தீத்திரள் ஆரமே -18

Advertisement

Priyamehan

Well-Known Member
தேவா:கும்பகோணம் அருகே தாராசுரம் என்ற ஊரில் உள்ள ஐராவதீஸ்வரர் கோயிலில் உள்ள சிற்பத்தில், வாலியும் - சுக்ரீவனும் சண்டை இடும் காட்சி உள்ளது. இங்கிருந்து ராமர் சிற்பம் இருக்கும் தூண் தெரியாது. ஆனால் ராமன் அம்பு தொடுக்கும் சிற்பத்தில் இருந்து பார்த்தால் வாலி சுக்ரீவன் போர் புரியும் சிற்பம் தெரியும் அளவுக்கு, நுட்பமாக, இக்கோயில் வடிமைக்கப்பட்டுள்ளது.

சிறிது நேரத்தில் சக்தியிடம் இருந்து போன் வரவில்லை. ஆனால் அதற்கு பதிலாக அவனே வீடு தேடி வந்துவிட்டான்.

சக்தி பாடிகார்டுடன் உள்ளே வந்ததைப் பார்த்த ஆராவிற்கு கோவம் அதிகம் ஆக பல்லைக் கடித்துக் கொண்டு நின்றாள்..

ஆராவைப் பார்த்துக்கொண்டே வந்தவன் யாருடைய அனுமதியும் இல்லாமலே சோபாவில் உக்கார்ந்து விட்டான்.

வேலுவும், திலகாவும் பதறியப்படி நிற்க

அண்ணன் தம்பி மூவரும் சக்தி என்ன சொல்லப் போகிறானோ என்று பயத்தில் இருந்தனர்.

"அப்புறம் எல்லோரும் எப்படி இருக்கீங்க?" என்றுக் கேட்டவன் கால் மேல் கால் போட்டு அமர்ந்தான்.

"ஏன் நாங்க நல்லா இல்லைனா நீ நல்லாக்கா போறியா?,எதுக்கு வந்தியோ அதை மட்டும் பேசிட்டு கிளம்பர வழியைப் பாரு, அம்மா அவன் கிளம்புனதும் அந்த சோபாவை பெனாயில் ஊத்திக் கழுவு" என்று சொல்ல வேண்டும் போல் துடித்த நாவை சிரமப்பட்டு அடக்கினாள் ஆரா.

"நான் எதைப் பத்தி பேச வந்துருக்கேன்னு உங்க எல்லோருக்கும் தெரியும்னு நினைக்கறேன்" என்றவனை இந்த முறை நேரடியாகவே முறைத்தாள் ஆரா.

"சார்" என்று வேலு இழுக்க,

"நீங்க கொண்டு போன பணம் கம்பெனி அக்கௌன்ட்ல ஏறல, ஒரு கம்பெனிக்கு பணம் டிரான்ஸ்பர் பண்ணனும் அமௌன்ட் குடுங்க வேலு.."

"சார்..... அமௌன்ட் "

"என்ன இழுக்கறீங்க வேலு பணம் எங்க?", என்றவன் "அமௌன்ட்டுக்கு நீங்கதானே பொறுப்புனு தெரியும் தானே வேலு" என்றான்.

"எனக்கு தெரியும் சார், நான் பத்திரமா தான் வெச்சிருந்தேன் அது எப்படி போனதுன்னே தெரியல சார்" என்றவரை

"அதுக்கு நான் எதுவும் பண்ண முடியாது வேலு, நீங்கதான் பொறுப்பா இருந்துருக்கணும்,இப்போ பணம் உங்ககிட்ட கூட இருக்கலாம் யார் கண்டா , செக் போட போறது உங்களுக்கும் எங்களுக்கும் மட்டும் தான் தெரியும் அப்போ எப்படி மிஸ் ஆச்சி" என்றவன் "பணத்தோட பொறுப்பை நீங்க தான் ஏத்துக்கனும்"என்றான்

"எங்கப்பா எதுக்கு ஏத்துக்கணும்?நீயே ஆள் விட்டு செக்கை பாஸ் பண்ண சொல்லி பணத்தை எடுத்து வெச்சிருப்ப, அப்படி செய்யக் கூடிய பிராடு தான் நீ, முதல உன்னைய வீட்டுக்குள்ள விட்டதே தப்பு வெளிய போடா" என்றாள் ஆரா சத்தமா

எல்லோரும் ஆராவை சத்தம் போட

"நீங்க அமைதியா இருங்க, மேடம் சொல்லட்டும்" என்ற சக்தி "சொல்லுங்க மேடம்" என்றான் ஆராவைப் பார்த்து.

"என்னடா மேடம் ஒழுங்கா வெளிய போ.. எங்கப்பாவை இந்த நிலைமையில நீதான் நிறுத்திருப்ப, பணமும் குடுக்க முடியாது ஒன்னும் குடுக்க முடியாது , உன்னால முடிஞ்சதைப் பார்த்துக்கோ" என்றாள் கோவமாக.

"ஆரா அமைதியா இரு" என்று வேலு எவ்வளவோ அடக்கிப் பார்த்தார் ஆனால் ஆரா அடங்குவதுப் போல் தெரியவில்லை.

"சரி மேடம் நான்தான் செஞ்சேன்னு வெச்சுக்கோங்க, எனக்கு செய்யணும்னு என்ன பர்ப்பஸ் இருக்கு, உங்கப்பா என்னோட எதிரியா என்ன? பழிவாங்குவதற்கு"என்றான்.

"ஏனா நான் உன்மேல குடுத்த கேஸை வாபஸ் வாங்கணும், அதுக்கு தான் நீ இதுமாதிரி எல்லாம் பண்ணிட்டு இருக்க"

"அதுக்குலாம் ஒரு வயசானவரை நான் இன்புளுயன்ஸ் பண்ண மாட்டேன்?"

"அதை ஒரு கொலைப் பண்ற ரவுடி, பொறுக்கி சொன்னா என்னால நம்ப முடியாது" என்றாள்.

"சோ நான் சொன்ன எதையும் நம்பர நிலையில நீங்க இல்ல அது எனக்கு தேவையும் இல்ல, உங்க நம்பிக்கை வாங்கறது என்னோட வேலையும் இல்ல,
எனக்கு தேவை 50லட்சம் பணம், ஒரு கேஸை வாபஸ் வாங்க நான் 50 லட்சம் செலவு செய்ய தேவையில்லைனு நினைக்கறேன்,ஒரு வக்கீல் வெச்சா 2லட்சம் போதும் அழகா நான் பண்ணதை இல்லைனு நிரூபிக்க என்னால முடியும், சோ கம்பெனி பணத்தை எப்போ குடுக்க போறீங்க?, அதை சொன்னா நாங்க கிளம்பிட்டே இருக்கப் போறோம்" என்று ஆராவைப் பார்த்தான்.

"அதானே வக்கீல் வெச்சி கேஸை திசை திருப்புர சக்தி இந்த எருமைக்கு இருக்கு, அப்புறம் எதுக்கு அப்பாவை கஷ்டப்படுத்த போறான்" என்று அவனுக்கு சாதகமாக மனம் வாதாட,

"சார் என்னோட கவனக் குறைவால ஆனா மிஸ்டேக் தான், நான் என்ன பண்ணனும்னு சொல்லுங்க சார், நான் செய்யறேன்" என்றார் வேலு.

"எதுக்குப்பா நீங்க பொறுப்பு எடுத்துக்கறீங்க?,இவன் தப்பே பண்ணாத என்னோட அண்ணாவை அடிச்சி கட்டுப் போட்டு வீட்டுக்கு அனுப்பி வைப்பான்,அன்னிக்கு எங்க அண்ணாவுக்கு ஏதாவது ஆகியிருந்தா இவன் என்ன பண்ணிருப்பான்?, அதுக்கு பதிலா வேற சசியைக் கொண்டுவந்து கொடுத்திருப்பானா?" என்றவள் ,யாரும் எதிர்பாரா நேரம் சக்தியின் சட்டைக் காலரைப் பிடித்தாள்.

எல்லோரும் அவளைப் பிடித்து இழுக்க,"என்னோட அண்ணா மேல கை வைக்க நீ யாருடா?, என்னோட அண்ணாவை அடிச்ச உன்னைய நான் சும்மா விடமாட்டேன்" என்று கத்தினாள்.

"ஆரா அமைதியா இரு" என்று சசி சொல்ல சாய் ஆராவின் கன்னதில் அறைந்து விட்டான்."இப்போ எதுக்கு இப்படி பண்ற? பெரியவிங்க இருக்காங்கள அவங்க பேசிப்பாங்க அமைதியா உன்னோட ரூமுக்கு போ" என்று சாய் கத்தவும்,அந்த இடமே ஊசி விழுந்தாலும் சத்தம் கேக்கும் அளவிற்கு அமைதியானது.

சக்தி தன் சட்டையை நீவி விட்டவன், அங்கு உருவான அமைதியை கலைத்து, "நான் இவங்க என்மேல கொடுத்த கேஸைப் பத்தி பேச வரல, எனக்கு தேவை பணம் அதுக்கு என்ன பண்றீங்கனு கேக்க தான் வந்தேன்," என்று நிறுத்தியவன்

"உங்களுக்கு ஒரு வாரம் டைம் தரேன் வேலு அதுக்குள்ள பணத்தைக் கொடுக்க முயற்சிப் பண்ணுங்க, இல்லையா,என்று நிறுத்தியவன் எல்லோரையும் ஒருமுறை பார்த்துவிட்டு கடைசியாக ஆராவைப் பார்த்தவன்
பணத்துக்கு பதிலா உங்கப் பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணிக் கொடுங்க என்று அனைவரது தலையிலும் அலுங்காமல் குலுங்காமல் இடையை இறக்கினான்.

இது என்ன வம்பா போயிடுச்சி? வாலுப் போய் கத்தி வந்தது மாதிரி, பணம் போய் இப்போ பொண்ணு வந்துடுச்சி என்று எல்லோருக்கும் பயம் வந்தது.

சக்திக் சொன்னதைக் கேட்ட ஆரா மீண்டும் தாண்டவம் ஆட ஆரம்பித்தாள்.

"என்னடா நினைச்சிட்டு இருக்க நீ?, உன்னைய போய் நான் கல்யாணம் பண்ணிப்பனா?,ச்சை இந்த உலகத்துல கடைசி ஆம்பளை நீதானு தெரிஞ்சாக் கூட உன்னைய நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்டா .ஒரு கொலைக்காரனை என்னோட புருஷனாக் கனவுல கூட நினைச்சிப் பார்க்க மாட்டேன்" என்று கோவத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசியவள், "வெளியே போடா"என்றாள்.

ஆரா இவ்வளவு மரியாதை குறைவாக பேசியும் சக்தி எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பதை வேலுவும், சசியும் கவனிக்க தான் செய்தனர்.

யாரையும் தன் அருகில் நிறுத்திக் கூட பேசாதவன், இன்று ஆரா இவ்வளவு முறை டா போட்டு மரியாதை இல்லாமல் பேசியும் அதைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறானே என யோசனை எழுந்தது இருவருக்கும்.

ஆரா வெளியே போக சொல்ல சொல்ல சக்தி சோபாவில் ஒய்யாரமாக சாய்ந்து அமர்ந்து தனது இடது கையை சோபாவின் மீது போட்டு யாரும் அறியாமல் ஆராவைப் பார்த்து கண் சிமிட்டினான்.

அந்த ஒரு நொடி ஆராவின் உடலில் ஏதோ ஒரு மாற்றம் உருவானது. அதில் அமைதியாகிவிட்டாள் ஆரா.

'நீங்க என்ன பண்றீங்க வேலு?"என்றான் மீண்டும்

"என்னால ஒரு வாரத்துக்குள்ள ஐம்பது லட்சம் பணம் கொடுக்க முடியுமான்னு தெரியல சார், முயற்சி பண்றேன்" என்றார் சோர்ந்து போய்.

"இப்படி சொன்னா எப்படி போறது?,"என்றவன், தன் பாடிகார்டிடம் இருந்த பத்திரத்தை வாங்கி

"இதுல நீங்க ஒரு வாரதுக்குள்ள பணத்தைக் கொடுக்கலைனா என்ன பண்ணனும்னு இருக்கு படிச்சிகாட்டவா?" என்றவன்." "குறிப்பிட்ட தேதிக்குள் 50 லட்சம் பணத்தை தர இயலவில்லை என்றால்,குழந்தைவேலு திலகாவின் மகளாக சக்தி ஆராண்யாவை,சக்தி வீரேஷ்வருக்கு திருமணம் செய்து தருவதாக தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து முடிவெடுத்து உள்ளோம் இதில் அனைவருக்கும் சம்மதம்"என்று படித்தவன், "அப்படிதான் எழுதி இருக்கு நீங்க எல்லோரும் சேர்ந்து கையெழுத்து போட்டுக் கொடுங்க நான் போய்டறேன்" என்றான் ஆராவைப் பார்த்து.

அவளோ வேகமாக வந்து அவன் கையில் இருந்த பத்திரத்தை பிடிங்கி கிழிக்கப் போனாள்.

"இங்கப் பாரு இவ்வளவு நேரம் நான் அமைதியா இருந்தேன்னு எதுனாலும் பண்ணனும்னு நினைக்காத" என்று சக்தி அழுத்தமாக சொல்லவும்.

"ஆராவின் கைகள் தானாகவே கீழே இறங்கியது ,அவளை ஆழ்ந்துப் பார்த்தவன் அவளிடம் எதுவும் பேசாமல் "என்ன வேலு சொல்றிங்க?" என்றான்.

"ஒருவாரம் டைம் பத்தாது சார் ஒரு மாசம் குடுங்க" என்றான் சசி..

சசி சொன்னதும் அதைப் பற்றி யோசித்தவன்,"சரி அப்போ ஒரு மாசத்துக்கு வட்டியும் சேர்த்து குடுத்துருங்க" என்றான்.

"வட்டியா!! ஐம்பது லட்சத்துக்கு ஒரு ரூபாய் வட்டி போட்டாலும் 50 ஆயிரம் வருமே"என்றான் சாய்.

"எந்த காலத்துல இருக்க தம்பி?,இப்போல ஸ்பீட் வட்டி, கந்து வட்டினு 10வட்டிக்கு போடறாங்க, நீங்க ஒரு ரூபாய்னு சொல்றிங்க" என்றான் சக்தியின் பாடிகார்ட்.

"என்னது பத்து வட்டியா!!" என்று எல்லோரும் வாயை பிளக்க ஆராவிற்கு இந்த சூழ்நிலையை எவ்வாறு கையாலுவது என்று தெரியவில்லை.

"சார் பத்து வட்டி போட்டு குடுக்க முடியாது கொஞ்சம் கருணைக் காட்டுங்க" என்றார் வேலு.

"அப்பா நீங்க எதுக்கு கெஞ்சிட்டு இருக்கீங்க? வாங்க நம்ப போலீஸ்ல கம்பளைண்ட் குடுத்துருக்கோம்ல காசை வித் ட்ரா பண்ணதுன்னு யாருனு பேங்க்ல இருக்க சிசி டிவி கேமராவை செக் பண்ணுவோம்" என்றாள்.

ஆரா சொல்லவது சரிதான் என்று எல்லோருக்கு தோன்றியது.

"அது உங்க பிரச்சனை நீங்க தேடி கண்டுபிடிப்பிங்களோ இல்ல, பணத்தை ரெடிபண்ணி என்கிட்ட குடுப்பிங்ளோ எனக்கு தெரியாது , எனக்கு 1வாரத்துக்குள்ள வட்டி இல்லாமல் 50லட்சம் வேணும் அப்படி இல்லையா ஒரு மாசம் டைம் எடுத்துகிட்டா வட்டியோட 55லட்சமா பணம் வேணும், அதுக்கு மேலயும் உங்களலா பணத்தை குடுக்க முடியலைன்னா எனக்கு உங்க பொண்ணு வேணும்" என்று கறாராக பேசியவனை எல்லோரும் அதிர்ச்சியாகப் பார்த்தனர்.

"இவன் என்ன மிட்டாய் வேணுங்கர மாதிரி பொண்ணு வேணும்னு சொல்றான்? " என்று நினைத்த ஆராவிற்கு கோவம் கோவமாக வந்தது.

"இப்படி பார்த்துட்டே இருந்தா என்ன அர்த்தம் இதுல கையெழுத்து போட்டு குடுக்க சொல்லுங்க எல்லோரையும்" என்றான்.

நிலைமை கை மீறி போவதை உணர்ந்தவர்கள் கையெழுத்தைப் போட்டுக் கொடுத்தார்கள்.

ஆரா மட்டும் போட மாட்டேன் என்று அடம்பிடிக்க

"அம்மு உன்னைய நாங்க அப்படி விட்டுடுவோமா, சைன் பண்ணிக் குடு எங்களோட தலையை அடமானம் வெச்சாவது பணத்தைக் கட்டிடறோம்" என்றான் பரணி.

"தேவையில்லாம எதுக்கு அண்ணா ரிஸ்க் எடுக்கனும்? எனக்கு இதுல கொஞ்சம் கூட விருப்பம் இல்லை, இவன் ஏதாவது கோளுமாலு பண்ணிடுவான்,உங்களுக்கு இவனைப் பத்தி தெரியாது.செக் பாஸ் ஆனது இவனோட பிளான் தான் ப்ளீஸ் நான் சொல்றதை யாராவது புரிஞ்சிக்கோங்க" என்று அழுதாள்.

யார் கண்ணில் கண்ணீர் வரக்கூடாது என்று தங்களுக்கு வந்த கஷ்டத்தைக் கூட அவளிடம் சொல்லாமல் மறைத்தார்களோ அவளே இன்று கதறி அழுகவும் அனைவர்க்கும் பெரும்வேதனையாக இருந்தது.
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top