தீத்திரள் ஆரமே -38

Priyamehan

Well-Known Member
அதிகாலை சூரியன் செந்தணால கொதிக்காமல் சிவந்த முகத்துடன் மேகங்களுக்கு இடையில் தலையை நீட்டி எட்டிப் பார்க்க.கதிரவனின் வரவை உணர்ந்து பறவைகள் அனைத்தும் அதன் உற்சாகத்தை குரலில் காட்டி ஒலியெழுப்பிக் கொண்டிருந்தது.

இரவு சக்தி எப்போது சென்றான் என்று கூட தெரியாமல் நிம்மதியாக கண் உறங்கிக் கொண்டிருந்தாள் ஆரா...

ஆராவை எழுப்பிவிடுங்க என்று மண்டபத்தில் ஆள் ஆளுக்கு சத்தம் போட...

விது நீ போய் என்னனு பாரும்மா என்றார் பார்வதி

அதைப் பார்க்க எல்லாம் அவங்க வீட்டுல ஆளுங்க இருக்காம்மா நான் ஒன்னும் அவளோட வேலைக்காரி இல்லை... என்றாள் காட்டமாக....

அத்தை அவளை எதுக்கு தொந்தரவு பண்றீங்க... அந்த பொண்ணு ஆராவுக்கு இன்னிக்கு கல்யாணம் தானே கொஞ்சம் கூட அந்த பதட்டமோ சந்தோசமோ இருந்தா இப்படி கும்பகரணி மாதிரி தூங்குவாளா.... ஏதோ அவ பெட் ரூமில துங்கற மாதிரி அவளுக்கே அக்கறை, இதுல நாங்க போய் பார்க்கணுமாமே என்றாள் கிருத்திகா..

கிருத்திக்காவிற்கு ஆராவின் மீது தனிப்பட்ட கோவம் எதுமில்லை... ஆனால் ஆராவை விட விதுவை அவளுக்கு மிகவும் பிடிக்கும்... கணவனின் தங்கை கல்யாணம் எப்படி எல்லாம் நடத்த வேண்டும் ஒரு அண்ணியாக அவளுக்கும் பல ஆசைகள் இருந்தது.. அதில் எல்லாம் சாய் மண்ணை அள்ளி போட... கோவம் முழுவதும் சாயின் குடும்பத்தின் மீது திரும்பியது.. அதுமட்டுமில்லாமல் விது அங்கிருந்த இந்த இரண்டு நாளில் ஆராவை எப்படி எல்லாம் டார்ச்சர் செய்ய வேண்டும் கிருத்திகாவிற்கு வகுப்பு எடுத்து விட்டுதான் வந்தாள்.

கிருத்திகா அதற்கு காரணம் கேக்க... அவளிடம் மட்டும் சாய் செய்த அனைத்தையும் சொன்னவள் இதுக்கு எல்லாம் காரணம் இவ தான் அண்ணி என்று கிர்த்திகாவின் மனதிலும் வன்மத்தை விதைத்து விட்டு தான் வந்திருந்தாள் விதுர்ணா அந்த சந்தோசத்தில் தான் இன்று ரிசப்ஷன் நோக்கி காத்திருந்தாள்.

அவர்களுக்கு எங்கு தெரியும் ஆரா,சாய் கல்யாணம் செய்துகொண்ட நாளில் இருந்து பல எண்ணங்களை மனதில் போட்டு குழப்பிக் கொண்டவள் இந்த மூன்று நாட்களும் கண்ணில் பொட்டு தூக்கமில்லை என்று..

நேற்று சக்தியின் நெஞ்சில் சாய்ந்து தூங்கியதும் தான் கூடு சேர்ந்து பறவை போல் நிம்மதி அடைந்தவள் விட்ட மூன்று நாள் தூக்கத்தையும் சேர்த்தி தூங்கிக் கொண்டிருந்தாள்.

சக்தி காதுக்கு இது போனா பிரச்சனையாயிடும்னு தான் சொன்னேன்... அவன் ஏற்கனவே கோவத்தில் கொதிச்சிட்டு இருக்கான் என்றார் பார்வதி.

அது அவங்க பண்ண தப்பு என்று விதுவும் கிரீத்தியும் ஒரு சேர சொல்லவும்..

அவர்களை பொருட்படுத்தாமல் அங்கிருந்து சென்றுவிட்டார் பார்வதி.

சம்மந்தி ஆரா எழுந்துட்டாளா

ம்ம் எழுந்து குளிக்கப் போயிருக்கா சம்மந்தி...

சரி நீங்க பாருங்க நான் வெளிய வேலை இருக்குப் போய்ப் பார்க்கறேன் என்று பார்வதி அங்கிருந்து கிளம்பவும் தான் இழுத்து வைத்திருந்த மூச்சை வெளியிட்டார் திலகா...

அவருக்கோ பணக்காரர்களான சக்திக் குடும்பத்தைக் கண்டாளே பயம், அவர்களே விரும்பி வந்து பெண் கேட்கவும் தான் தயங்காமல் சம்மதித்தனர்.

ஆனால் அந்த வீட்டில் இருந்து பெண் இங்க வருவாள் என்று யாரும் எதிரிப்பார்க்கவில்லை.

அந்த விதுர்ணா பொண்ணு வந்து என்ன ஆட்டம் போட போகுதோ தெரியலையே என்று மனதுக்குள் கிலிப் பிறக்கத்தான் செய்தது.

குளித்துவிட்டு வெளியே வந்த ஆரா அறையில் திலகாவைப் பார்த்ததும்

என்னம்மா இங்க இருக்கீங்க...ஏதாவது பிரச்சனையா என்றாள் கவலையாக

.அதுலாம் ஒன்னுமில்ல நீ டிரஸ் பண்ணு நான் பியூட்டிசனை வர சொல்றேன் என்று அங்கிருந்து சென்றார்.

செல்லும் அவரையே தயக்கத்துடன் பார்த்தவள்... அதன்பிறகு நேரமாகிறது என்ற அவசரத்தில் கிளம்ப ஆரம்பித்தாள்.

8 மணிக்கு முகூர்த்தம் என்ற நிலையில் 6 மணிக்கு குளித்து வந்தவளை இரண்டு மணி நேரம் அலங்காரம் செய்தனர்.

சேலை எப்படி கட்டணும் மேடம்

நீங்க கேக்கறது எனக்கு புரியலையே

உங்கம்மா மாத்து மாராப்பு போட்டு கட்ட சொன்னாங்க

அப்போ அப்படியே கட்டுங்க எனக்கு இதல்லாம் பத்தி தெரியாது என்றாள்.

சரி என்றவர்கள் புடவை மடிப்பு எடுத்து முந்தானை முன்பக்கம் வருவது போல் போட புடவையின் முந்தானையில் சக்தி ஆராவின் தோளின் மீது கைப் போட்டவாறு படம் தங்க சரிகைகளில் ஜொலித்தது... முந்தானை முன்னாடிப் போட்டதால் அது அனைவருக்கும் காட்சிப் பொருளாக...

வாவ் சூப்பரா இருக்கு மேடம் உங்க சேரி என்றாள் அந்தப் பெண்..

அப்போதுதான் ஆராவே புடவையில் இருந்த அவர்களது படத்தைக் கவனிக்க... எப்படி இதை இவ்வளவு ஷார்ட் பிரியர்ட்ல ரெடிப் பண்ணிருப்பான் என்று நினைத்தாள்.

உங்க பிளவுஸ்ல இருக்கற ஆரி ஒர்க்ல உங்க ரெண்டுப் பேரோட படத்தை தான் எம்பிராயிடரியா போட்டுருக்காங்க நீங்க கவனிக்கலையா என்று கேட்டனர்.

ஆரா கலவையான உணர்வுகளின் பிடிகளில் இருந்ததால் அதை எல்லாம் கவனிக்கவேயில்லை.

டேய் வீரா நீ கலாரசிகன்டா... ஆனா நீ இந்தளவுக்கு லவ் பண்ற மாதிரி நான் எதுவும் செய்யலையே ... சொல்லப் போனால் நான் உன்னைய பல இடத்துல அவமானம் தானே படுத்திருக்கேன்... என்று நினைத்தவளுக்கு முதன்முறையாக வீராவின் காதலைக் கண்டு வியப்பு உண்டாவதற்கு பதில் சந்தேகம் உண்டானது...

அம்மு கிளம்பிட்டியா என்றவாறே வந்த திலகா ஒப்பனையாளர்களின் கைவண்ணதில் தேவதையை போல் ஜொலித்த தன் மகளைப் பார்த்து அப்படியே நின்றுவிட்டார்.

அம்மா

அப்படியே அந்த ஈஸ்வரனுக்கு ஏத்த பார்வதி மாதிரி அழகா இருக்க அம்மு என்று திருஷ்டி பொட்டு வைத்துவிட்டார்.

சரி ஐயர் கூப்பிடறாங்க சீக்கிரம் வா என்று அழைக்க... அருகில் இருந்த சஷ்டிகா, நீங்க போங்க அத்தை நான் கூட்டிட்டு வரேன் என்றாள்.

சரிம்மா என்று திலகா சென்றுவிட.. வா ஆரா போலாம் என்றாள்.

ம்ம் என்று மட்டும் சொன்னவள் சஷ்டிகாவுடன் சேர்ந்து நடக்க

அப்புறம் என்ன நினைச்ச மாதிரி பெரிய இடமா பார்த்து வளைச்சிப்போட்டு இன்னும் கொஞ்சம் நேரத்துல அவங்க கையாள தாலி வாங்கி தழையதழைய கட்டிக்கப் போற ம்ம் குடுத்து வெச்ச மகராசி தான் ... இனி நீ சம்பளம் குடுக்கற முதலாளி நாங்க கை நீட்டி சம்பளம் வாங்கற கூலி கொஞ்சம் பார்த்து பண்ணும்மா நான் பேசுனதை எல்லாம் மனசுல வெச்சிட்டு அவரோட வேலையில ஏதும் கை வெச்சிடாத அப்புறம் நாங்க நடுதெருவுல தான் நிக்கணும் என்றாள் குத்தலாக.

இவ்வளவு நேரம் கல்யாண கனவில் மிதக்கவில்லை என்றாலும் மனதில் தோன்றிய ஒரு நிம்மதியுடன் தாலிக் கட்டும் தருணத்திற்காக காத்திருந்த ஆராவின் நிம்மதி எல்லாம் யாரோ துணி வைத்து துடைத்தது போல் காணாமல் போனது. நாணம் குடிக்கொள்ள வேண்டிய முகமோ பயத்தை தத்தெடுத்தது.

வீட்டின் சூழ்நிலை தெரிந்த தன் வீட்டுப் பெண்ணே இப்படி பேசினால் ஊரில் உள்ள மற்றவர்கள் தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தைப் பற்றியும் எப்படி எல்லாம் பேசுவார்கள் என்று நினைக்கும் போதே அவமானமாக இருக்க மனதில் தோன்றிய பயத்தை முகத்தில் காட்டாமல் இருக்க மிகவும் சிரமப்பட்டவாரே சக்தியின் அருகில் அமர்ந்தாள்.

ஏற்கனவே ஆராவின் மீது கோவத்தில் இருந்த சக்திக்கு நேற்று அவன் அவளது அறைக்குச் சென்றப் போது சாய் என்று அவள் சொன்ன வார்த்தையும், இப்போது அவள் முகம் காட்டும் பாவனைகளும் சேர்த்து மேலும் கோவத்தை தான் கொடுத்தது.

சக்தி என்ன மனநிலையில் இந்த கல்யாணத்தை செய்துகொள்கிறான் என்று அவனை தவிர எப்படி யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டானோ அதேபோல் ஆராவும் எந்த மனநிலையில் இந்த திருமணத்தை செய்துகொள்கிறாள் என்பதை ஆராயாமல் விட்டுவிட்டான்.

இன்னும் சற்று நேரத்தில் சக்தி ஆரண்யா குழந்தைவேலுவாக இருந்தவள் ஆரண்யா சக்தி வீரஷ்வராக மாறப்போகிறாள் என்று நினைக்கும் போதே கவலை உணர்வு தொண்டையை அடைத்து கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு நின்றனர்.

இவர்கள் கல்யாணம் முடிந்ததும் சாய் விதுர்ணாவின் வரவேற்பு இருந்ததால் விதுர்ணா அழகு பதுமையாக தயாராகி நாத்தனார் முடிச்சி போட வந்திருந்தாள்.

அவளை தூரத்தில் இருந்துப் பார்த்த சாய்க்கு பெருமூச்சு வெளியானது.. இனி வாழ்க்கை எப்படி இருக்கும்... தினம் தினம் சண்டை அழுகை போராட்டம் வெறுப்பு என்று ஒவ்வொரு நாளையும் கழிக்க வேண்டுமோ என்று நினைத்தவனுக்கு ஆயாசமாக இருந்தது.

அவனும் கோர்ட் ஷர்ட் சரிதம் தயாராகிதான் நின்றான்.

சஷ்டிகா சொன்ன வார்த்தைகள் அனைத்தும் வேதம் போல் ஆராவின் காதில் ஒலித்துக் கொண்டே இருக்க... அவள் அருகில் கம்பீரத்தின் உருவமாய் அமந்திருந்த சக்தியை கவனிக்கவில்லை அவள்.

ஐயர் மந்திரங்களை சொல்ல சொல்லும் போதுக் கூட அவளது கவனம் இங்கில்லாமல் இருக்க அதை கண்டுகொண்ட சக்தியோ பற்களைக் கடித்து தன் கோபத்தை கட்டுப்படுத்த..

உங்களை தான் சொல்லறேன் இதை வாங்கி குண்டத்துல போடுங்கோ என்றார் ஐயர்..

ஹா... என்று கனவில் இருந்து தெளிந்தவள் போல் என்ன சொன்னிங்க என்று அவரிடமே கேட்டுவைத்தாள்.

இதை அதுல போடுங்கோ என்றார்...

இவ்வளவு நடந்தும் சக்தி ஆராவிடம் பேசவேல்லை...

கெட்டிமேளம் கெட்டிமேளம் என்று ஐயர் சொல்லவும் சரியாக இருக்க..

மாங்கலியத்தை கையில் ஏந்தியவாறு ஆராவைப் பார்த்தான் சக்தி..மூன்று நாட்களுக்கு பிறகு இன்று தான் தன்னவளைப் பார்க்கிறான்.

மனதில் இருந்த கலவையான உணர்வில் ஆரா தலை நிமிர்ந்துப் பார்க்காமல் குனிந்த வண்ணமாகவே இருக்க... என்ன ரொம்ப நேரமான மாதிரி இருக்கு இன்னுமா கட்டல என்று நிமிர்ந்து பார்க்க அவன் கண்களோடு இவள் கண்கள் கலக்க. உடனே ஆராவின் கண் கலங்கவும் மீண்டும் தலைக் குனிந்துக் கொண்டாள்.

என்ன நினைத்தானோ இனி நீ நினைச்சாலும் என்கிட்ட இருந்து தப்பிக்க முடியாது என்று அவளது காதில் சொன்னவன் ரோஜா மாலையில் இடையையே இருந்த ஆராவின் சங்கு கழுத்தை வருடியவாரே தாலியைக் கட்டினான் சக்தி..

முதல் பாகம் முடிவுற்றது...

இரண்டாம் பாகம் விரைவில் தொடரும்...2ம் பாகம் டீசர்.

வீரா.....

ம்ம்ம்

அவன் சொன்னது உண்மையா

எவன் என்ன சொன்னான்னு சொல்லாம மொட்டையா அவன் சொன்னது உண்மையானு கேட்டா நான் என்ன சொல்றது. என்று தன் டையை தளர்த்திக் கொண்டே கேட்டான்.

ஆரா சொன்னத அந்த அவன் எவன் என்றும் அவன் சொன்ன வார்த்தைகள் என்னவென்றும் சொல்லியவள் சக்தியின் பதிலுக்காக அவன் விழிகளைப் பார்த்தவாறு காத்திருந்தாள்.

அவள் மனமோ இல்லைனு சொல்லு வீரா... நான் உன்மேல உயிரையே வெச்சிருக்கேன் நீ மட்டும் ஆமான்னு சொன்னா அடுத்த நொடி என்னவாவேன்னு எனக்கே தெரியல என்று பயத்துடனும் கலக்கத்துடனும் அவனைப் பார்க்க

நீ என்ன நினைக்கற என்று அவளிடமே எதிர்கேள்விக் கேட்டான்

நான் என்ன நினைச்சா என்ன அவன் சொன்னது உண்மையா பொய்யா அதை மட்டும் சொல்லு...

உண்மையா இருந்தா

இது என்ன கேள்வி அப்போ உ..ண்..மை..யா என்று திக்கி திணறி கேக்க...

ஆமா என்றான்.....

அடுத்து நொடி அதிர்ச்சியில் அந்த இடத்திலையே மயங்கி விழுந்தாள் ஆரா.

எது உண்மையாக இருக்கக் கூடாது என்று வேண்டிக்கொண்டிருந்தாளோ அதுவே இப்போது உண்மை என்றதும் அவளால் அந்த அதிர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியலவில்லை.

ஆராவை தூக்கி படுக்கையில் போட்டவன் அவளை எழுப்ப எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

தன் உடையை மாற்றிக் கொண்டு கீழேச் சென்றவனுக்கு நெற்றியில் சிந்தனைக் கோடுகள் மட்டும் இருந்தது..

என்ன சக்தி தனியா வர ஆரா எங்க என்றார் பார்வதி...

கணவனுக்கான ஒவ்வொரு விசயத்தையும் அவளே செய்ய வேண்டும் என்று நினைப்பவள் ஆரா என்று பார்வதிக்கு தெரியும் அதை சக்தி விரும்பவில்லை என்றாலும் அதைப் பற்றி கவலைக் கொள்ளாமல் அவனுக்காக பார்த்து பார்த்து செய்வாள்.

அவளுக்கு தலைவலியா படுத்துருக்கா என்று மட்டும் சொன்னவன் அம்மா இன்னிகாவது ஒரு நல்ல காபி குடிக்கறேன் நீங்க போட்டு எடுத்து வாங்க என்றான்.

பார்வதியும் காபியைக் குடுக்க குடித்துக் கொண்டிருந்தவன் மாடி படியில் யாரோ வரும் அரவம் கேட்டும் தலை நிமிர்ந்துப் பார்த்தான்.

ஆராதான் பொட்டியுடன் கீழறங்கி வந்துக் கொண்டிருந்தாள்.

என்ன ஆரா இது பொட்டி எல்லாம் எடுத்துட்டு வந்துருக்க...

அத்தை நான் கொஞ்சநாள் அம்மா வீட்டுல போய் இருக்கட்டுமா என்றாள் கெஞ்சலுடன்..

அவள் முன் சொடக்கிட்ட சக்தி... இதை அங்க கேக்கக் கூடாது இங்க கேக்கணும் என்றான்.

ஆரா சக்தியைப் பார்க்கப் பிடிக்காமல் பார்வதியேப் பார்க்க..

அவரோ அவனைப் பத்தி தெரியாம இந்த பொண்ணும் பிடிவாதமா இருக்கே என்று நினைத்தவர்...

எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றுவிட்டார் இருந்தால் சக்தியின் கோவத்துக்கு ஆளாக வேண்டியிருக்குமே என்று...

உன்கிட்ட தான் கேட்டாதா நினைவு..

நான் அம்மாவீட்டுக்கு போறேன்

போறானா புரியலையே அப்போ திரும்பி வர மாட்டனு சொல்லவரியா

அவன் அமைதியாக இருக்கவும்..

ஓகே கேரியான்... பட் ஒன் திங்க் போனா நீயாதான் வரணும் நானா வந்து கூட்டிட்டு வருவேன்னு கனவுக் காணக்கூடாது அதுக்கு வாய்ப்பேல்ல என்றான்.

.ம்ம்

அப்போ கார் அனுப்பவா

வேண்டாம் சாயை வர சொல்லிருக்கேன் என்றாள்.

ம்ம் என்றவனது முகம் இறுகிப் போயிருந்தது..
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , mallikamaniv[email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top