தீராத் தீஞ்சுவையே...19

Advertisement

Yazh Mozhi

Active Member
தீராத் தீ______19

நேத்ராவும் மித்ரனும் கண்களால் விடைபெற்று கண்கலங்க அவரவர் செல்பேசி செல்லமாக சிணுங்கியது.

ஐ மிஸ் யூ என்று....

இருவருக்கும் கலங்கிய விழிகளோடு குட்டி மென்னகைத் தோன்ற அமைதியாக கடந்த அந்த தருணத்தில்... அடுத்து என்ன பேசுவது என்றே புரியவில்லை...

அவளுடைய மனநிலையை அறிந்து மித்ரனே பேச்சு கொடுத்தான்... அவளது மனநிலையை மாற்ற வேண்டி அவளுடைய குடும்பத்தையே பகடைக் காயாக மாற்றி அவளை கோவமூட்டி சீண்டி சிரிக்க வைத்தான்...


அது எப்படி அம்மு உங்க ஃபேமிலி ல எல்லாருமே ஒரே சைஸ் வாரியா இருக்கீங்க... உங்கப்பா.. அம்மா... நீ ...அடுத்து ....உன் தம்பி....

அப்படியே படி... ஒழக்கு... ஆழாக்கு.. மாதிரி எல்லாரும் ஹைட் அண்ட் வெயிட் ல அப்படியே இருக்கீங்க டி... சான்சே ஏ இல்ல... என்றான்...

அவளுக்கு சிரிப்பு வந்தாலும் கூடவே குட்டி கோவமும் வந்தது... பிக்சர் மெசேஜ்களால் கொஞ்ச நேரம் சண்டை போட்டுவிட்டு வீடு வந்த இருவருக்கும் மனதில் அவ்வளவு கொண்டாட்டம்... ஆர்பரிப்பு.

கண்களை மூடினாலும் ஒருவருடைய பிம்பம் அடுத்தவர் இமைகளை மூட விடாமல் செய்து விளையாடிய விளையாட்டில் இருவருரின் இரவு தாமதமாகத் தூங்கி .....காலை வேகமாக எழ வேண்டிய நிர்ப்பந்தத்தோடு அவரவர் வேலைக்கு கிளம்பினர்....

நாட்கள் இப்படியே நகர .... இன்னும் ஒரு மிச்சமிருந்த ஆறு மாதமும் ஓடியே விட்டது... நேத்ராவிற்கு பி.எட் தேர்வுகள் நடந்து கொண்டிருந்தது... அவளை விட அவளுடைய தேர்வு முடிவிற்காக மித்ரன் தான் ஆவலாக காத்திருந்தான்...

காரணம் அதோடு அவள் கேட்டிருந்த கால தவணை முடியப் போகிறது....

அவளுடைய காதலை அவள் சொல்ல வேண்டிய தருணமும் இதோ இதோ இதோ என்று வந்துவிட்டது....

தேர்வுகள் முடிந்த உடன் நேத்ரா வேறுசில பள்ளிகளில் வேலைக்கு முயன்று கொண்டிருந்தாள் ..

சரியிக மே 15 ஆம் தேதி வந்தது... நேத்ரா அந்த தேதியில் காதலை சொல்வாள் என எதிர்பார்த்து எதிர்பார்த்து மித்ரன் வாடி வதங்கி போனான்....

அவன் காதல் சொன்ன தினத்தை பல ஐ லவ் யூக்களால் அவளுக்கு மறக்க முடியாத நாளாக மாற்றியிருந்தான்....

இருவரும் எந்த பரிசுகளையும் இடைப்பட்ட காலத்தில் மரிமாறிக் கொள்ளவில்லை...

உரிமையாக திருமணம் முடித்து உங்கள் கை பிடிக்கும் வரை உங்கள் அன்பு மட்டுமே போதும்... நீங்கள் கொடுக்கும் பரிசு உரிமையாக என் அறையை அலங்கரிக்க வேண்டும்...

திருட்டுத்தனமாக மறைத்து வைக்க வேண்டிய அவஸ்த்தை இருக்கக் கூடாது...

அதுவரை எந்த பரிசாக இருந்தாலும் வாங்கி உங்களிடமே வைத்திருங்கள்... நான் உங்களுக்கு மனைவியாகி உரிமையாக அவற்றை ஏற்கிறேன் என்று எதையுமே வாங்க மறுத்துவிட்டாள்....

அவளுடையக் காதலை இதே தினத்தில் அவனுக்கு பரிசாக கொடுக்கவே ஆசைபட்டாள்....

அவளுக்குள்ளும் அந்த தவிப்பு இருந்தது... ஆனால் தனக்கு இப்போது பார்ப்பதை விட நல்ல வேலை கிடைத்த பின் அவனிடம் காதலை சொல்லவே நேத்ராவும் காத்திருந்தாள் ... அதற்குள் வீட்டில் கல்யாண பேச்சைத் தள்ளிப்போட... எம்.ஏ... அப்ளை செய்துவிட்டு காத்திருந்தாள்...

இப்படியே ஒரு பதிநைந்து நாட்கள் கடந்துவிட்டது...மித்ரன் பொறுமையாக காத்திருந்தான்... அவள் சொல்லித்தான் தன்னை காதலிப்பதை அறிய வேண்டுமா...

அவளுக்கு தன் மீது எல்லையற்ற அன்பு உண்டு அவளாக ஏதோ காரணம் கொண்டு தாமதிக்கிறாள் என புரிந்து கொண்டு அமைதி காத்தான்...

அவனே எதிர்பாராத வண்ணம் திலகாவின் பாதி சம்மதத்தோடு நேத்ரா மே மாதம் 27 ஆம் தேதி அவள் விருப்பப்படி வேலை கிடைத்த அடுத்த நாள் அவனிடம் இயல்பாக பேசத்துவங்கினாள்...

அவனும் வழக்கம் போல அவளுடைய கேள்விகளுக்கு பதில் சொல்வதும்... ம்ம்ம் கொட்டுவதுமாக இருக்க....

நேத்ரா ஒரு கேள்வி கேட்டாள்....
மித்து....
என்ன அம்மு...
என்னை எப்பவுமே நீங்க அம்முனே கூப்பிடுவீங்களா....
ஆமா...
வயசாகிட்டா கூட....

ஓ....கூப்பிடுவேனே...
சண்டை போட்டா கூட...
ஆமா அம்மு...
முடியெல்லாம் நரைச்சி... தாத்தா.. பாட்டி ஆனா கூட....
ம்ம்ம்... கூப்பிடுவேண் டி...
அப்போ தாத்தா பாட்டி ஆகிடலாமா....
அதுக்கு வயசாகனுமே...
ஏன்... வயசானா தான் தாத்தா ... பாட்டினு யாரு சொன்னது......
அப்போ வேற எப்படிங்க மேடம் எப்படி தாத்தா பாட்டி ஆக முடியும்..
நம்ம பசங்களுக்கு கல்யாணம் ஆகி குழந்தைங்க பிறந்தா கூட நாம தாத்தா ... பாட்டி தானே...
அதுக்கு நமக்கு கல்யாணம் ஆகனும் ல...
ஆமால்ல...
அப்போ கல்யாணம் பன்னிக்கலாமா....கல்யாணமா.... அப்போ என் லவ்....

அத கல்யாணம் பன்னிட்டு கன்டினியூ பன்னலாமே...
எனக்கு டபிள் ஓகே அம்மூ...
அப்போ எப்போ கல்யாணம் பன்னிக்கலாம்...
நீ ஐ லவ் யூ சொன்ன உடனே...
அய்யோ... அப்போ நான் எம்.ஏ கம்ப்ளீட் பன்னிட்டே சொல்றேன்....
ஏய் இப்படியே நீ ஏமாத்திட்டு இருந்த நான் காலைல உன் வீட்டு வாசல்ல தாலியோட நிக்கப் போறேன் டி...
வேண்டாம் வேண்டாம் சீக்கிரமே எல்லாரோட சம்மதத்தோட நம்ம கல்யாணம் நடக்கனும்... நடக்கும் தானே....
100% அம்மு
இப்போ போனாப் போகுதுனு.... இந்தா.... ஒரு கூட்டி ஐ லவ் யூ ....
ஐ லவ் யூ அம்மு...
போதும் போதும் தூங்கு... போ...
ஹே நான் இந்த இரண்டு வருஷத்துல லட்சம் முறை ஐ லவ் யூ சொல்லியிருப்பேன்டி.... நீ என்ன ஒரு டைம் சொல்லிட்டு எஸ்கேப் ஆகுர...
நான் ஒரு முறை சொன்னா .. ஒரு லட்சம் முறை சொன்ன மாதிரி... எனக்கு நாளைக்கு சீக்கிரம் ஸ்கூல் போகனும் தூங்குங்க... .குட் நைட் .....டா...டா....

எஸ்கேப் ஆகிட்டதா நினைக்காத டி நாளைக்கு கவனிச்சிக்கிறேன்... குட் நைட்...

ஒரு வழியாக எந்த வில்லத்தனமும் இன்றி நகர்ந்த இந்த காதலில் கொஞ்சம் கொஞ்சமாக இடையூருகள் எழப்போகிறது
என்பதை இருவருமே உணரவில்லை...

மித்ரனின் நடவடிக்கை அனைத்தையும் கவனித்த வசந்தியம்மாள் அவனுக்கேத் தெரியாமல் அவனுடைய செல்லை ஆராய்ந்த நொடி சற்று ஏமாற்றமாக அதிர்ந்தார் ..

இத்தனை நாள் ஏதோ பையன் போழுது போக்காக விளையாடுகிறான்.. விரைவில் எல்லாம் தெளிந்துவிடும் எனக் காத்திருந்த வசந்தி நல்ல வரதட்சிணை நகை...பணத்தோடு ....தன் மகனுக்கு ஏற்ற வரன்களை அவன் முன் நீட்டி விருப்பம் கேட்க....

எதையுமே பிரிக்காமலே பிடிக்கவில்லை என்றான்... மித்ரன்....

நேத்ராவின் படிப்பை கவனத்தில் கொண்டு இரண்டு ஆண்டுகள் கழித்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறினான்...

அங்கேயே அவருக்கு பெருத்த ஏமாற்றம்...

இதுவரை அவன் போக்கில் விட்டுப்பிடித்து காரியம் சாதித்த வசந்தி முதல் முறை சந்தித்த பெருத்த அடியில் கோவத்தை மறைத்துக் கொண்டு பொருமை காத்திருந்தார்...

இதன் நடுவே நித்யா வேறு அவள் கணவனின் சொந்தத்தில் அவளுக்கு செல்வாக்கான இடத்தில் அழகோடும் நகைப் பொருளோடும் ஒரு வரனை பார்த்து வந்து அன்னையின் காதை கடிக்கத் துவங்கினாள்....

மித்ரன் எதற்குமே மசியவில்லை... எனக்கு திருமணம் இப்போது வேண்டாம் என உறுதியாக இருந்தான்...

அவனுக்கு தெரியாமல் வசந்தி அவனுடைய சேல்பேசியை ஆராய்ந்து அதில் அடிக்கடி கால் செய்யப்பட எண்ணை குறித்துக் கொண்டு இயல்பு போல நடமாடினார்..

மித்ரன் புதிய வேலையாக பெங்களூர் வரை பத்துநாள் சென்றிருந்த சமயம் .... மித்ரனின் மித்ரன் சரவணன் மூலம் அவனுடையக் காதல் குறித்து அனைத்து தகவல்களையும் திரட்டிய வசந்திக்கு இதில் சுத்தமாக ஒப்புதல் இல்லை...

முதலில் நேத்ராவிற்கும் மித்ரனுக்கும் ஒரே சாதியில் வேறு வேறு பிரிவு... அதில் வசந்தா ஒரு படி இறங்கி இருந்ததே முதலில் அவருக்கு பிடிக்கவில்லை...

அடுத்து நேத்ராவின் நிறம்... தன் மகனின் அழகிற்கு அவள் தகுதியில்லை எனக் கருதினார்...

அடுத்து நேத்ரா அதிகமாக படித்திருந்தாள் .... அதனால் தன்னையும் தன் மகனையும் மதிக்காமல் போக வாய்ப்பு உண்டு... என மனக்கணக்கு போட்டார்....

அடுத்து அவர் எதிர்பார்க்கும் சீரோடும் சிறப்போடும் இவள் மருமகளாக வாய்ப்பே இல்லை...

வசந்தா தாயாக சுயநலமாகவும் ... தீர்க்ககமாகவும் யோசித்து வில்லத்தனமாக சில முடிவுகளை எடுத்தார்...

எப்படியாவது மகனாகவே தன் காதலை தூக்கி எறிய வேண்டும் என சமயம் பார்த்து காத்திருந்தார்..

அதற்கு ஏற்ற தருணம் அழகாக அமைந்தது...
பெங்களூரில் ஒரு வேலைக்காக சென்ற
மித்ரனுக்கு ஊரிலிருந்து வரும்போது ஒரு சின்ன ஆக்ஸிடென்ட்... நடந்தது...
பெரிதாக காயங்கள் இன்றி சின்ன சிராய்ப்புகளோடு வீடு வந்து சேர்ந்தவனைக் கண்டு பயந்த வசந்தி......
மனதில் சில காரியங்களை வழிவகுத்தார்...

இது அவருடைய ஆட்ட நேரம் போல நினைத்த மாதிரி தாயம் விழந்து மகிழ்ச்சி அவரை கட்டுவிக்கும்படி அடுத்தடுத்த நிகழ்வுகள் தொடர்ந்தன....

இங்கே ஊருக்கு வந்த பிறகு இருவரும் தனியே சந்திக்கலாம் என்று நேத்ரா அனுமதி அளித்திருந்தாள்....

அந்த கனவுகளோடு வாகனத்தில் கோயம்பேட்டிலிருந்து வீடு திரும்பியவன் பலமாக மற்றொரு பைக்கில் மோதி அடிபட்டு சில காயங்களோடு வீடு திரும்பினான்...

அதைக் கண்டால் நேத்ரா பயம் கொள்வாள் என்று அவன் ஆவலாக எதிர்பார்த்த சந்திப்பைக் கூட கதை கதையாக பல காரணங்கள் சொல்லி தட்டக் கழித்தான்...

வசந்தியம்மாள் இதையே தக்க சமையமாக பயன்படுத்தி அவன் காதலைக் கை காட்டி திருமணத்தை பயன்படுத்தி மகனை தான் நினைந்நபடி அவன் வாயிலேயே அவனுடையக் காதலை தூக்கியெறிய வைத்தார்....

நேத்ராவின் நன்மைக் கருதி மித்ரன் செய்த முடிவால் நேத்ராவின் உயிருக்கு அவனே எமனாக வேண்டிய சூழல் அமையப் போவதை அப்போது அவன் உணரவில்லை ...

ஒருவேலை உணர்ந்திருந்தால் நடக்கவிருந்ததை தடுத்திருக்கலாமோ.......
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி வினோத்குமார் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top