தீத்திரள் ஆரமே -21

Advertisement

Priyamehan

Well-Known Member
தேவா:திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் ஆலயம், தமிழகத்திலேயே மிகப்பெரிய சிவாலயமாகும். சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் தனித்தனியே கட்டப்பட்ட இரண்டு கோயில்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான கோயில் இது. இரண்டு கோயில்களும், 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சங்கிலி மண்டபம் என்னும் மண்டபத்தால் இணைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலின் கோபுரங்களும் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டவையாகும். இக்கோயில் கி.பி. 700 ம் ஆண்டில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சக்தி சென்றதும் வீட்டிற்குள் போனவளின் எண்ணம் எல்லாம் அவன் எதற்காக தன்னை மணக்க நினைக்கிறான் என்பதிலையே இருந்தது

மனம் எப்போதும் ஒருவர் நினைப்பது போலே மற்றொருவர் நினைப்பதில்லை, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிந்தனை இருக்கும்

சக்தி ஒன்றை நினைத்து ஆராவை மணக்க நினைக்க, ஆரா வேறொன்றை நினைத்தாள்.

'இவன் கண்டிப்பா என்னைய பழிவாங்க தான் கல்யாணம் பண்ண நினைச்சிருப்பான் அவன் வூமனைசர் இல்லைனா அன்னிக்கு நான் பார்த்தது பொய்யா, இல்லையே அவ அவனோட நெஞ்சில கை வெச்சி என்னமோ பண்ணிட்டு இருந்தா அப்புறம் ரெண்டு பேரும் ரூமுக்கு போனாங்க அப்படினா நான் நினைக்கறது தானே சரி இதுக்கூட விட்டுரலாம் அவன் கொலைப் பண்ணதை என்னோட கண்ணாலப் பார்த்தேனே அது பொய்யா மொத்ததுல அவன் தப்பானவன் தானே' என்று நினைத்தவளின் மனம்

'அவன் நீ சொல்ற மாதிரி வுமனைசரா இருந்தா இப்போ நீ அவனோட தனியா போன வாய்ப்பை பயன்படுத்தி உன்னைய என்ன வேணுனாலும் பண்ணிருக்கலாமே ஏன் பண்ணல அதும் எதுக்கு உன்னைய கல்யாணம் பண்ணிக்க நினைக்கறான், யாராவது ஒரு நேர சாப்பாட்டுக்கு ஹோட்டலையே விலைக்கு வாங்குவாங்களா?'என்று கேட்டது.

"அப்போ இது எல்லாம் காரணம் கிடையாது அவன்கிட்ட இதையும் தாண்டி வேற ஏதோ காரணம் இருக்கு அது என்னவா இருக்கும்" என்று யோசித்தவளின் மனதிற்கு ஒன்றும் புரிப்படவில்லை.

அன்றைய நாள் அதே யோசனையுடன் போக..

இரவு வேலையை முடித்து வந்த வேலுவும் சசியும் சோர்வாக இருந்தனர்.

அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் போது அதைக் கவனித்த ஆரா "அப்பா என்னாச்சி? ஏன் ஒருமாதிரி இருக்கீங்க?, இன்னிக்கு அவன் ஏதாவது சொன்னானா?" என்று சக்தியை மனதில் வைத்துக் கேட்டாள்.

"அவர் எதுவும் சொல்லலம்மா இந்த வீட்டை அடகு வெச்சா 40லட்சம் தான் தருவாங்களா அதும் 20நாள் ஆகுமா நாங்களும் எல்லா இடமும் தேடிப் பார்த்துட்டோம், எல்லோரும் இதைதான் சொல்றாங்க" என்றான் சசி.

"அந்த சக்தி தான்ம்ப்பா இப்டிலாம் பண்ண சொல்லிருப்பான் உங்களுக்கு அவனைப் பத்தி தெரியல காசு எங்கையும் கிடைக்கலைனா நீங்க என்னைய கல்யாணம் பண்ணிக் குடுத்து தானே ஆகணும், அதுக்கு தான் பிளான் பண்ணிருப்பான்" என்று கத்தினாள் ஆரா.

"அப்படிலாம் இருக்காது அம்மு நீ கொஞ்சம் அமைதியா இரு"என்று சசி அதட்டவும் ஆரா அமைதியாகிவிட்டாள் ஆனால் அவள் மனம் கொதித்துக் கொண்டிருந்தது.

"வித்தா எவ்வளவு வரும்ப்பா?" என்று பரணி கேக்கவும்

"அது எப்படி 50 க்கு மேல வரும்டா ஆனா உடனே பணம் கிடைக்க வாய்ப்பில்லைனு சொல்றாங்க. நம்ப அவசரத்தை பயன்படுத்திட்டு அடிமட்ட விலைக்கு கேப்பாங்க,
எப்படியும் பணம் கைக்கு வர ஒரு மாசத்துக்கு மேல ஆகும் போல" என்று சோர்ந்து போய் சொன்ன வேலுவைப் பார்க்க வேதனையாக இருந்தது ஆராவிற்கு.

" ஒன்னு பண்ணலாம்ப்பா நீங்க வீட்டை அடகு வைங்க நான் காலேஜ்ல லோன் மாதிரி ஏதாவது வசதி இருக்கானு கேக்கறேன் சசி நீயும் கேளு"என்றான் பரணி.

"என்னோட கல்யாணத்துக்கு இன்னும் 2வாரம் தான் இருக்கு ஷேவிங் ல இருந்த பணத்தை எல்லாம் மண்டபம், சாப்பாடு, டெக்கரேசன்னு எல்லாத்துக்கும் கொடுத்துட்டேன் இன்னும் புடவை எடுக்கப் பணம் வேணும், அப்பாவுக்கு திருடுன பணத்தை கட்ட வரைக்கும் வேலையில இருந்தும் போகக் கூடாதுனும் லோன் எதுவும் தரக் கூடாதுன்னு சொல்லிருக்காங்க அப்படி இருக்கும்போது கல்யாணத்துக்கே என்ன பண்ண போறேன்னு தெரியல" என்றவன், "கம்னு கல்யாணத்தை ரெண்டு மாசத்துக்கு அப்புறம் வெச்சிக்கலாமானு பார்க்கறேன்" என்றான்

"பொண்ணுவீட்டுல என்ன பிரச்சனைனு கேப்பாங்களே என்னனு சொல்றது" என்று திலகா கேக்கவும்

"என்கிட்ட கொஞ்சம் பணம் இருக்கு சசி அதை தரேன் அதை வெச்சி நீ கல்யாண வேலைய பாரு"என்றான் பரணி

தன் தங்கைக்காக ஆள் ஆளுக்கு உதவி செய்யும் போது தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று கவலையாக இருந்தது சாயிக்கு

அவனும் இன்று விதுர்ணாவை பார்த்து பேசினான் முன் போல் காவிய காதல் எல்லாம் ஒன்றும் இல்லை என்றாலும் அவளை வைத்து ஏதாவது செய்ய முடியுமா என்று யோசிக்க அதற்கு விது இடம் கொடுக்கவில்லை.

எல்லோரும் என்ன செய்வது என்று கவலையிலும் வேதனையிலும் இருக்க..அவர்களைப் அப்படி பார்க்க விரும்பாமல் பாதி சாப்பாட்டில் தன் அறைக்குச் சென்று விட்டாள் ஆரா.

அறைக்கு வந்தவள் போனை எடுத்து சக்திக்கு அழைத்தாள்.

"ம் சொல்லு"

எதுக்கு இவனுக்கு கூப்பிட்டோம் என்று யோசித்தவள், "அது.."

"எது?"

"ஹா உன் மண்டை எல்லாம் உன்னால தாண்டா நாங்க இப்போ இவள கஷ்டபடறதுக்கு நீதான்டா காரணம்" என்று கத்த வேண்டும் போல் இருந்தது ஆராவிற்கு.

"என்ன போன் பண்ணிட்டு பேசாம இருக்க?".

"நீ எதுக்கு இப்படி எங்களைக் கஷ்டப்படுத்தர" என்றாள் கண்ணீர் துளிர்க்க

"அழறியா?"

"இல்லையே?"

"உன்னோட குரலே சொல்லுது" என்றவன் "இங்கபாரு உன்னையவோ உன் குடும்பத்தையோ பழி வாங்கணும்னு எனக்கு எந்த இன்டன்ஸனும் இல்ல ஓகேவா எனக்கு தேவை என்னோட பணம். அதைக் கொடுத்துட்டா நான் எதுக்கு உங்களைய தொந்தரவு பண்ண போறேன்"

"என்னைய கல்யாணம் பண்ணிகிட்டா மட்டும் உனக்கு பணம் வந்துடுமா?"

"வராதுதான் அதுக்கு பதிலா தான் நீ வருவியே உன்கிட்ட இருந்து பணத்தை எப்படி வசூலிக்கனும்னு எனக்கு தெரியும் அதை நான் பார்த்துக்குவேன் நீ கவலைப்படாத.."

"ப்ளீஸ் வீரா அப்பாவும் அண்ணாவும் படர கஷ்டத்தை என்னால பார்க்க முடியல நான் வேணா உங்கிட்ட பேசுனதுக்கும் உன்னைய அடிச்சதுக்கும் உன்மேல கேஸ் குடுத்ததுக்குனு எல்லாத்துக்கும் சேர்த்தி எல்லார் முன்னாடி உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேக்கறேன் ப்ளீஸ் எங்களைய விட்டுட்டு" என்றாள்.

அவள் வீரா என்று சொன்னதைக் கேட்டவன், "உனக்காக ஒரு 15நாள் டைம் அதே வட்டியோட சேர்த்தி தரேன், அதுக்குள்ள பணத்தை ஏற்பாடு பண்ணுங்க" என்று போனை வைத்தவன் பெரும் மூச்சொன்றை விட்டான்.

சக்தி போனை வைத்ததும் "ஹாப்பா இந்த அளவுக்காவது இறங்கி வந்தானே அது போதும் இனி அந்த பணத்தை எடுத்த ஆளைக் கண்டுபிடிக்கனும்" என்று நினைத்தாள்.

"யாரோ நேத்து ஒருத்தன் மேல கொலைவெறில அவன்மேல கேஸ்லா குடுத்து வந்தாங்க இன்னிக்கு என்னனா அவனோட ரெஸ்டாரண்ட் போறது என்ன? வாங்க போங்கன்னு மரியாதை குடுக்கறது என்ன? சிரிச்சு பேசுறது என்ன? என்று மனசு கேள்வி கேட்கவும்

"அவன்மேல எனக்கு பயங்கர கோவம் இருக்குது தான், அதுக்கு தான் கேஸ் குடுத்துருக்கேன், பணத்துக்கு பதில் அவன் கேஸை வாபஸ் வாங்க சொல்லலையே, அப்போ பணத்தை குடுக்கறதுக்கு என்ன வழியோ அதை தானே நம்ப செய்ய முடியும்.பணத்தை தொலைச்சது நம்ப தப்பு"

"அந்த பணத்தை அவனே திருடிட்டு உங்களைய குடுக்க சொல்றான் முடியலையா உன்னைய கல்யாணம் பண்ணி குடுக்க சொல்றான் இது தப்பு இல்லையா?"

"தப்பு தான் நம்ப ஒன்னும் பணத்தை குடுக்கப் போறது இல்லையே,அதை எடுத்தவனை கண்டுபிடிச்சி தர போறோம் அவ்வளவு தான்"

"கண்டுபிடிக்க முடியலைனா?"

"அதான் போலீஸ்ல கம்பளைண்ட் குடுத்துருக்கோம்ல அவங்க கண்டுபிடிப்பாக"

"அவங்க கண்டுபிடிக்கறதுக்குள்ள டைம் முடிஞ்சிருச்சுன்னா நீ அவனை கல்யாணம் பண்ணிப்பியா?"

"போலீஸால முடியாதோனு பயந்துட்டு தானே நானே நாளைக்கு போய் பார்க்கலாம்னு நினைக்கறேன் என்னைய குழப்பி விடாத.. எப்படியானாலும் அந்த ரவுடி பொறுக்கியை நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் போதுமா?" என்றாள்

"அது சரி அவனை வுமனைசர்னு சொன்னியே அதுக்கு அவன் ஸ்ட்ராங்கா இல்லைனு சொல்றானே அதுக்கு என்ன சொல்ற"

"அவன் ஆயிரம் சொல்லட்டும் எனக்கு என்ன கவலை, நான் அவனை கல்யாணம் பண்ணிக்கற மாதிரி இருந்தா தானே கவலைப்படனும் அவன் கொலைப் பண்ணிருக்கான் அதுக்கு நான்தான் சாட்சி எதுக்காகவும் நான் பயப்பட மாட்டேன்" என்றவள் படுத்து தூங்க முயற்சிக்க தூக்கம் வராமல் முரண்டு பிடித்தது.

நேரம் பனிரெண்டை தாண்டியும் தூக்கம் வராமல் தவித்தவள் போனை எடுத்து வாட்சப் பக்கம் சென்றாள்.

ஆரா ஆன்லைன் வந்து ஐந்து நிமிடம் கூட இருக்காது... சக்தியிடம் இருந்து செய்தி வந்தது.

"இன்னும் தூங்காம யார்கூட கடலைப் போட்டுட்டு இருக்க" என்று கேட்டிருந்தான் .

அதைப் பார்த்ததும் ஆராவிற்கு கோவம் சுறுசுறுவெண்டு ஏறியது."நான் யார்கூட பேசுனா இவனுக்கு என்ன, இவனுக்கு பணம் தரனுங்கறதுக்காக நான் என்ன இவனோட அடிமையா?" என்று நினைத்தவள் அதை அவனிடம் கேட்டும் விட்டாள்.

"நான் யார்கூட பேசுனா உனக்கு என்ன?" என்று கேக்க

ஆராவின் அரட்டையை விட்டு வெளியே போகாமல் இருந்தவன் அவள் அனுப்பிய செய்தியைப் படித்துவிட்டு பதிலுக்கு

"இப்போ எப்படி வேணா இருந்துக்கோ ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் இப்படி ஆன்லைன்லையே சுத்திட்டு இருந்த யூஸ் பண்ண போனும் இருக்காது கையும் இருக்காது" என்று சிரிக்கும் பொம்மையுடன் சேர்த்து அனுப்பி வைத்தான்.

'மிரட்டிட்டு சிரிக்கற முகரையைப் பாரு எரும உன்னைய எவடா கல்யாணம் பண்ணிப்பா',என்று நினைத்தவள்,"அன்னிக்கு சொன்னது தான் இந்த உலகத்துல கடைசி ஆம்பளை நீயா இருந்தாலும் உன்னைய நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்" என்று கெத்தாக அனுப்பி வைத்தாள்.

அதைப் பார்த்தவன் இந்தப் பக்கம் சிரித்துவிட்டு

உன்னைய என்கிட்ட கொண்டு வர தாண்டி இவ்வளவு வேலையும் பார்த்து வெச்சிருக்கேன் அப்புறம் எப்படி சும்மா விடுவேன் என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன், "அதையும் பார்க்கலாமே" என்றான்.

"பார்க்கலாம்" என்று அனுப்பி விட்டு அரட்டையை விட்டு வெளியே வந்தவள் என்ன செய்யலாம் என்று யோசிக்க...

எழுந்ததும் செய்ய வேண்டியதை மனதில் குறித்துக் கொண்டு தூங்கினாள்
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top