தீராத் தீஞ்சுவையே..39

Advertisement

Yazh Mozhi

Active Member
தீராத் தீ ____39
முதலில் மித்ரன் பட்டு வேட்டி பட்டு சட்டையோடு மேடை ஏறினான்.... சுற்றிலும் ஃபோட்டோ கிராஃபரின் லைட்டிங் உபயத்தில் அந்த இடமே பொன்னிறத் துகள் தெளித்தார் போல மின்னித் திளைத்தது....

மச்சானை அழைத்து .... அதாங்க நம்ம ரவுடி பேபி மாதிரி.... பேபி வில்லன்..... நம்ம அன்புச் செழியன் தான்....
வேண்டா வெறுப்புக்கு வந்து யாருக்கோ வந்த விருந்து என்று புருவங்களை கசக்கி கோவமாகவே எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு இருந்தான்...
அவன் பாட்டுக்கு இருந்தவனைஐயர் அழைத்து அவன் எதிரியின் அருகிலேயே

அமர வைத்தார்....

ஆகாத பொண்டாட்டி கைப்பட்டா குத்தம்.... கால் பட்டா குத்தம்னு.... நம்ம அன்பு மித்ரனை கடுப்பாகவேப் பார்த்துக் கொண்டிருந்தான்..

ஐயர் வேறு நேரங்காலம் தெரியாமல் மச்சானையும் மாப்பிள்ளையையும் மந்திரங்களை சொல்லச் சொல்லி ஏதேதோ கையில் கொடுத்து அக்கினி குண்டத்தில் போட வைத்தார்....

அந்த அக்கினி குண்டத்தில் எழுந்த புகையில் நம்ம அன்புவின் புகைச்சல் சற்றே மட்டுப்பட்டது....

மாப்பிள்ளை கைகளில் மஞ்சள் கயிறு கொண்டு குங்குமம் வைத்து கங்கனம் மாதிரி கட்டப்பட்டது..

பின்னர் மாப்பிள்ளை பெண் இருவருக்கும் கூரைப் புடவையும் பட்டு வேஷ்டி சட்டையும் அணிந்து வரும்படி கொடுக்கப்பட்டது....

மாப்பிள்ளை கல்யாண வேட்டி சட்டை மாற்றி வந்தவுடன் தாய் மாமன் மாலை அணிவித்து தலையில் துண்டு கட்டி காசி யாத்திரை நடக்கும் இடத்திற்கு அழைத்து சென்றார்....

இங்கே நாத்தனார் வந்து மணமகளுக்கு கூரைப்பட்டு கட்டி.... ஜடை வைத்து அலங்காரம் செய்து.... அழகாக திருமண வைபவத்திற்கு தயார் செய்திருந்தார்....

நேத்ராவும் இரவு போல இல்லாமல் அவளே சாதரணமாக கண்களுக்கு மை எழுதி லேசான பவுட் பூச்சு....போட்டு.. அவளுக்கு கல்யாணத்திற்காக எடுத்த நகைகளை மட்டுமே அணிந்து இயல்பாக இருந்தாள்....

அதற்கு ஒரு சிறப்பு காரணம் உண்டு...

நேத்ராவின் நிச்சயம் கல்யாணம் இரண்டிற்கும் ஒரே ஃபோட்டோ கிராஃபர் தான்.....

அவர் ரிசப்ஷன் நடந்த போது நேத்ராவை பார்த்து ஒரு கேள்வி கேட்டு வைத்தார் அதுதான் இந்த தானே அலங்காரத்திற்கு கிரணம்...

நானே சொல்கிறேன்....
ஏன்மா... நிச்சயத்து அன்னைக்கு அழகா தானே இருந்தீஙக....
இப்போ ஏன்மா இவ்வளவு ஓவரா மேக்கப் போட்டீங்க....
நான் போட்ட பிளாஷ் இல்லாம நீங்க போட்ட மேக்கப் சேர்ந்து ஃபோட்டோ எல்லாம் ரொம்ப வெளேர்னு வருது மா....
கோவிச்சிக்காம கொஞ்சம் தொடைச்சா நல்லா இருக்கும்.. என்று கூறினார்....

அதில் நேத்ரா நொந்தே....போனாள்.... போட்ட மேக்கப்பை ஓரலவிற்கு துடைத்த பின்பு தான் இயல்பாகவே இருந்தது....

சரி வாங்க கல்யாணத்தின் முக்கிய தருணத்திற்கு போவோம்..

அதிலும் கல்யாணத்தில் பெரிய கூத்து என்னவென்றால் காசி யாத்திரை தான்...
அதன் சிறப்பு என்னவென்றால் .....மித்ரனும் அன்புவும் ஒருவரை ஒருவர் தன்னை மீறி சிரித்ததோடு மொத்த குடும்பத்தையும் சிரிக்க வைத்தனர்....

பிடிக்காத மாமனுக்கு பாதபூஜை செய்ய வைத்ததில் நொந்து போய் ஐயரை முறைத்துக் கொண்டிருந்த அன்புவுக்கு....

ஐயர் அழைத்து தொடுத்த அடுத்த அம்பு....மாமானை இந்த கல்யாணத்திற்காக கெஞ்சி செருப்பும் குடையும் கொடுத்து உள்ளே அழைத்து வருவது.

அன்பு இந்த கல்யாணமே வேண்டாம் என்கின்றான்... அவனைப் போய் கெஞ்ச சொன்னால்....

ஐயருக்கு ஏகபோக வசைகளோடு மாமனை பார்த்து கல்யாணம் செய்து கொள்ள வேண்டினான்.... இல்லை... இல்லை... வேண்ட வைத்துவிட்டார்கள்... சுற்றிலூம் இருந்த நல்லவர்கள்...

அட...... தேவர் மகன் ரேவதி சொல்வது போல காத்து தான்ங்க வந்துது..... வசனம் வெளியே கேக்கவே இல்லை...
அங்கே மாப்பிள்ளை வேறு... அது தனிக் கதை...
கல்யாணம் வேண்டாம் உன் அக்காவும் வேண்டாம்... நான் காசிக்கு போகிறேன் என கோவித்துக் கொள்ளச் சொன்னால் மாப்பிள்ளை வாயை திறக்கவே இல்லையே....

அவன் பயம் அவனுக்கு....
எங்கே விளையாட்டுக்கு வசனம் பேசினால் உண்மையில் இவன் சரி காசிக்கே போங்கனு .....சொவ்லிடுவானோன்னு பயம் ஒரு புறம்... அதோடு விளையிட்டுக்கு கூட அவனால் அப்படி சொல்ல முடியவில்லை...

ஆலமரத்து கல்லு புல்லையார் மாதிரி சிரித்த முகத்தோடு மச்சானை கடுப்பேற்றிக் கொண்டு அமர்ந்திருந்தான்.... நம்ம மித்ரன்....

சொந்தங்கள் விடுவதாக இல்லை .... விட்டாள் அவர்கள் சொந்தங்களே இல்லையே.....

நாரியண....நாராயண........சும்மாவா...
அவர்களுடைய பங்கிற்கு மண்டபத்தில் சிறப்பாக வைச்சு செஞ்சிட்டாங்கப்பா.....

இரண்டு காதல் ஜோடிகளை கலாய்த்து.... இல்லாதக் காதலை அவ உன் ஆளு மச்சி... உன்ன தான் பார்க்குது மச்சி னு உசுப்பேற்றி உசுப்பேற்றி ...உடம்பை இரணகலமாக்கும் நல்ல நண்பர்களைப் போல ....இருவரையும் கேளியும் கிண்டலும் செய்து விடாமல் இம்சை செய்து சிரிக்க வைத்து...

ஒரு வழியாக நான்காவது டேக்கில் வசனத்தை வெற்றிகரமாக பேசினால் தான் மாப்பிள்ளையையும் மச்சானையும் மண்பத்தினுள் விடமுடியும்..... என்று விதண்டாவாதம் செய்து ஒருவழியாக மாமனையும் மச்சானையும் காசி யாத்திரை மூலம் ராசியாக்கிவிட்டு தான் மண்டபத்திற்குள் விட்டனர்...

அப்போது மித்ரனும் அன்புவும் ஒருவரை ஒருவர் பார்த்த பார்வை......
அதில் நட்பு இல்லை... ஒரு ஸ்நேகம் இருந்தது..... இருவரும் புன்னகையோடு மண்டபத்தினுள் வந்தனர்....

பின்பு சில பல சடங்குகள் முடிந்து மித்ரன் மச்சானுக்கு மச்சான் மோதிரம் போட்டு ஒருவழியாக கரெக்ட் செய்து விட்டான்....

பின்னர் நேத்ராவை அழைத்து வந்து அவளுக்கும் சாஸ்திர சம்பிரதாயங்களின் படி பல மந்திர உச்சரிப்புகள் முடிந்து கையில் மஞ்சள் கயிறு கட்டப்பட்டது.

பின்னர் மச்சான் கையில் மாங்கல்யத்தைக் கொடுத்து அர்சித்து அதை அனைவரிடமும் ஆசி வாங்கி அட்சதை கொடுத்துவர அனுப்பி விட்டார்.... ஐயர்....

அதற்கிடையில் மித்ரனின் தாய் தந்தையருக்கும்... நேத்ராவின் தாய் தந்தையருக்கும் பாத பூஜை நடந்தது...

தாம்பாளத்தில் மஞ்சள் போட்டு இருவரின் பாதங்களையும் சுத்தம் செய்து...
குங்குமம் வைத்து மலர் தூவி வணங்கி ஆசிகள் பெற்றுக் கொண்டனர் மணமக்கள்..

இதற்கிடையில் நேத்ராவின் கண்கள் மட்டும் வாசலை நோக்கிய படியே இருந்தது...

காரணம் ஏற்கனவே சொன்னது தான்....
எங்கே யாராவது கடைசி நோடியில் கல்யாணத்தை நிருத்துங்கனு வந்துடுவாங்களோன்னு ....பயம் ஒரு புறம்...

இது கனவா நனவா என்ற சந்தோஷம் ஒரு புறம்..
அங்கே திலகாவைப் பார்த்தாள் கண்கலால் நன்றி உரைத்துக் கொண்டாள்..

காரணம் என்ன நடந்தலும் உன் அம்மா அப்பாவை நோகடிக்காமல் உன் காதலுக்காக போராடி அதை அனைவரி சம்மதமும் பெற்று எல்லோரின் ஆசிகளோடும் தான் உன் திருமணம் நடக்க வேண்டும்....
அதுவரை உன் காதலில் எந்த சூழலிலும் எந்த சலுகையும் கொடுத்து வெளியே சுற்றி வீண்கதைப் பேசி எல்லை மீறும் படி எந்த ஒரு வீண் சர்ச்சையையும் ஏற்படுத்தக் கூடாது...அப்படி உன் காதல் ஏதோ ஒரு காரணத்தால் நிராகரிக்கப் பட்டாலோ.... ஒன்று சேரமுடியாமல் போனாலோ...உன் குடும்பத்திற்கு நீ ஒரு மூத்த பிள்ளையாக செய்ய வேண்டியக் கடமைகளில் இருந்து தட்டிக் கழித்து விலகக் கூடாது.... என்று அவள் ஆரம்பத்தில் வாங்கிக் கொண்ட சத்தியம் தான் உண்மையில் நேத்ராவையும் மித்ரனையும் இணைத்தது...

அவர்களின் காதல் கைக்கூடி இன்று எல்லோருடைய ஆசிகளும் கிடைத்ததற்கு காரணம் அன்று திலகாவிற்கு செய்து கொடுத்த சத்தியம் தான்... அதை காப்பாற்ற நேத்ரா எத்தனை ஏத்தனையோ பிரயத்தனப்பட்டு ...இன்று அவள் ஒரு வரமான வாழ்க்கையை பெற்றெடுத்துக் கொண்டாள்.... என்று தான் சொல்ல வேண்டும்... அத்தனை வலிகளோடு தான் அவளுடைய காதல் நகர்ந்தது...

ஆனால் இதோ இன்று இந்த தருணத்திற்காக நடத்திய அத்தனை போரிட்டங்களும்.... தீர்ந்து அவர்கள் தம்பதி சமேதகராக சேரப்போகும் தருணம் கண்ணெதிரே தாம்பாளத்தில் தங்கத் தாலியாக மஞ்சள் கயிறோடு வருகிறது....
அன்பு பெரியோர்களிடம் ஆசி பெற்று வந்த தாலி அழகாக புது மஞ்சள் கயிற்றில் மினுமிப்புடன் தட்டில் தேங்காயின் மீது மின்னியது...

7.30_9.00 முகூர்த்தம்... இதோ மணி 8.36.. ஐயர் மாங்கல்யத்தை மித்ரன் கையில் கொடுக்கிறார்...

நாத்தனார் இருந்தும் தன் மனைவிக்கு மூன்று முடகச்சுகளும் மித்ரனே போடுகிறான்..
சுமங்கலி பெண்களும் பெரியோர்களும் சூழ்ந்து நின்று மாங்கல்யத்தை வணங்கி மாப்பிள்ளைக்கு நல்ல அறிவுரைகளோடு பெண்ணிற்கு சில சடங்குகளை சொல்லி அங்கே அட்சதைத் தூவுகின்றனர்....

நேத்ராவின் கழுத்தில் இருந்த இரண்டு மாலைகளோடு அத்தனை கூட்டத்திற்கு முன்னால் ..

கெட்டி மேளம் மூழங்க அட்சதைகள் மேலே மழையாக சிந்த....

மித்ரனின் கரம் மற்றோரு மாலையாக அவள் தோள்களை சுற்றி மாங்கல்யத்தை அவளுக்கு அணிவித்த தருணம் ....

அவளுக்கு அட்சதைகள் எல்லாம் கண்களுக்கு ஹிர்ட்டின்களாகவேத் தெரிந்தது..

சந்தோஷமாக அந்த தருணத்தை அனுபவித்தாள்..

மித்ரனோ ... இனி இவள் என் சொந்தம்... இவளுடைய சந்தோஷமே என் குறிக்கோள்.... இவளால் என் உலகம் வண்ணமயமாக ஒளிரப் போகிறது என்ற சந்தோஷத்தோடும்... இனி உன்னையும் என்னையும் யாரும் பிரிக்க முடியாது என்ற மட்டற்ற மகிழாச்சியோடும்.... நிம்மதியாக அமர்ந்து அடுத்தடுத்து சடங்குகளில் கலந்துகொண்டான்...

இப்போது தான் மாப்பிள்ளை பெண் இருவருக்கும் இந்தியாவிற்கே சுதந்திரம் கிடைத்த உணர்வு..... அப்படி ஒரு பரம திருப்தி.....

ஐயர் இருவரையும் விரல் பிடித்து அக்கினி குண்டத்தை வளம் வரச் செய்தார் ..

பல சுற்ளுகள் சுற்றியப் பின்பு மீண்டும் மனையில் அமர்த்தி ...நாத்தனாரை அழைத்து பிறக்கப்போகும் வாரிசுக்கு இப்போதே தொட்டில் கட்டி ஆட்டி.... ..எத்தனை பவுன் வேண்டும் என பேரம் பேச வைத்தார் ...

குடத்தில் தண்ணீர் ஊற்றி மோதிரம் எடுக்க விட்டார் ... யார் மோதிரத்தை கைப்பற்றுகிறாரோ அவருடையக் கைதான் குடும்பத்தில் ஓங்கி நிற்குமாம்.... இரு முறை நேத்ராவும் ஒரு முறை மித்ரனும் எடுத்தனர்....

பின்பு மணமகனும் மணமகளும் எதிரெதிரே அமர்ந்து மாலைகளை ஒருவருக்கு ஒருவர் மாற்றிக் கொள்ள ஃபோட்டோ கிராபர் எல்லா நிகழ்வுகளையும் சிந்தாமல் சிதராமல் வீடியோ மற்றும் ஃபோட்டோ வாக அப்படியே சேமித்துக் கொண்டார் ..

பெரியோர்கள் எல்லாம் வந்து மாலை மாற்றி அணிவித்து அரிசி தூவி வாழ்த்தினர்...

பின்னர் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து மெட்டி அணிவிக்கையில் ஐயர் மணப்பெண்ணிடம் இரகசியமாக எளிதில் விட்டுக் கொடுக்காதே என்று சொல்லிவிட்டார்..

நேத்ராவும் காலை நகர்த்தாமல் அழுத்தமாக பிடித்துக்கொண்டு நின்றாள்.. மாப்பிள்ளை மித்ரன் அவளுடைய பாதங்களை பிடித்தால் தானே மெட்டியை விரலில் மாட்டுவதற்கு...

நேத்ராவும் விட்டுக் கோடுக்கவில்லை.... மித்ரன் முடியாமல் அம்மு காலை விடுடி என்று கேட்டுக் கொண்ட பின்பே மெட்டி அணிவிக்க விட்டாள்...

மித்ரனும் மெட்டியை அணிவித்து காலை நறுக்கென்று கிள்ளி வைத்தான்...

அங்கே மீண்டும் எல்லோருடைய முகத்திலும் சிரிப்பலை இதமாக நனைத்தது....

பெற்றோர்... பெரியோர் கால்களில் வீழ்ந்து வணங்கி இருவரும் ஆசிகளை பெற்றுக்கொண்டனர்....

நேத்ராவிற்கோ எப்போது எல்லா சடங்குகளும் முடிந்து சாப்பிடுவோம் என்றானது...

எல்லோரும் குடும்பம் குடும்பமாக வந்து புகைப்படத்திற்கு நின்று வாழ்த்தினர்....

செல்வமும் பாரதியும் கூட காதல் திருமணம் என்பதனாலும் நிச்சயம் முடிந்ததாலும் கல்யாணத்தில் வந்து தங்கைக்கும் தங்கை கணவருக்கும் சந்தோஷமாக தான் பரிசை கொடுத்துவிட்டு சென்றனர் ...

ஒருவழியாக மித்ரன் நேத்ரா திருமணமும் ஏழு மலை ஏழு கடல் தாண்டிய திணறலோடு வெற்றிகரமாக நடந்து முடிந்தது....

இருவரும் சாப்பிட சென்றனர் . அங்கேயும் நமது மக்களுக்கு கடைசி பந்தி என்பதால் இரவு போல் எல்லாம் தீர்ந்து போனது தான் மிச்சம்..

அப்படியும் நேத்ரா விடவில்லை ..... பொங்களையும் கேசரியையும் ஒரு பிடி பிடித்துவிட்டுத்தான் எழுந்தாள்...

எல்லாம் முடிந்து மண்டபத்தை காலி செய்து அன்று மாலைக்குள் மணமக்கள் குலதெய்வ கோவில் சென்று வணங்கிவிட்டு வீட்டில் வந்து விளக்கேற்றினர்....

இதுவரை மாமியார் வசந்தாவிற்கு சொந்தமான சமயலறை உரிமையை நேத்ரா கைப்பற்றினாள். .

இனி மித்ரனும் அவளுடைய உரிமைதான்.
இதற்கு மேல் பிளாஸ்பேக் நகராது..
நேத்ரா நிறைந்த புன்னகையோடு அன்றைய நாளை நினைத்தவளுக்குஅத்தனை வியப்பாகவும் அளவற்ற மகிழ்ச்சி யாகவும் இப்போதும் அந்த வெட்கம் .... மகிழ்ச்சி.... தவிப்பு.... வேண்டுதல்.... எல்லாம் .....முகத்தில் தெரிந்தது....ஆனால் அதில் சிறிதும் சங்கடம் இல்லை.... சந்தோஷம் மட்டுமே நிரம்பி வழிந்தது.....

மொத்த பிளாஷ்பேக்கையும் முடித்தவள்....அந்த தருணத்தில் திளைத்திருந்த கணத்தை உடைப்பது போல.....முகிலன் கேட்டு வைத்த ஒரு கேள்வியில் அவளுடைய மொத்த மகிழ்ச்சியும்.. பூகம்பத்தில் நொருங்கிய மாளிகைப்போல் உலுக்கி உடைந்து உதிர்ந்தது.....
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
யாழ் மொழி @ காயத்ரி வினோத் குமார் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top