தூரம் போகாதே என் மழை மேகமே -2

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம் - 2
69e9fb367db476a4bdee39ea645d3a6d--tamil-girls-indian-art.jpg
‘ஒருவேளை தான் சொல்வதை அவன் கேட்டிருந்தால், இப்படி இங்கு வேலைக்காக வந்திருக்க வேண்டியிருந்திருக்காது, இம்மக்களிடம் வேண்டாத வார்த்தைகளையும் கேட்க வேண்டியும் இருந்திருக்காது. இந்நேரம் தன்னோட MS படிப்பைச் சிதம்பரம் medical collage -லேயே படித்து முடித்திருப்பேன். இப்படி வெறும் MBBS படித்துவிட்டு, ஒரு வருடம் மட்டுமே படித்த M.S. ஐயும் வைத்துக் கொண்டு என் ராஜாக்காக இங்கு வந்திருக்கவும் நேர்ந்திராது.’ என வேதனையுடன் எண்ணினாள் ஆதிரை. அதனோடு அவன் கேட்காமல் விட்டதால் இப்போது ஏற்பட்ட பலனை எண்ணியும் கொஞ்சம் ஆருதலடைந்தாள்.

அவளது இந்த ஆழ்ந்த சிந்தனையை கலைத்து “அக்கா. மழ வேகமாக பெய்யுது. நீங்க ராஜாவ கீழ விட வேணாம்.” என ராஜாவை தூக்கி வந்து, ஆதிரையின் கையில் தந்தான் கந்தன். பின் “வாங்க. சாமி கும்பிட்டு வரலாம். மழ நின்னதும் வீட்டுக்குக் கிளம்பலாம்” என அவளை கோவிலின் உச்சவர் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றான்.

‘கந்தன் 10-ம் வகுப்பு படிக்கும் யாருமற்ற சிறுவன். அவன் அப்பா அம்மா அவனது சிறு வயதிலே சோலைக் காட்டில் வேலைச் செய்யும் போது தீ விபத்தில் இறந்துவிட்டனர். முன்னால் இந்த ஆரம்ப சுகாதார நிலையில் பணியாற்றிய சேகர் அங்கிள்தான் இவனை அரவணைத்துப் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். கந்தன், சேகர் இங்குப் பணியாற்றும் காலம் வரை அவருக்குத் துணையாகவும், உதவியாகவும் இருந்தான். அவர் மாற்றலாகி போனபிறகு ஆதிரைக்குத் துணை இருக்கும்படியும், நன்றாகப் படிக்கும் படியும் அறிவுரைக் கூறிவிட்டுச் சேகர் அவர் மகனோடு இருப்பதற்காக டெல்லி சென்றுவிட்டார். அவனும் சேகர் அங்கிள் வார்த்தையை மதித்து நன்றாகப் படிக்க செய்கிறான்.

அதனோடு ஆதிரைக்கு உதவியாகவும், ராஜாவை அன்போடு கவனித்துக் கொண்டும் இருக்கிறான். எப்போதுமே தன் சொந்த சகோதரனைப் போல பாசம் காட்டும் கந்தன் மீது ஆதிரைக்கு, தனி அன்பு உண்டு. உரிமையோடு தம்பி என்றே அவனை அழைத்து வந்தாள்.’
மழை நின்றுவிடக் கந்தன் ஆதிரையை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினான். உள்ளூரில் பிறந்தவன் என்பதாலும் உள்ளூரில் நடக்கும் எல்லா நிகழ்வுகளும் அவனுக்குத் தெரியும். அது கிராமம் என்பதால் அடிக்கடி திருவிழாக்கள், திருமணவிழாக்கள், காது குத்து, எனப் பலவித நிகழ்ச்சிகள் நடக்கும். எல்லோரும் ஆதிரையை ஏற்று அந்த நிகழ்வுகளுக்கு அழைப்பு விடுத்தாலும் , கந்தனை தன் சார்ப்பாக விழாக்களுக்கு அனுப்புவதாகவும், hospital- க்கு விடுப்புக் கொடுக்க முடியாதச் சூழல் என்றும் தவிர்த்து வந்தாள். இம்முறை கந்தன் வற்புறுத்தியதாலே இன்று இந்த மயில்பாறை கோவிலுக்கு அவள் வந்தாள். கோவிலுக்கு வந்ததாலோ பார்பதற்கறிய நிகழ்வுகளைக் கண்டதாலோ இன்று ஆதிரையின் மனம் கொஞ்சம் அமைதி அடைந்தது.

இருந்தபோதும் ஒரு காலத்தில் தன் அண்ணனோடு விளையாட்டும் குறும்புமாக எந்தக் கவலையுமின்றி வாரம் தவறாமல் கோவிலுக்குச் சென்றதையும் , கடைசியாகக் கோவிலுக்கு சென்றதையும் எண்ணி ஆதிரை ஏக்கம் கோண்டு பெருமூச்சு விட்டாள்.
ஆதிரையின் மனப் போக்கை அறியா கந்தன், அவளிடம் அவன் பள்ளி நிகழ்வுகளை அளவளாவிக் கொண்டு வந்தான். வீடு வந்ததும் இருவருக்கும் ஆச்சரியம் காத்திருந்தது.

சேகர் அங்கிள் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தார். அவரைக் கண்டதும், இருவரும் ஆர்ப்பரித்தனர். “அங்கிள் எப்போ வந்தீங்க, உங்கள பாத்து எவ்வளவு நாளாச்சி.” என அவரை கட்டிக் கொண்டான் கந்தன். பின் “உள்ள வாங்க அங்கிள் “, என சொல்லிக் கொண்டே அவசரமாக வீட்டுக் கதவை திறந்தான் கந்தன்.

தன்னை ஆசையோடு அணைத்துக் கொண்ட கந்தனை, அன்போடு அரவணைத்து, “ஒரு பத்து நிமிஷம் இருக்கும் கந்தா. நீங்கக் கோவிலுக்கு போயிருப்பதா பக்கது தெரு வனிதா சொன்னா. அதுதான் நீங்க வர வரை கொஞ்ச நேரம் உட்கார்ந்திருக்கலாமென்று இருந்தேன். நீங்க என்னைக் காக்க வைக்காம சீக்கரமாவே வந்துட்டீங்க” என சிர்த்தார் சேகர்.
ஆதிரையும் பல நாட்கள் தகவல் இல்லா அவளது ஒரே ஆதரவான அங்கிளை கண்டதும் மன மகிழ்ச்சிக் கொண்டாள். ”அங்கிள் , எப்படி இருக்கிங்க? எப்படி வந்தீங்க? ஏன் இவ்வளோ நாளா எங்ககிட்ட phone-ல கூட பேசவே இல்ல.” என தோள் மீது தூங்கிக் கொண்டிருந்த ராஜாவை லாகவமாக மேலும் தோள் மீது ஏற்றிப் போட்டுக் கொண்டே சேகரிடம் பேசினாள்.
ஒரு புன்னகையை பதிலாகக் கொடுத்துவிட்டு, “ காலைல flight –ல தான்மா டெல்லில இருந்து சென்னை வந்தேன். அப்படியே train-அ புடிச்சு, வேலூர் வந்தேன். அங்கயிருந்து bus புடிச்சு நம்ம ஊருக்கு வந்தேன் மா. நா 4 மாசம் முன்னாடி London போயிருந்தேன். அங்க என் phone-அ தொலச்சிட்டேன். அதுதான் உங்கட்ட ஒழுங்கா பேச முடில ஆதி “ என சொல்லிக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தார். London என்று கேட்டதும் ஆதிரையின் முகம், ஒரு கணம் இருள் படிந்து மீண்டது.
இதைக் காணாமல் கண்ட சேகர் பேச்சை வேறு பக்கம் திருப்ப எண்ணி, “என்ன நம்ம ராஜா நல்லா வளந்துட்டான் போல!” என ஆச்சரியம் போல கேட்டு ராஜாவின் முதுகில் வருடினார்.

“ஆங்.. ஆமா அங்கிள். ரொம்ப குறும்புதனம் செய்றான். Control பண்ணவே முடில” என புன்னகித்துக் கொண்டே “ கந்தன் மட்டும் இல்லன hospital ஐயும் பாத்துகிட்டு, ராஜா கேட்கற குழந்த தனமான கேள்விக்கெல்லாம் என்னால பதில் சொல்ல முடிந்திருக்காது.“ என பெருமையாக சொன்னாள் ஆதிரை.

“ம்ம்.. அப்படியா. இப்போ நல்லா தூங்கிறான் போல இருக்கே” என்றார் சேகர்.

“ஆமா அங்கிள். 20 நிமிஷ பயணத்துக்கே தூங்கிவிட்டான் ராஜா. அவன் எழுந்ததும் பேசுவான்ல , நீங்களே அவனை தெரிஞ்சிபீங்க. அத விடுங்க. Bus stop –ல இருந்து இங்க எப்படி வந்தீங்க. 3 கிலோ மீட்டர் தூரம்ல. ஒரு வார்த்த யார்டயாவது சொல்லி அனுபிருந்தீங்கன்னா, தம்பிய bus stop க்கு அனுப்பியிருப்பேனே!, இப்போலாம், இவன் வண்டி நல்லா ஓட்ரான்.” எனக் கந்தனை பெருமை போல சொல்லி சேகரை கேட்டாள் ஆதிரை.

“இல்லமா. இந்த ஊர், வயல்வெளிகளோட பார்க்கவே அழகாக இருக்கும் , அங்கங்க இருக்கிற ஆடு, மாடு, கோழி அப்பறம், மயில்களயும், மான்களயும் நடந்து வந்தா தானே ரசிக்க முடியும். அதுதான் அப்படியே நடந்து வந்தேன். ரொம்ப நாளுக்குப் பிறகு சுத்தமான காத்த சுவாசிச்சதும் இன்னும் அதிக strength கிடச்சது. பாரு 10 வயசு குறைஞ்சது போல இருக்குல” என சிரித்துக் கொண்டே நிமிர்ந்து நிண்டு கால் முதல் தலை வரை கைகாட்டி சொன்னார் சேகர்.

“அட போங்க அங்கிள் நீங்க எப்போதும் இப்படிதான்.” எனச் சிரித்துவிட்டு, “ ஒரு நிமிஷம் அங்கிள். ராஜாவைப் படுக்க வைத்துவிட்டு வருகிறேன்” என Fan switch –ஐ போட்டுவிட்டு , “ தம்பி! அங்கிள்க்கு தண்ணி குடு. இதோ வந்திடுறேன்” என சொல்லுமுன்னே, கந்தன் தண்ணியோடு வந்திருந்தான்.

பிறகு, கந்தனும், சேகரும் பேசிக் கொண்டிருந்தனர். இதற்கிடையில் அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்துவிட்டு சாப்பிடவும் அழைத்தாள் ஆதிரை. அவள் வரும் போது , கந்தன் கண்களில் கண்ணீரைக் கண்டு திடுக்கிட்டாள். “அங்கிள் என்னாச்சு ஏன் தம்பி அழரான்” எனக் கன அக்கறையோடு கேட்டாள் ஆதிரை.

அவள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே கந்தன் அழுது கொண்டே எழுந்து உள்ளே போய்விட்டான். இதை எதிர் பார்த்த சேகர், “ சொல்றேன் மா. இப்படி வா. இங்க உட்காரு. நீ எப்படி இருக்க.?” என அவள் தலையை வருடினார் சேகர்.

“ஆன்.. நல்லாருக்கேன் அங்கிள். அது.., கந்தனுக்கு என்ன?” என அவனிலே இருந்தாள் ஆதிரை.

“ம்ம்.. இருமா சொல்றேன். அவன நீ போய் கூட்டி வரியா? சாப்பிட்டு அப்பறமா பேசலாம். ரொம்ப பசிக்கிறது” என ஆதிரையை அனுப்பி கந்தனை அழைத்து வரச் சொன்னார் சேகர்.

ஆதிரைக்கும் பசியோடு வந்திருக்கும், அங்கிளிடம் தான் கேள்வி மேல் கேள்வி கேட்கிறோம் என்பதே அப்போதுதான் விளங்க, கந்தனைச் சாப்பிட அழைத்து வரச் சென்றாள். கந்தன் தூங்கிக் கொண்டிருக்கும் ராஜாவின் தலையை வருடிக் கொண்டு அவன் அருகில் அமர்ந்திருந்தான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top