தீராத் தீஞ்சுவையே...36

Advertisement

Yazh Mozhi

Active Member
தீராத் தீ______36

நிச்சயத் தேதி குறித்து பின் நிச்சயப் புடவை எடுக்க நல்ல நாள் பார்த்து குமரன் சில்க்ஸ் க்கு சென்றனர்....

காலை 8.மணிக்கு உள்ளே சென்றவர்கள் மதியம் 3 மணிக்கு தான் வெளியே வந்தனர்....

அடேங்கப்பா.........

அந்த கூத்த தான் இப்போ முக்கியபாக பார்க்கப் போகிறோம்.....

புடவை எடுப்பதற்கு முந்தைய தினம் இரவு நேத்ராவும்...மித்ரனும் பல கட்ட தேர்வுகளுக்கு பின்னர் இரண்டு புடவைகள் எடுக்க வேண்டும்.

ரிசப்ஷனுக்கு ஃபேன்சியாக... ஸ்டோன் வொர்க் செய்து ஒரு பட்டும்...

நிச்சயதார்த்தம் நடக்கும் போது மெருன் நிற ஜரிகை பட்டும் எடுக்க வேண்டும் என நிர்ணயித்திருந்தனர்...

அதிலும் மெருன் நிறத்தில் பட்டு எடுக்கும்படி ஆலோசனை வழங்கியதே தலைவர் மித்ரன் தான்...

ரிசப்ஷனுக்கு பிங்க் பார்டரில் சந்தன நிறம் கொண்ட ஹெவி வொர்க் சாரி என முடிவு செய்தனர்.... அதுவும் அப்படியே கிடைத்துவிட்டது.......

கடைக்கு சென்ற பத்தாவது நிமிடம் நேத்ரா நிச்சயப் புடவையை தேர்வு செய்து விட்டாள்...

எல்லாம் மித்ரனின் வார்த்தையிலும் வாயிலும் சனீஸ்வர பகவான் செய்த திருவிளையாடல் தான்....

பெண் பார்த்து நிச்சயம் செய்ய தேதி குறிக்கும் வரை வராத அக்கா புடவை எடுக்க வருகிறேன் என்றதும்... மித்ரன் மகிழ்ந்து போனான்...

இரவு நேத்ராவிடம் உனக்கு மெருன் நிறம் தான் கொள்ளை அழகு... அட்டகாசமாக இருக்கும்... அதனால் மெருன் நிறத்தில் ஜரிகை பட்டு எடுக்கலாம் என்று நிறத்தை ஒரு ஃபுளோவில் தேர்வு செய்தது அவன் தான்....

ஆனால் காலை அக்கா சமாதான உடன்படிக்கையோடு வீடு வந்து சேர்ந்ததும்... அதை மறந்துவிட்டான்..

கடைக்குள் நல்ல நேரம் பார்த்து நுழைந்த நேத்ரா மித்ரன் குடும்பத்தார் ஆளுக்கு ஒரு திசையில் புடவையை புலனாய்வு செய்ய படையெடுக்க .....

நேத்ராவோ மித்ரன் கூறிய படி அடர்ந்த மெருன் நிறத்தில் பச்சை ஜரிகை மின்ன ஒரு புடவையை ஐந்து நிமிடத்தில் தேர்வு செய்துவிட்டு ஆவலாக தன் கண்ணாலனிடம் காட்ட ஓடினாள்..

அங்கே நித்யா தேவியோ புடவையை பார்த்த உடனே மெருன் மட்டும் வேண்டவே வேண்டாம்... உன் நிறத்திற்கு நன்றாக இருக்காது என்று தேங்காய் உடைப்பதைப் போல உடைத்தார்...

நேத்ராவிற்கு பறந்து கொண்டிருந்த ஆகாயத்திலிருந்து யாரோ இறகை கத்தரித்து கீழே தள்ளியதைப் போன்ற உணர்வு...

அத்தோடு விட்டதா....

மித்ரன் வேறு அக்கா முதன் முறை கல்யாணத்தில் சம்மதம் தெரிவித்து வந்திருக்கிறாள் என்ற சந்தோஷத்தில் ......

வருங்கால மனைவியிடம் இரவு பேசி பேசி மெருன் நிறம் தான் உனக்கு தோதாக எடுப்பாக இருக்கும் என்றெல்லாம் விடிய விடிய வருத்த காதல் கடலையை மறந்தே போனான்....

அவனும் இப்போது அக்காவோடு சேரந்து ஆமா அம்மு உனக்கு மெருன் நல்லா இருக்காது .. நீ வேற எடு .. அக்கா சூப்பரா செலக்ட் பன்னுவாங்க அம்மு என்று அக்காவிற்கு ஆதரவு தெரிவித்தான் ..

அதுவரையில் எதிரில் இருப்பது யார் என்றே தெரியாமல் அவள் கூறிய வார்த்தைகளை தாங்க முடியாமல் கலங்கி இருந்தவள்...

இப்போது மித்ரன் அக்கா என்று அறிமுகம் செய்ததோடு அவளுக்கு மெருன் நன்றாக இருக்காது என்று அக்காவோடு சேர்ந்து தாளம் போட்டான்....
அங்கே தான் நேத்ராவிற்கு உள்ளே இருந்த சந்தகரமுகி மெல்ல எட்டிப் பார்க்கதா தொடங்கினாள்...
குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு.... ஒருவேளை பேட்சுலர் பார்ட்டி முடிச்ச கையோட ஃபோன் பேசியிருப்பான் போல... இப்படி வசமா மாட்டிகிட்டானே.....

அதைத்தான் நேத்ராவால் ஏற்க முடியவில்லை... கண்ணெல்லாம் கலங்கியது... யாருக்கும் தெரியாமல் துடைத்துவிட்டு நகர்ந்தாள்.... அதோடு அந்த கடையில் இருந்த எந்த புடவையையும் அவளுக்கு பிடிக்கவில்லை....

முக்கியமாக நித்யா தேவியின் தேர்வுகள் சுத்தமாக பிடிக்கவே இல்லை....
இப்படியே மூன்று மணிவரை கடையை வட்டமடிக்க விட்டு எல்லோரையும் பழிவாங்கினாள்.... எந்த புடவையையும் தேர்வு செய்யவில்லை....

இறுதியாக மாமியார் வசந்தா ... நோத்ராவின் மறைமுகமான பழிவாங்களை புரிந்து கொண்டார்....

பாம்பின் கால் பாம்பரியும் என்பது இதுதானோ ....

நேத்ராவை நனியே அழைத்து வந்து சமாதானம் பேசினார்... உனக்கு நான் தனியே மெருன் நிறத்தில் வேறு புடவை எடுத்து தருகிறேன் ... நேத்ரா....

இப்போது தயவு செய்து ஏதாவது உனக்கு பிடித்த புடவையை தேராந்தெடுத்துக் கொள் என அன்புக்கட்டளை இட்டார் அவளும் அதற்கு அடிபணிந்தாள்.
இறுதியில் மித்ரன் இரண்டு புடவைகளோடு வந்து நினாறான்... ஒன்று அக்காவின் தேர்வு... ஒன்று அம்மாவின் தேர்வு .....
நான் தான் அப்போவே சொன்னேனே இவன் அதுக்கு சரிபட்டு வரமாட்டான் பா...

நேத்ராவிற்கு மூக்கு மேல் கோவம் வந்தது என்ன நிறம் என்று கூட பார்க்காமல் மித்ரனின் அம்மா தேர்வு செய்த புடவையை எடுத்து பில் போட சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டாள்....அப்போதே நித்யாவிற்கு புரிந்துவிட்டது.....

தான் ஆரம்பித்து வைத்த கூத்து தான் இதற்கு காரணம் என்று ..ஆனால் அவள் வேண்டுமென செய்யவில்லை ..

நேத்ராவிற்கும் கோவம் அவள் மீது இல்லை... எல்லாம் இந்த மித்ரனின் வார்த்தைகளால் விளைந்தது தான்...

ஒரு வழியாக புடவை வாங்கிவிட்டு எல்லோரும் சேர்ந்து உணவருந்திவிட்டு வீட்டை நோக்கி பயணம் செய்தனர்... நேத்ராவின் கோவம் மித்தனுக்கு புரிந்தது .......

ஆனால் அதற்கு பிள்ளையார் சுழியே அவன் போட்டது தான் என்பது தான் அவனுக்கேத் தெரியாத கொடிய அரிய தகவல்...

ஒரு வழியாக இரவு தனியே வந்து கால் செய்து ஆசையாக பேச வேற டாபிக் கிடைக்காதவன் போல தெரியாத்தனமாக.....புடவையைப் பற்றி பேச்சை இழுத்து அதனால் அவள் கோவத்திற்கு மீண்டும் சாம்பிராணி போட்டு புகை கிளப்பிவிட்டான்... மித்ரன்....

அவள் தனக்குபுடவை பிடிக்கவே இல்லை என சண்டை இட்டு இவன் சமாதானம் செய்து ஒரு வழியாக எப்படியோ போதும் போதும் என்றானது மித்ரனுக்கு.... முதல் முறையாக ஏன் திருமணம் ஆனவனெல்லாம் வீட்டுக்கு போகவே பயப்படுகிறான்... ஏன் ஓட்டி.... போட்டு ஓவர் டைம் ஆக வேலை செய்கிறான் ..என இப்போது தான் மித்ரனின் அனுபவ அறிவிற்கு புரிந்தது....

அடுத்து நிச்சயதார்த்தத்திற்கான நகையை வசந்தாவே தனியே சென்று வாங்கிவிட்டார்...

பெண்வீட்டாரின் மேற்பார்வையில் மண்டபம்.. சாப்பாடு முதல் பெண்ணிற்கு மேக்கப் வரை தடபுடலாக எல்லாம் தயார் ஆனது...

நேத்ராவின் நிறத்தை வெளீர் வெள்ளையாக மாற்ற முயலாமல் ... அவளுடைய கருமை கலந்த மாநிறத்தை அப்படிமே தேவையான பொலிவோடு அலங்காரம் செய்திருந்தார் பியூட்டீஷியன்...

அழகாக நீண்ட ஜடையில் மல்லிகை வேணி வைத்து அடுக்கடுக்காக ஜடையில் பிள்ளைகள் தைத்து கீழே சுங்கு வைத்து தலையலங்காரம் செய்து நேர்த்தியாக இருந்தாள்..

கண்ணில் தீட்டிய மை அவளுடைய புன்னகை நிறைந்த முகத்தை இன்னமும் கவர்ச்சியாக காட்டியது ...

நேத்ராவிற்கு சத்தியமாக வெட்கம் எல்லாம் வரவில்லை.. மாறாக மனம் குளிக்கிவிட்டு திறத்த பீர் பாட்டில் மாதிரி குளிர்ச்சியாக பொங்கி பொங்கி வழிந்தது....

அந்த சந்தோஷம் அவளுடைய முகமெங்கும் பிரகாசமான புன்னகையோடு இருந்தது...

மருந்துக்கும் கூட அவளுக்கு வெட்கம் வரவில்லை.... என்பதே இங்கு குறிப்பிடத்தக்கது..... அதே சமயம் அவளுடைய புன்னகையும் குறையவில்லை...

அடுத்து மாப்பிள்ளைக்கு தாய்மாமன் வந்து மாலை அணிவித்து நலங்கு வைத்து மச்சான் மோதிரமும் இரண்டு பவுன் தங்கச் சங்கலியும் போட்டு விட்டான்.
பிறகு பெண்ணை வரவழைத்து தாய்மாமன் சீர் கொடுத்து மாலை அணிந்து நலங்கு வைத்து.... ஐயர் இரு வீட்டு பெற்றோருக்கும் பொதுவாக நிச்சயப் பத்திரிகை வாசித்து தட்டு மாற்றி பெண்ணை நிச்சப்புடவை மாற்றி அழைத்துவயும்படி கொடுத்தார்..

அப்போது தான் நேத்ரா அந்த புடவையை கவனித்தாள்...
மெருன் இல்லை என்றாலும் ....ஒரு அடர்ந்த செங்கல் நிறத்தில் வெந்தய நிற இழை சேர்த்த பட்டு ஜரிகை பின்னி விதவிதமான மாங்காய் டிசைன் கலந்து மெல்லிய சிவப்பும் பொன்னும் கலந்தாற் போல தக தக வென மின்னியது.....

அந்த புடவை அவளுக்கு மிகவும் பொருத்தமாக பாந்தமாக இருந்தது.... உண்மையில் அது மாமியாரின் தேர்வு என்பதாலோ... அல்லது அனைவரும் அந்த புடவையின் அழகை அவள் காதுபட வாசித்ததாலோ..... என்னவோ.....

எப்படியோ.... இப்போது நேத்ராவிற்கு அந்த புடவைமை மிகவும் பிடித்துவிட்டது..... அத்தனை அழகாக அவளை அரவணைத்துக் கொண்டது புடவை....

வேக வேகமாக நிச்சயப் புடவை அணிந்து வந்தவுடன்... மாப்பிள்ளை பெண் இருவருக்கும் நலங்கு வைக்கப்பட்டது நாத்தனார் கையால் பெண்ணிற்கு தங்க சரடு அணியப்பட்டது....

பிறகு ஃபோட்டோ கிராஃபர் உதவியோடு பல போஸ்களில் மணமக்கள் சற்றே சங்கோஜத்துடனும் சந்தோஷத்துடனும் நின்றனர்....

மித்ரனின் கண்கள் மட்டும் வாசலை ஆர்வமாக பார்த்து யாரையோத் தேடிக் கொண்டு இருந்தது...
நேத்ரா என்னங்க என்று கேட்க உன் அத்தைப் பையன் இதுல யாரு எனக் கேட்டான்....
நேத்ரா ஒரு கணம் குழம்பி பின்னர் நக்கலாக ஒரு கேளிப் புன்னகையோடு யாரு.... எங்கே... எங்கே. . என்று அவளும் உடன் தேடினாள்....

மித்ரன் மீண்டும் .... நீதானடி சொல்லனும்... இதுல யாரு உன் அத்தை பையன் என கேட்க....

நேத்ராவும் மீண்டும் .... அதாங்க யாரு என் அத்தை பையன் என கேட்டு சிரித்தாள்...

ஏய் நீ தானடி சொன்ன...
என்னனு....
நாம லவ் பன்ன ஆரம்பத்துல நீ .... உனக்கு ஒரு அத்தை இருக்காங்க ..அவங்க பையனுக்கும் உனக்கும் கல்யாணம் னு சின்ன வயசுல முடிவு பன்றிட்டாங் நீயும் அவங்கல பிடிக்கும்....ஆனால் இப்போ ஸ்டேடஸ் பார்த்து ஒதுங்கிட்டாங்கனு சொன்னியே....
உங்க அப்பாக்கு கூட அவங்க மேல கோவம் னு லா சொன்னியே....

நேத்ரா பலமாக சிரித்தாள்....
உடனே மித்ரனின் ஃபோனை வாங்கி திலகாவை மேடைக்கு அழைத்து அவளிடம் ....
திலகா மித்ரன் என் அத்தை பையன பாக்கனுமாம் டி... என்றிட இம்முறை இருவரும் சேர்ந்தே சிரித்தனர்...
ஐயோ.... ஐயோ.... சார் எல்லாம் நாங்க சுயமா உருவாக்கின கேரக்டர் ஆர்டிஸ்ட் சார்... நீங்க நேத்ராவை எவ்வளவு உண்மையா லவ் பன்றீங்கனு செக் பன்றதுக்காக நான் தான் அவளை அப்படி சொல்ல சொன்னேன்...

உண்மையில் அப்படி ஒரு அத்தையும் இல்லை.. அந்த அத்தைக்கு பையனும் இல்லை...என்றிட....

மித்ரன் நேத்ராவின் கேளியை பார்த்து சற்றும் கடுப்பானாலும் இப்போது இதயத்தில் ஜில்லென இருந்தது...

அவளுடைய மனதில் தான் மட்டுமே இருக்கிறோம்.. என்ற குளுமை அவன் உடலெங்கும் பரவி ஒரு பரவச நிவையில் ஐக்கியமானவன்... நேத்ராவின் குறும்மை மன்னித்து வேறுவிதமாக தண்டனனத் தர தகுந்த நேரம் பார்த்த உறுமீன் வருவம் வரையில் காத்திருந்த கொக்கைப் போல ......காத்திருந்தான்..
திலகாவும் மனநிறைவோடு வாழ்த்திவிட்டே மித்ரனிடமும் நேத்ராவிடமும் அன்பான அறிவுரைகளோடு விடைபெற்றுக் கிளம்பினாள்....

அதோடு மேலே ஒரு புறம் வடை பாயாசத்தோடு தலை வாழை இலை போட்டு விருந்து தடபுடலாக பரிமாறப்பட்டது.

எல்லோரும் சந்தோஷமாகவேக் கலந்து கொண்டு மனநிறைவோடு வாழ்த்தினர்...
நேத்ராவிற்கோ பசி வயிற்றைக் கிள்ளியது. அதைக் காட்டிலும் மித்ரனோடு ஜோடியாக நிற்பதும் மாலையோடு அவனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு வேட்கியதும் கனவோ நிஜமோ என்ற பிரம்மையே வந்தது. ..

தனது வாழ்க்கையில் காதல் வந்ததா.... தனக்கு தன் மனதிற்கினியவனோடு இன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டதாஎல்லாம் கனவா நிஜமா... என்ற உச்சகட்ட மகிழ்ச்சி அவளுடைய பசியையும் களைப்பையும் தாண்டி முகத்தில் மூட்டை மூட்டையாக அசடு வழிய புன்னகை நிறைய உற்சாகமாக இருந்தாள்....

மித்ரனும் சொல்லமுடியாத சந்தோஷத்தோடு நண்பர்களின் கேளி..உறவினர்களின் கிண்டல் எல்லாம் தாண்டி நேத்ராவின் சந்தோஷம் அவனையும் தொற்றிக் கொண்டது. ஆனாலும் அவன் அவ்வளவாக வெளியே காட்டிக் கொள்ளவும் இல்லை...

எல்லாம் முடிந்தது உணவு அருந்த பெண்ணும் மாப்பிள்ளையும் மேலே அழைத்து செல்லப்பட்டனர் ..அங்கே ஒருவருக்கு ஒருவர் ஊட்டச் சொல்லி நண்பர்கள் முதல் ஃபோட்டோ கிராஃபர் வரை நச்சரித்து எடுக்க இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஊட்டி விட்டு உண்டனர்..

நேத்ரா குழந்தைப் போல மித்ரனிடம் மருதாணி கைகளை காட்டி வலையலைக் காட்டி நல்லா இருக்கா... நான் நல்லா இருக்கேனா என்று குதூகலமாக கேள்வி கேட்டு குடைந்து கொண்டிருந்தாள்

மித்ரனோ தோராயமாக எல்லாவற்றையும் கேட்டு தலையாட்டிக் கொண்டிருந்தான்.

எப்போது வாய்ப்பு கிடைக்கும் என ஆர அமர காத்திரேந்தவனுக்கு கைக்கழுவ சென்ற இடத்தில் அடித்தது லாட்ரி...

அவள் கேள்வி மேல் கேள்வி கேட்டு பேசிக்கொண்டு சாப்பிட.. மித்ரன் காத்திருந்த பொருமை பறந்து கைகழுவி விட்டு வந்தான்...அவளும் சாப்பிட்டு வரும் வரை நல்ல பிள்ளையாக காத்திருந்தவன்..

நேத்ராவும் கைகழுவி நிமிர்ந்த நேரம் இத்தனை நாள் கிட்டாத உரிமை இன்று கிடைத்த உற்சாகத்திலும்.... அவள் தன்னை ஏமாற்றி தவிக்கவிட்டு நகைத்ததற்கும் சேர்த்து......மொத்த காதலையும் சேர்த்து அந்த வாயாடியின் உதடுகளுக்கு தண்டனையாக......செல்லமாக சின்ன முத்தம் வைத்து விலகினான்...

அவள் உறைந்துவிட்டாள் .. அதோடு அவளுக்கு பேச ஒன்றுமே இல்லை.... சிலையாக அதிர்ந்து நின்றவளை ஒன்றும் நடக்காதது போல அழகாக உள்ளே கையைப் பிடித்து அழைத்து வந்து விட்டுவிட்டு கண்சிமிட்டிச்சென்றான்.

எல்லோரிடமும் பவ்யமாக விடைபெற்று நேத்ராவை பார்க்க .....அவளுக்கு மண்டபத்தில் நிச்சயம் செய்த போதும் சேர்ந்து நின்ற போதும் வராத வெட்கம் இப்போது ரேஷன் கடை மண்ணெண்ணை கியூ போல முகத்தில் முட்டி மோதி வழிந்தது...

எல்லோரும் சந்தோஷமாகவே விடைப்பெற்றனர

ஆனால் நாளை முதல் மாப்பிள்ளை தான் உச்சகட்ட பரிதாப நிலைக்கு ஆளாகப் போகிறாரே......

___தொடரும்....
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
யாழ் மொழி @ காயத்ரி வினோத் குமார் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top