தீத்திரள் ஆரமே 28

Advertisement

Priyamehan

Well-Known Member
தேவா:கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகிலுள்ள கேரளபுரத்தில் இருக்கும் சிவபெருமான் கோயிலில் உள்ள அரச மரத்தடியில் நிறம் மாறும் அதிசய விநாயகர் இருக்கிறார். ஆவணி மாதத்தில் இருந்து ஆறு மாதங்கள் வெள்ளை நிறமாகவும், மாசி மாதத்தில் இருந்து ஆறு மாதங்கள் கறுப்பு நிறமாகவும் மாறி விடுகிறார். இந்தச் சிலை சந்திர காந்தக் கல்லால் உருவாக்கப்பட்டது என்பது கூடுதல் சிறப்பு.

சாயின் முகம் கோவத்தில் கோவப்பழம் போல் சிவந்திருந்தது.

"இவங்க வீட்டு பொண்ணுன பொத்தி பொத்தி வெச்சிப்பாங்க அடுத்தவீங்க வீட்டு பொண்ணுனா மட்டும் அவ்வளவு இழப்பமா"என்ற கோவம் தான் சாயை வெறிக் கொள்ள செய்தது.

பெண்ணை அழைத்து வந்து அவள் கையில் பணம் இருக்கிறதா? இல்லையா? என்று கூட கேட்காமல் விட்டு சென்றவன் எல்லாம் ஆண்மகனா?... இவனை நம்பி தன் தங்கையை கொடுத்தால் ... கண்ணீருடன் தான் காலத்தை கடத்த வேண்டுமோ என்று அண்ணனாக வேதனைக் கொண்டவன் எப்படியாவது இருவருக்கும் நடக்கும் கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்பதில் உறுதிக் கொண்டான்.

கை கழுவி வந்த சாய் ஆராவை அழைத்துக் கொண்டு பில் கவுண்டரில் பணம் கட்ட சென்றான்..

சாய் பணத்தை நீட்ட அவனுக்கு முன் சக்தியும் பணத்தை நீட்டிவாறு நின்றான்.

"யாரு இது முகத்துக்கு நேரா பணத்தை நீட்டறது" என்று சாயும் ஆராவும் பார்க்க, அங்கு இறுகிய முகத்துடன் சக்தி நின்றிருந்தான்.

சக்தியைப் பார்த்ததும் சாய் சத்தம் போட போக... ஆரா அவனது கையை அழுத்திப் பிடித்து "வேண்டாம்" என்று கண்களால் கெஞ்சினாள்.

"ஏன்.........?"

"எல்லோருக்கும் முன்னாடி சண்டை வேண்டாம் சாய்..எதுவா இருந்தாலும் வெளிய போய் பேசிக்கலாம்"என்று மீண்டும் கண்களால் கெஞ்சியவும்

"சரி" என்று பற்களுக்கு இடையையே வார்த்தையை கடித்து துப்பியவன்.. "சார் நாங்க சாப்பிட்ட சாப்பாட்டுக்கு எங்களால பில் குடுக்க முடியும், இந்தாங்க" என்று கவுண்டரில் பணத்தை நீட்டினான்.

சக்தி அண்ணன் தங்கை இருவரையும் தான் வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆரா தனியாக இருப்பாளே என்ன செய்தாளோ என்று அவசர அவசரமாக வந்தவன் அண்ணனும் தங்கையும் சேர்ந்து சாப்பிடுவதைப் பார்த்துவிட்டு இரண்டு டேபிளுக்கு முன்பே நின்றுக் கொண்டான்.

ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் ஆரா சாயை முதலில் தேடுவது சக்திக்கு பிடிக்கவில்லை.

"அவனுக்கு போன் பண்ணிதானே கூப்பிட்டுருப்பா அதுக்கு என்னைய கூப்பிட்டுருக்கலாம்ல... அது என்ன எப்போ பாரு இவனையே கூப்பிடரா" என்ற எரிச்சல் உண்டானாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவர்களையே வேடிக்கைப் பார்த்தவன் பில் கட்டப் போவதைப் பார்த்ததும் தான் அழைத்து வந்துவிட்டு அவர்கள் செலவு செய்வதில் விருப்பம் இல்லை சக்திக்கு அதனாலையே பணத்தை எடுத்து நீட்டினான்.

இப்படி ஒரு நிலை வருவதற்கு அவன் தான் காரணம் என்று உணரவில்லை.

"உங்க பில் 250 சார்..." என்று சாயிடம் சொல்லவும்

"ம்ம்ம் இந்தாங்க" என்று பணத்தைக் கொடுத்துவிட்டு ஆராவின் கையைப் பிடித்தவன் "வா" என்றான்.

சக்தி மீதிருந்த கோவத்தில் சாய் என்ன சொன்னாலும் கேக்கும் நிலையில் இருந்தவள்...

உதவிய பேரருக்கு நன்றி சொல்லிவிட்டு செல்லலாம் என்று சாயின் கையைப் பிடித்தாள்.

"என்னடி" என்றான் கடுப்பாக..

"சாய், ஹெல்ப் பண்ணவருக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லிட்டு கிளம்பிடலாம்டா" என்று பேரர் இருந்த பக்கம் கை காட்டினாளே தவிர மறந்தும் சக்தியைப் பார்க்கவில்லை.

எவ்வளவு கோவம் இருந்தாலும் எப்படி விட்டு செல்வான்... ஏதோ உதவ ஒருத்தர் இருக்கப் போய் உடனே சாய் வந்தான், ஒருவேளை சாய் வராமல் போயிருந்தால் என்னவாங்கிருக்கும் என்று நினைக்கும் போதே உடல் நடுங்கியது.

"சரி வா" என்ற சாய் சக்தியை முறைத்துவிட்டு ஆராவிற்கு உதவிய பேரரின் அருகில் சென்றனர்.

"சார் ரொம்ப தேங்க்ஸ்,நீங்க மட்டும் ஹெல்ப் பண்ணலைனா...என்ன ஆகியிருக்குமோ என்னால நினைச்சிப் பார்க்க முடியல" என்றவள், "உங்க பேரை கேக்க மறந்துட்டேன்" என்று இழுத்தாள்

"கணேஷ்" என்றவன்.ஒன்னும் பிரச்சனை இல்ல ஆரா, மனுசனுக்கு மனுஷன் ஒரு உதவிதான் இதைக் கூட செய்ய மாட்டனா? " என்றான்.

" அதுக்கும் மனசு வேணும்ல கணேஷ், இவளுக்கு ஹெல்ப் பண்ணதுக்கு அண்ணனா நானும் தேங்க்ஸ் சொல்லிக்கறேன்" என்றான் ஆராவுடன் சாயும்.

"பரவால்ல இதனால என்ன இருக்கு?" என்றவன் நான் போய் வேலையைப் பார்க்கறேன் ஓனர் பார்த்தா சத்தம் போடுவார்" என்று அங்கிருந்து சென்றுவிட்டான்.

அவனிடம் விடைப் பெற்றுக் கொண்டு இருவரும் வெளியே வர.. நடக்கும் கூத்தை வேடிக்கைப் பார்த்த சக்தி அவர்களுக்கு பின்னால் சென்று. "உன்னோட தங்கச்சி பேக் கார்ல இருக்கு எடுத்துட்டு போ" என்றான் சாயிடம்.

சக்திக்கு ஆராவின் மேல் ஒரு பக்கம் கோவமாக வந்தது. "எவ்வளவு இக்கட்டான சூழ்நிலையா இருந்தாலும் இவ தனியாக இருப்பாளேங்கர ஒரேக் காரணத்திற்காக அங்கக் கூட போகாம இங்க வந்தா என்னைப் பார்க்கக் கூட மாட்டிங்கிறாளே" என்ற கோவம்.

அவனுடைய சூழ்நிலை எப்படி பட்டது என்று ஆராவிற்கு தெரியாது என்பதையும், அதை அவன் உணர்த்தவும் இல்லை என்பதையும், அவன் அவளை எந்த நிலையில் நிறுத்தி சென்றான் என்பதையும், மறந்து போனான் சக்தி.

கைப்பையை எடுத்துக் கொள்ள சக்தி சொன்னதும் சாய்க்கு அடக்கி வைத்த கோவம் அணை உடைத்து அருவியாக ஆர்ப்பரித்து கொட்ட ஆரம்பித்தது.

வேகமாக எட்டி சக்தியின் சட்டையைப் பிடித்தவன், "எவ்வளவு தைரியம் இருந்தா யாருக்கும் தெரியாம அம்மு ரூமுக்கு வந்ததும் இல்லாமல் அவகிட்ட தப்பா நடத்துக்க முயற்சி பண்ணிருப்ப, உங்கிட்ட காசு பணம் இருக்குன்னா அதை உன்னோட வெச்சிக்கோ, அதை வெச்சிட்டு என்னோட குடும்பத்தை மிரட்டி அம்மு கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ண அவ்வளவு தான்"என்றான்.

கோவத்தில் என்ன சொன்னோம் என்று சாய் உணரவில்லை.ஆனால் அதை சக்தி உணர்ந்துக் கொண்டதும் ஆராவைதான் பார்த்தான்.

அவளோ கைகளை பிசைந்த வண்ணம் நின்றாள். சாயிடம் சக்தி அறைக்கு வந்ததை மட்டும் தான் சொன்னாள், சாய் சொல்வது போல் தப்பாக நடந்துக் கொண்டான் என்றெல்லாம் சொல்லவே இல்லை. கோவத்தில் அவனாகவே சேர்த்து சொன்னது தான்... இப்போது மறுத்து சொன்னால் தன் அண்ணனை தப்பாக காட்டியது போல் இருக்கும், மறுக்காமல் போனால் சக்தி அப்படிதான் நடந்துக் கொண்டான் என்று தானே ஒப்புக்கொண்டது போல் ஆகும், என்ன செய்வது என்று தெரியாமல் இருதள்ளி கொள்ளி எறும்பாக ஆரா தவிக்க

ஏற்கனவே ஆரா தன்னைப் பார்க்காமல் தவிர்ப்பதில் கோவத்தில் இருந்தவன் இப்போது அவளுக்கும் அவனுக்குமான அந்தரங்க செயல்களை கூச்சமே இல்லாமல் சாயிடம் சொல்லிருக்கிறாள் என்ற கோவமும் சேர்ந்துக்கொள்ள..உள்ளே எரிதனாலாக கொதித்துக் கொண்டிருந்தான்.

எங்குப் பார்த்தாலும் உந்தன் முகம் என்பதும் போல் எங்குப் பார்த்தாலும் மூவரின் கோவத்தின் முகமாக இருந்தது

ஆரா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள் அண்ணனையும் ஆதரிக்க முடிவில்லை, அண்ணலையும்( தலைவன்)ஆதரிக்க முடியவில்லை, இருவருக்கும் பேசமுடியாமல் தவித்தவள்.சாயிடம் "போலாம் சாய்" என்றாள்.

சக்தி தன் பார்வையை ஆராவை விட்டு சிறிது கூட நகர்த்தவில்லை... தங்களுடைய உரையாடலையே வெளியே சொல்லக் கூடாது என்று நினைப்பவன் அவன், இதில் ஆரா இருவருக்கும் உண்டான முதல் உணர்வை சொல்லிருக்க அதை சாயோ தப்பாக நடக்க முயற்சித்தது போல் பேசவும், சக்தியின் கோவம், வெறுப்பு, வருத்தம் என்று அனைத்தும் சேர்ந்து அவள் எப்படி சொல்லலாம்.. என்று மொத்தமும் ஆராவின் மீது தான் திரும்பியது.

"இரு இவனை நாக்கு புடுங்கிக்கிற மாதிரி நாலு கேள்வி கேட்டுட்டு வரேன்" என்றவன் இன்னும் சக்தியை சட்டையை விடாமல் பிடித்திருந்தவன்,

"நான் இப்படி உன்னோட தங்கச்சி ரூமுக்கு வந்து நீ பண்ணதை பண்ணிருந்தா சும்மா இருந்துருப்பியா...? கேக்க ஆள் இல்லைனு நினைச்சையா அண்ணன்ங்க நாங்க இருக்கோம்" என்று சொல்லும் போதே சாயின் மனசாட்சி உறுத்தியது

"அவங்க ரெண்டு பேரும் இவனுக்கு கூஜா தூக்கறவங்க அந்த தைரியத்துல தானே இதை எல்லாம் பண்ணிட்டு இருக்கான், அவங்க கூஜா தூக்கற மாதிரி என்னால தூக்க முடியாது" என்று மனதில் நினைத்துக்கொண்டான் வெளியே சொல்லவில்லை.

"சாய் என்ன பண்ற?, ரோட்டுல போய் சட்டையை பிடிச்சிட்டு, முதல விடு என்று விலக்க முயற்சித்தவள், "வா போலாம், அதான் அவங்கள பத்தி தெரிஞ்சி போச்சில நம்மளால முடிஞ்சா பணத்தை குடுத்து கல்யாணத்தை நிறுத்துவோம்,முடியலைன்னா அவங்க கையால தாலியை வாங்கிக்கறேன் போதுமா இப்போ வா போலாம்" என்று சாயை இழுத்துக் கொண்டு வண்டிக்கு போக.. போகும் அவசரத்தில் இப்போதும் அவளுடைய பையை மறந்து விட்டு தான் போனாள் ஆரா.

சாய் சண்டையிடும் போது ஒரு வார்த்தைக் கூட மறுத்து பேசாமல் ஆரா அமைதியாக நின்ற போதே , அவளது எண்ணமும் புரிந்து விட... சக்தியின் மனம் வலித்தது.

இவ்வளவு நேரம் ஆராவின் மீது கோவத்தில் இருந்தவன் இப்போது அவளிடம் தனக்கான இடம் எது என்பது தெரிந்த பிறகு ஆராவிடம் இருந்து விலகி இருக்க முடிவு செய்தான்.

அதற்காக தான் சாய் சட்டையை பிடித்தப் போதுக் கூட அவனை எதிர்த்து எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

சாயின் பைக்கில் ஏறிய ஆரா சக்தியை ஒருமுறைப் பார்க்க... அவனோ இவளைப் பார்ப்பதை தவிர்த்து கோவத்தில் சிவந்த விழிகளுடன் எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆராவின் மனமோ சக்திக்காக வாதிட ஆரம்பிக்கவும் "வாயை மூடிட்டு இரு... வீட்டுக்கு போய் பேசிக்கறேன் உன்னை" என்று திட்டி அடக்கி விட்டாள்.

அவர்கள் கிளம்பியதும் சக்தி பாதியில் விட்டு வந்த வேலையை தொடர சென்றுவிட்டான்...

வண்டி ஓட்டிக்கொண்டிருந்த சாயிக்கு சக்தியை எதுவும் செய்ய முடியவில்லையே என்ற கோவம் கனலாக எரிந்துக் கொண்டிருந்தது...

"சாய்"

"ம்ம்ம்"

"இங்க நடந்த எதையும் வீட்டுல சொல்ல வேண்டாம்டா ப்ளீஸ்"

"ஏன்"

"அவங்க மனசு கஷ்டப்படுவாங்க.. கல்யாண வேலையில இருக்கவிங்களை தொந்தரவு செய்ய வேண்டாம் பிரச்சனை தான் முடிஞ்சிடுச்சில இதை எதுக்கு அவங்கிட்ட சொல்லிட்டு" என்றாள் மெதுவாக..

"ஆமா அப்படியே சொல்லிட்டாலும் என்னவோ ஏதோனு பதறிப் போய்டுவாங்க ....இந்த சக்தி வந்ததுல இருந்தே வீட்டுல எல்லோரும் ஒரு மார்க்கமா தான் சுத்திட்டு இருக்காங்க.. இவன் என்ன மந்திரம் போட்டு வெச்சிருக்கானோ" என்று நினைத்துக்கொண்டவன்..."அம்மு உனக்கு அவனை பிடிக்கல தானே... உண்மையை சொல்லு" என்றான்.

"என்ன சாய் திடீர்னு கேக்கற...?"

"இல்ல உனக்கு பிடிச்சிருந்தா, என்னால உனக்கு எந்த பிரச்சனையும் வந்துடக் கூடாதுல...உனக்காக அவன்கிட்ட பேசுனதுக்கு கூட மன்னிப்பு கேக்கறேன், எனக்கு உன்னோட சந்தோசம் தான் முக்கியம், குடும்பத்துக்காக உன்னைய பணய வைக்க எனக்கு விருப்பம் இல்ல" என்றான் மனதார..

ஒருவேளை தன் தங்கைக்கு அவனை பிடித்து தான் ஏதாவது பண்ணி அது கெட்டுவிடக் கூடாது என்பது அவனுடைய எண்ணம்.

சாய் மன்னிப்பு கேப்பேன் என்றதும் பதறியவள் அவள் மனம் அறியாமலையே 'இல்ல இல்ல அப்டிலாம் எதுவும் இல்ல.. நீ மன்னிப்பு அது இதுனு சொல்லாத"என்றாள்.

இதனால் பின்னால் வரும் ஆபத்தை அறியாமல்....

"சரி" என்றவன் .... ஆராவை வீட்டில் இறக்கி விட்டுவிட்டு வெளியே கிளம்பிவிட்டான்.

மாப்பிள்ளையுடன் போனவள் மகனுடன் வந்திரங்கவும்

"என்ன அம்மு சாயிக்கூட வந்துருக்க அவர் எங்க..?" என்றார் பதட்டதுடன் , மகள் ஏதாவது பிரச்சனை பண்ணிவிட்டு வந்துட்டாளோ என்ற பயம் உண்டானது.

"எவரு?"

" எவரா!!!அடியே அதான் மாப்பிள்ளைடி."

"ஓ அவரா,அவருக்கு ஏதோ வேலை இருக்கா அதானால சாய் கூட அனுப்பி வெச்சுட்டாரு" என்று சோர்ந்தவாறு சொன்னவள், "அம்மா நான் ரூமுக்கு போறேன் டிஸ்டர்ப் பண்ணாதீங்க" என்று அவளுடைய அறைக்கு சென்றுவிட்டாள்.
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top