தீராத் தீஞ்சுவையே...16

Advertisement

Yazh Mozhi

Active Member
தீராத் தீ____16
நேத்ராவின் விருப்பத்தை அவள் வாயினால் தெரிந்து கொண்ட.... ஆனந்தம் மித்ரனை....புதிய உணர்விற்குள் இழுத்துச் சென்று பறக்க வைத்தது...

ஆனாலும் அவள் ஒரு வார்த்தை கூட கால் செய்து பேச அனுமதிக்கவில்லை...

சில மாதங்கள் கடந்த நிலையில் திலகா மீண்டும் அவள் சேகரித்த தகவல்களை நேத்ராவிடம் கலந்தாலோசிக்க நேரில் வந்தாள்...

பள்ளியில் பர்மிஷன் கேட்டு வழக்கமாக சந்திக்கும் ஒரு பூங்கிவிற்கு சென்று பேசத்துவங்கினர்...

திலகா கூறிய அனைத்தும் நேத்ராவிற்குள்ளும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது...

எப்படியாவது இதை முடிந்த மட்டிலும் சரிசெய்து அனைவரின் ஆசிகளோடும் தான் , தன் திருமணம் நிகழ வேண்டும் என்பதில் நேத்ரா உறுதியாக இருந்தாள்..

ஒருநாள் மித்ரனின் படிப்பு வேலை தனிப்பட்ட விவரங்களை விசாரிப்பதுபோல இயல்பாக பேசியவள் மெல்ல அவளுடைய கோரிக்கையை முன் வைத்தாள்...

மித்ரனுக்கு கடுப்பாக வந்தது...
இன்னும் ஐ லவ் யூ னு ஒரு வார்த்த சொல்ல ல அதுக்குள்ள அதிகாரம் பன்ன ஆரம்பிச்சிட்டாளேனு.....

உள்ளே சிறு கோவம் தலை தூக்கினாலும் அவள் கேட்ட நோக்கம் சரியாகவேப் பட்டது...

மித்ரன் டிப்ளமோ மட்டுமே முடித்துவிட்டு அது சார்ந்த ஒரு அலுவலகத்தில் சொற்ப சம்பளத்திற்கு பணிக்கு சென்றான்....

இப்போது நேத்ரா அவனை பி.இ முடிக்க வேண்டும் என வற்புருத்தினால்...

(( வந்தா படிக்க மாட்டோமா... படுத்துராளே என நொந்து கொண்டாலும் அவளுடைய ஆசையை நிராகரிக்க முடியவில்லை...

நேத்ராவின் வார்த்தைகளை மீறவும் மனம் வரவில்லை... அவளுக்கென்ன பெரிதாக கேட்டுவிட்டாள்... படிக்கப் போற நமக்கு தானேத் தெரியும்....

இருந்தாலும்...

காசாப் பணமா செஞ்சிதா பாப்போமேனு முடிவு செய்திருந்தான்...

வேலை முடிந்து வீட்டிற்கு சென்றவன் பீரோவை தலைகீழாக்கி எடுத்த டிப்ளமோ சர்டிஃபிகேட்களை வேண்டா வெறுப்பாக பார்த்துவிட்டு கூட சில தனிப்பட்ட அடையாள அட்டைகள் ... ஆவணங்களோடு. நேராக அண்ணா யுனிவர்சிட்டிக்கு சென்று தொலைதூரக் கல்வி பிரிவில்.. பி.இ... அப்ளை செய்தான்..

அதற்கான அடையாளங்களை புகைப்படமாக நேத்ராவின் முகநூல் பக்கத்தில் அனுப்பிவிட்டு வந்தான்..

நேத்ராற்கு உண்மையிலேயே உற்சாகம் தாள முடியவில்லை...திலகாவிடம் கூறி ஆனந்தக் கூத்திடினாள்... அவன் நல்லவன் தான் என தன் தோழிக்கு உணர்த்திட வேண்டி இருந்தது அவளுக்கு.

அடுத்த கட்டமாக மித்ரனிடம் உள்ள குறைபாடு.... எப்போதாவது வீட்டிற்கு தெரியாது தண்ணியடிப்பது...

அதை எப்படி நிறுத்துவது என யோசித்தவள் அவனிடமே ஒருநாள் இயல்பாக பேசுகையில் தானாகவே ஒரு வாய்ப்பு அமைந்தது...

தவளை நன் வாயால் கெடுவது போல உனக்கு என்ன வேண்டும் என வலிய வந்து கேட்டவனிடம் ஒரு சத்தியம் ஸ்டாக்காக வேண்டுமெனக் கேட்டாள் நேத்ரா...

காதல் கண்கட்டிய கொண்டாட்டத்தில் மித்ரனும் வாலன்டியராக காரணம் கூட கேட்காமல் சத்தியம் செய்தான் ..

அடுத்தனொடி அவனுடைய பேட்சுலர் சந்தோஷம் அந்த சத்தியத்தோடு பறிபோனது...

இனி குடிப்பது கூடாதென வாங்கிய சத்தியத்தோடு மித்ரனின் மிச்ச மீதி கொண்டாட்டமும் பறி போனது...

வேலைக்கும் சென்று விடுமுறையில் கல்லூரிக்கும் சென்றுவருவது மித்ரனுக்கு நாக்கு தள்ளியது...

இருந்தாலும் அவனுடைய காதலுக்காக அனைத்தையும் அப்படியே ஏற்றுக் கொண்டான்...

ஆனால் நேத்ராவும் ஒரு ஐ லவ் யூ சொல்லாமல் மித்ரனுக்கு போக்கு காட்டினாள்...

நவம்பர் மாதம் 16 தேதி மித்ரனின் பிறந்த நாள்... ஆவளாக நேத்ராவின் வாழ்த்தைக் கான செல்லும் கையுமாக சுற்றி வந்தான்...

அம்மாவின் கேசரியும் அக்கவின் பாதுஷாவும் கூட இறங்கிட மறுத்தது ...

தட்டில் கோலம் போட்ட வண்ணம் காத்திருந்தான்...
அந்த மொபைல் பீப் சத்தத்திற்காக...
அங்கே நேத்ராவோ....

ஒரு வழியாக பள்ளிக்கு வந்த நேத்ரா முந்தைய இரவெல்லாம் ஆயிரம் முறை சொல்லி சொல்லி பயிற்சி எடுத்த அந்த வார்த்தைகளை மனதில் ஜெபித்துக் கொண்டே புதிதாக பேசும் குழந்தையைப்போல குதூகலமாகவும்.... ஆர்வமாகவும் பள்ளிக்கு வந்தாள்...

காலை எல்லோருக்கும் முன்பாகவே வந்து விட்டிருந்தாள்... ஆனால் வெறும் வாழ்த்தாக டைப் செய்து அனுப்பிட அவளுக்கு மனம் வரவில்லை...

எப்படியாவது மித்ரனிடம் கால் செய்து வாழ்த்து கூற வேண்டுமென விரைவாக வந்தாலும் பதட்டமும் பயமும் முகம் நிறைய வியர்த்து வழிந்து பதட்டமாக செல்பேசியை பிடித்திருந்தாள்.....

எண்களை அழுத்தியவளுக்கு கால் செய்ய முடியவில்லை...பலமுறை முயன்றும் தோற்றவள் மனதை தைரியப்படுத்திக் கொண்டு மித்ரனின் சந்தோஷத்தை மனதில் நிருத்தி கால் செய்துவிட்டாள்....

இவளுடைய மெசேஜ்களுக்காக காத்திருந்த மித்ரன் நிமிடத்திற்கு பத்துமுறை ஃபோன் திரையை பார்த்தான்..

அடிக்கடி ரிங் சத்தம் சரியாக உள்ளதா என்று கூட ஆராய்ந்தான்....

அவன் கண்கள் உணவை நாடவில்லை...

திடீரென நேத்ராவின் எண்ணிலிருந்து கால் வரவும் எதிர்பாராத அந்த சந்தோஷத்தில் பதரி செல்லை தவறவிட்டுப் பிடித்தான்...

வேக வேகமாய் உணவை வாயிலில் திணித்துக்கொண்டே மொட்டை மாடிக்கு ஓடினான்...

தாய் அறியாத சூலேது... மகன் இத்தனை பதட்டமாக ஓடுவதையும் அவன் முகத்தில் பிரகாசிக்கும் ஆயிரம் வாட்ஸ் பல்பிலும்...

பசியையும் ருசியையும் மறந்து வேண்டா வெறுப்பென உண்டவன் செல்லோடு மாடிக்கு ஓடியதே புரிந்தது அவன் வசமாக எங்கோ மாட்டிக்கொண்டான் என்று..
எதையும் கவனிக்காதவர் போல அனைத்தையும் நோட்டம் விட்டார் வசந்தி....

மேலே ஓடியவன் செல்லை ஆன் செய்து ஹலோ.... சொல்லி காத்திருந்தான்...

முதல் முறையாக நேத்ராவின் குரலைக் கேட்க காத்திருந்தான் ...
இதைவிட அவனுக்கு விலைமதிப்பற்ற உயர்ந்த பரிசு வேறு என்ன கருக்க முடியும்...

அவனோ ஹலோ ... ஹலோ... எனக் கூறி காத்திருக்க...வாழ்த்து சொல்ல வந்தவள் அவனுடைய குரலின் ஆளுமையில் ஸ்தம்பித்து நின்றுவிட்டாள்...

பின் நினைவு வந்தவளாக மெல்ல நிதானமாக இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... என்று கூறினாள்...

அவளுக்கு வேறு ஒன்றும் பேச முடியவில்லை... பேசவும் தெரியவில்லை

சொல்ல முடியாத ஒரு சந்தோஷ உயிரோடு போராடிக் கொண்டிருந்தாள்....

மித்ரன் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தான்... இந்த பிறந்த நாள் அவனுடைய வாழ்வில் மறக்க முடியாத பிறந்த நாளாகவேத் தோன்றியது...

ஆனால் வாழ்த்து கூறிய அடுத்த நிமிடமே அவ்ளோ தானா..... என்று புன்னகையோடு தயங்கினான்...

நம்ம டியூப்லைட் நேத்ராவிற்கு ஒன்றும் புரியவில்லை.... ... அவ்ளோ தான் ....வேற என்ன ....என்றாள் மிகுந்த தயக்கத்திற்கு பின்... ஆனாலும் அவனுடைய புன்னகை அவளை திணறடித்து ஒரு மோன நிலையில் மிதக்க விட்டது.

ஒருவரின் குரளை ஒருவர் மீள முடியாது.... மீள .....மீள...... இரசித்திருக்க..

நேத்ரா சரி நான் வைக்கிறேன்.. டைம் ஆச்சு என்க..

சுயநினைவுக்கு திரும்பியவன் அவள் குரலைக் கேட்க முடியாதோ என்ற தவிப்பில் வேக வேக மாக அம்மு ஒரு நிமிஷம் என்றான்...

அவள் அமைதியாக ம்ம்ம் கொட்டினாள்...

வரிசையாக மித்ரன் ஐ லவ் யூக்களின் அம்புகளால் தாக்கியதில் அவை நேத்ராவின் காதில் புகுந்து இதயம் நுழைந்து காதலால் அர்சனை செய்து அவளை இறகுகள் இன்றி பறக்க வைத்து வெட்கத்தால் வியர்த்து சிலையாக நிற்க வைத்தது...

பயம்...... பதட்டம்..... வெட்கம்..... என மாறி மாறி போராட முடியாதவள் சொல்லாமல் கொள்ளாமல் காலை கட் செய்துவிட்டு முகத்தை மூடிக்கொண்டு சிரித்தாள்...

அவளுடைய உதடுகள் வெட்கத்தில் அவளுடைய பற்களோடு சிக்கிப் போராடியது சந்தோஷம் மழை நேரத்தில் சுழற்றி அடிக்கும் ஈரக் காற்றாக அவளை சுழற்சி அடித்தது...

அன்று முழுக்க அவள் புன்னகையோடும் புத்துணர்ச்சியோடும் சுற்றினாலென்றாள்.. ....

அங்கே மித்ரனோ....

மித்ரன் அறைப் பைத்தியமாகத் திரிந்தான்.. சிரித்துக்கொண்டே இருந்தான்...

வாழ்த்திய அலுவலக நட்புகளுக்கு மிகையற்ற புன்னகையோடு தலையாட்டினான்...

தப்பு தப்பாக வேலையில் சொதப்பினான்....

திட்ட முடியாத அவனுடைய அண்ணனும் தலையில் அடித்துக்கொண்டு தானே திருத்தினார்....

மதிய உணவிற்கு தந்த வடை... பாயசம் ....சாம்பாரோடு சாப்பிட அவர்ந்தவன் ...சாதத்தில் பாயாசத்தை கொட்டிக் கிளரினான்...

அக்கா ஆசையாக செய்த பாதுஷா சாம்பாரில் குளித்தது.... கேசரியில் ரசத்தை வார்க்கும் முன்பு அவனுடைய நண்பன் சரவணன் அதைப் பிடுங்கி வைத்தான்...

அவன் அடித்த கூத்தைக் கண்டு அலுவலகமே சிரித்தது.. அவனோ தலையைத் தட்டிக் கொண்டு வழிந்த வண்ணம் நகர்ந்து போனான்...

அந்த நிகழ்விற்கு பின் அவனால் அவளுடைய குரலைக் கேட்காமல் இருக்க முடியவில்லை..

இனால் பல முறைக் கெஞ்சிக் கேட்டும் கூட நேத்ரா ஃபோனில் பேசவே மாட்டேன் என மறுத்துவிட்டாள்...

இல்லை... இல்லை... அடம்பிடித்தாள்....

ஆனால் மிதாரன் ஒரு யோசனை செய்தான்... குரலைக் கேட்க முடியாவிட்டாலும் அவளை பார்க்கவேண்டும் என ஆசை பட்டான்...

ஃபோனில் பேசவே அனுமதிங்காதவள் நேரில் பார்க்கவா அனுமதிப்பாள் என்று சலித்துக் கொண்டான்

ஆனாலும் மனம் அடங்க மறுத்தது... ஒரு முறை முயன்றால் தான் என்ன... வந்தால் மலை... போனால் போகட்டுமென ஒரு முடிவோடு அன்று மெசேஜ் அனுப்பினான்....

அவளுடைய குரலைக் கேட்டவனுக்கு அவளை பார்க்கும் ஆவல் அதிகரித்துவிட்டது...

அவளிடம் கேட்க தயக்கமாக இருந்தாலும் புகைப்படமாகவாவது பார்க்க ஆசையாக உள்ளதென கோரிக்கை வைத்தான்...

நேத்ராவிற்கு பயமும் அனுப்புவதா ....?வேண்டாமா.....? என்ற சந்தேதமும் எழுந்தது...

திலகாவிடமே கால் செய்து கேட்டாள்...

நீண்ட யோசனைக்கு பின் திலாகா சம்மதம் சொன்னாள்… ஏனெனில் அவள் இந்த அளவுக்கு தன் வார்த்தையை கேட்பதே பெரிது… அதை மேலும் இறுக்கி தானே அதை கெடுக்கவும் அவளுக்கு மனதில்லை..

ஒருவேலை அவனுக்கு இந்த காதலில் ஏதாவது இரண்டாவது அவிப்பிராயம் இருந்தால் தன் தோழியின் வாழ்க்கை இத்தோடு காப்பாற்றப்படுமே என ஆசைபட்டாள். ..

ஆதலால் நேத்ராவிடம் புகைப்படம் அனுப்பிட அனுமதி அளித்தாள்....

பின் நேத்ரா... தன் புதிய ஃபோனில் ஒரு சாதாரனமாக புடவையில் ஒரு ஃபோட்டோ எடுத்து அதை மித்ரனுக்கு மெயில் செய்தாள்...

மித்ரனும் அவனுடைய ஃபோட்டோவை நேத்ராவிற்கு மெயில் செய்தான்....

ஒருவருக்கு ஒருவர் மிகுந்த ஆவலோடு காத்திருந்தனர்...

மெயில் ஓபன் செய்து ஒருவருடைய முகத்தை ஒருவர் பார்க்கப்போகும் அந்த அழகியத் தருணம் இதோ .....இதோ.....இதோ.... என்று வந்தே விட்டது...

இருவரும் அவரவர் மெயில்களை ஓபன் செய்தனர்...

மித்ரனுக்கு ஆனந்தமும்.... நேத்ராவிற்கு பலத்த அதிர்சியும் காத்திருந்தது அந்த மெயில்களில்…?????
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி வினோத்குமார் டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top