தூரம் போகாதே என் மழை மேகமே!! - 49

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer


இந்திரபிரதேஷில்…


சொன்னப்படியே ஊர் மக்கள் அனைவரும் சூரியன் மறையும் முன்னரே சிவசக்தி பாட்டியின் வீட்டுக்கு அருகில் இருந்த சத்திரம் போன்ற இடத்தில் வந்து அமர்ந்துக் கொண்டு அவரவர்களுக்குள் பலவும் பேசிய வண்ணம் இருந்தனர்.


துருதுருவென சுற்றிக் கொண்டிருந்த ராஜாவுக்கும் அவ்வளவு பெரிய கூட்டத்தை பார்த்ததும் மிகவும் கொண்டாட்டமாக போய்விட்டது. அந்த ஊர் மக்களுக்கு அருகில் சென்று சென்று அவர்களிடம் அவனாக சென்று விளையாட்டிக் கொண்டிருந்தான். தன் வயதினனாக இருந்த ராஜாவுடன் சென்று ,”டா…ஜா… டா.. ஜா” என்று அவன் பின்னே வால் பிடித்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தாள் அஸ்மிதாவும். தயக்கமும் புதியவர்களிடம் பயமும் கொண்டிருந்த அஸ்மிதாவின் இந்த இயல்பும், ராஜாவின் சுட்டித்தனமும் அங்கு இருப்பவர்களுக்கு குதுகலத்தை கொடுத்தது. குழந்தைகள் இயல்பாக இருந்த போதும், அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று சிவசக்தி சொன்னப்படி ராதை விழி விலக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள். அவர்களுடன் இன்னும் சில குழந்தைகளும் உடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர்.


இவ்வாறாக வந்திருந்தவர்களும் குழந்தைகளும் இருக்க சிவசக்தி பாட்டி காதம்பரனுடன் பேசிக் கொண்டே அங்கு வந்து சேர்ந்தார். “எல்லாரும் சரியாக அழைத்தப்படி வந்ததற்கு நன்றி” என்று பொதுவாக தொடங்கி ஊர் மக்களை அழைத்ததற்கான காரணத்தை பேச ஆரம்பித்தனர்.


“எந்த பிரட்சனையும் இல்லாத இந்த வேளையயில் ஏன் இந்த திடீர் கூட்டமென்று எல்லார் மனதிலும் ஒரு கேள்வி இருக்கும்” என்று அனைவர் மனதையும் படிப்பவர் போல கேட்டார் சக்தி.


“ஆமாம் மா… ஐயா இறந்த போது கொஞ்சம் கஷடங்காள் இருந்தது. அதன் பின் சில மாதங்களிலே நம்ம அர்ஜூனர் தம்பி நம்ம ஊருக்கு வந்த பிறகு அவரே எங்க எல்லார் வீட்டுக்கும் 2 மாதத்திற்கு ஒரு முறையாவது வந்து பேசிவிட்டு போவார். அப்படி இருக்க எங்களுக்கு எந்த குறையும் உண்டாவதற்குமுன்பே நம்ம தம்பி தீர்த்துவிடுமே! அப்படி இருக்க இந்த கூட்டம் ஏன் என்று கொஞ்சம் குழப்பமா இருக்குதுமா” என்றார் ஊரில் கொஞ்சம் வயதான சாமினாதர்.


தன் மகனை பற்றி பெருமையாக உணர்வதை கஜேந்திரனாலும் சுமித்ராவாலும் மறைக்க முடியாமல் முகமெல்லாம் விகசித்து ‘அவன் எப்படி இப்போது இருக்கிறான் என்று தெரியவில்லையே!’ என்று அவர்கள் முகம் வாடியது. இதனை காணாமல் கண்ட சிவசக்தி, அவர்களை ஒதுக்கி அப்போது பேசிய சாமினாதருக்கு பதில் அளிக்கும்விதமாக பேசலானர்


“ம்ம்… என் பேரனை பற்றியும் சொல்லதானே இந்த கூட்டமே சாமினாதா.. முதலில் உங்களில் எத்தனை பேருக்கு நம் ஊரின் சந்திரகுளிர் பற்றி நினைவிருக்கிறது?” என்று கேட்டார்.


அங்கு ஒரு நொடி கூட்டத்தினடையே சலசலப்பு உண்டாகி அமைதியானது.


அப்போது “எனக்கு தெரியும் தாயே!” என்று குரலில் நடுக்கத்துடன் ஒரு கிழவர் எழுந்து நின்றார். அவரை கண்டதும் ஒரு நொடி கூர்ந்து கவனித்த சிவசக்தி பாட்டி நெற்றிப் பொட்டில் முடிச்சு விழ , “உட்காருங்க பெரியவரே.. ஒரு நிமிடம் காத்திருங்கள். நான் இதோ வந்துவிடுகிறேன்” என்று அவசரமாக சிவசக்தி அவரது வீட்டிலிருந்த சாமி அறைக்குச் சென்றார்.


சிவசக்தி நகர்ந்ததும், “என்ன பெரியவரே இந்த ஊரிலே இருக்கும் எங்களுக்கே சந்திரகுளிர் பற்றி தெரியவில்லை. மூன்று நாட்களுக்கு முன்புதானே கணேசன் காட்டில் மயங்கி கிடந்த உங்களை அழைத்து வந்தான். உங்களுக்கு எப்படித் இந்த ஊரின் விசயம் தெரியும். எங்களில் ஒரு சிலர் அதை கேள்வி பட்டிருந்த போதும் என்ன ஏதேன்று எங்கள் பெற்றோர்கள் சொல்ல மறுத்ததால் மறந்தும் போயிருந்தோம். இப்போது சக்தி அம்மா கேட்டப்பின் தீப்பொறிப் போல பெயர் நினைவிருந்த போதும் வேறேதும் நினைவில்லையே!” என்றார் அங்கிருந்த ஒருவர்.


“அதுதானே. உங்களுக்குப் எப்படித் தெரியும்?” என்று மற்றொருவர் கேட்க ஊர் மக்களிடையே சலசலப்பு அதிகமானது. அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் , புன்னகையுடனே சிவசக்தி சென்ற பாதையை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார் அந்த பெரியவர்.


மக்களின் சலசலப்பு அடங்குமுன்பே வெளி வந்த சிவசக்தி பாட்டி , அந்த பெரியவரை நோக்கி மிக அருகில் சென்று உற்று நோக்கினார். “அண்ணா… இவ்வளவு நாள் எங்கிருந்தீங்க அண்ணா… கஜா வெளி உலகம் சென்ற போதே உங்களை எதிர் பார்த்திருந்தேனே!” என்று அந்த புதிய பெரியவரின் கையை பற்றி உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டு பேசினார் சிவசக்தி.


“நான் எங்கும் போகவில்லை சக்தி. உன் கணவர் இறந்தப் செய்தி அறிந்தப் பின் ஒவ்வொரு அம்மாவாசை அன்றும் நான் எப்போதும் இங்கு வருவேன். உனக்காக. உன் பாதுகாப்புகாக..” என்று தன் தங்கையின் தலையை நடுங்கிய கையினால் வருடிய வண்ணம் சொன்னார் புதிய பெரியவரான சிவராமன்.


ஒரு நொடி அங்கு மூச்சுவிடும் சப்தம் கூட தெளிவாக கேட்கும் அளவு அமைதி நிலவியது. ஊர் மக்கள் சிவசக்தி பாட்டியையும் சிவராமரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தனர்.


“ஒவ்வொரு அம்மாவாசையுமா!” என்று நிமிர்ந்த சிவசக்தி பாட்டியின் விழிகள் சிவராமனின் விழிச் சந்தித்து மீண்டது.


“ஆமாமா… என்ன ஏதோ கலக்கமாக தெரிகிறாய்? என்னை பார்ப்பதற்கு முன்பு மிகவும் தைரியமாக இருந்த உன் மனம் இப்போது தடுமாற்றமாக தெரிகிறது” என்று சிவசக்தியின் விழியில் தெரிந்த கலக்கம் சிவராமனை கேள்வி கேட்டுவிடச் செய்தது.


“ம..ம்.. அ.. அது… அர்.. அர்ஜூன்.. என் பேரன்” என்று திக்கிக் கொண்டிருந்த போது அர்ஜுன் என்றதும் கலக்கம் மேலோங்க கஜேந்திரன் பேசலானார்.


கஜேந்திரனுக்கு தனக்கொரு மாமா இருப்பதே இப்போதுதானே தெரிந்தது. அவரும் ஆச்சரியமுடன் அமர்ந்திருந்தார். அந்த அதிர்ச்சியுடனே முதலில் கேள்விக் கேட்டவர் கஜேந்திரனே,. “ அம்மா… என்ன சொல்கிறீர்கள். இவர் உங்கள் அண்ணனா? ஏன் என்னாச்சு அர்ஜூனுக்கு?” என்று களங்கிய மனமாக கேட்டார்.


அப்போதுதான் ஊர் மக்கள் அனைவரும் தங்களையே கவனித்திருப்பதை உணர்ந்த சிவசக்தி தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு கஜேந்திரனிடம் பேசலானார்.


“ஆமாம் கஜா. இவர் உன்னுடைய சொந்த மாமா.. அண்ணா இவன்தான் என் மகன். அவள் என் மருமகள் . லண்டன் சென்று அங்கே இருக்க பழகிவிட்டான்” என்று பொதுவாக அறிமுகம் செய்து வைத்தார் சிவசக்தி.


“என்னை மட்டும் ஊரைவிட்டு போக கூடாது என்று சொன்ன நீங்க, இப்படி உங்கள் உடன் பிறந்த அண்ணன் இந்த ஊரிலே இல்லாமல் வேறெங்கோ சென்றது ஏன்? இவர் இருப்பதையே மறைத்தது ஏன்?” என்று குழம்பி தவித்திருந்த கஜேந்திரன் கேட்டார்.


“ம்ம்… சொல்கிறேன் கஜா. இனி இது நீ தெரிந்துக் கொள்ள தேவையில்லை என்ற போதும் சொல்கிறேன். ஏனென்றால் நாம் இந்த இடத்தை விட்டு இன்னும் 6 மாதத்திற்க்குள் கிளம்ப போகிறோம். நாம் மட்டுமல்ல இந்த ஊர் மக்களும்தான். “ என்று எப்படி சொல்வது என்று தயங்கினார் சிவசக்தி.


இதனை கேட்டதும் ஊர் மக்களிடையே மீண்டும் சல்சல்ப்பு அதிகரித்தது.


“முழுதும் சொல்லிவிடம்மா. இனியும் நீ எந்த உண்மையையும் உன்னுள் புதைத்து வைத்திருக்க தேவையில்லை சிவசக்தி. இனிமேல் எதுவும் நம் பொறுப்பல்ல. போன தை அம்மாவாசையோடு உங்கள் குடும்பத்தின் கடமை முடிந்துவிட்டது. இனி அவள் அவளவன் சென்று சேர்வது விதிப்படி நடக்கும். நம் கையில் இனி எதுவும் இல்லை.” என்று சிவசக்தி சொல்ல ஊக்குவித்தார் சிவராமன்.


“புரிந்துக் கொண்டேன் அண்ணா.” என்று சிவசக்தி பேச ஆரம்பித்தார்.
 

banumathi jayaraman

Well-Known Member
ஹேய் நான் நல்லவரா கெட்டவரான்னு நினைத்த அந்த பெரியவர் சிவசக்தியம்மாவின் அண்ணனா?
சூப்பர், யோகா டியர்
அப்போ சுமித்ரா இவர் மகளாய் இருப்பாரோ?
என்ன இன்னும் ஆறு மாதத்தில் ஊரை விட்டு போகணுமா?
அப்போ சந்திரகுளிர் குகை?
சிவசக்தி பாட்டி என்ன சொல்லப் போகிறார்?
 
Last edited:

Janavi

Well-Known Member
Dear sis..ரொம்பவே twist வைக்கிறீங்க....daily 2 ud கொடுத்தாலும் முடியல....கொஞ்சம் பெருசா கொடுங்க....நிறைய முடிச்சுகள் இருக்கு.....குழப்பம் ஏற்படாமல் ,story நல்லா போகுது..... super....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top