தூரம் போகாதே என் மழை மேகமே!! -11

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம்- 11

சேகர் அங்கிள்தான் தன் அறைக்கு ராஜாவுடன் வருகிறாரோ! என எண்ணி அவசரமாகக் கலங்கி சிவந்திருந்த கண்களை அவசரமாக சரி செய்து, கதவை நோக்கி நடந்தாள் ஆதிரை. ஆனால் அதற்குள் அறைக் கதவை திறந்துகொண்டு அவளது கோபத்திற்கு காரணமானவன்தான். அர்ஜூன் உள்ளே வந்து அவள் கண்களை நேராக நோக்கினான்.

அவனைச் சற்றும் எதிர்பாராத ஆதிரை, அவனைப் பார்த்ததும், " நீங்களா?!! ஏன் இங்கு வந்தீங்க. முதல்ல என் அறையிலிருந்து வெளியில்போங்க" எனக் கோப பார்வை கொண்டு கத்தினாள்.

அவளது சத்தத்தை சட்டை செய்யாமல், அவளைத் தவிர்த்து அந்த அறையை நோட்டமிட்டபடி, "என்னது உன் அறையா?. நீ நிற்பதே என் company -யில். அதை மறந்து என்னையே வெளியில் போக சொல்கிறாயே கண்ணம்மா?" எனக்கேலியாக சிரித்தான் அர்ஜூன்.

"நியாயபடி, உனக்கு நான் இருக்கும் இடம் பிடிக்கவில்லையென்றால்,நீதான் என் company – யை விட்டு போக வேண்டும்" என்று எதையோ தேடுபவன் போல அவளைத் தவிர்த்து அந்த அறையையே சுற்றி சுற்றிப் பார்த்தான்.

"என்ன?!.. " என்றவள் அவன் சொல்லின் உண்மை உணர்ந்து, கோபத்துடன் சட்டென திரும்பி அவளது luggage பையை எடுக்கச் சென்றாள் ஆதிரை. அவள் சட்டென திரும்பிய போது, இடைக்கும் கீழாக பின்னப்பட்டு தொங்கியிருந்த அவளது கூந்தல் எதிரில் இருந்தவனின், கைமற்றும் சட்டையை ஒரு அடிவிட்டு அவளை மீண்டும் சேர்ந்தது.

"ஸ்ஸ்..." என்றவன், "என்னம்மா.. வெளியே போ என்றதற்கு என்னைத் தண்டிக்கிறாயா?! அது என்ன முடியா இல்லை. சாட்டையா?" என்றவாறு வலிப்பது போல் தன் கையை தடவினான் அர்ஜூன்.

அவனது குரலில் திரும்பி அவனைப் பார்த்த ஆதிரை, அவன் வினையாகப் பேசுகிறானா? இல்லை விளையாட்டாகப் பேசுகிறானா? எனக் கூர்ந்து நோக்கினாள். அவனது உதட்டில் மின்னிய புன்னகை அவன் தன்னை கேலி செய்தது போதாதென்று, என் கூந்தலையும் கேலி செய்கிறான். அங்கு அந்த Office அறையில் எவ்வளவு கேவலமாக பேசிவிட்டு அப்படி தான் பேசவே இல்லை யென்பது போல் எவ்வளவு வேடிக்கை இவனுக்கு என அவனையே எரித்து விடுபவள் போல் அவனைப் பார்த்தாள். இருந்து அவன் நக்கல் கலந்த கேள்விக்குப் பதில் சொல்லாமல், அவள் luggage பையைத் தயார் செய்வதிலே மும்முரமாக இருந்தாள் ஆதிரை.

அவளது அவசரத்தைப் பார்த்துவிட்டு "ஓ கிளம்பப் போகிறாயா?." என அவளருகில் வந்து நலம் விரும்பிபோல் அக்கறையாகக் கேட்டான்அர்ஜூன்.

"ஆன்... இல்லை... இங்க அமர்ந்து பிரியாணி சாப்பிட்டுவிட்டு., நீங்க பேசுர இழிவான சொற்களையும் காதுகளில் போட்டுக் கொண்டு செவிடாக நாட்களைக் கழிக்க திட்டமிட்டிருக்கிறேன்" எனஅவனுகேற்றார் போல நக்கலாகப் பதில் தந்தாள் ஆதிரை. 'இனி இந்த வேலை அவசியமில்லை' என்ற முடிவால் வந்த வீரம் ஆதிரைக்கு. ஆனால்' இது போன்ற படிக்க வசதியும் பாதுகாப்பான இடமும், இப்போது அரசால் அமைத்துத் தர முடியுமா?! இல்லை வேலையை விட்டுவிட்டு தனியார் மருத்துவ மனையில்தான் சேரவேண்டுமா?!. ஒருவேளைத் தனியார் மருத்துவமனையில் இப்போது இருக்கும் பிரட்சனையில்லாமல் வேறேதும் problem வருமா?!' என அவள் உள்ளம் கலங்காமல் இல்லை. அதற்காக இவன் பேசுவதையெல்லாம் கேட்டுக் கொண்டு தரம் தாழ்ந்து போகவும் அவளுக்கு மனமில்லை.

"ம்ம்.. அப்போசரி... நீமட்டும் பிரியாணி சாப்பிடப்போகிறாயா? இல்லை உன் குழந்தை குழந்தை என்பாயே அவனுமா?" என்று அவள் பாணியிலே கேட்டான்அர்ஜூன்.

அப்போதுதான், ராஜா தன்னுடன் இல்லை. என்பதை உணர்ந்தவளாக, அர்ஜூனுக்கு பதில் ஏதும் சொல்லாமல், "ராஜா.. என் ராஜா.. சேகர் அங்கிள்..சேகர் அங்கிளுக்கு phone செய்யனும். ஏதோ கார் என்றாரே! வெகுதூரம் அழைத்துச் சென்றுவிட கூடாது" என்று தனகுள்ளே பேசிக் கொண்டு அவசரமாக அவளது கைப்பையிலிருந்து phone எடுத்து சேகருக்கு தொடர்பு கொண்டாள் ஆதிரை. ஆனால் அவர் phone எடுப்பவராகத் தெரியவில்லை.

இவற்றை எதிர்பார்த்தவன் போல" என்ன சேகர் அங்கிளுக்கு phone செய்கிறாயா?" என்றான்.

அவன் கேட்டவிதத்தில் ஆதிரைக்குப் புரிந்துவிட்டது,'சேகர் அங்கில் இவனிடம் எதோ சொல்லிவிட்டுத்தான் சென்றிருக்கிறார். அதனால்தான் தன்னை சீண்டி பார்க்கிறான்' எனத்தெளிந்தாள்.

"ஆ... ஆமாம்.. அவர் phone எடுக்கமாட்டேங்கிறார். " என phone யே பார்த்துக் கொண்டு சொன்னாள் ஆதிரை. " அவர் எங்கே இருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியும் போல இருக்கிறதே!. அவர் எங்கே?!" என்று நேரிடையாக அர்ஜூனிடமே கேட்டாள் ஆதிரை.

"தெரியும். அதனை சொல்லத்தான் இங்கே வந்தேன். நீண்ட நேரம் கதவு தட்டியும் நீ திறக்காததால் நேற்று போல் இன்றும் ஏதேனும் மடத்தனம் செய்ய போகிறாயோ என்று சந்தேகம் வந்தது. அதுதான் உன் அறையை மாற்று சாவிக் கொண்டு திறக்க நேரிட்டது" என்றான்அவனின் செயலில் காரணத்தோடு.

"ஓ...என்ன நேற்று செய்த மடத்தனமா? " என்றவள் அவனிடம் பேசி வழவழக்க விரும்பாமல்," எங்கே என்று சொன்னீங்களென்றால் நான் போய் ராஜாவை அழைத்துக் கொண்டு என் ஊர் சேருவேன். இப்படி உங்களுடன் தனியே இந்த அறையில் நின்று பேசிக் கொண்டிருப்பது எனக்குச் சரியாக தெரியவில்லை. பெண்ணிருக்கும் அறைக்கு அனுமதி இல்லாமல் அது எப்பேர்ப்பட்ட காரணமாக இருந்தாலும் பூட்டிய கதவை திறந்துக் கொண்டு அனுமதியில்லாமல் வருவது சரியாகாது" என்று நேரிடையாக அர்ஜூனை கேட்டாள்.

"சரிதான். அப்போது என்னுடன் வெளியில் வா. கொஞ்சம் உன்னிடம் பேச வேண்டும். அதனோடு உன் குழந்தை இருக்கும் இடம் அழைத்து வருவதாக காதம் அங்கிளிடம் கூறி இருக்கிறேன்." என்றான்அர்ஜூன்.

"என்ன. உங்களுடன் வருவதா? அதற்கு வாய்ப்பில்லை.நீங்க அவர்கள் இருக்கும் இடம்சொல்லுங்க நானே போய் கொள்வேன்." என்றாள்ஆதிரை.

"உன் இஷ்டம். இப்படி என்னைக் கண்டு பயந்து நடுங்குகிறவள், நான் இருக்கும் கிராமத்திற்கு வேலைக்கு வரவும் பயந்து நடுங்கத்தானே செய்வாய். என்னுடன் ஒரு 10 நிமிடம் தனியாக நின்று பேச பயப்படுகிறாய். இதனால்தான் பயந்து ஓட அவசரப் படுகிறாய் போல" என்றான் அர்ஜூன்.

அவனுக்குப்பதில் சொல்லிவிடும் வேகத்துடன், " நான் யாரைக் கண்டும் பயப்படவில்லை. அதனோடு உங்க கிராமம் வந்து நான் வேலை செய்யும்போது தெரியும் நான் மனிதர்களைக் கண்டு பயப்படுவதில்லை என்று" என்றாள் மிடுக்குடன்.

"ம்ம். அதையும்தான் பார்ப்போம்" என்றான் அர்ஜூன்.

"நன்றாக பார்த்துக்கோங்க. இப்போது சொல்லுங்க என் ராஜா எங்கே" என அதிலே இருந்தாள் ஆதிரை.

"என்னைக் கண்டு பயமில்லை என்று இப்போதுதான் சொன்னாய். பிறகென்ன என்னுடன் வருவதற்கு." என்றான் அர்ஜூன்.

"எனக்கு மனிதர்களைக் கண்டு பயமில்லை. அவர்களின் நரம்பில்லா நாக்கு பேசுவதை கேட்கத்தான் அச்சம். என் செவி கேட்கத் தகுதியில்லா வார்த்தைகளைப் பேசும் நாக்கிற்கு என் வேதனையை இன்னும் பன்மடங்கு அதிகமாக்க வல்லமை உண்டு" என உண்மையான வலி முகத்தில் தெரியபதில் கூறினாள் ஆதிரை.

சிலவினாடிகள் அங்கு அமைதி நிலவியது. அர்ஜூனின் நெற்றியில் முடிச்சுவிழ., பின்" இனிஅவ்வாறு நடக்காது. " எனக் கண்கள் இடுங்க யோசனையோடு சொன்னான் அர்ஜூன்.

அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த ஆதிரை,' என்ன இந்தக் கடுவன் பூனைக்கு என் வேதனைப் புரிந்துவிட்டதா? இனிஅப்படிப் பேசாது எங்கிறாதா. ஆம்.. உண்மைபோல தான் தெரிகிறது. முகத்தில் ஏதோ தீவிரம் தெரிகிறதே!' என எண்ணினாள். ' இருந்தும்அவனுடன் செல்ல அவள் மனம் சம்மதிக்கவில்லை.

"சொல். செயலாகும் என்று நம்புகிறேன்." என்றாள்ஆதிரை.

"ஆகும். நீ நம்பலாம். சரி வா போகலாம். அங்கே அங்கிள் போய் ரொம்ப நேரம் ஆகிவிட்டது" என்றான்அர்ஜூன்.

'ஆமாம். 12 மணிஆகிறது. 2 மணிநேரம் ராஜா என்னைத் தேடியிருப்பான்' என எண்ணி அவசரமாக தன் கைப்பை எடுத்தவள், " சார். தப்பாகஎடுத்துக் கொள்ள வேண்டான். எனக்காக நீங்கள் வர வேண்டுமென்று இல்லை. address தாங்க நானே போய்க் கொள்வேன்" என அவள் மன நிலையைக் கூறினாள்.

"அதுதான் அவ்வாறு இனி பேசுவதில்லையென்றேனே.பின்னே என்ன.? நானும் எப்படியும் அந்த themepark போகவேண்டி இருக்கிறது. அதனால்தான் காதம் அங்கிளும் சொல்லிவிட்டுச் சென்றார். பேசி தாமதம் செய்யாமல் என்னுடன்வா" என்றவனின் குரலில் கடுமை தெரிந்தது.
இவன் இடத்தைச் சொல்பவன் போலத் தெரியாததாலும், ராஜா என்ன செய்து கொண்டிருக்கிறானோ என்ற கவலையிலும், "சரி சார்" எனத் தயக்கத்துடன் அவனுடன் கிளம்பினாள் ஆதிரை.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top