தூரம் போகாதே என் மழை மேகமே!! -1

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம் - 1

69e9fb367db476a4bdee39ea645d3a6d--tamil-girls-indian-art.jpg
அத்தியாயம் - 1


கொஞ்சிக் கொஞ்சி பேசும் மழலையைப் போல, அந்தக் குருவிகள், அவற்றுக்கு மட்டுமே புரிய கூடிய மொழியில், பரிபாசித்து கொண்டிருந்தன. மாலையா? இல்லை நண்பகலா? எனப் பிரித்தறிய முடியாத அளவுக்கு, மழை மேகங்கள், கருநிற மை தீட்டிக் கொண்டு, அந்தச் சின்ன மலை குன்றின் மீது தவழ்ந்து கொண்டிருந்தன.



தான் அழகோ, தன் நடனம் அழகோ எனச் சந்தேகிக்கும்படி, அங்கே ஆண் மயில்கள், நடனமாடிக் கொண்டிருந்தன. அவற்றின் நடனத்தில், தன்னிலை மறந்து, பெண் மயில்கள் லயித்திருந்தன.



அந்த நடனத்திற்கு இசை முழக்கம் போல, சின்ன சின்ன இடியின் முழக்கமும், குயில்களின் ‘குக்கூ’ என்ற ஓசையும், வண்டுகளின் ரீங்காரமும் அச்சூழலில் இருக்கும் யாவையும், மெய்மறக்கச் செய்தன.



ஒவ்வொரு வருடமும், எழுதப்பட்ட தீர்க்கதரிசனம் போல, தைப்பூசத்தினன்று நடக்கும் இக்காட்சி, இவ்வருடமும் பொய்க்கவில்லை. மயில்பாறை கார்த்திகேயன் மலைக்கோவிலுக்கு அருகில் நடக்கும் இதனைப் பார்க்கச் சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரும் கூடிக் கண்டு மகிழ்ந்தனர்.



ஆதிரையும் அவர்களுள் ஒருவராக நின்று அக்காட்சியைத் தரிசனம் செய்தாள். தன்னையும் மீறி அவள் மனம் பரவசமடைந்தது. அவளுள் அழுத்திக் கொண்டிருந்த மனச்சுமை குறைந்தார் போல உணர்ந்தாள்.







ஆதிரையின் தோள் மீது சாய்ந்து கொண்டிருந்த ராஜாவும், கண்களை அகல விரித்து ஆர்வமுடன் “அம்மா அம்மா, மயிலூ!!” எனப் பாதி புரியாத மழலை மொழியில் ஆதிரையை தட்டிச்சொல்லி ஆர்ப்பரித்தான்.



“ஆமா கண்ணா!. எப்படி இருக்கு? உன்னப் போல அழகா இருக்குல்ல!? “ எனக் கண்களால் தன் ராஜாவை வருடினாள் ஆதிரை.



“நாமா நாமா!!” என ஆமாவை நாமாவாக்கி துள்ளிக் குதித்தான் ராஜா.



மழலையின் முகத்தில் என்றும் இல்லாத துள்ளலையும் ஆர்வத்தையும் பார்த்த பிறகு, அவளுக்கு, ‘இவ்வளவு நாள் வெளியில் எங்கும் ராஜாவை அழைத்துப் பழகாமல் வீட்டிலே வளர்த்தது தவறோ!’ என எண்ணி வருந்தினாள்.



அவளை மேலும் அது பற்றி யோசிக்கவிடாமல், ராஜாவின் ஆர்ப்பாட்டமும், மயில்களின் நடனமும் அவளை ஈர்த்தது.



ராஜாவின் முகம் பார்த்த ஆதிரை, ‘இரண்டு வயதுக் குழந்தையை கட்டிப் போடவா முடியும்?!! இவ்வயதில் இப்படிச் சுட்டித்தனதுடனத்தை எதிர் பாராமல் வேறெதை அவனிடம் எதிர்பார்க்க முடியும்?’ என்று பெருமூச்சுவிட்டாள்.



கூடவே, தன்னை வற்புறுத்தி அழைத்து வந்த தம்பி கந்தனை நன்றியோடு கண்களால் தேடினாள். அவனோ எங்கோ அலைந்து திரிந்து ஒரு நாற்காலியைத் தூக்கிக் கொண்டு அவள் இருக்கும் இடம் நோக்கி, வந்து கொண்டிருந்தான்.



அவன் நாற்காலி எடுத்து வருவதைப் பார்த்த பிறகுதான், ஊர் மக்கள் ஆதிரையையேப் பார்த்தனர். எங்கும் வெளியில் வராத டாக்டர் இன்று இங்கே வந்திருப்பதைப் பார்த்து, அதிசயமும், மகிழ்ச்சியும் அடைந்தனர்.





“டாக்டரம்மா சத்தமில்லாம அமைதியா நிக்றீங்களே. எங்கட்ட முன்னவே சொல்லியிருந்தா நீங்க வேடிக்க பார்க்கனு சிறந்த இடத்தை பிடிச்சு வச்சிருப்போமே!.” என்றாள் குயிலம்மா.



தொடர்ந்து கந்தனிடமிருந்து chair- ஐ வாங்கிய குயிலம்மா, மலைக்கோயிலின் உள்ளே ஒரு ஓரத்தில் அந்த நாற்காலியைப் போட்டு “முதல்ல இப்படி உட்காருங்க டாக்டரம்மா. இங்க இருந்து பார்த்தாலே மயில்கள் நடனம் ஆடுவது நன்றாக தெரியும்” என்றாள்.



தொடர்ந்து கந்தனிடம் திரும்பி, “கந்தா அந்த chair - ஐ இப்படி குடு, போ போய் குட்டி ராஜாவுக்கும், டாக்டரம்மாக்கும் குடிக்க, ஒரு கலரு வாங்கியா” என அன்பான ஆணையிட்டுவிட்டாள்.



இதைக் கேட்ட ராஜா, “அம்மா கலரு கலரு, டெட் கலரு , பச்ச கலரு, நஞ்ச் கலரு “ எனக் கொஞ்சும் மழலையில் சத்தமிட ஆரம்பித்தான்.



“ராஜா! கொஞ்ச நேரம் அமைதியா இரு.” என தன் மகனை அமைதிப் படுத்தி குயிலம்மாவிடமும், கந்தனிடமும் திரும்பி, “அதெல்லாம் வேண்டாம் தம்பி” எனக் கந்தனை அடக்கி, “குயிலக்கா! கொஞ்ச நேரம்தானே நாங்க கிளம்பிடுவோம்.” என்றாள் ஆதிரை.



குயிலு ஏதோ பேச வாயெடுக்க, அவர்களுக்குப் பேச இடம் தராமல், “ தம்பி, இந்த மயில்கள் நடனம் ஆடுவது நின்று விட்டதே ! அதோடு ஏதோ சொல்லி வைத்தாற் போல, சொல்லி கொடுத்தாற் போல,



இவ்வளவு மக்கள் சத்தமிட்டிருந்தபோதும், எப்படி இந்த மயில்கள் இந்த இடத்தில் நடனம் ஆடுகிறது. நேரில் பார்க்கும் வரை நான் நம்பவே இல்லை ” என்ற வண்ணம், அந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள் ஆதிரை.









ஆதிரையின் கேள்வியில் கந்தன், “இங்க ஒவ்வொரு வருஷமும் இப்படிதான் நடக்கும் அக்கா. தை பூச நாள்ல, ஒரு குறிப்பிட்ட நேரத்துல மயில்கள் இங்கு நடனம் ஆடும். ஆடுரது நிண்டதும், மழை பெய்யும்.



அப்படி மயில் நடனமும், மழை பெய்யவும் செஞ்சா, அந்த கார்திகேய சாமி நேர்ல வந்து நம்ம பூஜைகல ஏத்துக்கிட்டாருனு அர்த்தம். அந்த வருடம் முழுக்க மக்கள் சந்தோஷமா இருப்பாங்கனு ஒரு நம்பிக்கை அக்கா.



இப்போது மழை பெய்ய போகுதுனு நெனைகிறேன், அதனாலாதான். மயில்கள் நடனம் ஆடுரது நின்னுடுச்சி. நீங்க முத முறையா இத பார்கரீங்க இல்லயா?!



அதுதான் உங்களுக்கு ஆச்சரியமா இருக்கு” எனக் கந்தன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மழை பொழிய ஆரம்பிந்தது. இதனை ஆச்சரியத்துடனும் ஆர்வத்துடனும் பார்த்தாள் ஆதிரை.



“ஐய்யா Jolly jolly மழ மழ” என துள்ளிக் கொண்டு ஆதிரைவின் கையிலிருந்து நழுவி, வெளியில் ஓட ஆரம்பித்தான் ராஜா. பதற்றத்துடன் அவனைப் பிடிக்க எழுந்தாள் ஆதிரை.



அதற்குள், ஊர் மக்கள் ராஜாவை நிறுத்தி அவனிடம் பேசுவதை பார்த்து ஆச்சரியப் பட்டாள் ஆதிரை.



ஊர் மக்கள் ராஜாவின் ஓட்டத்தைத் தடுத்து, அவனிடம் ஆசையாக, “என்ன ராஜா குட்டிக்கு, மழையில நனையினுமானு” ஒருவனும், “அக்கா உங்கள தூக்கிகலாமா” என இன்னொருவளும், “அங்கிளுக்கு ஒரு முத்தா குடு” என இன்னொருவரும் ராஜாவோடு விளையாட ஆரம்பித்தனர்.



ஒருங்கே இத்தனை நபர்கள் பேசுவதை முதலில் எதிர் பாராமல் திடுக்கிட்ட ராஜா, அவன் அம்மாவை ஒரு பார்வை பார்த்தான். இசைவான அசைவு ஆதிரையின் விழியில் கண்டதும், ஊர் மக்களின் அன்பான செய்கைகளாலும், ஆசையான வருடல்களாலும் அவர்களோடு சகஜமாக விளையாட எத்தனித்தான்.



ராஜாவை இந்த ஊர் மக்கள் ஏற்றுக் கொண்டதை எண்ணி ஆதிரை நிம்மதிக் கொண்டாள்.



‘இதே மக்கள்தான் ஒன்ரறை வருடத்துக்கு முன்பு கையில் கை குழந்தையுடன், கணவன் இல்லாமல் ஒருத்தி டாக்டராக இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வருவதைச் சிறிதும் விரும்பாமல் அருவருப்புடன் பார்த்தனர்.



ஏதேதோ அவள் காது படும்படி பேசி அவள் மனதை வேதனைக்குள்ளாக்கினர். தன்னை இந்த மருத்துவமனைக்கு பரிந்துரைத்த சேகர் அங்கிளையும் பரிகசித்தனர்.’ என நினைத்தாள்.



கூடவே, ‘இப்படி எல்லோரிடமும் நான் கீழிறங்கி நிற்க காரணமாக இருந்தவனைக் கோபத்துடன் திட்டிக்கொண்டு வந்தது, இப்போது நடந்தது போல நினைவில் நிற்கிறது.



ஏதோ இந்தச் சின்ன பையன் கந்தன் தெய்வம் போல ஒருவனாவது தன்னிலை உணர்ந்து, வந்து கையிலிருந்த luggage – ஐ வாங்கி எனக்கு ஒழித்து வைத்திருந்த வீட்டையும் காட்டினான். கூடவே, எனக்கும் என் ராஜாவுக்கும், சேகர் அங்கிள் சொன்னபடி காவலனாகவும் நின்றான்.



வளரும் ராஜாவின் காதில், இவர்கள் ஏதும் சொல்ல கூடாததைக் சொல்லி வைத்துவிட்டால் என்ன செய்வதென்றே, ராஜாவை இவர்கள் யார் கண்ணிலும் காட்டாமலும் தானும் வெளியில் வராமலும், இப்படி வீட்டுக்குள்ளே கிடந்தோம்.



குயிலக்கா மட்டுமே கை குழந்தையோடு தான் தவிப்பது பார்த்து உதவிக்கு வந்தாள். ஆனால் இன்று , இப்படி தன்னையும் தன் ராஜாவையும் இம்மக்கள் ஏற்றுக் கொண்டது வியப்பாக இருக்கிறது!’ என்று நினைத்து ஆச்சரியமுடன் ராஜாவிடம் பேசிக் கொண்டிருந்தவர்காளை பார்த்தாள் ஆதிரை.



பார்வை அங்கிருந்தாலும், அவளது மனம் பழையதை நினைத்து மெல்ல அசைப் போட்டது. ‘ஒரு வருடத்திற்கு முன்பு, வயிற்றில் தலை கீழாக மாறி இருந்தக் குழந்தையையும் , தாயையும் காப்பாற்ற கந்தன் அழைத்துச் சென்ற போதும், இவர்கள் என்னை ஏற்கவில்லை.



அவர்களோடு சண்டையிட்டு அந்தப் பெண் வனிதாவையும் அவள் குழந்தையையும் காப்பாற்றிய பிறகுதான், இம்மக்கள் , என்னை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்.



அப்படிதான் இருக்கும். அதன் பிறகே, என்னிடம் மருத்துவம் பார்க்கவும் இம்மக்கள் வந்தார்கள். என் அக்கறையான மருத்துவ கவனிப்பாலும், ஆருதலான வார்த்தைகளாலும் இவர்கள் இப்படி மாறியிருக்க வேண்டும்.’ என எண்ணினாள் ஆதிரை.



அவள் தன் கடமையைத்தான் செய்தாள் என்ற போதும், பல முறை, உயிர் போக இருந்த ஆட்களை காப்பாற்றிய ஆதிரையை அந்த ஊர் மக்கள் கடவுளாகப் பார்க்க ஆரம்பித்தனர் என்பது அவள் அறியாத ஒன்று.



இதை அறிந்தாலும் ஆதிரை எதுவும் செய்திருக்க மாட்டாள். தான் முதலில் இந்த ஊருக்கு வரும் போது அவர்கள் பேசியது அவள் மனதில் இருந்து மறையவில்லை.



அதனாலே அவள் அவசியம் இல்லாமல் வெளியில் செல்வதையோ, அவ்வூர் மக்களிடம் பேசுவதையோ தவிர்த்தாள். ‘எறும்பு ஊரக் கல்லும் தேயும் என்று பெரியோர்கள் சொல்வது பொய்யாக கூடுமா?’ என்ன?’ என்று எண்ணினாள் ஆதிரை.


ஆனால் இவையனைத்திற்கும் காரணமானவை நினைத்து அவள் முகம் கருத்தது. ‘அவன் மட்டும் நான் சொல்வதைக் கேட்டிருந்தால் என் ராஜா பெயரளவில் மட்டுமல்லாமல், நிஜத்திலும் ராஜாவாக அப்பா அம்மா இருவரின் அன்பையும் அனுபவித்து வளர்ந்திருப்பான்.


அவனிடம் என்னவித்தில் சொன்னாலும், அவள் சொல்வதை அவன் நம்பவில்லையே!? கல்லை விடக் கடினமானவன்.’ என அவள் மனம் மேலும் இந்த நிலைக்கு காரணமானவனைத் திட்டி தீர்த்தது.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "தூரம்
போகாதே என் மழை
மேகமே"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
Yogiwave டியர்
 
Last edited:

eanandhi

Well-Known Member
அத்தியாயம் - 1

View attachment 4814
கொஞ்சிக் கொஞ்சி பேசும் மழலையைப் போல, அந்தக் குருவிகள் அவற்றுக்கு மட்டுமே புரிய கூடிய மொழியில் பரிபாசித்து கொண்டிருந்தன. மாலையா இல்லை நண்பகலா எனப் பிரித்தறிய முடியாத அளவுக்கு மழை மேகங்கள் கருநிற மை தீட்டிக் கொண்டு அந்தச் சின்ன மலை குன்றின் மீது தவழ்ந்து கொண்டிருந்தன. தான் அழகோ , தன் நடனம் அழகோ எனச் சந்தேகிக்கும்படி , அங்கே ஆண் மயில்கள் நடனமாடிக் கொண்டிருந்தன. அவற்றின் நடனத்தில் தன்னிலை மறந்து பெண் மயில்கள் லயித்திருந்தன. அந்த நடனத்திற்கு இசை முழக்கம் போல சின்ன சின்ன இடியின் முழக்கமும், குயில்களின் குக்கூ என்ற ஓசையும், வண்டுகளின் ரீங்காரமும் அச்சூழலில் இருக்கும் யாவையும் , மெய்மறக்கச் செய்தன.

ஒவ்வொரு வருடமும் எழுதப்பட்ட தீர்க்கதரிசனம் போல தைப்பூசத்தினன்று நடக்கும் இக்காட்சி, இவ்வருடமும் பொய்க்கவில்லை. மயில்பாறை கார்த்திகேயன் மலைக்கோவிலுக்கு அருகில் நடக்கும் இதனைப் பார்க்கச் சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரும் கூடிக் கண்டு மகிழ்ந்தனர். ஆதிரையும் அவர்களுள் ஒருவராக நின்று அக்காட்சியைத் தரிசனம் செய்தாள். தன்னையும் மீறி அவள் மனம் பரவசமடைந்தது. அவளுள் அழுத்திக் கொண்டிருந்த மனச்சுமை குறைந்தார் போல உணர்ந்தாள்.

ஆதிரையின் தோள் மீது சாய்ந்து கொண்டிருந்த ராஜாவும், கண்களை அகல விரித்து ஆர்வமுடன் “அம்மா அம்மா, மயிலூ!!” எனப் பாதி புரியாத மழலை மொழியில் ஆதிரையை தட்டிச் சொல்லி ஆர்ப்பரித்தான்.

“ஆமா கண்ணா!. எப்படி இருக்கு? உன்னப் போல அழகா இருக்குல்ல!? “ எனக் கண்களால் தன் ராஜாவை வருடினாள் ஆதிரை.
“நாமா நாமா!!” என ஆமாவை நாமாவாக்கி துள்ளிக் குதித்தான் ராஜா.

மழலையின் முகத்தில் என்றும் இல்லாத துள்ளலையும் ஆர்வத்தையும் பார்த்த பிறகு அவளுக்கு இவ்வளவு நாள் வெளியில் எங்கும் ராஜாவை அழைத்துப் பழகாமல் வீட்டிலே வளர்த்தது தவறோ என எண்ணி வருந்தி, ராஜாவின் ஆர்ப்பாட்டத்தால் வேறு எதுவும் யோசிக்காமல் மயிலின் நடனத்தையும், ராஜாவின் துள்ளலையும் ஒருங்கே ரசித்தாள் ஆதிரை. ‘இரண்டு வயதுக் குழந்தையை கட்டிப் போடவா முடியும்?!! இவ்வயதில் இப்படிச் சுட்டித்தனத்தை எதிர் பாராமல் வேறென்ன அவனிடம் எதிர்பார்க்க முடியும். தன்னை வற்புறுத்தி அழைத்து வந்த தம்பி கந்தனை நன்றியோடு கண்களால் தேடினாள். அவனோ எங்கோ அலைந்து திரிந்து ஒரு நாற்காலியைத் தூக்கிக் கொண்டு வந்து கொண்டிருந்தான்.

அவன் நாற்காலி எடுத்து வருவதைப் பார்த்த பிறகுதான் ஊர் மக்கள் ஆதிரையையேப் பார்த்தனர். எங்கும் வெளியில் வராத டாக்டர் இன்று இங்கே வந்திருப்பதைப் பார்த்து, அதிசயமும், மகிழ்ச்சியும் அடைந்தனர்.

“டாக்டரம்மா சத்தமில்லாம அமைதியா நிக்றீங்களே முதல்ல உட்காருங்க. கந்தா அந்த chair - ஐ இப்படி குடு, போ போய் ஒரு கலரு வாங்கியா
குட்டி ராஜாவுக்கும், டாக்டரம்மாக்கும் குடிக்க” என அன்பான ஆணையிட்டுவிட்டு, மலக்கோயிலின் உள்ளே ஒரு ஓரத்தில் அந்த நாற்காலியைப் போட்டு “இப்படி உட்காருங்கம்மா. இங்க இருந்து பார்த்தாலே நன்றாக மயில்கள் நடனம் ஆடுவது தெரியும்” என்றாள் குயிலம்மா.

இதைக் கேட்ட ராஜா, “அம்மா கலரு கலரு, டெட் கலரு , பச்ச கலரு, நஞ்ச் கலரு “ எனக் கொஞ்சும் மழலையில் சத்தமிட ஆரம்பித்தான்.
“ராஜா! கொஞ்ச நேரம் அமைதியா இரு.” என தன் மகனை அமைதிப் படுத்தி குயிலம்மாவிடமும், கந்தனிடமும் திரும்பி, “அதெல்லாம் வேண்டாம் தம்பி” எனக் கந்தனை அடக்கி, “குயிலு! கொஞ்ச நேரம்தானே நாங்க கிளம்பிடுவோம்.” என அவர்களுக்குப் பேச இடம் தராமல், “ தம்பி, இந்த மயில்கள் நடனம் ஆடுவது நின்று விட்டதே ! ஏன்!? நாம் சத்தமிட்டுவிட்டோமா? அதோடு ஏதோ சொல்லி வைத்தாற் போல, சொல்லி கொடுத்தாற் போல எப்படி இந்த மயில்கள் இந்த இடத்தில் நடனம் ஆடுகிறது. நேரில் பார்க்கும் வரை நான் நம்பவே இல்லை ” என்ற வண்ணம் , அந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள் ஆதிரை.

“இங்க ஒவ்வொரு வருஷமும் இப்படிதான் தை பூசத்தப்போ நடக்கும் அக்கா. ஒரு குறிப்பிட்ட நேரத்துல மயில் நடனம் ஆடும். ஆடுரது நிண்டதும், மழை பெய்யும். அப்படி மயில் நடனமும், மழை பெய்யவும் செஞ்சா, அந்த கார்திகேய சாமி நேர்ல வந்து நம்ம பூஜைகல ஏத்துக்கிட்டாருனு அர்த்தம். அந்த வருடம் முழுக்க மக்கள் சந்தோஷமா இருப்பாங்கனு ஒரு நம்பிக்கை அக்கா. இப்போது மழை பெய்ய போகுது, அதனாலாதான். மயில்கள் நடனம் ஆடுரது நின்னுடுச்சி. நீங்க முத முறையா இத பார்கரீங்க இல்லயா?! அதுதான் உங்களுக்கு ஆச்சரியமா இருக்கு” எனக் கந்தன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மழை பொழிந்தது. இதனை ஆச்சரியத்துடனும் ஆர்வத்துடனும் பார்த்தாள் ஆதிரை.

“ஐய்யா Jolly jolly மழ மழ” என துள்ளிக் கொண்டு ஆதிரைவின் கையிலிருந்து இறங்கி ஓட ஆரம்பித்தான் ராஜா. பதற்றத்துடன் அவனைப் பிடிக்க எழுந்த ஆதிரை, ஊர் மக்கள் ராஜாவை நிறுத்தி அவனிடம் பேசுவதை பார்த்து ஆச்சரியப் பட்டாள்.

ஊர் மக்கள் ராஜாவின் ஓட்டத்தைத் தடுத்து, அவனிடம் ஆசையாக, “என்ன ராஜா குட்டிக்கு, மழையில நனையினுமானு” ஒருவனும், “ அக்கா உங்கள தூக்கிகலாமா” என இன்னொருவளும், “ அங்கிளுக்கு ஒரு முத்தா குடு” என இன்னொருவரும் ராஜாவோடு விளையாட ஆரம்பித்தனர். ஒருங்கே இத்தனை நபர்கள் பேசுவதை முதலில் எதிர் பாராமல் திடுக்கிட்ட ராஜா அவன் அம்மாவை ஒரு பார்வை பார்த்தான். இசைவான அசைவு ஆதிரையின் விழியில் கண்டதும், ஊர் மக்களின் அன்பான செய்கைகளாலும், ஆசையான வருடல்களாலும் அவர்களோடு சகஜமாக விளையாட எத்தனித்தான். ராஜாவை இந்த ஊர் மக்கள் ஏற்றுக் கொண்டதை எண்ணி ஆதிரை நிம்மதிக் கொண்டாள்.

‘இதே மக்கள்தான் ஒன்ரறை வருடத்துக்கு முன்பு கையில் கை குழந்தையுடன், கணவன் இல்லாமல் ஒருத்தி டாக்டராக இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வருவதைச் சிறிதும் விரும்பாமல் அறுவறுப்புடன் பார்த்தனர். ஏதேதோ அவள் காது படும்படியே பேசி அவள் மனதை வேதனைக்குள்ளாக்கினர். தன்னை இந்த மருத்துவமனைக்கு பரிந்துரைத்த சேகர் அங்கிளையும் திட்டினர். அப்படிப் பட்ட தன் நிலைக்குக் காரணமான அவனைக் கோபத்துடன் திட்டிக்கொண்டு வந்தது இப்போது நடந்தது போல நினைவில் நிற்கிறது. ஏதோ இந்தச் சின்ன பையன் கந்தன் தெய்வம் போல ஒருவனாவது தன்னிலை உணர்ந்து, வந்து கையிலிருந்த luggage – ஐ வாங்கி எனக்கு ஒழித்து வைத்திருந்த வீட்டையும் காட்டி, அதன் பிறகு சேகர் அங்கிள் சொன்னபடி காவலனாகவும் நின்றான். அதனால்தான் ராஜாவை இவர்கள் யார் கண்ணிலும் காட்டாமலும் தானும் வெளியில் வராமலும், இப்படி வீட்டுக்குள்ளே கிடந்தோம். குயிலம்மா மட்டுமே கை குழந்தையோடு தான் தவிப்பது பார்த்து உதவிக்கு வந்தாள். ஆனால் இன்று , இப்படி தன்னையும் தன் ராஜாவை இம்மக்கள் ஏற்றுக் கொண்டது ஆதிரைக்கு வியப்பாக இருந்தது. இருந்த போதும், வளரும் ராஜாவின் காதில் இவர்கள் ஏதும் கேட்க கூடாததைக் கேட்டு வைத்துவிட்டால் என்ன செய்வதென்றே , அவள் வெளியிலே வராமல் இருந்தாள்.

ஒரு வருடத்திற்கு முன்பு வயிற்றில் தலை கீழாக மாறி இருந்தக் குழந்தையையும் , தாயையும் காப்பாற்ற கந்தன் அழைத்துச் சென்ற போதும் இவர்கள் இவளை ஏற்கவில்லை. அவர்களோடு சண்டையிட்டு அந்தப் பெண் வனிதாவையும் அவள் குழந்தையையும் காப்பாற்றிய பிறகுதான், இம்மக்கள் , இவளை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். அதன் பிறகே இவளிடம் மருத்துவம் பார்க்கவும் வந்தார்கள். தன் அன்பான கவனிப்பாலும், ஆருதலான வார்த்தைகளாலும் இவர்கள் இப்படி மாறியிருக்க வேண்டும்.’ என எண்ணினாள் ஆதிரை. அவள் தன் கடமையைத்தான் செய்தாள் என்ற போதும் அதன் பிறகு ஆதிரையைக் கடவுளாகப் பார்க்க ஆரம்பித்தனர் அந்த ஊர் மக்கள். இருந்த போதும் தான் முதலில் இந்த ஊருக்கு வரும் போது அவர்கள் பேசியது மனதில் இருந்து வருத்தியதால், அவள் அவசியம் இல்லாமல் வெளியில் செல்வதையோ அவ்வூர் மக்களிடம் பேசுவதையோ தவிர்த்தாள். ‘எறும்பு ஊரக் கல்லும் தேயும் என்று பெரியோர்கள், சொல்வது பொய்யாக கூடுமா?’ என எண்ணி தனக்குள் புன்னகித்தாள் ஆதிரை. அந்தப் புன்னகை கன நேரத்தில் மறைந்து, ‘ஆனால் அவனிடம் என்னவித்தில் சொன்னாலும் அவன் ஏற்றுக்கொலள்ளவில்லையே.!? கல்லை விடக் கடினமானவன். அவன் தான் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தால் எனக்கு இந்நிலை வந்திருக்குமா’ என அவள் மனம் மேலும் இந்த நிலைக்கு காரணமானவனைத் திட்டி தீர்த்தது.
Good start sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top