தீராத் தீஞ்சுவையே...20

Advertisement

Yazh Mozhi

Active Member
தீராத் தீ____20

பெங்களூரிலிருந்து வீடு வந்த மகன்கைகளில் கட்டோடு வரவும் அதிர்ந்த வசந்தி கண்கலங்கி மகனை தாங்கி கவனித்தார் .

தானாக ஒரு காரணத்தை உருவாக்க காத்திருந்த நேரத்தில் மகனுக்கு அடிபட்டதும் நன்மைக்கு என்றே தோன்றியது... .. மெதுவாக மகனிடம் பேச்சு கொடுத்தார்....

என்ன டா மித்து அம்மா கிட்ட எதையும் மறைக்காதவன் இப்போ எதையுமே சொல்றதே இல்ல...

தட்டிக் கேட்க வேற ஆல் வந்ததாலையா....
அட அதெல்லாம் ஒன்னும் இல்ல ம்மா...

சும்மா நடிக்காத மித்ரா... உன் ஃபோன் ஸ்கிரீன் ல இருக்க கண்ணு யாரோடது ..


அ...அ...அது...ம்மா.. அது ஒரு பாட்டுல வருமே அதோ அந்த நடிகையோட கண்ணும்மா...

எனக்கு சின்ன வயசுலயே காது குத்திட்டாங்க டா...
அம்மா அப்பாவி தா... அடி முட்டாள் இல்லை...

ஐயோ .... அம்மா... அப்படிலா இல்லம்மா...

சும்மா சொன்னதையை சொல்லி ஏமாத்தாத டா... பொண்ணு பேரு என்ன...

எங்க இருக்கா... என்ன ஏதுன்னு விவரமா சொன்னாதானே... அடுத்த கட்ட வேலைய பாக்க முடியும்....

வசந்தா சின்ன மீனைப் போட்டு பெரிய முனை பிடிக்க பார்த்தார்....

அது சரியாக வேலை செய்தது...

ம்மா... பிராமிஸ்....

உன்ன விட அம்மாக்கு என்னடா முக்கியம்...

உன் ஆசை தான் அம்மா ஓட ஆசையும் சரிதானே...

மித்ரனுக்கு தலை கால் புரியவில்லை... ஐ ம்மா... சூப்பர் ம்மா... என் செல்ல அம்மா நீங்க தான்...

சரி சரி ஐஸ் வச்சது போதும் என் மருமகள பத்தி சொல்லு...

அவ பேரு நேத்ரா மா..

பாருடா.... நீ மித்ரா ... அவ நேத்ரா வா.. நல்ல பெயர் பொருத்தம் போ... அடுத்த முகூர்த்தமே ஓ.கே தானே...

ம்மா.... ஆனா... அவ படிக்கிறாம்மா...

அதுக்கு என்டா... தாராளமா படிக்கட்டும்...
இப்போ நீ அவள பத்தி சொல்லு...

அவனும் அம்மாவிற்கு பிடிக்கும்படியாக அவளைப் பற்றிய தேவையான தகவல்களை கூறி அம்மாவின் உள் குத்து தெரியாமலே ஏக போகமாக மித்ராவை புகழ்ந்து கொண்டிருந்தான்...

அவரும் எல்லாம் கேட்டுக் கொண்டு... மாலையே நான் ஜாதகம் பார்க்க கோவில் வரை செல்கிறேன் என கிளம்பிவிட்டார்...

மகனுக்கு கொண்டாட்டம் தாங்க முடியவில்லை.... அம்மா இப்படி உடனே ஓ.கே சொல்லிவிடுவார் என அவன் நினைக்கவே இல்லை...

அதோடு ஜாதகம் வேறு பார்க்கப் போவதாக நேத்ராவின் பிறந்த தேதியை கேட்டுக் கொண்டு சென்றதும் அவனுக்கு தலைகால் புரிபடவில்லை...

நேத்ராவிடம் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள நினைத்தவன் சர்ப்ரைசாக நேரில் சொல்லி அவளுடைய ஆச்சரியங்களையும்... மகிழ்ச்சியையும் காண வேண்டும் எனக் காத்திருந்தான்...

கை வலிக்காக கொடுத்த மருந்தின் உபயத்தில் நன்றாகவே தூங்கிவிட்டான்...

வீட்டிற்கு வந்த வசந்தாவின் முகமே சரியில்லை... அப்படி காட்டிக்கொண்டு வளம் வந்தார்...

உறக்கம் கலைந்து உற்சாகமாக சமையல் அறையின் உள்ளே நுழைந்த மித்ரன்...

அம்மாவிடம் என்னம்மா எல்லாம் ஓ.கே வா எனக் கேட்டு நின்றான்....

வசந்தி ஏதாவது சாப்பிடுகிறாயா எனப் பேச்சை மாற்ற...

வேணாம்மா...நீங்க போன விஷயம் என்ன ஆச்சு அத முதல்ல சொல்லுங்க...

அந்த பொண்ணோட ஜாதகம் அருமையா இருக்கு...

எந்த குறையும் இல்ல....

உங்க ரெண்டுபேருக்கும் பத்துக்கு நாலு பொருத்தம் தான் இருக்காம்..

ஒரு கல்யாணத்துக்கு ஐந்து பொருத்தமாவது வேணும்பா...

அதுகூட நீங்க ரெண்டு பேரும் பரிகாரம் பன்னா சரியாகிடுமாம்....

ஆனா...

என்னம்மா.... சொல்லுங்க...

அது... மித்ரா உனக்கு ஜாதகத்துல செவ்வாய் தோஷம் இருக்கு.. அதோட உனக்கு வரப்போற ஆறு மாசத்துக்குள்ள மூனு க... க....கண்டம் இருக்காம் பா எனக் கூறி கண்கலங்கினார் ....

இந்த நிலைமைல உனக்கு இருக்க தோஷத்தோட அந்த பொண்ணு க்கும் உனக்கும் கல்யாணம் பன்னா....

கல்யாணம் பன்னா..

அது அந்த பொண்ணோட உயிருக்கு ஆபத்தாயிடுமாம்பா...

இதைக்கேட்ட மித்ரனுக்கு மனம் தாலவில்லை... உடலின் வலியை விட உணர்வுகளை விழுங்கி சமாளிக்க நிறைய பக்குவம் வேண்டும்..

மித்ரன் பாவம் அவனால் அதை உடனே ஏற்க முடியாமல் கண்கலங்கி நின்றான்...

ஒரு கணம் வசந்தாவிற்கு உள்ளம் பதைத்தது... ஆசையாக வளர்த்த மகனை விட சொத்தும் சீரும் முக்கியமா...??

அவன் அழுகிறானே... ஐயோ... உண்மையை சொல்லி விளையாடியதாக சொல்லிவிடலாமா....

வேண்டாம்.... வேண்டாம்... இப்போது செய்வதும் அவனுடய நன்மைக்காகத் தான் என மனதைக் கல்லாக்கிக் கொண்டு கண் கலங்கினார்...

மித்ரன் அமைதியாக அவனுடைய அறைக்கு சென்றான்...

நடந்த இந்த ஆக்ஸிடென்டில் தனக்கு ஏதாவது ஆகியிருதால் கூடப் பரவாயில்லை...

ஆனால் நடக்கவிருக்கும் அல்லது நடக்க்கூடும் என்ற ஒரு கற்பனையான நிகழ்வைக் கை காட்டி கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருத்தியிடம் எப்படி என் நிலையைப் புரிய வைப்பேன்...

இரண்டு வருடம் வலிய சென்று அவளை சீண்டி ... பேசிப் பேசி காதலிக்க செய்துவிட்டு இப்போது காதல் இல்லை ... போ என்றால் அல்லது ஜாதகம் சரியில்லை என்றால் அவள் என்னை என்ன நினைப்பாள்....

எத்தனை கீழ்த்தரமான குணமுடையவன் என்று தானே நினைப்பாள்... நீயின்றி நானில்லை... நானின்றி நீயில்லை என்றெல்லாம் வசனம் பேசி காதலித்துவிட்டு இன்று அவளும் என்னை உயிராக நேசிக்கும் நிலையில் எனனால் எப்படி அவளை வேண்டாம் என ஒதுக்க முடியும்....

அவளுடைய அன்பின் ஆதிக்கத்தில் வாழ்ந்த இந்த இரண்டு ஆண்டுகளே இத்தனை சொர்க்கம் ஆக கழிந்ததே...... அவளோடு வாழ வேண்டிய மிச்ச வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு எப்படி நான் உயிரோடு இருக்க முடியும்...

எனக்கு ஏதாவது ஆகும் என்றால் கூட நான் தாங்கியிருப்பேன்.. என்னைக் காதலித்த பாவத்திற்கு அவளை எப்படி நான் இழக்க முடியும்...

அவள் எங்கிருந்தாலும் சந்தோஷமாகவும் நிறைந்த புன்னகையோடும் தான் வாழவேண்டும்...

அதற்காக என் அன்பை விட்டுக்கொடுக்கவும் நான் தயார்... ஆனால் என்னால் அவளுக்கு எந்த துன்பமும் வரவேக் கூடாது என உறுதியாக முடிவெடுத்தான்...

அறைக்குள் சென்றவன் திரும்பி வரவே இல்லை. . இரண்டு வேலை உணவும் சாப்பிடவில்லை...

கண்கள் கலங்கி அப்படியே இடிந்துபோய் சாய்ந்த வாக்கில் செல்லை நெஞ்சோடு அணைத்து சுவற்றை வெரித்துக் கொண்டிருந்தான்..

கண்களில் இருந்து நீர் சத்தமில்லாமல் இறங்கியது...

தொண்டைக்குழி அழுகையை புதைக்க முடியாமல் விம்மி விம்மி கனத்து வலித்தது...

வசந்திக்கு மனம் நெருடலாகவே இருந்தது...
ஒரு மணம் உண்மையை சொல்லிவிடு என வற்புறுத்தியது... ஒருமனம் இப்போது சென்று சொன்னால் மகனின் கோவம் தன் மீதே திரும்புமே என பயந்தது...

அதோடு இதுவரை அவன் தன்மீது கொண்ட அளவுகடந்த அன்பு ஒரு புள்ளியளவு குறைந்தாலோ.... மகன் தன் மீது கோவத்தையோ மனவருத்தத்தையோ காட்டினாலும் நிச்சயமாக வசந்தாவாள் தாங்கவே முடியாது...

இது பொதுவாக தாய்மார்களின் மனப்பான்மை... பெரும்பாலும் குடும்பங்களில் வரும் மாமியார் மருமகள் பிரச்சனைக்கு மூத்த காரணமே இந்த உரிமை போராட்டம் தான்...

வசந்தாவிற்கு இப்போதே அந்த போராட்டம் தொடங்கிவிட்டது. . மனம் கனக்க மகனைக் கண்டு பேசாமல் பரிதவிப்போடு சென்றார்....

அங்கே நேத்ரா....

மாலை பள்ளி முடிந்து இரயில் ஏறி தொடர்ந்து மித்ரனுக்கு அழைத்துக் கொண்டிருந்தாள் .

அவனிடம் பேச கிடைக்கும் நேரமே காலை பத்து நிமிடமும் மாலை பத்து நிமிடமும் தான்... அதிலும் எப்போதும் கால் செய்த உடனே எடுத்து அம்மு செல்லம் என அன்பு மழைப் பொழிபவன் ......இன்று ஏனோ காலை கட் செய்து கொண்டே இருந்தான்....

நேத்ரா ஏதோ அவசர வேலைப் போல என நினைத்து வேகமாக நடந்து வீட்டிற்கு சென்றவள் அவளுடைய பள்ளி வேளைகளை முடித்தாள்... பாடக் குறிப்புகள் தயாரித்தாள்...

நடுவே செல்பேசியை எடுத்து பாரத்துக் கொண்டே இருந்தாள்...... ஏதாவது மித்ரனிடமிருந்து மெசேஜ்
வருமா என காத்திருந்து காத்திருந்து ஏமாந்து போனாள்....

படுத்தவுடன் உறங்கிவிடுபவள் இன்று அவன் குரலைக் கேட்காமல்... செய்திகளை பார்க்காமல் தவித்து போனாள்...

காலை வேலைக்கு செல்ல வேண்டிய அவசியத்தை உணர்ந்து வேகமாக எழுந்தாள்.. எப்பொழுதும் செல்வதைவிட இன்று வேகமாக இரயில் நிலையம் சென்று அவளுடைய வழக்கமான இருப்பிடத்தை பிடித்து அமர்ந்து ஆஸ்வாசப்படுத்திக் கொண்டாள்...

மீண்டும் மித்ரனுக்கு தொடர்பு கொண்டாள் கட் செய்து கொண்டே இருந்தான்... அவனுடைய உதாசீனம் அவளைப் புன்படுத்தியது... காதலை சொன்ன உடனே அலட்சியம் காட்ட ஆரம்பித்து விட்டானே என்ற கவலை நெஞ்சை அரித்தது... அவளுடைய மொத்த கோவத்தையும் மெசேஜில் கொட்டிவிட்டு பள்ளிக்கு சென்றாள்...

மெசேஜை பார்த்தவன் சலிப்பாக தோய்ந்து போய் சிரித்தான்... அமைதியாக இருந்தான்....

என்ன ஆனாலும் இன்று அவளிடம் எப்படியாவது ஏதாவது கூறி நிலைமையை புரிய வைத்து விட்டு தானும் எங்காவது செல்ல வேண்டும் என முடிவு செய்தான்...

அலுவலகத்தில் வெளியூர் சைட்டில் எங்காவது வேலை வேண்டி கோரிக்கை வைத்தான்...

அவனுடைய நல்ல நேரம் மூன்று மாதம் பெங்களூரும்... அடுத்ததாக சில மாதங்களுக்கு குஜராத் போகவும் அனுமதி கிடைத்தது...

வீட்டில் எப்போதும் பாட்டி மடியிலும் அம்மாவின் மடியிலும் படுத்து குறும்பு செய்து சிரித்தபடி சுற்றித் திரிந்தவன் இந்த ஒருவாரமாக யாரிடமும் பேசுவதில்லை ...

யாரிடமும் சிரிப்பதில்லை... இதில் இரண்டு நாள் குடித்துவிட்டு வேறு சென்றான்...

வசந்தா மனதில் குற்றவுணர்வோடு மகனைக் கண்டிக்க முடியாமல் முறைப்பதைப் போல நடித்து பேசாமல் நடமாடினார்...

அவனால் நேத்ராவின் கோவத்தையும் கண்ணீரையும் எதிர்கொள்ள முடியவில்லை... எந்த காரணம் சொன்னாலும் அவள் அதை ஏற்கும் மனநிலையில் இல்லை....

நேத்ரா மித்ரன் தன்னை நம்பவைத்து ஏமாற்றி விட்டதாகவே நினைத்துவிட்டாள்...

மித்ரனால் உண்மையை சொல்ல முடியாமல் திண்டாடினான்... அவளுக்கு ஏதாவது ஆகும் என்றாலும் அவள் அதைப் பெரிதாக என்ன மாட்டாள்... அவனுக்கு ஏதாவது ஆகும் எனக் காரணம் சொன்னால் அவனை சுயநலவாதி... பொய்யன்... என ஏசிடக்கூடும்...

அதனால் நமக்கு திருமணம் நடந்தால் தன் பெற்றோரின் உயிருக்கு ஆபத்து என்றான்...

ஏதேதோ காரணம் சொன்னான்....

அவள் இறுதியாக தேராந்தொடுத்த முடிவு அவனை அதிர வைத்துவிட்டது...

மித்ரனிடம் ஒரு அளவிற்கு மேல் கெஞ்ச
அவளுடைய சுயமரியாதையும் தன்மானமும் இடம் தரவில்லை...

இவனை நினைத்துக் கொண்டு இன்னொருவனை திருமணம் செய்வதும் அவனோடு குடும்பம் நடத்துவதும் மனசாட்சியற்ற பச்சை துரோகம் என அவளுடைய மனது அவளை மேலும் மேலும் காயப்படுத்தியது...

திலகாவும் அவளுக்கு அறிவுரைக் கூறி தேற்ற முயன்று தோற்றாள்...

இறுதியில் அவள் தேர்ந்தெடுத்த முடிவு கோழைத்தனமானதாக இருந்தாலும் அவளுக்கு அவளுடைய ஏமாற்றத்தை ஈடுசெய்ய வேறு வழி தெரியவில்லை..

கை நிறைய அவள் வைத்திருந்த தூக்க மாத்திரைகளும் அவளுடைய முட்டாள்தனமான முகம் தெரியாமல் தோன்றி இன்று முடிவின்று போன காதலை எண்ணி எள்ளி நகையாடுவதைப்போல தோன்றியது அவளுக்கு....

கைநிறைய மாத்திரைகளோடு கன்னத்தில் அறைந்துகொண்டு அழுதவள் அவளுடைய முடிவை எழுத ஆயத்தமாகிவிட்டாள்....

__தொடரும்…
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி வினோத்குமார் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top