தீராத் தீஞ்சுவையே...30

Yazh Mozhi

Active Member
தீராத் தீ______30

மித்ரனிடம் என்னதான் தைரியமாக பேசிவிட்டு வந்தாலும் நேத்ராவின் மனம் படபடத்தது....

எப்போது... எப்படி ....ஆரம்பித்து எப்படி சம்மதிக்கும் விதமாக அவர்களின் மனதை மாற்றுவது என்று ஏகப்பட்ட கேள்விகளோடு ஒரு போராட்டமே நடத்திக் கொண்டு இருந்தாள்....
ஒருவழியாக அன்னையிடம் மெல்ல பேச்சு கொடுத்தாள்....
அம்மா....
சொல்லு நேத்ரா...
இப்போ எனக்கு கல்யாணம் வேண்டாம் ம்மா....
ஏன்....
எனக்கு படிக்கனும்...அதோட....
அதோட ..
முகம் தெரியாத ... முன்னபின்ன தெரியாத யாரையோ எப்படி கல்யாணம் பன்றது...
.........
பிளீஸ்மா.....
நேத்ரா..... சுத்தி வலைச்சி பேசாம நேரடியா உன் மனசுல இருக்குறத சொல்லு... நாங்க உன் விருப்பம் இல்லாம எதையும் கட்டாயம் பன்ன மாட்டோம்...
புரியிது ம்மா. ..ஆனா...
சொல்லு....
எனக்கு... நா... ம்மா... நான் சொல்றத பொருமையா கேக்கனும் அப்றமா உங்களுக்கு என்ன தோனுதோ சொல்லுங்க...
ம்ம்ம்.... சரி சொல்லு...
எனக்கு ... எனக்கு வேற ஒருத்தர புடிச்சிருக்கு.. ஆனா படிப்பு முடிஞ்சதும் லைஃப் ல செட்டில் ஆகிட்டு உங்க கிட்ட சொல்லலாம் னு தான் வெயிட் பன்னேன்..
நீங்க இவ்வளவு சீக்கிரமே கல்யாணத்த பத்தி பேசுவீங்கனு நான் எதிர் பாக்கல..
அவரு ... அவருக்கு அப்பா...அம்மா பாட்டி ... ஒரு அக்கா... இருக்காங்க... அக்காக்கு கல்யாணம் ஆகி பத்து வருஷம் ஆகுது...
ரெண்டு பசங்க...
அம்மா வசந்தா... அப்பா கணேசன்... அக்கா நித்யா தேவி... பாட்டி அஞ்சலை...
அவரு.. டிப்ளமோ பன்னிட்டு வேலைக்கு போயிட்டே இப்போ பி.இ பன்றாரு...
இன்னும் செட்டில் ஆகல... சொந்தமா லேண்ட் இருக்கு ... வீடு இல்ல...
அவங்க என்ன.. கேஸ்ட்...
நம்ம ஆளுங்க தா.. ஆனா... *****
ஓஓஓ... பரவாயில்லை...
இங்க பாரு நேத்ரா... வாழ்க்கை ல இப்போ முக்கியமா தெரியிர சில விஷயம் சில வருஷம் கழிச்சி அதோட
குறைகள் மட்டுமே தெரியும்...
நான் உனக்கு பார்த்ததெல்லாம்.... சொந்த வீடு... வீட்டில ஒரே பையன்... நல்ல வேலையோட செட்டில் ஆன பசங்க ...
நீ இப்போ சொல்ற விஷயத்துல ஒன்னுகூட சரியில்லை... ஒன்னு நல்ல வேலையாவது வேணும்... இல்ல நல்ல வீடு வாசலாவது வேணும்...
ஒன்னுமே இல்லாம எந்த தைரியத்துல நான் உன்னை கட்டிக்குடுக்குறது...
இது வாழ்க்கை மா... சினிமா இல்ல...
சினிமால தான் மூனு மணி நேரத்துல காதலிச்சி கல்யாணம் பன்னி ஒரே பாட்டுல பணக்காரனா மாறி ஒரு ஃபேமிலி சாங்க ல எல்லாரும் ஒன்னா ஆகிடுவாங்க...
புரியிதா...
ம்மா... பிளீஸ்... லைஃப் ல நீ சொல்றது எனக்கு புரியிது.... ஆனாலும் பணத்தை விட முக்கிய மான விஷயங்களும் இருக்கு மா... ஏன் எப்பவும் கல்யாணத்துக்கு வயசயும்.. குணத்தையும் விட்டுட்டு....வசதியையும் சேஃப்டியையும் மட்டுமே டார்கெட் ஆ பார்க்குறீங்க ம்மா...
வசதி ... வேலை... வீடுனு சொல்றீங்க அவனுக்கு எந்த கெட்டப்பழக்கமும் இருக்காதா .. அவன் வாழ்க்கைல நான் மட்டுமே முதல் பொண்ணாகவும் கடைசிப் பொண்ணாகவும் இருப்பேனா... நானே அவன் இரசிக்கிற... காதலிக்கிற கடைசி பொண்ணா இருப்பேனா. .
நீ சொல்றமாதிரி செட்டில் ஆன பசங்க னா ரெண்டு விதம்...

ஒன்னு அப்பா சேர்த்து வச்சிருப்பாரு... தாத்தா சொத்து இருக்கும்... இவன் தருதலையா திரியிரானேனு... கால் கட்டுப் போட்றேனு யாராவது ஏமாந்த பொண்ண அவன் தலைல கட்டி வச்சி அவளும் வேற வழியில்லாம எல்லாத்தையும் பொருத்துகிட்டு வீட்டோட கஷ்டத்த புரிஞ்சி அவன் கூட கட்டாயத்துக்கு வாழனும்....

அடுத்து ரெண்டாவது இரகம் கஷ்டப்பட்டு காலவாரிவிட்டு. இல்ல கடன உடன வாங்கி சொந்தமா சம்பாதிச்சி முப்பத்து வயசுக்கு மேல கல்யாணம் பன்றவன்... அவனுக்கு பொண்டாட்டியும் அவ போட்டுகிட்டு வர நகையும் இலாப நஷ்டத்த ஈடு கட்ற முதலீடு அவ்ளோ தான்....என்ன கேட்டா .. அத்தனை வருஷம் அவன் லைஃப் ல ஒரு பொண்ணு கூடவா இருக்க மாட்டா .

வெளியில யோக்கியமா இருக்க பலப்பேருக்கும் உண்மையிலயே ஒரு கொடூரமான முகம் இருக்கும் ம்மா... அதுக்கு ஃபோன் இருக்கு... அதுல 100% நல்லதும் இருக்கு... 1000% கெட்டதும் இருக்கு....

இன்கேஸ்.... நீ எப்படி மாப்பிள்ளை ஆ வசதி. வீடு .. வேலைனு பார்த்து செலக்ட் பன்றியோ ...அதே மாரி அவங்களும் என்ன வெளி அழகையும்... சீர்வரிசை... நீ போடப்போற சவரன் இத வச்சிதா செலக்ட் பன்னுவாங்க....

இது கல்யாணம் இல்லை ம்மா.... பிசினஸ்.
நானோ. ..இல்ல .. அவனோ. . பொருள் இல்ல....ம்மா....
நீ ஃபோட்டோல காட்ரவன் லா... இந்த லிஸ்ட் ல இல்லனு உன்னால புரூஃப் பன்ன முடியுமா..
ஆனா மித்ரன் அப்படி இல்லம்மா....

என்கிட்ட புரூஃப் இருக்கானு கேக்காதீங்க எனகிட்ட அவன் மேல நிறைய நம்பிக்கை இருக்கு... அவன் மேல நிறைய அன்பு இருக்கு... அது யாரோ ஃபோடோஸ் ல இருக்க ரமேஷ் மேலயோ... சுரேஷ் மேலயோ... இனி வரவேவராது....ம்மா..

அவன் தப்பு பன்னினாலும் ..எனக்கு ஏதாவதுவது துரோகம் பன்னினாலும் ...அத என் அன்பால என்னால சரி பன்னிட முடியும்மா...
அவள் இன்று கூறிய வார்த்தைகளை. வானத்தில் பறந்து சென்ற தேவதைகள் ததாஸ்தூ .... சொல்லிச் சென்றது நேத்ராவிற்கு தெரிய வாய்ப்பு இல்லை.. பின்னாளில் அதுதான் நடக்கப்போகிறது என்பதையும் அவள் அறியப்போவதில்லை….
அவள் எதேச்சையாக கூறிய வார்த்தையே அவளுடைய உயிரை மரண போராட்டத்தில் தள்ளி அவளுடைய வாழ்க்கையை திசை திருப்பப்போவதை இன்றே அறிய முடிந்திருந்தால்.. நேத்ராவின் வாழ்வில் நடக்கப்போகும் எத்தனையோ விபரீதங்கள் தடுக்கப்பட்டிருக்கலாம்...

அதே மாதிரி இப்போ நீங்க சொல்ற வசதி ... வேலைக்காக மனச மாத்திகிட்டு வேற ஒரூத்தன கல்யாணம் பன்னிகிட்டேனு வைங்க..அவன் என்கிட்ட நீ என்னைக்காவது ஒரு நாள் நீ யாரையாவது லவ் பன்னியிருக்கியானு கேட்ட நான் என்ன சொல்ல ..

இல்லனு பொய் சொல்லவா.... இல்ல...அவனோட பணத்துக்காகவும்... வசதிக்காகவும் என் காதல தூக்கி போட்டுடு உன்ன கல்யாணம் பன்னிகிட்டேனு சொல்லவா....அந்த லைஃப் கு பேரு என்னத் தெரியுமா...

பணத்தையும் வசதியையும் காதலிக்க முடியாதுமா... காதலிச்சா பணமும் வசதியும் பெரிசாத் தெரியாதும்மா.

என்னால வசதிக்காகவும் பணத்துக்காகவும் நீங்க காட்ர யாரோ ஒருத்தன கல்யாணம் பன்னிக்க முடியாதும்மா...

சப்போஸ் இந்த பையன உங்களுக்கு பிடிக்கலைனா கூட பரவாயில்லை ம்மா... நான் எந்த சூழ்நிலையிலும் உங்கல ஏமாத்திட்டு அவன்கூட போக மாட்டேன்...

உங்க பர்மிஷன் காக வெயிட் பன்றேன்... அவனும் செட்டில் ஆகட்டும்.உங்களுக்கு எப்போ... எங்க லவ் ஆ ஏத்துக்க முடியிதோ அப்போ நாங்க கல்யாணம் பன்னிக்கிறோம்மா... உங்க சம்மதத்தோட...

அதுவரைக்கும் பிளீஸ்மா என்ன மத்தவங்க ஃபோடோஸ் காட்டி ஃபோர்ஸ் பன்னாதீங்க...

பணம் வசதி லைஃப் ல செட்டில் ஆகுறது இது எல்லாத்தையும் தாண்டி அன்பு... காதல்னு சில விஷயம் இருக்குமா..

எனக்கு அவர தா புடிச்சிருக்கு... அவரத் தவிர வேற யாரையும் என் பக்கத்துல நிக்கவோ.. என்ன தொடவோ என்னால அனுமதிக்க முடியாது...

அவரு ....அவரு...னா... அவர் பேரு தான் என்ன...
மித்ரன். ம்மா...
ம்ம்ம்... அப்பா வரட்டும் நான் பேசுறேன்..
தேங்ஸ் மா....
நான் ஹிந்தி டியூஷன் கிளம்புறேன்... அடுத்த மாசம் எக்ஸாம் வருது...
அப்பாகிட்ட எப்படியாவது எடுத்து சொல்லி ஓ.கே வாங்கிடும்மா... பிளீஸ்...ம்மா...
ம்ம்ம்... கண்டிப்பா ... நீ பார்த்து போ...
சரிமா . .
வீட்டை விட்டு வெளியே வந்தவளுக்கு இப்போது தான் மனம் இறகாக மாறி... லேசாக இருந்தது...
இனி இரவு அப்பாவின் சம்மதமும் வாங்கிவிட்டாள் சந்தோஷம் தான்..
அதோட மித்ரனுக்கு ஃபோன் பன்னி சொல்லிடலாம் என்று குதூகலமாக மனதில் கற்பனைக் கோட்டை கட்டியவள்... ஹிந்தி டியூசன் உள்ளே நுழைந்ததுமே ஃபோனை சைலண்ட் மோடில் போட்டுவிட்டு... சென்றாள்.
இரண்டு மணி நேரம் வகுப்பு முடிந்து வெளியே வந்தவளுக்கு வீட்டிற்கு இருட்டில் நடந்து செல்ல... பயம் பிடித்துக்கொண்டது...
தந்தைக்கு கால் செய்ய ஃபோனை எடுத்தவளுக்கு ஆல்ரெடி மித்ரனிடமிருநாது 14.... மிஸ்டு கால்கள்..
அதைக் கண்டு நேத்ராவிற்கு குழப்பமும் பயமும் போட்டி போட மித்ரனுக்கு ஃபோன் செய்தவளுக்கு அவன் கூறிய செய்தியும் அவன் குறளில் வெளிப்பட்ட எரிச்சல் ஆத்திரமும் அவன் கூறிய விஷயம் யாவும் அவளுக்கு நொடி நேரத்தில் கண்ணீரை ஊற்றெடுக்க வைத்தது.

வழியும் கண்ணீரோடு எப்படி இருட்டை மறந்து வீடு வந்து சேர்ந்தாள் என்பது அவளுக்கேத் தெரியாது .

அங்கே தந்தையைக் கண்ட நிலை வேறு அவளை மேலும் உலுக்கி எடுத்தது... இன்றையப் பொழுது போல மோசமான அனுபவம் இனி என்றுமே நேராது என்ற விரக்தியோடு அவளுடைய அறைக்குள் குனிந்த தலையும் கலங்கிய கண்ணுமாக நுழைந்தவளை தந்தையின் கோவக்குரல் அதிர்ச்சியாக உரையச் செய்தது.......

___ தொடரும்..
 




banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
நான்தான் First,
காயத்ரி டியர்
 




Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
யாழ் மொழி @ காயத்ரி வினோத் குமார் டியர்
 




banumathi jayaraman

Well-Known Member
அம்மாக்கிட்ட எவ்வளவு தெளிவா நேத்ரா பேசுறாள்?
 






Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , mallikamaniv[email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement

Top