தீராத் தீஞ்சுவையே...38

Advertisement

Yazh Mozhi

Active Member
தீராத் தீ____38
மேடையில் சென்று நின்ற போது தான் நேத்ரா... மித்ரன் இருவருக்கும் அரைக் கிணறு தாண்டிய உணர்வு.....

இத்தனை நேரம் இருந்த களைப்புகோவம் அழுகை... ஏமாற்றம் ... எல்லாம் நேத்ராவின் முகத்தில் அட்ரஸ் இன்றி தூர தேசத்திற்கே நாடு கடத்தப்பட்டது....

ஒவ்வொரு உறவுகளும் நண்பர்களும் வந்து கை கொடுத்தும் வாழ்த்துக்கள் சொல்லியும் பரிசுப் பொருட்களை நீட்டவும்.. அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது...

திருமணத்திற்கு முன்பு வரை காதலர்கள் எல்லோரும் அழகான பத்திரிக்கைகளைக் கண்டாலே ....தேடிப்பிடித்து இதேபோல நமக்கும் வாங்க வேண்டும் அல்லது இதைவிட சிறப்பாக வாங்க வேண்டும்... என்று கனவு காணுவர்.

பலரும் தன் பெயரையும் தன் காதலி அல்லது காதலன் பெயரையும் கூட திருத்தி எழுதி அழகு பார்ப்பர்....

அதெல்லாம் காட்டிலும் மற்றவரின் திருமணம் என்றாலே அந்த ஒவ்வொரு சாஸ்திரமும் சம்பிரதாயமும் தனக்கே நடப்பது போல அத்தனை இரசித்து பார்த்து கனவு உலகில் நீந்தி வருவார்கள்..

கண்களாலும் புன்னகையாலும் பேசி தங்களது கல்யாணக் கனவுகளில் ஆற்பரித்திடுவர்...

இன்று நிஜமாக அப்படி ஒரு தருணத்தில் இருப்பது இருவருக்கும் அப்படி ஒரு சந்தோஷம்...

ஒவ்வொரு ஃபோட்டோவிற்கும் நிற்க வைத்து இரண்டு முறை பரிசு கொடுத்து புகைப்படமெடுத்ததும் சற்று அவஸ்தையாக இருந்தாலும் ஆனத்தமாகவே இருந்தது....

அந்த சந்தனநிறப் புடவையில் பிங்க் பார்டர் புடவையும் அதன் மேக்கப்பும்..... உண்மையை சொல்லப் போனால் ...

நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணும் படம் மாதிரியே ப்ப்ப்ப்ப்பாபா..... யார்ரா இந்த பொண்ணு பேய் மாதிரி இருக்கு....னு தான் இருந்தது...

நல்ல வேலை மித்ரனுக்கு கிரிக்கெட் ஆடும் பழக்கம் இல்லாததால் எதையும் மறந்துவிட்டு உண்மையை உலராமல் புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தான்….

மணமக்களுக்கு எல்லோரும் பரிசுகளை கொடுத்துவிட்டு நகர்ந்த பின்பு அடுத்த அவஸ்தை ஆரம்பித்து இருந்தது...

ஃபோட்டோ கிராஃபர் இப்படி நில்லுங்கள்... இப்படி கையை போடுங்கள் அங்கே இருந்து இப்படி வாருங்கள்... அதை இப்படி வையுங்கள்... இப்படி மாலையை பிடியுங்கள் ......இப்படி மாலையை போடுங்கள் ......மருதாணியை இப்படி காட்டுங்கள்.... நெருங்கி நில்லுங்கள்...... கை கொடுங்கள்... கண்களை இங்கே பாருங்கள்... கொஞ்சம் சிரியுங்கள் ......என்று..... ஏக போகமாக ஏவி இம்சை செய்தார்....

என்னதான் இருந்தாலும் காதலித்து திருமணம் செய்தாலும் .....திருமணம் வீட்டில் நிச்சயம் செய்து அறியா நபரோடு நடந்தாலும்...முதல் முறைப் பார்ப்பவரோடு எப்படி எந்த தயக்கமும் இன்றி அப்படி போஸ் கொடுத்து ஒட்டிக்கொண்டு நிற்க முடியும்....

தனியாக என்றாலும் பரவாயில்லை.... எல்லோரும் அவர்ந்திருக்கும் போதோ.... அல்லது நெருங்கிய சொந்தம் மற்றும் நண்பர்கள் முன்னிலையிலோ ....அப்படி நிற்க வைத்து ட்ரில் மாஸ்டர் மாதிரி ஏவல் சொன்னால் எப்படி நிற்க முடியும்....

இதில் ரொமாண்டிக் லுக் வேறு விட வேண்டும்...என்றால்... என்னடா கொடுமை இது..... நியாயமா….என்று தான் இருவக்கும் தோன்றியது….

அப்படி தான் மித்ரனும் நேத்ராவும் ஒவ்வொரு போசிற்கும் முழித்துக்கொண்டும் .... சிரித்துக் கொண்டும் .... முடியாது என மறுத்துக் கொண்டும்..... சில நேரங்களில் வெட்கங்களை மறைத்து நடித்துக் கொண்டும் ...அழகாக வரவேற்பை முடித்தனர்......

நேரம் செல்ல செல்ல நேத்ராவின் வயிரு பசியில் அவளை வாட்டி வதைத்து.... ஃபோட்டோ கிராஃபர் வேறு இது தெரியாமல் மரியான் தனுஷ் மாதிரி இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தா என்னா..... னு பாடாத கொரயா மனுஷன் பேமென்ட்க்காக. தீயா வேலை செய்ச்சாரு.....

ஒரு கட்டத்தில் முடியாது என நேத்ரா சாப்பாட்டுக்கு ஸ்ட்ரைக் செய்யாத குறையாக சோர்ந்து விட்டாள்.. . உண்மையில் இது தான் உண்ணாவிரதம்..... போல....

ஒருவழியாக மித்ரன் தான் மிச்சம் காலையில் பார்த்துக் கொள்ளலாம் பிளீஸ் என்று அவரை சரிகட்டிவிட்டு சாப்பிட அழைத்துச் சென்றான்....

கொடுமை கொடுமைனு நேத்ரா சாப்பாட்ட வாயில வைக்கப் போனா.... பாழாப்போன ஃபோட்டோ கிராஃபர் அங்கேயும் வந்து மாத்தி மாத்தி ஊட்டிக் கோங்கனு .....நேத்ராவோட சாபத்திற்கு ஆளானார்...பாவம்...

அவளும் அவசர அவசரமாக எதையோ ஊட்டிவிட்டு வெயிட்டாக சாப்பிட இறங்கினாள்... ஆனால் அவளால் உண்மையில் அப்படி சாப்பிட முடியவில்லை. .. அங்கிருந்த உணவு வகையும் அப்படி....

நேத்ராவிற்கு உணவு சுட சுட சுவையோடு இருக்க வேண்டும். . அப்படியே லலிதா பழக்கிவிட்டார்.... வேலை முடிந்து அவள் வரும்போதே தட்டில் சுடச் சுட பரிமாறி.... பசியாற்றி உண்டு வளரந்த நாக்கு .....இன்று 11.30 மணிக்கு ஆரிப்போன சப்பார்த்தி... குருமா... வெஜ்புலாவ் எல்லாம் பார்க்கையில் அவை எமோஜில் உள்ள ஸ்மைலிகள் ....ஸ்டிக்கர்கள்மாதிரி அவளை பார்த்து வெறுப்பேற்றி சிரிப்பதைப் போல இருந்தது.....

ஒருவழியாக எதையோ கொஞ்சம் பசிக்கு நிரப்பிக் கொண்டு எழுந்தவளுக்கு மித்ரன் அமைதியாக புன்னகையோடு காத்திருந்தது சந்தேகத்தைக் கொடுத்தது....

நிச்சயத்தன்று இரவு போல ஏதாவாது பிளான் பன்னிட்டானா.... கண்டிப்பா பன்னிட்டான்.. இல்லனா இந்த சிரிப்பு சரியில்லையே .... என யோசித்தவள் மௌனமாகவே பின்னே நடந்தாள் ..

ஒரு வழியாக மாப்பிள்ளை மித்ரன் திட்டமிட்டு வெளியே வந்தது எல்லாம் தவிடு பொடியானது....

அவன் அழகாக ப்ளான் போட்டு அழைத்து வந்திட நேத்ரா உஷாராக முன்பே கையைக் கழுவிக் கொண்டு வேகமாக ஆள்நடமாட்டமுள்ள இடத்தில் நின்று அழகு காட்டி ஓடினாள்....

மித்ரன் வடபோசாசே... ஃபீலிங்ஸ் ஓட புன்னகையோடு பின்னே நடந்தான்...

இப்போதே மணி பன்னிரண்டை எட்டியதால் வேகமாக தூங்க செல்லுமாறு இருவரையும் அவரவர் அறைக்குள் அடைத்து வைத்தனர்...
உள்ளே போனாலும் ஃபோன் என்ற மூட்டுப்பூச்சி யாரையாவது தூங்க விடுமா..

மொசேஜூம்.... காலுமாக ஒரு ஒருமணி நேரத்தைக் கடத்தியவர்கள்.... ஒரு வழிமயிக கொசுக்கடி.... புது இடம்.... கல்யாண கொண்டாட்டம் எல்லவற்றையும் மீறி கால்கடுக்க நின்றதன் உபயத்தில்...தூங்கிவிட்டனர்....

இல்லை இல்லை. . தூங்கிவிட்டாள்.....

அங்கே மித்ரனின் அரைக்கதவு அர்த்த இராத்திரியில் தட்டப்பட்டது.... சரவணனும் மற்றும் பலரும் நின்றிருந்தனர்.. .

உங்களுக்கு புரிந்திருக்கும் ஏன் என்று. .
அதேதான்...
ஏதோ ஆயா செத்த துக்கம் மாதிரி ஆல்ரெடி அரைவேக்காடா குடிச்சி முடிச்சி இப்போ பாதி தெளிஞ்சி..... மித்ரனையும்....கம்பெனிக்கு என்று அழைத்து வந்தனர்….

மச்சி காலைல நீ புது மாப்பிள்ளை...டா... அதோட நீ... ஃபேமிலி மேன்... கல்யாணம் ஆகிட்டா பொண்டாட்டிக்காக எப்படியும் எங்கல கலட்டி விட்ருவா.. வாடா பேஞ்சுலரா கடைசியா ஒரு டைம் எஞ்சாய் பன்னிட்டு போ மச்சி.... சும்மா ஒரே ஒரு ரவுண்டு தான்.... என்று ஆசைகாட்ட...

முதலில் மறுத்தவன்.. நண்பன் சென்டிமெண்ட் ஓட பேசவும் அமைதியாக கசாப்பு கடைக்கு போகும் ஆடு மாதிரி பின்னே சென்றான். ...

காலையில் மகன் மித்ரனை மாப்பிள்ளைஅறையில் காணாமல் ஒரு கணம் வசந்தாவிற்கு பகீரென்றானது.....
என்னைக்கு பசங்க குடிக்க போனா ஒரு ரவுண்டோட வந்துருக்காங்க. ...அதுவும் பேட்சுலர் பார்ட்டி.... வித் ஃபிரண்ட்ஸ்....

மித்ரன் ஃபுல் ஃபாமில் ஐந்து ரவுண்டு அடித்து மாப்பிள்ளை அறையென்று நினைத்து எங்கோ கூட்டத்தோடு கூட்டமாக நண்பர்கள் மற்றும் பல உறவினர்களோடு படுத்திருந்தான்....
பண்டபம் முழுதும் தேடி பயந்து போன வசந்தா மித்ரன் கிடைத்த கையோடு அறைக்கு அழைத்துச் சென்று முதுகில் நாலு சாத்து சாத்தினார்....

நலங்கு வைக்கிற நேரத்துல எப்படி டா இருக்க... நைட் இங்க தானே படுத்த எப்படி அங்கே போன.... கல்யாணம் முடியட்டும் உனக்கு இருக்கு.... என் புள்ளையாடா நீ..... என்ன நல்லா அசிங்க படுத்திட்ட...என்கிட்ட இனி பேசாத டா..... . என்றுஅழுது ஆர்பரிக்க.... மித்ரனுக்கு அம்மாவிடம் பேச தயக்கமாகவும் அவமானமாகவும் இருந்தது... அவன் பேச வருவது தெரிந்து கை நீட்டி தடுத்தவர் அங்கே நலங்கு வைக்கனும் போ... என் முன்னால் நிக்காத ...நலங்கு முடிஞ்சதும் குளிச்சிட்டு இந்த பட்டு வேஷ்டிய கட்டி இந்த சட்டைய போடு.... ...அப்புறம் ஐயர் தரப்போர பட்டு சட்டை பட்டு வேஷ்டி மாத்தனும்... என்கிட்ட இனி நீ பேச வேண்டாம். ஏதாவது கேக்கனும்னா உங்க அப்பாவும் .....மாமாவும் .....இருப்பாங்க அவங்க கிட்ட கேட்டுக்க .....நான் வரேன்.... என்று கோவமாக நகர்ந்துவிட்டார்..

மித்ரன் வாடிய முகத்தோடு போதை தெளியாத சிவந்த கண்களை கழுவிவிட்டு நலங்கு வைக்க வந்து அமர்ந்தான்..

அதற்குள் நேத்ராவிற்கு நலங்க முடிந்து குளித்து தயாராகிக் கொண்டு இருந்தாள்...

பெண்களுக்கு கல்யாண அலங்காரமே நிறைய நேரம் தேவை என்பதால் அவள் வேகமாகவே தயாராக விரைவாக நலங்கு முடித்துவிட்டு தயாராகிக் கொண்டு இருந்தாள்.

மித்ரனும் நலங்கு முடிந்து குளித்து முடித்து ஒரு கத்தரிப் பூ ஊதா நிற பட்டு சட்டையும் வேட்டியும் அணிந்து கொண்டான்...

நேத்ராவும் ஒரு வித நீல நிறத்தில் முழுவதும் ஜரிகை நிறைந்த பட்டில் தயாராகி இருந்தாள்...

இருவரும் மேடைக்கு அழைத்து வரப் பட்டனர்....
...


___தொடரும்..
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
யாழ் மொழி @ காயத்ரி வினோத் குமார் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top