தீராத் தீஞ்சுவையே...17

Advertisement

Yazh Mozhi

Active Member
தீராத் தீ____17

நேத்ராவும் மித்ரனும் எதிர்பார்த்த அந்த பொன்னான நாள் விரைவில் வருகிறேன்.... வருகிறேன்.... வருகிறேன் என்று வந்துவிட்டது...

இருவரும் அவரவர் புகைப்படத்தை மெயில் செய்துவிட்டு காத்திருந்தனர்....

இதோ மெயில் வந்தது... மித்ரனுக்கு மகிழ்ச்சியோடும்.... நேத்ராவிற்கு கலக்கத்தோடும்....

முதலில் மித்ரனின் ஆனந்தத்தைக் கொண்டாடிவிட்டு வருவோம் வாருங்கள்...

மெயிலை திறந்து நேத்ராவின் புகைப்படத்தை பார்த்த மித்ரன் உண்மையில் ஒரு பெரிய சாதனை அடைந்த உணர்வோடு பார்த்தான்....

அழகாக ஒரு சாதாரண இளம்பச்சை நிற சேலை அதற்கு தகுந்த ஒரு மெருன் நிற பூக்களோடு அவளை சுற்றி அழகாக எளிமையாக இருந்தது… அவள் தோற்றம்..

காதில் சின்ன ஜிமிக்கி... கழுத்தில் ஒரு நீண்ட தங்கத் சங்கிலி... மூக்குத்தி அணியவில்லை...

மித்ரன் மூக்குத்தியை எதிர்பார்த்து அது இல்லாத ஏமாற்றம் ஒரு துளி இருந்தது...

பரவாயில்ல விடு..மித்ரா.. கல்யாணம் முடிஞ்சி குத்திக்கட்டும் என புன்னகைத்தான்....

வட்டமான முகம்.. கறுப்புமல்ல வெளுப்புமல்ல அந்த கோதுமை நிறத்தில் அவள் இடது கன்னத்திலும் வலது புருவத்தின் கடைக் கோடியிலும் இரண்டு மச்சங்கள் அழகாக அமைந்திருந்தது...

மையிடாத விழிகளில் சாந்தமும் ..... அலங்காரம் இல்லாத முகத்தில் ஒரு கலையும் இழையோடியது...

அவளை மித்ரனுக்கு இன்னும் இன்னும் பிடித்துவிட்டது... அதை தன் மொபைலில் பதிவிரக்கம் செய்து கொண்டான்... மீண்டும் மீண்டும் பார்த்தான்...

உப்பிய கன்னங்களே அவள் கொஞ்சம் அமுல் பேபி ரகம் எனத் தெரிந்தது...

அந்த கன்னங்களை கிள்ளிடவும் ஆசையாக முத்தமிடவும் கூடத் தோன்றியது...

ஆனால் தன் நிலையை எண்ணி தானே சிரித்துக் கொண்டான்...

என்ன மித்ரா நீ.... எத்தனை சூப்பர் ஃபிகரெல்லாம் உன்ன சுத்தி வந்தாங்க . நீ என்னடான்னா இந்த அமுல் பேபி கிட்ட கவுந்திட்டியேடா....
கலர் தான் கொஞ்சம் கம்மி பரவாயில்லை கல்யணத்துக்கு அப்புறம் பட்டி டிங்கரிங் பாத்துக்கலாம்….

தானாய் சிரித்துக் கொண்டான்... அவளுடைய புகைப்படத்தை தோன்றும் போதெல்லாம் பார்த்துக்கொண்டே இருந்தான் அந்தக் கன்னங்களை தன் இரு கைகளாலும் பிடித்து .... அவள் கண்களை நேராக பார்த்து ஒரு முறை காதல் சொல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டான்....

அவளுக்கு மெசேஜ் செய்துவிட்டு காத்திருந்தான்....

அங்கே நேத்ராவோ....

மெயிலை ஓபன் செய்து கண்களை மூடிக்கொண்டு கும்பிடாத கடவுளையெல்லாம் இன்று துணைக்கு அழைத்து வேண்டிக் கொண்டே ஒரு கண்ணை பாதி திறந்தாள்...பின் முழுதாக திறந்தாள்... அதிர்ச்சியில் இரண்டு கண்களையும் திறந்தவள் அசந்து போய் அமர்ந்துவிட்டாள்...

மித்ரன் ஏதோ தன்னைப்போல மாநிறமோ அல்லது கறுப்பாக உயரமாக பெரிய மீசையோடோ இருப்பான் என எதிர் பார்த்திருக்க....

(ஒரு விஷால்... விஜய்.... ரேன்ஞ் போதுமா. அதுவே எனக்கு அதிகம்...

அவனோ ட்ரிம் செய்த மீசையில்... மொழு மொழு கன்னத்தில் குட்டி குட்டியாக முளைத்த நாலுநாள் தாடியோடு மஞ்சளும் இளஞ்சிவப்பும் கலந்து மின்னினான் ..
கிட்ட தட்ட இந்தி சீரியல் கதாபாத்திரம் போல மொழு மொழு தோற்றம்… ஐயோ...
அத்தனை அழகு... அடர்ந்த புருவம் கண்ணுக்கு கீழே கன்னத்தின் மேலே ஒரு குட்டி மச்சம்...

சின்னச் சின்ன பின்க் நிற உதடுகள் லேசாக விரிய ஆளை அசத்தும் புன்னகை...

நெற்றியில் சந்தனம்.... கழுத்தில் ருத்ராட்சம்..மெல்லிய தங்கச் சங்கிலி

சந்தன நிற சட்டை அவனை இன்னமும் பளிச்சென காட்டியது... ஒரு வெளிர் நீல நிற ஜீன்ஸ் உடன் நின்றவனைக் கண்டவள்...

நமெக்கெல்லாம் இது சரிபட்டு வராது... திலகா சொன்னதைப்போல இது சாத்தியமான விஷயம் இல்லை என்றே தோன்றியது....

அவனுடைய அழகுக்கு முன்னால் தன்னை ஒப்பிட அவளுக்கு நிச்சயமாக மனம் இலயிக்கவில்லை... இரசிக்கவுமில்லை. .

பிளாக் அண்ட் ஒயிட் படம் போல சுரத்தே இல்லாமல் இருந்தது அந்த கற்பனை.. .

இந்த காதல் நமக்கு நிலைக்காது இந்த அன்பை இழக்க வேண்டிய சூழல் வரும் என்று முன்பே அவளுக்குள் கேட்கும் இந்த அசரீரியை அறிந்திருந்தால் ......அதை உணர்ந்து நடந்திருந்தால்..... ஒருவேளை வரப்போகும் அசம்பாவிதங்களை தவிர்த்திருக்கலாமோ என்னவோ....

அவள் மெயிலை பார்த்து வாயடைத்து போய் அமர்ந்திருந்தாள்..

இனி அவனுக்கு தன்னைப் பிடிக்காது இந்த காதல் கத்தரிக்காய் எல்லாம் சும்மா என்று ஓடப்போகிறான்... இல்லை இல்லை... இனி அவன் எங்கே பேசப் போகிறான்...

அவன் இனி மெசேஜ் அனுப்பப் போவது இல்லை....

அவன் இனி என்னிடம் பேசப்போவதில்லை...

அவனைப்போல இனி யார் என்னை வார்த்தைக்கு வார்த்தை அம்மு என அழைப்பார்கள்....

அவ்வளவுதான் என் குருட்டு அதிஷ்ர்டம் முடிந்தது... இனி எல்லாம் முடிந்தது என்று உள்ளுக்குள் அனற்றினாள்....

மொபைலை பார்க்கவே பயமாக இருந்தது அதை அனைத்து வைத்தாள்..

அவன் பேசாமலேக் கூடப் போகட்டும் ஆனால் அவன் பிடிக்கவில்லை என்றோ இனி இந்த காதல் வேண்டாம் என்றோ கூறிவிட்டால் .....அதை தாங்கும் வலிமை அவளுடைய இதயத்திற்கு இல்லை... இல்லவே இல்லை...

உணவு இறங்கவில்லை தலைவலி என்று அறைக்குள் அடைந்தவள் தன்னையும் மீறி அவன் அனுப்பிய குறுஞ்செய்திகளையும் அன்று சொன்ற ஐ லவ் யூ க்களையும் மனதிற்குள் சுழலவிட்டு வாடிப்போனாள்..

அவளையும் அறியாமல் கண்ணீர் அவள் கன்னங்களை வருடி ஆறுதல் சொல்லிவிட்டு சென்றது... அழுதழுது அப்படியே தூங்கிவிட்டாள்...

இரவு அவளுடைய தம்பியும் ... அப்பாவும் செல்லை ஏன் ஆஃப் செய்துள்ளாய் என்று கேட்கும்வரை அவளுக்கு ஒன்றும் புரியவில்லை ...

பின்பு எல்லாம் நினைவில் வந்து மீண்டும் தொண்டையை அடைக்க அங்கிருந்து தப்பிக்க நினைத்தவள் சார்ஜ் போடவில்லை என்று ஒரு பொய்யைய் தூக்கி போட்டுவிட்டு மீண்டும் அறைக்கு சென்றாள்...

. அங்கே விரல் நடுங்க மொபைலை ஆன் செய்தவளுக்கு அவள் எண்ணியதைப் போலவே ஓயாது செய்திகள் வந்து குமிந்தன... தொடர்ந்து வந்த பீப் சத்தத்தில் அவளுடைய சப்த நாடியும் ஒதுங்கி பொத்தென மெத்தையில் வீழ்ந்தாள்......

விரல்கள் வர மறுத்தது... விழிகள் வேண்டாமெனக் கெஞ்சியது... மனது மட்டும் அழுதழுது நான் திடமாகவே உள்ளேன் திற என்றது...

எதையும் தாங்கிப் பழகிடல் வேண்டும் என்ற உறுத்தளோடு கண்களை இறுக மூடி ஆழ மூச்செடுத்து திறந்து மொபைல் திறையைப் பார்த்தவளுக்கு புருவம் கசங்கியது விழிகள் தளர்ந்து ஊற்றாக கண்ணீர் கிளம்பியது...

இதை அவளே சற்றும் எதிர்பார்க்கவில்லையே....

ஏனென்றால் வந்த பதில் அப்படி....

((சஸ்பென்ஸ் னு சொன்னா அடிப்பீங்க வாங்க போய் நேத்ராவோட மொபைல பார்த்தே தெரிஞ்சிக்கலாம்...

மித்ரன் நேத்ராவின் செய்திகளுக்காக காத்திருந்து காத்திருந்து நொந்து போனான்...

என்ன ஆச்சு இவளுக்கு ஏன் இன்னும் மேசேஜ் பன்னாம இருக்கா...

நம்ம ஃபோட்டோவ பாத்தாலா இல்லையா....

இல்ல உடம்பு ஏதாவது சரியில்லையோ... சரி இன்னும் கொஞ்ச நேரம் ....இன்னும் கொஞ்ச நேரம் என காத்திருந்தான்...

இரவுவரை எந்த செய்தியும் வராததால் அவன் பொருமை விடுமுறைக்கு சென்றது....

அவனே மெசேஜ் செய்தான் .. கால் செய்தால் ஸ்விட்சா ஆஃப்....

சரி எதுவானாலும் அவள் பதில சொல்வாள் என்று காத்திருந்தவன் ஒரு கட்டத்திற்கு மேல் தூங்கியேப் போனான்...

இங்கே நேத்ராவின் செல் ஆனான உடன் கோவமாக நேத்ரவை பீப் சத்தங்களால் ம்ம்ம் கொட்டி திட்டிக் கொண்டிருந்து.... செல்லமாக....

மெல்ல அதை கையில் எடுத்து பட்டனை அழுத்தினாள்...

அவள் பார்த்த படித்த ஒவ்வொரு எழுத்தும் அவள் மீது கூடைக் கூடையாய் காதலை கொட்டிக் கவிழ்க்க...

நேத்ரா கண்கலங்க புன்னகைத்தாள்... செல்லை அவளோடு அனைத்துக் கொண்டு திரும்ப திரும்ப சிரித்தாள்...

அவள் படித்ததாவது.....

அம்மு கொஞ்சம் கோவப்படாத... இன்னைக்கு மட்டும் .

நான் கொஞ்சம் லவ் பன்னிட்டு சமத்தா போயிடுவேனாம் பிளீஸ்...

கோவத்துல மெசேஜ் ஆ படிக்காம போய்டாத டி தங்கம் பிளீஸ்...

அம்மு.. ரியலி.. யூ ஆர் சோ கியூட் செல்லம்...

உன் கண்ணுல எவ்ளோ இன்னொசென்ட் தெரியுமா...

ஃபர்ஸ்ட் டைம் உன்ன பார்க்கும் போதே அழகா இப்படி புடவையோட நின்னு என்ன அசரடிக்கலாமா டார்லிங்...

நா அப்படியே பறக்குறா மாதிரி ஃபீல் பன்றேன் டி அம்மு...

உனக்கு தெரியுமா.. என் பாட்டி உன்ன பார்த்து பொம்மை மாதிரி இருக்கனு சொன்னாங்க டி....

இப்போ என் மொபைல் வால் பிக்சர் ஏ நீ தான் தெரியுமா...

எத்தனை டைம் பார்த்தாலும் திரும்ப திரும்ப பார்த்துட்டே இருக்கனும் போல இருக்கு அம்மு அதான்...

நீ மெயில் ஓபன் பன்னி பார்த்தாச்சா அம்மு...

நா நல்லா இருக்கேனா... உன்ன இம்ப்ரஸ் பன்ற அளவுக்கு இருக்கேனா....

பிளீஸ் மா அப்படி இப்படி இருந்தாலும் போனா போகுதுனு பாஸ் மார்க போட்டு ஏத்துக்கோமா....

உனக்கு அனுப்பின மெசேஜ்கு ரிப்லை வரல அதா பதட்டத்துல கால் பன்னேன்...

நீயும் சீக்கிரமா ரிப்ளை பன்னு அம்மு பிளீஸ் ... குட் நைட்....

தேத்ராவிற்கு சிரிப்போடு இதுவரை வந்த கண்ணீரெல்லாம் இப்போது அமைதியாக இதயத்தை வருடியது...

அவன் இப்போது பேசியது உண்மையா பொய்யா என்றெல்லாம் யோசிக்கத் தோன்றவில்லை.... ஆனால் பிடித்திருந்தது..

ஏன் காதலிப்பவர்கள் எல்லாம் கவிஞனாகவும் பித்தனாகவும் பிதற்றுகிறார்கள் என்று இப்போது அவளுக்கு புரிந்தது...

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நான்தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்.... என்பது இது தான் போல...

எத்தனை உருகியிருந்தால் இத்தனை ஆதங்கமாக பாடத்தோன்றும் என தன் நிலையை ஒப்பிட்டு சிரித்துக் கொண்டாள்..

அவனுக்கு என்ன பதில் அனுப்புவது என்று தெரியவில்லை ஆனால் இந்த கணத்தின் சந்தோஷத்தை முழுமையாக அனுபவைக்க ஆசைப்பட்டாள்...

இப்போது உரிமையாகவும் காதலோடும் அவனுடைய புகைப்படத்தை பார்த்துக் கொண்டே கண்ணயர்ந்தாள்....

இப்படியே வெற்றிகரமாக நாட்கள் நகர்ந்தது...

தினமும் பள்ளிக்கு செல்ல வேக வேகமாக செல்பவள் இரயில் ஏறும் நிமிடம் வரை கிடைக்கும் பத்து நிமிடங்களில் அவனிடம் சார்ட் செய்தாள்...

ஒரு கட்டத்திற்கு மேல் மித்ரனிடம் அவளால் அடம்பிடிக்க முடியவில்லை...

கழுதை தேஞ்சு கட்டெறும்பான கதையா....

மாதத்தில் ஒரு முறை கால் செய்து பேசலாம் என்றவன் கூடிய விரைவில் அதை வாரத்திற்கு மாற்றினான்... வாரங்கள் ...

இருமுறை ... மூன்று முறை என்ற தொலைப் பேசி அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து......

தினமும் இரண்டு முறை என்று வந்துவிட்டது இந்த ஒன்றரை வருடத்தில்....

((என்னங்க பட்டுனு சினிமா மாதிரி ஒரே சீன்ல ஒன்றரை வருஷம் னு கேக்காதீங்க மக்ஙளே... பிளாஷ்பேக் ரொம்ப லென்த் ஆ போகுது.... அதான் ..


பேசிப் பேசி காதல் பயிர் வளர்த்த நம்ம ஹூரோ அடுத்த கட்டத்திற்கு நுழைய எத்தனையோ முயற்சி செய்தும் ஒன்றும் நடக்கவில்லை....

என்ன முயற்சினு கேக்குறீங்களா....

ஃபோட்டோ பாத்தாச்சு... நேர்ல பாக்க வேண்டாமா...

இவர்கள் காதல் கனிந்து இந்த ஒன்றரை வருடத்தில் ஒரு முறைக்கூட இன்னும் நேத்ரா அவளுடையக் காதலை சொல்லவில்லை....

அவளாவது ஒரு வருடத்தில் சொல்லியிருப்பாள்... நம்ம ஹீரோ மிஸ்டர் கர்ணன் கொடுத்த இரண்டு வருட அவகாசம் அவருக்கே பெரும் மோசமாகபா போனது... தான் மிச்சம்...

நேரில் சந்திக்க மித்ரன் ஏதாவது காரணம் கிடைக்காதா அவளை பார்க்க மாட்டோமா என மிகவும் பிரியப்பட்டான்...

அதற்கு ஒரு வாய்ப்பு நேத்ராவின் ஒன்றுவிட்ட அண்ணனின் கல்யாணத்தின் பேரில் மித்ரனுக்கே பம்பர் குலுக்கல் இன்றி லாட்டரி அடித்தது... நேத்ராவை பார்க்க....

இதைத்தான் எங்க ஊரு பக்கம் சொல்லுவாங்க....

ஊர்ல கல்யாணமாம் ஐயாவுக்கு மார்ல சந்தனமாம்.... னு

அட எப்போ... எப்படிப்பா இந்த நேத்ராவும் மித்ரனும் மீட் பன்னாங்கனு.... கேட்கும் உங்களுடைய மைண்ண்ட் வாய்ஸ் எனக்கு கேட்டுவிட்டது....

அத நாளைக்கு நாமலும் சேர்ந்து கல்யாணத்துக்கு போய்ட்டே பார்க்கலாம்...
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி வினோத்குமார் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top