தூரம் போகாதே என் மழை மேகமே!! - 31

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
#1அவளை விசித்திரமாகப் பார்த்த அர்ஜூன் ,” சரி சரி.. உன் விருப்பம்.” என்றான்.


சில நிமிடங்கள் அவர்கள் மௌனமாக அந்த மலையினை நோக்கி நடந்தனர். அதிசயமாக அந்த அணில் ஆதிரைக்கு அழகாக தன் குட்டி கையினைக் கொண்டு வழிகாட்டிக் கொண்டே வந்தது. அதனையே ஆதிரையும் அர்ஜூனும் தொடர்ந்து வந்தனர். அவர்கள் நடந்து வந்த பாதையில் அதிக முட்களோ அல்லது விஷப் பூச்சிகள் இருந்தது போலவோ இல்லை. சொல்லப் போனால் யாரோ இந்தத் தீவில் வசித்துக் கொண்டு இந்த இடத்தை பராமரிப்பதுப் போல அவர்கள் வந்த பாதை ஒரு ஒற்றையடிப்பாதை போலவே இருந்தது.


வரும் வழியிலெல்லாம் ஏதாவது ஒரு தாவர உணவு வகை இருந்து கொண்டே இருந்தது. தர்பூசணி, மக்காச்சோளம், தக்காளி பழம் , கோவைப்பழம் என்று பலதரப்பட்ட உணவுப் பொருட்கள் இருந்தது. ஆதிரையும் அர்ஜூனும் அவற்றுள் சிலவற்றை சேகரித்துக் கொண்டனர்.


“அப்படியே நடந்து வந்ததில் மதியம் ஆகிவிட்டது. நம்ம நல்ல நேரம் தர்பூசணி கொடிகள் இப்படிப் படர்ந்திருக்கிறது. சிறிது அவற்றைச் சாப்பிட்டுவிட்டு , ஓய்வெடுப்போம். பின் இந்த மலையினை ஏறத் தொடங்குவோம்” என்றான் அர்ஜூன்.


“சரிங்க சார்” என்றவளின் மீதிருந்த அணில் திடீரென்று கத்தத் தொடங்கியது. ஆதிரையின் மீது ஏறிக் குதித்து கத்தியது. புரியாது விழித்த ஆதிரை, அணிலின் சைகையினை பார்த்து அவர்கள் நின்றிருந்த இடத்தின் மேலே பார்த்தனர். அந்த ஆலமரத்தின் கிளைகளின் மேலே ஒரு சிறிய மரவீடு கண்களுக்குத் தென்பட்டது.


உடனே ,“அர்ஜூன் சார். அங்க பாருங்க. வீடு போல ஏதோ தெரிகிறது.” என்று அந்த மரத்தின் மீதிருந்த சிறிய மரவீட்டினை காட்டினாள் ஆதிரை.


“ஆமாம். இங்கு யாரோ வசிப்பது போல் தெரிகிறதே!. வா நாம் மேல் ஏறிச் சென்று பார்ப்போம்” என்றான்.


“ம்ம்.. அதெப்படி சார் மேலே ஏறுவது. நீங்கள் பரவாயில்லை. Phant போட்டுரீக்கீங்க. நானோ இந்தப் பாவாடை. என்னால் முடியாது சார். நீங்க போய் பார்த்துவிட்டு வாங்க. அதனுடன் இந்தக் கத்தியையும் எடுத்து போங்க. ஒருவேளை ஏதேனும் மிருகங்கள் தங்கியிருந்தால் உங்க தற்காப்புக்கு உதவும்.” என்றாள் ஆதிரை.


“ம்ம்… அது சரி…” என்று ஆதிரையின் நிலையை எண்ணிச் சிரித்தான் அர்ஜூன். “இதற்கு உங்க fashion technology அண்ணி ஏதும் idea கொடுக்கலயா!!” என்று நக்கலடித்து ஒரு அவுட்டு சிரிப்பு சிரித்தான்.


அவனது சிரிப்பில் ஒரு நொடி வியந்து உடன் புன்னகித்தவள் , பின் அவனை ஒரு முறை முறைத்தாள். “ம்ம்… சொல்லவில்லை. இப்போது நீங்க போய் வாங்க. ஒருவேளை யாரேனும் மனிதர்கள் இருந்தால் அவர்கள் நாம் இங்கிருந்து செல்ல உதவக் கூடும். காலம் கடத்தாமல் போங்க” என்று பொய்யான கண்டிப்புடன் கூறினாள் ஆதிரை.


“அப்படியே ஆகட்டும் மகாராணியாரே!. உங்க கட்டளையை அப்படியே இந்த அடியேன் நிறைவேற்றுவேன்.” என்று ஆதிரையின் முன் குனிந்து ஆதிரையின் அனுமதி வேண்டி நிற்பது போல கேட்டான்.


“ம்ம்.. அந்தப் பயம் இருக்கட்டும்!” என்று அர்ஜூனின் செயலுக்கு ஏற்றாற் போல நடித்துக் காட்டினாள்.


“ஹப்பப்பா.. இது உலகமாகா நடிப்புடா சாமி” என்றான் அர்ஜூன்.


அதற்கு இல்லாத காலராய் தூக்கிவிட்டுக் கொண்டு, “இதெல்லாம் கம்மி சார். “ என்று சிரித்தாள் ஆதிரை.


அவளது சிரிப்பில் அவளையே பார்த்துக் கொண்டிருந்த அர்ஜூன், “ஆதிரை… உனக்கு இப்படி சந்தோஷமாக பேசிச் சிரிக்க தெரியுமென்று எனக்கு இப்போது வரை தெரிந்திருக்கவில்லை” என்றான். அவன் கூறியதும் அவள் சிரிப்பு இடையில் நின்றது.


பின் “நானும்தான் சார். இப்படி வாய்விட்டு எந்தக் கவலையையும் மனதில் வைக்காமல் சிரிப்பதே இனி நடக்கக் கூடுமோ என்று பல நாட்கள் எண்ணி இருக்கிறேன். ஏனோ உங்களிடம் என் கதையை சொன்ன பின் எனக்கு எவ்வளவோ மனம் லேசானது போல் இருக்கிறது.” என்றாள் ஆதிரை


“ம்ம்.. மகிழ்ச்சி.. “ என்று புன்னகைத்தவன், அங்கிருந்த ஒரு ஆலம்விழிதினை பிடித்துக் கொண்டு அந்த மரத்தின் மீதிருந்த மரவீட்டினை நோக்கி ஏறினான்.


சில நிமிடங்களில் அந்த வீட்டினை அடைந்த அர்ஜூன். அங்கு யாருமில்லை என்பது போல் சைகைக் காட்டினான்.


அதற்கு ,” சரி கீழேவாங்க” என்றாள். அவள் அவ்வாறு கூறிய வினாடியில் ஏதோ சப்தம் கேட்டது. அணில் அவளின் தோள் மீதிருந்து தாவிகுதித்து அந்த விழிதினை பிடித்துக் கொண்டே அர்ஜூனை அடைந்தது. அந்த அணில் காட்டிய இடத்தில் ஒரு கரடி ஆதிரையை நோக்கி வந்து கொண்டிருந்தது என்பதிய அர்ஜூன் அறிந்தான். கொஞ்சம் தொலைவில் இருந்த போதும் அது ஆதிரையை விரைவில் அடைந்துவிடக் கூடும். அதனைப் பார்த்த அர்ஜுன் ஒரு நொடிக்கூட தாமதிக்காமல் கீழே இறங்கினான்.


இறங்கி ஆதிரையிடம் ஒருவார்த்தையும் பேசாமல் , பேசி அவளிடம் விளக்கம் கொடுக்க நேரம் போதாதென்று எண்ணி அவளைத் தனது வலது கையினால் பிடித்துக் கொண்டு இடதுகையால் ஆலம்விழுதினை பிடித்து வேகமாக ஏறினான்.


வேகமாக அர்ஜூன் கீழே இறங்கி வருவதைப் பார்த்து என்னவென்று புரியாமல் விதிர்விதித்து போயிருந்த ஆதிரைக்கு அர்ஜூனின் இந்தச் சைகை ஒன்றும் புரியவைக்கக்கூடியதாக இல்லை. கீழே இறங்கியவன் விளக்கமளிக்க கூடுமென்று காத்திருந்த ஆதிரையின் எண்ணத்திற்கு மாறாக, அவளிடம் ஒரு வார்த்தையும் சொல்லாமல், எதிர்பாராமல் நின்றிருந்த அவள் இடையை வளைத்தான் அர்ஜூன். இந்தச் சைகை தூங்கிக் கொண்டிருந்த ஆதிரையின் பெண்மையை எழுப்பிவிட்டது. அவளையும் அறியாமல் அவளது ரோமக்கால்கள் குத்திட்டு அவளை மெய் சிலிர்க்க வைத்திருந்தன.


“எ… என்ன சா… சார்”” என்று அவள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே அந்தக் கரடியின் சப்தம் அவர்களுக்கு கீழேக் கேட்டது. “கரடி…” என்று பயந்தவள், அர்ஜூனை இன்னும் லாகவமாக பிடித்துக் கொண்டு அன்னிச்சை செயல் போல அந்த ஆலம் விழுதினை எட்டிப் பிடிக்க முயன்றாள். ஆனால் அதற்குள் ஆதிரையைக் கஷ்டப்பட்டு அவன் அந்த மரத்தின் முதல் கிளையில் நிறுத்தியிருந்தான்.


“இது என்ன சோதனை.. இந்தக் கரடி திடீரென்று எங்கிருந்து வந்தது.” என்று இன்னும் மேலே பார்த்துக் கொண்டிருந்த கரடியினை பார்த்துக் சொன்னான் அர்ஜூன். ஆனால் ஆதிரையினை இன்னும் அவன் இடை அணிப்பிலிருந்து விட்டான் இல்லை. ஆதிரையும் விலகும் எண்ணம் இல்லாமல் பயத்தில் நடுங்கிய வண்ணம் அர்ஜூனை இறுக அணைத்துக் கொண்டிருந்தாள்.


அப்போதுதான் ஆதிரையின் பக்கம் திரும்பிய அர்ஜூன் , அவள் இன்னும் தன்னை விடவில்லை என்பதை உணர்ந்து, “ஆதிரை… “ என்றான்.


அவனது குரல் எங்கோ கேட்பது போல உணர்ந்த ஆதிரை, “ம்ம்” என்று நடுங்கிய வண்ணம் அவனை அணைத்த வண்ணமே அவள் மேல்வாயை உயர்த்தி அவனது விழிகளைப் பார்த்தாள்.


அவளது கண்ணில் மிரட்சியும் , பயமும் இன்னும் விலகாததைக் கண்டு ,” ஏய் ஆதிரை… என்ன சின்ன புள்ள மாதிரி இப்படி பயப்பட்ர. நான் இருக்கும் போது உன்னை எந்த ஆபத்திலும் விட்டுவிடுவேனா!” என்று கனிவாக அவளது தலையினை தடவிய வண்ணம் கூறினான்.


ஏனோ அந்த அரவணைப்பும் அன்பான வார்த்தைகளையும் அதிக நாட்களுக்குப் பின் கேட்ட ஆதிரைக்குக் கண்களில் நீர் துளிர்த்தது. ஆனால் வாய்திறந்து எதுவும் பேச முடியாமல் அவனது மார்பிலே மீண்டும் முகம் பதித்தாள். ஆதிரையின் இந்தச் சைகையால் அர்ஜூனுக்கு அவளின் மனதில் அவன் இருப்பது தெளிவாக தெரிந்துவிட்டது. சில வினாடிகள் அந்த மரக்கிளையிலே ஆதிரை ஆசுவாச படுத்திக் கொள்ள நேரம் கொடுத்து பின் , “வா.. அந்த மரவீட்டுக்கு போகலாம். இந்தக் கரடி இங்கேயே வட்டமடித்துக் கொண்டிருக்காது. எப்படியும் இங்கிருந்து நகரத்தான் வேண்டும். அதுவரை இப்படி இருவரும் இந்த மரக்கிளையில் நின்றிருந்தால், நமக்கும் கால்கள் வலிக்கும் இந்த மரக்கிளையும் எவ்வளவு நேரம் தாங்குமென்று தெரியவில்லை.” என்றான்.


அதற்குள் தன்னை சுதாரித்துக் கொண்ட ஆதிரை, அவனுக்கு பதிலேதும் சொல்லாமல், “ம்ம்…” என்றாள்.


“நான் முதலில் ஏறிவிடுகிறேன். நீ என் பின்னோடு என்னைப் போல் ஏறி வா. “ என்றான். பின் ஒரே கையில் அவளையும் தூக்கிக் கொண்டு மேலே சட்டென ஏறியதால் , உண்டான வலியில் கைகளை இழுத்துவிட்டு மேல் நோக்கி ஆலம்விழுதினையும் மரத்தின் கிளைகளையும் ஆதரவாகக் கொண்டு அந்த மரவீட்டினை அடைந்தான். ஆதிரையும் அவனைப் போலவே முயன்று ஏறி அந்த வீட்டை அடைந்தாள். அவர்கள் இருவரையும் வரவேற்பது போல் அந்த வீட்டினுள் அணில் கூச்சலிட்டுக் கொண்டு சுற்றிச் சுற்றி வந்தது.
 
Advertisement

New Episodes