தீத்திரள் ஆரமே -37

Advertisement

Priyamehan

Well-Known Member
அடுத்துநாள் அதிகாலை கல்யாணம் என்னும் போது இன்று மாலை பெண் அழைப்பு வைக்கப்பட்டது.

அழகுநிலைய பெண்களின் கைவண்ணத்தில் தேவதையாக ஜொலித்தாள் ஆரா...

இளம் ரோஜா வண்ணப் புடவை முழுவதும் வெள்ளிச் சரிகையால் நெய்யப்பட்டிருந்தது.அதே நிறத்தில் ஆரி வேலைப்பாடுகளுடன் ரவிக்கையும் அணிந்திருந்தவளைப் பார்த்து

மேடம் புடவை ரொம்ப காஸ்டலியா இருக்கும் போல என்றாள் ஆராவிற்கு ஒப்பனை செய்ய வந்த பெண்

தெரியல அக்கா அவங்க வீட்டுல வாங்கிக் கொடுத்தாங்க என்றவள் எவ்வளவு இருக்கும்னு நினைக்கறீங்க என்று போட்டு வாங்கினாள்.

எப்படியும் 50 ஆயிரத்துக்கு மேல தான் இருக்கும் மேடம் என்று சொன்னவளை விழியகலப் பார்த்தாள் ஆரா.

புடவைக்கு ஏற்ற நகைகளையும் பார்வதி அனுப்பி வைத்திருந்தார் அதை தான் அணிவித்திருந்தனர்..

ரொம்ப அழகா இருக்கீங்க மேடம் என்றாள்.

நீங்களும் நல்லா மேக்கப் பண்றீங்க... யார் உங்களைய பேசுனாங்க...

பார்வதி மேடமும் கிரீத்தி மேடமும் என்றதும்

நாளைக்கு காலையிலையும் நீங்க தானே விதுக்கும் மேக்கப் போடுவிங்க

இல்ல மேடம் உங்களுக்கு மட்டும் தான் நாங்க...

அப்போ அவளுக்கு

அவங்களுக்கு எங்களோட சீப் மேம் வருவாங்க அவங்க சினிமா ஆர்ட்டிஸ்க்கு எல்லாம் மேக்கப் போடறவிங்க என்றாள்.

அதைக் கேட்டதும் ஆராவின் முகத்தில் பொறாமைக்குப் பதில் சந்தோசம் வந்தது.

விதுவை அங்க யாரும் தப்பா நினைக்கல... அவளுக்கு செய்யறதை சிறப்பா செய்யணும்னு ஆசைப்படுவாங்க போல... இதுபோதும்.. எங்க அவளைப் தப்பா நினைச்சி மனசு கஷ்டப் படர மாதிரி பேசிடுவாங்களோன்னு பயந்துட்டேன் என்று நினைத்தாள்.

ஆரா முடிஞ்சிதா போலாமா என்று வந்து நின்ற சஷ்டிகா ஆராவின் ஒப்பனையில் வயிறு எரிய ஆரம்பித்தாள்..

ஆராவின் முகத்தில் இருந்த சந்தோசம் வேறு எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போல் இருக்க... இது சரியில்லையே ஏதாவது சொல்லணுமே என்று யோசித்து வாயெடுக்கும் போது

கிளம்பலாமா அம்மு என்று வந்தான் சசி..

ஹா ரெடி அண்ணா போலாம்...

என் கண்ணே பட்டும் போல இருக்கு அம்மு என்றவனிடம் நீங்களும் அண்ணியும் சேர்ந்து நில்லுங்க ஆசிர்வாதம் வாங்கிக்கறேன் என்றாள்.

அம்மா அப்பாகிட்ட முதல வாங்குடா...

யார்கிட்டா வாங்குனா என்ன அண்ணா எனக்கு அவங்களும் நீங்களும் வேற வேற இல்லையே என்றாள்

அதான் அம்மு சொல்லுதுல வா சஷ்டி

ம்ம் வரேன்ங்க என்றவள் ஆரா காலில் விழுந்ததும் என்ன சொல்லி ஆசிர்வாதம் செய்தாள் என்பது அவள் மட்டுமே அறிந்தது.. எப்படியும் நல்லதை சொல்லிருக்க வாய்ப்பில்லை என்பது மட்டும் உறுதி.

அதன்பின் ஆராவை அழைத்துக் கொண்டு இருவரும் கீழே செல்ல... திலகா பெண்ணைப் பார்த்ததும் ஆனந்த கண்ணீர் வடித்தார்...

தங்க சிலை போல் பதுமையாக நின்றவளை.... அணைத்து அழுக... ஆராவும் அழ ஆரம்பித்து விட்டாள்..

திலகா இப்போ எதுக்கு அழற...நீ அழறன்னு பொண்ணும் அழுதுப் பாரு என்று உறவினர் ஒருவர் அதட்டவும் இருவரும் கண்களை துடைத்துக் கொண்டனர்.

வேலு திலகா இருவரிடமும் ஆசீர்வாதம் வாங்கியவள்... அங்கு நின்ற பரணியைப் பார்த்தாள்.

என்னடாம்மா

அண்ணா சாய் எங்க

அவன் வெளிய இருப்பான்ம்மா

வர சொல்லுங்க ப்ளீஸ் என்று கெஞ்சவும் சசி சென்று சாயை அழைத்து வந்தான்.

சாய் நீயும் பரணி அண்ணாவும் சேர்ந்து நில்லுங்க

எதுக்கு...

என்னைய ஆசிர்வாதம் பண்ண வேண்டாமா

உன்னைய ஆசிர்வாதம் பண்ற அளவுக்கு எனக்கு வயசாகில்லம்மா என்றான் விளையாட்டாக...

ஆசிர்வாதம் செய்ய வயசில்ல ஆனா கல்யாணம் பண்ண வயசாகிடுச்சி என்று ஒரு குரல் கேட்கவும் எதும் பேசாமல் ஆரா சொன்னதை செய்தான்

ஒருவழியாக அனைவரும் மண்டபத்திற்கு கிளம்பினர்.

மண்டபத்தை நெருங்கும் ஒவ்வொரு நொடியும் ஆராவின் இதயத்தில் யாரோ மத்தளம் வாசிக்க ஆரம்பித்தனர்.

வீரா எப்படி இருப்பான் என்னையப் பார்த்ததும் எப்படி ரியாக்ட் பண்ணுவான், என்னோட கையைப் பிடிப்பானோ என்று பல கேள்விகளை தனக்குள்ளையே கேட்டுக் கொண்டாள்.

இந்த கல்யாணம் என்னோட வாழ்க்கை சீராக்குமா இல்ல சீரழிக்குமானு தெரியல. கணேசா உன்னைய நம்பி தான் அவன்கிட்ட என்னோட வாழ்க்கையை ஒப்படைக்கறேன் நீதான் பார்த்துக்கணும் என்று மனதார வேண்டிக்கொண்டாள்.

சக்தியின் வீட்டில் இருந்து ஆராவைப் பார்க்கவோ ஆராவிடம் பேசவோ ஒருவரும் வரவில்லை... கல்யாண பொருட்களை வாங்க மட்டும் பார்வதி ஒரு முறை வந்தவர் ஆராவிடம் முகம் கொடுத்துக் கூட பேசாமல் சென்றுவிட்டார்.

அதை அனைத்தையும் நினைத்துப் பார்த்தவளுக்கு சுகமாக வாழ்க்கை அமைவது கானல் நீர் தான் என்று எதற்கும் தயாராக இருக்க மனதை திடப்படுத்திக்கொண்டாள்.

மண்டபத்தினுள் நுழைந்ததும் ஆராவின் கண்கள் தன்னவனை தான் தேடியது..அவளின் தேடலை உணர்ந்துக் கொண்டானோ என்னவோ எங்கிருந்தோ வந்தான்.

வெள்ளை சட்டை கருநீல கோர்ட் அதே நிறத்தில் டை என்று கம்பிரமாக வந்தவனை கண்ணில் நிரப்பிக் கொண்டாள் ஆரா... ஆனால் அவனோ ஆரா இருந்தப் பக்கம் கூட திரும்பிப் பார்க்க வில்லை.

அன்று இரவு நடக்க வேண்டிய நலுங்குகள் அனைத்திலும் சிரித்த முகமாகவே கலந்துகொண்டாள்.

அவளை விட்டு சக்தி கொஞ்சம் தள்ளிப் போனாலும் அவளது கண்கள் தானாகவே சக்தியை தேடும்....

அவனோ இவள் இருக்கும் பக்கமே திரும்பாமல் யாருடனோ தீவிரமாக பேசிக் கொண்டிருப்பான்.

இவர்களின் கண்ணாமூச்சி ஆட்டம் விடியும் வரைக்கும் நீண்டுக் கொண்டே இருந்தது.

வீட்டில் இருப்பவர்கள் யாரும் சாயுடன் பேசவதால் அவளிடம் சரியாக பேசாமல் இருந்தது, சஷ்டிகாவின் குத்தல் பேச்சிகள், அவளது அண்ணனின் ஜொள்ளு, சக்தி வீட்டின் பாராமுகம் என்று எல்லாம் ஒன்று சேர்ந்து ஆராவை சோர்வடைய செய்தது.

இது எல்லாம் இருந்தால் கூட சக்தியின் ஆறுதல் வார்த்தைகள் இருந்தால் பட்ட மரம் துளிர் விட்டது போல் சந்தோசமாக இருக்கும், ஆனால் சக்தியின் விலகல் தான் இவை அனைத்தையும் விட அதிகம் ஆராவைப் பாதித்திருந்தது.

சடங்குகள் நடக்கும் போதும் சக்தி இவள் இருந்த பக்கமே பார்க்கவில்லை அவனும் பார்ப்பான் பார்ப்பான் என்று எதிர்பார்த்து ஏமாந்து போனது தான் மிச்சம்.

இப்போ எதுக்கு நீ அவன் பக்கம் திரும்பர... அவன் பெரிய பேரழகன் அவனை விட்டா ஆளே இல்லாத மாதிரி சீன் போடாம அடங்கி உக்காரு என்று மனதை அதட்டவும்..

எனக்கு அவனைப் பார்க்கணும் போல இருக்கே என்று ஜொல்லியது மனது.

ஏய் என்ன புதுசு புதுசா ரீல் விடற... அவன் ஒரு கொலைக்காரன். அவன் ஒரு சைக்கோ உனக்கு தெரியும் தானே நம்ப வீட்டு மொத்த பிரச்சனைக்கும் அவன்தான் காரணம், இவ்வளவு இருக்கும் போது பெரிசா பார்க்கணுமாமே பார்க்கணும்.. கண்ணை நோண்டி காக்காவுக்கு போட்டுருவேன்னு ஒழுங்கா அடங்கி இரு என்று முயன்று சக்தி செய்த தவறுகளை கண் முன் நிறுத்தி அவனை தவிர்க்க முயன்று அதில் வெற்றியும் கண்டுவிட்டாள் ஆரா.

குற்றங்களை முன் நிறுத்தினால் அவன் மீது கொண்ட காதல் பின்னால் சென்றுவிடும் என்று ஆரா நினைத்தாள்...

அதன்பின் சக்தி இருக்கும் பக்கமே திரும்பி பார்க்கவில்லை அப்படி பார்க்க தோன்றும் போது எல்லாம் சக்தி ஒரு கொலைக்காரன் என்பதை மட்டும் ஜெபம் போல் மனதுக்குள் சொல்லிக்கொண்டே இருந்தாள்.

சடங்கு முடிந்து தன்னுடைய அறைக்குச் சென்ற ஆராவிற்கு மனம் ஏதோப் போல இருக்க... சாயின் எண்ணிற்கு அழைத்தாள்.

ஆராவின் அழைப்பைப் பார்த்ததும் சுற்றி யார் இருக்கிறார்கள் என்று பார்க்காமல் அட்டன் செய்து பேசினான்.

சொல்லு அம்மு

சாய் நீ என்னோட ரூமுக்கு வரியா..

ஏன் என்னாச்சி

ஒன்னும் ஆகல ஆனா என்னால இங்க தனியா இருக்க முடியல ஒருமாதிரி இருக்கு அம்மாவும் வேலை வேலைனு வெளிய சுத்திட்டு இருக்காங்க அவங்களை கூப்பிட முடியாது

அதான் அவ இருக்காள அவளை வர சொல்லு

எவ

அதான் விது இருக்காள

அவளே ஏற்கனவே என்மேல் கோவத்துல இருக்கா, என்னால தான் அவ கல்யாணம் இப்படி நடந்துருச்சினு இதுல அவகிட்ட போய் என்ன பேசட்டும்

அப்போ சசி அண்ணா வைப் இருக்காங்கள அவங்களை வர சொல்லட்டுமா

ஏன் உன்னால வர முடியாதா முடியாதுனா சொல்லிடு அதை விட்டுட்டு எதுக்கு சும்மா அவங்களை கூப்பிடு இவங்களை கூப்பிடுன்னு இம்சை பண்ற என்றாள் எரிச்சலாக.

உன்னோட கஷ்டம் எனக்கு புரியுது அம்மு ஆனா ஏற்கனவே என்மேல எல்லோரும் கோவத்துல இருக்காங்க இப்போ நான் வேலை செய்யாம அங்க வந்து உக்கார்ந்துருந்தா இன்னும் அதிகமா தான் கோவப்படுவாங்கடா ப்ளீஸ் அம்மு புரிஞ்சிக்கோ

சரி நீ வேலையைப் பாரு என்றவள் சோகமாக போனை வைக்கவும்

இங்கு பரணியோ என்னடா என்றான்.

அம்மு எதுக்கோ ரூமுக்கு கூப்பிடரா ஆனா இப்போ வீட்டுக்கு போய் சாமி பொருள் ஏதோ எடுத்துட்டு வர அம்மா சொன்னாங்கல

சரி வந்துட்டு போய் அம்முவைப் பாரு என்ற பரணி சாயை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றான்.

சாய் இந்தப் பக்கம் போனதும் மண்டபத்தில் கரண்ட் போய்விட்டது...

ச்ச இந்த கரண்ட் வேற நேரம் கெட்ட நேரத்துல போகுது என்று ஆரா சொல்லிக் கொண்டிருக்க அவளின் அறைக்குள் யாரோ நுழையும் அரவம் கேட்டது..

யாரு ..

........

யாருனு கேக்கறேன்ல.. என்று காற்றில் கையை துளாவ அவள் முன்னால் இருந்த உருவம் உறும்பியது..

போனில் இருந்த டார்ச்சை ஆன் செய்யப் போனவள் போன் நழுவி கீழே விழுந்தது..

அந்த உறும்பலில் சாய் என்று நினைத்தவள்...சாய் நீதானே வரலைனு சொன்னியே என்றவள் அவனை தோளோடு அணைத்துவாறு தலை சாய்ந்தாள்.

அவளுக்கு தன் அண்ணனின் தோளிற்கும் மாற்றான் தோளிற்கும் வித்தியாசம் தெரியும். இது சாய் இல்லையே என்று நினைத்தவள் சாய்ந்திருந்த தோளில் இருந்து எழுந்து அந்த இருளிலும் நின்றவனை ஆராய்ச்சி செய்தாள்.

அவன் மீது வீசிய வாசனை திரவியமே நான் யார் என்று ஆராவிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.

தன்னவனின் வாசனையை அறியாதவாளா ஆரா.... கூடிக் கழித்தால் தான் உரியவனின் வாசனையை அறிய முடியும் என்பது அல்ல...உரியவனுடன் ஒரு நிமிடம் நின்றால் கூடப் போதும்.

ஓ நீதானா வெளிய முகத்தையேப் பார்க்காம சீன் போட்டில வாடி வா இப்போ இது என்னோட ட்ரேன் என்று நினைத்து மனதிற்குள் சிரித்துக் கொண்டவள்.

சாய் எனக்கு மனசே சரில்லடா... ஒருமாதிரி இருக்கு நான் இப்டியே படுத்துக்கிடடும்மா..

ம்ம்

அப்போ பெட்டுக்கு இப்டியே எவ்வளவு நேரம் நிற்க முடியும் என்றவள் அவனை அழைத்துக் கொண்டு படுக்கைக்குச் சென்று உக்கார்ந்தவள் அவனை அணைத்தவாறே

சாய் என்றாள்

ம்ம்

நாளைக்கு நான் இங்க இருந்து போய்டுவேன்ல

ம்ம்

உனக்கு கவலையா இல்லையா

ம்ம்

என்னடா எதுக்கு எடுத்தாலும் ம்ம் சொல்லிட்டு இருக்க என்ன வாய் சுளுக்கிடுச்சா

ம்ம்

ஆமாவா என்றவள் இன்னிக்கு உனக்கு ஏதோ ஆயிடுச்சி என்று மீண்டும் அவனை இறுக்கி அணைத்தவள் அப்படியே உறங்கியும் போனாள்.

ஏதோ ஆராவிடம் சொல்ல வந்த சக்தி அவள் சாயை தேடவும்... கோவம் கொண்டவன் அப்படியே நின்று விட்டான்.

அதன்பின் அவள் அணைக்கும் போது விலக்க தோன்றாமல் அப்படியே இருந்தவள் அவள் கேட்ட கேள்வி அனைத்திற்கும் ம்ம் என்று மட்டும் கூறினான்.

போன கரண்ட்டும் வந்துவிட ஆராவைப் படுக்க வைத்துவிட்டு போர்வையை கழுத்து வரை போர்த்தி விட்டவன் ஐந்து நிமிடம் அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான். பின்பு என்ன நினைத்தானோ அங்கிருந்து கிளம்பி சென்று விட்டான்.
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top