தூரம் போகாதே என் மழை மேகமே!! - 60

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer



ஒரு வாரத்திலே ஆதிரை வெகுவாக தேறியிருந்தாள். அர்ஜூன் சொன்னதாக சொல்லி ஆதிரையிடம் ஒரு phone அந்த புதிய பணிப்பெண் மூலமாக வந்து சேர்ந்திருந்தது. அதனைக் கொண்டு தினமும் இருமுறையாவது அவள் அண்ணன் அண்ணியுடன் பேசாமல் அவளுக்கு உறக்கம் வரவில்லை. ஓரிருமுறை ஆதிரை phone -ல் ராஜாவுடனும் பேசினான். ராஜாவைப் போல அஸ்மிதா சரளமாக பேசவில்லையென்றாலும் தத்தி தத்தி அத்தை என அழைத்தாள். விமான விபத்தின் போது ஏற்பட்ட அதிர்ச்சியால் பேச்சே வராது என்று அல்லோபதி டாக்டர்கள் சொல்லியிருந்தப் போதும் இந்திரபிரதேஷின் இயற்கை மருத்துவத்தால் அவள் இவ்வளவுக்கும் தேறியிருந்தாள். கந்தனிடமும் அடுத்த வாரம் தான் அங்கு வர இருப்பதையும் , தன் திருமணம் மற்றும் ராஜாவை பற்றிய உண்மையையும் சொன்னாள். phone -ஆல் ஆதிரைக்கு கண்டதையும் யோசித்து மன குழப்பம் அடைய நேரமிருந்திருக்கவில்லை.. ஓரிரு முறை அர்ஜூனைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் அவளுள் எழுந்தப் போதும் குதிரைக்கு கடிவாளம் போடுவதுப் போல, அவள் ஆவலை பிடிவாதமாக திசை திருப்பி தடுக்க முயன்றாள். இப்படியே ஒரு வாரம் மறைந்ததே ஆதிரைக்கு தெரியவில்லை.


ஒரு வார இறுதியில் பணிக்காக வந்து சென்றுக் கொண்டிருந்த அந்த நடுதர வயதுப் பெண் தன் வேளை இன்றோடு முடிந்ததாக ஐயா சொன்னாரம்மா. நீங்க ஒடும்பு பாத்துக்கோங்க. நாளைக்கு எங்கோ வெளியில் செல்ல வேண்டுமாம். இந்த புடவையை உங்களிடம் கொடுக்க சொன்னரம்மா. நாளை இதனை கட்டிக் கொள்ள வேண்டுமாம்" என்று பிரிக்கப்படாத ஒரு புடவை டப்பாவை ஆதிரையிடன் நீட்டினாள் அந்த பணிப் பெண்.


அதனை வாங்கி கட்டிலில் வைத்துவிட்டு , தன் தலை முடியின் பின்னலை பின்னிக் கொண்டிருந்த ஆதிரை, “ ஏது ஏது… மிகவும் மகிழ்வுடன் இருப்பதுப் போல தெரிகிறதே அக்கா? என்னை விட்டு பிரிந்து செல்வதில் அவ்வளவு ஆசையோ!” என்று ஒரு வாரத்தில் உண்டான நட்பில் கேட்டாள்.


“சே சே என்ன கண்ணு அப்புடி சொல்லிபுட்ட . ஒரு வாரமா பொண்டு புடிசுகல வூட்ல வுட்டுட்டு வந்துட்டேன். புள்ளைகல பாக்க போர சந்தோஷம். என் பெரிய பொண்ணு 10 கிளாசு தான் படிக்குது. அதுவே வீட்டையும் பாத்துட்டு தம்பியையும் பாத்துட்டு போரதா என் வூட்டுகாரரு சொல்லுச்சு. அதுதான் வேகம். அதோட நம்ம ஐயா , எனக்கும் ஒரு அழகான புடவையை சம்பள பணத்துடன் கொடுத்தார். ” என்று கண்ணில் மகிழ்ச்சி பளிச்சிட கையிலிருந்த இன்னொரு புடவை டப்பாவை ப்ரித்து ஆதிரையிடம் காண்பித்தாள்.


“ஓ அதுவும் அப்படியா. பிள்ளைகளை விட்டுவிட்டு ஏன் வந்தீங்கக்கா.. நம்ம புள்ளிங்க தானே முக்கியம். " என்று பேசிய வண்ணமே அந்த பெண்ணிடமிருந்து புடவையை வாங்கி பார்த்தாள்.


“நானும் இரவு வீட்டுக்கு போகதான் கேட்டேன்மா.. ஐயாதான் நீங்க இரவில் பயப்புடுவீங்கனு. கூடவே இருக்க சொல்லிட்டாக. உங்கள பார்த்ததும் எனக்கும் புடிச்சிடுச்சா சரின்னுட்டேன். " என்றாள் அந்த பணிப்பெண்.


இரவில் தனிமையில் இருக்க கொஞ்சம் பயப்படுபவள் தான் ஆதிரை. ‘அது கந்தனுக்கும் தன் அண்ணன் அண்ணிக்கு மட்டுமே தெரியும். இவனுக்கு எப்படிதெரிந்தது. என் நலனில் ஏன் இவ்வளவு அக்கறை அர்ஜூனுக்கு.’ என்று ஒரு நொ எண்ணிய போதும் ‘ ஆயிரமிருந்து என்னை சந்தேகித்தவந்தானே இந்த அர்ஜூன்’ என்று தலையை சிலுப்பினாள்.


பின் அதை பற்றி பேசாமல் , "புடவை நன்றாக இருக்கிறது. உனக்கும் அழகாக இருக்கும்" என்று கூறி பணிப்பெண்ணிடம் கொடுத்தாள்.


"ஆமாக்கா.. எனக்கெதுக்குமா இந்த புடவ. என் பொண்ணு சம்ஞ்சா அவளுக்கு கட்டி உட்கார வைக்கணும்..” என்று அந்த புடவையையே தடவி பார்த்தாள் அந்த பணிப்பெண்.


அதற்கு புன்னகித்த ஆதிரை, “அது சரீ… உன் பெண்ணின் விஷேசத்துக்கு என்னையும் அழைப்பாயல்லவா?” என்று சிரித்தாள் ஆதிரை.


“கண்டிப்பாகம்மா.. இப்போ நா கிளம்ப்றேன். இந்த புடவை ஸ்வீட்செல்லாம் பார்த்தா என் வீட்ல எல்லாரும் சந்தோஷபடுவாங்க" என்று சொல்லிக் கொண்டே கிளம்பிவிட்டாள் அந்த பணிப்பெண்.


அவளையே பார்த்திருந்த ஆதிரை சிறு புன்னகியுடன் , “சந்தோஷமாக போய்ட்டுவாங்கக்கா" என்று வழியனுப்பியும் வைத்தாள்.


இவள் கிளம்பிவிட்டாள் என்றால் அர்ஜூன் எப்படியும் ஆதிரையை பார்க்க வருவான் என்று ஏற்கனவே யூகித்தவளாக அமர்ந்திருந்தாள் ஆதிரை.


‘அர்ஜூன் சொன்ன ஒரு வாரம் முடிந்தது. அர்ஜூன் எப்படியும் நாளை ஏலகிரி கிராமம் போக train டிக்கெட் பதிவு செய்திருப்பான். அதனால் நாளைக்கு போக கிளம்ப நாம்தான் தயாராக வேண்டும் " என்று எண்ணிய வண்ணம் அர்ஜூன் நாளை கட்டி கொள்ள சொன்னதாக கொடுத்த சேலையை பிரித்து பார்த்தாள். திறந்தவள் அப்படியே விக்கித்து நின்றாள். தங்க சரிகை போட்ட பட்டு சேலை அது. நாளை ஏலகிரி கிராமம் போக ஏதோ பயணத்தில் போட என்று ஏற்கனவே சுடிதார் ஒன்றை எடுத்து வைத்திருந்தாள் ஆதிரை. ஆனால் முதல் முறையாக அர்ஜூன் வாங்கி தந்து கட்டிக் கொண்டு வர சொன்ன புடவையை பயணத்தில் எப்படி காட்டிக் கொள்வது. பயணத்தில் எப்போதுமே சேலை அணிவது ஆதிரைக்கு பிடிக்காது. அங்கு விலகுமோ இங்கு விலகுமோ என்று எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதனால் எப்போதும் பயணமென்றால் சுடிதார் தான் அணிவாள். பயணத்திற்கு என்றால் சாதாரண புடவையாக இருக்க கூடுமென்று எண்ணி பெட்டியை திறந்தவளுக்கு அதிர்ச்சியாகி போனது.


பட்டு புடவையை பெட்டியிலிருந்து எடுத்து தன் மடி மீது போட்டுக் கொண்டு தடவி பார்த்தாள். ‘இந்த புடவை போட்டுக் கொண்டு எப்படி இங்கிருந்து ஏலகிரி கிராமத்திற்கு போவது. இந்த வெயிலில் குறைந்தது 4 மணி நேரமாவது பயணம் இருக்கும் . இம்க்கும்.. அர்ஜூன் சொன்னாரென்று நாளை இதை கட்டிக் கொண்டு நம்மாள் கஷ்டப்பட முடியாதுப்பா. ஊரில் போய் கட்டிக் கொள்வதாக சொல்லிக் கொள்ளலாம். என் கணவருக்கு கொஞ்சமும் யோசனை என்பதே இல்லை ‘ என்று வாய்விட்டே புலம்பி புடவையை மடித்து உள்ளே வைக்க எத்தனித்தாள்.


இவ்வாறாக அவள் மனனிலையிருக்க அவள் எண்ணத்தின் நாயகனே அங்கு வந்து நின்றான். “என்ன பலமான சிந்தனையாக இருக்கிறது. இன்னும் தூங்கவில்லை போல் இருக்கிறது" என்று கதவையின் மீது கைகளை கட்டிக் கொண்டு சாய்ந்த வண்ணம் சொன்னான் அர்ஜூன்.


அவனை அன்று எதிர் பார்த்திருந்தப் போதும் அப்போது ஆதிரை அவனை எதிர்பார்க்கவில்லை. . அவனது குரலில் அவசரமாக புடவையை பெட்டியில் வைத்துவிட்டு எழுந்து நின்றாள் ஆதிரை. அவனை பார்த்த நொடி உடலில் சூடு பரவுவதை ஆதிரையால் தடுக்க முடியவில்லை. ஒருவாரத்திற்கு முன்பு அவனிடம் வீராப்பாக பேசியதெல்லாம் மறந்தே போயிருந்தது. அவளையும் அறியாமல் எப்போதுதான் அர்ஜூனை மீண்டும் பார்ப்போம் என்ற ஏக்கம் மேலோங்கி இருந்தது. அதனால் அர்ஜூனை பார்த்ததும் பெண்மைக்கு உரிய வெடகம் அவளை ஆட்க் கொண்டது. வெட்கத்தினாள் எதுவும் பேச முடியாமல் நாக்கு குலரியது.


“அ.. அது.. வ.. வந்து" என்று ஆதிரையின் வாய் முனங்கிக் கொண்டிருக்கும் போதே அவள் மனது வேறு சிந்தித்துக் கொண்டிருந்தது. ‘அந்த பணிப்பெண் செல்லும் போது கதவை தாளிட்டதாக அல்லவா நினைவிருக்கிறது. இவன் எப்படி உள்ளே வந்தான். ஒரு வேளை இவன் ஏற்கனவே உள்ளேயே இருந்தானா? இல்லை கதவை நான் தாளிடவே இல்லையோ என்று யோசித்துக் கொண்டிருந்தது அவள் மனமும் கருவிழிகளும்.


"ஏதேனும் சுவரசியமான கனவோ. என்னிடமும் சொல்லலாமே. உன் விழிகள் மட்டும் மனதிரையில் பார்ப்பதுப் போல் தெரிகிறது" என்று குனிந்திருந்த ஆதிரையின் முகத்திற்கு முன் தன் முகத்தை வைப்பதற்கு வாகாக குனிந்து வெண்ணிற பற்கள் பளிச்சிட கேட்டான்.


அவ்வளவு அருகில் அர்ஜூனை பார்த்த ஆதிரைக்கு கைகால்கள் நடுங்கியது. அவளது இதய துடிப்பு அவளுக்கே கேட்கிறதோ என்ற சந்தேகம். அப்போது , “ஹலோ அர்ச்சு.. is this your wife?” என்று கேட்ட வண்ணம் ஒரு வெளி நாட்டு பெண் அந்த அறைக்குள் அர்ஜூனின் தோள் மீது கை வைத்துக் கொண்டு வந்து நின்றாள்.


“yes Clara. Athirai… This is Clara. My college mate.. landon லருந்து வந்திருக்கா.” என்று அறிமுகப்படுத்தினான். கிளாராவையும் அவள் உடை முறையையும் பார்த்த மாத்திரத்திலே ஆதிரையின் முகம் மாறியது. இருந்தும் நாகரீகம் பேணி வணக்கம் சொன்னாள். இதனை ஓர கண்ணால் பார்த்த அர்ஜூனுக்கு உள்ளுக்குள் குதுகலித்தது.


ஆதிரையை சீண்டுவதற்காகவேவேண்டுமென்றே, “கிளாரா அழகாக இருக்கிறாள் இல்லை ஆதிரை...” என்றான் அர்ஜூன்.


அவனை முறைத்த ஆதிரை, “ம்ம்.. இல்லை...” என்று வெடுக்கென சொல்லிவிட்டு திரும்பிக் கொண்டாள் .


“what happen archu? Why your wife turned around.? Did you asked so? “ என்று நளினமாக சொல்லிய வண்ணம் அர்ஜூனின் கன்னத்தில் தடவினாள் clara…


“Nothing like that clara. She simply doing like that.” என்று விளக்கம் கொடுக்க முயன்றான்.


கீச்சு கீச்சு என்று கேட்ட கிளாராவின் குரல் ஆதிரக்கு சொல்ல முடியாத கோபத்தை தூண்டியது. அதனால் உடனே திரும்பி , கொஞ்சம் பேசாம இருக்கீங்கலா என்று சொல்ல எண்ணிய ஆதிரைக்கு அவள் அர்ஜூனின் கன்னத்தை தடவிக் கொண்டிருந்தது எரிச்சலை ஏற்படுத்தியது.


‘ஆதிரை என்று ஒருத்தி இருப்பதே மறந்து போனதா இவர்களுக்கு ‘ என்று குபுகுபு
என்று கோபமாக வந்தது. கைகளை பிசைந்த வண்ணம் செய்வரியாது பெரிய பெரிய மூச்சுகள் எடுத்து விட்டுக் கொண்டிருந்தாள்.


“ஆதிரை… நாளை நாம் எல்லோரும் அஸ்டலட்சுமி கோவிலுக்கு போக போகிறோம். நாளை மறுனாள் உன் கிராமம் செல்லலாம். கிளாரா லண்டனிலிருந்து அந்த கோவில் பார்க்கவே வந்திருக்கிறாள். நீ உனக்கு கொடுத்த புடவையை கட்டிக் கொள். அப்படியே இவளுக்கும் நாளை புடவை கட்டிவிடு. மிகவும் ஆசை படுகிறாள். புரிகிறதா?” என்று கேட்டான் அர்ஜூன்.


“ம்ம்… நன்றாக புரிகிறது..” என்று க்ராரான குரலில் சொன்னாள் ஆதிரை.


“ம்ம்.. இன்று இவள் உன்னுடன் தங்கிக் கொள்ளலாமா? “ என்று கேட்டான் அர்ஜூன்.


“இல்லை.. அது எனக்கு சரியாகும் என்று தோன்றவில்லை.” என்று தாமதித்து , ‘ இன்னும் அர்ஜூனின் தோளை விட்டாளில்லை அந்த கிளாரா’ நேரு முனுமுனுத்தாள் ஆதிரை.


“சரி விடு அப்போது அவள் என் அறையில்..” என்று அர்ஜூன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ‘என்ன அவன் அறையிலா.’ என எண்ணி, “ இல்லை பரவாயில்லை ஒரு நாள் தானே என்னுடன் தங்கிக் கொள்ளட்டும்" என்று பெருந்தன்மைப் போல கூறினாள் ஆதிரை.


அதற்கு ஒரு பெரிய சிரிப்பை உதிர்த்து, “ அது சரி… clara… you can stay with Athirai. See you tomorrow. Take rest” என்று சொல்லிவிட்டு சென்று விட்டான்.


முதலில் பிடிக்காமல் பேசியப் போதும் திரும்ப திரும்ப அர்ஜூனை பற்றியும் அவர்களுக்கு இடையேயான கள்ளம் கபடமற்ற நட்பையும் கிளாரா பேச பேச விரைவிலே புரிந்துக் கொண்டாள் ஆதிரை.


அதனோடு அடுத்த நாள் காலை clara -வின் கணவர் என்று லாரன்ஸ் அறிமுகம் ஆனதும், அர்ஜுனின் விளையாட்டு புரிந்தது. பொய்யான கோபத்துடன் ஆதிரை அவனை முறைத்தப் போதும் ஆதிரைக்கும் லாரன்ஸ்- கிளாரா தம்பதியுடன் அர்ஜூன்- ஆதிரை தம்பதியாக கோவில் சென்று வர புத்துணர்வாக இருந்தது.


கோவில் சென்று வந்த பிறகே தெரிந்தது. அவர்கள் புதுமண தம்பதிகள் என்றும், லாரன்ஸும் அவர்களது கல்லூரி தோழன் என்று. அவர்களதும் காதல் திருமணம். இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்திருந்த போதும் பலவித சண்டைகள். திருமணம் ஆன பிறகு அர்ஜூனின் அம்மா சுமித்ரையை பார்க்க சென்றிருக்கிறார்கள். அப்போது அர்ஜூனின் அம்மாவின் ஆலோசனையின் பேரில் இந்த கோவிலுக்கு வந்தார்களாம்.


‘அந்த கோவிலின் மாயமோ என்னமோ இருவருக்குள்ளும் வந்த போதுக்கும் இப்போதுக்கும் நிறைய நெருக்கம் தெரிகிறது.’ என்று சொல்லிய வண்ணம் அர்ஜூன் ஆதிரையின் அறைக்குள் வந்து தாளிட்டான்.


அவனையே பார்த்திருந்த ஆதிரைக்கு செய்வதறியாது நின்றாள். ஏற்கனவே லாரன்ஸ்- கிளாராவின் நெருக்கம் ஆதிரையினுள் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இதில் அர்ஜூன் வேறு பட்டு வேஷ்டி சட்டை போட்டுக் கொண்டு புது மாப்பிள்ளை போல. இல்லை இல்லை மன்மதன் போல வந்து இப்படி நிற்கிறானே. காலையிலிருந்து பலமுறை வைத்த கண் விலகாமல் என்னை எப்போது அர்ஜூனின் கண்ணிலிருந்து மறைவோம் என்று எண்ண வைத்தான். இப்போது அவன் அறைக்கு போகாமல் இங்கு வந்து இப்படி தாளிடுகிறானே. நான் இன்னும் சேலையை கூட மாற்றவில்லை. குளியலறையில் மாற்றினாள் சேலை வீணாகிவிடாதா . என் கணவருக்கு கொஞ்சமும் யோசனையில்லை" என்று எண்ணிய போதும் அவனின் இந்த செயலை பார்த்து ஆதிரையின் உடலில் குளிர் பரவியது.


அறையை தாளிட்டவனின் விழியில் ஆதிரையின் தோற்றம் பட்டது. அவளுள் இருக்கும் தாக்கம் அவனுள்ளும் இருந்தது. நேர்த்தியாக கட்டியிருந்த அந்த கரும்பச்சை நிற சேலை ஆதிரையின் சென்னிற தேகத்தினை எடுத்து நிறுத்தி காட்டியது. தனக்கானவள் என்ற கர்வம் அவனுள் மேலோங்கி இருந்தது. காலையிலிருந்து அடக்கி வைத்திருந்த வேட்கை அவனையும் அறியாமல் வெளிப்பட்டது. அவனது விழியிலிருந்து விலகி மண்ணுள் புதைந்து மறைந்துவிட மாட்டோமா என்று ஆதிரையின் பெண்மை அவளை நாணத்தால் தலை குனிய செய்தது. அவ்வாறு நின்ற ஆதிரையின் அழகு இன்னும் ஆயிரம் மடங்கு அதிகரித்தது. அவளை விழிகளாலே உண்பவன் போல அவளையே பார்த்த வண்ணம் அவள் அருகில் வந்து நின்றான்.


அவன் அருகாமை தந்த கதகதப்பு அவளுள் பல மின்னல் கீற்றுகளை ஏற்படுத்தியது. அதிலிருந்து தப்பிவிட எண்ணி ஒரு நொடி பின்னோக்கி காலடி எடுத்து வைத்தாள். ஆனால் அவள் எண்ணத்தை ஏற்கனவே படித்தவன் போல ஆதிரையை நகரவிடாமல் அவனது இடது கை, அவளது இடையை வளைத்து பிடித்திருந்தது.. அவனது தொடுகையில் உடலெல்லாம் சிலிர்க்க நிமிர்ந்து அர்ஜுனை பார்த்தாள். அர்ஜூனின் விழிகளும் ஆதிரையின் விழிகளை பார்த்தது. ஆதிரையின் விழியழகை முழுதும் ரசிப்பதை தடுத்து முகத்தில் காற்றினால் அசைந்தாடிக் கொண்டிருந்த அவளது தலை முடியினை ஒரு விரலால் விலக்கிவிட்டான்.. அந்த செயலால் ஆதிரை மேலும் உடல் சிலிர்த்தாள். அர்ஜூனின் விழிகள் லேசாக மூடி மூடி திறந்த ஆதிரையின் உலர்ந்த உதடுகளையே பார்த்து அதனை நனைத்திட துடித்தது. தண்ணீரின்றி தவிப்பதுப் போல ஆதிரை எச்சில் விழுங்கி அசைந்த தொண்டையின் அசைவை பார்க்க பார்க்க ஆதிரையின் மீது அவனையும் மீறி ஓர் வேட்கை உண்டானது.


அர்ஜூனின் நிலை அதுவென்றால் ஆதிரைக்கு இவையெல்லாம் கனவோ என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. அன்று அந்த தீவில் அவன் நெற்றியில் தந்த முதல் முத்தம் இப்போதுதான் தந்ததுப் போல சில்லிட்டது. அவளையும் அறியாமல் அவன் முத்தமிட்ட அவள் நெற்றியை தொட்டு பார்த்தாள். ஆனால் அன்றுப் போல் ஆதிரையால் அர்ஜூனிடமிருந்து விலக இன்று முடியவில்லை. இருந்தும் மனதுள் ஒரு இனம் புரியாத தயக்கம். அர்ஜூனை முழுதும் ஏற்றுக் கொள்ளாத மனனிலை. அன்று திருமணமாகாத பெண்ணிடம் எல்லை மீற வேண்டாமென்று அர்ஜூனிடமிருந்து விலகியது நினைவு வர, இப்போது என்ன சொல்லி விலக முடியும். ஆயிரம் இருந்தும் நான் அவன் மனைவிதானே. இப்போது எல்லை மீறினால் என்னால் என்ன செய்ய முடியும். என்னுள்ளும் எதோ மாற்றம் தெரிகிறதே. ஆதிரையின் உணர்வுகளை படித்தவன் போல. அவளது மனப் போராட்டம் உணர்ந்தானோ அர்ஜூன், ஆதிரையை மிகவும் சோதிக்காமல் ஒரு சிறிய நெற்றி முத்தத்துடன் அவளை விடுவித்தான்.


அந்த முத்ததில் மேலும் செம்மயுற்ற ஆதிரையின் முகம் அடுத்து என்ன நிகழுமோ என்ற பயத்தில் திகிலுற்றது. ஆனால் அர்ஜூன் அவளை விடுவித்ததும் நிம்மதியும் ஏமாற்றமும் ஒரு சேர அவளை ஆட்க் கொண்டதை ஆதிரை வியப்புடன் உணர்ந்தாள். அவன் விலகியது அவளுள் ஏதோ சிறு வேதனையை உண்டாக்கியதாகவே ஆதிரை உணர்ந்தாள்.


அவன் விலகியதும் ஒரு சில நிமிடங்கள் அங்கு அமைதி நிலவியது. அர்ஜூன் அந்த அறையிலிருந்த mini fridge -லிருந்து தண்ணீர் எடுத்து பருகினான். ஆதிரைக்கு அருகில் சில்லிட்ட ஒரு தண்ணீர் bottle -ஐ வைத்துவிட்டு , பால்கனிக்குச் சென்று தலையை கோதிய வண்ணம் நின்றிருந்தான். அவனையே பின்னிருந்து பார்த்திருந்த ஆதிரைக்கு என்னமோ செய்தது. ‘ நிமிர்ந்து நின்றிருந்த அர்ஜூனின் கட்டமைப்பான உடலும், கைகளை மடக்கி தலையினை கோதியப் போது தெரிந்த கைகளின் தசைக் கோலங்களும் ஆதிரையின் உடலில் புது ரத்தம் பாய்வதுப் போல உணர்த்தியது. அவனை அப்படியே பின்னிருந்தவாரே கட்டிக் கொள்ள வேண்டும் போன்ற ஒரு உந்துதல் ஏற்படுவதை ஆதிரையால் தடுக்க முடியவில்லை. அப்போது இலகுவாக திரும்பி ஆதிரையை அர்ஜூன் பார்த்தான். அவன் திரும்புவன் என்று எண்ணியிராத ஆதிரை சட்டென முகம் திருப்பி மேஜை மீதிருந்த தண்ணீரை எடுத்து பருகினாள்.


அதற்கு மேலும் அங்கு இருப்பது சரியாகாது என்பதை உணர்ந்த அர்ஜூன், “ஆதிரை நீ சேலை மாற்றிவிட்டு எனக்கு phone செய்.நாம் விரைவில் தூங்க வேண்டும். நாளை காலையே ஊருக்கு கிளம்ப வேண்டும். மற்றது நாளை பேசலாம். இப்போது நன்றாக தூங்கு" என்று விட்டு ஆதிரையின் பதிலுக்கும் காத்திராமல், வேகமாக அறையின் கதவருகில் சென்று ஒருமுறை ஆதிரையை திரும்பி பார்த்தான். பின் " தனியாக தூங்கிக் கொள்வாய் தானே. இரவில் பயபடமாட்டாயே!” என்று கேட்டான்.


என்ன கேட்கிறான் என்று ஒரு நொடி புரியாமல் நின்ற ஆதிரை, “அ… அதெல்லாம் ஒன்றும் பயப்பட மாட்டேன். த.. தனியே உறங்கி பழக்கம்தான்" என்று வாய் குலரிய வண்ணம் சொல்லி முடித்தாள். ‘தனியே உறங்கி பழக்கமில்லையென்றப் போதும், இவன் உடன் தூங்குகிறேன் என்றால் என்ன செய்வது. சந்திரகுளிரின் ரகசியம் முடிந்ததும் விலகி செல்வதாக சொல்லிவிட்டு அவனுடன் சல்லாபம் செய்வதாக என்னை எண்ணிவிட மாட்டானா. அதனால்தான் என்னமோ இப்போதும் நான் எந்த வித எதிர்ப்பு சொல்லாதப் போதும் விலகிச் சென்றான். அவனது ஏளன பேச்சுக்கு நாம் ஒரு நாளும் ஆளாகக் கூடாது. இனி நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.’ என்று தனக்குள்ளே பேசிக்கொண்டாள் ஆதிரை.


அவளையே பார்த்திருந்த அர்ஜூன் வேறேதும் பேசாமல், “சரி இரண்டு தாள்பாள் போட வேண்டாம். சாவிக் கொண்டு போடும் தாழ்பால் மட்டும் போட்டுக் கொள்" ஏதேனும் என்றால் குரல் கொடு நான் கீழ் அறையில்தான் இருப்பேன். என்னுடைய phone எண்ணும் உன்னிடம் கொடுக்கப்பட்ட phone-ல் பதிவாகியிருக்கிறது. அதில் அழைத்தாலும் சரி தான்" என்று சொல்லிவிட்டு அறையை விட்டு விலகிச் சென்றான் அர்ஜூன்.
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
அர்ஜுனின் கிளாஸ்மேட் கிளாராவிடம் ஆதிரைக்கு ஓவர் பொறாமை பொங்கல் பொங்குதே
பொங்கட்டும் பொங்கட்டும்
அர்ஜுனுக்கு மட்டுமில்லை இவங்க இரண்டு பேருக்குமே இது நல்லதுதான்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top