தீராத் தீஞ்சுவையே...12

Advertisement

Yazh Mozhi

Active Member
தீராத் தீ____12

நேத்ரா அனுப்பிய

ஹூ ஆர் யூ வில் .... மித்ரனின் மொத்த எதிர்பார்ப்பும் வடிந்தது....

என்ன பன்னாலும் பேச மாட்ராளேனு நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டான்....

இரவு வேறு என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டே மொட்டை மாடியில் கால் மேல் கால் போட்டு நகத்தை ஒட்ட ஒட்ட கடித்துக் கொண்டிருந்தான்...

அவனுடைய செல்பேசியின் திரை மெல்ல வைப்ரேட்டர் மோடில் குதூகலமாக ஒரு பீப்போடு சிரித்து அடங்கியது...

மித்ரன் வேண்டா வெறுப்பாக கையில் எடுத்து ஓபன் செய்தவன் புல்லரிக்க அமர்ந்து கொண்டான்....

நேத்ராவிடமிருந்து ஒரு குட் நைட் வந்தது....
அவ்வளவு தான்....
அவன் நைட் குட் ஆனது ஆனால் தூக்கமோ .பறந்தே போனது..
உற்சாகம் பொங்க ஒரு ஆட்டம் ஆடத் தோன்றியது... தெரியாத மாதிரி யார் நீனு கேட்டுட்டு இப்போ குட் நைட் ஆ....
வசமா மாட்னியா ... என தனக்குத்தானே பேசிச் சிரித்தான்...

(அங்கே நேத்ராவோ….

முன்ன பின்ன தெரியாம ஒருத்தன் உரிமையா பேசினா எப்படி உடனே பேச முடியும்....

முகம் தெரிஞ்சி பழகுறவங்களே இந்த காலத்துல ஏமாத்திட்டு போறாங்க ...

யாரோ ஒரு ராங் நம்பர் அத நம்பி பேசினா நான் தான் பெரிய முட்டாள்...

நோ... நோ... பேசவேக் கூடாது ...
இப்படியாக நேத்ராவும் ஒரு வாரமாகக் காத்திருந்தாள்..... அவளையும் அறியாமல் கையும் கண்ணும் செல்பேசியை ஆராய்ந்து கொண்டே இருந்தது...

எவனோ வந்தான் பேசினான் இப்படி சும்மா இருந்த என்னை குழப்பி விட்டுட்டானே ..
அவன் நம்பர கூட சேவ் பன்னவும் இல்ல...

நாமலா போய் பேசக்கூடாதே... அப்பறம் ஓவரா ....ஆ வழிஞ்சா....

இப்படி பலக் குழப்பங்களோடு நேத்ரா முட்டி மோதிக் கொண்டிருந்த போது தான் அவளுக்கு வரிசையாக ஐந்து செய்திகள் மித்ரனிடம் இருந்து குவிந்தது...

பார்ரா.... என்னமோ ரொம்ப பழகின மாதிரி ஓவரா பயபுள்ள இவ்வளவு பாயாசமா பேசியிருக்கே. ...

உன் கொழுப்ப கொஞ்சம் குறைக்கனுமே என ஹூ ஆர் யூ என்று வேண்டுமென்றே அனுப்பினாள்....

அவனும் தன்னை நினைவூட்ட ஏதாவது பேசுவான் என நேத்ரா காத்திருக்க

ஹூ ஆர் யூ வில் ஆஃப் ஆன நம்ம மித்து... மொத்தமா சரிஞ்சிட்டாரு...

சரி போனாப் போகுது பயபுள்ளைகிட்ட பேசிடுவோமா... ஆனா நாம ஓவரா இவனுக்கு இடம் கொடுக்க கூடாது அப்புறம் இடத்த கொடுக்க மடத்தையே புடிச்ச கணக்கா நாமே அவனுக்கு வழிவகைப் பன்னிடக்கூடாதே

இப்படி நேத்ரா யோசித்து .... யோசித்து ஒரு வழியாக தனக்கு மித்ரனை நினைவுள்ளது என்பதை நிரூபிக்க குட் நைட் மட்டும் அனுப்பிவிட்டு பதிலுக்கு காத்திருந்தாள்....

இப்போது மித்ரன் ஓரலவிற்கு நேத்ராவின் மன நிலையைக் கண்டுபிடித்திருந்தான்... இருவருக்கும் தெரிந்தது இப்படி முகம் தெரியாமல் ஒருவரிடம் ஒருவர் பேசுவதும் பழகுவதும் விபரீதமாகிடக் கூடும் என்று...
ஆனாலும் இந்த முகம் தெரியாமல் போலி வேஷத்தோடு பேசித் திரிவதை இருவரின் வயதும் மனதும் விரும்பியதே… இப்படி குழிக்குள் விழும் கூட்டத்தில் இந்த இருவரும் கூட ஒரு உதாரணமாகவே இருக்கட்டும் என விதி நினைத்தது போலவே….
ஆனால் அவர்களுக்கே தெரியாத ஒன்று அவர்களை கட்டுவித்து நூல் பொம்மைகளாக அந்த விதி இயக்கப்போவதை இருவருமே உணரவில்லை....

அதன் பெயரேக் காதல்.... அது எப்போது யார் மீது வரும் என்றே யாருக்கும் தெரியாதே...

நேத்ரா மித்னனிடம் தன் ஃபோன் நம்பர் இருப்பதை விரும்பவில்லை ஏதாவது பிரச்சனை வருமோ என்ற பயம் இருந்தது...

காரணம் அப்பா ஒரு எம்டன்... தம்பி ஒரு எம்.என். நம்பியார்... அண்ணன் ஒரு சி.ஐ.டி சங்கர்.. .

(காதல் என்றாலே காலா காலமாக எதிரிகள் வேண்டுமில்லையா....)

ஏதேதோ பேசி எண்ணை அழிக்கும்படி கேட்டாள்... ஆனால் மனதில் அவனை விட்டு விலகவும் முடியவில்லை...
அவனுக்கும் அப்படித்தான் தோன்றியிருக்க வேண்டும்.
சாமர்த்தியமாக பேச்சை வளர்த்து நட்பிற்கு காதல் உரம் போட்டு காத்திருந்தான் நம்ம மித்து...
அன்றையக் காதலின் தேவை அன்பு மட்டும் தான் அங்கே அழகிற்கு வேலை அடுத்த கட்டம் தான்... பிகாஸ் 90's கிட்ஸ் காதல் அப்படியாகப்பட்டது...

இன்று போல எடுத்த உடன் சாட்டிங்... டேட்டிங்... பிரேக் அப் எல்லாம் புழங்காத காலம் அது...
காதலில் காத்திருப்பும் உண்மையும் இருந்தது... காரணம் அப்போது ஊடகங்களின் ஊடுருவல் இல்லை… அதாவது இன்றைய அளவு இல்லை அவ்வளவு தான் மற்ற படி எல்லா காலத்திலும் உண்மைக் காதலும் உள்ளது.. வேஷம் துரோகம் ஏமாற்றம் தரும் காதலும் உள்ளது..
இப்போது ஆளுக்கு நாலு செல் அதுல..எட்டு சிம் கார்டு.... நம்பருக்கு ஒரு காதல்... ஏகப்பட்ட சமூக வளைதளம்.... செல்பி.... இன்னும் பல....
நமக்கு எதுக்கு ஊர் வம்பு…..

அங்கே நேத்ராவும் மித்ரனும்...

எது எப்படி போனாலும் அதன் பாதையில் நகர ஆசை பட்டனர்... இருவரும்

நேத்ராவின் செய்திக்கு பதிலாக மித்ரன்....
இப்போ நான் பேசலாமா .... கூடாதா... என அனுப்பினான்...

நேத்ராவோ... ஃபிரண்டா பேசினா பேசலாம் என்று வலுவாகப் பீடிகைப் போட்டாள்... இருவரும் அவரவர் வீட்டில் தனியே செல்லோடு சிரித்துக்கொண்டே அவர்களுடைய காதலுக்கு அவர்களே அறியாமல் அ .... ஆ.... போட்டுவிட்டனர்

இருவரும் முதலில் பிரண்ட்ஸ் புக் பரிமாறிக் கொண்டனர்...

அதில் மித்ரன் சொன்ன தகவலைக் கொண்டு அவனை முகநூலில் தேடினாள் ...நேத்ரா...
அவனுடைய புகைப்படம் ஏதும் இல்லை...
சில தகவல்கள் அவன் கூறிய பேசிய நிகழ்வுகளோடு ஒன்றாக இருந்ததாள் அவனுடைய வார்த்தைகளை அப்படியே நம்பினாள்....
அதாவது பிடித்து ....பிடிக்காதது.... பெயர் ....செல்லப் பெயர்.... முதல் பிடித்த பாடம் ....பிடிக்காத நபர்.... இடம் கலர்....சாக்லேட்... இப்படி அனைத்தும்....
அடுத்தடுத்த நாள் இருவருக்குள்ளும் சுமூகமான நட்பு இழையோடிக் கொண்டே இருந்தது..

மித்ரன் மெதுவாக வாங்க போங்கவில் இருந்து ஒருமைக்கு தாவி வா... போ... எனத் தொடங்கினான்

நேத்ராவிற்கு காதல் கண்கட்டியதில் அதைக் கூட கண்டு பிடிக்க முடியவில்லை...
ஒரு நாள் வா... போ... மறுவி வாடி... போடி ... என டி... தொடங்கவும் நேத்ரா சுதாரித்துக் கொண்டாள்...
எனக்கு இப்படி பேசினால் பிடிக்காது என்று முதல் முறையாக கோவம் காட்டினாள்...
மித்ரனுக்கோ தன்னையும் மீறி அவளிடம் உரிமையாக டி போட்டு பேசியதில் ஒரு சந்தோஷமும் உரிமையும் தோன்றியது ... காரணமின்றி ஏதோ ஒரூ உணர்வு அவனை பறப்பது போல எப்போதும் சந்தோஷப்படுத்தியது

ஆனால் நேத்ரா அப்படி கூப்பிட்டதை பிடிக்கவில்லை என்றதும் வாலருந்த காத்தாடியாய் அவன் மணம் திண்டாடியது....
அவனுடைய பழிவாங்கும் படலம் ஒரு மூலையில் பல்லிலித்தது...
அவனையும் அறியாமல் அவள் மீது ஒரு அன்பு ஏற்பட்டது...
விளையாட்டாக பேசி டைம்பாஸ் எனத் தொடங்கிய அவனது உறவு நிலையின் மீது அவனுக்கே வருத்தம் வந்தது....

நேத்ராவின் உண்மையான அக்கரை கண்டிப்பு ... அப்பாவித்தனம் பேச்சு என ஒவ்வொன்றும் அவனை ஈர்த்தது....
நிறைய நிறைய பொய்களால் தன்னை நல்லவனாகக் காட்டிக்கொண்டு காதல் வளர்க்க முயன்றான்...
அவனுடைய மனம் அவனையும் அறியாமல் அவளைக் காதலிக்க துவங்கிவிட்டது...
பொய்களின் அடிப்படையிலாவது தனது காதலை தக்க வைத்துக்கொள்ள நினைத்தான்...
இங்கே நேத்ராவிற்கும் சரியாக வரையருக்க முடியாத நிலை... அறிவுரை கேட்க எப்போதும் நம்ம சி.ஐ.டி. சங்கர் கிட்டே தான் ஓடுவாள் ... அதாங்க நம்ம செல்வம்.... ஆனால் இன்று ஏனோ மித்ரனனக் குறித்து கூற பயமாக இருந்தது..

நேத்ராவிற்கு அவளுடைய கெமிஸ்ட்ரி சார் நினைவு வந்து மனதைக் குடைந்தது...

நீ ஒரு செயலை தவறா...? சரியா....?
செய்யலாமா.... ?வேண்டாமா.. ....?

என உன் மனசாட்சி பல முறை கேட்டாள் .......நீ தயங்கினாள்...... உனக்கான விடை நீ செய்வது தவறு... அதை செய்யவேக் கூடாது என்று அர்த்தம்... என்று அடிக்கடி கூறுவார்...
இன்று உண்மையில் நேத்ராவின் நிலை அப்படித் தான் இருந்தது...
அவளால் மித்ரனிடம் பேசாமல் இருக்கவும் முடியவில்லை... அதை நட்பு என்ற வட்டத்திற்குள்ளும் நிறுத்தி வைக்கவும் முடியவில்லை...
ஆனால் மித்ரன் தவறானவன் இல்லை என நம்பினாள்... காரணம் இந்த இரண்டு மாதத்தில் அவன் தவறாகவோ .. விளையாட்டாகவோ .... அல்லது வேறு எந்த வகையிலும் அவளிடம் தவறுதலாக ஒரு வார்த்தையும் பேசவில்லை...
அதனை நேத்ராவின் அப்பாவி மனது ஆராயாமல் அப்படியே ஏற்றுக்கொண்டது....
அவளுடையக் கொள்கை... யாரையும் காதலிக்கவேக் கூடாது அப்படி காதலித்தால் எந்த ஒரு சூழலிலும் அவரைத் தான் கைபிடிக்க வேண்டும் ...

அது மரணத்தில் முடிந்தாலும் சரி... மணவரையில் முடிந்தாலும் சரி....

அதனால் இன்று மித்தரனை முழுதாக மனதிற்குள் அனுமதிக்க முடியாமல் தவித்தாள்...
பெற்றோர்களின் நிலையை நினைத்து வேறு நடுவே உதறல் வந்தது.. ஆனால் காதல் நிறைய கள்ளத் தனங்களை கற்பித்தது...
தன் உடன் பயின்ற உற்ற தோழி திலகவதிக்கு கால் செய்து இந்த இரண்டு மாதமாக நடந்த அனைத்தையும் கூறி அழுதுகொண்டே தீர்வு கேட்டாள்...

அவள் கூரியதைக் கேட்டு அதிர்ந்த திலகவதி நேரே வந்து அவளை அடி பிச்சி வெளுத்திருந்தாள்....
காரணம்..திலகவதி கேட்ட எந்த கேள்விக்கும் நேத்ராவிடம் பதில் இல்லை...
வரிசையாக தெரியலை டி....
தெரியலையே டி...
இல்லை டி... இது தான் அவளது பதில்...
திலகவதிக்கு கோவம் பெருக்கெடுத்து காட்டாற்று வெள்ளமாக நேத்ராவை அடித்து வீழ்த்தியது

அவன பாத்து இருக்கியா டி....???
இல்ல திலகா....
அவன்ட ஃபோன் ல பேசி இருக்கியாடி...???
இல்ல திலகா
அவன் அட்ரஸ் ஆவது தெரியுமா....???
இல்ல திலக
அவன் எங்க... என்ன வேலை பாக்குறான்..???
தெரியலையே டி
அவனும் உன்ன லவ் தான் பன்றானா...????
தெரியலையே திலகா.
அவன அட்லீஸ்ட் போட்டோல யாவது பார்த்து இருக்கியா...????
இல்ல திலகா....
அவன நீ லவ் பன்றியா டி....??????
தெரியலை திலகா .....

இப்போ நேத்ராவ என்ன பன்னலாம்
திலகவதிக்கு வந்த கோவத்திற்கு விட்டாள் ஒரு அறை.....

இது கூட தெரியாம ரெண்டு மாசம் ரெண்டுபேரும் என்ன தான் பேசிக் கிழிச்சாங்கனு நீங்க திட்ர மைண்ட் வாய்ஸ் எனக்கே கேக்க

இந்த நேத்ர இவள......வைச்சு ஊறுகாய் கூட போட முடியாது. போலயே …
தொடரும்…
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி வினோத்குமார் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top