தீராத் தீஞ்சுவையே..40

Advertisement

Yazh Mozhi

Active Member
தீராத் தீ____40

இனிமையான நிகழ்வுகளில் புன்னகையோடு இலயித்திருந்த நேத்ராவை பூகம்பமாக மீண்டும் உலுக்கி நிகழ்விற்கு கொண்டுவந்தான் முகிலன்.....

அவன் எதிர்பார்த்த கேள்விக்கான பதில் அன்னையின் கடந்த கால காதலில் இருந்து கிடைக்கவில்லை....

ஆதலால் பெருத்த தயக்கத்திற்கு பின்பு அந்த கேள்வியைக் கேட்டே விட்டான்.

ம்மா.... அப்போ ... இந்த த...தழும்பு .... அது எப்படி ம்மா...... நான் தெரிஞ்சிக்கலாமா....

அவன் நேத்ராவின் இடது கையை சுட்டிக்காட்டி கேட்ட போது அதிர்ந்த பார்வையோடு ஒரு விரக்தி புன்னகையை உதிர்த்தார் நேத்ரா....

என்னம்மா....நான் ஏதாவது உங்களுக்கு வருத்தம் தரா மாதிரி கேட்டுட்டேனா...உங்களுக்கு விருப்பம் இல்லைனா நீங்க சொல்ல வேண்டாம்மா... பிளீஸ்...

இல்லை முகில்... நீ கேட்டதில் எந்த தவறும் இல்லை.. உனக்கு தகுந்த காலம் வரும் போதுதான் இதை குறித்து சொல்லாம்னு தான் நானும் காத்திட்டு இருந்தேன்....

இப்போ நீ கேட்டதே நல்லது தான்..

ஆனா இந்த சந்தோஷமான மனநிலையை நான் பழசை பேசி கெடுத்துக்க விரும்பல முகில்...

நடந்து முடிஞ்ச ஒரு நிகழ்வு தான்.... ஆனா இன்னைக்கு வரைக்கும் அதோட தாக்கமும் வலியும் எனக்குள் ஆராமல் இரணமா இருக்கு முகில்..

எவ்வளவு சந்தோஷம் என் வாழ்க்கையில் வந்தாலும அந்த ஒரு சின்ன காயத்தோட வலி என்னை கடைசிவரை உள்ளுக்குள் அழவைப்பதை நிருத்தாது முகில்....

ம்மா... அப்படி உங்களுக்கு வருத்தம் தரக்கூடிய விஷயம் எனக்கு தெரிய வேண்டாம்...நீங்க ஸ்ட்ரைன் பன்னாதீங்க போய் தூங்குங்க ம்மா...

நீ வேண்டாம்னு மறுத்தாலும் நீ கண்டிப்பா தெரிஞ்சிக்க வேணும் முகில்....ஆனா அம்மா அத இப்போ சொல்ற அளவுக்கு மனசுல பலத்தோட இல்ல முகில் .... கொஞ்சம் இரு இதோ வரேன்....

என்று வெளியே சென்றார்....

முகிலன் சற்றே குழப்பத்தோடும் சற்று முன் இருந்த சந்தோஷத்தை தொலைத்த முகத்தோடும்யோசனையாக இருந்தான்..

இத்தனை நேரம் இங்கே நடந்த இந்த உரையாடலை இரண்டு ஜோடி காதுகளும் கேட்டுக் கொண்டு இருந்தது..

ஆனால் முகிலனின் கேள்வியிலும் நேத்ராவின் பதிலிலும இரண்டு கண்கள் விரக்தியில் அதிர்ந்து கலங்கிட ஒரு ஜோடிக் கண்கள் குழப்பமாக தயங்கி அமைதி காத்திருந்தது....

முகிலன் மௌனமாக வாசலைப் பார்த்துக்கொண்டு இருந்தான்...

தன்னுடைய தனிப்பட்ட சிறிய அறையில் இருந்த நூலகத்திற்குள் சென்ற நேத்ரா அந்த பழைய தூசி படிந்த ஒரு பாலித்தீன் சாக்குப் பையை திறந்து உள்ளே இருந்த ட்ரங்க் பெட்டியை எடுத்தார்.... அதன் பூட்டு போடாத தாழ்பாளைத் திறந்து அந்த பழைய நாட்குறிப்பேடுகளை எடுத்தார்..

அதை உறுத்து விழித்தவர்... ஒரு பேருமூச்சு விட்டு வெளியே வந்தார்..முகிலனின் அறைக்குள் வந்தவர் முகிலனை ஒரு நிமிடம் மௌனமாகப் பார்த்தார் ...

முகில் எல்லோருடைய வாழ்விலும் ஒருசில மறக்க முடியாத கருப்பு பக்கங்கள்... இருக்கும் அது போல .....இந்தத் தழும்பு என் வாழ்வின் கருப்பு பக்கங்களின் அடையாளம். ..

அதை சொல்லி மீண்டும் என் காயத்தை கிளரி அழுது புறள நான் விரும்பவில்லை முகில் .....

இந்த சந்தோஷ மனநிலையோடு நான் போகிறேன்.. நீ... நீ இதை படித்து தெரிந்து கொள்.. இது உனக்காகவே நான் எழுதியது முகில்.... என் முடிவிற்கு பின்னர் தான் நீ இதை படிக்க வேண்டும் என்று எண்ணி தான் எழுதினேன்....

அதற்கான அவசியமும் அதற்கான காலமும் நெருங்கிவிட்டதால் ....இப்போதே உன்னிடம் சேர்க்கிறேன் முகிலா...

ம்மா. ... பிளீஸ் நீங்க பேசுறது ஒன்னும் எனக்கு புரியல தான்...ஆனால் நீங்க பேசும்விதம் எனக்கு பயமா இருக்குமா... பிளீஸ் எனக்கு எதுவுமே தெரிய வேண்டாம் நீங்க இத எடுத்துகிட்டு போங்க ம்மா... பிளீஸ்...

பயப்படாத முகில் இதில் ஒன்னும் இல்லை பிடி நான் வரேன்... இப்போ ஒன்னும் அவசரம் இல்லை நீ இப்போ படுத்து தூங்கு அவசியம்னு தோனும்போது படி நான் வரேன்....

முகிலன் ஒரு பேருமூச்சோடு அந்த நாட்குறிப்பேட்டை வாங்கினான்....நேத்ரா மெல்ல அவளுடைய அறைக்கு நகர்ந்தார்...

முகிலன் அந்த டைரியை ஒரு பயம் கலந்த அமைதியோடு தொட்டுப் பார்த்து அதன் மேல் அட்டையையும் அதன் ஆண்டையும் பார்த்துக்கொண்டு இருந்தான்...


திறப்பதா....வேண்டாமா....

அந்த கையேட்டை வருடிக் கொண்டிருந்த முகிலுக்கு அன்னையின் குரலும் அதில் வழிந்த வருத்தமும் கலங்கிய கண்களும் ஏனோ இத்தனை நேரம் இருந்த சந்தோஷத்தை தானே பறித்துக்கொண்டு அழ வைத்த உணர்வு.... இல்லை இல்லை... குற்றவுணர்வு..... அப்படியே அமர்ந்து அமைதியாக அறையை வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தான்.....

நேத்ராவும் முகிலும் இத்தனை நேரம் பேசியதை அடுத்த அறையின் பால்கனி வழியே இருந்து மித்ரனும் யாழிசையும் கேட்டுக் கொண்டிருந்தனர்.....

தந்தை என்றாலே எல்லா மகள்களுக்கும் சிம்ம சொப்பனம் தானே.... பற்றாத குறைக்கு நேத்ரா மித்ரனின் காதல் காலங்களை கேட்டதில் யாழிசை மிகவும் உற்சாகமாக ஒவ்வொரு தருணத்திலும் தந்தைக்கு ஐஃபை கொடுத்துக் கொண்டு இருந்தாள் ...

இறுதியில் மனைவி பேசியவை மகளான யாழிசைக்கு புரியாவிட்டாலும் தந்தையான மித்ரனுக்கு நன்கு புரிந்திருந்தது...

மனைவி எதை பற்றி இப்படி பூடகமாக கூறினாள்.... என்று... ஆனால் அவள் கையேடாக எழுதி வைத்திருப்பாள் என்பது மித்ரனுக்கே புதிய செய்தி....

யாழிசை தந்தையைத் திரும்பி பார்த்து கண்களால் கேள்வி கேட்டாள் ....மித்ரன் எதையும் கூற முடியாமல் சிரித்து மழுப்பி யாழிசையை திசை திருப்பி தூங்க அனுப்பினார்.....

அந்த சிறிய தவறை இவள் இன்னும் மறக்காமல் இப்படி .. தன்னைத்தானே வருத்திக் கொள்வதைக் கண்டு மித்ரனுக்கு என்ன மாதிரி இந்த உணர்வை வரையறுப்பது என்றேத் தெரியவில்லை....

எப்படியும் இப்போது அவள் இருக்கும் உடல்நிலைக்கு இந்த நிகழ்வுகளை மீண்டும் நினைத்து மேலும் உடல்நிலையை வருத்திக் கொள்வதில் அவருக்கு உடன்பாடு இல்லை...

எப்படியாவது அவளை இயல்பு நிலைக்கு மாற்றியே ஆக வேண்டும்...இப்போது அவளுக்கு தன்னுடைய அருகாமையும் ஆறுதலும் வேண்டும் என்று உணர்ந்தார்.....

பல ஆண்களுக்கு நாற்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் தான் மனைவியின் அருமை புரிகிறது... அவளுடைய அன்பும் ஏக்கமும் புரிகிறது....

அவளுக்கு என்ன தேவை எப்போது எப்படி நடந்துகொள்வாள் என்று ஒரு முடிவுக்கு வருவதற்கே கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் தேவைப்படுகிறது.. ஏனென்றால் நடுத்தர குடும்ப சூழலில் அன்றாட செலவுகளுக்கும் தேவைக்கும் ஓட்டப்பந்தயமாக ஓடுபவர்கள் ஆண்கள்.....அவர்களுக்கு தேடி களைத்து ஓய்ந்த பின்பு தான் மனைவியை நேசிக்கவும் அவளுக்காக நேரம் ஒதுக்கவும் அவர்களுடைய சராசரி வாழ்க்கை நகர்ந்து வழிவிடுகிறது..... அவர்களும் பாவம் என்ன தான் செய்ய முடியும்......
ஒரு வழியாக முகில் அந்த கையேட்டை திறக்க மனமில்லாமல அருகே இருந்த டேபிலில் போட்டு பத்திரப்படுத்திவிட்டு பால்கனிக்கு சென்று சற்றே காற்று வாகாய் நின்றான்.... மனம் ஏதோ உள்ளுக்குள் பிசைந்து வருத்தியது என்னவோ சரியில்லை என்று உறுத்திக் கொண்டிருந்தது....

மித்ரன் யாழிசையை உறங்க பணித்துவிட்டு நேரே மனைவியைக் காண சென்றார் .

ஆங்கே நேத்ரா நெஞ்சை பிடித்துக்கொண்டு மூச்சுக்கு திணறி வியர்த்து கட்டிலில் தள்ளாடி அமர்ந்து வலியில் வார்த்தை வராமல் கீழே சரிந்தார்...

அதைக்கண்ட மித்ரன் ஒரு நொடி என்ன ஏது என்று புரியாமல் வேகமாக ஓடிச்சென்று கீழே சரிந்தவரை மடி தாங்கி கன்னங்களை தட்டி குரல் கொடுத்தார். .

அருகே பிளாஸ்கில் இருந்த தண்ணீரை தெளித்து குரல் கொடுக்க நேத்ரா வலியின் வீரியத்தில் பேச்சற்று மூச்சுக்கு திணறித் தவித்தார்...

பயந்து போன மித்ரன் கண்கள் கலங்க முகிலை அழைத்தார்...

அவர் இட்ட கூச்சலில் வீட்டில் உறங்காத பல பெரிய தலைகளும் என்ன ஏது என்று சலசலக்க ....முகில் தந்தை அலறியக் குரலில் வேகமாக அவருடைய அறைக்கு ஓடினான்..

அப்பா... அப்பா... என்னப்பா என்றவன்...அன்னையின் நிலை கண்டு தலையில் கைவைத்து இடிந்து போனான்.... அடுத்த வினாடி வேகமாக முகிலும் மித்ரனும் நேத்ராவை தூக்கிக் கொண்டு கீழே காருக்கு சென்றனர்....

வேகமாக காரைக் கிளப்பிக் கொண்டு மருத்துவ மனைக்கு விரைந்தனர்....

வீட்டில் உள்ள பெரியவர்கள் மூலம் செல்வம் மற்றும் அன்புவுக்கு தகவல் தெரிந்து இருவரும் வேகமாக தங்களுடைய வாகனங்களில் மனைவிகளோடு கிளம்பினர்....

சிறுபிள்ளைகளை பெரியவர்களிடம் சொல்லி விட்டுவிட்டு அவர்களுடைய தேவையை யாழிசை மற்றும் யாழினியின் பொருப்பில் விட்டுவிட்டு பெரியவர்கள் காரை பின் தொடர...

இங்கே பயந்துபோன யாழிசைக்கு ஒன்று தெளிவாகப் புரிந்தது.... அம்மாவின் தழும்பிற்கும் இந்த நெஞ்சுவலிக்கும் அந்த டைரிக்கும் ஏதோ தொடர்பு உண்டு...
அதோடு நடந்த இந்த அத்தனை குழப்பங்களிலும் பெரிய காரணமே தந்தை தானோ என்ற சந்தேகமும் அவளுக்கு எழுந்தது.....

உண்மையை அறிய வேண்டுமாயின் அந்த டைரியை முகிலுக்கு பதில் முதலில் தானே படித்து உண்மை நிலையை அறிய வேண்டும்...

எப்படியாவது அன்னையை பழைய நிலைக்கு மாற்றி இந்த குடும்பத்தின் சந்தோஷத்தை மீட்டெடுக்க வேண்டும்.... என்று ஏங்கினாள்...

அங்கே வீட்டில் யாரும் இல்லாததாலும் முகிலின் அறைக்கும் யாழிசையின் அறைக்கும் ஒரே பால்கனி என்பதாலும் தன் அறை வழியேச் சென்று அவனுடைய அறையை அடைந்திருந்தாள் யாழிசை...

முகில் சற்று முன்பு அங்கே நின்றிருந்ததால் கதவை பூட்டாமல் விட்டது அவளுக்கு வசதியாக இருந்தது... வேகமாக அறைக்குள் நுழைந்து தேடியவளுக்கு ஐந்தே நிமிடத்தில் அந்த கையேடு கிடைத்துவிட்டது....

அங்கே மித்ரன் மற்றும் முகிலன் வேகமாக மருத்துவ மனையைச் சென்று அடைந்திருந்தனர்..

முகிலுக்கு கால் செய்து விவரம் கேட்டபடி அன்புவும் செல்வமும் விரைந்தனர்.

நேத்ரா அவசரச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்....

மருத்துவர்கள் வேகமாக செல்வதும் செவிலியர்கள் உள்ளே நுழைவதும் வெளியேறுவதுமாக இருக்க மித்ரன் பயந்துவிட்டார். ..

முகிலன் தன் அன்னையின் நிலை புரியாது கேள்வி கேட்டு அவரை உணர்ச்சிவசப் பட வைத்த தன்னையே எண்ணி நொந்து போனான்.

அன்புவும் செல்வமும் அங்கே விரைந்தனர்.. என்ன மாமா என்று அன்புவும் என்னாச்சு மாப்பிள்ளை என்று செல்வமும் ஒரு சேர முகிலயும் மித்ரனையும் துளைத்தனர்....

முகில் அமைதியாக நிலையையை எடுத்துரைத்தான்.... மித்ரன் கண்கள் கலங்க கைகளை கட்டிக்கொண்டு மௌனமாக வேண்டிக் கொண்டிருந்தார்....

அன்பு அவருடையத் தோளை அழுத்தி ஆறுதல் படுத்தினான்...

முகில் செல்வத்திடம் புலம்பி கண்கலங்கினான்.. என்னால தான் மாமா... எல்லாம் என்னால தான்... நான் தான் அம்மாகிட்ட கேள்வி கேட்டு அவங்க மனசை கஷ்டப்படுத்திட்டேன் மாமா என்று அழுதான்...

செல்வம் மித்ரனை முறைத்துவிட்டு முகிலை சமாதானம் செய்தார்.... அதெல்லாம் இல்லை முகில் நீ அழுகாத நேத்ரா நல்லபடியா வந்து உங்க கூட சந்தோஷமா இருக்கப் போறா... நீ அழாம இரு சரியா. தப்பு பன்னவங்களே கல்லுமாதிரி இருக்கும் போது நீ ஏன்டா கண்ணு அழுகுற என்று அனைத்துக் கொண்டு சமாதானம் செய்தார்...

மித்ரன் செல்வத்தின் வார்த்தையில் கண்கலங்கி அமைதியாக மனைவியோடு மானசீகமாக மௌனத்தில் போராடினார் . .

வீட்டில் டைரியை விரித்த யாழுக்கு அதன் வரிகள் கண்களை கரிக்கச் செய்தது...

ஒரு நவீன யுகத்தின் நாகரீகப் பெண்ணாக அவளால் அந்த வரிகளை சாதாரண நிகழ்வாக எடுத்துக்கொண்டு படித்தாலும் அன்னையின் உணர்வுகளை உள்வாங்கி உணர்ந்த போது அவளுக்கும் அழுகை வந்தது....
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
யாழ் மொழி @ காயத்ரி வினோத் குமார் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top