தீராத் தீஞ்சுவையே...14

Advertisement

Yazh Mozhi

Active Member
தீராத் தீ____14

கடந்த மூன்று நான்கு நாட்களாக நேத்ராவிடமிருந்து எந்த செய்திக்கும் பதிலில்லை...

மித்ரன் சோர்ந்து போனான்...
உடல்நிலை சரியில்லையா...???
எங்கேனும் வெளியூர் சென்று விட்டாளா....???
அவ தான் ஆல் இந்தியா ரேடியோ ஆச்சே... என்கிட்ட சொல்லாம போக மாட்டாளே......

ஃபோன் ஏதாவது பிராப்ளம் ஆகி இருக்குமோ... ஆமா ...ஆமா... அப்படி தான் இருக்கும் இல்லைனா என்ட பேசாம இருக்க மாட்டாளே...
என்ன டி பன்ற... ???ஒரே ஒரு மெசேஜ் பன்னக் கூடாதா...????
மித்து பாவம் டி... முருகா பிளீஸ் நீ இரண்டு பேரோட பிஸியா இருக்கியே எனக்கு இருக்குறதே ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுனு ஒரு டியூப்லைட் தா...
அதுக்கும் இப்படி பவர் கட் பன்னி தமிழ்நாடு எலக்ட்ரி சிட்டு போர்டு மாதிரி நேரம் பார்த்து கால வாரலாமா....
எனக்கு கொஞ்சம் கருணைக் காட்ட கூடாதா...?? என்று இரவு மொட்டை மாடியில் தனியே உளறிக் கொண்டியருந்தான்...
முருகனுக்கு நேரடி வேண்டுதல் கேட்தோ என்னமோ உடனே மணி சத்தத்திற்கு பதிலாக மொபைலை வைப்ரேட் செய்து நோக்கியாவை நோக்க வைத்தார்...

மித்து ஆசையாக படித்த உடன் அவன் சற்று குழப்பமும் தயக்கமுமாக என்ன இது... இவ ஆரம்பமே சரி இல்லையே சிக்னல் இல்லாத எஃப். எம் மாதிரி திக்கி.. திக்கி... இழுக்குறாளே.....

பீடிகை எல்லாம் பலமா இருக்கே...

ஐயப்பா... நான் உன் பரம பக்தன் தான் அதுக்காக என்னையும் உன்ன மாதிரி சிங்கிலா சுத்த விட்ராத பிளீஸ் இவ சொல்ல வர்ரத பார்த்தா எனக்கு உள்ளுக்குள்ள பதருதே...

மித்து விளையாட்டு போதும் டா என்ன ஏதுன்னு ஒழுங்கா கவனி அப்பறம் மத்தத யோசிப்போம்...

மித்துவும் நேத்ராவும் .....

மித்து... என்னை அடுத்த வாரம் எங்க வீட்ல யாரோ பொண்ணு பார்க்க வராங்களாம்..

என்ன திடீர்னு...
தெரியலையே..
ம்ம்ம் .. உனக்கு ஓ.கே வா...
எனக்கு பெரிசா எந்த காரணமும் இல்லை... கல்யாணம் பன்னலாமா... வேண்டாமானு
தான் டவுட்டே...
மித்துவின் மனசாட்சி சற்று கொண்டாட்டமாக இருந்தது....
ஏன்....அம்மு...??? யாரையாவது காதலிக்கிறியா....
ச்சே...ச்சே... அதெல்லாம் ஒண்ணும் இல்ல..
எனக்கு யாரையும் கல்யாணம் பன்ன விருப்பம் இல்லையே...
இப்போது மித்து வின் மனசாட்சி இஞ்சி திண்ற குரங்காக முழித்தது..
ஏன்...
ஏன்னா.... அது ஒரு பெரிய கதை....
என்ன கதை... எனக்கு தெரியக்கூடாதா...
தெரிஞ்சி என்ன பன்னப் போற
சும்மா ஒரு ஜெனரல் நாலேஜ்...
அது... அது வந்து... சொல்லிடுவேன் ஆனா நீ என்கிட்ட எப்பவும் போல பேசனும் ஓகே வா...
மித்துவின் மனது சற்றே கலக்கமுற்றது... என்ன ஏதோ பயம் காட்ரா... முருகா... ஐயப்பா ...விநாயகா எல்லாருக்கும் எந்த நல்ல நாலாவது குறை வெச்சிருக்கேனா ..... ???

ஏதாவது வேண்டுதல் பாக்கியா....??? அப்படி ஏதாவது இருந்தா அதுக்காக இப்போ பழிவாங்கிடாதீங்கப்பா..... பிளீஸ் நேத்ராவை எனக்கே கொடுத்துடு பா பிளீஸ்... பிளீஸ்... ( மனசாட்சி
மித்து... பார்த்தியா இப்போவே சைலன்ட் ஆகிட்ட...
இல்ல... இல்ல... அம்மு அம்மா கூப்டாங்க அதான் என்னனு கேட்க போனேன்...
ஓ. ஓ...
சரி சொல்லு என்ன அந்த அலி பாபா இரகசியம்....
நான் உன்கிட்ட பேசாம இருப்பேனா .... என்னனு முதல்ல சொல்லு...
அது ... வந்து ... ஓகே நா எல்லாம் சொல்லி முடிக்கிர வரைக்கும் நீ பேசவேக் கூடாது...
நானே முடிச்சிட்டு சொல்றேன் அப்றமா நீ பேசலாம்... ஓ.கே....
ஓகே அம்மு... டன்...
எங்க அப்பாவுக்கு ஒரு தங்கச்சி இருகாங்க மித்து...
சின்ன வயசுல இருந்து சொந்தம் விட்டு போக கூடாதுனு என் அத்தை பயனுக்கு தான் என்னை மேரேஜ் பன்றதா இருந்தாங்க...
ஆனா... உன்கிட்ட சொல்றதுக்கு என்ன நான் கலர் லா இல்ல மித்து... கறுப்பு ...தான்.. இல்ல... இல்ல...கொஞ்சம் மாநிறம் னு வைச்சிகோயேன்.... . கொஞ்சம் குண்டா வேற இருப்பேனா... இல்ல.. இல்லை... லைட்டா... லைட்டா.... தான்பா...கொஞ்சம் வெயிட் போட்டேனு வைச்சிக்கோயேன்....
ஆனா என் அத்த பையன் தருண் நல்ல கலர் மித்து... அவன் பி.இ...
நான் வெறும் பி.ஏ....
சோ சின்ன வயசுல பேசின சம்பந்தம் வளர வளர வெறும் வாய் வார்த்தையா போய்டுச்சு மித்து...
என் அப்பா ஒரு முறை போய் கல்யாணம் பத்தி கேட்டதுக்கு எங்க அத்தை பசங்க விருப்பம் தான் எனக்கு முக்கியம்.... அவன் மனசுல யாரோ இருக்காங்கனு சொல்லிட்டாங்களாம்
அப்பா அத தாங்க முடியாம வருத்தபடுவாங்க அடிக்கடி... பணம் காசு வந்ததும் எல்லாரும் மாறிட்டாங்க...னு சொல்லி வருத்தப் படுவாங்க ..
அதனால அப்பா எனக்கு வீட்ல மாப்ள பார்க்க ஆரம்பிச்சாங்க... நானும் ஒரு இரண்டு வருஷம் டைம் கிடைக்கும் னு பி.எட் முடிச்சி வேலைக்கு போன பிறகு கல்யாணம் பன்னிக்கிறேனு வாக்கு குடுத்துட்டேன்...

இப்போ அந்த இரண்டு வருஷம் முடிஞ்சிடுச்சி மித்து. அதனால அப்பா யாரோ முகம் தெரியாத ஒருத்தன முன்ன பின்ன தெரியாத ஒருத்தன காட்டி கல்யாணம் பன்ன சொல்றாரு
ஆரம்பத்துல எனக்கு ஒன்னும் தெரியல வளர வளர வீட்ல இருக்க கெழவி.... கூட படிச்ச பிரண்ட்ஸ் னு எல்லாரும் அப்படி சேர்த்து வைச்சி பேசினத மறக்க முடியாம தான் .... இத்தனை வருஷம் படிப்பு படிப்புனு இருந்தேன்...
இப்போதான் வேலை கிடைச்சி தனியா சம்பாதிக்க ஆரம்பிச்சேனு சந்தோஷமா இருந்தேன்....
ஆனால் கல்யாணம் னு வரும்போது தருண் பத்தி பேசினதெல்லாம் மறக்கவே முடியல.. ஒரு இன்ஃபேக்சுவேஷன்….
ஆனா மறுபடியும் கல்யாணம் னு நெனைச்சாலே
நோ மித்து ஐ.. கான்ட்.. .
என்ன இருந்தாலும் எனக்குள்ள தருண் மேல ஒரு அட்ராக்ஷன் இருந்தது நிஜம் தானே அத உடனே மறந்துட்டு வேர ஒருத்தர ஏத்துக்கவும் முடியல....
அதே மாதிரி அப்பாவ எதிர்த்து பேசவும் தைரியம் வரல...
இப்போ எனக்கு என்ன முடிவு எடுக்குறதுனே தெரியல மித்து...
அதான் ஒருவாரமா உன்கிட்ட கூட ஒழுகா மெசேஜ் பன்னல… ..
கல்யாணம் பன்னிக்கலாமா...வேண்டாமா.... என அவனிடமே கேட்டு வைத்தாள்....
இப்போ சொல்லு மித்து என் மேல தப்பா... நீ என்கிட்ட எப்பயும் போல பேசுவ தானே... என்க...
மித்துவுக்கு குட்டி சுவர் கிடைக்குமா முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது..
இவ இருக்காளே….
இதெல்லாம் ஒரு கதைனு இதுக்கு இந்த மித்துவ ஒரு நிமிஷம் பீலிங்ஸ் ல ப்ரேயர் பன்ன விட்டுட்டாளே..
என்று சப்பென்று ஆனது...
ஆனால் லேசாக மனம் அந்த தருண் மீது ஒரு பொறாமை இழையோடியது...
நோ...நோ... நோ... மித்து மனம் தளரவேக்கூடாது.. இப்போ என்ன பன்னலாம் என யோசித்த மித்ரனுக்கு பதில் சொல்லவும் மனதில்லை...
அதே சமயம் என்ன பேசுவதென்றும் தெரியவில்லை...
அவளிடம் ஏதேதோ சப்பை கட்டு கட்டிவிட்டு வேகமாக அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டான்...
அங்கே நேத்ரா.....
சாவகாசமாக சிரித்துக் கொண்டிருந்தாள்..
இல்லாத ஒரு அத்தையை உருவாக்கி ....அவளுக்கு இருபத்தி இரண்டு வயதில் இன்ஸ்டன்ட் காபி மாதிரி ஒரு பையனை உருவாக்கி.... பெயர் வைத்து காதல்... கல்யாணம் வரை கதை கட்டிவிட்டு.... அவளுக்குள்ளே சிரித்துக்கொண்டே மித்துவின் பதிலுக்கு காத்திருந்தாள்....
அவன் ஏதேதோ காரணம் சொல்லி தயங்கவுமே புரிந்து கொண்டாள் நேத்ரா....
பாவம் சின்னப்புள்ள... ஓவரா பி.பி ஏத்திட்டோம் போலயே....
உண்மையில் திலகா கூறிய வழிமுறையை முழுமையாக பின்பற்றிட அவள் மனம் ஏற்கவில்லை...
இப்போ அடுத்து பொண்ணு பார்க்க வர்தா சொன்ன இளிச்சவாயனுக்கு ஒரு பேரு ... குடும்பம் ... வேலை... எல்லாம் தேடனுமே .....
என்று அதி முக்கியமான காரியத்தில் கண்ணானவள் திலகாவிடமே உதவி கேட்க கால் செய்தாள்...
அவள் கூறயதைக் கேட்ட திலகா இனி சிறிது நாட்களுக்கு மித்ரன் அனுப்பும் செய்திகளை நேரடியாக அவளிடம் தெரிவிக்கும்படியும்...
அவள் சொல்வதை பின்பற்றியே மித்ரனிடம் பேசும்படியும் கூறினாள்...
உயிர் தோழியின் வார்த்தைகளை மீற முடியாத நம் நித்தியும் தஞ்சாவூர் பொம்மையாக தலையாட்ட வேண்டியிருந்நது...

நேத்ரா கால் செய்து கூறிய விவரங்களை ஆராய்ந்த திலகா ஒரு தீர்க்க தரிசனத்தைக் கூறினாள்...
அதைக் கேட்ட நேத்ராவின் மனம் சிறகடித்தது...
இதற்கு நடுவே....
அதே சமயம் மித்ரனின் தொலைப்பேசி எண்ணை நேத்ராவிடம் வாங்கி ராஜ்குமார் மூலமாக புதிய எண்ணில் தொடர்பு கொண்டு அவனிடம் பேசி யாரோப் போல சில தகவல்தளை சேகரிக்கும்படி கேட்டிருந்தாள்.... திலகா...

ராஜ்குமாரும் சில தகவல்களை அவனே நேரடியாகவும்... சிலவற்றை அவனுடைய நண்பர்கள் மூலமும் நேரில் சென்று விசாரித்து அவன் கொடுத்த தகவல்களைக் கண்டு திலகாவிற்கு மனம் ஒருநிலையில் இல்லாமல் தவித்தது.
உடனே நேத்ராவிற்கு அன்று இரவு 9. 25 க்கு கால் செய்தாள்... நேத்ரா எடுத்த உடன் அவள் கூறியதாவது....
நேத்ரா நீ சொன்னத வெச்சி யோசிச்ச வரைக்கும் நாளைக்கு நைட்கு உள்ள மித்ரன் உன்கிட்ட லவ் சொல்ல 90% வாய்ப்பு இருக்கு என்றாள்...
இதை கேட்ட நேத்ராவிற்கு இதயத்தில் நொருங்க உடைத்த ஐஸ் கட்டிகளால் யாரோ அபிஷேகம் செய்ததைப்போல குளு குளு வென இருந்தது. .
ஆனால் நீ இப்போ எனக்கு ஒரு ப்ராமிஸ் பன்னனும்...
ஏன்... எதுக்கு னு காரணம் கேக்காம பன்னனும்... செய்வியா...
சரி திலகா ப்ராமிஸ் என் உடனே வாக்கு கொடுத்துவிட்டாள் நேத்ரா...

ஆனால் அடுத்த அவள் கூறிய விஷயங்களை கேட்ட உடனே... இதயத்தை யாரோ கசக்கி துவைத்து வெண்ணீரில் அமிழ்த்தி பிழிந்ததைப்போல... சற்று அவஸ்தையாக இருந்தது...

ஆனாலும் வேறு வழியில்லை.. திலகா சொல்வதெல்லாம் நம்முடைய நன்மைக்குத் தான்...
அவள் எது செய்தாலும் அதில் காரணம் இருக்கும் என்றே தோன்றியது..
அவளுடைய வார்த்தைகளை தன்னால் ஏற்பது முடியாது தான்.... ஆனாலும் அதை பின்பற்றுவதே சரியென மனதைக் கல்லாக்கிக் கொண்டு சரி திலகா என சத்தியம் செய்தால்.....
(அடடா.... இது சத்தியமா.... சக்கரைப் பொங்கலா... கேட்ட உடனே இந்தபுள்ள யோசிக்காம பொசுக்குனு பன்னிடுச்சே.).

திலகாவிற்கு மனதில் அத்தனைப் பெருமிதமாகவும் ...உண்மையில் கொஞ்சம் வருத்தமாகவும் இருந்தது. ஆனால் எல்லாமே அவளுடைய நன்மைக்கு தானே என்று மனதை சமாதானம் செய்து கொண்டு...
அடுத்த கட்ட சோதனைகளை யோசிக்கத் துவங்கினாள்...
நேத்ராவோ... எந்த காரணங்களும் அறிய முற்படாமல் சத்தியம் செய்து விட்டதை நினைத்து சிறிது வருத்தமும் இன்றி இயல்பாக மித்துவுக்கு குட்நைட் சொல்லிவிட்டு தூங்கிவிட்டாள்..

மித்ரன் தான் குட் நைட்டைக் கண்டு சளிப்பாக சிரித்தாளும் ...
.நாளைய அழகான தருணத்திற்காக மனதில் பல மெசேஜ்களை எழுதி எழுதி திருத்திக் கொண்டு.....
பசியை மறந்து குட்டி போட்ட பூனையாக அறைக்குள்ளே நடைப்பழகிக் கொண்டிருந்தான்...

பாவம் பயபுள்ள....
மௌனம் பேசியதே சூர்யா வோட செகண்ட் ஆஃப் மாதிரி தனியா பொலம்ப போறது தெரியாம குதூகலமா ஏகாதசிக் கொண்டாடிக் கொண்டு விடிய.... விடிய.... விழித்திருந்தான்....
நாளை நடக்கப்போவது தான் என்ன....????
அப்படி என்னம்மா நேத்ரா சத்யம் பன்ன....????
__தொடரும்…
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி வினோத்குமார் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top