தீராத் தீஞ்சுவையே....2

Advertisement

Yazh Mozhi

Active Member
தீராத் தீ_______2

நேத்ரா பார்த்து பார்த்து கணவனின் உடல் நலத்துடன் பிள்ளைகளின் ஆரோக்கியத்தை கருத்திற் கொண்டு தான் சமையலை செய்வாள்..
ஒரு வகையில் சமையல் அவளுடைய மன அழுத்தங்களை மறந்து இரசனையோடு நேரத்தை கடத்திட கிடைத்த மிகப்பெரிய யுக்தி..

அதனாலேயே பெரும்பாலும் வித விதமான உணவுகளை தயார் செய்து வீட்டில் யாருக்கும் வயிரு வாடமல் நா காக்கும் செயலால் தன்னை தானே புதுப்பித்து கொள்வது நேத்ராவின் வழக்கம்...

பதமாக நெய்விட்டு தாளித்த பொங்கள் சாம்பாரின் மணம் வீட்டை சுழல நேத்ரா பரிமார ஏதுவாக அனைத்தையும் தயார் செய்து வைத்தாள் .
யாழிசைக்கும் மித்ரனுக்கும் மதிய உணவையும் தயாரித்து டப்பாக்களை அதன் உறைக்குள் திணித்து மேசைமீது வைத்தாள்.
மித்ரன் குளித்தவுடன் பவுடர் போடாமல் சந்தனம் இல்லாமல் வெளியே செல்ல மாட்டார்...இன்று இளம் பச்சை நிற சட்டையும் கருப்பு பேண்ட்டும் அணிந்து கைகளை பட்டன் போட்டபடி படிகளில் இருந்து இறங்கினார்.

நேத்ரா கண்ணிமைக்காது கணவனை கருவிழிகளுக்குள் கடத்தி சிறை செய்ய முயன்று சிலையாகிப் போனாள்.
மித்ரன் தேவர் மகன் படத்தில் ரேவதி பாடுவதைப்போல இஞ்சி இடுப்பழகா... மஞ்ச செவப்பழகா... என பொருத்தமான நிறமும் அழகும் கொண்ட நாற்பத்து எட்டு வயது இளைஞர்...
ஆம் அவருடைய உடல்வாகு வயதை காட்டாது அத்தனை மெலிந்த உடல்வாகு அதோடு காதலின் சோபையும் பிள்ளைகள் மனைவி என நிறைவான வாழ்க்கையும்
அவரை என்றும் இளமையாகவே காட்டியது....

மனைவி தன்னை கண் கொட்டாது பார்ப்பதைக் கண்டவர் என்னடி மாமா வ பசங்க வர நேரத்ல இப்படி சைட் அடிக்கிற...
நெனப்பு தா... நா ...நான் வந்து சட்டை ஏன் இவ்லோ டல்லான கலரா இருக்கேனு பார்த்தேன்... அவ்ளோ... தா...
அம்மா... முடியல பொய் சொன்னா புடிக்காதுனு சொல்லிட்டு நீங்களே இப்படி அள்ளி விடுரீங்களே நியாயமா... நீங்க டாடிய சைட் அடிச்சத நானே ஐந்து நிமிஷமா பார்த்தேன்.... என்றான் கல்லூரிக்கு தயாராகி வந்த முகிலன்.

அம்மு பார்த்தியா பையனே சாட்சி சொல்லிட்டான்..

போதும் போதும் பனிஷ்மெண்ட் மறந்துடாதீங்க வாங்க சாப்டு கிளம்பலாம் எனக்கும் ஸ்கூள் கு டைம் ஆச்சு....
டேய் முகில் கொஞ்சம் சாப்டு போடா .....
அம்மா இன்னைக்கு பஸ்ட் இயர் ஸ்டூடண்ட்ஸ் வராங்க.... இன்னைக்கு உங்க பொங்கல சாப்டு தூங்க நா தயாரில்ல

நா கேன்டீன் ல சாப்டுக்குறேன் பிளீஸ் மா...
டேய் முகிலா நானே பஸ் ஸ்டாண்ட் ல விட்டிடவா.... டா

வேண்டாம் பா.... நீங்க அம்மாவயும் யாழையும் கூப்டு போங்க நா பாத்துக்குறேன்....
ஓகே டா முகில் பார்த்து மெதுவா போ...
சரிமா... பை ம்மா... பை ப்பா....

வேக வேகமாக யாழுக்கு உணவை ஊட்டி விட்டு அவளும் கொஞ்சம் சாப்பிட்டு மித்ரனுடன் பள்ளிக்கு கிளம்பினாள்.
அம்முகுட்டி.. ஏன்டா அமைதியா இருக்க..
இன்னைக்கு முக்கியமான டெஸ்ட் பா அதா கொஞ்சம் டென்ஷன் ...
இங்க பாரு குட்டிமா படிப்பு , டெஸ்ட், னு இதுக்காக யாராவது டென்ஷன் ஆவாங்கலா...? நீ புரியாம கஷ்ட பட்டு மனப்பாடம் செஞ்சி வாங்குர 100 மார்க்க விட புரிஞ்சி படிச்சி வாங்குர 60 மார்க் கூட போதும்டா...

யாழ் வாழ்க்கைக்கு படிப்பு அவசியம் டா.... ஆனா படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை... அனுபவ அறிவுதா முக்கியம் நீ எதுங்காகவும் பயமோ பதட்டமோ இல்லாமா இயல்பாவே உன் டெஸ்ட் அ எழுது ஓகே தானே…
ஓகே ம்மா இதையே தான் நீங்க நான் ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்டு போறதுல இருந்து சொல்றீங்க ... எனக்கு மனப்பாடமே ஆய்டுச்சு.... நான் ஸ்ட்ரைன் பன்னல சரியா.... நான் எனக்காக என் தேவைக்காக படிக்கிறேன்.... எனக்கு எந்த கஷ்டமோ டென்ஷனோ இல்லை சோ பிளீஸ்.....நா கிளம்பட்டுமா... அப்பா பை...ம்மா பை....
சரி குட்டிமா..

சரிங்க நானும் கிளம்பட்டுமா....முடிஞ்சா ஈவ்னிங் வரேன் பாத்து பத்ரமா இரு... பை...

நேரே பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த உடனே நேத்ராவிற்கு மாணவர்கள் மற்றும் சக ஆசிரியர்களின் காலை வணக்கங்களும் ... புன்னகையும் இதமாக இனிய நாளை தொடங்கிவைத்தது...

ஆனால் அந்த சந்தோஷங்களின் ஆயுள் இன்று ....இன்னும் சில நொடிகளில் தொலைந்து தான் தன்னிலை மறந்து அதிர வேண்டிய தருணம் வரும் என நேத்ராவே பாவம் அறிந்திருக்க வில்லை.

இன்று பள்ளியில் காலைத் தொழுகைக்கு தயார் செய்வது அவளது முறை... வேக வேகமாக மாணவர்களை உறுதிமொழி ,திருக்குறள் ,இன்றைய செய்திகள், என அனைத்திற்கும் மாணவர்களை தேர்வு செய்து விட்டு தேவையானவற்றை முறைப்படுத்திக் கொண்டிருந்தாள்...

இன்று கரும்பலகையில் தினம் ஒரு தகவளும், பொன்மொழியும் எழுத வேண்டிதும் அவளே தான்....
சாக்குக் கட்டிகளை எடுத்து எழுதத் துவங்கினாள் கரும்பலகையில் தேதியை எழுத அருகில் அழித்து மாற்றுகையில் அவள் கைகள் நின்றது...

நடுக்கம் பரவியது .... வியர்த்து கொட்டியது....
மூச்சுக்கு திணறுவதுபோல பார்வை மங்கி கண்கள் சுழன்றது... அவள் கைகளின் வளையல்கள் சரிந்து தெரிந்த அந்த தழும்பு அவளை பல நினைவடுக்குகளை தூசி தட்டி தள்ளாட்டத்தோடு மயக்கமுறச் செய்தது.....

அந்த நாள்…. அந்த நாளின் தாக்கம் இன்றும் கொஞ்சமும் குறையாமல் அவளை அப்படியே நிலை கொள்ளாமல் கொல்கிறதே…

எத்தனையோ முறை மறக்க நினைத்தும் தனிமையில் அழுது கரைந்தும் கூட இன்னும் அதன் வலியும் வேதனையும் குறையாமல் நெஞ்சை உலுக்கி சாயக்கிறதே ஏன்….

--- தொடரும்
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி வினோத்குமார் டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top