தீராத் தீஞ்சுவையே..42

Advertisement

Yazh Mozhi

Active Member
தீராத் தீ____42

கீழே மயங்கி சரிந்த நேத்ராவின் முகத்தில் ஈரமாக யாரோ அடித்து எழுப்பிக் கொண்டிருக்க கண்கள் திறக்கும் முன்பே ஏதோ புகை மூட்டத்தில் சிக்கி செவிகள் அடைத்து கிணற்றுக்குள் இருந்து கேட்பது போல சில குரல்கள் சுற்றிலும் கேட்கிறது...

ஆனால் கண்களுக்குள் அந்த கடைசி காட்சியும் அதில் வாசித்த செய்திகளும் மட்டுமே மின்னி மின்னி இதயத்தில் ஒரு பூகம்பத்தை ஏற்படுத்துகிறது....

செல்ல பொண்டாட்டி.... ஆம் செல்ல பொண்டாட்டி இந்த பெயரில் தான்..... வந்தது அந்த குறுஞ்செய்தியும்.....

ஏதோ ஒரு எண் என விட முடியவில்லையே... காரணம் அதில் இருந்த பெயர்........

இந்த பெயரில் யாரோ தன் கணவனுக்கு உரிமையாக குறுஞ்செய்தி அனுப்பினால் எந்த மனைவிக்கு தான் பிடிக்கும்....

அதிலும் உயிராக காதலித்து அவனுக்காகவே வாழும் ஒருத்தியின் தலையில் இடியை இறக்கிய தருணம் அது....

சாப்டியா....??

என்ன பன்ற....???

ஏன் மெசேஜ் பன்னல ...???

குட் நைட் டியர்....

இந்த வாக்கியங்களே இடம் பெற்றிருந்தது அந்த குறுஞ்செய்தியில்....

ஆனால் அனுப்பியவர் பெயராக மித்ரன் சேமித்திருந்த பெயரோ. ..... செல்லப் பொண்டாட்டி.... இதைக் கண்டு நேத்ராவின் உயிர் உடைந்து இன்னும் பிரியாமல் இதயம் நின்று துடிப்பதே அதியம் தான்....

அவளால் எதையும் பேச முடியவில்லை....

அதிர்ச்சி... அழுகை.... ஏமாற்றம்... வலி.... அத்தனையும் அவளுடைய குரல்வளையைக் கவ்விக் கொண்டு கண்ணீரை மட்டுமே பேசுகிறது....

எழுந்தவள் மித்ரனை கேட்டதெல்லாம் ஒன்று தான் யாருங்க அது ......????செல்ல பொண்டாட்டி அப்போ.... அப்போ நான் யாருங்க..... நான் உங்களுக்கு யாருங்க........

மித்ரனுக்கு அதிர்ச்சி ஆனால் முகத்தில் எதையுமே வெளிப்படையாக காட்டாத தேர்ந்த நடிகனாக நிதானமாகவே அவளை அணுகினான்....

என்ன அம்மு.... யாரு.. என்ன.... ஆச்சு உனக்கு....
சுற்றியிருந்த மாமனார் மாமியாருக்கு ஒன்றும் புரியவில்லை....

இவளுக்கு அழுகை மட்டுமே பொங்குகிறது அரை பைத்தியமாகவே மாறி விட்டாள்...

ஏமாற்றமும் அளவு கடந்த அன்பு ஒருவரை எந்த எல்லைக்கும் முட்டாளாக மாற்றி விடும்....

நேத்ராவின் ஏமாற்றம் அவளை மெல்ல மெல்ல மனநோயாளியாகவே மாற்றப்போவதை அறியாமல் மித்ரன் மிதப்பாகவே சமாளித்தார்.......

சபலம் யாரை விட்டது...

நேத்ரா மயங்கிய சில கணங்களில் அவள் கையிலிருந்த அவனுடைய கைப்பேசி சொல்லாமல் சொல்லிவிட்டது நடந்ததை....மித்ரனுக்கு....

அவள் விழிக்கும் தருணத்திற்குள் பெயரை மாற்றி எல்லாவற்றையும் அழிப்பதற்கு போதுமான நேரம் கிடைத்துவிட்டது மித்ரனுக்கு....

இங்கு ஆதாரங்கள் இல்லாமல் கற்பழித்தவனுக்கு கூட உண்மை நிலை புரிந்தாலும் சாட்சி இல்லை என்று விடுதலை செய்யும் நாடு நமது நாடு....

மித்ரனுக்கு வீட்டில் ஏமாற்றவா வழியில்லை.... நடந்ததெல்லாம் கனவென நினைக்கும் படிக்கு மித்ராவை குழப்பும் விதமாக அனைத்தயும் அழித்தவரால் சில தனிப்பட்ட தகவல்களை அழிக்க முடியவில்லை.... முடியவில்லை என்பதை விட நினைவில்லை. ....

நேத்ரா மித்ரனின் சட்டையை இழுத்து கேட்ட எந்த கேள்விக்கும் அவர் கலங்கவில்லை.... பார்த்துக்கொண்டு இருந்த அவரின் தாய்க்கு தான் பொறுமை இல்லை.

பிள்ளைகள் தவறு செய்கையில் பெற்றவர்களுக்கு கண்கள் தெரிவதில்லை... அதிலும் தவறென்று தெரிந்தாலும் மறுமகள் தட்டிக் கேட்பதில் ஆண் பிள்ளைகளை பெற்ற அம்மாக்களுக்கு அறவே பிடிப்பதில்லை ...

இங்கே வசந்தாவும் அதையேத் தான் செய்தார்....

நேத்ரா அழுது ஓய்ந்து அந்த கைப்பேசியில் தேடித் தேடி சிலவற்றை கண்டறிந்தாள் ...அதை மித்ரனிடம் காட்டி நியாயம் கேட்கும் முன் தன்னை காப்பாற்றிக் கொள்ள மித்ரனால் அந்த கைப்பேசி கபளீகரமானது ....

உத்தமப் புத்திரனாக கோவத்தில் வீசி உடைத்து வெளிநடப்பு செய்தார்.... கணேசனுக்கு எதுவோ புரிந்தது.....

தன் மகன் சரியில்லை என அந்த தந்தைக்கு புரிந்தது ....ஆனால் தாயினால் அதை ஏற்க முடியவில்லை.... என்ன எம்புள்ள நாட்ல நடக்காததயா பன்னிட்டான் ... என்ற எண்ணம்....

தலையில் அடித்துக்கொண்டு உடைந்த சில்லுகளை அள்ளி மடியில் போட்டு அழமட்டுமே முடிந்தது நேத்ராவால்.... விடிய விடிய அழுதாழ் ஊண் உறக்கம் மறந்து அழுதாள்....

அவளுக்கு தோன்றியதெல்லாம் ஒன்று தான்... அது மரணம்.... அவளுடைய வலிக்கு நிவாரணியாக அவள் தேர்ந்தெடுத்த மருந்து மரணம்....

தற்கொலை ஒரு கோழைத்தனம் தான்...

அதை தேர்ந்தெடுப்பதற்கும் ஒரு தனி தைரியம் வேண்டுமில்லையா....

இனி என்ன செய்ய முடியும் பைத்தியமாக காதலித்த ஒருவன் இரு வருடம் கூட தாண்டாத நிலையில் தன்னை நிற்கதியாக்கி யாரோ ஒருத்தியை செல்ல பொண்டாட்டி ....அம்மு... செல்லம் என தனக்கு மட்டுமே உரிமை கொண்டாடிய வார்த்தைகளை தாரைவார்த்துக் கொடுத்தால் அதை எந்த மனைவியால் தைரியமாக எதிர்கொள்ள முடியும்...

இனி பெற்றோரின் நிழலில் நின்று வாழா வெட்டி என்றோ வாழ்க்கை போனவள் என்றோ வாழ அவளுக்கு விருப்பம் இல்லை முக்கியமாக தன் இடத்தில் தன் கணவனின் தோளில் வேறொருத்தி சாய்வதையோ தன் இடத்தை அவள் நிரப்புவதையோ நினைக்கவே அமிலத்தை சுவைத்த உணர்வு எழுகிறது....

அதை நேரில் கண்டு பின் நான் சாவதைவிட நான் இப்போதே சாவதே மேல் .... அதுதான் அன்று அவளுக்கு தோன்றியது....

பசி தாங்காதவள்.... பத்து மணிக்கு மேல் விழிக்க முடியாதவள்.... சின்ன சூடு காயத்தையும் பொருக்காதவள் அழகாக கத்தரித்துக் கொண்டாள் அந்த இடது கை மணிக்கட்டின் நரம்புகளை.....

அவளுக்கு வலித்தது கைகளில் அல்ல இதயத்தில்.... இரத்தம் என்னவோ கையிலகருந்து தான் வழிந்தது.... மரத்துபோன தோலுக்கு தான் வலி தெரியவில்லை.... இதயத்தில் அவனோடு வாழ்ந்த அழகான காதல் வாழ்க்கையை அதன் அழிக்க முடியாத பக்கங்களை யாரோ கசக்கி கசக்கி கிழித்த உணர்வு ......கண்கள் மங்கிட சரிந்த நொடி அவளுக்கு தோன்றியதெல்லாம் அந்த குறுஞ்செய்தியும்....

இனி அவனுடைய முத்தங்கள் எனக்கில்லையே.... அவனுடைய காதல் எனக்கில்லையே என்ற ஏக்கமும் தான்....

குறுதி வழிய நொடியில் நிகழ்த அசம்பாவித்தை நம்பமுடியாத மித்ரனுக்கு அவள் விழிகள் சிந்திய கண்ணீரில் வலி தெரியவில்லை அவளுடைய காதலுக்கு தான் செய்த துரோகம் தான் தெரிந்தது...

இழக்கும் போது தான் எல்லோருக்கும் நிழலின் அருமையும் நீரின் அருமையும் தெரிகிறது....

அவள் போகும் நொடியும் நிம்மதி இழந்து ஆற்றாமையோடு தான் சரிந்தாள் அதே மித்ரனின் கரங்களில்......

அவள் சாகும் முன் அவள் கண்களில் வழிந்த காதலிலும் ஏக்கத்திலும் அவனை சாட்டையாக சுழட்டிக் கொன்றுபோட்ட குற்றவுணர்ச்சியிலும் இவன் மரணித்து போனான்....

இவள் இந்த சாதாரண குறுஞ்செய்தி மட்டும் பார்த்ததற்கே இப்படி கையை கிழித்துவிட்டாளே..
இன்னும் இவளுக்கு நான் செய்த துரோகத்தின் வீரியம் தெரிந்தால் நிச்சயமாக இவளால் என்னை எந்த சூழலிலும் மன்னிக்கவே முடியாதே…

முடிவு செய்துவிட்டான் இனி என்ன நடந்தாலும் எதையும் தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் உளறிடக் கூடாது…

விளையாட்டு வினையானதைப் போல நான் யாருக்கும் தெரியவராது என்ற நிலையில் தொடர்ந்த இந்த உறவால் இன்று என் நிலை என்ன… ஒரு வேலை இவளுக்கு ஏதேனும் நேர்ந்தால் பின் ஒன்பது மாத கைக் குழந்தையின் நிலை என்ன தாயும் இன்றி தந்தையும் இன்றி என் பிள்ளை வளரவா நான் இவ்வளவு சுயநலவாதியானேன் என்று முழுதும் மரத்துபோன உணர்வோடு அவளை அள்ளிக்கொண்டு ஓடினான்...
அவள் காதலே அவனை மீட்டு அவளையும் மீட்டி... மீண்டும் நம்மை காதலால் மூழ்கடிக்கட்டும். ... அதுவரை நாமும் அவர்களோடு மருத்துவ மனைக்கு பயணிப்போம்.....
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
யாழ் மொழி @ காயத்ரி வினோத் குமார் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top