துளி துளி தூறலாய் -1

Advertisement

மாலை வணக்கம் நண்பர்களே,

இந்த கதையின் முதல் அத்தியாயத்தை பகிர்கிறேன். படித்து விட்டு தங்கள் கருத்துக்கள் மூலம் உங்கள் ஆதரவுகளை பகிர்ந்து என்னை மேலும் ஊக்கப்படுத்துவீர்கள் என நம்புகிறேன்.

நன்றிகள் :):):)


தூறல் - 1
 
Last edited:

Raman

New Member
மாலை வணக்கம் நண்பர்களே,

இந்த கதையின் முதல் அத்தியாயத்தை பகிர்கிறேன். படித்து விட்டு தங்கள் கருத்துக்கள் மூலம் உங்கள் ஆதரவுகளை பகிர்ந்து என்னை மேலும் ஊக்கப்படுத்துவீர்கள் என நம்புகிறேன்.

நன்றிகள் :):):)


தூரல்-1

கதைகள் என்றும் வாழ்வின் புதிய
அத்தியாயங்களை தருபவை அல்ல;
அவை பழைய அத்தியாயங்களையே
புதுப்பித்து தருபவை தான்.


இவ்வரிகள் எவ்வளவு உண்மை வாழ்வின் புதிய அத்தியாயங்களே நமக்கு புத்தகங்கள் புதுப்பித்து தருகின்றன அல்லவா. இந்த வரிகளை படிக்கும் போதே அவள் கண்னோடு சேர்ந்து மனதும் கனிந்தது. அவள் ஆருத்ரா 25 வயதுப் பெண். புகழ்பெற்ற ஐ‌.டி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் நவநாகரீக மங்கை. வாரம் முழுவதும் கணினியின் முன்னே அமர்ந்து விட்டு கொண்டு வரும் பணி சுமையை வார இறுதியில் குறைய புத்தக வாசிப்பை பழக்கப்படுத்தியவள்.

"ஏய் ஆரு என்னடி புக்க தூக்கிட்டு உக்கார்ந்து இருக்க" என கோபமாய் கேட்ட தன் தோழியின் குரலில் "ஏன்டி என்னாச்சு" என தலையை நிமிர்த்தி புரியாமல் பார்த்தாள். "என்ன ஏன்டி! இன்னைக்கு சன்டே" என்றாள் அதே கோபத்தோடு. மீண்டும் புரியாத பார்வையையே பார்த்து வைத்தாள் ஆருத்ரா. அவள் பார்வையை பார்த்த மீராவிற்கு உள்ளுக்குள் எரிமலை வெடிப்பு தருணம்.

"அடியே எருமை உன்னை என்ன பண்றது 'உன்னை பொண்ணு கேட்டு வந்தாங்க அந்த மாப்பிள்ளை பயனும் அந்த ஊர்ல தான் வொர்க் பன்றாங்கலாம். இந்த சன்டே மால்ல வச்சு மீட் பண்ண போ' அப்டின்னு உங்க அம்மா போன் பண்ணி சொன்னாங்கல அதாவது நியாபகம் இருக்கா இல்லையா?" என புசுபுசுவென மூச்சு வாங்கிக் கொண்டே கேட்டாள் தோழி மீரா.
அருகில் இன்னும் இரண்டு தோழிகள் வினிதா மற்றும் அணுவும் அதே நிலையில்.


அவர்கள் அனைவரும் ஒரே கம்பெனியில் தான் வேலை செய்கின்றனர். அப்பார்ட்மெண்ட் ஒன்றில் ஒன்றாக தங்கி அலுவலகம் சென்று வருகின்றனர். இதில் மீரா மட்டுமே அவள் கல்லூரி தோழி. மற்ற இருவரும் வேலையிடத்தில் கிடைத்த தோழிகளே. எனவே மீராவோடு அதிக ஒட்டுதல் ஆருத்ராவிற்கு. தன் தோழிகள் கூறிய பின் தான் அவளுக்கு தன் அன்னை கூறியது நினைவு வந்தது. இவள் தான் முதல் நாள் இரவு "நாளைக்கு என்னை யாரோ மால்ல வச்சு பொண்ணு பார்க்க வாங்கலாம் பா. நீங்களும் வாங்க ப்ளீஸ்" என்று கெஞ்சி சம்மதம் வாங்கி இருந்தாள்.

இப்போது மறந்தும் விட்டாள். எனவே தான் தோழிகளும் பொங்கி எழுந்து விட்டனர். அவளும் என்ன தான் செய்வாள் புத்தகத்தை கையில் ஏந்திய பிறகு தான் அவளுக்கு உலகமே மறந்து விடுமே. இதில் எங்கே தன் அன்னையும் அவர் கூறியதும் நியாபகம் இருக்க போகிறது. "ஐயோ சாரி மீரா குட்டி மறந்ததே போய்டேன் டா. என் செல்லம்ல கோபப்படாத இதோ டென் மினிட்ஸ்டா ஓடி வந்தர்ரேன்" என தனக்கு விருப்பம் இல்லை எனினும் அன்னையின் வார்த்தைக்காக கிளம்ப சென்றாள். தன் தோழியிடம் சொல்லியது போல் பத்தே நிமிடத்தில் கிளம்பியும் வந்தும் விட்டாள். "இவளை கல்யாணம் பண்ண போற அந்த புண்ணியவான் ரொம்ப பாவம்டா சாமி" என மற்ற தோழிகளிடம் மீரா தான் புலம்பிக் கொண்டு இருந்தாள்.

அவர்கள் சென்றதும் ஒரு பிரபலமான மால் மற்றும் ஞாயிறு என்பதால் மாலில் கூட்டம் நிறைந்தே இருந்தது.கூட்டத்தில் மெல்ல சுற்றி பார்த்து ஒருவழியாக புட்கோட் வந்தடைந்தனர். "ஹப்பா! ஒரு வழியா உக்கார இடம் கிடைச்சது இல்லனா நம்மலால நின்னுட்டுலா இருக்க முடியாது பா" என்றுவிட்டு தன் தோழிகளை நோக்கி திரும்பி "ஏய் ஆரு என்ன உக்காந்துட்ட போ போய் சாப்பிட எதாவது வாங்கிட்டு வா அந்த அப்பாவி ஜீவன் வரதுக்குள்ள ஏதாவது உள்ள தள்ளுவோம்" என்றாள் மீரா. அவளை பார்த்து சிரித்துக் கொண்டே சாப்பிட வாங்க சென்றாள் ஆருத்ரா.

சிறிது நேரம் சென்று அந்த மாப்பிள்ளை வருண் தன் நண்பர்களுடன் வந்து விட்டான். "ஏய் ஆரு ஆல் த பெஸ்ட் பா பாத்து பேசு என்ன" என தன் தோழிக்கு தைரியம் தந்து விட்டு வேறு இருக்கைக்கு சென்றனர் தோழிகள். " ஹலோ எப்படி இருக்கீங்க" என்று சில சம்பிரதாய அறிமுகம் விசாரிப்புக்கு பின் "உங்கள வீட்ல மீட் பண்ண சொன்னாங்க. நம்ம ரெண்டு பேருக்கும் ஒத்து வந்துச்சுனா ஓகே சொல்லாம்னு தான் உங்க கிட்ட பேச வந்தேன். ஓகே பர்ஸ்ட் நீங்க சொல்லுங்க. உங்களுக்கு என்னலாம் பிடிக்கும். உங்கள பத்தி நான் தெரிஞ்சுக்கிறேன்" என்றான் வந்தவன்.

இவ்வளவு நேரம் ஏனோதானோ என்று இருந்த நம் நாயகி கண்கள் விரிய "எனக்கு புக்ஸ் தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும். உங்களுக்கு பிடிக்குமா" என கேட்டு விட்டு பதிலை கேட்காமல் பேசிக் கொண்டு இருந்தாள். "எனக்கு கிளாசிக் ஆத்தர்ஸ்ல இருந்து இப்ப வரைக்கும் எல்லாம் பிடிக்கும். அதுவும் பாரதிதாசன், புதுமைப்பித்தன் இவங்க கவிதைகளாம் ரொம்ப பிடிக்கும். அப்புறம்" என தான் காலை படித்த புத்தகத்தை பற்றி வரை பேச ஆரம்பித்து விட்டாள் ஆருத்ரா. வேற ஏதாவது பிடிக்குமா என கேட்டும், போதும் நிறுத்தேன் என் முக பாவம் காட்டியும் நிறுத்தாது பேசிக் கொண்டே சென்றாள் ஆருத்ரா.

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அவள் ரசனை மிகவும் ஆழமானது. அதை ஒரு ரசிகனாக கேட்டிருந்தால் வருணிற்கு கண்டிப்பாக ஆருவை பிடித்திருக்கும். ஆனால் வேகமாக ஓடும் இந்த உலகில் கலந்த வருண் தன் இணைக்கும் தன்னைப் போல் வேலை, பணம் தான் பிரதானமாக இருக்க வேண்டும் என எண்ணினான். எனவே ஆருவின் பிதற்றல்களை, ஆம் அவனை பொறுத்த வரை அவளின் ரசனை பிதகற்றல்களே கேட்ட பின் இது ஒத்து வராது என்ற முடிவுக்கே வந்து விட்டான்.

அங்கே தன் தோழியின் முகத்தை பார்த்து விட்டு எல்லாம் சரியாக தான் போகிறது என நினைத்த தோழிகள் எதிரே இருந்தவன் முகத்தை காண மறந்தனர். இங்கே ஆரு பேச்சைக் கேட்டவனோ மனதில் தான் விதியை நொந்தபடி கிடைத்த இடைவெளியில் "மற்றதை வீட்டில் சொல்லி விடுகிறேன், பாய்" என அறக்க பறக்க தன் நன்பர்களுடன் பறந்து விட்டான். அதை புரியாமல் பார்த்துக் கொண்டு இருந்தவளிடம் "ஏய் ஆரு செல்லம் என்ன ஆச்சு டா, என்ன சொன்னாங்க" என தோழி அணு கேட்க, கடைசியாக அவன் ஓட்டத்தை கண்டுவிட்ட மீரா "என்ன பேசுனீங்க" என்றாள் சந்தேகமாய் அவளை அறிந்த தோழியாக.

"அவர் எனக்கு என்ன பிடிக்கும்னு கேட்டார் பா நான் பதில் சொன்னேன். வீட்டில உள்ளவங்கட்ட பதிலை சொல்லிடரேன்னு சொன்னாங்க பா. ஆனா அவங்களுக்கு என்ன பிடிக்கும்னு சொல்லாம போய்டாங்க" என்றாள் ஆரு தோழிகளின் கேள்விகளுக்கு. மீரா "ஐயோ" என நெஞ்சைப் பிடித்துக் கொண்டு உக்கார்ந்து விட்டாள். " ஐயோ போச்சு போச்சு எல்லாம் போச்சு. பாவம் அந்த வருண். அவன் அடிச்சு புடிச்சு ஓடரப்பவே நினைச்சேன் ஏதோ நீ ஏடாகூடமாய் பேசி இருப்பனு" என தன் போக்கில் புலம்ப ஆரம்பித்து விட்டாள்.

பார்த்த தோழிகளுக்கு குழப்பமே மிஞ்சியது. " ஏய் மீரா என்னடி ஒலரிக்கிட்டு இருக்க கொஞ்சம் புரியிர மாதிரி தான் சொல்லேன்" என்றாள் வினிதா. "ஏன்டி இன்னுமா உங்களுக்கு புரியல? அந்த வருண் தெரியாதனமா உனக்கு பிடிச்சத சொல்லு அப்படினு கேட்ருக்கான் டி. அப்ப இவ நம்மட்ட அறுக்குர மாதிரி அவன் கிட்டையும் ரம்பத்த போட்டு அறுத்துட்டானு நினைக்கிறேன். அதான் அவன் அப்படி ஓடுனான். ஆமாவா இல்லையான்னு அவக்கிட்டையே கேளு" என நீ இல்லை என்று சொல்லிடுவாயா இல்லை சொல்லி தான் பாரேன் என வடிவேலு ஸ்டைலில் முறைத்து கொண்டு இருந்தாள் மீரா.

மீராவை முறைத்தபடியே "அப்டிலாம் ஒன்னும் இல்லை. எனக்கு புக்ஸ் பிடிக்கும்னு ,எந்த புக்ஸ் அன்ட் ஆத்தர்ஸ்ல பிடிக்கும்னு தான் சொன்னேன்" என்றாள் ரோசமாக. மீரா மற்ற இரு தோழிகளையும் 'நான் சொன்னேன் இல்ல' என்பதை போல் பார்த்து வைத்தாள். சிறிது நேர அமைதிக்கு பின் " ஏன்பா அதான் அந்த பையனும் ஓடிட்டான்ல. ஆனால் நம்ம வாங்கி வச்ச புட் ஐட்டம்லா அப்படியே இருக்கு அத ஏன் வேஸ்ட் பண்ணனும் அது நம்மை கூப்புடுற மாதிரியே இருக்கு பா. வாங்க சாப்பிடலாம் பீளீஸ்" என்று அழைத்தாள் அணு.

அவளை கொலை வெறியோடு திரும்பி பார்த்தனர் மற்ற மூவரும். பின் "சரி அவன தான் துரத்தி விட்டுடாளே சாப்பாடு என்ன பாவம் பண்ணுச்சு. நமக்கு சோறு தான் முதல்ல முக்கியம். வாங்க போய் சாப்பிடுவோம்" என ஒருமித்த கருத்தை எடுத்து உணவை உண்ண சென்றனர்.

இதுவரைக்கும் அடக்கி வைத்திருந்த சிரிப்பை தோழிகளின் கடைசி கூற்றை கேட்டவுடன் வெளியேற்றி விட்டான் அவன். அவன் வந்ததில் இருந்து பார்த்துக் கொண்டு தான் இருந்தான் தோழிகளின் அட்டகாசத்தை. அதுவும் ஆருத்ரா பேச பேச அந்த வருண் முகம் போன போக்கை பார்த்து சிரிப்பை அடக்கிக் கொண்டு தான் இருந்தான். ஆனால் அவர்களின் கடைசி பேச்சு அவன் சிரிக்க காரணம் தந்தே சென்றது.

அப்போதும் ‌அந்த வருண் அவளின் பெயரை ஆருத்ரா என் கூறிய போது ருத்ராவாய் பதிந்து போனதையும், என்னதான் சிரித்தாலும் ஆருத்ரா மீது அவன் பார்வை ரசனையோடே பதிந்து மீண்டதையும் யோசிக்க மறந்தான். ஒருவனின் மனதில் சத்தமின்றி தூரல் துளியாய் இறங்கியதை அறியாமல் தன் தோழிகளின் கிண்டல்களோடு வெளியே சுற்றி விட்டு வீடு வந்து சேர்ந்தாள் அனைவரின் ஆருவாகிய அவனின் ருத்ரா.
அருமையான ஆரம்பம்.:LOL:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top