தீராத் தீஞ்சுவையே...33

Yazh Mozhi

Active Member
தீராத் தீ_____33
அவள் கோவத்தில் அவனுடையத் தோளில் குத்திவிட்டு.. கைகளை கிள்ளி வைத்தாள் ..
அவனும் அடுத்த வாய்ப்பாக கிள்ளிவிட்ட கைகளை பத்திரமாக பிடித்துக்கொண்டு விடாமல் அமர்ந்து கொண்டான்...

அவளால் விரல்களை ஒரு கட்டத்திற்கு மேல் விடுவிக்க முடியவில்லை... அடுத்த கட்டமாக விடுவிக்க தோன்றவுமில்லை... வெதுவெதுப்பான அந்த வரண்ட நீண்ட விரல்கள் கொடிகளைப்போல அவள் விரல்களில் படர்ந்து இருந்தது. . அதன் மேல் நரம்புகள் புடைத்து அதன் வலிமையை பரைசாட்டியது... அதற்குள் கசிந்த கதகதப்பு அவளுக்கு அமைதியையும் பாதுகாப்பையும் தந்ததது.

நேத்ரா நிம்மதியாக படத்தை மறந்து அந்த பாதுகாப்பை இரசித்துக் கொண்டிருந்தாள்..

ஆனால் மித்ரனின் நிம்மதியும் சந்தோஷமும் கொண்டுட்டமும் பறந்து கொண்டே இருந்தது...

அவனுடைய மொபைல் இடைவிடாது அடித்துக் கொண்டே இருந்தது.. அவன் எடுக்கவில்லை ...

படம் முடிந்து இருவரும் கிளம்ப ஆயத்தமாகினர்...

ஆனால் இருவருக்கும் என்ன படம் ஓடியது அதில் என்ன கதைக்களம் என்ற ஒரு தகவலும் அப்போ கேட்டிருந்தாலும்....தெரியாது....... இப்போ கேட்டாலும்......

மித்ரனோ.....

மிக வேகமாக நேத்ராவை வெளியே அழைத்துவந்தான்...

அவளோ... என்னங்க ஃபோனையே பார்த்துகிட்டு இருந்தீங்க என்ன ஆச்சு என்க.

அவளை அமைதி காக்கும்படி பணித்துவிட்டு

ஃபோனை எடுத்து பேசியவன் ... அம்மு....

நாம நல்லா மாட்டினோம் டி..... சீக்கிரம் கிளம்பு... என்க.

நேத்ராவின் பயம் பந்தைய வேகத்தில் மீண்டும் அவளை பதட்டமடைய வைத்தது...

இருவரும் வேக வேகமாக கிளம்பினர்...


கோவிலுக்கு சென்று இரு பெற்றோரும் தனித்தனியே மித்ரன் நேத்ராவின் பிறந்த தேதி நாள் நேரம் கொண்டு ஜாதகம் பார்த்தனர்... பெண் பார்க்க வர சில நாட்களை தேர்வு செய்திருந்தனர்....

இரண்டு பெற்றோரும் அவரவர் வசதிக்கு ஏற்ப சில தினங்களை கலந்து பேசி ஒரு நாளை தேர்வு செய்தனர்....

அதற்கு நிறைய இடைவெளி இருந்ததால் இருவீட்டாரும் தன் மக்களோடு கலந்தாலோசிக்கவில்லை..

அதான் தைரியமாக அவுட்டிங்கை திட்டவட்டமாக பிளான் போட்ட நம்ம மித்ரன் சார இவர்களின் திடீர் முடிவால் தடாலடியாக மாட்டிக் கொண்டார்...

ஆம் இவர்கள் வியாழக்கிழமை வேலையை கட்டடித்து விட்டு கஷ்டப்பட்டு ஆயிரம் பதட்டம் பயங்களுக்கு நடுவே ஒரு அவுட்டிங்கை பிளான் செய்திருந்தனர்....

இதை அறியாத இவர்களுடைய பெற்றோரோ அடுத்த நாளான வெள்ளிக்கிழமை அன்று பெண் பார்க்க வருமாறு அவசரமாக முடிவை மறுபரிசீலனை செய்து இறுதிகட்ட முடிவை சுமார் 11.30 மணி அளவில் உறுதி செய்தனர்..

நேத்ரா எப்போதும் பள்ளியில் மொபைலை சிவிச் ஆஃப் செய்துவிடுவாள்... ஏதாவது அவசயமான தகவல் என்றால் பள்ளியின் எண்ணிற்கு அழைப்பு விடுக்குமாறு சொல்லி இருக்கிறாள்...
மிதாரனுக்கு ஆஃபிஸ் மொபைலும் அதற்கென ஒரு தனி சிம்கார்டும் உண்டு... அது அலுவலக பயன்பாட்டிற்கான போஸ்ட் பெய்டு எண்... ஆனால் மித்ரன் காதலிக்க தொடங்கியதும் அலுவலக போஸ்ட் பெய்டு அவனுக்கு சிறந்த ஆபத் பாந்தவானாக உதவியது. அதன் புன்னியத்தில் தங்கு தடையின்றி காதல் கடலைகள் கோவத்தில் கருகாமல் வருக்கப்பட்டது.... தனிக் கதை....

ஆனாலும்...

நேத்ராவும் மிஸ்கால் கொடுக்கும் இரகமல்ல... மாதாமாதம் ஒரு மாத ரேட் கட்டர்.. மெசேஜ் பேக்... அது போக நூறு ரூபாய் ரீச்சார்ஜ் என எப்போதும் அவளுடைய செல்லில் பேலன்ஸ் இருக்கும்..

அவளுக்கு மிஸ்கால் கொடுப்பது பிடிக்காமல் போனதற்கு இரண்டு காரணங்கள் .... உண்டு...

ஒன்று பெண்களுக்கு மிஸ்கால் கால் மட்டுமே செய்யத் தெரியும்... காதலிக்கும் பெண்களுக்கு ஆண்களே ஏ.டி.எம் என்றெல்லாம் யாராவது பேசுவதோ... கிண்டல் செய்வதோ... படத்தில் வரும் நகைச்சுவையாக இருந்தாலும் கூட அவளுக்கு ஆத்திரமிக வரும்...

அதற்காகவே அத்தகைய வார்த்தைகளை யாரும் தன்னைப்பார்த்து கூறி முடியாத படி நடந்திட்டாள்....

இரண்டாவது காரணம் நமக்கு எப்போது பேசத் தோன்றுகிறதோ அப்போதே பேசிட வேண்டும்..
மிஸ்கால் கொடுத்து காத்திருக்கும் பொருமையெல்லாம் நேத்ராவிற்கு கிடையாது...

இப்போது தான் அந்த தொல்லையே இல்லையே....... ஜியோ ஆண்டவர் புண்ணியத்தில் காதல்... கல்லக்காதல்... கருமம்... கண்றாவி எல்லாம் தான் சிறப்பாக செல்கிறதே.........

ஆனால் இன்று இருவருடைய செல்லும் சைலண்ட் மோடில் ஏகப்பட்ட மிஸ்டு கால்கள்... எடுத்து காரணம் கேட்கவோ... அழைத்து பதில் பேசவோ முடியாத படிக்கு பயம் பற்றி பதைபதைப்பூட்டியது இருவருக்கும்....

வேகமாக தியேட்டர் ஐ விட்டு வெளியே வந்தவனுக்கு அம்மாவிடமிருந்து அடுக்கடுக்காக கால்கள் வந்திருந்தது...

நேத்ராவை அமைதியாக இருக்கச் சொல்லி எடுத்து பேசியவனுக்கு அடுத்து என்ன செய்வதென்றே ஒரு கணம் புரியவில்லை..

நானாவது ஆண் வீட்டில் எதையாவது சொல்லி சமாளிக்கலாம் ... என்னுடைய அவசரத்தினால் இவளும் மாட்டிக் கொண்டால் இரு வீட்டிலும் திருமணத்திற்கு முன்பே தேவையற்ற மனக்கசப்பு எழுவதை மித்ரன் விரும்பவில்லை...

அவன் பேசிமுடித்து பதட்டமாக சிரித்தபடியே சிந்திய வார்த்தைகளில் அவளுக்கு தூக்கிவாரிப்போட என்னங்க சொல்றீங்க என நடுங்கினாள்...

அம்மு நாம நல்லா மாட்டினோம் டி...
என்னங்க என்ன ஆச்சு...
நாளைக்கு காலைல உங்க வீட்டுக்கு பொண்ணு பார்க்க வரப்போறோம் டி...
உன் ஃபோனை எடுத்து பாரு எதாவது கால் வந்துருக்கானு....
ஆமாங்க ஆனா வீட்ல இருந்து வரல... ஸ்கூல் ல இருந்து வந்துருக்கு.
ஐயோ இன்னைக்கு தான் ஃபீவர்னு லீவ் போட்டேன்ங்க....
நாளைக்கு பொண்ணு பார்க்க வராங்கனு உண்மைய சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க...

மேரி நல்லா போட்டு குடுத்துடுவா..

அப்பா வேற நாலு மணிக்கு கால் பன்னுவாருங்க... இப்போ என்ன செய்யிரது..

சீக்கிரம் உன்னை ட்ரைன் ஏத்தி விட்டுட்டு நான் ஆஃபிஸ் போகனும் டி அண்ணா வேற பத்து கால் பன்னிட்டான்.... அம்மா என் ஃபோன் ... எடுக்கலைனு அண்ணன்கிட்ட பேசியிருப்பாங்க போல நான் ஆஃபிஸ் வந்து லீவ் போட்டு போனது தெரிஞ்சி தான் தொடர்ந்து ஃபோன் பன்றாங்க...

அண்ணன் வேற தனியா கால் பன்றாங்க டி..

அவனுக்கு தெரிஞ்சா வீட்டுக்கு நேரா நியூஸ் போயிடும் டி....

தனியாக வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றதுமானே நேத்ராவிற்கு அழுகை வந்துவிட்டது....

பார்த்தீங்களா ... வா ... வா னு கூப்டு இப்போ தனியா போக சொல்றீங்க எனக்கு பயமா இருக்கு நான் தனியா போக மாட்டேன் கூப்டு போய் என்னை திருவொற்றியூர் ல எறக்கி விட்டுட்டு அப்புறம் நீங்க போங்க என அழத் துவங்கிவிட்டாள்...

ஏய்... அழாத டி இது தியேட்டர்... பாக்குறவன் லா என்னை தான் தப்பா நினைப்பாங்க... டி பிளீஸ் அழாத...

நான் என்னடி பன்றது நீ பைக் ல வரார மாதிரி இருந்தா ஒன் ஹவர்ல வீட்ல விட்ருவேன் ..

நீ பைக்லயும் வரமாட்ரியே...

இந்த பாழாப்போன ட்ரைன் எப்போ வந்து நாம எப்போ போறது... சரி வா. . எல்லாம் மேல இருக்கவன் பார்த்துப்பான்.

இன்னைக்கு நமக்கு நமக்கு சினிமா பார்க்க ஆசை வந்து இப்படி செல்ஃப் ஆப்பு ரெடியாகிடுச்சே.

இருவரும் வேகமாக கிளம்பி இரயில் நிலையம் சென்றனர். காலையில் சாப்பிட்ட ஒரு டம்ளர் பார்லி கஞ்சி எப்போதோ செறித்துவிட்டடு வயிற்றை வம்பு செய்தது..


ஆனால் பதட்டத்தில் அவளுக்கு எதுவுமே சாப்பிட தோன்றவில்லை... அவள் முகமே அவளுடைய பசியை காட்டியது... மித்ரனுக்கு...

ஆதரவாக அவளுடலய கரங்களை அழுத்தியவன் .. அவளுடைய கைப்பையிலிருந்த லன்ச் பாக்சை எடுத்து கையில் கொடுத்தான்..

அதில் நான்கு இட்டலிகளும் குருமாவும் இருந்தது.

நேத்ராவை சாப்பிட வைத்தான்... அவள் இம்முறை சமத்து பெண்ணாக அவனுடைய பசியையும் உணர்ந்து அவனுக்கு இரண்டு இட்டலிகளை எடுத்து வைத்தாள்...

அவன் மறுத்த போதும் எனக்கும் வேண்டாம் என குட்டி ஸ்ட்ரைக் செய்து அவனை சாப்பிட வைத்தாள்..

இருவரும் நடப்பது நடக்கட்டுமே என நிதானமான மனநிலையில் இருந்தனர் இப்போது..

ஒருவழியாக மித்ரன் அவனுடைய அண்ணனுக்கு கால் செய்து ஓரளவு உண்மை நிலவரத்தை கூறி வீட்டில் கேட்டால் ஏதாவது போய் சொல்லி சமாளிக்கும் படி கேட்டான்..

அவரோ... அடப்பாவி நாளைக்கு பொண்ணு பார்க்கப் போற பொண்ணோட இன்னைக்கு படத்துக்கு போனவன் நீயாதான்டா இருப்ப.. என கிண்டல் செய்து ஒரு வழியாக மித்ரனின் அம்மாவிடமும் ஆஃபிசிலும் சமாளித்தார்..

நேத்ரா அமைதியாக வந்தாள்...மித்ரன் அவளை இயல்பு நிலைக்கு திருப்ப ஏதேதோ பேசி சிரிக்க வைத்தான்...

பின்னர் நாளை தன் வீட்டாரை எப்படி கைக்குள் போடுவது... என்ன பேச வேண்டும் எப்படி நடக்க வேண்டும் என்றெல்லாம் சில டியூஷன் டிப்ஸ்களை வாரி வழங்கினான்.

அதற்குள் சென்டரல் சென்று அடுத்த வண்டிக மாறி ஏறி வெற்றிகரமாக அவளை இறக்கிவிட்டு அங்கிருந்து அவன் அடுத்த பிளாட்ஃபார்மில் சென்று இரயில் ஏறி மீண்டும் ஆஃபிஸ் கிளம்பினான்

நேத்ரா இந்தி டியூஷன் சென்று ஒரு எட்டு தலையை காட்டிவிட்டு வேகமாக வீட்டுக்கு சென்றாள்..

இரவு வரை அவளிடம் யாரும் எதையும் சொல்லவில்லை .

காலை எப்போதும் போல பள்ளிக்கு கிளம்பிட எழுந்தவுடன் அம்மா வந்து புடவை நகைகளை எடுத்து வைத்துவிட்டு தயாராக வரச்சொன்னார்.

அவள் ஒன்றும் தெரியாதைப் போல இயல்பாக ஏன்மா என்று கேட்க...

இன்னைக்கு உங்க மாமியார் வீட்ல இருந்து வராங்க... நீ இப்போ குளிச்சு கிளம்பு.. அவங்க சீக்கிரமே போயிட்டா ஸ்கூல்கு போ இல்லைனா லீவ் போட வேண்டி வரும் என்றார் .

நேத்ராவிற்கு முதலில் விடுப்பு எடுப்போம் பிறகு வருவதை சமாளிப்போம் எனத் தோன்றியது.

வேகமாக காலை 7.40 க்கே பள்ளிக்கு கால் செய்து விடுப்பு கேட்டாள். காரணம் அப்போது தான் முக்கிய அலுவலக பணியாளர்களோ... தலைமை ஆசிரியரோ இருக்க மாட்டார்கள்.

காரணம் கேட்க மாட்டார்கள்... அவர்கள் வரும் முன்பே வேகமாக விடுப்பு அறிவித்துவிட்டு மொபைலை ஆஃப் செய்தாள்..

உற்சாகமாக குளித்து தலை சிடுக்கெடுத்து அம்மா கொடுத்த புடவையை அணிந்தாள்... அழகான பச்சையும் இரமர் நீலமும் சேர்ந்த ஒரு லைட்வெயிட் சாரி.... சின்ன கரைவைத்து அழகாக இருந்தது.

அதை கட்டியவுடன் பலமுறை கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள்...

தான் குண்டாக தெரிகிறோமா என பல முறை ஆராய்ந்து பார்த்துவிட்டு மனதிற்கு திருப்தியான பின்பு தலை பின்னி அதில் நெருங்க தொடுத்த முல்லைச் சரத்தை தலை நிறைய நீண்டு தொங்க சூடிக்கொண்டாள்..

அவளுக்கு எப்போதுமே ஒரு ஜிமிக்கி கம்மளும் பதக்கம் வைத்த நீண்ட செயினும் கைகள் நிறைய கண்ணாடி வளையலும் அணிந்து கொள்ள பிடிக்கும்.

பள்ளிக்கு பெருபாலும் பூவையும் வளையலையும் குறைத்துக் கொள்வாள்...

அவளுக்கு பவுடர் போடுவதோ... முகப்பூச்சுகள் பூசுவதோ பிடிக்காது ...

அதனால் வேறும் பொட்டு. மிதாரனுக்கு பிடிக்கும் என்பதால் பொட்டிற்கு மேலே பட்டையாக சந்தனக்கீற்று...

கண்களுக்கு மை தீட்டிக் கொண்டாள்.

அவள் திருப்தியாக அலங்காரம் முடிந்தவுடன் வேகமாக மூர்த்தியிடம் சென்றாள்....

சின்ன வயது முதலே அவளுக்கு எதை செய்தாலும் அப்பாவிடம் காட்டி அவருடைய புன்னகை கலந்த பாராட்டு வேண்டும்.

அவள் வாராவாரம் நகம் வெட்டி விரலை சுத்தம் செய்தால் கூட உடனே சென்று அப்பா என்று கையை நீட்டி காண்பிப்பாள்...

மூர்த்தியும் இரண்டு புருவங்களும் ஒருங்கே உயர்த்தி ஆச்சரியம் கலந்த புன்னகையோடு பாராட்டுவதோ கருத்து சொல்வதோ ... அப்படி அவர் விழியில் புன்னகையைக் கண்டால் தான் நேத்ராவிற்கு நிறைவாக இருக்கும்..

அதே போல மூர்த்தியின் முன் சென்று அப்பா...என அழைக்கவும்... அவர் திரும்பி புன்னகைத்தார் ... வெளியே வாகனம் வந்து நின்ற சத்தம் கேட்டு நேத்ரா அவசர அவசரமாக உள்ளே ஓடி பதுங்கிவிட்டாள்...

அடுத்த நடந்த கூத்தையெல்லாம் வேற லெவல்….
 
banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
நான்தான் First,
காயத்ரி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
யாழ் மொழி @ காயத்ரி வினோத் குமார் டியர்
 


Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , mallikamaniv[email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement

Top