தாய் மண்

Advertisement

Jagan P

Member
அம்மா
நீ எப்போதும் என்னுடனே இருக்க வேண்டும் என்பதனை சொல்லாமல் அதை உணர்வு புர்வமாக கட்டியனைத்து காட்டுவாள் திவ்யா…!!


தனது கணவனை இழந்த நிலையிலும் மேரி தன்னபிக்கையுடன் திவ்யாவை நன்றாக இவ்வித குறையுமின்றி வளர்த்தாள்
நல்ல அறிவாற்றல் கொண்ட பெண்ணாகவே இருந்தாள் ஆண் பிள்ளைக்கு சமமாக தனக்கும் திறமை இருக்கு அதை விளையாட்டிலும் சரி படிப்பிலும் நிரூபணம் செய்துக் காட்டினாள் திவ்யா.

பெண்களுக்கு இந்த சமூகத்தில் சம உரிமையுள்ளது எங்களை அடிமை பெண்ணாகவே என்னும் நபர்களுக்கு எங்களின் திறமையும் உரிமையும் என்னவென்று மெய்பித்து அதை வெளியுலகத்திற்கும் காட்டிட வேண்டும் என்ற எண்ணம் திவ்யாவிற்கு சிறுவயது முதலே இருந்தது அதற்கான முயற்சியோடும் தன்னை தயார் படுத்துக் கொண்டால்

விளையாட்டிலும் சரி படிப்பிலும் சரி அவளுக்கென்று ஒர் தனி ஸ்டைலை பாலோ செய்து சிறப்பான வெற்றியை தொடர்ந்து பெற்றுக் கொண்டிருந்தாள்.

எவ்வளவு தான் வயதில் வளர்ச்சி பெற்றாலுல் சரி மேரி தான் திவ்யாவிற்கு உணவை ஊட்டி விடுவாள். பெண் குழந்தைகளை எப்போதும் குழந்தையாகவே தானே அனைத்து அம்மாக்களும் பார்ப்பார்கள் அன்று மேரிக்கு மனதில் என்ன தோன்றியதோ தெரியவில்லை தீடிரென திவ்யாவை கட்டியணைத்து நெற்றியில் முத்தம் கொடுத்து அழுதால் அதற்கு திவ்யாவும் மேரியை பதிலுக்கு கட்டியணைத்து கண்ணத்தில் முத்தம் கொடுத்து சிரித்துவிட்டு கேட்டாள்.

என்னமா ஆச்சி உனக்கு?

ஒன்னுமில்லமா நீ எனக்கு கிடைச்ச வைரம் நீ எப்பவும் என் கூடவே இருக்கனும் அதான் ஆசை

ஆட அப்போ எனக்கு நீ கல்யாணமே பண்ணாம இருக்க போறியாமா?

ஏய் அது எப்படி முடியும்..!! பொண்ணுனு பிறந்தாவே அவளுக்கு கல்யாணம் என்றது எவ்வளவு பெரிய முக்கியத்துவம் வாய்ந்ததுனு உனக்கு தெரியுமா திவ்யா

அட நீ தானே சொன்ன வாழ்க்கை முழுவதும் நீ என் கூடவே இருக்கனும்னு அதான் கேட்டேன்மா

அடிப் போடி கல்யாணம் பண்ணிட்டு போற வரைக்கும் நீ என் கூட இருக்கப் போறத சொன்னேனன்

ஒ அப்புடியா அப்போ சரி.. நீ எதுக்கும் கவலைப்படாதமா வீட்டோட மாப்பிள்ளையா பார்த்திடலாம்

ஏய்....!! அதலாம் அப்போ இப்போ இல்லடி திவ்யா இந்த சமூகத்துல உறவுனு யாருமே இல்லாத எனக்கு உறவா மகளா நீ கேடச்சிருக்க திவ்யா

அதலாம் ஒன்றுமில்லைமை நான் உன்னுடனே தான் இருப்பேன். நீ எதுக்கும் கவலைப் படாதே இன்னும் கொஞ்ச நாள்ல என் படிப்பு முடிய போகுது ஒரு வேலை கிடைச்சதும் உன்ன நல்லா பார்த்துக்கிறேன் சரியா

எனக்கென்னமா நீ இருக்கும் போது சிரித்துக் கொண்டே கட்டிப்பிடித்துக் கொண்டாள்.

கல்லூரி படிப்பையும் முடித்துவிட்டு ராணுவத்தில் சேர வேண்டும் என்ற எண்ணம் அவளின் மனதில் இருந்துக் கொண்டே இருந்தது தன்னை பார்ப்பவர்கள் இவள் ஒரு பெண்தானே என்ற வார்த்தையும் பார்வையும் இல்லாமல் ஆண்களுக்கும் நிகர் நானும் சலைத்தவள் அல்ல என்பதை இந்த சமூகம் உணர வேண்டும் மாற்றத்தை என்னைக் கொண்டு தொடர வேண்டும் என்ற ஆசை கனவு இலட்சியம் எல்லாம்.



மாநில போட்டிகளில் சிறப்பாக விளையாடியைதால் அரசுத் துறைகளில் வேலை வாய்ப்புக்கு பறிந்துரை செய்தது கல்லூரி

இது தான் நமக்கான சரியான வாய்ப்பு என்று அந்த வாய்ப்பை திவ்யா பயன்படுத்திக் கொண்டு ராணுவத்தில் சேர விருப்பம் தெரிவித்தாள்..!!

அதற்கு கல்லூரியோ அது உனக்கு எதற்குமா தேவையில்லாத ஆசை அழக ஆட்சியர் அலுவலகம் மத்திய அரசு வேலைக்கு போறதை விட்டு இராணுவத்துக்கு போறனு சொல்றீயேமா? அது ரொம்ப கஷ்டமானது ஆண்களே சில சமயம் ட்ரெயினிங்க தாங்க முடியாம ஒடி வந்த கதையிலாம் இருக்கு பொம்மள புள்ள எதுக்கு இந்த வேலை வேணாம் சரியா

அச்சோ சார் இது தான் என் கனவு நீண்ட நாள் ஆசையும் கூட ப்ளீஸ் என்னைய தடுக்காதீங்க

அப்போ சரிமா உன் விருப்பம் நல்லதோ கேட்டதோ நீயே அனுபவி ஏதோ சொல்லனும்னு தோனுச்சி சொல்லிட்டேன் அப்றம் உன் விருப்பம்

ராணுவத்தில் சேர
முதல் சுற்று ரன்னிங் 5நிமிடத்திற்குள் 800 மீட்டர் 4நான்கு சுற்று சுற்றி வரவேண்டும் அதில் திவ்யா முதல் பெண்ணாக அதுவும் 3.56நொடிகளில் வந்து சாதணை படைத்தாள்.

அடுத்து உடற் பயிச்சி சோதனையிலும் வெற்றி பெற்று நேர்மூக தேர்வுக்கு அழைப்பு வந்தது.

ஒரு பெண்ணாக ராணுவத்தில் சேர போகிறாம் என்ற பெருமை ஒரு புறம் இருந்தாலும் எப்படியாவது ராணுவத்தில் இடம் கிடைத்திட வேண்டும் என்ற எண்ணமும் மனதில் ஒடிக் கொண்டிருந்தது.

ஏன் என்றால் அப்போது தான் இந்திய அரசு முதன்முதலாக இரணுவத்தில் பெண்களுக்கும் வாய்ப்பு கொடுக்க முன்வந்து சட்டத்தை உருவாக்கிய நேரமும் கூட.

நேர்முகத் தேர்வும் முடிந்தது.

மேரிடம் தான் இராணுத் துறையில் சேரப் போவதை சொல்லாம் சர்ப்ரைஸ் கொடுக்க காத்திருந்தாள் திவ்யா


அம்மாவிடம் கேட்டாள் அம்மா எனக்கு இந்த அரசு வேலை கிடைச்சிடும்ல ?!

ம்ம்ம்..!! கண்டிப்பா கிடைக்கும் திவ்யா ஆனா அது என்ன வேலைனு தான் சொல்லமா மறைக்குற?

அது சர்ப்ரைஸ்மா!

ஒ எனக்கே சர்ப்ரைஸா ப்ளீஸ் சொல்லுமா என்ன வேலைனு

சரி நீ இவ்வளவு கெஞ்சி கேட்கிற சொல்றேன் அது "ஆர்மி', இராணுவம்

என்னது இராணுவமா அதலாம் ஒன்னும் தேவையில்லை நீ சும்மாவே வீட்ல இரு அது போதும் எனக்கு


அம்மா ராணுவத்ல இடம் கிடைத்தால் தானே நம் நாட்டிற்கு சேவை செய்ய முடியும்.

என் பொண்ணு மிலிட்டரில இருக்கானு ஒரு கர்வமா சொல்லுவா இது எவ்வளவு பெரிய பெருமை இச்சமூகத்திற்காக போராடும் தகுதி பெண்களுக்கும் உள்ளது.

வீட்டு சமையல் அறையிலேயே பெண்களோட வாழ்க்கை முடியக்கூடாதுமா மாற்றம் தேவை


அச்சோ போதும் நிறுத்துடி

திவ்யா நீ ராணுவம்னு சொல்ற ஆனா எனக்கு அது தான் பிரச்சனையே
நீ என்கூடவே இருப்பனு பார்த்தா இப்படி அந்த வேலையிலேயே குறியா இருக்கியே..!

அம்மா டாக்டர் இன்ஜினியர்னு ஆசைப்படு படிச்ச பொண்ணுங்க முக்கால்வாசி பேர் அவங்க நெனைச்ச மாதிரியா இருக்காங்க? கல்யாணம் ஆனதும் சமையைல் அறை குழைந்தை அந்த சொந்தக்காரன் அத சொல்லுவான் இத பண்ணுவானு புருஷனுக்கும் உங்களுக்கும் அவமானம் வரக்கூடாதுனு எல்லா ஆசைகளையும் மனசுல போட்டு புதைச்சிட்டு குடும்ப வாழ்க்கையில கரைஞ்சி போறாளே தவிர அவளோட ஆசை என்னனு எந்த ஆண்களும் கேட்டதில்லை
அப்படி ஒரு வேளை சொன்னாலும் அதற்கு பதிலுமில்லை

பொண்ணுங்க என்னதான் படிச்சிருந்தாலும் சரி ஒரு கல்யாணம் பண்ணதுக்கு அப்பறம் வேலைக்கு போகக்கூடாதுனு முதல் தடை அடுத்து உங்க அம்மா வீட்டுக்கு போகத பேசாதனு சொல்றது இதலாம் மாத்தனோம்மா.


என்ன பொறுத்தவரைக்கும் ராணுவத்துல சேரனும் தேசத்துக்காக போராடனும். நம நாடும் ஒரு குடும்பத்தை பார்த்துக் கொள்வதை போன்றது. இரண்டுமே என் இரண்டு கண்களைப் போன்றது.

எனக்கு கணவனாக வரப் போரவரும் ஒரு ராணுவ வீரரானகவே இருக்கனும் அதான் எனக்கு வேணும்.
உன்னையும் என் கூடவே கூட்டிட்டோ போயிடுவேன் கவலைப்படாம இருமா

அய்யோ பாருடா என் பொண்ணா எதுவும் தெரியாத சின்ன பொண்ணு பார்த்தா இந்த சமூதாயத்தையே கரைச்சி குடிச்சிருக்க ம்ம்ம்ம்ம்.

ஒ அப்படியா அம்மா ..!! உனக்கு என் மேல கோவம் இல்லையே

இரண்டு வாரங்கள் கழிந்தது இராணுத்திலிருந்து மீண்டும் நேர்முக தேர்விற்கு வர சொல்லப்பட்டிருந்தது.

திவ்யாவிற்கு ஒன்றும் புரியவில்லை திகழ்த்து நின்றாள்

மேரி ஏய் இதுக்கு போய் ஏன் பயப்படுற அதலாம் எதுவும் இருக்காது நீ தைரியமா இரு நாளைக்கு தானே வர சொல்லிருக்காங்க

ஆமாம்மா எனக்கு பயமா இருக்கு எங்க வேலை கிடைக்காமா போயிடுமோனு

உன் திறமைக்கு நிச்சயம் வேலை கிடைக்கும்


திவ்யா மறுநாள்
காலை ஏழுந்ததும் ராணுவ நேர்முக தேர்வு தயாராகி அவளின் கல்வி சான்றிதழ்களை எல்லாவற்றியும் எடுத்துக்கொண்டு போனாள்

அங்கே இராணுவ அதிகாரிகள் மிஸ் திவ்யா நீங்க நினைப்பது போன்று இது ஒன்றும் சாதாரணம் பணியல்ல தெளிவாக முடிவெடுத்து தானே இந்த வேலையை தேர்வு செய்துள்ளாய்?


ஆமாம் சார் என் முழு மனதுடன் தான் இதில் சேர்க்கிறேன்

ம்ம்ம்.... சரி உன்னுடன் பிறந்தவர்கள் எத்தனை பேர்?

எனக்கு சாகோதர சகோதிரிகள் யாருமில்லை அம்மா மட்டும் தான் அவர்களின் பெயர் மேரி

ஒ... அப்பா ?

நான் சிறுவயதில் இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார் அதற்கு பிறகு அம்மா அப்பாவைப் பற்றி எதுவும் என்னிடம் சொன்னது இல்லை நானும் கேட்டதில்லை.

நான் படிக்கும் காலத்தில் அம்மா ரொம்ம கஷ்டப்பட்டாங்க எனக்கு அவங்களோட கஷ்டம் தான் தெரிஞ்சது ஒரு பெண் தனியா நின்னு ஒரு குடும்பத்தைக் காப்பாற்றுவது என்பது இராணுவ வேலையை விட மிக கடுமையானது சார்.

இந்த சமூகத்தில் அவளுக்கென்று என்ன உரிமை உள்ளது? எதுவுமில்லை இப்போது தான் ஒவ்வொரு துறையிலும் பெண்களுக்கென வாய்ப்பு தரமுன் வந்துள்ளது.
சமூகம் தரும் இந்த வாய்ப்பை வைத்து எங்களை நிலையிருத்திக் கொள்வதே சரி இந்த வாய்ப்பை தவர விடக்கூடாது. அதுவும் நாட்டிற்காக ராணுவ பணியில் பெண்களுக்கு வாய்ப்பு என்பது மகத்தான செயல் அது எனக்கு மட்டுமல்ல பெண் சமூகத்துக்கே பெருமை மற்ற பெண்களும் வீட்டை விட்டு இச்சமூகத்தில் நடமாடுவார்கள் சமமாக செயலுபடும் உரிமையை பெற




பெண்களின் திறமை என்னனு அப்போது தான் இந்த உலகமும் அறியும் சார். பெண்களை காம பொருளாக நினைக்கும் ஆண்களுக்கு பெண் ஒன்றும் போதை பொருள் அல்ல போர் என வந்தால் சீரும் சங்கமும் தான் ஆண்களுக்கு இருக்கும் அளூமை பெண்களுக்கும் உள்ளது என்பதை காட்டிடவே தான் நான் இத்துறையை தேர்வு செய்தேன் சார்.

வாவ் சூப்பர் திவ்யா இதைப் போன்று மற்ற பெண்களும் விழிப்போடு இருந்தால் நம் நாட்டில் மட்டுமல்ல உலகமே தவறு செய்ய அஞ்சும் அதைவிட பெண்களை அடிமைப்படுத்தும் எண்ணமே இல்லாம் போகும்.

சரி உங்களின் நேர்காணால் முடிந்தது. இன்னும் மூன்று மாததிற்குள் உங்களுக்கு பணியாணை வரும் அப்போது சந்திப்போம். இதில் நீங்கள் கொடுத்திருக்கும் சான்றிதழ் இதர நடைமுறை முழுமையாக முடிந்த பிறகே ஆணை வரும்

All the best

தேங்கியூ சார்

வீட்டிற்கு திவ்யா வந்ததும் மேரியை கட்டிப் பிடித்துக் கொண்டு அம்மா அம்மா எனக்கு எப்படியும் இந்த வேலை கிடைச்சிடும்மா அங்க நடந்த நிகழ்வை சொல்லி மெய் சிலிர்த்து பேசினாள் ஆனால் அப்பா என்றதும் வார்த்தை தடுமாறியது கண்ணில் நீர் வந்தது உடனே மேரி

.
ஏய் திவ்யா ஏன் தீடிர்னு அழுற எல்லாம் நல்லாதானே பேசிட்டு இருந்த என்னாச்சி

அம்மா நீ ஏன் இது வரைக்கும் அப்பா பத்தி எதுவுமே என்கிட்ட சொல்லல?

அது ஒன்னுமில்ல அவரைப் பற்றி சொல்ல என்ன இருக்கு?

அம்மா சொல்லுங்க ப்ளீஸ் அங்க கேள்வி கேட்கும் போது என்னால பதிலே சொல்ல முடியாம போச்சி
இவ்வளவு வருஷத்துக்கு அப்பறம் கேட்கிறேன் சொல்லுமா ப்ளீஸ் அம்மா அப்படி சொல்ல முடியாதளவுக்கு அவர் என்னதான் செய்தார் ம்ம்ம்ம்.?

அது அது
என்னமா அது அதுனு இழுக்கிற...!!
அத எப்படி சொல்றதுனே தெரியல திவ்யா

இப்போ எதுக்கு அழறமா உனக்கு சொல்ல விரும்பம் இல்லைனா விடுமா

ஸ்கூல்ல இருந்து காலேஜ் வரை என்ன எத்தனையோ முறை என் கூட படிச்ச பிள்ளைங்க கேட்டாங்க உங்க அப்பா எப்படி இருப்பாரு என்ன வேலை செய்தாரு எப்படி இறந்தார்னு அதை விடுங்க டி னு சொல்லிட்டு போய்டுவேன் அப்போலாம் மனசு வலிக்கும் ஆனா அந்த கஷ்டத்த விட என்ன வளர்க்க நீ கஷ்டப்பட்டது தான் எனக்கு பெருசா தெரிஞ்சது அதனால நான் எதுவுமே உங்க கிட்ட கேட்டது இல்லம்மா ப்ளீஸ் இப்போவாது சொல்லுங்க அம்மா

ம்ம்.. சொல்றேன் திவ்யா
உங்க அப்பா எல்லை பாதுகாப்பு வீரர் டி.

லீவ்ல வீட்டுக்கு வரும் போது ஒரு குண்டு வெடிப்பில் உடல் சிதறி இறந்துட்டாரு.

அப்போ என்ன செய்றதுனு தெரியல காதல் கல்யாணம் பண்ணதால யாருமே எங்கள சேர்த்துக்கல எங்க அப்பா அம்மாக்கூட உங்க அப்பாவ ஏத்துக்கல அவர் செத்தும் என்னைய ஏத்துத்தாமலே இருந்துட்டாங்க.

நானும் வேற வழியில்லாம
உங்க அப்பா வீட்டுக்கு போனேன் அங்க யாருமே என்ன மதிக்கல அங்க ரெண்டு நாளைக்கு மேல இருக்க முடியில அவருக்கு வந்த பணத்தை உனக்கு எதிர்காலத்துக் தேவைப்படும்னு இருந்தேன். அதே சமயம் வேறும் கஷ்டத்தையும் மட்டும் பார்த்து வளரும் குழந்தைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தது.

உன் அப்பாவிற்கு வந்த பணத்தை வைத்து இங்க இருக்கிற ஏழை குழந்தைகள ஸ்கூல்ல படிக்க வச்சேன் நானும் வீட்டு வேலைக்கு போனேன் என் முழு மனசோடதான் இதை செய்தேன் உன்னையும் நல்லா படிக்க வச்சிட்டேன்.

இன்னைக்கு உன்ன மாதிரியே குழந்தைங்க நல்ல வேலைக்கு போக போறாங்க இது தான் நான் செய்தது திவ்யா

எனக்கு அவர் கொடுத்த மனைவி என்ற பட்டம் இருந்தாலும் அவர் இல்லாத வாழ்க்கை மிக கொடுமையானது இருந்தாலும் உனக்காக வாழ்ந்துட்டேன்



அப்றம் ஏன் அப்பா போட்டாவ மறைச்சமா?

அவர் போட்டோ வச்சா உனக்கும் மனவேதனை வரும் என்னாலும் எதிலும் கவனம் செல்லுத்த முடியாம போய்விடும் அதான் உனக்கு நான் காட்டவேயில்லை. ஏனா விதவை பொணு இவ எப்படி ஆம்பள துணை இல்லாம வாழ்ந்திட முடியும்னு பேச ஆரம்பித்தார்கள் அவர்களுக்கு முன் நான் வாழ்ந்துக் காட்ட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு
அந்த ஊரைவிட்டு வந்துட்டேன் இனி அவரை பற்றி எதுவும் கேட்காத திவ்யா

உங்க அப்பா எப்பையும் ஒன்னு சொல்லுவார் பிறந்த மண்ணுக்குக்காக உயிர் விடுவதில் பெருமை படவேண்டும் எந்த நிலையிலும் வறுத்தப் படக்கூடாது.



மனித உயிரும் மண்ணும் பிணைப்பின்
மொழியும் உணர்வும் ஒன்றே

கலங்காத தண்ணீர் இடைவிடாது துரத்தும் பகையும் துரோகமும் தலைமறை கெடுத்துவிடும் வாழ்க்கை வேண்டில்லா

வேண்டும் எதிர்கால சந்ததிக்கு பொற்காலம் குடிமாக்கள் தாகம் தீர்க்க வைக்காத அரசனும் பிணமாக வேண்டும்

எம் தாகம் தீர்க்க போர் ஒன்றே வேண்டும் எந்த மண்ணில் பிறக்கின்றோமோ அம்மணிற்காகவே உயிர் தியாகம் செய்வதே நமது கடமை.

என்று அடிக்கடி சொல்லுவார் அவர் கூட கொஞ்சநாள் தான் வாழ்ந்தேன் அந்த வாழ்க்கை மறக்கமுடியாதா வாழ்க்கை.

இது மட்டும் தான் என்னால் சொல்ல முடியும் அவர் எங்க பிறந்தார் யார் அவருக்கு அம்மா அப்பா யார் இதலாம் அதை பற்றியும் கேட்காதே.

நீ அப்பாவை பற்றி தெரிஞ்சிக்க ஆசைப்பட்டல சொல்லிட்டேன் .. கொஞ்சம் வா என்கூட

பிரோவை திறந்து தனது கணவனின் புகைப்படத்தை காட்டினால் மேரி

முதல் முறையாக அப்பாவின் முகத்தை பார்த்து அழுதாள் திவ்யா

இப்போ எதுக்கு அழுகிற கண்ண துடச்சிக்கோ நீ எப்பவும் போல இரு இப்போது நீயும் அவரை போன்றே உன் தாய் மண்ணுக்காக ராணுவத்தில் சேர்கிறாய் இதுவே எனக்கு போதும்.

நாம் பிறக்கிற மண்ணே தாய் நாடு அதற்காகவே நீ போராடு என்பது உன் அப்பா சொன்னது அதை மனதில் வைத்து நேர்மையாக செயல்படு திவ்யா

நமக்கு சொந்த ஊர் ராமேஷ்வரம் இப்போ உன் தாத்தா மாட்டினு யாருமில்லை மாமா என்று ஒருத்தர் இருந்தார் ஆனால் அவணும் ஒர் விபத்தில் இறந்துவிட்டான்

மொத்தத்தில் நமக்கு உறவென்று யாருமில்லை எதை பற்றியும் யோசிக்காமல் தூங்கு

அம்மா இவ்வளவு பெரிய விஷயத்த எப்படிமா பொறுத்துட்டு இருந்த
நானும் புரட்சி பெண் தான் பெரியார் வழி போராட்டங்களில் கலந்துக் கொண்டிருக்கிறேன் பெண் சுதந்திரத்திற்காக பல போராட்டங்களை கலந்துக் கொண்டிருக்கிறேன்


அம்மா எனக்கு இப்போ இதால வேலைக்கு பிரச்சனை வராதே
வராதுமா அவர் சம்மந்தப்பட்டது உன்னையும் என்னையும் தவிர வேற எதுவுமில்லை கவலைபப்படாதே
அப்றம் இதற்கு பிறகு எதையும் கேட்காதே சரியா
எனக்கு இதுவே போதுமா பிறகு
நான்கு மாதம் கழித்து ராணுவத்தில் சேர்ந்தாள் திவ்யா

நாட்டிற்காக போர் வீராங்கனையாக திகழ்ந்தாள்

பெண் என்பவள் பசிக்கு சாப்பிடும் உணவல்ல…
உணவை உற்பத்தி செய்யும் நிலம் என்பதை உணர்ந்துக் கொள்ளுங்கள்!

அடிமை பெண்ணாக வீட்டில் அவளை அடைத்து வைப்பதை தவிர்த்து
இந்த சமூகத்தில் புரட்சி பெண்ணாக மாற்ற வழித் துணையாக நிற்போம்

“பெண்களைப் போற்றுவோம்”

நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top