தீராத் தீஞ்சுவையே...18

Advertisement

Yazh Mozhi

Active Member
தீராத் தீ____18

நேத்ராவின் குரலைத் தொலைப்பேசி மூலமும்... அவளை புகைப்படம் மூலம் பார்த்தே இந்த ஒன்றரை ஆண்டு ....காதல் வளர்த்த மித்ரனுக்கு அவளை நேரில் காண ஆவல் எழுந்தது..

அவளும் இத்தனை நாட்களில் அவனை உருட்டி மிரட்டி தட்டிக் கழித்து விட்டாள்...

அவளுக்கு பயம் அதிகரித்தது .. ஒரு முறை தொலைபேசி மூலம் பேசத்துவங்கியதன் வினை... தொடர்ந்து தன்னாலேயே அவன் குரலைக் கேட்காமல் இருக்க முடியவில்லை ..

அதைக் காரணமாக்கி.... எங்கே அடிக்கடி சந்திக்க வேண்டிய சூழல் வந்திடுமோ என்ற பயத்தில் முடியவே முயாதென உறுதியாக இருந்தாள்....

காரணம் திலகாவிற்கு அவள் செய்த சத்தியம் அப்படிப்பட்டது...

அதை மனதில் கொண்டு முடிந்த மட்டும் மறுப்பு தெரிவித்தாள்...

ஆனாலும் அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்திட வேண்டிய காலமும் விரைவில் வந்தது...

அதை நினைத்தால் இன்றும் நேத்ராவிற்கு புன்னகையும் வெட்கமும் போட்டி போட ஒரு ஆனந்த உணர்வு உள்ளத்தை பொங்கி வந்து நிரப்பிடும்....

நேத்ராவின் ஒன்றுவிட்ட பெரியம்மா பையன் ஜெயராமனுக்கும் ராஜலட்சுமி க்கும் கல்யாணம்... ஜெயராமுக்கு ராஜியை பதினொன்றாம் வகுப்பில் இருந்து தெரியும்... ஆனால் எப்போது காதலாக மாறியது இவர்கள் மனது என்று இருவருக்கும் தெரியாது...

இருவரும் பி.இ முடித்துவிட்டு வேலைக்கு சேர்ந்த சமயம் வீட்டில் பெரியவர்களால் பேசி நிச்சயித்து... இதோ இன்று திருமணம்...

நேத்ராவிற்கு இவர்களுடைய காதல் கதை நேத்ராவின் பள்ளி பருவம் தொட்டே தெரியும்...

விடுமுறைக்கு பெரியம்மா வீட்டுக்கு சென்ற போது அண்ணன் இரகசியமாக அவன் காதலையும் காதலியையும் அறிமுகம் செய்து வைத்தான்...

இன்று அவர்களுடைய திருமணம் என்பது நேத்ராவிற்கு அத்தனை ஆனந்தம்...

ஆனால் அந்த சந்தோஷத்தைக் கொண்டாட முடியாத படி மித்ரன் ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தான்...

அம்மு செங்கல்பட்டில் நடக்கும் உன் அண்ணனின் திருமணத்திற்கு நானும் வருகிறேன்... நாம் அங்கே சந்திக்கலாம் என்று கேட்க...

நேத்ராவோ முடியவே முடியாது அது உள்ளே ஒரு கிராமம். தெரியாதவர்கள் பார்த்தால் வீண் பிரச்சனை...

அடி வெளுத்தாலும் ஆச்சரியப்பட இல்லை... நீங்கள் வரவேண்டாம் என எவ்வளவோ கண்டித்தாள்... வேண்டினாள் ... கெஞ்சினாள்...

ஆனால் மித்ரன் இம்முறை எதற்கும் மசிவதாய் இல்லை.

விடு அம்மு அப்படியே மாட்டினாலும் என்ன... உன் அண்ணனும் லவ் மேரேஜ் தானே... கல்யாணத்துக்கு தனித் தனியா போற நாம தம்பதியா வரலாம்...

எப்படியும் அடிச்சி விசாரிச்சிட்டு பஞ்சாயத்து வைச்சாலும் நமக்கு கல்யாணம் பன்னி வைக்க நாலு ஊர் பெரியத் தலைங்க பஞ்ச் டயலாக் பேசிட்டு இருக்கும் பாரேன்...

என்று கேளிக்கை பேச...

நேத்ராவிற்கு பயம் உதர வைத்தது. இவன் சொல்லும்படி ஏதாவது நேர்ந்தால் அப்பா அம்மாவின் மரியாதை என்னாவது...

விளையாட்டு போல பேசனாலும் ஒருவேளை அப்படி நடந்தால் அதன் பின்விளைவுகள் என்ன.. இவன் ஏன் இத்தனை விளையாட்டுத் தனமாக இருக்கிறான்... கடவுளே என்னைக் கொஞ்சம் காப்பாத்துப்பா... பிளீஸ் என புலம்பினாள்...

அவளுடைய புலம்பலைக் கேட்ட வானத்து தேவதைகள் ததாஸ்தூ... என்று ஆசிர்வதித்ததோ என்னவோ... அவளுக்கு மித்ரனிடமிருந்து மெசேஜ் வந்தது...

எத்தனை கெஞ்சியும் மித்ரன் ஒரு பிடி கூட தளரவில்லை... நான் பார்த்து விட்டு உடனே போய் விடுவேன் என வகை வகையாய் வசனம் பேசி...

கை வலிக்க விரல் தேய மெசேஜ் அனுப்பியே அவள் மனதைக் கரைத்து அனுமதி வாங்கி கிளம்பினான்...

அம்மாவிடம் ஆஃபிஸ் கிளம்புவது போல எல்லாம் பக்காவாக பிளான் செய்து கிளம்பியவனுக்கு கம்பெனியில் ஆடிட்டிங் என்ற அவசர கால் வந்து அவன் பட்ட அத்தனை வலிகளையும் தகர்த்து அவன் பிளானில் ஒரு லாரி மண்ணை சாய்த்துவிட்டு சென்றது....

உடனடியாக ஆஃபிஸ் வரவேண்டும் என அவனுடைய அண்ணன் அழைத்ததும் .... மறுப்பு சொல்ல முடியவில்லை...

நேத்ராவிற்கு பல முறை மன்னிப்பு கேட்டு மெசைஜ் செய்துவிட்டு வேகவேகமாக அலுவலகம் நோக்கி விரைந்தான்....

நேத்ராவிற்கு அப்பாடா.... என்று ஒரு அமைதி தான் பரவியது....அவன் வந்து ஏதாவது பிரச்சினை ஆகிடக் கூடாதே என்ற பயம் வேறு..

ஆனாலும் மித்ரனை பார்க்கப்போகிறோம் என்று ஆசையாக அவள் அணிந்த புடவையும் செய்து கொண்ட அலங்காரமும் இப்போது வேடிக்கையாகவும் சற்றே வருத்தமாகவும் இருந்தது...

அப்போ அவனை பார்க்க முடியாதா என்ற வெறுமை மனதை வருத்தி சலித்துக்கொள்ள வைத்தது...

ஆனால் இருவரும் எதிர்பாராத வண்ணம் அன்று அவர்களின் சந்திப்பு நடந்தே ஆக வேண்டும் என இறைவன் பிரியப்பட்ட உடன் யார்தான் தடுக்க முடியும்.

நேத்ராவிற்கு ததாஸ்தூ சொன்ன தேவதைகள் மித்ரனின் அலுவலகத்தையும் தாண்டி சென்றதோ என்வோ...

மனதில் குமைந்து கொண்டே நேத்ராவை காண செல்ல முடியாமல் செய்த அந்த ஆடிட்டரையும் அலுவலகத்தையும் மனதார நொந்து கொண்டு புலம்பினான்...

அவளே அத்தி பூத்தா மாறி ஒரே ஒரு முறை நேரில் பார்க்க ஆயிரம் பிளீஸ் போட்டு கெஞ்சி கூத்தாடி உருட்டி மிரட்டி இப்போது தான் அனுமதி அளித்தாள்... அதுவா இப்படி ஆகனும்....

கடவுளே....பிளீஸ் ஒரே ஒரு சான்ஸ் குடுக்கக் கூடாதா....ஒரு பத்து நிமிஷம் பார்த்துட்டு உடனே வந்துடுவேனே பிளீஸ் முருகா என்று வேண்டிக் கொண்டே வேலையை முடித்துக் கொண்டிருந்தான்...

நேத்ரா இரண்டு நாட்கள் முன்பே திருமணத்திற்கு சென்றதால் இன்று திருமணம் முடிந்த உடன்.... உடனே குடும்பத்தோடு வீடு திரும்ப முடிவு செய்து கிளம்பிவிட்டனர்...

நேத்ராவிற்கு இருந்த பெரிய எதிர்பார்ப்பு பளிக்காமல் போன சலிப்போடு செங்கல்பட்டில் இருந்து கிளம்பி சென்ட்ரல் வந்து கொண்டிருந்தனர்...

அங்கிருந்து இரயில் காலியாக இருந்ததால் மித்ரனுக்கு கிளம்பிவிடாடோம் சென்ட்ரல் வந்து கொண்டிருக்கிறோம் என தகவல் தெரிவித்துவிட்டு அமர்ந்தவள் சன்னல் அருகே வேடிக்கை பார்த்து கொண்டு வந்தாள்..

மித்ரனுக்கு வேலையில் இல்லாத சோர்வு மனதில் வந்தது... செல்லின் பீப் சத்தத்தில் அதை கையிலெடுத்து படித்த அவனுக்கு மூளைக்குள் மணியடித்தது..

வேக வேகமாக வேலையை முடித்தவன் விரைவாக அலுவலகத்தில் வாய்க்கு வந்த பொய்யை எடுத்து நம்பகத்தன்மையோடு கூறிவிட்டு அவசரமாக பர்மிஷன் போட்டுவிட்டு கிளம்பினான்...

சொல்லிவிட்டு அனுமதி கேட்டாள் இவள் மீண்டும் அடம்பிடிப்பாள் என்று சொல்லாமலேக் கிளம்பினான்...

வேக வேகமாக ஆட்டோ ... பஸ் என மாறி மாறி சென்ட்ரல் வந்து கால்மணி நேரம் காத்திருந்தவன்.. நேத்ராவிடம் எங்கிருக்கிறாய் என்றான் ..

அவள் நாங்கள் இன்னும் ஒரு அறை மணி நேரத்தில் சென்ட்ரல் வந்துவிடுவோம்... பின் அங்கிருந்து வீட்டிற்கு வண்டி ஏறவேண்டும் என்றாள்...

மித்ரனோ... சரி அம்மு நான் உனக்காக சென்ட்ரலில் காத்திப்பேன் வேறு ஒன்றும் பேசாதே பிளீஸ் என அனுப்பிவிட்டு செல்லை சைலன்ட் மோடில் போட்டுவிட்டு நேத்ராவிற்காக காத்திருந்தான்...

ஒருவிதமான சந்தோஷம்.. ஆர்பரிப்பு... ஒரு தவிப்பு என இருபது நிமிடங்கள் கடந்த நிலையில் அவன் மனமறிந்து இரயில் வேகமாக வந்தது... பார்க்கில் இறங்கி சென்ட்ரல் உள்ளே நுழையும் வரை நேத்ராவிற்கு பதட்டமாக இருந்தது...

யாரை பார்த்தாலும் மித்ரனாகவேத் தெரிந்தது... யார் அருகே நடந்தாலும் அவன் தானோ என்ற தவிப்பு வியர்வையாய் வழிந்தது.

அப்பாவின் விரல்களை இறுக பற்றிக் கொண்டு வேக வேகமாக கூட்டத்தில் முன்னேறினாள்...

தம்பி அன்புச் செழியனும் தாயும் உடன்வர அவளுக்கு நடுக்கம் எடுத்தது...

அவன் சொல்லாமல் கொள்ளாமல் கால் செய்துவிட்டாள் என்ன செய்வது..???. எங்கே இருக்கிறான்...???? எப்போது வருவான் ....????என்ற பயம் அவளுடைய உடலை சில்லிட்டு போக வைத்தது...

யாரோ சென்றாலும் அவளருகில் வருவதைப்போல இருந்தது... தம்பியிடமும் அப்பாவிடமும் மாட்டிவிடக் கூடாதே என்ற பயம் அவளுடைய கைகளை ஈரமாக பிசுபிசுக்க வைத்தது...

கையிலிருந்த பர்சை கெட்டியாக பிடித்துக்கொண்டு மெல்ல நிமிர்ந்து பொதுவாக பார்வையால் தேடினாள்...

மித்ரனோ...

அவள் சென்ட்ரலின் உள்ளே பாதுகாப்பு பகுதியை கடந்து தானே வர வேண்டும் என முன்பே கணித்து நிதானமாக காத்திருந்தான்...

அவள் அப்பாவின் கைகளை இருக்கமாக பற்றிக் கொண்டதையும் ... வியர்வையோடு பதட்டமாக நடுங்குவதையும்...

பயத்தில் செல்லை எடுத்து பார்த்து பார்த்து அமைதியாக பார்வையை சுழல விட்டதையும் அவளுக்கே தெரியாமல் ஒரு நான்கு இருக்கைகள் தள்ளி நின்று இரசித்துக் கொண்டிருந்தான்...

நேத்ராவின் தவிப்பை இரசித்த விழிகள் இப்போது தான் அவளை இரசிக்கத் துவங்கியது...

நேத்ராவோ.....

கண்களால் அவனைத் தேடிக் கொண்டே மனதில் புலம்பினாள்...

ஐயோ ... போடா லூசு... வர்ரதுக்கு உனக்கு வேற நேரமே கிடைக்கலையா...

காலைல நாலு மணிக்கு எழுந்து இந்த பட்டுப்புடவைய கட்டி.... உனக்காக அழகா மேக்கப் போட்டு காத்திட்டு இருந்தேன் ...

அப்போ வராம ஏமாத்திட்டு இப்போ கசங்கின பட்டுப் புடவையில கலைஞ்சி போன தலையோட இந்த வாடிப்போனப் பூ... எண்ணை வழியிர முகத்த பார்க்கவா இப்படி ஓடி வந்த போடா லூசு .... லூசு... எனப் புலம்பிய வண்ணம் பார்வையில்
தேடிக் கொண்டிருக்க....


திடீரென வலது புறம் பாராத்துவிட்டு விழியை திருப்பியவள் ஒரு கணம் புருவம் நெளிய மெல்ல மீண்டும் திரும்பி வளது புறம் கவனிக்க ....

அங்கே மித்து சாவகாசமாக கையில் ஒரு விகடனை சுருட்டி பிடித்துக்கொண்டு நேத்ராவை பார்த்த வண்ணம் அசராமல் ஒரு புன்னகை சிந்தி கண்ணடித்தான்....

அவனை சந்தேகமாக திரும்பிப் பார்த்தவள்... அப்படியே பார்வையை திருப்ப முடியாமல் உறைந்து நிற்க...

அவன் சிந்திய புன்னகையும் கண்ணடித்து புருவம் உயர்த்தி என்ன என கண்களால் ஜாடை பேசிய விதமும்...

அவளை அப்படியே வெட்கத்தில் சுழல விட்டது....

அதற்கு பின் அவள் அவனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை...

அவன் பார்வையும் கண்ணசைத்த நிகழ்வும் இதயத்திற்குள் புகுந்து இரத்த ஓட்டத்தை அதிகரித்தது...

வேக வேகமாக வியர்த்து கொட்டியது... வெட்கம் அவளைக் கண்டு வாய் பொத்தி சிரித்தது..... கால்கள் தரையில் இருந்து நழுவிய உணர்வு.... கூச்சமா...பயமா... பதட்டமா என பிரித்தறிய முடியாத சந்தோஷ உணர்வு...

உள்ளுக்குள் சில்லென குளிரெடுத்து அடங்காமல் ஆனந்தக் கூத்தாடியது அவளுடையக் காதல்...

மித்ரனோ அவள் தன்னைக்கண்டு வெட்கம் கொண்டு தலை குனிந்ததை இமாலைய சாதனையாக இரசித்தான்...
என்னைக் காண்டு இவள் நாணினாள் ....என்ற ஆனந்தம் அவனை சிலிர்க்கச் செய்தது .. அவள் திரும்பி மீண்டும் பார்க்க மாட்டாளா ...??? ஏக்கமாக அவளை பார்த்திருந்தான்...

அந்த கசங்கிய பட்டு சீலையும்... நகையும் ..வதங்கிய.பூவும்... கலைந்த தலையும்... எண்ணை வடியும் முகமும் கூட அவனுக்கு ஆயில் மேக்கப் போல அத்தனை இரம்யமாகவேத் தோன்றியது...

அவள் அத்தனை குண்டெல்லாம் இல்லை... சற்று பூசின உடல்வாகு... அந்த உருண்டை முகமும் உப்பிய கண்ணமும் அதில் வழிந்த வெட்கமும் அவனுக்கு பருகப் பருக.. இல்லை.. இல்லை... பார்க்க பார்க்க... தீராத் துஞ்சுவையாகவேத் தோன்றியது..

அவளைக் கடந்து சென்றான்... இங்கும் அங்கும் நடந்தான்... எதிர் பக்கம் போய் நின்றான்...

ஆனால் அவள் குனிந்த தலையை நிமிரவே இல்லை. இருவரின் அந்த அழகான பதினைந்து நிமிட சந்திப்பிற்கும் டாட்டா சொல்ல வேண்டிய தருணம்...வந்தது...

அவள் செல்ல வேண்டிய இரயில் வந்து ஹாரன் அடித்து அவர்களுடைய ஒன்றரை வருட காதலின் தவத்திற்கான இந்த பதினைந்து நிமிட வரத்தை... போதும் ... போதுமென முடித்து வைத்தது...

நேத்ரா ஹாரன் சத்தத்தில் முழித்துக்கொண்டு நிமிர்ந்தவள் மித்ரனைத் தேட மித்ரனோ அவளை ஏக்கமாக எதிர்புற இரயில் பிளாட்ஃபார்ம் இல் இருந்து பார்த்து கையசைக்க அவள் தந்தையின் கையைப் படித்துக்கொண்டு தாயோடு இரயில் ஏறினாள்...

வேக வேகமாக சன்னல் புறம் சென்று அமர்ந்தவள் மித்ரனை பார்த்துக் கொண்டிருக்க அவன் கையசைத்துக் கொண்டே நிற்க.

தன்னால் அவனை வழியனுப்ப கூட முடியவில்லையே என நேத்ரா தவித்திருக்க.. தலையை மெல்ல அசைத்தாள்....

போதும் போங்க நீங்களே லவ் பன்னிட்டு இருந்தா வில்லன்கள் எல்லாம் எப்போது தான் எண்ட்ரி ஆகுரது.. போதும் போதும் போய் வேலையப் பாருங்க என .....

நான் இல்லை...

இரயில் இருவரையும் வில்லனாகந் பிரித்துவிட்டு திமிறாக ஹாரன் அடித்து கிளம்பியது.

இருவரின் மனமும் சந்தோஷமாக தவித்துக் கொண்டே இருக்க... இருவரின் செல்லும் அடுத்தடுத்த பீப் சத்ததங்களோடு செல்லமாக சினுங்கியது....

அதைப் பார்த்த இருவருக்கும் ஒன்றே போல... புன்னகையும்...... கண்ணீரும்.... அரும்பியது
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி வினோத்குமார் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top