தீராத் தீஞ்சுவையே...45

Advertisement

Yazh Mozhi

Active Member
தீராத் தீ___45

முகிலனைக் கண்டபின் தான் அவளுடைய பழையக் கையேடு நினைவிற்கு வந்தது நேத்ராவிற்கு.... முகிலனை அருகே அழைத்தவர் அவன் பேசியதை எதையும் காதில் வாங்கவில்லை... முகில் நான் கொடுத்த டைரிய படிச்சிட்டியா...

எந்த டைரி என்று தேங்கியவனுக்கு பிறகு தான் நினைவு வந்தது அதை அன்று அறை மேசையில் போட்டு விட்டு அவசரமாக ஓடிவந்தது அதற்கு பிறகு படிக்க நேரமெங்கேக் கிடைத்தது....

இல்லமா அது நான் சாரி மா நான் இன்னும் படிக்கல இன்னைக்கு ஈவ்னிங் படிக்கவா... இன்னைக்கே முடிச்சிடறேன் மா...

இல்லை இல்லை வேண்டாம் முகில் அத நீ படிக்கவே கூடாது அது அப்படியே எனக்கு வேணும் இப்போவே வேணும் முகில் பிளீஸ்...

மா சரி சரி ஓ.கே டென்ஷன் ஆகாதீங்க நான் அத படிக்கல ....இனியும் படிக்க மாட்டேன் போதுமா நான் இப்போவே உங்களுக்கு அத எடுத்துட்டு வந்து தரேன் நீங்க ஸ்ட்ரெயின் பன்ன வேண்டாம்மா பிளீஸ்...

சரி முகில். அப்பா எங்கடா ...

வெளில வெயிட் பன்றாங்கமா... அன்பு மாமாவும் செல்வம் மாமாவும் கூட இருக்காங்க கூப்பிடவா

உங்க அப்பாவ முதல்ல கூப்டு முகில்...

சரிமா...

முகிலன் வெளியேறிய சில நிமிடங்களில் உள்ளே வந்தார் மித்ரன்....

உள்ளே வந்தவரின் கண்கள் மனைவியை முழுதாகத் தழுவி மீண்டது அருகே சென்று அமர்ந்தவருக்கு அந்த கைகளை இருக்கமாகப் பினைத்துக் கொண்ட பின்பு தான் நிகழ்கால நிஜம் மண்டையில் உரைத்தது...

அவளுக்கு ஒன்றும் ஆகவில்லை .. என்று மனம் கூப்பாடு போட்டது. அப்படியே கண்களில் நிரப்பிக் கொண்டதே அவருக்கு போதுமானதாக இருந்தது போல...

நேத்ராவே மௌனத்தை உடைத்தார்...

சாரிங்க… அவள் கேட்ட சாரியின் அர்த்தம் அவளுக்கு மட்டுமே தெரியும்

ஏன். எதுக்கு சாரி.... நியாயமா நான் தான் சொல்லனும் சாரி எல்லாம்.. நீ இயல்பா இருந்தத பாத்து எல்லாத்தையும் கடந்து வந்துட்டனு தப்பா நினைச்சுட்டேன்..

இன்னும் அது தான் உன்னை உறுத்திகிட்டே இருக்கா. ....?????
அது மட்டுமல்ல இன்னும் இன்னும் இன்னும் நிறைய … அது அவருக்கு தெரிய நியாயமில்லை… அவை நேத்ராவின் அடி மன இரகசியங்கள்….

அது அந்த ஏஜ் அப்படி.. நிரைய பிரண்ட்ஸ்... அதுலயும் பொண்ணுங்க நிரைய பேர். நான் உனக்கு துரோகம் பன்ன நினைக்கல அம்மு ஜஸ்ட் பிரண்ட்ஸ் தான் ஆனா அவங்க கூட பேசினா உனக்கு பிடிக்காது அதான் மறைச்சேன்.. ஆனா... அப்படி ஆரம்பிச்சது கொஞ்சம் அதிதமா போய்டுச்சி ஆனா உனக்கு நான் இன்னைக்கு வரைக்கும் உண்மையா தான் இருக்கேன் டி நம்பு .... பிராமிஸ்...

எந்த தப்பும் பன்னல வீட்லயே ஒரு ஜேம்ஸ்பாண்ட் இருக்கும் போது நான் கொஞ்சம் உஷாரா இருந்திருக்கனும் மாட்டிகிட்டேன் விடு...

அன்னைக்கு வேணும்னு உன்னை போக சொல்லலடி....

ஒரு கோவம் நீ தாலிய தூக்கி வீசின கோவம் அதான் ஏதோ ஒரு வேகம் தப்பு பன்னி மாட்டிகிட்டேன் சமாளிக்க தெரியாம ஏதேதோ பேசிட்டேன் அதான் சொதப்பிடுச்சி.....

பட்டுனு கால்ல விழுந்திருந்தா எல்லாம் சரியா போயிருக்கும் .... அப்போ தோனல... இப்போ தோனுது....

இப்போ கூட விழலாங்க நான் தப்பா நினைக்க மாட்டேன்.....
ஆஆஆ.... சரி வீட்டுக்கு வா சாஸ்டாங்கமா விழுறேன்...

இப்போவே போகலாமா.....

விளையிடாத டி.... ஒரு ஃப்ளோவுல பேசிட்ருக்கேன்ல முதல்ல அமைதியா இரு அப்றம் வீட்டுக்கு போனதும் தோப்புக்கரணம் கூட சேத்து போட்றேன்... இப்போ.... பிளீஸ்....

ம்ம்ம் ம்ம்ம்... சரி...

ஆனால் நீ அன்னைக்கு ... கைல கட் பன்ன அந்த செகண்ட் தான் என் தப்பு எனக்கு புரிஞ்சிது அம்மு. நான் உனக்கு பன்ன தப்ப நீ எனக்கு பன்னியிருந்தா நான் கண்டிப்பா உன்ன மாதிரி இன்னைக்கு வரைக்கும் உன் கூட சேர்ந்து வாழ்ந்து இருப்பேனானு தெரியாது...

இன் ஃபேக்ட் அதவிட நிறைய நிறைய மோசமான தருணமெல்லாம் நாம ஃபேஸ் பன்னிட்டோம்... நான் எத்தனையோ முறை உன்ன வேண்டாம்னு தூக்கி போட்ருக்கேன்...

உன்ன நிறையவே ஹர்ட் பன்னியிருக்கேன்... உன்னை வேண்டாம்னு பிரிஞ்சி கூட போயிருக்கேன்...

ஆனா ஒரு ஒரு ஸ்டேஜ் ல யும் நீ எல்லாத்தையும் ஒடைச்சு தூக்கி போட்டுட்டு எனக்காக என்கூட வந்து இருக்க... உன் ஈகோ வ விட்டுட்டு நம்ம காதலுக்காக நீ வந்து இருக்க...

அதுக்கு ஒரு காரணம் இருக்கு அதை நீங்க தெரிஞ்சிக்காம இருக்குறது தான் உங்களுக்கு நல்லது என நினைத்துக் கொண்டார்…. நேத்ரா மனதில்...

நம்மலோட இத்தனை வருஷ லைஃப் ல எத்தனையோ மோசமான கஷ்டமான தருணத்த தாண்டி வர நீ எனக்கு கை குடுத்துருக்க.... இப்போ கூட நீ எனக்காக தான் மீண்டு பொழைச்சு வந்துருக்க அம்மு எனக்கு தெரியும் .

தப்பு பன்னது நான் தான் ஆனா நான் சாரி சொல்ல மாட்டேன் .. நீ நிறையவே நமக்காக இழந்துருக்க அதுக்கு தேங்ஸ் கூட சொல்லமாட்டேன்..

வேண்டாம்…. சொல்ல வேண்டாம் நீங்க பன்ன தப்புக்கு தண்டனையை நான் நிறைவேத்திட்டேன்… உங்க மன்னிப்பு எனக்கு தேவை இல்லை என மனதோடு மௌனமாக எதிர் பதில் கூறிக்கொண்டு இருந்தார்… கண்களை மட்டும் தீர்க்கமாக அசையாமல் பார்த்துக்கொண்டே இருந்தார்...

நீ நல்லபடியா வீட்டுக்கு வந்து ஒரு பிரியாணி செய்து தா உன் ஸ்பெஷல் சிக்கன் 65 ஓட... அத ரொம்ப மிஸ் பன்றேன் டி... ரியலி... அதுக்காக வேனா போனாப் போகுதுனு ஒரு லவ் யூ சொல்றேன் ஓ.கே வா..

லஞ்சமா தான்.. ஒரு மிஸ் யூ வேணும்னா கூட கொசுரா சொல்லிகறேன் சரியா..... சீக்கிரம் வீட்டுக்கு வா... உன் சாப்பாட்டோட அருமை மூனு நாளா கேன்டின் சாப்பாடும் வீட்ல உன் அண்ணி சமையலும் சாப்பிட்ட பின்னாடி தான் டி புரிது..
மித்ரனின் சமாதான உடன்படிக்கை நன்றாகவே புரிந்தது ஆனால் இரசிக்க முடியவில்லை கொஞ்சம் நிம்மதி கொஞ்சம் குற்ற உணர்வு கொஞ்சம் கர்வம் கூட முளைத்தது….

உன் அண்ணன் ஏன் என்ன பாக்கும் போதெல்லாம் வெரைப்பா இருக்கான் தெரியுமா....

ஏன்....

உன் அண்ணி சமைச்சத சாப்பிடு தெரியும்.

அட போங்க.... இயல்பாக பேச தன்னைத்தானே முயற்சி செய்தார்….

வாடி சேர்ந்தே போலாம்....

அதுக்காக தான் திரும்பி வந்துட்டேன்...கண்டிப்பா தனியா போகவே மாட்டேன்… நான் போன ஒரு பத்து நிமிஷத்துக்குள்ள கண்டிப்பா ஆவிய பேயா வந்து உங்களையும் கொன்னு கூடவே கூட்டிட்டு தான் போவேன்….

தெரியும்....

என்ன....

ம்ம்ம்ம் எங்க இவன் நாம போனதும் இன்னொரு கல்யாணம் பன்னிப்பானோனு பயத்துலயே எழுந்து வந்திருப்படி நீ…

ஓ ஓ ஓ சாருக்கு அந்த ஐடியா வேறயா..சிரித்தார்…. சிரித்தார்…...சிரித்துக்கொண்டே இருந்தார்…

அப்படி ஓபனா சொல்ல முடியாது லைட்டா.... அது கூட உனக்காக தான் அம்மு மித்ரன் ஏதேதோ பேசி அவரை இயல்பாக்கவே முனைந்தார்… ஆனால் அவருடைய இந்த சிரிப்பு எதையோ சாடி நினைவூட்டியது….

மாமாக்கு வெளி சாப்பாடு ஒத்துக்காதுனு நீ கவலை படக்கூடாதேனு தான் யோசிச்சேன் டி...

ஓ... எப்பவுமே உங்களுக்கு பொண்டாட்ங்கிற உறவு சமையல்காரியாவும் வீட்டு வேலைக் காரியாகவும் தான் தெரியுமா…..அந்த வார்த்தை மிகுந்த வலியோடும் இரணத்தோடும் அழுத்தமாக வந்தது….ஆனால் அடுத்த நொடி சிரிப்புக்கு தாவிய இதழ்களோடு பேச முயற்சித்தார் நேத்ரா…..அதுக்கு புதுப் பொண்டாட்டியா....நாலைக்கே நல்ல வேலைக்காரனா பாத்து வச்சிட்டு நான் எங்க வீட்டுக்கு போறேன்...

ஏய் ... ஏய்... சும்மா விளையாடினேன் டி தாயே நீயே வீட்டுக்கு வாமா...சோறு இல்லைனா கூட பரவால்ல உங்க அண்ணன் பார்வைலயே என்ன பஸ்பமா ஆக்கிடுவான் போல அவன் முன்னாடி நீ என் பக்கத்துல நின்னு ஒரு க்ளோஸ் அப் சிரிப்பு சிரிச்சாதான் டி நிம்மதியா போவான் சீக்கிரமே வீட்டுக்கு வா....

ம்ம்ம்ம்....

அவளை இயல்புக்கு மாற்றிய இனிமையோடு எழுந்தவரை... நேத்ராவின் கரம் தடுத்தது...

திரும்பியவரிடம்...

இன்னும் அந்த செல்ல பொண்டாட்டி யாருனு சொல்லவே இல்லையே… கண்கள் ஆழமாக அவரை நோக்கியது உண்மையை இப்போதாவது சொல்லிவிடு என்று யாசித்தது….

நீண்ட பெருமூச்சை வெளிவிட்டவர் .... மௌனமாக நேத்ராவையே பார்த்தார்.... சொல்ல முடிந்தால் சொல்லி இருப்பார்… ஆனால் சொல்லும் எண்ணமே இனி அவருக்கு இல்லை அதிலும் இந்த நிலையில் நிச்சயமாக இல்லை…. இனியும் சொல்லப்போவதும் இல்லை...

சிலத கடந்து வந்திடனும் அம்மு... புரிஞ்சிக்கோ பிளீஸ்....

செல்ல பொண்டாட்டி நீ தான்... நீ மட்டும் தான்... அப்படி யாருமே இல்லை... அத முடிஞ்சா மறந்துடு...

சொல்லவே மாட்டீங்களா....

ம்ம்ஹூஹூம்....

ஏன்...

நான் மறந்து இருபது வருஷம் ஆச்சே... எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு சிரி அமைதியா இரு ...

எப்போ நியாபகம் வரும்...

எப்பவுமே வராது...
என்ன வராது.... வேற்றுக் குரலில் கலைந்தனர் இருவரும்....
_தொடரும்….
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
யாழ் மொழி @ காயத்ரி வினோத் குமார் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top