" என்று கேட்டாள் லவண்யா.


“நான் நல்லாருக்கேன்பா.. ம்ம் இருக்கும். அதற்கும் மேல் இருக்கும். என் அண்ணிக்கு குழந்தை உண்டானப் போது விடுமுறை சொல்லிவிட்டு உன்னையும் மற்றவர்களையும் பார்த்தது. அதன்பிறகு குழந்தை பிறந்த புதிதில் வந்த போதுக் கூட விஸ்வாவை மட்டும்தான் பார்த்தேன். நீ எப்படி இருக்க. உன்ன இங்க பார்ப்பேனு நினைக்கவே இல்ல. எதிர்பார்க்காத விதமாக விஸ்வாவ நான் சென்னைல ஒரு hospital -ல பார்த்தேன். அவனும் நல்லா இருக்கிறான். அவனும் நீயும் அவ்வளவாக பேசிக் கொள்ள மாட்டீங்க அதனால் தெரிந்திருக்க வாய்ப்பில்லை." என்று கண்ணில் எட்டா புன்னகையுடன் சொன்னாள் ஆதிரை.


“ம்ம் நானும் நல்லாருக்கேன் ஆதி.. " என்று ஒரு விரக்தியுடன் புன்னகித்து, "விஸ்வவும் நானும் பேசிக் கொள்ள மாட்டோமா? சரி அது இருக்கட்டும். நீ ஒழுங்காக சாப்பிடுவதில்லையா? அப்போதுக்கும் இப்போதுக்கும் கொஞ்சம் மெலிந்து தெரிகிறாய் " என்று புன்னகித்தாள் லாவண்யா.


விஸ்வா என்ற பெயர் கேட்டதும் அர்ஜூன் , கழுத்திலிருந்த மாலையை கழட்டி கையில் வைத்தவாறு ஆதிரையின் பக்கம் வந்து அவள் தோள் மீது கைப்போட்ட வண்ணம் நின்றான். அர்ஜூனின் பார்வை ஆதிரையின் விழியை பார்த்து 'யாரிவள்' என்று பேசாமல் கேட்டது. அர்ஜூனின் கண்கள் லாவண்யாவை ஊடுருவியது. அதன் பார்வை குற்றம் சாட்டுவதுப் போல உணர்ந்த லாவண்யா 'விஸ்வா என்னைப் பற்றி என்னவெல்லாம் ஆதிரையிடம் சொன்னானோ! இவர் இப்படி முறைக்கிறார். இவையெல்லாம் எப்படி சரி செய்ய போகிறேனோ ' என்று குற்ற உணர்வில் முகம் தாழ்ந்தாள்.


லாவண்யாவைப் போல ஆதிரையினுள்ளும் மனஓட்டம்தான், ‘தன்னை பற்றி சிதம்பரம் collage -ல் தவறாக சொன்னவள் இந்த லாவண்யா ' என்று விஸ்வாவின் மூலம் அறிந்திருந்தப் போதும் ஆதிரையால் அவளிடம் முழுவதும் கோபம் காட்டவோ, பேசாமல் முகம் திருப்பிக் கொண்டு செல்லவோ முடியவில்லை. அது ஆதிரையின் குணத்தில் அடக்கமில்லாததும்கூட . ஏதோ சின்ன பிள்ளைப் போல சிறு பொறாமைக் கொண்டு என்ன பேசுகிறோமென்று தெரியாமல் பேசி வைத்திருந்த லாவண்யாவை அவள் மன்னிப்பு கேட்க்குமுன்னரே மன்னித்திருந்தாள் ஆதிரை. அதனோடு லாவண்யாவின் பேசும் தன்மையும் இந்த மூன்று ஆண்டுகளில் மாறுபட்டதாக தெரிந்தது. அர்ஜூனின் பார்வையில் இன்னும் மனம் குறுக நின்ற லாவண்யாவை பார்த்து பரிதாபமே உண்டானது. அதனால் ஆதிரைக்கு அவளிடம் இருந்த வருத்தமும் பெரியதாக தெரியவில்லை. அவளிடம் இயல்பாக பேசினாள். ‘குற்றமென்று உணர்ந்து நிற்பவர்களிடம் மேலும் வேதனை தரும்விதமாக பேசாமல் ஒன்றுமே நடக்காததுப் போல இருப்பது இருவருக்கும் நல்லதல்லவா' அதனையே ஆதிரையும் செய்தாள். அர்ஜூனின் கையை தன் மீதிருந்து எடுத்து லாவண்யாவை இயல்பாக பேச் ஊக்கினாள்.


"என் ராஜாவை பார்த்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்ததில் மெலிந்திருப்பேன். இனி எனக்கென்ன. என் அண்ணனும் அண்ணியும் திரும்ப வந்துவிட்டார்கள். நான் கவலைபடாமல் என் உடல் நிலை பற்றியும் கவலைபடலாம்.” என்று சிரித்தாள்.


பின “அ.. அர்ஜூன். இவள் நான் MS படித்த போது உடன் படித்தவள். பெயர் லாவண்யா. லாவண்யா.. இவர் என் கணவர் பெயர் அர்ஜூன். என் அண்ணியின் தம்பி. “ என்று முறையாக அறிமுகம் செய்து வைத்தாள் ஆதிரை.


இருவரும் முகமன் கூறும் விதமாக புன்னகித்தனர்.


அதற்குள் மீண்டும் உள்ளே வந்த சேகர், “ என்னம்மா, இன்னும் இப்படியே நின்றுக் கொண்டிருக்கிறாய். ஊர் மக்கள் எல்லோரும் வர ஆரம்பித்து விட்டாங்க. அப்பறம பேசுவிங்க, முதலில் இந்த சேலையை கட்டிக் கொண்டு இந்த நகைகளையும் போட்டுக் கொண்டு வா" என்று ஒரு தாம்பூல தட்டில் அரப்பு நிற பட்டு சேலையும் , சில கவரின் நகை செட்டுகளையும் ஆதிரையிடம் நீட்டினார்.


அதனை கையில் வாங்கியப் போதும், “எதுக்கு அங்கிள் இது.. நான் இப்படியே இருக்க கூடாதா? நல்ல சுடிதார் தானே போட்டிருக்கிறேன். “ என்று ஏதோ சலிப்பு மேலிட சொன்னாள் ஆதிரை.


“ஆதிம்மா.. என்ன புது விதமாக இருக்கு.. நீ சோம்பலோடு பேச மாட்டியே. என்ன அர்ஜூன் உன்னை ராணிப் போல இருக்கும் இடம் நகராமல் பல பணிப்பெண்களை வைத்து பார்த்துக் கொண்டிருப்பான் போல இருக்கு..” என்று சப்தமிட்டு சிரித்தார்.


இதில் அர்ஜூனுக்கும் ஆதிரைக்குமே சங்கடமாகிப் போனது, “போங்க அங்கீள்.. அப்படியெல்லாமில்லை. காரில் வந்தது கொஞ்சம் களைப்பாக இருக்கிறது என்பதற்காக சொன்னால் நீங்க எல்லாவற்றிருக்கும் புது புது அர்த்தம் சொல்வீங்க போல இருக்கு" என்று பொய்யாக சினுங்கினாள் ஆதிரை.


அதற்கும் அவுட்டு சிரிப்பை உதிர்த்துவிட்டு, “அதற்கில்லை ஆதிரை.. ஊர் மக்கள் உன்னையும் அர்ஜூனையும் பொண்ணு மாப்பிள்ளை கோலத்தில் பார்க்க வேண்டாமா? அதனோடு இந்த ஊர் மக்களுடன் 20 மாதங்கள் இருந்திருக்கிறாய், அவர்கள் நினைவாக அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டால் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். Hospita -கே நீ சேலையில்தான் போவாய். அப்படி இருக்க photo க்கு சுடிதாரில் நல்லாவா இருக்கும். இந்த சேலையை ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்து உனக்காக வாங்கி இருக்கிறார்கள். ஊர் தலைவர்தான் இந்த ஏற்பாடெல்லாம் செய்திருக்கிறார். அவருக்கு மரியாதை தருவிதமாக நாமும் இருக்க வேண்டுமல்லவா? இன்னும் ஒரு மணி நேரத்திற்குள்ள photographer வந்துவிடுவார். அதற்குள் நீங்க தயாராகி சாப்பிட வேண்டுமல்லவா" என்று கோர்வையாக காரணத்துடன் சொன்னார் சேகர்.


அதனை கேட்டதும், “ஓ.. sorry அங்கிள். எனக்கு இதெல்லாம் தெரியவில்லை. நான் சும்மா இரண்டு நாள் இருந்துட்டு, மயில்பாறை கோவிலுக்கு போய்ட்டு என்னோட luggage லாம் எடுத்துட்டு போகலாம்னு வந்தேன். எல்லாம் எனக்கு ஆச்சரியாம இருக்கு. நான் போய் தயாராகிறேன்" என்றாள் ஆதிரை.


“அம்மா லாவண்யா, கொஞ்சம் ஆதிரையுடன் இருந்து உதவியாய் இருமா?” என்று விட்டு ,”கந்தா… எங்கடா இருக்க என்று குரல் கொடுத்த வண்ணம் வெளியில் எட்டிப் பார்த்தார்.


“சரிங்க sir.. ஆதி.. என்னுடன் வா.. ஏற்கனவே நீ வருவது அறிந்து உன்னுடைய உடைமைகளை எடுத்து pack பண்ணி வச்சிருக்கிறேன்" என்று சொல்லி ஆதிரையை அழைத்துச் சென்றஆள்.


ஆதிரையும் அந்த வீட்டின் தற்போதைய வாசியான லாவண்யாவுடன் நடந்தாள். வீட்டிலிருந்த ஒரே படுக்கை அறைக்குக்குள் சென்றாள் லாவண்யா. ஆதிரையும் உடன் சென்றாள்.


இதனை அமைதியக பார்த்துக் கொண்டிருந்த அர்ஜூன், என்ன செய்வதென்றே புரியாமல் அங்கிருந்த hall-ல் இருந்த கயிற்று கட்டிலில் அமர்ந்த வண்ணம் காற்று வாங்கினான். அதற்குள் மீண்டும் உள்ளே வந்த சேகரிடம் , "அங்கிள் யாரந்தப் பொண்ணு... உங்களுக்கு தெரிந்த பெண்ணா? நங்கு விசாரித்தீர்களா? " என்று கேட்டான்.


“தெரியவில்லைப்பா.. இங்கு வந்துதான் அறிமுகம் ஆனேன். ஆதிரையின் தோழி என்பது அவள் collage பத்தி கேட்டப்போது தெரிந்தது. பேசிக் கொள்வதை பார்த்தால் ஒரு வகுப்பு போலவும் தெரிகிறது. சரி அதவிடு, நீயும் ready ஆகிடு. இந்த பட்டு வேஷ்டியை கட்டிக்கோ.. இது இந்திரபிரதேஷ் வீடுப் போல பெரியவீடு இல்ல அர்ஜூன். அதோடு நகர்புரம்ப் போல படுக்கையுடன் கூடிய குளியல் அறை இல்லை. வீட்டுக்கு வெளியில் குளியல் அறை இருக்கிறது. கந்தனை அனுப்புகிறேன் அவனிடம் கேட்டுக் கொள். ஆதிரை தயாராகி வந்ததும், நீ உள்ளே சென்று உடை மாற்றிக் கொண்டு வா. இது ஒரு படுக்கை அறை, ஒரு hall அப்புறம் ஒரு சமயலறை கொண்ட வீடு. ஆதிதமாக எந்த வசதியையும் privacy -ஐயும் எதிர்பார்ப்பதற்கில்லை.. புரிகிறதுதானே" என்று கண்களால் சிமிட்டி புன்னகித்தார் சேகர்.


அதன் அர்த்தம் இருவிதமாக ஒலித்து அவசரமாக , "அச்சோ அங்கிள் புரிகிறது நான் தாயாராகி வருகிறேன். எனக்கு எந்த எதிர் பார்ப்பும் இல்லை. ஆதிரையை பத்திரமாக இந்திரபிரதேஷ் கொண்டு சேர்க்கும் வரை நான் அவளுடைய காவலன் அவ்வளவே. நீங்க கந்தனை அனுப்புங்க" என்று சொல்லிவிட்டு கயிற்று கட்டிலில் லேசாக தலையனையை இழுத்துப் போட்டு வசதியாகஅமர்ந்தான் அர்ஜூன்.


அதற்கும் புன்னகித்துவிட்டு "ம்ம் .. கந்தனை உடன் இருக்க சொல்கிறேன்" என்று சொல்லிக் கொண்டே , வெளியில் சென்றார் சேகர்.


அதிக நேரம் தனித்திருக்க விடாமல் கந்தனும் அர்ஜூனிடம் வந்து சேர்ந்தான். ஆதிரையும் வேகமாக தயாராவது , அவசரமாக டவலுடன் வெளியில் சென்று முகத்தைதுடைத்த வண்ணம் வீட்டுக்குள் வந்து படுக்கை அறை கதவை தாளிடும் போதே தெரிந்தது. குறைந்தது 20 நிமிட இடைவெளியில் ஆதிரை தேவதையாக தயாராகி வந்திருந்தாள்.


நேர்த்தியாக கட்டியிருந்த சேலை ஆதிரையின் இடையில் விழி செலுத்தி மீள செய்தது. அழகாக இழுத்து கட்டப்பட்டிருந்த கூந்தளுக்கு ஆடம்பரம் என்று சொல்லாத அளவு பூவினை வைத்துக் கொண்டு வெளியில் வந்தாள் ஆதிரை. தேவையில்லாமல் கவரிங்க் ஆபரணங்களை போட்டுக் கொண்டு தகதகவென்று வந்து நிற்காமல் பார்பவர்களை வசிகரிக்கும் வித்மாக ஒரே ஒரு கழுத்தாரம். அதுவும் அவள் நிறத்திற்கு எடுப்பாக அவள் அழகை பேரழகாக்க கூடிய விதத்தில் ஜொலித்த நீலக்கல் பதித்த கழுத்தாரம். இன்னுமும் சிமிக்கி போடுகிற பெண்கள் இருக்கிறார்களா என்ன. பலவிதமான design -ல் தோடுகள் இருந்தப்போதும் சேலை அணிந்து சிமிக்கி போட்டிருக்கும் பெண்களை பார்ப்பதே கண்ணுக்கு குளிர்ச்சிதான். அந்த வகையில் ஆதிரைக்கும் அவை பொய்க்கவில்லை. ஆதிரையின் அழகை குடிப்பவன் போல அர்ஜூனின் தொண்டையில் எச்சில் விழுங்குவது தெரிந்தது.


அர்ஜூன் தயாராக வேண்டுமென்ற எண்ணேமே இல்லாமல், ஆதிரையை கால் முதல் தலை வரை பார்த்தான். அப்போதுதான் நிமிர்ந்து அர்ஜூனை பார்த்த ஆதிரைக்கு அர்ஜூனின் பார்வை படுமிடமெல்லாம் சூடேறுவதை போல இருந்தது. சட்டென முகம் குனிந்த ஆதிரை மீண்டும் அர்ஜூனை நிமிர்ந்து பார்த்தாள் இல்லை.


“மாமா.. அடுத்தது நீங்கதான். போய் ready ஆகிட்டு வாங்க. மணி 2 ஆகிறது. எனக்கும் ரொம்ப பசிக்க ஆரம்பிச்சிடுச்சு. இப்படி என் அக்காவையே பார்த்துக் கொண்டிருந்த பசி தீருமா" என்று அர்ஜூனை தள்ளாத குறையாக கந்தன் அறையில் தள்ளி கதவை அடைத்தான். பாவம் அந்த சிறுபிள்ளை தெரியவில்லை. அர்ஜூனின் பசி சாப்பாட்டால் தீரபோவதில்லையென்று.


ஆதிரையை பார்த்த வண்ணமே அறைக்குள் நுழைந்த அர்ஜூன் விரைவிலே வெளியில் வந்தான். அவனுக்காக காத்திருந்த ஆதிரை அர்ஜூன் வந்ததும் எழுந்து நின்றாள். லாவண்யா, “ஆதி, இந்தா.. இந்த மாலையைப் போட்டுக் கொள். அர்ஜூன் sir நீங்களும் இத போட்டுக்கோங்க.. எல்லாரும் உங்களுக்காகதான் காத்திருக்காங்க . வாங்க போகலாம்" என்று சொன்னாள்.


ஆதிரை குனிந்த தலை நிமிராமல் லாவண்யா சொன்னப்படி செய்தாள். சுடிதாரில் அர்ஜூன் அருகில் மாலையுடன் நின்றப்போது எதுவும் தோன்றவில்லை. ஆனால்சேலையில் அதுவும் இந்த நீலக்கல் கழுத்தாரத்துட்ன அர்ஜூன் அருகில் நிற்பதை நினைக்கும் போது தீவில் கண்ட கனவு ஆதிரைக்கு நினைவு வர, ‘இது திகேந்திரன் ஆதிரைக்கு காதல் பரிசாக கொடுத்தது என்பது மீண்டும் மீண்டும் நினைவு வந்து ஆதிரையின் பெண்மைக்கு சோதனைக் கொடுதது. அவனிடமிருந்து விலகி இருக்க வேண்டுமென்று காலையில்தான் நினைத்தேன். இப்போதுதான் இந்த அங்கிள் இப்படி எனக்கு சங்கடங்களை ஏற்படுத்த வேண்டும். கவரிங்க் நகைகள் போட்டால் அலர்ஜி போல ஆகுமென்று இதனை எடுத்துப் போட்டால் அந்த அலர்ஜியே மேல் போல அர்ஜூனின் விழிகளும் மழை மேகத்தின் கனவும் என்னை பாடாய் படுத்துகிறதே' என்று மனம் புலம்பிக் கொண்டிருக்க, வெளியில் இயல்பு போல உணவருந்திவிட்டு ஊர் மக்களுடன் photo எடுத்துக் கொண்டு நின்றாள் ஆதிரை.


ஆதிரையின் மனனிலை அறியாமல், ஊர் மக்கள் ஆதிரை- அர்ஜூனின் ஜோடிப் பொருத்தத்தை சிலாகித்து பேசினர். "ராஜாகுட்டியின் அப்பா ராஜா குட்டியை போல அழகாகவும் ஆண்மையாகவும் இருக்காரே". என்று ஒருவரும், “என்னமோ கெட்ட நேரம் போல கொஞ்சம் நாள் பிரிஞ்சிருந்தாலும் இப்போது ரெண்டு பேரையும் பார்க்க எவ்வளவு அழகாக இருக்கு.” என்று இன்னொரு வளும், “எங்க டாக்டரம்மா, சிதா தேவி கணக்கா இருக்காங்க.. இந்த தம்பிபுள்ளகூட அந்த ராமர் கணக்கா இருக்காரே.. நல்ல ஜோடிப் பொருத்தம். உங்க ரெண்டு பேரையும் இப்படி சேர்த்து வச்சு நாள் கணக்கா பாக்கலாம்" என்று மனம் மறைக்காமல் சொல்லிக் கொண்டு சென்றனர்.


இவ்வாறு பேசியதை கேட்க கேட்க ஆதிரையின் இதயம் பல மடங்கு வேகமாக துடித்து நின்றது. ‘ என்னை எப்படியெல்லாமோ சந்தேகம் பட்டவன். இப்படி அமைதியாக ஊர் மக்களின் முன் இருப்பதே ஆச்சரியமாக இருக்கு. கடமை முடிந்ததும் பிரிந்துவிடுவேன் என்ற பிறகே அர்ஜூன் என்னிட்ம கொஞ்சம் நல்ல விதமாக இருக்கிறான். இந்த மக்கள் பேசுவதை கேட்டால் நான் வேண்டுமென்றே திட்டமிட்டு செய்த நாடகமென்று நினைத்தாலும் நினைக்கலாமே. எல்லாவற்றிருக்கும் மேலாக என்னாலே என் உணர்வுகளை கட்டுப் படுத்த முடியவில்லையே. சேகர் அங்கிள் சொன்னாரென்று தயாராகி வந்திருப்பானோ. அவன் மனனிலைதான் என்ன?!’ என்று பலதும் யோசித்துக் கொண்டு அர்ஜூனை பார்த்தாள் ஆதிரை.


அவன் முகத்தில் எந்த உணர்வும் தெரியவில்லை. வெண்பற்கள் பளிச்சிட்ட புன்னகையை தவிர எதுவும் அறியமுடியவில்லை. ஆதிரை அவனை பார்ப்பதை உணர்ந்த அர்ஜூன் அவளை திரும்பிப் பார்த்து 'என்ன’ என்பதுப் போல தலை அசைக்க அவசரமாக ஒன்றுமில்லையென்று தலை தாழ்த்தினாள். தன் மனம் போராட்டங்களை வெளியில் காட்டாமல் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி இனிதே அனைவரையும் வழி அனுப்பினாள் அர்ஜூனும் எதிர் பார்த்ததற்கு மேலாக ஆதிரையுடன் இணைந்து செயல்பட்டான்.


எல்லோரும் கிளம்பவும் இரவு நேரம் நெருங்கவும் சரியாக இருந்தது. களைப்பில் அனைவரும் சாப்பிட்டு உடனே உறங்கிவிடவும் செய்தனர். ஆதிரையும் , லாவண்யாவும் படுக்கை அறையில் உறங்க, அர்ஜூன் hall -ல் கயிற்று கட்டிலில் படுத்திருக்க, சேகரும் கந்தனும் வீட்டின் வெளியில் பந்தலின் அடியில் காற்றோட்டமாக பாயினை விரித்து படுத்திருந்தனர்.


நள்ளிரவு நேரத்தில் தண்ணீருக்காக கண் விழித்த ஆதிரை லாவண்யா இன்னும் உறங்காததை அறிந்து , “ என்ன லாவண்யா தூங்கலயா" என்று கேட்டாள் ஆதிரை.


“இ.. இல்லை ஆதி... உன்னிடம் கொஞ்சம் பேசனும்.நீ எப்போ ஊருக்கு போர.. நாளைக்கா ? நாளை மறுனாளா?”என்று கேட்டாள் லாவண்யா.


“நாளை மறுனாள் என்று நினைக்கிறேன். என்ன பேசனும். உன் முகத்தில் ஏதோ ரகசியம் போல தெரிகிறதே" என்று விளக்கினை போட்ட வண்ணம் கேட்டாள் ஆதிரை.


“ம்ம்.. ஆமாம்.. என் மேல் உனக்கு வருத்தமில்லையே" என்று நேரிடையாக கேட்டாள் லாவண்யா.


அதற்கு புன்னகித்த ஆதிரை, “ம்ம் இருந்தது... இப்போது இல்லை. ஏன் திடீரென்று கேட்கிற . அது முடிந்து போன கதை ஏதோ சின்னப் பிள்ளையைப் போல நீ அறியாமல் செய்துவிட்டாய். ஆனால் இப்போது நீ அது போல இல்லையென்றான பிறகு நான் ஏன் கோபபடனும்" என்றாள்.


“ம்ம்.. நீ எவ்வளவு நல்ல பொண்ணு. உன்னோட படிப்பு கெட்டுப் போக நானும் காரணமாகிவிடேன். என்னை மன்னித்துவிடு" என்றாள் லாவாண்யா.


“ஏய்.. பரவாயில்லை விடுப்பா. முடிந்தது முடிந்துவிட்டது. இனி அது பற்றி பேசி என்ன பயன் சொல்லு.. கெட்டதை மறந்துவிட்டு, இனி நல்ல நண்பர்களாக இருப்போம். சரியா..” என்றாள் ஆதிரை.


உணர்ச்சி மேலிட, “ தாங்க்ஸ் ஆதி..” என்றாள் லாவண்யா.


“ம்ம் சரி அந்த தண்ணீர் பாட்டிலை எடு..” என்று தண்ணீர் அருந்திய வண்ணம் லாவண்யாவை பார்த்தாள். லாவண்யா இன்னும் கைகளை பிசைந்த வண்ணம் எதை சொல்ல தயக்கம் போல இருப்பது புரிந்தது.


அவளை பேச வைக்க ஆதிரை ஊக்கினாள், “ லாவண்யா… நீ வேறு எதுவும் பேச வேண்டுமா?” என்றாள்.


“ஆ.. ஆமாம் ஆதி. நீ நினைப்பதுப் போல விஸ்வாவும் நானும் பேசிக் கொள்ளாதவர்கள் இல்லை. விஸ்வா என்னுடைய பள்ளி கால நண்பன்.” என்று சொல்லிவிட்டாள்.
 

banumathi jayaraman

Well-Known Member
அது எப்படித்தான் ஆதிரைக்கு கெடுதல் செய்துட்டு வெட்கமே இல்லாமல் இந்த லாவண்யாவால் அவளிடம் வந்து பேச முடியுதோ?
இவளெல்லாம் என்ன மனுஷி?
விஸ்வா இவளோட ஸ்கூல் ப்ரெண்ட்ன்னா அவனுக்காக என்ன வேணா லாவண்யா செய்வாளா?
இல்லையே
எங்கேயோ இடிக்குதே
ஒருவேளை அந்த விஸ்வாவை
இவள் லவ் பண்ணுறாளோ?
அதனால் அவன் சொன்னபடி இந்த லாவண்யா ஆடினாளோ?
ஆனால் ஆதிரையை லவ் செஞ்சதா சொல்லிக்கிட்டு அவளை என்னெல்லாம் இந்த விஸ்வா பாடுபடுத்தியிருக்கான்?

அப்பாடா
நீலக்கல் கழுத்தாரத்தை ஆதிரை
கழுத்துல போட்டிருக்காள்
இனி பிரச்சனையில்லை
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top