தீத்திரள் ஆரமே -17

Advertisement

Priyamehan

Well-Known Member
தேவா:கும்பகோணம் மகாமகம் குளத்துக்கு அருகிலேயே உள்ள சிவாலயமான காசி விஸ்வநாதர் கோயிலில், சிவன் சன்னதியை தவிர நவகன்னியர்களான கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, ,காவேரி, கிருஷ்ணா, கோதாவரி, துங்கபத்ரா, சரயு ஆகிய புனித நதிகளுக்கும் சன்னதிகள் உள்ளன. இக்கோயில் குறித்து தேவாரத்தில் பாடல் இடம் பெற்றிருப்பதுடன், இராமாயண காலத்திலேயே இராமரும், லக்ஷ்மணனும் இங்குச் சிவனை வழிபட்டதாக நம்பப்படுகிறது

சக்தியின் மீது கம்பளைண்ட் கொடுக்கப் போகிறேன் என்று வீட்டில் இருப்பவர்களிடம் சொன்னால் அனைவரும் வேண்டாம் என்று சொல்லி அவளை தடுத்து விடுவார்கள் என்று பயந்து தான் யாரிடமும் சொல்லாமல் வந்திருந்தாள்.

போலீஸ் ஸ்டேஷனுக்கு உள்ளே சென்றவள் "சார் ஒரு கம்பளைண்ட் குடுக்கனும்" என்றாள்.

என்ன கம்பளைண்ட், யார்மேல கம்பளைண்ட்" என்று கேட்டனர்.

"ஒரு கொலையை நான் நேர்லப் பார்த்தேன், அதுக்காக ஆதாரம் என்கிட்ட இருக்கு,கொலைப் பண்ணுனவீங்க மேல் கேஸ்க் குடுக்கணும்" என்றாள்..

"யார் யாரைக் கொலைப் பண்ணது தெளிவா சொல்லும்மா?"

"யாரைக் கொலைப் பண்ணுனாங்கனு தெரியாது ஆனா கொலைப் பண்ணது யார்னு தெரியும்" என்றாள்

அவளின் பதிலில் குழப்பம் அடைந்த ரைட்டர், "என்னமா சொல்ற?"என்றார்

"சார் Msv கம்பெனி ஓனர் சக்தி வீரேஷ்வர் தான் கொலைப் பண்ணது,

அதை நான் நேர்லையும் பார்த்தேன் போன்லையும் வீடியோ எடுத்துருக்கேன்" என்றவள்.. கம்பளைண்ட்டை தன் கைப்பட எழுதி "இந்தாங்க" என்றாள்..

"வீடியோ காட்டுங்கம்மா" என்றார் இன்ஸ்பெக்டர்.

ஆரா தன் போனில் இருந்த வீடியோயைப் பார்த்தவள் அதிர்ச்சியாகிவிட்டாள்

அதில் எதுவும் இல்லை. வீடியோ எடுத்துக் கொண்டிருந்தவள் அப்படியே மயக்கம் போடவும் வீடியோ அவளது போனில் பதிவு ஆகாமல் போய்விட்டதோ என்று வீடியோவை தேடி தேடிப் பார்த்தவள் வீடியோ கிடைக்க வில்லை என்றதும், "சாரி சார் வீடியோ எப்படியோ மிஸ் ஆகிடுச்சி" என்றவள் "அது இல்லைனா என்ன நான் சொன்னதை கைப்பட எழுதிக் குடுத்துருக்கேன் அதை வெச்சிட்டு ஆக்சன் எடுங்க" என்றாள்.

ஆனால் வீடியோ பதிவாகாமல் போகவில்லை, பதிவான வீடியோவை அழித்து விட்டனர் என்று ஆராவிற்கு தெரியவில்லை.

"அப்படிலாம் ஆதாரம் இல்லாம கேஸை பைல் பண்ண முடியாது" என்றார் இன்ஸ்பெக்டர் .

"அப்போ நான் கமிஷனரைப் போய்ப் பார்த்துக்கரேன்" என்றவள் அங்கிருந்து கிளம்ப போக..

"மேடம் கமிஷ்னர் கிட்ட போனாலும் இதைதான் சொல்வார்" என்று இழுத்தவரை.

"சரி அதை நான் அவரைப் பார்த்துட்டு முடிவுப் பண்ணிக்கறேன்" என்றவளைப் பார்க்க குழந்தை மாதிரி முகத்துடையவளாக தெரிந்தாலும், அவளை அவ்வளவு எளிதில் எடைப் போட முடியாது என்று நினைத்த இன்ஸ்பெக்டர், "சரிம்மா கம்பளைண்ட்டை பைல் பண்ணி எப்ஐஆர் போட்டுடறேன் போதுமா?" என்றார்.

"இது மட்டும் போதாது இன்னிக்குள்ள நீங்க அவரை அரெஸ்ட் பண்ணி ஜெயில தள்ளிருக்கணும்" என்றாள்.

"சரி" என்று அவளை அனுப்பி வைத்தவர்கள் உடனே சக்திக்கு அழைத்து செய்தியை சொல்லிவிட்டனர்.

"சார் கம்பளைண்ட்டை வாபஸ் வாங்க வைங்க, இல்லனா, உங்க ஆளுங்க யாரையாவது ஆஜராக்கிடுங்க"என்றார் இன்ஸ்பெக்டர்.

"நான் பார்த்துக்கறேன், இன்னும் அரைமணி நேரத்துல என்னோட வக்கீல் உங்களை வந்து பார்ப்பார் அதுவரைக்கும் இந்த விசியம் யாருக்கும் தெரியாமப் பார்த்துக்கோங்க" என்று சொல்லி போனை வைத்தவனுக்கு ஆராவின் மனதில் தான் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பது தெளிவாக புரிந்தது..

சிறிது நேரம் பலமாக யோசித்தவன்,ஒருமுடிவுடன் முகிலனுக்கு போன் செய்து சில விசயங்களை செய்ய சொல்லியவன் எங்கோ புறப்பட்டுச் சென்றான்.

வரும் வழியில் 'ஆமா அவனோட முழுப் பேர் உனக்கு எப்படி தெரியும்? " என்று மனசாட்சிக் கேக்க. "நான்தான் அவனோட ரூம்ல இருந்த நேம் போர்டைப் பார்த்துட்டேனே" என்றாள்.

ஆரா வந்து வெகுநேரம் ஆகியும் அறையை விட்டு வெளியே வரவில்லை என்றதும் திலகா ஆராவின் அறைக்கு சென்று கதவை தட்ட கதவு திறந்துக் கொண்டது..

அறையில் ஆராவைக் காணவில்லை என்றதும் கீழே வந்தவர் சசியிடம் "ஆரா எங்கடாப் போனா?"என்றார்.

"அவ ரூம்ல தானே இருந்தா"

"ரூமில இல்லையே அதானே கேக்கறேன்"

"நான் வந்ததுல இருந்து ஹால தான் இருக்கேன் எங்கையும் போகலையே அப்புறம் எப்படி வெளிய போயிருப்பா, பாத்ரூம்ல இருக்காளானு பாருங்க" என்றான்.

"அங்கையும் பார்த்துட்டேன்" என்றவரிடம், "இருங்க அவ நம்பருக்கு கூப்பிட்டுப் பார்க்கறேன்" என்று ஆராவின் எண்ணிற்கு அழைத்தான்

சசியின் அழைப்பை ஏற்றவள் "சொல்லுங்கண்ணா"என்றாள்.

"எங்கம்மா இருக்க?, வீட்டை விட்டு எப்போ வெளியப் போன?"என்றான்.

"நான் போலீஸ் ஸ்டேஷன்க்கு வந்தேன், கிளம்பிட்டேன் பத்து நிமிஷத்துல வீட்டுக்கு வந்துடுவேன்" என்றாள்.

"போலீஸ் ஸ்டேஷனுக்கா எதுக்கு அங்கப் போன?" என்றான் அதிர்ச்சியாக.

"வீட்டுக்கு வந்து சொல்றேன்" என்று போன்னை வைத்துவிட்டாள்.

ஆரா சொன்னதைக் கேட்டுப் பைத்தியம் மட்டும் தான் பிடிக்கவில்லை சசிக்கு..

"என்ன இவ இப்படி பண்ணிட்டு இருக்கா?, கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு வாரம் தான் இருக்கு இப்போதான் என்னோட பிரச்சனை முடிஞ்சிதுனு நிம்மதியா இருக்கும் போது இவ புது பிரச்சனையை கிளப்பி விடுறாளே" என்ற கவலையுடன் பயமும் சேர்ந்து கொண்டது சசிக்கு.

"என்ன சசி,போலீஸ் ஸ்டேஷன் அது இதுன்னு சொல்றா எனக்கு ரொம்ப பயம்மா இருக்குப்பா, என்ன பிரச்சனைனு இப்போவாது சொல்லுங்க? " என்றார் திலகா.

இதற்கு மேலும் மறைக்க முடியாது என்று நினைத்தவன், கம்பெனியில் நடந்தை சொன்னான்.

"என்னப்பா சொல்ற, சுட்டாங்களா என்னமோ தோசை சுட்ட மாதிரி சொல்ற"

"பெரிய இடத்துல இதுலாம் சகஜம்மா அதை நம்ப ஏன்னு கேக்க முடியாது" என்றான்.

"அதுதான் நானும் சொல்றேன்,நமக்கு எதுக்கு பெரிய இடத்து பொல்லாப்பு எல்லாம் அவங்க பணத்தை வெச்சி நம்பலை என்ன வேணுனாலும் செய்வாங்க, அது புரியாம இவ எதுக்கு இப்படி ஆடுறா, எனக்கு என்னமோ பயமா இருக்கு சசி" என்றார் அழுகையுடன்.

அப்போது தான் ஆட்டோவில் இருந்து இறங்கி உள்ளே வந்த ஆராவிற்கு திலகாவின் அழுகை சத்தம் கேட்கவும் வாசலிலேயே நின்றாள் ஆரா.

"இது மட்டும் இல்லமா அன்னைக்கு எனக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சினு சொன்னேன்ல அது ஆக்சிடென்ட் இல்ல சக்தி சார் தான் ஆளுங்களை வெச்சி என்னய அடிச்சாரு.." என்று அடுத்தக் குண்டைத் தூக்கிப் போட்டான்.

"என்னடா சொல்ற?" என்று திலகா அதிர்ந்து கேட்கவும்.

"ஆமா அம்மா கம்பெனியில ஒரு பிரச்சனை நடந்தது அதுக்கு காரணம் நான் தான்னு தப்பா நினைச்சி அன்னிக்கு என்னைய கொலைப் பண்ற அளவுக்கு போய்ட்டாங்க, நான் பண்ணலைன்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன் ஆனா அவங்க என்னைய நம்பற மாதிரி இல்லை.

அப்புறம் சக்தி சார் என்ன நினைச்சாரோ நான் தப்பு பண்ணலைன்னு நிரூபிக்க சொல்லி எனக்கு டைம் கொடுத்தார், அன்னிக்கு நான் உயிரோட வந்ததே பெருசு இதை உங்க கிட்ட சொன்னா நீங்க பயந்துடுவீங்கனு தான் நான் கீழே விழுந்துட்டேனு பொய் சொன்னேன்"என்றான்.

சசி சொன்னதை வாசலில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த ஆரா கோபத்துடன் உள்ளே வந்தவள்,"அப்போ அன்னிக்கு உங்களை அடிச்சதும் அவன் தானா?எனக்கு அப்போவே சந்தேகம் இருந்தது,அவனுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா உங்க மேல கையை வெச்சிருப்பான்"என்றாள் கோவமாக.

ஆரா தான் பேசியதைக் கேட்டுவிட்டாள் என்ற அதிர்ச்சியில் சசி இருக்க,
தான் உயிரோடு வந்ததே பெரிய விஷயம் என்று சசி சொன்னதைக் கேட்டு திலகா அதிர்ச்சியில் அப்படியே நின்றுவிட்டார்..

அவன் யாரு உங்க மேல் கை வைக்கறதுக்கு,அன்னைக்கே நீங்க இதை சொல்லிருந்தா அவனை அப்போவே போலீஸ்ல புடிச்சுக் குடுத்துருக்கலாம்" என்றாள் மீண்டும் கோவமாக..

"அம்மு கொஞ்சம் பொறுமையா இரு..இப்போ எதுக்கு இவ்வளவு கோவப்படர,அதுதான் எனக்கு எதுவும் நடக்கலையே"என்றவன், "இப்போ நீ எதுக்கு போலீஸ் ஸ்டேஷன் போன முதல அதை சொல்லு" என்றான்

"அந்த சக்தி மேல கம்பளைண்ட் குடுக்க தான் ஒரு கொலை செஞ்சிருக்கான் கண்ணால பார்த்துட்டு எல்லோரும் மாதிரி என்னால அமைதியா போக முடியாது,இறந்தவீங்க குடும்பம் எவ்வளவு கஷ்டபடும்" என்றாள்.

"நீ என்ன காரியம் பண்ணி வெச்சிருக்க ஆரா" என்று திலகா கத்தவும்.

"அம்மா ஒரு கொலையை பார்த்ததுக்கு அப்புறம் கூட மனசாட்சிக்கு துரோகம் பண்ணிட்டு என்னால சாதாரணமா இருக்க முடியாது"என்றவள் அவளது அறைக்கு சென்று விட்டாள்.

"இவ என்ன சசி இப்படி பண்ரா?எனக்கு இவளை நினைச்சா தான் கவலையா இருக்கு"என்று அழுகையுடன் திலகா சொல்ல, அதே கவலையில் இருந்த சசிக்கு திலகாவிற்கு எவ்வாறு ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை.

இரண்டு மணி நேரம் ஆகியும் ஹாலை விட்டு எங்கும் செல்லாமல் சோபாவில் உக்கார்ந்து யோசித்தவனுக்கு இதனால் பின்விளைவுகள் அதிகம் வரும் என்பது மட்டும் நன்றாக புரிந்தது.

"அம்மா காபி குடுங்க" என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் தனது அறையில் இருந்து வெளியே வந்தவளை கொலைவெறியுடன் பார்த்தார் திலகா.

"என்னமா முறைக்கறீங்க காபி கிடைக்குமா?, கிடைக்காதா?"

"அம்மு நீ பண்றது சரியா இன்னும் ரெண்டு வாரத்துல கல்யாணம் வெச்சிருக்கும் போது போலீஸ் ஸ்டேஷன் அலைஞ்சிட்டு இருக்க முடியுமா?, அதும் இல்லாம அவங்க பணக்காரங்க பணத்தை வெச்சி என்ன வேணா பண்ணுவாங்க. தயவுசெஞ்சு குடும்பத்தை இதுல இழுத்துவிடாம கேஸை வாபஸ் வாங்கும்மா" என்றார்.

கம்பளைண்ட் குடுக்க போறதுக்கு முன்னாடி நான் இதை பண்ண போறேன்னு சொல்லிருந்தா நீங்க விடமாட்டிங்கனு தான் சொல்லாம போனேன், அப்போவே தெரிஞ்சிருக்கும் நான் எந்த அளவுக்கு இந்த முடிவுல உறுதியா இருக்கேனு, இதுக்கு மேல அது இதுனு எதுவும் சொல்ல வேண்டாம் என்றவள் காபி கிடைக்குமா?கிடைக்காதா?" என்றாள் மீண்டும்.

திலகா ஆராவை திட்ட வாய் எடுக்கவும், குழந்தைவேலு வீட்டிற்கு வரவும் சரியாக இருந்தது..

அவரின் நடையில் தடுமாற்றம் இருப்பதைப் பார்த்த சசியும், ஆராவும் "என்னாச்சிப்பா" என்றனர் ஒருசேர.

திலகா வேகமாக அவரின் அருகில் வந்து "உக்காருங்க" என்று சொல்லிவிட்டு தண்ணீர் கொண்டு வர உள்ளேப் போனார்.

"சொல்லுங்கப்பா என்னாச்சி ஏன் டல்லா இருக்கீங்க?"என்று கேட்டான் சசி

"கம்பெனியில் என்கிட்ட குடுத்து வெச்சிருந்த 50லட்ச பணத்தை நான் எங்கையோ மிஸ் பண்ணிட்டேன், அதை யாரோ எடுத்துட்டாங்க"என்றார் சோர்வாக.

"என்னப்பா சொல்றிங்க கம்பெனியில இருக்கப்ப யாரு எடுத்துருப்பா சிசிடிவி கேமரா இருக்கும்ல அதலப் பார்க்க வேண்டியது தானே .."

"ஒருமணி நேரத்துக்கு முன்னாடி பேங்க்ல கம்பெனி பணத்தை போடப் போனேன்... வழியில் தெரிந்த பையன் ஒருவன் வந்து பேசுனானேனு பேசிட்டு அவனோட காபி குடிக்க கடை வரைக்கும் போய்ட்டு வரதுக்குள்ள வண்டியில இருந்த பேக்கை எவனோ எடுத்துட்டான்,பேக் இல்லைங்கரதை நான் பேங்க் போய்தான் பார்த்தேன்" என்றவர்,"கம்பெனிக்கு பணம் ஏறல"என்றார்.

"அப்பா 50லட்சம் இவ்வளவு அசால்ட்டா சொல்றிங்க இப்போ என்ன பண்றது?" என்று சசி கேக்கும் போது பரணியும் சாயும் வீட்டிற்கு வந்து விட்டனர்.

அவர்களுக்கும் விஷயம் சொல்லப்பட இன்னும் சிறிது நேரத்தில் சக்தியிடம் இருந்து போன் வந்துவிடும் என்ன செய்வது என்று ஒவ்வொருவரும் வெவ்வேறு மனநிலையில் இருந்தனர்.

பணம் பறிக்கொடுத்த வேலுவை சக்தி மன்னித்து விடுவானா? இல்லை ஆரா போலீஸ் கம்பளைண்ட் கொடுத்ததுக்கு சேர்த்து குடும்பத்தையும் பழி வாங்கிவிடுவானா அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
MEGALAVEERA

Well-Known Member
Nice epi
ஆரா குடும்பத்தை கட்டம் கட்டிட்டான் சக்தி
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top