தூங்காப் புளி

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஒரு புளிய மரத்தின் கதை

ராமாவதாரம் முடிய மூன்று நாள்தான் இருந்தது. அவரை ரகசியமாக சந்தித்துப் பேச எமன் வந்திருந்தான். அப்போது ராமர் லட்சுமணரை அழைத்து "நாங்கள் பேசும் சமயத்தில் யாரையும் அனுமதிக்க வேண்டாம்'' என்று கட்டளையிட்டார்.

அந்த சமயத்தில் கோபக்காரரான துர்வாச மகரிஷி ராமரைத் தரிசிக்க வந்திருந்தார். லட்சுமணர் துர்வாசரை உள்ளே அனுமதிக்க மறுத்தார். கோபம் கொண்ட மகரிஷி, "என்னை அனுமதிக்காவிட்டால் அயோத்தியே_அழிந்து_போக சபித்து_விடுவேன்,'' என்று கூச்சலிட்டார்.

அயோத்திக்கு ஆபத்து நேருமே என்ற பயத்தில் லட்சுமணரும் மகரிஷிக்கு வழி விட்டார்.

ஆனால் கட்டளையை மீறிய தம்பி லட்சுமணர் மீது ராமருக்கு கோபம் எழுந்தது.

"நீ மரமாகப் போ' என்று சபித்தார். அதைக் கேட்டதும் லட்சுமணர் கண்ணீருடன், "அண்ணா.... தங்களின் சாபத்தை எண்ணி நான் வருந்தவில்லை. தங்களுக்கு சேவை_செய்யாமல் எப்படி_ வாழ்வேன்?'' என்றார்.
"லட்சுமணா! #எல்லாம் விதிப்படியே நடக்கிறது. சீதையை காட்டுக்கு அனுப்பிய பாவத்திற்காக நானும் பூலோகத்தில் 16 ஆண்டு அசைவின்றி தவ வாழ்வில் ஈடுபட வேண்டியிருக்கிறது. மரமாக மாறும் நீயே எனக்கு நிழல் தரும் பேறு பெறுவாய்,'' என்றார்.

அதன்படியே திருச்செந்தூர் அருகிலுள்ள ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வாராக ராமர் அவதரித்த போது, லட்சுமணர் புளிய மரமாக நின்று சேவை செய்தார். இந்த மரத்தை "தூங்காப் புளி' என்பர். அதாவது இதன் இலைகள் எப்போதும் மூடுவதே இல்லை. லட்சுமணன் கண் இமைக்காமல்_ராமரைப் பாதுகாப்பதாக_ஐதீகம்.

ஸ்ரீராம ஜெயம்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top