தீராத் தீஞ்சுவையே...46

Advertisement

Yazh Mozhi

Active Member
தீராத் தீ___46

மருத்துவ மனைக்கு வெளியே நின்ற செல்வத்திற்கும் ... அன்புச் செழியனுக்கும் இருப்பு கொள்ளவில்லை....

இதோ ஒட்டுமொத்த வீடும் நேத்ரா கண்விழிக்கும் தருணத்துக்காக காத்திருந்து கிளம்பி வந்துவிட்டது.... இப்போது பூனைக்கு யார் முதலில் மணி கட்டுவது என்ற கதை தான்....

ஒரு வழியாக யாழிசையே உள்ளே நுழைந்தாள்... இவர்களுக்கான துருப்புச்சீட்டாக....

ஏதோ உரையாடல் உள்ளே நுழைகையில்... தன் இருப்பைத் தெரிப்படுத்த வேண்டி கேட்டுவிட்டாள்.....

எப்போ நியாபகம் வரும்...

எப்பவுமே வராது....

என்ன வராது....

வா இசைமா... என்ன இங்க... ஸ்கூல் போகலயா...

ம்மா... நீ இல்லாம செம்ம போர்... இப்படி ஹாயா வந்து ஹாஸ்பிடல் ல படுத்துட்டு நான் என்னமோ டூர் வந்த மாதிரி ஏன் ஸ்கூல் போகலைனு கேக்குறீங்களே...

சாரி குட்டிமா இன்னும் 1 இல்லை 2 நாள் நான் வீட்ல இருப்பேன் சரியா...

ம்ம்ம்... ம்மா எல்லாரும் வெளிய வெயிட்டிங் உங்களுக்காக... உள்ள வர சொல்லவா...

ம்ம்ம் சரி குட்டிமா...

அவள் தன் தந்தையிடம் எதையும் பேசவில்லை… அதற்கு மேல் அந்த டைரியை படிக்க முடியாமல் அழுதவளை அன்னையை நினைத்து அழுகுறாளோ என்று நைனிகா தான் அவளை அழைத்துக் கொண்டு மருத்துவ மனைக்கு வந்துவிட்டாள்…. அவள் நேத்ராவிடம் பேசிவிட்டு வெளியேறினாள்… மித்ரனிடம் பேசவில்லை மித்ரனுக்கு அந்த வித்யாசம் அப்போது தெரியவில்லை......

மொத்த மாயாண்டி குடும்பத்தாரும் வந்து சென்டிமென்ட் சீன் ஓட்டப் போறாங்க ரெண்டு பாச மலர் பார்ட் 2 வேற இருக்கு... நமக்கு பாடி தாங்காது நாம கேன்டீன் போகலாம்.... என்று முகிலன் தான் யாழிசையின் முகவாட்டத்தை கண்டு திசைத் திருப்பி அழைத்துச் சென்றான்...

கரெக்ட் அம்முகுட்டி. உங்க அண்ணன லிஸ்ட் ல விட்டுட்டியே... குடியிருந்த கோவில்....... தெய்வத் திருமகன்னு ஒரு கோலிவுட் கலாட்டாவே நடக்கும் நாம போய்ட்டு பாப்கானோட வரலாம் வா... என்று மித்ரன் இயல்பாக அவர்களோடு இணைந்து கொண்டார் … ஆனால் யாழிசை பேசவே இல்லை...

அவர் கூட சேர்ந்து கிண்டல் பன்றியா நீ....உங்களுக்கு ரொம்ப தான்...போங்க ரெண்டு பேரும் .... வீட்டுக்கு வந்து வச்சிக்கிறேன்... ரெண்டு பேரையும்… நேத்ரா முகிலனை மிரட்டினார்...

அத அப்போ பாக்கலாம்.... போடி..... நீ வாமா...வாடா முகிலா என்று மூவரும் நேத்ரா இருந்த அரையை விட்டு வெளியே வந்தனர்...

அவர்கள் கூறிதைப் போல இங்கே எல்லாம் கலந்து கட்டி ஒரு கோலிவுட் கலாட்டாவே நடந்து ஓய்ந்து கடந்து............

இதோ இன்றோடு மூன்று நாள் மருத்துவ வாசம் முடிந்தது.... வீடு வந்து சேர்ந்தார் நேத்ரா....

முதலில் அவரால் கைப்பற்றப்பட்டது தன் தனிப்பட்ட ஆளுமையின் கீழ் இயங்கும் தன் சமையல் சாம்ராஜ்யம் தான்...

உடல்நிலை சரியில்லாத போதிலும் தனக்கானவர்களை பார்த்து பார்த்து கவனிப்பதில் தான் பெண்களுக்கு தனி அலாதியே.... அதிலும் நேத்ராவின் கவலைகளை புதைக்குமிடமே சமையலறை தான் கவலைகளை மறந்து தன்னை அதில் ஆழ்த்திக் கொள்வதில் அத்தனை பிரியம்.. நிறைவு … நிம்மதி….

படுக்கைக்கு ஏங்கும் சோர்வோடு சற்றே சாயும் வேளையிலும் பிள்ளைகள் பசி என்றவுடன் அம்மாக்களுக்கு காலும் கையும் எந்த சாட்டையும் இன்றி பம்பரமாக சுழ முடிவது மட்டும் ஏனோ விசித்திரமான ஒன்று தான்...

மித்ரனின் வேண்டுதலுக்கு இணங்க பிரியாணியோடு பிள்ளைகளின் விருப்பமான உணவுகளும் மேசையை அலங்கரித்ததோடு மட்டுமின்றி அவை நேத்ராவின் கைகளால் நேர்த்தியாக பரிமாறவும் பட்டது...

உடன் வந்து இத்தனை நாள் கூட இருந்து உபசரித்த உறவுகள் எல்லாம் விருந்தோம்பல் முடித்து இனிதே கிளம்ப தயாரிகியது..

முகிலுக்கு ஓரு பக்கம் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்ற கதையாய் யாழினியை தொடர்ந்து கொண்டே இருந்தானே ஒழிய ஒன்றும் பேச முடியவில்லை....

எல்லாம் இலைமறைக் காயாக பாரதிக்கும் இந்தப் பக்கம் மித்ரனுக்கும் பட்டவர்த்தனமாக தெரியத்தான் செய்தது...

அதை தொடக்கத்திலேயேக்... கிள்ளிவிட பாரதியும் முடிந்தால் உன் சமத்துடா மகனே என்று மித்ரனும் கடந்து விட்டனர்....

எல்லோரும் கிளம்புகையில் யாரும் அறியாது அவளுக்கு கண்களால் விடை கொடுக்க மட்டுமே முடிந்தது முகிலனுக்கு... யாழினி தாயின் நெற்றிக்கண் திறக்கும் முன் ஒரு கண்ணடித்து முகிலை குப்புற கவிழ்த்துவிட்டே சென்றாள்...

அதிலேயே மனம் நிறைந்து போனது முகிலனுக்கு.... தைரியம் தான் டி உனக்கு ராங்கி.... என்று மனதோடு புலம்பிவிட்டு விடைகொடுத்து உள்ளே வந்தவனுக்கு இப்போது தான் நினைவு வந்தது அன்னை அன்று அவனிடம் திருப்பிக்... கேட்டிருந்த அந்த டைரி..

தனது அறையில் காணாமல் திகைத்து தெளிந்தவன் யாழிசையை அணிகிய போது தான் அவளுக்கும் நினைவு வந்தது அன்று இரவு எடுத்த டைரியை சில பக்கங்களுக்கு மேல் படிக்க முடியாமல் அழுத அழுகையில் தூக்கம் வந்து தொல்லை செய்தததை.. பகன் மருத்துவ மனை செல்லும் அவசரத்தில் அதை அப்படியே எடுத்து அண்ணனின் அறையில் வைத்துவிட்டு மருத்துவ மனைக்கு கிளம்பி இருந்தாள்...

கண்கள் கனக்க மூடிவிட்டு தூங்கியவள் அடுத்த நாள் மறந்தே போனாள்...அதை.. ஆனால் அதில் படிதாத தடங்கள் எதுவும் என்றும் மறையாத வடுவானது அவளுக்குள்...

இப்போது மீண்டும் மிச்ச பக்கங்களை படிக்க வாய்ப்பு கேட்டும். . முகிலனிடம் போதும் போதுமென வாங்கியும் கட்டிக்கொண்டாள்...

போடா அண்ணா அது பெரிய சிதம்பர இரகசியமா நான் அப்பா கிட்ட கேட்டுக்குறேன்... போ.. புடி உன் இத்துப் போன டைரிய.... என்று பேச்சை மாற்றிவிட்டு நகர்ந்துவிட்டாள்...

ஒரு வழியாக அதை பாதுகாத்து அப்படியே அம்மாவிடம் கொடுக்கப் போகும் திருப்தியே அவனுக்கு பல மணி நேரம் கழித்து பலத்த நிம்மதியைக் கொடுத்து..

முகிலன் அறைக்குள் நுழைந்த போது நேத்ரா கையில் ஒரு புத்தகத்தோடு பால்கனி ஊஞ்சலில் சாய்ந்து இருண்ட வெளியை இமைக்காது இரசித்துக் கொண்டிருந்தார்...

ம்மா....
ம்ம்ம்... வா ...முகில்.
இந்தாங்க ம்மா...
அமைதியான பார்வை மட்டுமே பதிலாக கிடைத்தது . ஆனால் அதில் ஒரு திருப்தி... நிறைவு தெரிந்தது ...
உங்க டைரி...
நீங்க கொடுத்தத அப்படியே கொடுத்துட்டேன்...ம்மா...
நான் எதையும் படிக்கல ... ஓ.கே தானே...
மௌனம்... கனிவான பார்வை...சின்ன புன்னகை... இரண்டு இமைகள் மட்டுமே அழுந்த மூடித் திறந்தன ... ஆம் என்பதாக...
தேங்க் யூ முகில்... கொடுத்தத நானே படிக்க விடாம வாங்கிட்டேன்.... கோவமா...டா...
ம்மா... அன்னையின் கைகளை இறுக பற்றிக்கொண்டு கண்களை உற்று நோக்கினான்....
ம்மா... நீங்க என்கிட்ட எதுக்காகவும் சாரி லா சொல்லவேக் கூடாது ம்மா .. நான் உங்க முகில் தானே...என் கிட்ட என்னம்மா...நீங்க..
கண்கள் பனித்தது நேத்ராவிற்கு... ஆனால் கண்ணைத் தாண்டி அமர்ந்திருந்த கண்ணாடி எப்போதும் போல அதைக் காட்டிக் கொடுக்காமல் கைக் கொடுத்தது நேத்ராவிற்கு.....
ம்மா... உங்க கைல.. அது வந்து.. அந்த தழும்பு... அத பத்தி தெரிஞ்சிக்க தான் நான் உங்க பாஸ்ட் பத்தி கேட்டேன்...
பட்...
அது உங்களுக்கு இன்னும் பிரச்சினைய அதிகம் ஆக்கிடும்னு நான் நினைக்கல ம்மா... உங்களுக்கு என்ன பிரச்சினைனு தெரிஞ்சா அதை எப்படியாவது சால்வ் பன்னலாம்னு தான் நா....
ஐ நோ முகில்.... நானுமே அதுக்காக தான் எல்லாத்தையும் ஷேர் பன்னேன்... ரியலி ஐ ஃபெல்ட் வெரி கம்ஃபர்டபில் முகில்... அண்ட் வெரி ஹேப்பி ஆல் சோ ...கண்ணா....சோ நீ எதையும் போட்டு யோசிச்சு உன்னை நீயே ஹர்ட் பன்னிக்காத... புரிதா நிம்மதியா போய் தூங்கனும் சரியா....
ம்மா.... ஓன் மோர் திங்.... ம்மா...
என்னால லாஸ்ட் வெள்ளிக்கிழமை உங்க கல்யாணநாள் செலப்ரேஷன் கூட கேன்சல் ஆகிடுச்சி சாரிம்மா….
என்ன டா...நீ உங்களோட இருக்குறது தான் அம்மாக்கு செலப்ரேஷன் புரிஞ்சிதா…

ம்மா... இந்த பிரஷர்... இந்த பெயின்.... இதோ இப்போ உங்க கண்ணுல எனக்கு தெரியக் கூடாதுனு ஒலிஞ்சு நிக்கிர அந்த கண்ணீர்... இந்த தழும்பு... இதெல்லாம் ஏன்னு எனக்கு தெரியாது... தெரியவும் வேண்டாம் ....

ஆனா... கண்டிப்பா...என்னால இன்னொரு பொண்ணுக்கு இப்படி ஆக எப்பவுமே உங்க முகில் காரணமா இருக்கவே மாட்டான் ம்மா...

முகில்.....

எஸ் ம்மா... நீங்க என்னை நம்பலாம் ... ஐ பிராமிஸ் யூ....ம்மா

முகில்.... குரல் கமறியது.... இம்முறை கண்ணீரைக் கண்ணாடி மறைக்கவில்லை.... சுதந்திரமாக வழிய விட்டது.... நேர்மாறாக நேத்ராவின் மனமோ நிறைந்துவிட்டது....

எஸ் ம்மா... பிகாஸ்... ஐ லவ் யூ சோ மச் ம்மா.... நான் உங்க முகில் ம்மா... ஐ ..ஐ...கேன் அண்டர்ஸ்டாண்ட் ....ம்மா.. நீங்க எப்பவுமே ஹேப்பியா இருக்கனும் ம்மா... ஹேப்பி தானே.... ம்மா...

ரொம்ப ...முகில்… அந்த டைரிய நீ ஏன் படிக்கனும்னு நினைச்சேனோ அந்த உணர்வகளை நீ சரியா புரிஞ்சிகிட்ட… அதே மாதிரி ஏன் நீ இப்போ படிக்க வேண்டாம் னு வாங்கிட்டேனோ அதையும் நீ சரியா புரிஞ்சி நடந்துக்கனும் முகில் சரியா….
அப்படி நீ நடந்துகிட்டாலே…..
அம்மா எப்பவுமே ஹேப்பி தான் .... தெரியுமா... நீ ... நீ வளர்ந்துட்டனு அம்மாக்கு தெரியவே இல்லை பாரேன்... ஆனா இன்னும் நீ இப்படி குட்டிப் பையன் மாதிரி கண்ணெல்லாம் கலங்கினா அம்மா உன்கிட்ட பேச மாட்டேன் டா...முதல்ல நீ நார்மல் ஆகு முகில் பிளீஸ்.... உன் கண்ணு வேர்குற அளவுக்கு இப்போ ஒன்னுமே ஆகலடா அழுமூன்ஜி....
ம்ம்மா ஐ ப்ராமிஸ் யூ மா…
யூ நெவர் க்ரை ஓ.கே… ஐ கான்ட் டேக் ட் ஈசி …
போதும் முகிலா முடியல டா….
ம்மா ப்ளீஸ்.... கலாய்காதீங்க.... ஐ ஆம் சீரியஸ்...

..ஹா..ஹஹஹஹஹ. ஓ.கே ஓ.கே அப்போ நல்ல பையனா தூங்கு போ....

ம்ம்ம் குட் நைட் ...ம்மா...

குட் நைட் முகில்....

இந்த நிறைவுக்கு பின் நிறையக் காரணங்கள் உண்டு .. தன் வளர்ப்பு மீதும் தன் பிள்ளையின் மீதும் உள்ள பெருமிதம்... அது…
_ தொடரும்….
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
யாழ் மொழி @ காயத்ரி வினோத் குமார் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top