தீராத் தீஞ்சுவையே..48

Advertisement

Yazh Mozhi

Active Member
தீராத் தீ____48

தெவிட்ட தெவிட்ட இவள் காதலைக் கொடுத்திருக்கிறாள்.. இனியும் கொடுப்பாள்....கொடுக்கிறாள் ...தீராத தீஞ்சுவையாக என்னுள் திளைத்து காதலை நிரப்புகிறாள்..

இந்த அன்பிற்கா அன்று துரோகம் செய்ய துணிந்தேன்... எதைக் கொண்டு இதைத் துடைத்து இவளுடைய அன்புக்கு ஈடு செய்வேன்... கேள்விளே நிறைந்து வழிந்தது... மனதில்..
உண்மையெல்லாம் சொல்லி மன்னிப்பு கேட்க ஒரு பத்து நிமிடம் போதும் ஆனால் அது இன்னும் அவளுடைய உடல்நிலையை மோசமாக்கிவிட்டால்… வேண்டாம் என்று முடிவு கட்டிவிட்டார்… இந்த முடிவு அவருடையதாக இருக்கலாம்… ஆனால் காலம் முடிவு செய்ய வேண்டும்… முக்கியமாக நேத்ரா தான் முடிவா இல்லையா என்று முடிவு செய்ய வேண்டும்… அதை மித்ரன் அறிந்திருக்கவே இல்லை...
அவருடையக் கைகள் தானாக இறுக்கிக் கொண்டது தோள் சாய்ந்த தன் காதலை....
இமைகள் சூடான இரு சொட்டு கண்ணீரை வடிக்க..... நேத்ராவின் உச்சந்தலையில் அழுந்த பதிந்து மீண்டது மித்ரனின் ஈர உதடுகள்....
இந்த கண்ணீர் லட்சம் சாரிகளுக்கு சமமாககுமே... இந்த முத்தம் கோடி காதல் கணங்களை கொண்ட நீண்ட இரவாகுமே....
கோவம் எரிமலைக் குழம்பாக உள்ளே கொதித்தாலும் மித்ரனின் கண்ணீருக்கு இணையாக நேத்ராவால் சமன் செய்ய முடிவது எப்போதும் காதல் மட்டும் தான்… அவன் கண்ணீர் அவன் கோவம் அனைத்தும் முதல் நாள் போல இந்த இருபத்து ஐந்து வருடங்கள் கழித்தும் அவளுக்குள் அதே மாதிரியான உணர்வைத் தான் கொடுத்தது…

அவனுடையக் கண்ணீரைத் தாங்க முடியாமல் அவளே இப்போது சமாதானக் கொடி பிடிக்க வேண்டி இருந்தது...
இது போதும் எனக்கு.... நேத்ராவின் மனம் நிறைந்து விட்டது.... கைகளை ஆதூரமாக பினைத்துக் கொண்டு தோள் சாய்ந்திருக்கும் இக்கணம் போதுமானது .... என் இத்தனை வருட இரனத்திற்கு ...... என்றது நேத்ராவின் மனம்.....

ஆனால் மித்ரனுக்கு போதாதே..... அவருடையத் தேடல் நிறையவில்லையே.....

அவருக்கான பதில் இதோ.... அவர் அருகிலேயே உள்ளது... அதை யார் அவரிடம் சொல்வது...... அவர் கைகளுக்குள்... தோள் வளைவிற்குள். தீராத தெவிட்டாத காதலை மட்டுமே யாசகம் வேண்டி தோள் சாய்ந்து கிடக்கிறது....

இப்போது புரிந்துவிட்டது.... மித்ரனுக்கு .. இவளுடைய தேவை எல்லாம் என் காதல்... இவளுடைய காதலெல்லாம் நான் மட்டுமே... எனக்காகவே வாழ்வின் பல சந்தோஷங்களை ஒதுக்கிவிட்டு ஓய்ந்து கிடந்திருக்கிறாள்.....

எங்களுக்குள் விதைத்த காதலை நான் தான் மறந்து விட்டிருக்கிறேன்.... இதோ...இவள் உள்ளுக்குள் விருட்சமாக வளர்த்து வைத்திருக்கிறாளே ....

அவளுக்கும் அதேக் காதலை தெவிட்ட தெவிட்ட மீதமுள்ள காலமெல்லாம் புகட்டியாவது என் பிழைகளை நேர் செய்ய வேண்டும்... ஆம் செய்தே ஆக வேண்டும்... இதோ... இன்றே இப்போதே...

மௌனத்தை உடைத்து மித்ரனே கேட்டு விட்டான்...அவனுடைய செல்ல அம்முவிடம்....

அப்போ உனக்கு.... ????ஏன் உனக்கு நான் ஹீரோ இல்லையா...???

எனக்கு நீங்க ஆண்டி ஹீரோவாகி 20 வருஷம் ஆச்சு...

அது சரி...

இப்போ கூட மாமாவ காலேஜ் பொண்ணுங்களே சைட் அடிக்கும் நீ என்டான்னா என்னை ஆன்டிங்களுக்கு ஹீரோனு சொல்ற .....
தீப்பார்வையால் முறைத்தாள்...
சரி சரி..... சும்மா.....

ம்ம்ம்.... சரி ......நான் என்ன பன்னா மறுபடியும் உன்கிட்டயும் எனக்கு ஹீரோ ரோல் கிடைக்கும்
எதுவுமே பன்னாதீங்க அதுவே போதும்...

ம் மாமா வேணும்னா ..... மறுபடியும் லவ் பன்னிட்டு கல்யாணம் பன்னிக்கட்டுமா...??? அப்போ எதாவது வாய்ப்பு இருக்குமானு பாப்போமா...

ஆமா ... முதல்ல பன்ன கல்யாணத்துக்கே நீங்க ஹனிமூன் கூட கூட்டிட்டு போகல இதுல இன்னொன்னு வேறையா....

ஏய் அப்போ போகலனா என்னடி... வா அறுபதாம் கல்யாணம் முடிஞ்சதும் சேர்த்து டபிள்...ட்ரிபில் ஹனிமூனா போலாம் டி...

ம்ம்ம் ... போடா... அதுக்கு பேரு ஹனிமூன் இல்லை யாத்திரை... அப்போ ஊட்டி..... கொடைக்கானல் போக முடியாது.... காசி.... இராமேஸ்வரம் தா போகனும்....அதுக்கு வேற நான் இன்னும் 12 வருஷம் வெயிட் பன்னனுமா...

நீ ஆண்டி ஹுரோ இல்ல உனக்கு லா வில்லன் ரோல்கூட கிடையாது போ....

ஏய் சரி சரி கோவப்படாத... மாமா ...மிஸ் பன்னதுக் கெல்லாம் சேர்த்து லவ் பன்ன வேண்டாமா ....!!!!அதான் கொஞ்சம் டைம் எக்ஸ்டண்ட் பன்னேன் டி பொண்டாட்டி...

ம்ம்ம். .....நம்பிட்டேன்....

சரிவா நம்புற மாதிரி மாமா உனக்கு இப்போவே புரூஃப் பன்றேன்..

போங்க எனக்கு தூக்கம் வருது நாளைக்கு பசங்களுக்கு சாப்பாடு கட்டனும் ஸ்கூலுக்கு ஒரு விசிட் போயிட்டு அட்டன்டன்ஸ் போடனும்... நான் தூங்க போறேன்....

பேச்ச மாத்தாத டி... நாளைக்கு கதைய நாளைக்கு பாக்கலாம்... நான் வில்லனா ஹீரோவானு ஒரு ரிகர்சல் பாத்துட்டு சொல்லு ... ....வா....வா..... ....
என்ன ரிகர்சல்…
சொல்றது என்ன காட்றேன்….
என்ன ...
இப்போ நீ தூங்க போர.....
நான் உன்னை தூக்க போறேன்......

என்னது ஓய்….அந்த மர ஸ்கேல் எங்க வச்சேன்.... பாத்தீங்களா.....

அது சும்மா லுலுலுவாய்க்கு டா... தங்கம்....ஒரே தூக்கமா வருது பொண்டாட்டி... வா தூங்க போலாம்...

அது...
அதற்குள் நினைத்ததை நடத்தி இருந்தார் மித்ரன்...
டேய்... டேய்... இந்த வயசுக்கு மேல தூக்குறேனு கீழ போட்றாத டா கீழ விழுந்து எலும்பு உடைஞ்சா தேராது.... டா...
யாருகிட்ட.... பேசாம வாடி...

சொன்னாக் கேளுடா டியூப் லைட்டு....

அப்படி உடைஞ்சாலும் .. இப்படியே மாமா காலம் பூரா தூக்கிட்டு போறேன்டி....என் ... செல்ல ....உருள...

சுபம்

தொலைந்து போன காதலையெல்லாம் அவர்கள் தேடித் தேடி ஈட்டி இணைந்து இன்று போல் என்றும் தீராக் காதலோடு பெருவாழ்வு வாழ வாழ்த்தி விடை பெறுவோம்…பாகம் _2 முடிந்தது..
முகிலன் யாழினியின் காதல் மற்றும் நேத்ராவின் உள்ளத்தை அரிக்கும் அந்த உண்மை மித்ரன் மறைத்து வைத்த அந்த துரோகம் யாழிசையின் ஒதுக்கம் அனைத்திற்குமான தீர்வு பாகம் _3 இல் தொடர்ந்து...

நன்றி.....

அதுவரை உங்களிடமிருந்து விடை பெறுவது யாழ் மொழி என்கிற….
___ காயத்ரி வினோத் குமார்....
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
யாழ் மொழி @ காயத்ரி வினோத் குமார் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top