தீராத் தீஞ்சுவையே.. 37

Advertisement

Yazh Mozhi

Active Member
தீராத் தீ___37

நிச்சயம் நல்ல படியாக முடிந்த நிலையில்.... ஆபிசில் புது மாப்பிள்ளை என்று யாரும் கலாய்க்க முடியாத அளவிற்கு மித்ரன் கருப்பு உடையும்.... கழுத்தில் மணியும்...

நெற்றியில் சந்தனப் பட்டையுமாக இடையில் இருகக் கட்டிய கருப்பு துண்டோடு நுழையவும் எல்லோருக்குமே அதிர்ச்சி...

அடப்பாவி இப்படி ட்ரீட் கேட்டு பர்ஸ்க்கு வேட்டு வைக்கலாம் னு பார்த்தா.....இவன் நிச்சயம் முடிஞ்ச கையோட மாலை போட்டு... என் ஆசையில அரை லாரி மண்ண அள்ளிக் கொட்டிட்டானே. .... என்று சரவணன் பொருமினான் ..

சிலர் வெளிப்படையாக கலாய்த்துவிட்டு வேலையை பார்த்தனர்...

அங்கே நேத்ராவோ பள்ளியில் தேர்வு சமயம் என்பதால் வேக வேகமாக பாடங்களை முடித்து..

அனைத்து அலுவலக... மற்றும் வகுப்பறை தொடர்பான ஆவணங்களையும் சரிவர உள்ளதா... என சோதித்துக் கொண்டு இருந்தாள் ...

தான் பணியை விட்டு விலகினாலும் இருப்பவர்கள் அதை சரிவர தொடர்ந்து செய்யத் தேவையானவற்றை முடித்து அனைத்தையும் ஒழுங்கு படுத்திக் கொண்டு இருந்தாள்....

அவளுடைய திருமணம் .....மாப்பிள்ளை .....குறித்து சில சக ஆசிரியர்களுக்கு சந்தேகம் இருந்தது..

நிச்சயப் பத்திரிக்கையைப் பார்த்து அவர்களுக்குள்ளேயே சில சூசக சந்தேகங்களும் சில கேள்விகளும் முன்வைக்கப் பட்டது..

ஆனால் நேத்ரா அனைத்திற்கும் அவளுடைய பதில்களைத் தயாராக வைத்திருந்தாள்...

அதோடு நிச்சயத்தின் போது நேரில் வந்து பார்த்து சென்றவர்கள்....சந்தேகம் ஓய்ந்து வாழ்த்திவிட்டே சென்றனர்...

காரணம் நேத்ரா எல்லோரிடமும் வீட்டில் பார்த்து திருமணம் செய்வது போலவே காட்டிக் கொண்டாள்.... அவள் ஒரு ஆசிரியராக இருந்து பிற ஆசிரியர்களின் வீண் பேச்சிற்கோ.. மாணவர்களிடையே தேவையற்ற சலசலப்போ தன்னால் உண்டாகிடக் கூடாது என்ற காரணத்தால் தன் திருமணம் முமுக்க பெற்றோர்களால் பார்த்து நிச்சயித்து செய்யும் திருமணமாகவேக் காட்டிக் கொண்டாள்...

அங்கே நம்முடைய மித்ரனோ...

நிச்சயம் முடிந்து இன்னும் சில நாட்களில் திருமணம் என்றான நிலையில் ....மாலையும் கழுத்துமாக நிற்க வேண்டிய தருணத்திற்கிடையே... மாலையும் சந்தனமுமாகத் திரிந்தான்.....

காதல் வசனம் பேச முடியாமல் தவிக்கவில்லை.... ஆனாலும் கற்பனை செய்து வைத்திருந்த அரிய தருணங்களை காதலோடு கொண்டாட முடியாத ஏக்கமும் ஏமாற்றமும் அவனை ஆட்கொண்டது....

சற்றேத் தவித்துக் தான் போனான்...

நாட்கள் இருவருக்கும் வேக வேக வேக......மா நகர்ந்து மித்ரன் மலைக்கு இடுமுடி கட்டும் தருணமும் வந்துவிட்டது...

நேத்ராவும் வேக வேகமாக.... பள்ளி தேர்வுகள் முடிந்த கையோடு பேப்பர்களை திருத்தி மதிப்பெண் அட்டவணை தயார் செய்து... அனைத்து வேலைகளையும் செவ்வனே முடித்திருந்தாள்.

ஆனாலும் ஏதோ ஒரு சங்கடமான சூழல் அவளை மனதோடு அரித்துக் கொண்டிருந்தது.....

சாத்தியக் கூறுகள் இல்லாவிடினும்....
சினிமாக்களில் வருவது போல கடைசி நோடியில் நிருத்துங்க......

என்று யாராவது ஏதாவது தடங்கல் செய்வாரோ என மனசாட்சி அவளை மிரட்டி உருட்டி கட்டி வைத்த்திருந்தது..

மித்ரன் மலைக்கு போக இடுமுடி கட்டுவதால் நேத்ராவை அவளுடைய மாமியார் கோவிலுக்கு வரும்படி அழைத்திருந்தார்....

அதனால் நேத்ராவும் அவளுடைய அம்மாவும் கோவிலுக்கு சென்று வருவதாக முடிவானது...

இதற்கிடையே பத்திரிகை அடிப்பது...மற்ற சீர்வரிசை சாமான் வாங்குவது...நகைகள் எடுப்பது என்று நாட்கள் அதி வேகமாக காலில் சக்கரம் கட்டிக் கொண்டு பறந்தேப்......போனது...

இடுமுடி கட்டும் தினத்தன்று நேத்ரா கிளம்பி தன் அன்னையோடு சென்றாள்...

மித்ரனும் அவனுடன் செல்லும் மற்ற சாமிகளுமாக.... வந்து குருசாமி பூஜை போட்டு இடுமுடி கட்டினார்...

இடுமுடி கட்டி மித்ரன் வளம் வரவும் நோத்ராவும் அவனுடைய காலில் விழுந்து வணங்கினாள்...
இருவருக்குமே இது புதுவித அனுபவமாகவே இருந்தது.... இருவருக்கும் அந்த தருணத்தில் சிரிப்பு தான் வந்தது....

மித்ரன் நேத்ராவின் பின்னே கட்டுக்கடங்காமல் செல்லும் மனதை இழுத்துவந்து.....சாமி சரணம்....சாமி சரணம் ...என்று ஒரு முகப்படுத்தினான்...

இடுமுடி கட்டி எல்லோரும் அமர்ந்ததும் ஒன்றாக கோவிலிலேயே அன்னதானம் வழங்கப்பட்டது...

அவளும் மித்ரனின் அருகே அமர்ந்து சாப்பிட்டாள்....

அவளுடைய அம்மா ஒன்றும் சொல்லவில்லை... இருந்தாலும் கண்களால் கண்டனத்தை தெரிவித்துக் கொண்டிருந்தார்...

மித்ரன் நேத்ராவை மெல்ல கண்களால் ஜாடை காட்டி வெளியே அழைத்துச் சென்றான்....

அங்கே நண்பர்கள்... சில உறவினர்கள் என எல்லோரிடமும் நேத்ராவை அறிமுகப்படுத்தி வைத்தான்..

பின்னர்... இருவரும் சிறிது நேரம் கோவில் பிரகாரத்தில் அமைதியாக அமர்ந்திருந்தனர்....

இந்த டைமிங் ல வேற என்னதான் பன்ன முடியும்.....

இருவருக்கும் இந்த அருகாமையும் அமைதியுமே மிகவும் பிடித்திருந்தது ..

தன் பெற்றோர்களின் அனுமதியோடு இப்படி இருவரும் எந்த பயமும் தயக்கமும் இன்றி சந்தித்ததும்....

அருகே அமர்ந்து உணவு உண்டதும்..உடன் சேர்ந்து நடந்ததும்...காலில் வீழ்ந்து வணங்கியதும்... அவளுக்கு எப்படி நிறைவாக இருந்ததோ... அதேபோல் அவனுக்கும் மகிழ்ச்சி நிரம்பி வழிந்தது .

நேத்ரா அவளே மித்ரனுக்காகவும் மாமியாருக்காகவும் தன் கைப்பக்குவத்தில் மாங்காய் ஊறுகாய் மற்றும் எலுமிச்சை ஊறுகாய் போட்டு கொடுத்துவிட்டாள்..

உறவிற்குள் புளிப்பு பரிமாறினால் சண்டை வந்துவிடும் என்பது நமது முன்னோர்கள் நம்பிக்கை...

அதனால் சும்மா பேருக்கு மித்ரனிடம் ஒரு பத்து ரூபாயை பெற்றுக் கொண்டு அந்த ஊறுகாய்களை கொடுத்துவிட்டு வந்தாள்.......

பூஜை போட்டு வண்டி கிளம்பவும் சற்றே.... தோய்ந்து வாடிய முகத்தோடுகையசைத்துக் கொண்டு கிளம்பினாள்..

அங்கிருந்து வண்டி கிளம்பினாலும் மித்ரன்....அடிக்கடி அவளுடன் பேசிக் கொண்டே இருந்தான்....

அவளுக்காக அவளுடைய நினைவுகளை சுமந்து கொண்டே கோவிலுக்கு சென்றவன்....

அதே நினைவுகளோடு இந்த காதலை கைசேர்த்த ஐயப்பனுக்கு நன்றி உரைத்து நல்ல படியாக ஐந்து நாள் பயணம் முடந்து வீடு வந்து சேர்ந்தான்....

இங்கே திருமணத்திற்கு தேவையான ஏற்பாடுகள் நடந்த வண்ணம் இருந்தது.

திருமணத்திற்கு தேவையான மேளம்...தாளம்.... பூ அலங்காரம்.... ஃபோட்டோ.... ஐயர்.... சாப்பாட்டு அனைத்தும் பார்த்து பார்த்து ஆட்களை தேர்வு செய்து... எல்லாம் தயார் நிலையில் இருந்தது....

பத்திரிக்கை மெருன் நிற அட்டவணையின் மேலே தங்க நிற குட்டி பிள்ளையார் அமர்ந்து.. உள்ளே இரண்டு பக்கத்திற்கு தகவல்கள் நிரம்பி வழிந்தது...

அதிலும் போய் சேர்ந்த கேஸில் இருந்து பிறந்த குட்டுஸ் வரை ஒன்று விடாமல் பெயர்கள் நிரம்பி வழியவே..... இரண்டு பக்கம் போதாதக் குறை தான் போங்கள்...

மணமகளுக்கு தேவையான அலங்காரம் புடவை பெண் அழைப்பிற்கான சீர்வரிசை என அனைத்தும் தனியே ஒரு புறம் தயாரானது...

மித்ரன் அவனுடைய அம்மாவோடு வந்து புடவை பத்திரிகை முதலியவற்றை ஒப்படைத்துவிட்டு...அந்த சாக்கில் நேத்ராவை சைட் அடித்து விட்டு சென்றான்..
பின்ன மாமனார் மாமியார் மச்சான் முன்னாடி வேற என்ன பன்ன முடியும்..

எல்லா ஏற்பாடுகளும் தடபுடலாக நடந்தேறியது...

நாள் நெருங்கி இன்னும் சில தினங்கள் என்ற நிலையில் இருவருக்கும் பேச ஆயிரம் இருந்தது..

ஆனாலும் அவரவர் சூழல் பேச அனுமதிக்கவில்லை.... இருவருடைய வீட்டிலும் கல்யாணக் கூழ் ஊற்றி.... நாளை பந்தக்கால்.....நட்டு மூன்று நாள் எண்ணை நலங்கு சந்தன நலங்கு பின்னர் மூன்றாவது நாள் திருமணம் என்று வேலைகள் வெலுத்து வாங்கியது...

வீடெங்கும் உறவினர் கூட்டம் வண்ணமயமாக நிரம்பி வழிந்தது..

மாப்பிள்ளை பெண்ணின் வீட்டில் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து பந்தக்கால் நட்டனர்.....

மாப்பிள்ளை பெண்ணிற்கு இயற்கை ஆயில் பாத். ..அருகம்புல் பேஸ் பேக்..பயத்தமாவு ....ஃபேஷியல் ...சந்தன ஸ்க்ரப்... எல்லாம் செய்யப்பட்டது .... அதாவது நலங்கு வைக்கும் வைபவம் நடந்தது….

இப்போது அதைத்தான் திருமணத்திற்கு முன்பு மேக்கப் என்ற பெயரில் மெனிக் கியூர்.... பெடிக் கியூர்.... பேஷியல்...பிளீச்...னு மினிமம் 10000 பில் தீட்டிடுறாங்க. ...

மாலை அதேபோல் சந்தனம் குங்கும் ஆரத்தியோடு புடவை பட்டு ஆடை அணிந்து மஞ்சள் பூசிய முகத்தில் சந்தனத்தால் அழகு படுத்தி ......சீர்வரிசை தட்டு வைத்து சந்தனம் பூசி ஆரத்தி எடுத்து... பூக்களால் அட்சதைத்தூவி இப்படியே மூன்று நாட்கள் பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் மாறி மாறி கவனிப்பு அதிகரித்ததில் அழகும் வெட்கமும் கூடி ..... மித்ரனுக்கு கல்யாணம் காய்ச்சல் வந்து விட்டது ..
வீடு நிறைய ஆட்கள் வந்து தங்கி இருந்ததால் இருவருக்கும் தனியே பேசிக் கொள்ளவும் விவாதம் செய்யவும் நேரம் இன்றிப் போனது.
ஆனாலும் கிடைத்த குட்டி குட்டி தருணங்களை இருவரும் பயன்படுத்தி சில குட்டிக் குட்டி காதல் கலந்துரையாடல்களை நிகழ்த்திக் கொண்டனர்....

விடிந்தால் நான்காம் நாள் இன்று....இரவு வரவேற்பு ...அடுத்த நாள் காலை 7.30 _9.00 திருமணம்... ஆனால் நாளை மாலை ஆறுமணிக்கு நேத்ராவை ........அழு வைத்து........... அவளுடைய வரவைற்பு கலங்கிய கண்கலோடும் வாடிய முகத்தோடும்...... அவளை வரவேற்கும் என்று அவளுக்கே தெரியாத போது காலம் என்ன செய்ய முடியும்.....

அல்லது நாம் தான் என்ன செய்ய முடியும்....

நான்காம் நாள் பொழுது அழகாக விடிந்தது...

நேத்ராவின் வீட்டிலும்...மித்ரனின் வீட்டிலும் சொந்த பந்தங்கள் நிறைந்து விட்டனர
இன்று இரவு வரவேற்பு.....
நேத்ரா காலை எழுந்ததும் புதிய உற்சாகத்துடன் குளித்து தலையை உலர்த்தி அவள் ஆசையாக எடுத்து வைத்த நாவல் பழ நிற பட்டுப்புடவையை உடுத்திக் கொண்டாள்....

அதற்கு ஏற்றார் போன்று தலை சிக்கின்றி சீவி தளர்வாக பின்னி... அடர்த்தியான பூக்களால் அலங்கரித்துக் கொண்டாள்..

கண்களுக்கு அடர்த்தியாக மை எழுதி லேசான நகைகளை தேர்ந்தெடுத்து ஆழாகாக அணிந்து கொண்டாள்....

கைநிறைய வலையல்கள்... புதிய முத்துக்கள் நிறைந்த சலங்கை.... ஆஹா ஓஹோ ..... என்று வியக்க வைக்கும் அழகு இல்லை தான் ஆனாலும் கல்யாணக் கலையாடும் நேர்த்தியோடு நேத்ரா அழகாகவே இருந்தாள்.

அவளுக்கு வரவேற்புக்காக மேக்கப் செய்ய வேண்டிய பெண்மணி மண்டபத்திற்கு வர முடியாது ......எனவே பெண்ணை நேரடியாக பார்லருக்கே அழைத்து வாருங்கள் என்று கூறிவிட்டார். .

காரணம் அவருக்கு காலை முதலே குறைந்த இரத்த அழுத்தம்... அதனால் ஒப்புக் கொண்ட வேலையை விட முடியாது கல்யாணம் வேறு ... கடைசி நேரத்தில்.....எப்படி மாட்டேன் என்று சொல்ல முடியும்....

ஏதாவது அபசகுணமாக நினைத்திட வாய்ப்பு உள்ளது என்பதால் முடிந்தவரை ஒரு 1இல் இருந்து 2 மணிக்குள்ளாக பெண்ணை அழைத்து வரும்படி கேட்டுக் கொண்டார்.

இங்கே மாப்பிள்ளை வீட்டில் வந்து தான் பெண்ணை அழைத்து வர வேண்டும்... அதுவே சம்பிரதாயம். ...ஆனால் 3.30 மணிக்கு மேல் தான் நல்ல நேரம் என்று மாப்பிள்ளை வீட்டில் இருந்து பெண் அழைக்க யாரும் வரவில்லை... தாமதமாக தான் வருவோம் என்றும் யாரும் அறிவிக்கவில்லை....

மித்ரனை தொடர்பு கொண்டால் கால் போகவில்லை.. நேத்ரா அவளுடைய மாமியாருக்கு கால் செய்தாள்...

அவரும் இதோ கிளம்பி விட்டோம்...... என்று மழுப்பிடவே.... உற்சாகமாக கிளம்பி தயாராக இருந்த நேத்ராவின் முகம் கலையை இழந்து வாடத் தொடங்கியது....

நேத்ராவின் நிலையைக் கண்டு நேத்ராவின் அம்மாவோ பொருமத் துவங்கி விட்டார்....

இதற்கு தான் படித்து படித்து சொன்னேன்... தானா தேடிகிட்டா எல்லாத்தையும் அனுபவைத்து தான் ஆக வேண்டும் என்று வார்த்தையால் சாடிவிட்டு சென்றார்...

மூர்த்தி வெளி வேலைகளின் காரணமாக எதையும் கவனிக்க நேரமின்றி சென்றிருந்தார்....

சொந்தங்கள் இரவு வரவேற்பு என்பதால் அவரவர் அலங்காரங்களை கவனிக்கவே....மும்மரமாக இருந்தனர்...

காத்திருந்து..... காத்திருந்து .....பார்லர் பெண்மணியின் உடல்நிலை மோச மடைந்து..... மருத்துவ மனையில் அட்மிட் செய்யப்பட்டார்...

அவருக்கு முடியாத அந்த சூழலிலும் .அவருடைய நட்பு வட்டாரத்தில் சிலரை துணைக்கு அழைத்து நேத்ராவின் அலங்காரங்களை நல்லபடியாக முடித்துக் கொடுக்கும்படி வேண்டிக் கொண்டார்....

நேத்ரா காத்திருந்து காத்திருந்து .....உட்சகட்ட கடுப்பில் இருக்கும் நிலையில்... காரில் வந்தனர் மாப்பிள்ளை வீட்டிலிருந்து...

வந்தவர்களை பார்த்து அவளுக்கு மேலும் அதிர்ச்சி....மறுபடியும் இவங்களா.....???

ஆம் வந்தது நித்யா தேவியும் அவளுடைய அத்தை பிரேமாவும் தான்....

நேத்ராவினால் கோவப்படவோ.... ஏன் தாமதமாக வந்தீர்கள் என கேள்வி கேட்கவோ முடியாத நிலை.... திரும்பி அன்னையை பார்க்க ..

அவர் இவளுக்கு மேல் உட்சகட்ட கோவத்தை கண்களில் அடக்கி ...ஏழாம் அறிவு சூர்யா மாதிரி அனைத்தையும் கண்டும்....அசையாமல் இருந்தார்...

பின்னர் .... நேத்ராவை அழைத்துச் செல்ல மாப்பிள்ளை வீட்டிலிருந்து கூட்டமாக வருவார்கள் என்று பார்த்தால்... இரண்டு பேர் கண்துடைப்பிற்கு வந்தால்.... அதிலும் தாமதமாக வந்து தன் பெண்ணை அலைக்கழித்து கலங்க விட்டாள் ....

அவன்களுக்கு கோவம் வந்தாலும் காண்பிக்க முடியாத நிலையில் கட்டுண்டு போயினர்...

நேத்ரா மட்டும் அவர்களோடு கிளம்பி போனாள்.....போனவளுக்கோ அடுத்த கட்ட அதிர்ச்சி....

இவளுக்கு அலங்காரம் செய்ய வேண்டிய பெண்மணி உடல் நிலை சரியில்லாமல் போனதால் வேறு ஒருவர் இருந்தார்...

இவளை பார்லரில் இறக்கி விட்டுவிட்டு நித்யாவும்... பிரேமாவும் .... அவர்களுடைய இல்லத்திற்கு சென்றது.. என்பது அடுத்த கட்ட அதிர்ச்சி...

துணைக்கு யாரும் இன்றி நேத்ராவிற்கு அழுகையே வரும் போல இருந்தது... மேக்கப் போட வந்த பெண்மணியும் தலைக்கு அலங்காரம் செய்ய நேரமில்லை நான் வேறு இடத்திற்கு சென்றாக வேண்டுமென்று பறந்துவிட்டார்...

அந்த பார்லரின் துணை பொருப்பாளராக உள்ள பெண்மணி சேலையை அணிவித்து நகைகளை அணிவிக்கும் போது அடுத்த கட்ட ஏமாற்றம் .......அவள் புடவைக்கு தோதாக முன்பே தேர்ந்தெடுத்து வைத்த நகை செட் அங்கே இல்லை....

அடுத்ததாக அவளுக்கு தலை அலங்காரம் என்ன செய்வது எப்படி செய்வது என்று அந்த பெண்மணிக்கு புரிபடவில்லை..

நேத்ராவின் மைண்ட் வாயிஸ்....நானும் எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது....

நேத்ராவோ வந்த கோவத்திலும் ஏமாற்றத்திலும்.... ஃபோனை அனைத்து வைத்துவிட்டு கண் கலங்கி விட்டாள்....

போச்சு நான் ஆசையாக தேர்ந்தேடுத்த மாதிரி இப்போது ஒன்றுமே நடக்கவில்லை...என் கல்யாண ஆல்பம் கேவலமாகத் தான் வரப் போகிறது..... என் ஃபோட்டோவை பார்த்து என் பிள்ளைகள் சிரிக்க போகிறார்கள் .... என்றெல்லாம் அதீத கற்பனைக்குள் மூழ்கி அழுது கரைந்தாள்....

இதெல்லாம் ஒரு பிரச்சனை யா…..ஆனால் இதுவும் ஒரு பெரிய பிரச்சினை தானே.....
சரி வாங்க.... பாவம் அந்த புள்ள..... அழுகுது....

நேத்ரா கண்ணீர் சிந்திடகண்ணில் தீட்டிய மையெல்லாம் கரைந்து கண்கள் சிவக்க அந்த பொருப்பாளர் பெண்மணிக்கு மிகவும் வருத்தமாக போய்விட்டது....

அவரும் ஒரு குழந்தைக்கு சொல்வதைப் போல அத்தனை பென்மையாக அவளுக்கு ஆருதல் சொல்லி அவளைத் தேற்றினார்..

உனக்கு என்ன மாதிரியான தலை அலங்காரமோ அதை நீ சொல்ல சொல்ல நானே செய்கிறேன்... ஆனால் திருமண சமயத்தில் நீ அழாதே உன்னுடைய ஏமாற்றம் எனக்கு புரிகின்றது.. நான் உனக்கு பிடித்தமாதிரி உன்னை தயார் செய்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்த பின்பு தான் நேத்ராவின் அழுகை குறைந்தது....

நேதாராவின் நிச்சயத்தன்று அதே இடத்தில் செய்த அலங்காரம் அவளை அழகாக காட்டியது .....அதீத ஒப்பனை இன்று இயல்பாக இருந்தது .....அதனால் தான் அதே இடத்தில் மீண்டும் அலங்காரம் செய்ய முடிவு செய்யப்பட்டது...

ஆனால் தன்னுடைய நேரம் இப்படியெல்லாம் ஆகும் என்று அவளும் எதிர் பார்க்க வில்லை....
அட என்னம்மா..... நீ... அவனவனுக்கு ஆயிரம் பிரச்சனை....உனக்கு இதெல்லாம் ஒரு பிரச்சினையா என்று தான் ....எனக்கும் உங்களைப் போவவே இந்த காரணத்தைக் கேட்டு கொலை வேறி ஆனது..

ஆனால் என்ன செய்வது பாவம் ஒரு கல்யாணப் பெண்ணிற்கு அவளுடைய இடத்திலிருந்து ....இது எத்தகைய ஏமாற்றம்.. எத்தகைய மன அழுத்தம் தரக்கூடியது விஷயம் தெரியுமா... இதில் நேத்ரா காலையிலிருந்து எதுவும் சாப்பிடவும் இல்லை..

எல்லா அழுத்தங்களையும் கண்ணீரில் கரைத்து... கண்ணீர் வழிந்து கண் மை கரைந்து .....அந்த பெண்மணி அவளை தேற்றி ஒரு ஜூஸ் மற்றும் சில குளிர்பானத்தோடு வந்து அவளை குடிக்க வைத்து சமாதானம் செய்து சிரிக்க வைத்து அவருக்கு தெரிந்த வகையில் ஒரு தலை அலங்காரத்தை செய்தார் ..

நேத்ரா ஆசைபட்ட படியாக கூந்தலைக் கர்லிங் செய்து முன்னாடி தூக்கி வாரி டிசைன் செய்ய முடியவில்லை.... தான்....

ஆனாலும் அவருக்கு தெரிந்த வகையிலும் நேத்ராவிற்கு பிடித்த வகையிலும் ஒரு மாதிரி ஏதேதோ செய்து . மணப்பெண் வரவேற்புக்கு தயாராகிவிட்டாள்....

அவள் தேர்வு செய்த நகைகளை காணவில்லை.... அதனால் அவளுடைய புடவைக்கு ஏற்றபடி வேறு சில நகை செட்டுகளை தேடித் தேடி... அல்லல் படும் போது வேறு ஓரு வாடிக்கையாளர் அவருடைய வாடகை நகை செட்டை ஒப்படைக்க வந்தார்...

அந்த நகை செட் அப்படியே நேத்ராவின் புடவைக்கு பொருந்தியது.. ஒரு வழியாக மணப்பெண் முழு மனதாக இல்லாவிடினும்..... அந்த பெண்மணியின் வார்த்தைகளிலும் அவருடைய சிரமத்தையும் புரிந்து கொண்டு ஒரு வழியாக மனதை மகிழ்ச்சியான சூழலுக்கு வலுக்கட்டாயமாக மாற்றிக் கொண்டாள்....

இப்போது தான் அவளுடைய ஃபோனை ஆன் செய்திருந்தாள்... ஆன் செய்த அடுத்த நொடியே ஃபோன் அலர ஆரம்பித்தது...

காரணம் மண்டபத்தில் மிதாரன் ஃபோனை பார்க்க நேத்ராவிடமிருந்து வந்த கால்கள் எடுக்கப்படாமல் விட்டுப் போயிருந்தது... கிட்டத்தட்ட மூன்று மணி நேரமாக அவளுடைய ஃபோன் அனைத்து வைக்கப்பட்டிருந்தது...

அவனால் மண்டபத்திலிருந்து வேளியே செல்லவும் முடியவில்லை.. தன் அக்காவைத் தேடினால் அலங்காரம் முடிந்து அழகாக வளம் வந்தார்...

அவனுக்கு பதட்டமும் பயமும் தொற்றிக் கோள்ள ....அக்காவிடம் மொத்த கோவத்தையும் கொட்டிவிட்டான்....

ஏன் அவளைத் தெரியாத இடத்தில் தனியே விட்டு வந்தீர்கள் .. ...உங்களால் முடியாது என்று முன்பே சொல்லியிருந்தால் நானே அவளை காத்திருந்து அழைத்து வந்திருப்பேனே...

இப்படி அவளை துணைக்கு ஒருவர் கூட இன்றி அவளை விட்டு வருவதற்கு தான் .....நல்ல நேரம் பார்த்து அத்தனை தாமதமாக சென்றீர்களா.......

ஏற்கனவே புடவை அவளுக்கு பிடிக்காமல் கட்டாயத்தில் எடுத்துவிட்டு... என்னிடம் முகத்தை திருப்பிக் கொண்டாள்....... இப்போது அலங்காரமும் இந்த லட்சணம்.... தெரிந்தோ தெரியாமலோ எல்லாவற்றிலும் நீ சம்பந்தப்பட்டுவிட்டாய்... நித்யா....அவளை உடனிருந்து அழைத்து வந்திருக்கக்.....கூடாதா.... என்று மூச்சு விடாமல் புலம்பினான்....

அவன் புலம்பலை தவிர்க்க வேகமாகக் கிளம்பிய நித்யா .....நேத்ராவை பார்லரில் பார்த்து கோவம் கொள்ள முடியாத சூழலில் ஃபோனை ஏன் அனைத்து வைத்தாய்... அங்கே உன் வீட்டுக்காரன் என்னை புலம்பி கழுத்தருக்கிறான் என் கேளியாக ஆதங்கத்தை வெளிப்படுத்த..

ஒரு வழியாக பாராலர் துணைப் பொருப்பாளர் பெண்மணி நேத்ராவின் மனநிலையை மெதுவாக எடுத்து சொல்லி... புரிய வைத்து அவர்களை நல்ல படியாக வாழ்த்துக்கள் சொல்லி வழி அனுப்பினார்...

இப்போது தான் அவரால் இயல்பாக சுவாசிக்கவே முடிந்தது பாவம்... அவரும் இருந்த டென்ஷனில் சாப்பிடவில்லை. ....உடல் நலமற்ற கணவரையும் பள்ளி முடிந்து வந்த பிள்ளைகளையும் காண வேகமாக கதவைப் பூட்டிவிட்டு விட்டால் போதுமென ஓடினாள்...


இந்த பார்லரை பரிந்துரை செய்ததும் கூட நித்யா தான்.. தெரிந்தோ தெரியாமலோ ஆரம்பத்தில் இருந்தே அவளுக்கும் நேத்ராவிற்கும் ஏழாம் பொருத்தம் தான்.....போல....

ஒரு வழியாக பெண்ணை மண்டபத்திற்கு அழைத்து வந்தாகிவிட்டது...

பசியும் கலைப்புமாக ஏமாற்றமும் சேர்ந்து.... நேத்ராவின் நிலை முகத்தில் கலையற்று அமைதியாக இருந்தது...

புன்னகையை பூதக் கண்ணாடி கொண்டு தேடும் அளவிற்கு அவள் தோய்த்து இருந்தாள்....

அவளுக்காக மித்ரன் வாசலிலேயே காத்திருந்தான்.... அவளுக்கு தெரியும் எப்படியும் இன்று தனக்கு மித்ரனிடமிருந்து வசமான மண்டகப்படி உண்டு என்று....

வந்தவன் அவள் முகத்தையும் சுற்றி இருந்த உறவுகளையும் பார்த்து உடனே குரலை மட்டுப்படுத்தி அமைதியாக கேள்வி கேட்டான் ...

அவள் எதற்கும் பதில் சொல்லவில்லை...என்ன நினைத்தானோ சரி வா என்று மண்டபத்தில் உள்ளே இருந்த கோவிலில்... அவளோடு சென்று வணங்கினான்.

பின்னர் நேத்ராவை தனியே அழைத்து சென்று.... பெண் அழைப்பு சடங்குகள் நடத்தப்பட்டது....

பிறகு மாப்பிள்ளை பெண்ணிற்கு தாய்மாமன்.... கைகளால் மாலை அணிவிக்கப்பட்டு ஆரத்தி எடுத்து மண்பத்தினுள் அழைத்து வரப்பட்டு மேடைக்கு சென்றனர்....

வரவேற்பு வெற்றிகரமாக இன்னிசை

கச்சேரியோடு
வீடியோ கவரேஜி
கேமராக்
கண்களில். பதிவாகத் தொடங்கியது....
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
யாழ் மொழி @ காயத்ரி வினோத் குமார் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top