தூரம் போகாதே என் மழை மேகமே!! -12

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம்- 12
main-qimg-624c51f7bbaee0b441e15b97c59d36e9-c.jpeg
சிவசக்தி பாட்டியின் சொல்லின்படி சிம்லா-சனரி கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலை ஏற்பாடு செய்துவிட்டு அதற்கான மருத்துவர் தேர்வு செய்வதற்காகவே சென்னை வந்திருந்தார் காதம்பரன். ஹிமாச்ல பிரதேசத்தில் உள்ளவர்கள் அதிகமாக ஹிந்தியே பேச கூடியவர்களாக இருந்த போதும், சனரி கிராமத்திலிருந்து கொஞ்சம் உள்ளே காட்டுப்புறமாக இருந்த இந்திரபிரதேஷ் மட்டும் தமிழ் மக்கள் வாழும் மிகவும் சிறிய கிராமம். இந்தக் கிராமம் பல நூறு வருடங்களாக இருப்பதே யாரும் அறியாத ஒன்று. இப்படிப்பட்ட ஊர் இருப்பதே இந்த நூற்றாண்டிலே உலகிற்கு அறிய வந்தது. இந்தக் கிராமத்தில் அந்த கால குருகுலம் முறை மூலமாகவே கல்வி மற்றும் பல கலைகளும் வளர்ந்து வந்தது. அக்கிராமத்தின் விதிமுறைகளை மீறி முதன் முதலில் கஜேந்திரனே இந்தக்காட்டை' அடுத்து வெளியில் என்ன இருக்கிறது' என்று ஆர்வம் கொண்டு வெளி உலகம் அறிந்தவர். அதனோடு இல்லாமல் பல வித தொழிலையும் புதுவித அனுபவங்களையும் அந்தக் கிராமத்திற்கு கற்றுத் தந்தவரும் அவரே. தொழிலில் அதிக ஈடுபாடு இருந்ததால் கஜேந்திரனுக்கு அவனது ஊர் பாரம்பரியம் மெல்ல மெல்ல மறக்கச் ஆரம்பித்தது.

அப்படிப்பட்ட கிராமத்திற்கே பணி புரிய தமிழ் பேச தெரிந்த மருத்துவர் வேண்டும் என்று சிவசக்தி பாட்டியின் வார்த்தைகளின்படி அரசாங்கத்திடம் சுகாதார துறை அமைக்கப் பதிவு செய்திருந்தனர் காதம்பரனும் அர்ஜூனும்.
இதனோடல்லாமல் சிவசக்தி பாட்டியும் சிலமுக்கியமான செய்திகளையும் காதம்பரனிடம் சொல்லி அனுப்பி வைத்திருந்தார். இவ்வாறாகப் பேசிவிட்டு சென்னை வந்த காதம்பரன் தகுந்த காலம் வருவதற்காகக் காத்திருந்தார். சிவசக்தி பாட்டியின் வார்த்தைபடி அந்தகாலம் ஒரு மாதத்திற்கு மேல் இருக்காது என்பதால் கதம்பரன் சென்னையிலே தங்கிவிட்டார். ராஜாவைக் கண்டதும் அதற்கான காலம் வந்ததாகவே காதம்பரனுக்கு தோன்றியது.

தொழில் தொழில் என்று பல நட்பு வட்டாரத்தை ஏற்படுத்திக் கொண்ட கஜேந்திரன் லண்டன் வரை தொழில் வளர்ச்சியடியந்தார். அங்கே மேல் படிக்க வேண்டுமென்று ராஜேந்திர ராஜாவிடம் அனுமதி பெற்று படிக்கச் சென்றார். ராஜேந்திரரும் தனக்கிட்ட கட்டகளை போல நடப்பவைகளை எதிர்க்காமல் கஜேந்திரன் விருப்பத்தை நிறைவேற்றினார். அங்கே அவரை போல படிக்க வந்திருந்த சுமித்ரயையின் மீது கஜேந்திரனுக்கு காதல் வந்தது. அவர்கள் இருவரும் ராஜேந்திர ராஜாவின் குடும்ப வழக்கத்திற்கு மாறாக காதல் திருமணம் செய்து கொண்டனர். ஒத்தமனமும் ஆர்வமும் இருந்ததால் கஜேந்திரனும் சுமித்ரையும் லண்டனிலே தொழிலில் சாதனைகள் செய்ய ஆரம்பித்தனர். அதனால் அடிக்கடி லண்டனிலிருந்து இந்திரபிரதேஷ்க்கிற்கு அவர்களால் வர முடியவில்லை.

தன் ஒரே மகனைப் பிரிந்திருக்க கூடிய சூழல் ஏற்பட்ட போது சிவசக்தி பாட்டி உடைந்தே போனார். அப்போது ராஜேந்திர ராஜா அவர்களின் பூர்வீக வரலாற்றைத் தெளிவாக எடுத்துச் சொன்னார். அப்போதே சிவசக்தி பாட்டியை சந்திரகுளிர் குகை கோவிலுக்கும் அழைத்துச் சென்றார். முதலில் வியப்பாக உணர்ந்த சிவசக்தி பின்பு நடப்பவற்றையும், அந்த சந்திரகுளிர் குகை கோவிலில் உருவாகும் ஆருட சுவடிகளும் பொருந்துவதை கண்டு தெளிவடைந்தார்.

சிவசக்திக்கு ஆருதல் வார்த்தைகள் சொன்ன போதும் புத்திர பாசம் ராஜேந்திரரை விடவுமில்லை. கஜேந்திரனிடம் ஊர் வரும்படி வெகுவாக கேட்டுக்கொண்டார். கஜேந்திரனுக்காகவே வெளி உலகம் சென்றவர், உலக அறிவியல் வெகுவாக வளர்ந்திருப்பதைக் கண்டு வெகுவாக வியந்தார். இந்த வளர்ச்சிகளில் ஒரு சிலவற்றையாவது தம் மக்களுக்குச் செய்ய எண்ணினார். அதன்முதல் ஏற்பாடாக அவ்வூர் மக்களுக்கு வெளியுலக கல்விக்கு ஏற்பாடு செய்தார். பல ஆயிரம் காலமாக புதைக்கப் பட்டிருந்த அவர்களது குடும்ப நகைகளுள் ஒரு சிலவற்றை கொண்டு அக்கிராமத்தில் புதிதாக பிறக்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் ஒரு குறிப்பிட்ட வயத்திற்குப் பிறகு வெளியில் சென்று கல்வி பயில ஏற்பாடு செய்தார். அவர்கள் படித்து சொந்தமாக இந்தக்காலம் மக்களின் வருமானமாகக் கருதப்படும் பணம் சம்பாதிக்கும் நிலை வரை உடனிருந்து உதவினார். அதன்பின் பலரும் குடும்பத்துடன் வெளியில் சென்று வாழ விரும்பினர். அதற்குக் காரணமும் இருந்தது. கஜேந்திரனும் வெளியில் சென்று விட இம்மக்களின் எதிர்காலம் எண்ணி அதனை ராஜேந்திரராஜ மிகவும் ஊக்குவித்தார்.

இந்திரபிரதேஷ் அடர்ந்த காட்டினுள் இருந்தது. அடிக்கடி வெளியில் சென்று வருவது அவ்வளவு எளிதாக இல்லை. அந்த ஊருக்குள் செல்ல இன்றளவும் சாலைகளோ நவீன வாகனங்களோ இல்லை. சுமார்10 மைல்களுக்குக் குதிரையில் சிறிது ஆபத்தான ஒற்றையடிப் பாதையிலே அந்தக் கிராமத்திலிருந்து வெளியில் செல்ல வேண்டும். இதனாலும்தன் வயிற்று மக்களைப் பிரிந்து இருக்க முடியாமலும் பலர் இந்திரபிரதேஷைவிட்டு சென்றுவிட்டனர். இவ்வாறாக இருந்த சூழலிலே, தமிழ்நாட்டை பற்றி கேள்வியுற்று அங்கே அடிக்கடி சென்றார் ராஜேந்திரன். அங்கே இந்திரா enterprises என்ற கடலிலிருந்து முத்தெடுக்கும் ஒரு தொழிலை ஏற்படுத்தினார். இடம்பெயர்ந்த மக்களின் நிலை உணர்ந்து ராஜேந்திர ராஜா தமிழகத்தின் காஞ்சிபுரத்திலே நிலங்களை வாங்கி அவர்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்தித் தந்தார். ராஜேந்திரனின் அனைத்து அலுவல்காளையும் கவனிக்க காதம்பரனையும் நன்குபடிக்க வைத்து உடனிருக்கசெய்தார்.

சிவசக்தி பாட்டியின் பிள்ளை பாசத்திற்காக அடிக்கடி கஜேந்திரனிடம் பேசவே, அரசாங்கத்திடம் பலவாறு பேசி முழு செலவையும், தான் ஏற்று இந்திரபிரதேஷில் telephone இணைப்பு ஏற்பாடு செய்தார். அதேபோல் மின்சார இணைப்பையும் கொண்டு வந்தார். இவையெல்லாம் கடந்த 35 வருடங்களிலே அக்கிராமத்திற்கு ஏற்படுத்தப்பட்டிருந்த வாளர்ச்சிகள். சிவசக்தி பாட்டிக்கு நன்றாகத் தெரிந்தது இவையெல்லாம் சந்திர குளிர்சென்று வந்த பிறகே ராஜேந்திரர் செய்கிறார் என்று. அதனோடு அவர் அடிக்கடி தமிழ் பிரதேசம் செல்வது யாரையோ தேடுவதற்கே என்று உணர்ந்தார். ஏனென்றால் சந்திர குளிர் ஆருடம் ஒருவர் ஒருவருக்கு வேறுபட்டிருந்தது. ராஜேந்திரன் இறக்கும் தருவாயிலே சிவசக்தி பாட்டி அவற்றை உணர்ந்தார். சிவசக்தி பாட்டியின் கண்களுக்கு தெரிந்த ஆருடம் ராஜேந்திரருக்கு வந்தவை இல்லை. இதனை அவரின் இறுதி நாட்களிலே சிவசக்தியிடம் கூறினார் ராஜேந்திரர்.

கஜேந்திரன் லண்டனை விட்டு அடிக்கடி வராவிட்டாலும், தன் பிள்ளைகளை எப்போதும் இந்தியா செல்வதைக் கண்டித்தது இல்லை. ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறையிலும் தவறாமல் தாத்தா பாட்டியுடன் நேரம் கழிக்க அவர்கள் சிம்லா வந்துவிடுவர். அம்முவுக்கும் அர்ஜுனுக்கும் மிகவும் பிடித்தமான இடம் தன்னுடைய தாத்தா பாட்டியின் ஊரான இந்திரபிரதேஷ்தான்.

*****

மூன்று வருடங்களுக்கு முன்பு அர்ஜூன் லண்டனிலிருந்து சிம்லா வந்தான். அம்மு அப்போது MA fashion technology படிப்பை முடித்துவிட்டு, உலகின் முன்னணி fashion company-ல் பணிபுரிந்து கொண்டிருந்தாள். அவ்வருடம் சிம்லா வந்த போது அம்முவிடம் சிவசக்தி பாட்டி இந்திய நாட்டின் கலாச்சாரத்தை தெளிவாக எடுத்துரைத்தார். தன் வம்ச முன்னோர்களின் வரைந்த புகைப்படங்களை காண்பித்து அவர்களின் நாகரிகத்தை எடுத்துரைத்தார். அதனோடு தமிழகத்தில் கோவில்களைப் பற்றியும் அங்கே எடுத்ததாக ராஜேந்திரர் கொடுத்த சில புகைப்படங்களையும் காண்பித்தார். அதன்பின் தமிழ் நாடு செல்ல வேண்டுமென்று அடம்பிடித்த அம்மு மீண்டும் வராமலே போக கூடுமென்று சிவசக்தி பாட்டி உட்பட வேறு யாரும் அறிந்திருக்கவில்லை.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top