தீராத் தீஞ்சுவையே...43

Advertisement

Yazh Mozhi

Active Member
தீராத் தீ ____43

அவளின் உதிரம் ஒழுகும் கையோடு உடல் சரிந்தவளை கண்டு அதிர்ந்து ஸ்தம்பித்து நின்றவனுக்கு ஒன்றுமே ஓடவில்லை....

கணேசனும் வசந்தாவும் அருகில் வசிப்பவர்களை துணைக்கு அழைத்துவிட்டனர். ...

பதட்டத்தில் யாருக்கும் ஒன்றும் புரியவே இல்லை.... அருகே ஸ்டாஃப் நர்சாக முன்பு வேலை செய்த பெண்மணி ஒருவர் தான் ஈரத்துணியைக் கையில் கட்டி வேகமாக முகத்தில் நீர் தெளித்து வெளியே அழைத்து வர பணித்தார்....

மித்ரனுக்கு புழுப் பூச்சியாக பூமியோடு புதைந்து போக மாட்டோமா என்ற அவமான உணர்வு. தன் மனைவியின் அதீத அன்பு புரிந்தும் தெரிந்தும் விளையாட்டாய் தேடிய ஒரு உறவு அவள் உயிரைக் குடிக்க காரணமான குற்றவுணர்வு ஒரு புறம்....

கையை கிழிக்கும் அந்த நான்கு மணி நேரத்திற்கு முன்பு நடந்த களேபரம் ஒரு புறம்... சுற்றி இருப்பவர்கள் பார்க்கும் அருவருப்பான பார்வை ஒரு புறம் என நொந்து போனார்.

ஆம் மித்ரா மயக்கம் தெளிந்து எழுந்த பின் கையை கிழிப்பதற்கு இடைப்பட்ட நான்கு மணி நேரம் ஒரு ஆணாக மித்ரனுக்கு மிகவும் சொல்ல முடியாத காயத்தையும் தண்டனையையும் வார்த்தையாலும் செய்கையாலும் நேத்ரா கொடுத்த தருணம் அது.....

மயங்கி எழுந்து முதலில் ஆற்றாமையில் அழுது கெஞ்சி அரற்றியவள்... நேரம் கூட கூட ஒரு மன அழுத்த வெடிப்பிற்கு ஆளாகிவிட்டாள்.... சந்தேகமும் அவள் கண்டெடுத்த சாட்சியங்களும் அவளை விடை தெரியாமல் விடுவதாக இல்லை .....பட்டினி கிடந்தாள் பக்குவமாக கேட்டாள் பதில் இல்லை.... இல்லை என்று சாதித்துவிட்டவன் .... அவளுடைய நேர்மையான கோவத்தின் மூர்கத்தை எதிர்கொள்ள முடியாமல் முழிப்பிதுங்கி நின்றான்... மித்ரன்...

குடும்பம் மொத்தமும் நேத்ராவை எதிர்கொள்ள பயந்தது... அந்த அளவிற்கு பேயாகவோ பைத்தியமாகவோ ஏதோ ஒன்று அவளை மூர்கமாக ஆட்டுவித்தது மித்ரனிடம் மிருகமாவே மாறியாவது உண்மையை அறிய முற்பட்டது....

என்ன புன்னியம்... மித்ரன் எதையும் வாய்திறந்து சொல்லவில்லை.... எல்லாக் கேள்விக்கும் சேர்த்து அவர் சொன்ன பதில் இரண்டு... பேர மாத்தி சேவ் பன்னிட்டேன்... நான் யார்கிட்டயும் பேசல அவ்ளோதான்... நம்பினா நம்பு இல்லைனா ஆமானு நினைச்சா அப்படியே எடுத்துக்கோ....

இவை தான் இந்த இறுதி வார்த்தைகள் தான் நேத்ராவின் கோவத்திற்கு தூபம் போட்டுவிட்டது...

அவளால் கண்டெடுத்த ஆதாரங்களையும் தொலை பேசி எண்களையும் கொண்டு விளக்கியும்.....அந்த சுற்றி இருந்து வயதான தலைமுறைக்கு ஒன்றுமே புரியாமல் நின்றனர்....

மித்ரனுக்கு சாதகமான சூழல் அது... நேத்ராவின் மாமியாருக்கு மருமகளை பழிதீர்க்க போதுமான அவகாசமாக கையிலெடுத்துக் கொண்டார் அந்த சூழலை...

அனைத்து சொந்தங்களையும் வரவழைத்தார் .. பைத்தியக்காரி என்று நேத்ராவிற்கு பட்டமளித்து வெட்டிவிடப் பணித்தார்....

ஏனோ உள்ளுக்குள் ஆகாத மருமகளாக நிழலாடியத் தோற்றத்தை தோற்கடிக்க அந்த பெண்மணிக்கு கிடைத்த கேடையமாக இந்த நிகழ்வு அமைந்ததோ என்னமோ.

அப்போது கூட மித்ரன் ஒன்றும் கலங்கிவிடவில்லை... பிள்ளையை மட்டுமே கோர்ட்டில் கேஸ் போட்டு வாங்கிக் கொள்ளலாம் என கருணையே இன்றி தாய்க்கும் சேர்த்து தாளம் போட்டார்....

அந்த தருணத்தில் பைத்தகயமாக கத்திக் கொண்டிருந்த நேத்ரா உயிரோடு செத்தேப் போனாள்....

ஆம் மித்ரனுக்கு தப்பிக்க வழி தேவைப்பட்டது அன்னை மட்டுமே தன்னை நம்புகிறார்கள்....

உறவுகள் முன் அசிங்கப் பட முடியாது அதைவிட இவளை தட்டி வைக்க வேறு வழியில்லை தன்னை விட்டு எங்கும் போகவும் மாட்டாள் .... ஆனால் இப்போதைக்கு இவள் வாயை மூடி சூழ்நிலையை சமாளித்திட வேண்டும்...

அதற்கு என்னவாவது செய்தே ஆக வேண்டும்.. ஆக இது ஒன்றே அப்போதைக்கு அவருக்கு இருந்த வாப்பு.... அதை சரியாக தவறான தருணத்தில் செய்தார்..... ஆமா.... நீ வேணா போடி ஆமா எனக்கு உன்ன பிடிக்கல.... நான் யார்கூட பேசினா உனக்கு என்ன போடி போ... என் பையன எப்படி கேஸ் ஃபைல் பன்னி எப்படி என்கிட்ட வர வைக்கனும்னு எனக்கு தெரியும் என் மேல நம்பிக்கை இல்லாம நீ என்கூட வாழ வேண்டாம் உங்க அப்பா வீட்டுக்கே ஒரேடியா போ... போய் தொல... எனக்கு இனி நீ வேணா......

சொல்விட்டு வெளியே நகர்ந்துவிட்டான். .. இடியுடன்
மழையடித்து ஓய்ந்த உணர்வு அங்கே.....

கணேசன் மட்டுமே நேத்ராவின் நிலை அறிந்து போராடினார்...

அவருக்கு மகனும் முக்கியம் மருமகளும் முக்கியம்... காரணம் பேரன் என்ற புதிய வரவு உள்ளதே இவர்களை இணைக்கும் பாலம்..... ஆனால்

மருமகளைவிட மகன் பக்கத்தில் பாசத்திற்கான தராசு சற்று கூடுதலாக சாய்ந்துவிட்டதே.... அமைதியாக கையாலாகாத தனத்தோடு வேடிக்கை பார்த்தார்...

நேத்ரா மித்ரனின் வார்த்தையில் உஷ்ணமாகி உக்கிரமாகி வேகமாக வெளிவந்தவள்....
அவன் சட்டைக் காலரை பற்றி நிருத்தினாள்.... உனக்கு நான் வேண்டாமா... தவறு செய்த நீயே தைரியமாக என்னைத் தூக்கி எறிந்துவிட்டு செல்வதா என்ற ஈகோவில் யோசிக்காமல் கழட்டி அவன் முகத்தில் அடித்தாள் .....

ஆசையாக போராடி அனைவரின் ஆசியோடும் அவள் கழுத்தில் மித்ரனால் பூட்டப்பட்ட திருமாங்கல்யத்தை....

ஆம் அவன் முகத்தில் ஓங்கி வீசினாள்... பிடி யாரோடு போகிராயோ அவளுக்கே போடு இதை.

ஆனால் அவளயாவது ஏமாத்தாம வாழ முயற்சி பன்னு போடா.... போய்டு என் முன்னாடி இனி வராத வந்தா நீ உயிரோடவே இருக்க மாட்ட.. ..கொன்னுடுவேன் உன்ன... போ.. போ இங்க இருந்து போய்டு....

கத்தித் தீர்த்து கண்ணீர் வழிய கைகள் நடுங்க நகர்ந்துவிட்டாள்....அங்கிருந்து தன் அறைக்கு சென்றாள் தன் தந்தைக்கு அழைத்தாள்...

அவனை விட்டு சென்று வாழ்ந்து காட்டிடத் தான் நினைத்து பேசினாள்....

ஆனால்.... ஆனால்...

ஏதோ ஒன்று தடுக்கிறதே....கண்கள் பனிக்கிறதே.... நெஞ்சம் கனக்கிறதே.... தொண்டை அடைக்க தந்தையிடம் அழுதாள்... அப்பா.. அப்பா ... நா... நா... நான் நான் நாசமா போய்டேன் பா... என் வாழ்க்கையே என் கையவிட்டு போய்டுச்சி பா... நான் உங்க பேச்ச கேக்காம நானே போய் என் தலைல மண்ண அள்ளி போட்டுகிட்டேன் பா.... அழுதாள்..... அழுதாள்.... கதறித் துடித்தாள்....

மித்ரன் கடைசியாக சொன்ன வார்த்தைகளே அவளது காதில் வந்து வந்து எதிரொளித்தது...

இவள் தாலியை தூக்கி வீசிய அதிர்ச்சியில் குடும்பமே ஸ்தம்பித்து சலசலக்க .....கிடைத்த தருணத்தில் தந்தையின் வார்த்தைகள் கூட அவளுடைய செவிகளை சென்று சேரவில்லை...

தன்னவன் தன்னை வேண்டாம் என்றதே மீண்டும் மீண்டும்... மீண்டுமாக எதிரொலித்தது....

அவனுக்கு நான் வேண்டாமா... ???அவனுக்கு நான் நான் வேண்டாமாம் ... ??? அவ்வளவு தான் என்னை காதலித்தானா.....??? என்னை போக சொல்லிவிட்டானா....???? நான் வேண்டாமா... அவனுக்கு.....என் மித்துவுக்கு நான் வேண்டாமா.... ??? யாரோ ஒருத்திக்காகவா ....???

அவனுக்கு வேண்டாத நான் அவனுக்கு இடைஞ்சளாக இனி எதற்காக இருப்பது... ??? வேண்டாம் எனக்கும் என் உயிர் வேண்டாம் வேண்டாம்... என் இடத்தில் இன்னொருத்தி இருப்பதை .... என் கணவனோடு வேறொயுத்தி நிற்பதை நான் உயிரோடு இருந்து பார்க்க வேண்டாம் ....

அவனுக்கு வேண்டாத நான் இனி யாருக்காகவும் வாழ வேண்டாம்....

வேகமாக தேடியவளுக்கு ட்ரஸ்சிங் டேபிள் மேல் தளத்தில் கிடைத்த சின்ன பிளைடு போதுமானதாக இருந்தது அவள் தேடியத் தருணம் கையில் எடுத்து கண்கலங்கிய நேரம் ....

மித்ரன் வேகமாக உள்ளே நுழைந்தான்.... அவள் தாலியை விட்டெறிந்த அதிர்வும் அவன் அன்னை பற்றவைத்த கோவ நெருப்புமாக அவள் கன்னத்தில் நான்கு அரை விட்டு அவளை அடக்கிவிடத்தான் வேகமாக உள்ளே வந்தான்...

அங்கே....

கசங்கிய ஆடையும் கலங்கிய கண்களுமாக தன் அம்முவை .....தன் செல்ல நித்துவை....பைத்தியக்காரத் தனமாக தன்னை காதலிக்கும் இந்த காதலியை .... எதிர்கொள்ள முடியாது தேங்கினான்.... தேங்க வைத்தது அவள் நின்ற நிலை. ...

பாசத்தில் எந்த தவறும் செய்யாதவளுக்கு அவன் செய்த துரோகம் மனதைச் சுட தயங்கி நின்ற நொடி அவன் கண்ணைப் பார்த்துக் கேட்டுக் கொண்டாள்.... நான் உங்களுக்கு வேணாமா... உங்களுக்கு வேண்டாம்னா நா... நா... நான் இல்லை... பரவாயில்லை விடுங்க . .

நீங்க கேஸ் போட்டு கஷ்டபட வேண்டாம் நம்ம பையன நல்லா பாத்துக்கோங்க .....நான் உங்களுக்கு வேண்டாம் தானே.... நா..... நானே போறேன்...

கோவத்தில் வந்தவனுக்கு அவள் பேசியது ஒன்றும் புரியவில்லை... தயங்கி முன் வர என்னி எட்டு வைக்க இவள் சதக்கென கிழித்திருந்தாள் இடதுகை மணிக்கட்டை.

அவன் மீண்டும் அதிரந்து அருகே வரும்முன் அடுத்தடுத்த வெட்டுக்களோடு மீண்டும் கிழித்து பின் சரிந்தாள்....

இனி நீங்க உங்களுக்கு புடிச்ச மாதிரி இருங்க.... நான் போறேன் ....திரும்பி வரவே மாட்டேன்....

நீங்க சந்தோஷமா இருங்க... க..க..கடைசியா ஒரே ஒரு முத்....முத்த... அவள் சொல்லி முடிக்க வில்லை கலங்கிய கண்களில் இருந்து இரு துளிகளோடு அவள் கன்னத்தில் வழிய அவள் இதழ்கள் மித்ரனால் மூடிக்கொண்டு பிரிய மறுத்தது...

அந்த முத்தம் இருவருக்குள்ளும் பூதாகரமாக தங்களது அவசர புத்தியையும் பிரிவையும் தொலைந்த காதலையும் தட்டி எழுப்பி நினைவுட்டியது.....

அவள் உயிரை முத்தத்தோடு உறிஞ்சி பூட்டி எப்படியாவது கையோடு சேர்த்துக்கொள்ள போராடி அவளை விடுவித்தவன் அவளை அள்ளிக்கொண்டு வெளியே ஓடியத் தருணம் இதோ மருத்துவ மனையில் அவள் செய்த இரகளையோடு சேர்ந்தே..... நினைவு வந்து அவனுக்கு ......

அழுகையும் சிரிப்பும் ஒருங்கே வந்தது....

ஆம் வீட்டில் ஒரு வகையில் நடுங்க வைத்தாள்... என்றால் இங்கே.. .மருத்துவ மனையில் ஒரு வழியாக எல்லோரையும் ஆட்டி வைத்துவிட்டாள் அவனுடைய செல்ல அம்மு.....இதோ நிம்மதியா இப்போது தூங்கிக்கொண்டு இருக்கிறாள்... அடுத்து வருகிற பிரளயங்களை நான் எதிர்கொண்டே ஆக வேண்டும். ..

இவளுக்கு செய்த துரோகத்திற்கான பிராயசித்தமாக இல்லாவிட்டாலும் இந்த நேரத்திலும் இவள் என் மீது கொண்ட காதலுக்காக அதை சமாளித்து இவளை மீட்டு அனைத்தையும் சரி செய்திட வேண்டும்...

இராட்சஷிக்காக... இந்த பாசக்கார இராட்சஷிக்காக.... பினைத்திருந்த அவர்களின் கைகளின் மீதான அனைப்பை இருக்கிக் கொண்டே காத்திருந்தான் மித்ரன்... நேத்ராவின் விழிப்பிற்காக....

அவள் முன்பு நான் புதிய மனிதனாக சுத்தமானவனாக இருக்க வேண்டும்… யாருக்கு தெரியப் போகிறது என்று நினைத்து நான் செய்த பாவத்தின் பலனை இனி அவள் மீது அன்பு செலுத்தி நான் அதை சரி செய்ய வேண்டும்…

அவளை இதிலிருந்து நான் மீட்டெடுக்க வேண்டும்… என் காதல் எங்கே போனது எப்படி காதலித்திருப்பேன் இவளை எப்படி என் புத்தி இப்படி தப்பாய் போனது…

வாய்ப்பு கிடைத்தவுடன் நானும் ஐந்தறிவு ஜீவியாக கீழிறங்கிவிட்டேனா.. நான் வேண்டும் என்று செய்யவில்லை தான் ஆனால் என்னால் அதிலிருந்து வெளிவர முடியாமல் தானே அதிலேயே முடங்கி விட்டேன் … அந்த அற்ப சந்தோஷத்தை கொண்டாடிவிட்டு இன்று ஆயுள் மொத்தத்திற்கும் வாங்கிய வரத்தை தொலைக்கப் பார்த்து இப்படி பாவியாக துரோகியாக கீழிறங்கிப் போனேனே என்று நொந்து கொள்ள மட்டுமே முடிந்தது அவனால்...
_தொடரும்….
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
யாழ் மொழி @ காயத்ரி வினோத் குமார் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top