தீத்திரள் ஆரமே -33

Advertisement

Priyamehan

Well-Known Member
ஆராவின் சத்தம் கேட்டு அவளது அறையை நோக்கி ஓடி வந்த சாய் கதவை திறந்து "அம்மு என்னாச்சி?" என்றவன் அருகில் சென்று அவளை உலுக்கினான்.

"சாய்"

"என்னடி கத்திட்டு இருக்க?"

"ஹா" என்று முழித்தவளை "ஏதாவது கெட்ட கனவு கண்டியா?" என்றான்.

அப்போது தான் அவள் கண்டது கனவு என்பதை உணர்ந்தவள், "ச்சை இது கனவா ஐயோ காலையில குடுத்த முத்தம் இப்படி இம்சை பண்ணிடுச்சே" என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

"அவர் எங்க சாய்?"

"யாரு சக்தியா? சோபால தூங்குறார் ஏன் என்னாச்சி, இங்க வந்தாரா?"என்றான்.

"இல்ல இல்ல ஒன்னுமில்ல" என்று அவசரமாக மறுத்தவள், "நான் தூங்கறேன்" என்றாள்.

"சும்மா கனவு கண்டு அடுத்தவன் உயிரை வாங்காத அம்மு, கம்முனு தூங்கு இது நம்ப வீடு நம்பளை மீறி யாரும் இங்க வர முடியாது" என்றான்.

"சாரி சாய்" என்றவள் தூங்க போய்விட கதவை இழுத்து மூடியவன் ....

இதற்கு மேல் தூங்கினால் தன்னுடைய திட்டதை நிறைவேற்ற முடியாது என்று அவன் வேலையைப் பார்க்க சென்றுவிட்டான்.

விடியற்காலையில் ஆரா ஆசையாக கேட்ட நாய் வேறு கத்திக் கொண்டே இருக்க
அந்த சத்ததில் எழுந்த சக்தி முகிலனுக்கு போன் செய்து உடையை எடுத்து வர சொல்ல அவன் வந்துக் கொண்டிருப்பதாக சொன்னான்.

அதற்குள் ஒரு ஒருவராக எழுந்து கிளம்பிக் கொண்டிருக்கவும், உடை வருவதற்குள் ஆரா என்ன செய்கிறாள் என்று பார்க்கலாம் என அவளது அறைக்குச் சென்றான்.

ஆரா கும்பகரணிப் போல் தூங்கிக் கொண்டிருக்கவும் அவளது இதழ் சுவையை சுவைக்க நினைத்தவன், இது அதற்கான நேரம் இல்லை என்று நெற்றில் மட்டும் இதழ் பதித்தான்.

"போ வீரா, எப்போ பாரு உனக்கு முத்தம் குடுக்கறதே வேலையா போய்ச்சு" என்றாள் தூக்க கலக்கதில்

அதைக் கேட்ட சக்திக்கு தன் மேல் பனிமழை பொழிவது போல் குளுகுளுவென்று சந்தோசமாக இருந்தது.

அதே குளிர்ச்சியுடன் சென்று கல்யாணத்திற்கு கிளம்பியவன் பரணி வரவும் அவனுடன் மண்டபத்திற்கு சென்றுவிட்டான்.

முகிலனுடன் அன்பரசன், பார்வதி, விதுர்ணா மூவரும் கிளம்பி மண்டபத்திற்கு சென்றனர்.

ஆரா எலுமிச்சை மஞ்சள் நிறத்தில் புடவையும் ரோஜா வண்ண ஜாக்கெட்டும் அணிந்து அதற்கு தகுந்த அணிகலனையும் அணைந்து அழகு தேவதைப் போல் கிளம்பி வந்தவளை அழைத்து செல்ல சாய் அங்கு இல்லை.

சாய்க்கு அழைத்தவள் அவன் போனை எடுக்கவில்லை என்றதும் பரணிக்கு அழைக்க "சாய் இங்க இல்ல அம்மு, எனக்கும் இங்க வேலை இருக்கு நான் வேணா மாப்பிள்ளை அனுப்பி வைக்கவா"என்று கேட்டான்.

"இல்ல வேண்டாம் அண்ணா நான் சாய்க்கே மறுபடியும் போன் பண்றேன்" என்றாள்.

"இல்ல அம்மு அவன் இங்க இல்லை.அவன் வந்து உன்னைய கூட்டிட்டு வரதுக்குள்ள லேட் ஆகிடும் மாப்பிள்ளை வருவார் வந்துடு" என்று கொஞ்சம் கடுமையாக சொல்லவும்

"சரிண்ணா" என்றாள்.

அடுத்த ஐந்து நிமிடத்தில் சக்தி வந்து நிற்க வீட்டை பூட்டி விட்டு வாசலில் அவனுக்காக காத்திருந்த ஆரா உடனே காரின் பின்னால் ஏறப் போனாள்.

சக்தி தீப் பார்வை பார்க்கவும்

அவனுடன் சண்டை போடும் மூடில் ஆரா இல்லை என்பதால் எதுவும் பேசாமல் அமைதியாக காரின் முன்னால் ஏறி அமர

"உனக்கு இந்த புடவை ரொம்ப அழகா இருக்குடி" என்றான் சக்தி காதலாக.

அதற்கு ஒரு நன்றியை கூட சொல்லாத ஆரா ஜன்னல் பக்கம் திரும்பி உக்கார்ந்து கொண்டாள்

அதைப் பார்த்துவிட்டு தோளை குலுக்கியபடியே காரை எடுத்தான் சக்தி.

மண்டபத்திற்கு சென்றதும் வேலைகள் அனைவரையும் இழுத்துக் கொள்ள, அவரவர் வேலையில் தீவிரமாக இருந்ததால் சாய் பற்றி யாரும் கவலைக் கொள்ளவில்லை.

மண்டபம் வரை வந்த விதுர்ணாவும் இப்போது மண்டபத்தில் இல்லை என்பதை யாரும் கவனிக்கவும் இல்லை.

காலை 6 மணியளவில் சசி சஷ்டிகாவின் கழுத்தில் தாலிக் கட்டினான்.

அதற்குள் ஆயிரம் முறையாவது சாயின் எண்ணிற்கு அழைய்திருப்பாள் ஆரா... அதுவோ அணைத்து வைக்கப் பட்டிருக்கிறது என்று தொடர்ந்து கதறிக் கொண்டிருந்தது.

பரணியிடம் "அண்ணா சாய் எங்க?" என்றாள் ஆரா

தெரியல அம்மு நானும் அவனை தான் தேடிட்டு இருக்கேன் என்றான்.

மூகூர்த்ததிற்கு முக்கியமானவர்களை மட்டுமே அழைத்திருந்தனர். மதியம் 11மணி முதல் 3மணி வரை ரிசப்ஷன் வைத்திருக்க அதற்கு தான் அனைவரையும் அழைத்திருந்தனர்.

கல்யாணம் முடிந்து எல்லோரும் சோர்ந்து போய் உக்கார்ந்த போதுதான் மண்டபத்தில் சாயும் விதுவும் இல்லை என்று உணர்ந்து ஒவ்வொருவராக தேட ஆரம்பித்தனர்.

ஆரா சாய்க்கு விடாமல் போனில் அழைத்துக் கொண்டே இருக்க, அடுத்த அரைமணி நேரத்தில் சாய்தரனும் விதுர்ணாவும் மாலையும் கழுத்துமாக வந்து நின்றனர்.

இருவரையும் பார்த்ததும் அனைவரும் அதிர்ச்சயில் சிலைப் போல் நிற்க, பார்வதி அதிர்ச்சியில் மயங்கி விழுந்துவிட்டார். திலகாவோ கதறி அழுதார் பாவி இப்படி பண்ணிட்டானே என்று...

"எவ்வளவு தைரியம் இருந்தா என்னோட தங்கச்சியை ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டு வந்துருப்ப" என்று சக்தி கர்ஜித்தவன்,

கோவத்தில் சாயின் சட்டையை பிடித்து கன்னதில் மாறி மாறி அறைந்துவிட்டான்.

ஏதோ சாயின் மீது மட்டும் தான் தப்பு என்பது போல் சக்தி அடித்ததை தாங்க முடியாமல் ஓடி சென்று சக்தியைத் தடுத்த ஆரா, கோவத்தில் என்ன பேசுகிறோம் என்று யோசிக்காமல் பேசினாள்.

" என்னோட அண்ணாவை அடிக்க உனக்கு என்ன ரைட்ஸ் இருக்கு, என்னோட சாய் மட்டுமா தப்பு பண்ணிருக்கான் இதோ உன்னோட தங்கச்சியும் தானே தாலி கட்டிட்டு வந்துருக்கா அவளை கேக்க துப்பு இல்லை பெருசா அடிக்க வந்துட்டான்" என்று சக்தியிடன் எகிறினாள் ஆரா.

ஏற்கனவே கோவத்தின் உச்சில் இருந்த சக்திக்கு ஆராவின் வார்த்தைகள் அனைவரின் முன் அனலாக தாக்கவும் சாயை விட்டவன் ஆராவின் கன்னதில் ஓங்கி ஒரு அறை விட்டான்.

அந்த அடியில் தூரப் போய் விழுந்தவள் கன்னதில் கை வைத்து அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போய் உக்கார்ந்து விட்டாள்.

இதே வார்த்தைகளை தான் அன்று சாயை அடிக்கும் போதும், பணம் கேட்டு சக்தி வீட்டிற்கு செல்லும் போதும் பேசினாள். அன்றெல்லாம் அமைதியாக இருந்தவன் இன்றும் இருந்துவிடுவான் என்று எண்ணி தான் பேசினாள்,அவளது கெட்டநேரமோ என்னவோ சக்தியின் கோவம் எரிதனலாக எரிந்துக் கொண்டிருந்தது தெரியவில்லை ஆராவிற்கு.

"ஏய்" என்று அவள் முன் விரல் நீட்டி எச்சரித்தவன்... "ஜாக்கிரதை இவ்வளவு நாள் நீ பேசுனதுக்கு எல்லாம் அமைதியா போனேனேனு இப்போவும் அமைதியா போவேன்னு நினைக்காத... பயங்கர கோவத்துல இருக்கேன் கொலைப் பண்ண கூட தயங்க மாட்டேன்" என்று மிரட்டியவன் சாயைப் பார்த்து

"எவ்வளவு தைரியம் இருந்தா என் தங்கச்சி வாழ்க்கையில விளையாடிருப்ப உன்னைய சும்மா விடமாட்டேன்டா" என்று மீண்டும் அடிக்க போனவனை முகிலன் அன்பரசன் இருவரும் இழுத்துப் பிடித்து நிறுத்தினர்.

"இரு சக்தி, நம்ப பொண்ணும் தான் தப்பு பண்ணிருக்கு,என்ன நடந்துச்சின்னு கேக்கலாம்"

"இனி கேட்டு என்னப்பா பண்ண போறீங்க... என்னோட தங்கச்சியை இவன் ஏம்மாத்தி கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டான், அவ சின்ன பொண்ணு,இவன் தான் எதாவது பண்ணிருப்பான்" என்றான் சக்தி கோவமாக.

"நீ கொஞ்சம் அமைதியா இரு சக்தி" என்ற முகிலன்

"என்ன விது இதுலாம்?, எங்க கூட தான் இவ்வளவு நேரம் இருந்த, இது எப்போ நடந்துச்சி, உனக்கும் இதுல விருப்பம்னா எங்ககிட்ட சொல்லிருக்கலாமே சக்தி சொன்னப்ப நாங்க சரினு சொன்ன மாதிரி உனக்கும் சொல்லிருப்போம்ல" என்றான் பொறுமையாக.

சக்திக்கு இந்தளவுக்கு எல்லாம் பொறுமையில்லை.. விட்டால் இப்போதே தாலியை கழட்டி சாயின் முகத்தில் எரிந்துவிட்டு விதுர்ணாவை அழைத்துக் கொண்டு சென்றுவிடுவான்.

"அண்ணா நானும் இவரும் முன்னாடியே லவ் பண்ணோம் சில பிரச்சனையால உங்கிட்ட சொல்ல முடியல.சொன்னா நீங்க ஒத்துக்க மாட்டிங்கனு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்" என்றாள் விது, அவள் முகத்தில் பயத்தையும் தாண்டி விரக்தியும் யாரோனோ பழிவாங்க வேண்டும் என்ற உணர்வும் தான் இருந்தது. கல்யாணம் ஆனதிற்கான எந்த சந்தோசமும் இல்லை, சாயை அடித்ததற்கான எந்த வருத்தமும் இல்லை இதை அனைவருமே கவனிக்க, சாய் தான் ஏதோ சொல்லி மிரட்டி கல்யாணம் பண்ணிட்டானோ என்ற எண்ணம் அங்கிருந்த அனைவருக்குமே எழுந்தது.

ஆள் ஆளுக்கு ஒவ்வொன்றும் பேசி பிரச்சனையை எங்கோ இழுத்துச் சென்றனர்.

"இந்த ஒரு கல்யாணத்துல நாங்க பட்ட அவமானமே போதும், இன்னொரு கல்யாணம் எங்களுக்கு வேண்டாம்" என்று கத்த வேண்டும் போல் இருந்தது பார்வதிக்கு

"எல்லோரும் எங்களைய மன்னிச்சுடுங்க எங்க பையன் இப்படி ஒரு காரியம் பண்ணுவான்னு நான் நினைக்கல நீங்க காலுல விழ சொன்னாக் கூட விழறேன்" என்று தலைக் குனிந்தவாறு கூறினார் வேலு..

"அதுலாம் வேண்டாம் வேலு, என்ன இவங்க நம்பகிட்ட சொல்லிருந்தா இப்படி நடக்காம நம்பளே கல்யாணம் பண்ணி வெச்சிருப்போம் இப்போ எல்லோருக்கும் முன்னாடி இரண்டு குடும்பத்துக்கும் அவமானமா போய்டுச்சி" என்றார் அன்பரசன்.

நடப்பதை சசி மௌனமாக பார்க்க சஷ்டிகாவிற்கோ உள்ளுக்குள் சந்தோசமாக இருந்தது.. நான் வந்து ஆரம்பிக்கணும்னு இருந்த கலகத்தை அதுக்கு முன்னாடியே ஆரம்பிச்சு பிள்ளையார் சுழி போட்டதுக்கு ரொம்ப சந்தோசம் கொழுந்தனாரே என்று மனதிற்குள் குதுகலித்துக் கொண்டிருந்தாள்.

தன் தங்கையின் கழுத்தில் மஞ்சள் துண்டு கோர்த்து தொங்கிய தாலியைப் பார்த்த சக்திக்கு மனம் பதறிது.. அடுத்தவீட்டில் இருந்து தங்கள் வீட்டிற்கு வரும் பெண்களுக்கே வைரத்தை போட்டு அழகுப் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள்.. இன்று சொந்த தங்கச்சிக்கு அதைப் பண்ண முடியவில்லையே என்ற ஆதங்கம் , கவலை, வேதனை என்று அனைத்தும் சேர்ந்து சாயின் மீது வெறியை ஏற்படுத்தியது..

"எப்படிலாம் கல்யாணம் பண்ணும்னு நினைச்சிட்டு இருந்தோம்டா , இப்படி எங்க ஆசையில மண்ணவாரிப் போட்டியே" என்று சக்தி சாயைப் பார்த்து கேட்கவும்.

"உன் தங்கச்சினதும் வலிக்குதா? இப்படி தானே எங்களுக்கும் இருக்கும், அனுபவி" என்றான் சாய் சக்திக்கு மட்டும் கேக்கும்வாறு.

அது சக்தி காதை சென்று அடைவதற்கு முன் அங்கு உறவினர்களின் கூச்சல் சத்தம் அதிகமாகவும் ....சாயின் அருகில் நெருங்கி நின்றவன் என்னடா சொன்ன என்றான்.

சக்தி கேட்டுவிட்டு தான் கேக்கிறானோ என்று நினைத்து அவன் சொன்னதை மீண்டும் ஒருமுறை அழுத்தி நிறுத்தி நிதானமாக சொன்னான்.

"டேய் அப்போ பழிவாங்க தான் கல்யாணம் பண்ணிட்டியா " என்று பல்லை கடித்தான் சக்தி.

"அதுல என்ன சந்தேகம்... உனக்கு உன் தங்கச்சி சந்தோசம் முக்கியம்னா எனக்கு என் தங்கச்சி சந்தோசம் முக்கியம்" என்றான்.

"அதுக்கு கோழை மாதிரி இப்படி பண்ணக்கூடாதுடா என்னைய மாதிரி நேருக்கு நேர் நின்னு கல்யாணம் பண்ணனும், ச்சை, எல்லோரும் இருக்காங்களேனு பார்க்கறேன் இல்லனா இந்நேரம் தாலிக் கட்டுன கையை உடைச்சிருப்பேன்" என்றான்.

உனக்கும் எனக்கும் ஒரு வித்தியாசம் தான் மச்சான்... நீ என்னோட குடும்பத்தை மிரட்டி என் அம்முவை கல்யாணம் பண்ணிக்க நினைச்ச.. நான் உன் தங்கச்சியை மிரட்டி கல்யாணத்தை முடிச்சிட்டு வந்துட்டேன்... என்றான் சாய் கெத்தாக...

சாயின் நிமிர்வை சக்தி கொஞ்சம் விரும்பவில்லை...
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top