தீராத தேடல்... அத்தியாயம் 8

Bharathi Nandhu

Writers Team
Tamil Novel Writer
#1
தீராத தேடல்

‌அத்தியாயம் 8

இந்த உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் ஏதாவது ஒரு வல்லமையை படைக்க கடவுள் தவறுவதில்லை..அந்த உயிர்களில் பெண்களுக்கு மட்டும் நிறைய வல்லமையை கொடுத்துட்டு , அவர்களின் வலியை கண்டு கடவுளே சில சமயம் அவர்களின் துயர் நீங்க நல்லதொரு வழியினை கொடுப்பார்..அதில் ஒன்று தான் கண்ணீரை மறைத்துக் கொள்வதில் மிகச் சிறந்த வல்லமையை கொண்டவர்களாக பெண்கள் இருக்கின்றனர். இதில் தாரா ஒன்று விதி விலக்கு அல்ல என்பது இரவு முழுவதும் அழுத அழுகைக்கான அழுத்தம் எதுவும் இல்லாமல் சாதாரணமாக அவளது விடியல் அமைந்தது..

துருவ்விடம் இருந்து விலக வேண்டும் என்று தீர்க்கான முடிவில் இருந்த அவளை இப்பொழுது மனது பேசும் வார்த்தைகளை கேட்க தயாராகவில்லை..அவளின் அழுத்தம் கண்டு மனம் கூட தடுமாறியது அவளுடைய இறுக்கத்தின் பிடியில்..

அவளை காணும் ஆசை மிகுதியில் வேகமாக காரை ஓட்டிக் கொண்டு ஆசிரமத்தை அடைந்தான்..அவனது கண்களே அவளை தேட அவளோ மாறாக அவனை பின்னிருந்து அவனை அழைத்தாள்..சற்றும் எதிர்பாராத இந்த அழைப்பை எண்ணி உள்ளம் மகிழ்ந்தாலும் கண்களில் தெரிந்த மாற்றத்தில் மனமோ தடுமாறியது..

தாரா , " சார் இன்னைக்கு எங்க போகணும் "

இதுவரை தெளிவற்ற நிலையில் இருந்த மனது அவள் பேசியதும் உறுதி படுத்தியது கண்களில் கண்ட மாற்றம் உண்மையே..அவளை சீண்டும் விதமாக,

துருவ், " ஈவ்னிங் வெளிய போனும்.. இப்போ இங்க தான் இருக்க போறேன் "

தாரா , " அப்போ நான் வேலைக்கு போறேன் சார்.. "

மறுப்பு ஏதும் சொல்லாமல் சரி என்றான்.. அவளின் மன உறுதியை தகர்க்க துருவ்வே போதும்.. இருந்தும் அவளின் மனநிலையை மாற்ற அவளை போக அனுமதித்தான்..தாராவோ அவனிடம் இருந்து வந்ததும் அவளுடைய மனதை அடக்க பெரும்பாடாகியது..அவளின் மன உறுதியை திரும்ப திரும்ப வரவழைக்க முற்பட்டு தோல்வியை தழுவியது..

சூரியன் இங்கிருந்து விடை பெற்று வேறு நாட்டில் உள்ளவர்களை காணும் மிகுதியில் மறைந்து கொண்டே இருக்க புத்துணர்வை உண்டாக்க விடியல் மட்டும் அல்ல மாலையும் ஏற்றது என்பது போல துருவ் அதனை இரசித்து கொண்டிருக்க தாராவோ மனமே இல்லாமல் ஆசிரமத்தை வந்தடைந்தாள்..

இளங்காற்று அவர்களது மேனியை தழுவ காற்றில் இலைகள் மெல்லிய ஒலி எழுப்ப அங்கு நடக்கும் ஆரவாரங்களில் அவர்களது மனம் செல்லாமல் இருவரின் கண்களும் அவர்களின் உள்ளத்தின் மகிழ்ச்சியை நாடிச் சென்றது.. வெவ்வேறு திசைகளில் இருந்த இருவரின் பார்வையும் நொடி நேரத்தில் நேர் கோட்டில் பார்த்துக்கொண்டே இருந்தனர்..இடைவெளிக்கு மிகையுடன் இருந்தாலும் பார்வை மட்டும் அவர்களின் காதலை தெளிவாக தெளிவு படுத்தியது.. கால்களை காயப்படுத்தாமல் அடி எடுத்து முன்னேறி சென்றான்..

அப்பொழுது தாராவை மதர் அழைக்க நிகழ்காலத்திற்கு வந்தவள் அவளின் செயலை எண்ணி அவளையை கடிந்து கொண்டாள்.. மீண்டும் துருவ்வை பாக்க இப்பொழுது இரட்டிப்பு சந்தோஷத்தில் இருந்த பார்வையை அவள் மேல் படற விட்டான்..அவளின் நிலையை எண்ணி துருவ்வின் மனம் கூட அவளுக்காக வாதிட அவளின் நிலையை கண்டு வருந்தினாலும் அவளை உண்மையாக நேசிக்கும் மனமோ மறுகணமே அவளை நேசிக்க வைக்கும் பெரும் முயற்சியில் இறங்கியது..

" தாரா சீக்கிரம் ரெடி ஆகுமா "

" என்னாச்சு மதர் "

" நீங்க எல்லாம் கொல்லிமலைக்கு போறீங்க..துருவ் ஏற்பாடு பண்ணீட்டாருமா ..."

" மதர்..அவர் மட்டும் போகட்டும் "

" நானும் அதே தான் மா‌..பட் அவரு தான் குழந்தைகளையும் கூட்டிட்டு போறேன்னு சொன்னாரு..அவரு சொன்னதும் குழந்தைங்க முகத்துல அவ்ளோ சந்தோஷம்..அத கெடுக்க மனசு இல்லாம நானும் சரினு சொல்லிட்டேன் "

இவ்வளவு சொன்ன பிறகு தாராவுக்கு அவர்களின் சந்தோஷத்தை இரணமாக்க விருப்பமில்லாமல் அவர்களுடன் சேர்ந்து அவளின் பயணமும் ஆரம்பமானது..குழந்தைங்களோ இயற்கையோடு இணைந்து இரசித்து கொண்டிருக்க அதற்கு ஏற்றார் போல இயற்கையும் தன்னுடைய அழகை இழுத்துக்கொண்டு போக‌ இந்த அழகின் இரசனையை இரசிக்க முடியாமல் இருந்தாள்.. மற்றொரு பக்கம் ஜன்னல் இருக்கைக்காக குழந்தைகள் சண்டையிட அதில் தெளிவு பெற்று அவர்களை சமாதானப்படுத்தி அவளுடைய இருக்கையை கொடுத்து வேறு இடத்தில் அமர்ந்தாள்..

தனியாக உட்கார்ந்து இருந்த அவளின் அருகில் துருவ்வின் ஸ்பரிசம் கிடைக்க அவனை பார்த்தாள்..

" ஏன் தாரா எப்போதும் தனியா இருக்கணும் நினைக்கற "

தாரா, " எனக்கு பழகிடுச்சு சார் "

" உன்ன சுத்தி இருக்கிறவங்க கிட்ட இருந்து விலகி நீ தனிமைய தேடி போற..தனிமை எப்பவும் நிரந்தரம் இல்ல உனக்காக நான் இருக்கேன்னு சொல்ற வரைக்கும் " அவளின் கைகளின் பிடியை மேலும் இறுக்கமாக்கினான்..

பிடியை தளர்த்த முடியாமலும் அவனின் பேச்சை கேட்காதவாறு அவளின் பார்வையை வேறு பக்கம் திசை திருப்பினாள்..

இயற்கையின் அழகை விவரிக்கும் வார்த்தைகளில் பச்சை நிறத்திற்கு எப்பொழுதும் தனிச்சிறப்பு..எங்கு பார்த்தாலும் பச்சை வண்ணத்தில் படர்ந்து இருந்த இயற்கை வளங்கள்,
அதனை பாதுக்கும் அரணாக உயர்ந்துள்ள மரங்களும், எப்பேற்பட்ட நோயையும் குணமாக்க உதவும் மூலிகையின் மணமும் காற்றில் பறந்து அங்கு செல்ல விரும்புவர்களின் விருப்பத்தை அதிகரிக்கும் வகையில் இயற்கை எழில் கொஞ்சும் தோற்றத்தில் அவர்களை வரவேற்றது..

குழந்தைகளை வரவேற்கும் விதமாக இளங்காற்று ஆக மாறி அவர்களின் உற்சாகத்தை மேலும் அதிகப்படுத்தியது..வேறு நிலையில் இருந்த தாராவின் மனதும் இப்பொழுது இயற்கையோடு ஒன்றியது..

பழந்தமிழ் நூல்களான சிலப்பதிகாரம் ,
மணிமேகலை , புறநானூறு ,
ஐங்குறுநூறு முதலியவற்றில் கொல்லிமலையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. சுமார் கி.பி 200 இல், இந்தப் பகுதியை கடையெழு வள்ளல்களில் ஒருவனான வல்வில் ஓரி ஆண்டு வந்தார்.வல்வில் ஓரியைப் பற்றி அவர் இரண்டு பாடல்கள் பாடியுள்ளார். கழைதின் யானையார் ன என்னும் புலவர் பாடிய பாடல் ஒன்றும் புறநானூற்றில் உள்ளது.
இராமாயணத்தில் சுக்ரீவன் ஆண்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ள 'மதுவனம்' எனும் மலைப் பிரதேசம் இதுவாக இருக்கக் கூடும் என்றும் சில கருத்துக்கள் நிலவுகின்றன.

துருவ், " ஹோட்டல்ல ஸ்டை பண்ணாலாமா ??? "

" இல்ல சார்..வேணாம்.. இங்க நிறைய வீடு வாடகைக்கு விடுவாங்க.. அங்க ஸ்டே பண்ணா அவங்களுக்கு யூஸ் ஆகும் "

அவனோ அவள் சொல்வதை தலையை சாய்த்து கேட்டுக் கொண்டே புன்னகை சிந்தினான்.. பக்கத்தில் விசாரித்து‌ கேட்டதில் அதற்கு நேராக உள்ள வீட்டை காண்பித்தனர்..அங்கு இருந்த வீடுகளில் தங்க , ஒரு புறம் இரவு உணவு தயாராக இன்னொரு பக்கம் அவர்களின் சிரிப்பு சத்தம் இனிமையாக அந்த இரவில் கேட்டது..தாரா எல்லாவற்றையும் இரசிக்க துருவ்வோ அவளை இரசிப்பதில் மட்டுமே முழு கவனமும் இருந்தது..

இயற்கை சூழல் நிறைந்த பசுமையான இடத்தில் ஒரு வீடு , மாறுபடும் காலங்களை கண் குளிர காண ஒரே ஒரு ஜன்னல்.. கதிரவன் வருவதற்கு முன்பே அதனை வரவேற்க விரும்பும் மலர்கள் துளிர , இனியதாக அமைய எண்ணி விடியலை வரவேற்று எழுந்து வர , மிதமான வெப்பமும் குளிரும் கலந்த காற்று அவளது மென்மையான மேனி மீது படர , அவள் முன்னே புல்லின் நுனியில் இருக்கும் பனித்துளி அவளது பாதங்களை நனைக்க அதில் மெய் மறந்து நின்றவளை காதலோடு துருவ் அழைக்க மெய் சிலிர்த்து அவனை தன்னுடைய விழிகளை கூர்மையாக்கி பார்வையை செலுத்தினாள்..

அவளது கைகளில் தேநீர் கோப்பை அமர்ந்திட , அவளை காதல் கண்களால் பார்க்கும் துருவ்வின் மீதான பார்வையை விலக்கி இயற்கையை மீது படர விட்டாள்..அவளை சற்று எதிர்பாராத நேரத்தில் கன்னத்தில் இதமாக முத்தமிட்டு அவள் திரும்பும் முன்பே அந்த இடத்தை விட்டு
நகர்ந்தான்.அவனின் தீண்டல் அவளை தடுமாறச் செய்தது..துருவ்வோ அவனின் செய்கையை எண்ணி அவனே வெட்கம் பட, " ஆண்கள் வெட்கப்படும் தருணம்.. உன்னை பார்த்த பின்பு நான் அறிந்து கொண்டேன் " என்று யாரோ எழுதிய வரிகள் அவனுக்கு பொருத்தமாக அமைந்தது..

உள்ளூர் ஒருவர் வழிகாட்டியாக மாற அவரை தொடர்ந்து ‌மலையின் அழகை இரசித்தனர்..தாரா குழந்தைகளை சரி பார்க்க தொடங்கி அவர்களை பத்திரமாக தங்கியிருக்கும் இடம் வரும் வரை பாதுகாத்தாள்.. இடையில் துருவ்வின் சீண்டல்களும் தீண்டங்களும் இருக்க , கோப பார்வையில் அவனை பார்க்க அவனோ காதல் பார்வையில் அவளை வீழ்த்தினான்..

மணி பதினொன்றை கடக்க அந்த இடத்தை விட்டு நகர விருப்பமே இல்லாமல் ஆசிரமத்திற்கு செல்ல ரெடி ஆகிட்டு இருந்தார்கள்.. அவர்களில் தாராவை தனித்து கூப்பட அவளோ வர மாட்டேன் என்று சொல்லாமல் செய்து கொண்டிருந்தாள்..வம்பாக இழுத்து அவளை தனியாக பிரித்து கூட்டிக்கொண்டு போனான்..

காதலர்களுக்கே உரித்தான பைக்கின் பயணத்தில் அவர்கள் சென்றுக் கொண்டிருக்க இடைவிடாது கேள்வி கேட்கும் அவளை , அவனோ முதன் முதலாக கனல் பார்வையில் கட்டுபடுத்த அவனின் கனல் பார்வையை தாங்க முடியாமல் தாராவோ அமைதியை கையாண்டாள்.. அவர்கள் வர வேண்டிய இடம் வந்து விட்டது என்பதை பைக்கின் குறைவான வேகமே எடுத்துக்காட்டியது..
அவள் இறங்குனதும் அவளது மென்மையான விழிகளை இவனது வன்மையாக கைகளும் அவளிடம் மென்மையை காட்டியவாறு கண்ணை மூடிக்கொண்டு அவளை அழைத்துக் சென்றான்..

அவனது கைகள் விலகி விழியின் வழியே அவளது மகிழ்ச்சியை உணர அந்த விழிகளையே இமைக்க மறந்து பார்த்துக் கொண்டே இருந்தான்.. அவர்கள் சென்ற இடமோ மலையின் அழகை இரசிக்க இன்னும் ஏதுவாக அமையும் விவ்யூ பாய்ன்ட்.. காலையில் பச்சை நிறத்தில் மட்டுமே காட்சியளித்த இம்மலை இப்பொழுது பல வண்ணங்களில் காட்சியளிக்க அதனை ,

இரசிக்கும் இரசிகையாக

அவள் மாற , அவளை இரசிக்கும்

இரசிகனாகிவிட்டான்..


" ரொம்ப அழகா இருக்கு சார், தேங்க்யூ " மகிழ்ச்சியில் அவளது மனம் ஆர்ப்பரித்தது..

" எப்பவும் இங்க வந்த மலைய மட்டும் இரசிச்ச எனக்கு உன்ன தான்டி இப்போ அதிகமா இரசிக்க வைக்குது "

" சார், ப்ளீஸ் இப்போ அத பத்தி பேசாதீங்க " என்றவள் அவளது பார்வையை வேறு பக்கம் திசை திருப்பினாள்..

" இப்பவே பேசனும்..என்னோட கண்ண மட்டும் பாரு " னு அவளோட முகத்தை கையில் ஏந்தி பார்க்க செய்தான்..கண்களோ தடுமாறி துடிதுடித்து கொண்டே வேறு பக்கம் திசை திருப்ப முயன்றது..

" மனசுக்குள்ள காதல் இருந்தா தான் அவங்க மேல ஒரு விதமான உணர்வு வரும்..உன்ன பாத்ததுல இருந்து இன்னும் அந்த உணர்வு மாறாம இருக்கு.. அப்படி என்னதான் டி மேஜிக் வச்சிருக்க உன்ன பார்த்ததும் இருக்க சந்தோஷமும் , நீ இல்லாத அப்போ இருக்க வருத்தமும் ரொம்ப கொடுமையா இருக்கு டி.."

அவனோ அவளது கண்களை வசியம் செய்ய ஏற்கனவே அவனுக்கு பரிந்துரைத்த மனதும் அவளது அனுமதி இல்லாமையே அவன் பாக்கம் சாய்ந்தது..மூளையோ அமைதியாகி அவளது மனநிலையை சரி செய்ய முயன்றது.. தாராவோ பேச முயல வார்த்தைகள் எல்லாம் காற்றில் கரைந்தது..

" உனக்காக நான் இருக்கேன்.. இன்னும் ஒரு மாதத்துல நம்ம மேரேஜ் நடக்க போகுது..சோ கல்யாண பொண்ணு ரெடிஆ இரு டி..மேரேஜ் ஆகட்டும் அப்பறம் என்ன விட்டு போகாத மாதிரி நானும் மேஜிக் பண்ணுவேன்‌ "

அவன் கூறிய வார்த்தைகள் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் இவ்வளவு கனவோடு இருக்கும் துருவ்க்கு இவளால் உறுதியான முடிவை எடுக்க தடுமாறும் நொடியில் எங்கையே மனதின் ஓரத்தில் ஒட்டி இருந்த குற்ற உணர்வு புகுந்து அவளை மேலும் இம்சிக்க, அவளோ

" ப்ளீஸ் , நான் உங்களுக்கு வேணா...." சொன்ன அடுத்த அவளது இதழை தன்னுடைய இதழால் சிறையாக்கினான்.. வன்மையை காட்டும் அவனோ மென்மையை காட்ட, பெண்ணவளோ அதில் உருகிப் போனாள்.. நீண்ட நேரம் நீடித்த இதழ் முத்தம் அவளின் கை அழுத்தத்தின் வழியாக அவளது உணர்வை உணர்ந்தவன் விடுவிக்க மனம் இல்லாமல் விடுவித்தான்..

துருவ் ,அவளது முகத்தை காண தன்னவன் தந்த முத்தத்தில் கன்னங்களில் சிவப்பு சாயம் உருவாக அதனை மறைக்க வேறு திசையின் உதவியை நாடி கவனத்தை அதன் மீது செலுத்தினாள்..பின்னின்று அவளை வளைத்து கழுத்தில் அவனது முகத்தை புதைத்தான்..

" உனக்கும் என்ன புடிச்சிருக்கு டி..அப்பறம் ஏன் சொல்லமாட்ற " , இப்பொழுதும் அமைதியாக இருக்க,

" எப்படினு கேட்க மாட்டியா ??? "

அவனது வளையத்துக்குள் திரும்பி அவனது முகத்தை பார்க்க ,

" உனக்கு என்ன புடிக்கலைனா, கிஸ் பண்ணும் போது அடிக்கனும் இரசிக்க கூடாது " னு காதல் பொங்க அவளை பார்க்க , அவளோ என்ன சொல்வது என்று புரியாமல் தடுமாறினாள்..

மறுபடியும் அவள கிஸ் பண்ண வரும் போது மறுப்பாக தலையை சாய்த்தாள்..

" இப்போ கூட பாரு வேணாம் தான் சொல்ற‌யே தவிர என்ன தடுக்க தோணலயே " என்றான்..

அவளது மனமோ " இனிமேல் இருந்த இவன்‌ பேசியே அவன் பாக்க சாய வச்சிடுவான் " னு அவன் எதிர்பாரத நேரத்தில் அவனது கைகளில் இருந்து விடை பெற்றாள்..

" டைம் ஆகுது..அங்க குழந்தைங்க எல்லாம் வெய்ட் பண்ணிட்டு இருப்பாங்க..போலாம் "‌ என்றாள்..

" அவங்க எல்லாம் கெளம்பிட்டாங்க..நாம போக லேட் ஆகும்..வா உட்காரலாம் "

"இல்ல இப்பவே போலாம்.. உங்களுக்கு மட்டும் இல்ல எனக்கும் வழி தெரியாது..ப்ளீஸ் போலாம் "

" எனக்கு தெரியாதுனு உனக்கு தெரியுமா ???

" ஆமா.. உங்களுக்கு இந்த ஊர் புதுசு.. இவ்வளவு வருஷம் இருந்தே எனக்கே வழி தெரியல.. உங்களுக்கு ‌" இடையில்

" புதுசா இருந்தா தானே தெரியாது.. ஏற்கனவே பழக்கப்பட்ட இடம்னா ????"

" அப்போ இந்த ஊர் " விழி விரிய கேட்டாள்..

"இந்த ஊர் என்னோட நேட்வ்யூ ஃப்ளேஸ் டி "

" நீங்க சென்னை தானே "

" இது என்னடி கொடுமையா இருக்கு.. சென்னைல இருந்தா சொந்த ஊர் ஆகிடுமா.."

" ஓ... இல்லையா ??? "

" நான் ஆறு வயசுல இருக்கும் போது இங்க இருந்து சென்னைக்கு போய்ட்டோம்.. அதுக்கு பிசினஸ் டெவலப் ஆகவும் அங்கயே செட்டில் ஆகிட்டோம்.. இப்போ மறுபடியும் உனக்காக வந்து இருக்கேன் "

அவன் சொன்னதும் அவள் அமைதியாக ,

" ஓகே தானே "

தாரா, " என்ன "

" இன்னும் ஒன் மன்த் ல மேரேஜ் "

" உங்களுக்கு வேற வேலையே இல்லையா ???.. நாளைக்கு முதல்ல ஊர்க்கு போங்க " னு.. சொல்லிட்டு நடந்தான்..

" மறுபடியும் வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சு.." சத்தமாக சொல்ல அவளோ முறைத்து விட்டு மீண்டும் நடந்தாள்..

" மாமா சும்மா சொன்னேன்டி செல்லம் "

" இப்போ வரீங்களா இல்லையா ???? "

" போலாம் டி தங்கம் " அவளை பின் தொடர்ந்தான்..

மறுபடியும் பயணத்தில் அவளின் உள்ளங்களில் இருந்த ஆசைகள் துளிர் விட அவனது கட்டுக் கோப்பான தோள்களில் அவளது கைகளை வைத்தாள்..அவளது தொடுகையில் மகிழ்ச்சியின் உச்சத்தில் அவர்களது பயணம் ஆசிரமத்தை நோக்கி நகர்ந்தது..

அடுத்த நாள் வரும் நிலையை எண்ணாமல் அவர்களது பயணம் அழகானது.. அந்த விடியல் அவர்களின் வாழ்வை மாற்றுமா ??? இல்லையா ??? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பாக்கலாம்...
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement