தீராத் தீஞ்சுவையே...41

Advertisement

Yazh Mozhi

Active Member
தீராத் தீ ____41

முகிலன் படிக்க வேண்டி நேத்ரா கொடுத்த டைரியின் பக்கங்களை யாழிசையின் விழிகள் மேய்ந்தது....

அவளுக்கு இத்தகைய இடியை அன்னை எப்படி எதிர்கொண்டார் என்ற ஒரு நடுக்கமே பரவியது..

அதன் உட்பொருள் தன் தாயின் தவிப்பை உணர்த்தியதோடு தந்தையின் அலட்சியத்தையும்.....சுயநலத்தையும் அப்பட்டமாக காட்டியது...

தந்தையின் மீதான ஹீரோ ஒர்ஷிப் ஒடிந்து ஆட்டம் கண்டு சாய்கோபுரமாக சரிந்தது.....

காரணம் தந்தையின் வாழ்க்கையில் இன்னொரு பெண்...... இதை மகளாக யாழிசையால் ஏற்கனவே முடியவில்லை..... எனும்போது பாவம் அப்பாவை உயிராக நினைத்திருக்கும் அன்னைக்கு இது எத்தனை பெருத்த அடி...

இதோ அந்த தருணத்தில் மித்ரனும் மருத்துவ மனையில் அதைத்தான் அசைபோட்டபடி அமர்ந்திருந்தார்...

முகிலனுக்கு அன்னையின் கடைசி வார்த்தைகள் வேறு இப்போது மனதை வாள் கொண்டு அறுக்கும் படி இருந்தது .

செல்வமும் செழியனும் முகிலனை தேற்றிக் கொண்டு அவசர சிகிச்சை பிரிவின் வெளி வாயிலில் காத்திருக்க...

தன்னைத் தேற்ற யாரும் இன்றி மித்ரன் சிறு குழந்தையாக கோவமும் அழுகையும் ஆற்றாமையுமாக நேத்ராவையும் அவளுடனான வாழ்வையும் அதில் அவர் செய்த தவறையும் நினைத்து மனதில் மருகிக்கொண்டு இருந்தார் ....

திருமணம் முடிந்து ஒரு வருடம் எல்லாம் சுபமாகவேச் சென்றது .... உண்மையை சொல்லப் போனால் அதன் ஆயுள் அதை விடவும் குறைவு….

திருமணத்திற்கு முன்பு மித்ரனிடம் பல பெண்களுக்கு தோழமை இருந்தது.

எத்தனையோ பெண்களுக்கு அவன் மீது ஒரு ஈர்ப்பும் இருந்தது.....

வலிய வரும் வாய்ப்புகள் யாருக்குத்தான் கசக்கும்....

டைம்பாசிற்காகவும் உடன் உள்ள நண்பர்களின் பொறாமையைத் தூண்டி கடுப்பேற்றவும்.... ஏதுவாக மித்ரனின் திருமணத்திற்கு முந்தைய இல்லை..... இல்லை .....காதலுக்கு முந்தையப் பக்கங்கள் இருந்தது....

ஆனால் முந்தையப் பக்கங்களின் கிருக்கல்கள் நேத்ராவிற்கு தெரியாமல் போனது தான் பெரிய இடி...

இப்படி பல பேர் திருமணத்திற்கு முன் வரை அவன் வாழ்வில் நட்பாகவும் .... கிரஷ்ஷாகவும் வந்து போனதோடு அல்லாமல் நவீன சமூக வலை தளங்களின் முகத்திரைக்கு பின் தன் கடலையை வருப்பதை மித்ரன் ஒரு விளையாட்டாகவே தொடர்ந்தது அடுத்த இடி.....
தனிமையிலும் ....ஏதாவது டென்ஷனிலும் கோவத்திலும் தண்ணி அடிப்பது.... புகைப்பிடப்பது போல முகம் தெரியாத யோரோ ஒருவருடன் இணக்கமாக பொழுது போக்கிற்காக பேசும் பழக்கம் மித்ரனிடம் இருந்ததை அறியாமல் போனதே நேத்ராவின் தழும்பிற்கு காரணம்....

அவன் திருமணம்...... காதல்...... இதில் எல்லாம் எத்தனை உண்மையாக இருந்தானோ அதே போல வாழ்விலும் இருக்க முயன்றும்..... சில மோசமான கணங்கள் அவனை அதில் இழுத்துச் சென்றதே உண்மை....

வீட்டில் ஏற்பட்ட சில இடைஞ்சல்கள் சஞ்சலங்கள் காரணமாக நேத்ரா மித்ரனிடையே அடிக்கடி சிறு சண்டைகள் எழத்துவங்கியது.... நிறைமாத கற்பிணியாக இருக்கும் வரை அவள் கணவன் வீட்டில் தான் இருந்தாள்.. .

அவனை விட்டு போக மனமில்லாமல் மாமியார் வீட்டிலேயே இருந்துவிட்டாள்.... பிரசவமும் அங்கேயே நடந்தது...

அறுவை சிகிச்சை செய்துதான் குழந்தையை காக்க முடிந்தது.... அதனால் நேத்ரா வலியின் பயத்திலும் தாய் வீட்டின் ஏக்கத்திலும் அம்மா வீட்டுக்கு சென்றாள்...

அதிகமாக இல்லை நான்கு மாதங்கள் தான்....இத்தனை நாள் மனைவியின் அருகாமையில் அடங்கிய பழக்கம் .....மனைவியின் பிரிவில் தனிமையில் மீண்டும் தானாக தொடர்ந்தது....

முகம் தெரியாத பலரில் என்றோ உடன் பயின்ற அவளும் அவனிடம் அப்போது பேச நேரும் என்று மித்ரன் எதிர்பார்க்கவில்லை… அவளே அவன் மூலமாக அவனுடைய அலுவலகத்தில் வேலைக்கு சேருவாள் என்றும் அவன் எண்ணவில்லை...

பள்ளிகால க்ரஷ்....அவளைக் கண்டறிந்து அனைத்தையும் பகிர்ந்து கொண்டவனுக்கு ஏனோ திருமணம் குழந்தையை குறித்து கூறத் தோன்றவில்லை...

காரணம் முகநூலில் அவனுக்கு பல கணக்குகள் இருந்தது.... அதில் எல்லாம் சிங்கிள் என்ற ஸ்டேடஸே இருந்ததால் அவளுள் அவனை சிங்கிள் என்றே நினைத்து பேசினாள்....

அவளையும் அவளுடனான நான்கு மாத பழக்கத்தையும் மனைவியிடம் மறைத்து சுலமாக தப்பிக்க இரண்டு சிம் கார்ட் போடக்கூடிய இரண்டு மொபைல் ஃபோன் உதவியது.

வழக்கத்திற்கு மாறாக பல மணி நேரங்கள் அவன் அலை பேசி பிசியாகவே இருந்தது..

குழந்தையின் வரவினால் நேத்ராவும் மித்ரனை தொல்லை செய்யாமல் அவனை கவனிப்பதே கண்ணாக இருந்தாள்....

அதுதான் அவளுடைய வாழ்க்கை சிதையவும் காரணமாக இருக்கும் என்று அப்போது அவளே அறியவில்லை...

சிசேரியன் வலியும் அவளை இரணமாக வாட்டியது..

மித்ரன் பாஸ்வேட் போட்டு அனைத்தையும் மறைத்தான்...வீட்டிற்குள் நுழையும் முன்பே கால் லிஸ்ட்களை அழித்து விடுவது..... மெசேஜ்களை அழிப்பது சந்து முனையில் நின்று மணிக்கணக்கில் பேசிவிட்டு கேட்டால் ஆஃபிஸ் மொபைல் அஃபிஷியல் கால் என்று கதை அளந்தான்....

நேத்ராவும் துளியும் சந்தேகம் இன்றி கணவனை காதலித்துக் கொண்டிருந்தாள்....

ஒரு கட்டத்தில் இதுவே மித்ரனுக்கு தொடர்கதையானது... அவனுடைய வேலை பளுவை மறப்பதற்கும் அதன் இருக்கத்தை தளப்பதற்கும் ....ஒரு வடிகாலாக அந்த பழைய தோழியுடனான நட்பு அமைந்தது...

அவனுக்கு சில நேரம் நேத்ராவிடம் மறைத்து அவளை ஏமாற்றுகிறோமோ எற்ற எண்ணம் வந்தாலும் .....அந்த இரகசிய தொலைப்பேசி அழைப்புகளின் எதிர்பார்ப்பும் அது தந்த ஒருவித புத்துணர்வும் அவனை தொடர்ந்து தவறை உணராது நியாயப்படுத்த வைத்தது..

உடலால் நான் வேறு பெண்ணோடு வாழவில்லை.... சும்மா பேச மட்டும் தானே செய்கிறேன் அது எப்படி தவறாகும் ....என்று அவனை அவனேத் தேற்றிக் கொண்டான்...

இப்படியே முகிலனுக்கு எட்டு மாதங்கள் ஓடியது ..

மித்ரனின் திருவிளையாடலும் தொடர்ந்தது....

நேத்ரா நல்ல அம்மாவாக நல்ல மனைவியாக வீட்டில் தன் கடமையை செய்தாள்..... பல நேரம் கணவனின் நடவடிக்கை வித்தியாசமான உணர்வைத் தந்தாலும் சந்தேகிக்க முடியவில்லை. ..

ஆனால் எல்லா நேரமும் தவறை மறைக்க முடியாதில்லையா.....

அப்படி ஒரு சுப யோக சுப தினத்தில் ஒரு கல்யாணத்திற்கு செல்ல வேண்டி ....முந்தைய இரவு தனக்கும் மகனுக்கும் மேட்சாக உடை...... தேவையான பொருட்கள் என பார்த்து எடுத்து வைத்துக்கொண்டு இருந்தாள் நேத்ரா....

மித்ரன் கைப்பேசியை கையில் பிடித்துக்கொண்டு அப்படியே தூங்கிவிட .....தொடர்ந்து வந்த குறுந்தகவல்களின் சத்தம் நேத்ராவின் கவனத்தை திசைத் திருப்பியது....

யாரது இந்த நேரத்தில் ....என்று மித்ரனின் கைப்பேசியை எடுத்து பார்ததவளுக்கு ஒரு கணம் எந்த அதிர்வும் வரவில்லை......ஏதோ தோன்ற அந்த குறுந்தகவலின் பெயரைப் பார்த்தவளுக்கு படபடப்பாக இருந்தது...

உடனே தன்னுடைய கைப்பேசியை எடுத்து ஆராய்ந்து சிலவற்றை சரிபார்த்தவளக்கு அடுத்தடுத்து வியர்வை வழியத் துவங்கியது....

அவளால் முழுமையாக மித்ரனின் கைப்பேசியை ஆராய முடியாத படி ....அவன் போட்டு வைத்திருந்த பாஸ்வேட் தடுத்தது...

அவளுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் .....கணவனை சந்தேகிக்கவும் முடியாமல் கைகள் நடுங்கியது .....மெல்ல மித்ரனை அசைத்து பாஸ்வேட் என்ன என்று கேட்டுப்பார்க்க அவன் அசையவே இல்லை....

இவள் எதுவானாலும் காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று பதட்டத்தை குறைக்க முயன்று அடுத்த கணம் மீண்டும் மித்ரனின் கைப்பேசிக்கு வந்த குறுந்தகவல்..... நேத்ராவின் கண்களை கலங்கடித்து கால்கல் வலுவிழந்து ...பூமி பிளந்து உள்ளே சிக்கிய உணர்வோடு .....வேர் அறுந்த மரமாக கீழே சரிந்தாள்....

அவளுக்கு அந்த கணமே செத்து பிணமான உணர்வோடு எல்லாம் மங்கி நினைவு தப்பியது...

அதுவே அப்போது மித்ரனுக்கு தவறை மறைத்து எல்லோர் கண்ணிலும் மண்ணைத் தூவிட .....போதுமான இடைவெளியாக இருந்ததோ என்னவோ.....

ஆனால் அந்த சில நிமிட மயக்கமே நேத்ராவின் தழும்பிற்கு ஆதாரமாக அமைந்ததேக் கொடுமை.....
எப்படியெல்லாம் காதலித்தவனால் இப்படி கூட ஏமாற்ற முடியுமா. எத்தனை போராட்டங்கள் நடந்து காதலில் சேர்ந்த பின் தன் சிசுவை அவள் சுமந்து அதை பெற்றெடுத்த இரணம் கூட ஆறாத நிலையில் இன்னொருத்தியை மனம் நாடுமா….

இங்கே யார் மீது தவறு வாய்ப்பு கிடைக்காத வரை எல்லோரும் யோக்கியன் என்றால் வாய்ப்பு கிடைத்தால் தவறு செய்வது என்பது எந்த வகையில் நியாயம்.

ஒர பெண் உருகி உருகி காதலிக்கிறாள் மனைவியாக உடலாலும் உணர்வாலும் எத்தனை இரணங்களை கடந்து கணவனையும் அவன் குடும்பத்தையும் காக்கிறாள்…

அவளுக்கு இப்படி ஒரு பச்சை துரோகத்தை ஒரு ஆண் செய்வது எத்தனை தவறு .. அது தந்தை என்கிற பட்சத்தில் யாழ் முற்றிலும் உடைந்து போனால்… தன் அன்னையின் வலியை எண்ணி எண்ணி கதறி அழுதாள்….
மீண்டும் கண்களை துடைத்துக் கொண்டு வாசிக்க முனைந்தால் முடியவில்லை இதயம் தணத்தது….
___தொடரும்…
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
யாழ் மொழி @ காயத்ரி வினோத் குமார் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top