தீராத தேடல்... அத்தியாயம் 10

Bharathi Nandhu

Writers Team
Tamil Novel Writer
#1
தீராத தேடல்

அத்தியாயம் 10

தாரா சென்றதும் வெகு நேரம் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருந்த அவனை , அம்மா அழைத்த பிறகே நினைவுகளில் இருந்து மீண்டான்..

" ஏன் டா தாராவ போக சொன்ன..???? "

" ரொம்ப நாள் இங்க இருக்க முடியாதுல " என்று சமாளித்தான்.. அவனுக்கு மட்டும் முன்பே தெரிந்திருந்தால் அவளை நிச்சயம் போக விட மாட்டான்..அவளை விட்டுக் கொடுக்கமால் இவன் போக சொன்னதாகவே அம்மாவிடம் சொன்னான்..

" போடா..எனக்கு தாரா இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்கு " என்று சொல்லிக்கொண்டே அவர் ராஜ்ஜியம் செய்யும் சமையலறைக்குள் நுழைந்தார்..

அவனோ அமைதியாக அவன் அறைக்கு செல்ல, என்றும் இல்லாத மனப்போராட்டம் அவனை பாடாய் படுத்தியது..தாரா அருகில் இல்லை என்பதை நினைக்க நினைக்க கனவாக இருக்க கூடாத என்று எண்ண , மூளையோ அவள் சென்று விட்டாள் என்பதை அழுத்தமாக அறிவுறுத்தியது..

அடுத்த நாளில் உயர் அதிகாரிகளிடம் இருந்து வந்த அவசர செய்தியால் விரைவாக காவல் நிலையத்திற்கு சென்றான்..அங்கே ஓர் அறையில் அனைவரும் டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கும் போது அனுமதி கேட்டு உள்ளே சென்றான்..அப்போ,

" ஆதவ் இதுக்கு மேலையும் இந்த கேஸ் முடிப்பீங்கனு எங்களுக்கு நம்பிக்கை இல்லை..அதோட உங்களுக்கு கொடுத்த டைம் முடிஞ்சிடுச்சு..சோ கேஸ் தற்கொலைனு முடிக்க போறோம்.. இனிமேல் இத பத்தி நீங்க யாரு கிட்டயும் என்கொயரி பண்ண கூடாது "

ஆதவ், " சார்..ப்ளீஸ் ஐ நீட் எக்ஸ்ட்ரா டைம்.. கண்டிப்பா இது தற்கொலை இல்ல சார் ‌"

"போதும்..நீங்க இதுவரைக்கும் சொல்லிட்டு தான் இருக்கீங்க..கேஸ் சம்பந்தமா எந்தவொரு எவிடன்ஸ்ம் கொடுக்கல..இதுல வேற மனநிலை சரியில்லாத பொண்ண வேற டார்ச்சர் பண்ணி இருக்கீங்க.."

" சார்..அவங்க நார்மல்ஆ தான் இருந்தாங்க " கனல் தெறிக்கும் பார்வையில் கோபமாக குரல் உயர்த்தி வார்த்தைகளை கூற,

" நீங்க பேசிட்டு இருக்கறது சீனியர் ஆஃபிஸர் கிட்ட..மைண்ட் டிட்.."

" சாரி சார் " வேறு வழியில்லாமல் கூறினான்..

" இனிமேல் இந்த கேஸ் பத்தின டிஸ்கஷன் கூட நீங்க பண்ண கூடாது.. இப்போ போலாம் "

அவர்களுக்கு நன்றி கூறிவிட்டு வெளியே வந்த சில நிமிடங்களிலேயே கோபம் அவனைச் சூழ, யாருக்கும் அனுமதி அழிக்காமல் அவனுடைய கேபினில் அமர்ந்து நடந்ததை யோசிக்க யோசிக்க, அவனது மனமோ அவன் சந்தேகப்படுவதை உறுதிப் படுத்த எதுவும் செய்ய முடியாத சூழ்நிலையில் இருந்தான்..

இரவில் வெகு நேரத்திற்கு பிறகு ஆதவ் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்ல, அம்மாவோ எப்பொழுதும் போல அவனுக்காக ஹாலில் வெய்ட் பண்ணிட்டு இருக்க, எப்போதும் போல அக்கறையுடன் சில அர்ச்சனை செய்ய அவரும் சிரித்துக்கொண்டே வாங்கிக்கொண்டு அவனுக்கு உணவு பரிமாறினார்..

" இனிமேல் சீக்கிரம் தூங்கல..நான் பேச மாட்டேன் "

" அப்போ நீயும் சீக்கிரமே வாடா.."

" வர வர ரொம்ப அடம் பண்றீங்க..தாரா சாப்பிட்டாளா..?? " அவள் இல்லை என்பதை உணராமல்,

" ஆதவ்..தாரா இல்லப்பா.." என்று சோகமாக சொல்ல, அவர்களின் சோகத்தை மாற்ற,

" மா..அவ கிட்ட பேசுனேன்.. சீக்கிரமே நம்மள பார்க்க வரேன்னு சொன்னா.." என்றான் பொய்யாக..

" அவ வர அப்போ வரட்டும் நாம நாளைக்கு போய் பார்க்கலாம் டா.. எனக்கு அவள பார்க்கனும் ஆசையா இருக்கு டா"

அவரின் உணர்வுகளை புரிந்த அவனோ அதை ஆமோதித்தான்.. அவனுக்கும் தாரா சென்ற நாளில் இருந்து இதுவரை அவளிடம் எந்தவொரு அழைப்பும் இல்லாமல் இருக்க இதுவே சரியான தருணம் என்று அவளை பார்க்க போகும் நாளை முடிவு செய்தனர்..

ஆழ்ந்த நித்திரையில் இருந்த அவனை ஏதோ சத்தம் கேட்டு கண் விழிக்க அவனறியாது தாரா அறைக்கு சென்று பார்க்க, அங்கே வெற்று அறையே அவனை வரவேற்றது.. யாரேனும் வந்து இருப்பாரோ..??? என்ற சிந்தனையில் உள்ளே செல்ல சந்தேகத்தை உறுதி செய்யும் விதமாக சில விஷயங்கள் தென்பட அமைதியாக அறையை நோட்டமிட்டு வெளியேறினான்..

தன் கடமையை சரியாக செய்ய சூரியன் மெல்ல மெல்ல மேகத்தில் இருந்து வெளி வர, இதற்காகவே காத்திருந்த பல பேர் அவர்களது கடமையை செய்யத் தொடங்கினார்..

எப்பொழுதும் இல்லாமல் லேட் ஆக எழுந்து கீழே வர , அங்கே அவனுடைய அம்மா தயாராகி இருக்க , அவனைக் கண்டதும் வேகமாக ரெடி ஆகி வர ஆணையிட்டார்.. போகும் வழியில் அவளுக்காக பழங்களை வாங்கி கொண்டு கெளம்ப , அவளுடைய வீட்டை அடைய மூன்று மணி நேரம் ஆகியது..

அவளுடைய வீட்டிற்கு வந்ததும் ஆதவ் அம்மாவோ அவளை காணும் ஆவலில் சிறு குழந்தையாக மாறிப் போனார்.. உள்ளே சென்ற அவர்களை, வரவேற்க சிவ சுந்தரம் மட்டுமே இருந்தார்..அவர்களை கண்டதும் இன்முகத்தோடு வரவேற்று அமர வைத்தார்..ஆதவ் அம்மா,

" தாரா எங்க...??? "

சிவ சுந்தர், " உங்க கிட்ட சொல்லலையா..??? துருவ்வோட ப்ரண்ட்ஸ் எல்லாரும் அவங்க வீட்டுக்கு இன்வைட் பண்ணி இருக்காங்க ‌.சோ அவன் கூட மும்பை போய்யிருக்கா.."

அதனைக் கேட்டு ஆதவ் அம்மாவின் முகமோ வாட, ஆதவ் " இல்ல சார் என்கிட்ட சொன்ன‌.. அதுக்குள்ள பார்க்கலாம்னு இருந்தோம்..எப்போ கெளம்புனாங்க..???"

சிவ சுந்தர், " நைட் தான் போனாங்க.."

ஆதவ் , " ம் சரிங்க.. அப்போ நாங்க கெளம்பறோம்.."

" அட போலாம் இருங்க.. இன்னும் கொஞ்ச நேரத்துல என்னோட மனைவி வந்துடுவாங்க.."

" இல்ல சார் வேலை இருக்கு.. இப்போ நாங்க கெளம்பறோம்..தாரா இங்க வந்ததும் சொல்லுங்க.. மறுபடியும் உங்கள பாக்க வரோம்.."

" உங்க ஃப்ரன்ட்அ பாக்க முடியாத சூழ்நிலை ஆகிடுச்சே.."

" பராவல்ல..நாங்க வரோம் " என்று அவரிடம் இருந்து விடைபெற்று வந்தனர்..

வாசலைத் தாண்டியதும் தாரா, உள்ளே தான் இருக்கிறாள் என்பதை மனம் உணர்த்த, அப்படி இருந்தால் இவர் ஏன் பொய் சொல்ல வேண்டும் என்று தனக்கு தானே சமாதானம் செய்து வெளியே வரும் அவனை வெகு நேரமாக யாரோ பார்ப்பதாக தோன்ற அவனது பார்வை மேலே இருந்த அறையை நோக்க, திரைச்சீலை ஆட சற்றே சிந்தித்தவன் அதன் பக்கத்தில் யாரோ இருக்க கூடும் என்பதை மட்டும் மூளை ஆழமாக பதிவு செய்தது.‌.இருந்தும் முன்னேற விருப்பமின்றி நகர்ந்தவன் சிறிது தூரம் போக மறுபடியும் அவ்விடத்தை பார்த்தவன் அவனது கண்களை நம்பாமல் மறுபடியும் அதே இடத்தைப் பார்க்க, அங்கே ஒரு பெண்ணின் நிழல் உருவம் திரைச்சீலையின் முன்புறம் அப்பட்டமாக தெரிய , அவனது மனமோ அவன் பார்த்தது உண்மை என்பதை இடைவிடாது உணர்த்தியது.. ஏனெனில் அவன் பார்த்தது தாராவே தான்..அவள் ஏன் இவர்களைப் பார்க்க கூட வரவில்லை ஒருவேளை என்னிடம் கோபம் கொண்டதனால் என்னவோ..??? அப்படியே இருந்தாலும் அவன் மீது கோபம் பட்டாலும் அவனது அம்மா மீது என்ன கோபம்..???

அவள் வீட்டுக்கு வந்த நாள் முதலே அவளுக்கான கவனிப்பு அதிகமாகவே இருந்தது.. காலையில் கூட தாராவை பார்க்க போலாம் என்று சொன்னதும் சிறு குழந்தையாக மாறி அவளைக் காணும் ஆவலில் வந்தவரை நேராக பார்க்க விருப்பமில்லாமல் இப்படி ஒழிந்து பார்க்க வேண்டிய அவசியம் என்ன ??‌ என்று மனம் குமற‌, இதைச் சொன்னால் அவரது மனம் துடியாய் துடிக்கும் என்பதை உணர்ந்த பின் எதுவும் கேட்காமல் அவ்விடத்தை விட்டு வெளியேறினார்கள்..

அம்மாவை வீட்டில் இறக்கி விட்டு அவனது வேலையை பார்க்க சென்றான்..அங்கே வேலையை கவனிக்க முடியாமல் மனமோ உறுத்த அதில் இருந்து மீண்டவன் அடுத்த கட்ட நிலையை நோக்கி நகர்ந்தான்..அவனது கேபின்க்கு அடுத்த கேஸ்க்கான ஃபைல் வரவும் அதனை ஆராயத் தொடங்கினான்..அதை முடித்ததும் கேபினை விட்டு வெளியே வரும் நேரம் அவனின் மொபைலைக்கு அவனுடைய அம்மா அழைத்திருந்தார்..

" ஆதவ் வர லேட் ஆகுமா டா..??"

" இல்லமா.. சொல்லுங்க..நான் வேலையை முடிச்சிட்டேன் "

" மூட்டுவலிக்கு ஆயில்மெண்ட் வேணும் பா.. வாங்கிட்டு வா.."

" சரிமா.‌.வாங்கிட்டு வரேன்..ரொம்ப நேரம் சாப்படமா வெய்ட் பண்ணாதீங்க.."

" சரிடா.. சீக்கிரம் வா.." என்று கட் செய்திட, வண்டியை நேராக மெடிக்கல் ஷாப்பிற்கு சென்றான்..அவனுக்கான தேவை முடிந்ததும் காரை ஸ்டார்ட் செய்த போது, பின்னாடி வரும் வாகனங்களை கவனிக்க முன்னாடி இருந்த கண்ணாடியை பார்க்க அவன் மீதான பார்வையை விலகாமல் சந்தேகத்துடன் ஒரு ஜோடி கண்கள் அவனை பார்க்க, அதனை அறிந்து கொள்ள அவர்கள் நின்ற இடத்திற்கு சென்றான்..

" மேடம் ஏதாவது பிரச்சனையா..?? "

அந்த பெண்ணோ திருதிருவென முழிக்க, அதனை உணர்ந்தவன்

" பயப்படாதீங்க..நான் போலிஸ் தான்.. ஏதாவது என்கிட்ட சொல்லனுமா..??? "

அவளுடைய விழி விரியவே, அதன் வழியே அவனிடம் ஏதோ பேச நினைக்கிறாள் என்பதை உணர , அதே நேரம் அவள் நினைத்ததை அவன் கூற சில நொடிகளில் சிலையானாள்..

" மேடம் " என்று அழைக்க, அதில் உணர்ந்தவள் அவனிடம் சொல்லலாமா..‌??? வேண்டாமா...?? நினைக்க, அவளின் முகம் வழியே அதையும் உணர்ந்தவன்,

" தயங்காம சொல்லுங்க.."

அவன் கூறியதும் தீர்க்கமான முடிவுடன் அவனிடம் நடந்ததை அவள் விளக்க, இப்பொழுது தலை சுற்றுவது ஆதவ் முறையானது..இதை அனைத்தும் கூறியவள் அவள்தான் இவை அனைத்தும் சொன்னாள் என்பதை எக்காரணம் கொண்டும் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கெஞ்சி கேட்டு வந்த சுவடு அறியாமல் விடைபெற்றுச் சென்றாள்..

அவள் கூறிய பின்பு மனதில் இருந்த ஏகப்பட்ட குழப்பத்திற்கான விடை தற்போது தெரிய வரை செய்வதறியாது திகைத்து போனான்.. வீட்டை அடைந்தும் கூட குழப்பத்தோடு இருந்த அவனை கவனிக்க தவறவில்லை அவனுடைய அம்மா..

" ஆதவ் என்னப்பா ஆச்சு..முகமே சரியில்ல "

" ஒன்னும் இல்லமா..கேஸ் பத்தின டென்ஷன்.. வாங்க சாப்படலாம் பசிக்குது.." என்று பேச்சை மாற்றியவன் , பிள்ளையின் பசியை போக்க நிறைய உணவுகளை அவனுடைய தட்டில் வைத்தார்..

வேகமாக உண்டு முடித்தவன் தாரா இருந்த அறையில் ஆராயத் தொடங்கினான்..எந்த தடயமும் கிடைக்காமல் திரும்பிய அவனை குப்பைத்தொட்டி ஒருமுறை என்னையும் சோதித்து பார் என்றது..அதனை ஆராய்ந்தவன் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய வெறும் ஐந்து அல்லது ஆறு பேப்பரே ஒட்டி இருக்க அதனை கொட்டியவன் , ஒன்றோடு ஒன்று சேர்க்க முயல அதில் பாதி பேப்பர் இல்லாமல் போக, சில நாள் முன்பு அவள் அறைக்குள் நடந்ததை எண்ணி மனம் நகர்ந்தது..

தாராவை பார்க்க மனம் போக சொல்ல , இந்த நேரத்தில் செல்வது சரியாகாது என்றும் , அவளுடைய மாமனாரே மும்பை சென்று விட்டாள் என்று சொல்லியதை நம்பாமல் அவர்கள் முன்னாடி போனால் என்ன நினைப்பார்கள் என்று மனம் ஆராய , மூளையோ அவர்கள் தான் அவள் அங்கே இருப்பதை மறைத்து பொய் சொன்னார்கள் என்று உரைக்க,இதற்கு மேலும் தாங்காமல் அவளைக் காணும் ஆவலில் வேகமாக கீழே வந்து காரை எடுத்துக்கொண்டு அவளின் வீட்டை நோக்கிச் சென்றான்..

ஆரவாரமற்ற சாலையில் சில மணி நேரம் சென்றதும் எங்கிருந்தோ வந்த பெண் சாலையின் நடுவே ஓட, தீடிரென வந்ததால் தடுமாறி சுதாரித்து சிறிது இடைவெளி விட்டு ப்ரேக் பிடித்தான்..கீழே இறங்கும் நேரம் சில ரவுடிகள் தூரத்தில் செல்ல , அந்த பெண்ணை தேடி வந்தவர்கள் என்பதை உணர்ந்த பின்பு அவளைத் தேடிச் சென்றான்.. ஆனால் அங்கே அவனை மேலும் அதிர்ச்சியாக்க கால் மற்றும் கைகளில் சிராய்ப்பு காயங்களோடு தாரா நின்றிருக்க அவனையே நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டு இருந்தான்..

சிறிது நேரத்தில் அவளின் நிலை அறிந்து அவளை கூட்டிக்கொண்டு வீட்டிற்கு வந்தான்..அங்கு வரும் வரை தாரா குனிந்த தலை நிமிராமல் இருந்தாள்..அவளை இறங்கச் சொல்ல, எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க அவளை வேகமாக இழுத்துக்கொண்டு வீட்டின் உள்ளே சென்றான்..அதே நேரம் ஆதவ் அம்மா தண்ணீரை எடுக்க கிட்சன் பக்கம் வந்தவர் காரின் சவுண்ட் கேட்டு ஹாலிற்கு வரவும் , ஆதவ் அவளை இழுத்துக்கொண்டு வருவதும் சரியாக ஆக அமைத்தது..

" ஆதவ்..ஏன்டா இப்படி இழுத்துட்டு வர "

" மா.. அமைதியா இருங்க " என்ற கோபத்தில் கத்த..அந்த சத்தத்தில் தாராவும் பயந்து போனாள்..அவரோ தாராவை பார்த்ததும்,

" தாரா என்னாச்சு மா.. கையில அடிப்பட்டு இருக்கு " என்று அருகில் வர அவரை தூரத்தில் இருக்கும் படி சைகை செய்தான்..

" தாரா என்னாச்சு " கோபத்தின் உச்சியில் கேட்க, பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தவளை விடாது அதையே கேட்க , அவளும் அமைதியாகவே இருந்தாள்..அவனோ,

" இப்போ சொல்ல போறீயா..?? இல்லையா..?? " என்று அறைந்ததில் திணறி கீழே விழுந்தாள்..

" ஆதவ் " அவனின் அம்மா குரல் உயர்த்த.‌.

" நீங்க அமைதியா இருங்க‌.. இவ நல்லா இருக்கானு நாம நிம்மதியா இருந்தோம்..ஆனா இவள ரவுடி எல்லாம் துரத்தராங்க..நாம போன அப்போ வீட்ல இருந்துட்டே இல்லைனு பொய் சொன்ன..??"

அவன் கூறியதை கேட்டு அதிர்ச்சியாக‌, அவனோ விடாப்பிடியாக அவளது முகத்தை நிமிர்த்தி,

" என்ன தான் டி.. உன்னோட லைஃப்ல நடந்துச்சு..இப்போவாது சொல்லு.."

அவனோ கோபத்தில் பேச, இவளோ அமைதியாக அழுக அதில் மேலும் சினமுற்றவன்,

" உன்கிட்ட ஏன் கேட்கனும்..உன்ன இங்க இருந்து கூட்டிட்டு போனாங்களே துருவ் அப்பா கிட்ட கேட்கறேன்.." அடுத்த நொடியே பேசியவள்,

" இல்ல வேணாம் யாரு கிட்டயும் கேட்க வேணாம்.." என்றாள். அழுகையோடு..

அவள் பேசியதும் சற்றே கோபத்தை குறைத்து,

" அப்பறம் ஏன் இந்த டைம்ல அதும் ரவுடிங்க கிட்ட இருந்து ஓடி வந்த..???"

" என்னால யாருக்கும் பிரச்சினை வேணாம்..ப்ளீஸ் இத பத்தி கேட்காதீங்க "

அவளை அவனது முகத்திற்கு நேராக பார்க்க வைத்தவன்,

" ஏன் இங்க இருந்து போன...??
இப்போ மட்டும் சொல்லல..உன்ன காயப்படுத்தியதற்காக உன்னோட மொத்த குடும்பமும் கம்பி எண்ணணும் "

" ப்ளீஸ்..என்ன விடுங்க நான் எங்கயாவது போறேன்‌.."

" உன்ன விட்டா தானே போவ.. ஒழுங்கா உண்மைய சொல்லு " என்று அவளது கைகளை அழுத்தியவன், வலி தாங்காமல் கத்த மேலும் பிடியை இறுக்கினான்..அவனது செயலில் ஆதவ் அம்மாவோ பதற , அதற்கு மேலும் முடியாமல்

" என்னால உங்களுக்கு ஏதாவது ஆகிடும்னு தான் உங்கள விட்டு போனேன்..ஏன்னா.???? " என்று வலியில் மட்டுமல்ல பயத்திலும் உதடுகள் துடிக்க , இப்பொழுது பிடியை தளர்த்தியதும் அவள் அழுக,

" ஏன்னா...????? "

" ரக்ஷனா மாதிரி உங்களுக்கும் ஏதாவது ஆகிட்டா...?? " என்று திணற மேலும் எதுவும் சொல்ல முடியாமல் மண்டியிட்டு முகத்தை மூடி அழுதாள்..

" அப்போ ரக்ஷனாவா..??? "

" ஆமா..நான் தான் கொலை பண்ணேன் " என்று கதற,

இப்பொழுது ஆதவ் மட்டும் அல்ல ஆதவ் அம்மாவிற்கு அவள் கூறியதில் சிலையாகினர்...


அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்....
 
Advertisement

Sponsored