தீராத் தீஞ்சுவையே...34

Advertisement

Yazh Mozhi

Active Member
தீராத் தீ____34

வாங்க.... நாம பொண்ணு பார்க்க போகலாம்....

வாகன சத்தம் கேட்ட நேத்ரா வேகவேகமாக உள்ளே சென்று கதவடைத்துக் கொண்டு அமைதியாக காத்திருந்தாள்...

வந்தவர்களுக்கு தண்ணீர் தருமாறு அம்மா பெரிய புதிய எவர் சில்வர் சொம்போடு வந்தார்...
கூடவே ஒரு அறிய தகவலையும் சொல்லிவிட்டு சென்றார்...
சொம்பின் விளிம்பைத்தாண்டி நீர் தழும்ப தழும்ப கொடுத்தால் அந்தப் பெண் செலவாளியாம்..
விளிம்பிற்கும் கீழே கொடுத்தால் அவள் கஞ்சமாம்..
அதனால் சரியாக விளிம்பு வரை தழும்பாமல் கீழே சிந்தாமல் நீர் தருமாறு அம்மா தகவல் கூறிட
நேத்ரா தண்ணீரை எடுத்து தயாராக இருந்த நொடி எல்லோரும் உள்ளே வந்தனர்..
நேத்ரா வந்தவர்களை கை எடுத்து வணங்கி வாங்க .. வாங்க... வணக்கம் என்று உபசரித்து உள்ளே சென்று மறைந்துவிட்டாள்.
இருவீட்டிலும் பெற்றோர்... பெரியோர்... தாய்மாமன் என அனைவரும் பரஸ்பரம் கலந்து பேசி இனிப்பு காரம் பரிமாறிட .

அம்மா..... நம்ம மாயண்ண வந்துருக்காக...ஹ ... நம்ம மொக்கச் சாமி வந்துருக்காக.....ஹ.... மற்றும் நம் உறவினரெல்லாம் வந்துருக்காக....ஹ வாமா ... நேத்ரா.... என அழைக்க மட்டும் தான் அங்கே யாரும் இல்லை.....

அதனால் நேத்ராவின் தந்தை அவளிடம் காஃபி கொடுத்து அனுப்புமாறு பணித்திட.

நேத்ராவிற்கு கைகள் நடுங்கியது...

இப்படி ஒரு தருணத்தில் தான் நிற்பதை அவள் நேற்றுவரை நினைத்து கூட பார்த்தது இல்லை...

அவளுக்கு அங்கே வந்திருந்த மற்றவர்களைக் கண்டு அச்சமோ ... வெட்கமோ இல்லை....

எல்லாம் மித்ரனின் முன்பு இப்படி நிற்கப் போகிறோம் என்பதால் தான்.
காரணம் .. நேற்று இவன் அருகில் அரைநாளைக் கழித்த போதும்... அவன் கைகோர்த்து நடந்த போதும் அவனிடம் எதிர்பாராத தருணத்தில் கிடைத்த முத்தத்தின் போதும் வராத வெட்கமும் அவஸ்தையும் இப்போது வந்தது...

அவளுக்கு எப்போதுமே அவன் புதியவனாகவேத் தெரிகிறான். . எல்லா நேரங்களிலும் அவளைக் கவர்கிறான்... அவன் முன்பு காஃபி தட்டோடு நிற்பதை விட அவனுடைய பார்வையை எதிர்கொள்வதற்கே அவள் வெட்கி வடிந்தாள்... கை நடுங்க கால் அடுத்த அடி எடுத்து வைக்க மறுத்தது....

அவள் உள்ளே வராமல் தயங்கி நிற்க... மூர்த்தி முன்னே வந்து வாம்மா ... என்றார்...

அவளோ.....
அப்பா...பயமா இருக்கு ப்பா....
அட வாம்மா ...அப்பா தான் இருக்கேன் ல வா.
ப்பா....
இரு நான் வரேன் ....
கடைசியில் நேத்ராவிற்கு அவளுடைய அத்தை உடன் வந்தும் உள்ளே வர பயபாகவும் வெட்கமாகவும் வர.....வரமாட்டேன் என ரகளை செய்தாள்....
மித்ரன் தலையைக் குனிந்து சிரித்துக் கொண்டே அதை இரசித்துக் கொண்டிருந்தான்.
அங்கே நிறைந்திருந்த அனைவருக்குமே அவளுடைய செயல் பள்ளிக்கு முதல் நாள் அழுதுகொண்டே அப்பவின் கையை பிடித்திருக்கும் குழந்தையின் நினைவே வந்தது...
காரணம் யார் உடன் வந்தும் வர மறுத்து நடுங்கிய நேத்ரா.... ஒரு வழியாக....
இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில்...... ..இல்லை... இல்லை....இந்திய பெண் பார்க்கும் வரலாற்றில் முதன் முறையாக.....
தந்தையின் கையைப் பிடித்துக்கொண்டு காஃபி தட்டோடு வந்தாள்.... நம்முடைய நேத்ரா....
அதைவிட அவள் தைரியமாக தட்டை நீட்டும் தருணம் ... பார்த்து ம்மா... மாப்ள மோல கொட்டிடப் போற என்க ....
அதைக் கேட்ட மாத்தகரத்தில் அவள் நிஜமாகவே கைநடுங்கி தவற விட்டு.....அப்பா என்க.. மித்ரன் சரியான நேரத்தில் நல்ல கேட்ச் மூலம் தட்டை வெற்றிகரமாக கீழே விழாமல் கைப்பற்றினான் ..மித்ரன்...

இப்போது அந்த வீட்டில் சிரிப்பு சத்தம் நிறைந்த நீர்குடமாக நிரம்பி வழிய மித்ரனும் நேத்ராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவே வெட்கி மென்மையாக புன்னகைத்துக் கொண்டனர்..
நேத்ரா ஓரமாக நிற்க....
பெரியவர்கள் அவளை உட்காரப் பணித்தனர்.... அவள் கீழே சம்மணமிட்டு அவர்ந்துகொண்டாள் ...
அதுவே அவர்களுக்கு பிடித்துவிட்டது... நாற்காலி இருந்தும் சமமாக எதிரே உட்காராமல் பெரியவர்களை மதித்து கீழே அமர்ந்தது அவர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது...

((பிடிச்சி தானே ஆகனும்.. டியூஷன் எடுத்து எல்லாரையும் கரெக்ட் பன்ன ஐடியா குடுத்தது யாரு.... நம்ம மித்ரன் ஆச்சே...

நல்லவேளை. .. யாரும் நாட்டாமை பட... மனோராமா....மாதிரி ....பாடத் தெரியுமா...ஆடத் தெரியுமா எனக் கேட்டு அவளைக் கலங்கடிக்கவில்லை.

சமைக்கத் தெரியுமா என்று மட்டுமே கேட்டனர்..இம்முறை முதன்முறையாக நேத்ராவின் அம்மா பதிலளித்தார்...

சமைக்கத் தெரியும்... ஆனால் வேலைக்கு செல்வதால் அதிகமா சமைத்ததில்லை...

நன்றாகவே தேத்ரா சமைப்பாள் என நற்சான்றிதழ் வழங்கினார்....

பின்னர் பரஸ்பர பேச்சுவார்த்தை தொடங்கி நிச்சயத் தேதி நிர்ணயிக்கப்பட்டது.... ஜூன்... ஜூலையில் நல்ல முகூர்த்தமாக இருக்கவே அப்போதே ஏதாவது ஒரு தோதானத் தேதியில் நிச்சயம் செய்துகொள்ள பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டது . .

நிச்சயம் செய்து அடுத்து ஒரு சில மாதங்களிற்குள் திருமணம் என எல்லாமே நல்லபடியாகவே பேசி முடிவு செய்யப்பட்டது....

இவர்களின் பேச்சு வார்த்தை முடிந்த தருணம். அனைவருக்கும் விருந்து தயாராக இருந்தது ...
கைநனைக்க தனியே வருகிறோம் என்று எவ்வளவோ எடுத்து கூறியும் நேத்ராவின் தந்தை விடவில்லை...
அது கைநனைக்கும் போது வாங்க... இப்போ எல்லாரும் சாப்பிட்டே ஆக வேண்டும் எனஅடம்பிடித்து அமர்த்தி தலைவாழை இலை போட்டு உணவு பரிமாறப்பட்டது..
எல்லோரும் மனமகிழ்ச்சியோடு உணவை திருப்தியாக உண்டனர்...
இதற்கிடையே நேத்ரா சமையலறையின் வாசலில் நின்று மித்ரனைத் தான் சைட் அடித்துக் கொண்டு இருந்தாள்....

மித்ரனின் பளீர்.... மஞ்சள் நிறத்தை பொன்னாக ஒளிரச்செய்த அவனுடைய மயில் கழுத்து நீல நிற சட்டையும் அதை இன்னமும் மிடுக்கோடு காட்டும் சந்தன நிற பேன்டும் கண்களில் கருப்பு ஃப்ரேம் போட்ட கண்ணாடி... என அத்தனை பாந்தமாக அமைதியாக அமர்ந்திருந்தான்...

இரண்டு இட்டலிகளை சாப்பி முடியாமல் அதனோடு செல்லமாக சண்டையிட்ட அவனுடைய விரல்களையும் அதில் கருமமேக் கண்ணாக இலையை நோக்கித் தவமிருந்தவனின் கண்ணையும் கண்டு அவளுக்கு புன்னகையோடு அவனுடைய காதல் உரையாடல்கள் எல்லாம் நினைவிற்கு வந்தது..

கொஞ்சம் நிமிர்ந்து பார்த்தால் தான் என்னவாம்....எனப் புலம்பிக் கொண்டாள்.... அவனுக்கு விக்கல் வந்துவிட்டது....
தண்ணீர் கொடுப்பதற்குள்.... இலையை மடித்துவிட்டு எழுந்தான்...
நேத்ரா அவனுக்கு தண்ணீரோடு நின்றிருந்தால் .. அவன் கைக் கழுவி வந்ததும் சொம்பை நீட்டிவிட்டு நின்றிருந்தாள்....
மித்ரன் தண்ணீரைக் குடித்து நகரரும் முன் அவளைக் கண்டு கண் சிமிட்டினான்...
அவள் அழகாகத் தலைக் குணிந்து விலக முயன்றிட சுற்றிலும் நோட்டம் விட்டவன் ... அந்தத் தருணத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டான்...

கிடைத்த சில நொடியில்... நேத்ராவின் பட்டுக் கன்னத்தில் மித்ரனின் உதடுகள் மெல்லிய ஆட்டோகிராப் போட்டு விலகியது....

நேத்ரா அவனைக் கிள்ளிவிட்டு உள்ளே ஓடினாள்....

உள்ளே மற்றவர்களுக்கு தொடர்ந்து உணவு பரிமாறப்பட்டது.. காலை நேரம் என்பதால் பொங்கல் .. இட்டலி...வடை... கேசரி..சாம்பார்..சட்னியோடு... அனைவரும் வயிறும் மணமும் நிறையும் படி லலிதாவின் கைப்பக்குவத்தில் நெய் மணக்க சுவை நாவில் நின்று பேசும்படியாக இருந்தது...

எல்லோரும் மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும்....வயிரார உண்டு
நிறைவாக பேசிவிட்டு நாள் குறித்து சென்றனர்....

நேத்ராவின் தந்தைக்கு பெரிய நிம்மதி...

மகள் காதல் என்றதும் சம்மதம் சொல்லிவிட்டாலும்... ஒரு ஆணாகவும் ஒரு தந்தையாகவும் அவருக்கு சில சங்கடங்களும் சில பெரிய சந்தேகங்களும் இருந்தது.... அவை இன்று மித்ரனை நேரில் கண்டதும் காணாமல் போனது....

எங்கே ஏடாகூடமாக எவனையாவது நிருத்தி காதல் என்று மகள் காட்டிவிடுவாளோ.... அவனுக்கு என்ன என்ன கெட்டப்பழக்கம் இருக்குமோ என பெரிதாகவே உள்ளுக்குள் பயந்திருந்தார் மூர்த்தி.......

ஆனால் மித்ரனின் மொழு மொழுக் கன்னமும்.. சிவந்த உதடும் ஒட்டிய வயிரும்... அவன் கழுத்தில் இருந்த ருத்ராட்சமும் ...நெற்றியில் இருந்த சந்தனமும்... அழவன் பேச்சின் தன்மையும் பணிவும்... அவருக்கு நம்பிக்கையையும் நிறைவையும் தந்தது.... இந்த தருணத்தில் மூர்த்தி மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்..

ஆனால் நாமொன்று நினைக்க ..... தெய்வம் ஒன்று நினைக்கும் ...என்பதற்கு ஏற்ப .. அடுத்து உண்டாகப் போகும் பெரிய விபரீதத்தை யாரும் அப்போது உணரவில்லையே......
____தொடரும்....
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
யாழ் மொழி @ காயத்ரி வினோத் குமார் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top