தீராத் தீஞ்சுவையே...13

Advertisement

Yazh Mozhi

Active Member
தீராத் தீ____13

நேத்ராவின் பதில்களில் கொதித்தெழுந்த திலகா....

அஞ்சலகத்தில் அடித்து பதிக்கும் ஸ்டாம்ப் மாதிரி ஓங்கி விட்ட அறையில் நேத்ராவின் கன்னங்கள் அணில் பிள்ளை மாதிரி மூன்று கோடுகளோடு அழகாக மின்னியது..

அத்தனைக் கோவம் திலகவதிக்கு....

தன்னிடம் ஆலோசிக்காமல் இதுவரை எந்த ஒரு நிகழ்வையும் செய்யாதவளா இந்த இரண்டு மாதமாக முகமறியா ஒருவனிடம் பேசியதை மறைத்தது ....இன்று இப்படி கலங்குகிறாள் என்றால் அதன் பின்னனி காதல் எனத் தெரியாத அளவிற்கு திலகா ஒன்றும் முட்டாள் இல்லையே...

உங்க அப்பா எம்டன பத்தி யோசிச்சியா... அவருக்கு தெரிஞ்சா என்ன நடக்கும் தெரியுமா...

நீ படிச்சதும் போதும் வேலைக்கு போனதும் போதும் வீட்லயே கிடனு அடைச்சி வைச்சு அடுத்த முகூர்தத்திலேயே எவனையாவது புடிச்சி உன் தலைல கட்டி வைக்கப் போறாரு... என்று நிதர்சனத்தை எடுத்துரைத்தாள்...

நேத்ராவிற்கு அழுகை அழுகையாய் வந்தது... பஞ்ச தந்திரம் தேவையாணி மாதிரி திலகாவை கட்டிக்கொண்டு அழுதாள்..
திலகாவிற்கு எரிச்சலாக வந்தது... ஆனாலும் நட்பு விட்டுக் கொடுக்க முடியலையே....

அவளுக்கும் காதலைத் தெரியும்... அவளும் காதலிக்கிறாள்... காதலிக்ககறாள்... காதலித்துக் கொண்டே இருக்கிறாள்... ராஜ்குமார் க்கும் அவளுக்கு ஜாதி வேறுபாடு.. அதுவே அவளை ஒருபுறம் உலுக்கிக் கொண்டிருக்கையில்...
இப்போது நேத்ராவுமா இப்படி கலங்கும்படி ஆக வேண்டும்....

ஆனால் நேத்ராவா இப்படி.... நேத்ரா ஓரு புத்தகப் புழு....

எப்போதும் ஏதாவது ஒரு பழை காவி படிந்த இலக்கிய வர்ணனை மிகுந்த கவிதைகளுக்குள்ளும்... கதைகளுக்குள்ளும் தலையை நுழைத்துக் கொண்டு... புத்தகமே கதியெனக் கிடப்பவள்.... நன்கு படித்து கல்லூரியில் இரண்டாம் இடத்தில் மதிப்பெண் பெற்று தேரியவள்...
ஆசிரியை பயிற்சியை அத்தனை விரும்பி
ஏற்றவள்... ஆனாலும் என்ன உபயம்...???

ஏட்டு சுரைக்காய் கூட்டுக்கு உதவது எனத் தெரியாமல்... இப்படி மனதைத் தொலைத்து பரிதவிக்கின்றாளே... என ஆற்றாமையாக இருந்தது திலகவதிக்கு...
இவளை எப்படி இயல்பு நிலைக்கு மாற்றுவது... இவளுடைய தவறை எப்படி புரிய வைப்பது என யோசித்தவள்
எண்ணையில் சிதறியக் கடுகாக பொறியத் துவங்கினாள்...
என்ன டீ நீ...
ஒரு டீச்சரா இருந்து நீயே இத்தனை முட்டாள் தனமா நடந்துகிட்டா உன்கிட்ட படிக்கிவர பிள்ளைகளை எப்படி நீ சரியா வழிநடத்த முடியும் ...
அவன் யாரு...??என்னனு ஒன்னுமேத் தெரியாம இப்படி அழுதா எல்லாம் சரி ஆகிடுமா...???
என்னைப் பாரு...
.......
என்ன நிமிர்ந்து பாரு நேத்ரா...
.........
அவன் யாரோ ஒரு ராங் நம்பர் னு சொல்ற...
உன்கிட்ட பேசுரா மாதிரி மத்த பொண்ணுங்க கிட்டையும் பேசிகிட்டு இருந்தா...
உன்ன அவன் லவ் பன்னாம சும்மா டைம்பாஸ் காக பேசியிருந்தா....?????

அவன் வயசான ஆளா இருந்தா.....?????
இல்ல அவனுக்கு கல்யாணம் ஆகி இருந்தா.....????

இவ்ளோ ஏன் உன் வயசுல அவனுக்கு பொண்ணோ பையனோ இருந்தா....????

அவனுக்கு ஏதாவது டிசிசிஸ் இருந்தா...???? மே பி.. எச்.ஐ.வி... ?????
சொல்லு… இத்தனை இருந்தா… இருந்தால ஒன்னோ ரெண்டோ நான் சொன்ன மாதிரி கரெக்ட் ஆ இருந்தா… என்ன செய்ய முடியும் உன்னால…
யோசிக்கவே மாட்டியாடி முட்டாள்…
பேசினாளாம் ….பிடிச்சிதாம்... நல்லவனாம் … பெரிய ஜோசியக்காரி மாதிரி பேசுற… வடிகட்டின முட்டாள் டி நீ… என்ன மாரக் வாங்கி என்ன புரயோஜனம்...
நேத்ரா கலக்கமாக நிமிர்ந்து முறைத்தாள்..
ஆனால் அவளையும் அறியாமல் வாய் மட்டும் கூறியது.. அவரு அப்படி பட்டவர் இல்லை டி .. கண்டிப்பா ரொம்ப நல்லவர் தான்...
இதை நேத்ரா கூறி முடிக்கும் முன்பே திலகாவிற்கு எங்காவது முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது...

லூசாடி நீ... எந்த உண்மையும் இல்லாத ஒரு விஷயத்த... இத்தனை ஆணித்தரமா நம்புர மாதிரி என் வார்த்தையை விட நேர்த்து வந்த அவன் மேல உனக்கு நம்பிக்கை வந்துடுச்சு இல்ல....

உன் மர மண்டைக் கெல்லாம் பட்டாதான்டி புத்தி வரும்... எப்படியோ போ ... என எழுந்து நகர முற்பட்டாள்...

ஆனால் நேத்ரா அவளின் கைகளை இருக்கமாக பற்றிக் கொண்டு விட மறுக்க...
திலகாவிற்கு பாவமாக இருந்தது... அவளருகில் சென்று அவர்ந்து அவளை சமாதானம் செய்தாள்...
ஆனால் மனது மட்டும் விடாமல் அவள் கூறியவற்றை எண்ணி எண்ணி... அலைபாய்ந்து கொண்டே இருந்தது..

ஆண்டவா இவ சொல்பேச்ச கேக்கவே மாட்டேங்கிறாளே...
இவளுக்கு எப்படி நான் புரிய வைப்பேன்.. அவன் நல்வனா இருந்து இவ மேல உண்மையான அன்போட ஏத்துகிட்டா பரவாயில்லை..
நான் நினைச்சா மாதிரி ஏதாவது விபரீதமா இருந்தா என்ன பன்றது...
இவள இனி இப்படியே விடக்கூடாது அவன் யாரு என்ன எல்லாம் நாம கண்டுபிடிக்கனும்...
எப்படியாவது இவளை இதிலிருந்து மீட்டு விட வேண்டும் என சில பல திட்டங்களை வகுத்துக் கொண்டு அமைதியாக மற்ற கதைகளைப் பேசி நேத்ராவை இயல்புக்கு திருப்பினாள்...
வீட்டிற்கு சென்ற நேத்ராவிற்கு மனம் நிலை கொள்ளாமல் தவித்தது....
பெரியாரின் சுயமரியாதைச் சிந்தனைகளும்.... பெண் ஏன் அடிமையானாள் புத்தகத்தின் தாக்கமும் அவளை கடவுளின் மீதான கொஞ்சம் நஞ்சம் நம்பிக்கையையும் ஓட்டி இருந்தது...
ஆனால் நம்ம மித்ரனோ பரம ஐய்யப்ப பக்தன்...
வருடாவருடம் தவறாது மாலை அணிந்து மலைக்கு செல்லுதலை எழுதப்படாத சட்டமாக கடைபிடிப்பவன்....
வழியே செல்லுமிடமெல்லாம் சின்ன சின்ன சந்து பிள்ளையாரைப் பார்த்தாலும் கூட பவ்வியமாக கன்னத்தில் போட்டுக் கொள்ளும் பக்திமான்… தான்… ஆனாலும் கத்தியின் கூரான முனை மழுங்கிய முனைப் போல அவனுக்கும் இரண்டு பக்கம் இருந்தது..
கழுத்தில் ருத்ராட்சம் நெற்றயில் சந்தனம் என திருத்தமாக இருப்பவன்… ஆனால் அது அலங்காரத்திற்கு மட்டுமே… எந்த ஆணும் காதலியிடம் போலி முகத்திரையை காட்டுவது இல்லையே…
அதனால் அவன் பேச்சை மட்டுமே வைத்து அவனா இப்படி ஏமாற்றுவான்... நிச்சயமாக இருக்காது என்றே நேத்ரா நம்பினாள்...

(பார்க்காமலே காதல் என்றீர்கள் ருத்ராட்சம் சந்தனமெல்லாம் எப்படித் தெரியும்…..
எல்லாம் நம்ம நேத்ரா மித்ரனிடம் பேச்சு வாக்கில் சேகரித்த அல்லது அவன் சொன்னதன் பேரில் அவள் நம்பிக்கொண்டு இருக்கும் வார்த்தைகள்...மட்டுமே....
அப்போ ஏன் மித்து இவளை டியூப்லைட் என நினைக்க மாட்டான்.......
இதில் வாரத்தில் ஒருநாள் அவன் ஐயப்பனுக்கு விரதம் என்று அவன் சொன்தை நம்பி .... அம்மையாரும் விரதமென்று கொழுப்பாக பட்டினி கிடந்து வகுப்பில் மயங்கி சரிந்தது தனிக் கதை...
திலகவதியின் வார்த்தைகளை யோசித்து யோசித்து நேத்ராவிற்கு தலையை சுற்றி குருவிகள் பறந்தன...
திலகா சொல்வதைப்போல நான் ஏமார்ந்துவிட்டாள்....??? என்ன செய்வது என்று தோன்றி பயப் பந்து வைரமுத்து வரிகளை நினைவூட்டும் விதமாக வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருண்டது...

ஒருவனை விரும்புவதற்கு பணமோ வசதியோ பண ஏற்றத் தாழ்வோ காரணமாக இருக்கக் கூடாது... காதல் இயல்பாக வர வேண்டும்....
கல்லூரி..... முதல் வேலை செய்யும் இடம் வரை .....ஆண்களைக் கடந்து வந்தவளால் மித்ரனை கடந்து போக முடியவில்லை...
அவனோடு உள்ள பந்தம் முன்பே நிர்ணயிக்கப்பட்டதாக அவளுக்குள் தோன்றியது...
என்ன நடந்தாலும் அவனோடு தான்...
ஒரு வேலை தன்னை அவன் ஏமாற்றி இருந்தால் கூட தன்னை மீட்டுக்கொண்டு
தன் பணியை சேவையாக செய்து வாழ்தலே போதும் என உறுதியாக இருந்தாள்
... அதனால் திலகா கூறிய படி சில சோதனலகள் மூலம் மித்ரனை சோதித்து தன் காதலை உறுதிபடுத்திக் கொள்ள நினைத்தாள்...

முதற்கட்டமாக சில நாட்கள் மித்ரனுக்கு பதில் அனுப்புவதை தவிர்த்தாள்......
பின்னர் திலகாவின் இரண்டாம் கட்ட சோதனையை செயல்படுத்த தயிராக மித்ரனுக்கு அடுத்த தாக்குதலுக்கான செய்தியைதன் செல்பேசியில் பதித்துக் கொண்டிருந்தாள்...
அங்கே....மித்தரனோ....
தன்னை உதாசீனம் செய்தவளை மன்னிப்பு கேட்டு நட்பை வளர்த்தவன் நாளுக்கு நாள் அதில் மீள முடியாமல் சிக்கிக் கொண்டான்...
காரணம்.. நேத்ராவின் இயல்பு அப்படி.. ..எதை சொன்னாலும் அப்படியே ஏற்றுக் கொண்டாள்...
அவளுக்கென்று ரகசியங்கள் ஏதும் இல்லை... அதைவிட அவளுடைய இரக்க குணமும் இடைவிடாது பேசும் சுபாவமும் மித்ரனை பெரும்பாலும் கதைகேட்க வைத்து கட்டுவித்தது..
அவன் சொல்வது பொய் என யோசிக்கவே இல்லை அவள்… லாஜிக் என்ற ஒன்றை அவள் நினைக்கவே இல்லை.. அது மித்ரனுக்கு வசதியாகவே இருந்தது..
அவளின் குரலைக் கேட்க வேண்டி ஒரு முறை கால் செய்ய அனுமதி கேட்டும் அவள் கண்டிப்பாக முடியவே முடியாது என மறுத்துவிட்டாள் .
அவனிடம் மிகவும் தன்மையாக நட்பின் கோட்டை மீறாமல் இயல்பாக இருந்த அவளின் உண்மையும் எளிய குணம் பெரிதும் அவனது சிந்தையை சுழற்றியது.
தனிமையை இரசிக்க வைத்தது...
வீட்டில் பொய்கள் சொல்ல வைத்தது... தனியே சிரிக்க வைத்தது ....காதல் பாடல்கள் கேட்காமலே மனதில் நின்று இசையை கசிய விட்டத...உதடுகளை புன்னகையோடு பார்த்துக் கொண்டது..
உண்மையில் நேத்ராவை தான் நேசிக்க தொடங்கிவிட்டோம் எனப் புரிந்தது...
அவன் ...தன் வீட்டில் செல்லம் தான் ...ஆனால் திருமணம் என்று வரும்போது தன்னால் தன் சகோதரியின் வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது… என்பதிலும் உறுதியாக தான் இருந்தான்...
அம்மாவுக்கு பிடித்த பெண்ணாகவும் தனக்கு நல்ல தோழியாகவும் காலம் முழுக்க காதலியாகவும் துணை வர நேத்ராவைப் போன்ற டியூப் லைட்டு தான் சரி என நினைத்திருந்தான். ...

என்ன நடந்தாலும் என்ன இன்னல் வந்தாலும் நேத்ராவை கைபிடிக்க வேண்டும் என்ற உறுதி அவனுக்குள் வந்தது....
அங்கே அவளை விளக்கி வைத்த காரணங்கள் விலகிப் போயிருந்தன.

மித்ரன் அவளை பார்க்கவில்லை ... அவள் அழகென்ன...??? நிறமென்ன ...???என்ற எந்த குழப்பமும் அவனுக்கு வரவில்லை...
அவளிடம் பேசியவரை அவளுடைய குணம் அவனுக்கு அழகாகப்பட்டது... அவளுடைய அப்பா. சகோதரனுக்கு ...அடுத்து அவள் தனக்கே முக்கியத்துவம் கொடுப்பதும்.. ... அவனிடம் உரிமையாக நட்போடு கண்டிப்பதையும் அவன் வெகுவாக விரும்பினான்...
அவள் தன்னை பார்க்கும் போது அவளுக்கு ஏற்ற மாதிரியும் பிடித்த மாதிரிம் தான் இருக்க வேண்டும் என விரும்பினான் ....அவளிடம் பேசிய இந்த கொஞ்ச நாட்களில் அவனது இயல்பு மாறி நேத்ராவிற்காக நேர்த்தியாக மாறியிருந்தான்...
சொன்ன நிறைய பொய்களையும் உண்மைகளாக மாற்ற முற்ப்பட்டான்...
அன்னைக்கு தெரியாமல் அடிக்கும் பீர்... பழக்கத்தைக் கூட அன்பானவளுக்காக விட்டுக் கொடுத்துவிட்டான் என்றாள் பாருங்களேன்..
சில நாட்களாக அவள் தன்னை ஒதுக்குவதாகவேத் தோன்றியது... மித்ரனுக்கு ....
வார்த்தைக்கு வார்த்தை அம்மு ...அம்மு என உருகியவனை தவிர்ப்பது நேத்ராவிற்கும் வருத்தமாகவே இருந்தது....
மூன்று தினம் கழித்து அவளிடமிருந்து செய்திகள் வந்தன.
அவை மித்ரனின் காதல் கர்வத்தை அடக்கியது...
சிரிப்பை பறித்து மிரட்சியையும் ஒரு பதட்டத்தையும் தோற்றுவித்தது...காற்றலைகளோடு வந்த செய்தி அவன் காதல் சிறகுகளும் கிழித்து தனியே திண்டாடிய உணர்வை ஏற்படுத்தியது....

.. --தொடரும்...
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி வினோத்குமார் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top