தானா வந்த சந்தனமே -18

#1
அத்தியாயம்-18


கீர்த்தியின் பதிலில் அதிர்ந்த ஆர்த்தி,ஒரு நிமிடம் செயல் இழந்து நின்றாள்.

"ஏண்டி இப்படி பண்ண??"

பாதம் பாலை, மிடரு,மிடராக ரசித்துக் குடித்தபடி, பதில் சொன்னாள்,

"நம்ம மாமி தான், வயிறு உப்புசமா இருக்குடி குழந்தே,ஏதாவது மாத்திரை வாங்கிட்டு வா, மெடிக்கல்ஸ்ல அப்டின்னாங்க. நானும் கேட்டேன்.அவன் தான் சொன்னான்.இது பவர்புள் மாத்திரை,வயசானவங்கன்னா, ஒன்னு கொடுங்க.இள வயசுனா ரெண்டு கொடுங்க, அப்டினான்.


எனக்கு ஒரு டவுட், மாமிக்கு எத்தனை கொடுக்கன்னு..??இந்த லேப்ல எல்லாம், எலிக்கு சோதனை பண்ணுவாங்களாம்,மாத்திரை கொடுத்து,இங்க எலி இல்ல, ஒரு யானை தான் இருந்துச்சு.அதான் அதுக்கு கொடுத்தேன்.செம்ம பவர்புள்,நல்ல கம்பெனி தான். ஞாபக படுத்து, அதுக்கு, ஒரு மெயில் அனுப்பனும் பாராட்டி."


"ஏண்டி,இப்படிலாம் பண்ணுற??ஒன்னு கிடக்க, ஒன்னு ஆனா, என்ன பண்ணுறது??"

"வெள்ளைக்காரன் போனான், நாட்டுக்கு சுதந்திரம் கிடைச்சுது,இந்த வெள்ளை பூசணி போனா, உங்க வீட்டுக்கு விடுதலை.அம்புட்டு தான். சிம்பிள்.."

"எருமை மாடே..ஏண்டி இப்டிலாம் பண்ணுற??யாருக்காச்சும் தெரிஞ்சா என்னாகும்..??"

"ஏன்,நீ போய் சொல்ல போறியா..??நான் சொல்ல மாட்டேன்.நீயும் சொல்லாட்டி, யாருக்கும் தெரியாது."

"நீ பண்றது, எனக்கு தான் வயித்துல புளி கரைக்குது.எத்தனை மாத்திரை டி போட்ட..??"

"மூணு தான்.. கடைக்காரன், ஒன்னு அல்லது ரெண்டுன்னு சொன்னான்.நான் கண்பியூசன்ல டவுட் ஆகி, இப்படியும் வேணாம்,அப்படியும் வேணாம்னு மூணு போட்டேன்.மொத்தமா போடலாம்னு தான் பார்த்தேன்.கிழவி புட்டுகிச்சுனா, கொலை கேஸ் ஆகி போகும்னு, மூணு மட்டும் போட்டேன்."

"அவங்க உடம்பு தாங்குமாடி??"

"அவங்க உடம்பு தாங்காட்டி, வேற எந்த உடம்பு தாங்க போகுது சிஸ்டர்.ஸ்டராங் பாடி."

"வர ,வர, நீ செய்யுறது எதுவும் சரி இல்ல..ஏன் தான் இப்படி பண்ணுரியோ..??"

"சரி,சரி புலம்பாதே, கீர்த்தி வாங்கி கொடுத்த மாத்திரை, சரி இல்லைன்னு, நாளைக்கு உலகம், உன் தங்கச்சியை, தப்பா பேசிட கூடாதுன்னு, முன் எச்சரிகையா செஞ்சா, அதை புரிஞ்சுக்காமா..புலம்ப வேண்டியது.உன்னை மாறி ஆட்கள் தான், சமுதாய முன்னேற்றத்துக்கு, தடை கற்கள்.சரி இடத்தை காலி பண்ணு.."

தன் கையில் இருந்த டம்ளரை, அவளிடம் கொடுத்தபடி சொன்னாள்.

"அறிவு கெட்டவ, ஏன் தான் இப்படி பண்ணி தொலையுறாளோ..??"

திட்டி கொண்டே, அவளிடம் டம்ளர்ரை வாங்கியவள், அவள் கையில் இருக்கும் மோதிரத்தை கவனித்து விட்டு,

"ஏய்,இது ஏது டி மோதிரம்.??புதுசா இருக்கு??"

பகீர் என்று ஆனது கீர்திக்கு.


"சென்டர் பக்கத்துல இருக்க, பான்சி ஸ்டோர்ல வாங்குனேன்."

"என் கிட்ட சொல்லவே இல்லை.."

"மறந்துருப்பேன்.."

"டிசைன் நல்லா இருக்குடி.தங்கம் மாதிரியே இருக்கு.எனக்கு ஒன்னு வாங்கிட்டு வரியா..??"

"அன்னைக்கே, இது ஒரு பீஸ் தான், இருக்குன்னு சொன்னான்.அதோட, நீங்க மகாராணி மருமகள்,கவேரிங் எல்லாம் போட கூடாது.கௌரவம் போய்டும்.."

"ரெம்ப பேசாதடி. இதை எனக்கு தா.நீ வேற வாங்கிக்கோ."

அவள் கையை பிடித்து, கழட்டப் போனாள்.
மின்சாரம் தொட்டவள் போல்,கையை வேகமாய் பின்னுக்கு இழுத்து,

"ஏய்,அறிவிருக்கா??நீ பாட்டுக்கு கழட்டுற.."


அவளை ஆச்சர்யமாய் பார்த்த அரூ,
"ஏண்டி,இவ்ளோ கோவப்படுற??எப்போவும் என்னோடாது, டிரஸ்,ஜீவெல்ஸ் பிடிச்சா, நீ எடுத்துக்குவ,உன்னோடது நான் எடுத்துக்குவேன்.இதுல இன்னிக்கு, புதுசா நடந்துக்குற..??"


"அது….இந்த டிசைன் பிடிச்சுதுன்னு, வாங்குனேன்னு சொன்னேன்ல..இன்னொன்னு கிடைக்காது,அதான்.. உனக்கு வேற டிசைன் வாங்கி தரேன்."

"அப்படி என்னடி, உலகத்துல இல்லாத டிசைன்..எனக்கு இது தான் வேணும்.தர முடியுமா??முடியாதா??"

சற்று கூட யோசிக்கவில்லை கீர்த்தி,
"முடியாது.."


"என்னாச்சு டி உனக்கு..??"

"ஒன்னும் ஆகலை,பேசாம கிளம்பு,இல்லன்னா, பூசணிக்கு கொடுத்த மாத்திரை, மிச்சம் இருக்கு.உனக்கு கலந்துருவேன். மாசமா இருக்கேன்னு பார்க்குறேன்."

"செஞ்சாலும் செய்வ டி.. நீயே வச்சுக்கோ உன் மோதிரத்தை.நான் கிளம்புறேன்."

அவள் சென்றதும்,பெருமூச்சு விட்டு,படுக்கையில் அமர்ந்தாள்.

"எருமை,ஒரு நிமிஷம் உயிரே போயிடுச்சு.பேசிட்டு இருக்கும் போதே, மோதிரத்துல கை வைக்குறா"
வாய் விட்டு புலம்பியவள்,

உடனே பார்திக்கு கால் பண்ணி, சிறிது நேரம் பேசிவிட்டு வைத்தாள்.


நாட்கள் ஓடி, இரண்டு மாதம் கடந்தது.இன்னும் ஒரு மாதத்தில்,படிப்பு முடிந்து,ஊர் செல்ல வேண்டும்.

இப்பொழுதெல்லாம் மனம், பார்த்தியின் அருகாமையை, மிகவும் தேடியது.
சந்தித்து கொள்ளும் நேரம் போதவில்லை.பேசும் வார்த்தைகள் பத்தவில்லை.


ஆர்திக்கு இது ஏழாம் மாதம். வளைகாப்பு ,ஒன்பதாம் மாதம் வைத்து கொள்ளலாம் என்று, அகிலாண்டம் கூறி விட்டார்.

இங்கு தான், எல்லா வசதியும் இருக்கிறது,எனவே, தன் பேரக்குழந்தைக்கு, இங்கு தான் சவுகர்யமாய் இருக்கும், என்று கூறி விட்டார்.

இதில், ஆர்த்தி குடும்பத்திற்கு வருத்தம் என்றாலும்,சம்மந்தியை எதிர்க்க முடியாமல், அமைதி ஆகி விட்டார்கள்.

பிரசவத்திற்கு கூட, இங்கு உள்ள பெரிய மருத்துவமனையை, முடிவு செய்து விட்டார்.அங்கு தான், ஆர்த்தி மாதாந்திர செக்அப் செல்வது.

ஒரே மருத்துவர் பார்த்தால் தான், சரியாக இருக்கும் என்று சொல்லி விட்டார்.
அதை ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டி இருந்தது.


அந்த மருத்துவர், குறித்து கொடுத்த தேதிக்கு, கொஞ்ச நாள் முன்னவே, ஆர்த்தி இங்கு வந்து விட வேண்டும், என்று அகிலாண்டம் கூறி விட்டார்.

ஆக மொத்தம், பேருக்கு, ஒரு வாரம்,பத்து நாள் வளைகாப்பு முடிந்து, ஆர்த்தி, அவள் அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டு, வருவது போல செய்திருந்தார்.
யாரும் மறுக்க முடியா வண்ணம்.


அன்று காலையில், பார்த்தி கொடுத்த மொபைலில், அவனுக்கு மெசேஜ் அனுப்பி கொண்டிருந்தாள் கீர்த்தி.
அப்பொழுது ,ஆர்த்தி இவள் அறைக்கு வரும் அரவம் கேட்கவே, அவசரமாய் குளியல் அறைக்குள் நுழைந்தாள்.


அங்கு, கீழே இருந்த சோப்பில் கால் வைத்து, வழுக்கி விழ இருந்து, கடைசி நேரத்தில் சுதாரித்து,பைப்பை பிடித்து சமாளித்து விட்டாள்.

ஆனால், கையில் இருந்த மொபைல், தண்ணீர் வாளிக்குள், தவறி விழுந்து விட்டது.

காலில் லேசாக, சுளுக்கு பிடித்து விட்டது.


இவள் பதட்டம் தெளிந்து, நிதானித்து, தண்ணீருக்குள் இருந்த மொபைலை எடுத்து பார்த்தால்,அது நீரை குடித்துவிட்டு, வேலை செய்ய மறுத்தது.

கீர்திக்கு, அழுகையே வந்து விடும் போல, இருந்தது.

குளியல் அறைக்கு வெளியே இருந்து ஆர்த்தி,
"இன்னும் சாப்பிட வராம என்னடி பண்ணுற..??வா சாப்பிட.மாமி கூப்பிட்டாங்க.."


அழுகை வெளியே தெரியாமல்,கஷ்ட பட்டு குரலை சீராக்கி,
"ஹ்ம்ம்..வரேன்.."


"இன்னும் உள்ள என்ன பண்ணுற??சீக்கிரம் கிளம்ப மாட்டியா..??அப்பா இல்லாம ,உனக்கு குளிர் விட்டு போச்சு.."

"அதான் வரேன்னு சொன்னேன்ல..ஏன் நொய், நொய்ங்குற..நீ போ..நான் வரேன்.நான் என்ன குழந்தையா..??ஆள் ஆளுக்கு அதிகாரம் பண்ணுறீங்க.."

"ஏய்,சாப்பிட கூப்பிட்டா, ஏண்டி எரிஞ்சு விழுற..??"

"எனக்கு சாப்பிட தெரியும்.உன்னை ஊட்டி விட கூப்பிட்டனா.. போ இங்கிருந்து.."

"இவளுக்கு அப்போ ,அப்போ காத்து கருப்பு, அடிக்குது..சரி நான் போறேன். என் மேல பாயாதை.."

ஆர்த்தி அங்கிருந்து சென்றதும்,சிறிது நேரம் அழுது, சமாதானம் ஆகி,முகம் கழுவி விட்டு,கீழே சாப்பிட சென்றாள்.

அவள் முகம் பார்த்து விட்டு,
"உடம்பு சரி இல்லையாடி குழந்தே??.."


"இல்ல மாமி, லேசா தலைவலி.."

"கஷாயம் தரட்டுமா..??"

"வேண்டாம் மாமி..சரி ஆகிடும்.."

"ரெம்ப வலிச்சா சொல்லுடி குழந்தே,போட்டு தரேன்.."

"ஹ்ம்ம்.."

உணவை கொறித்து விட்டு,அங்கிருந்து சென்றாள்.

மதியம் சாப்பிடாமல்,உணவை எடுத்து கொண்டு,மாமியிடம் ,சாதாரணமாய் இரண்டு வார்த்தை பேசி விட்டு,தலை வலி சரியாகி விட்டதாய் சொல்லி விட்டு, வகுப்புக்கு கிளம்பினாள்.

வகுப்புக்கு செல்ல மனமில்லாமல், மாதுவின் மெக்கானிக் ஷெட்டிற்கு சென்றாள்.

அங்கே, ஒரு காரை ரிப்பேர் பார்த்து கொண்டிருந்த பார்த்தி,இவளை ஆச்சர்யமாய் பார்த்தான்.அவன் பார்வை புரிந்தாலும்,கண்டுகொள்ளாமல்,அங்கிருக்கும் அறைக்குள் நுழைந்தாள்.

அவள் நடையில் லேசாய் வித்தியாசம். காலை தாங்கி வைத்தாள்.

இவளை கவனித்த மாதுவும், பார்வையால்,பார்த்தியிடம் 'என்ன??' என்று கேட்டான்.
பார்த்தி உதடு பிதுக்கி, தெரியாது என்று பதில் அளித்தான்.


பின் ,அவள் நுழைத்த அறைக்குள், இவனும் நுழைந்தான்.
அங்கிருந்த கட்டிலில் அமர்ந்திருந்தவள் அருகில், சென்று அமர்ந்தான்.


இவனை பார்த்ததும்,இவன் மார்பில் சாய்ந்து அழுக ஆரம்பித்தவள்,பார்த்தி, எவ்வளவு கேட்டும், காரணம் கூறவில்லை.அவன் சமாதானம் எதற்கும் ,அழுகையை விட வில்லை.
அவளே அழுது, சமாதானம் ஆகட்டும் என்று, அவன் அணைப்பில் ,வருடலில், மௌனமாய் ஆறுதல் படுத்தினான்.


கொஞ்ச நேரம் அழுது ஓய்ந்து,நிமிர்ந்தவள்,அவன் முகம் பார்த்தாள்.

"என்னாச்சுடா பொம்மு..??ஏன் இவ்ளோ அழுகை??திடிருன்னு இப்டி அழுதா,நான் என்ன நினைக்க..??என்னமோ,ஏதோன்னு பயமா இருக்குல்ல??"

மூக்கை உறிஞ்சி கொண்டு,தன் பையில் இருந்த மொபைலை எடுத்து ,அவனிடம் கொடுத்து,
"மொபைல் தண்ணிக்குள்ள விழுந்துடுச்சு..வேலை செய்யல.."


உதடு மறுபடியும் பிதுங்கி, அழத் தயார் என்று சொன்னது.

"ஊப்ஸ்.. இதுக்கா அழுகை.நான் பயந்துட்டேன்.இதுக்கு கோவப்படுவேணு நெனச்சு அழுதியா..??விடு, சரி பண்ணிக்கலாம். இல்ல புதுசு வாங்கிக்கலாம்."

முகத்தை ஷாலில் துடைத்து கொண்டு,
"அதுக்கொன்னும் அழல,எனக்கு இப்படி நடந்தது,ஏதோ, நடக்க போற அறிகுறி மாதிரி தெரியுது.அதான் மனசே சரி இல்ல.கிளாஸ்க்கு போல..இங்க வந்துட்டேன்.உங்க கூடவே இருக்கணுமுன்னு தோணுது."


"சரி, உன் காலுக்கு என்ன ஆச்சு..??"

"பாத் ரூம்ல வழுக்கி தான், மொபைல் தண்ணில விழுந்துச்சு..காலுலையும் லேசா சுளுக்கு.."

"ஓ..டாக்டர் கிட்ட போலாமா..??"

"வேண்டாம்..என் கிட்ட ஸ்பிரே இருக்கு..சரி ஆகிடும்.."

"ஹ்ம்ம்.."

அவன் கைகளை பிடித்துக் கொண்டு, தோள் சாய்ந்தாள்.

"சட்டை எல்லாம் அழுக்கு,இரு வேற மாத்திட்டு வரேன்.."

"ச்சு…பரவால்ல..எங்கேயும் போகாதிங்க.."

"சரி, எங்கேயும் போகலை.."

சிறிது நேரம், அவன் தோளில் சாய்ந்திருந்தவள், பின் நிமிர்ந்து,

"என் உள்ளுணர்வு, ஏதோ நடக்கப் போகுதுன்னு சொல்லுது.."


அவள் தோளை சுற்றி கை போட்டு, அணைத்துக் கொண்டு,
"ஒன்னும் ஆகாது.நான் பார்த்துக்குறேன்."


"எனக்கு, எங்க அப்பான்னா பயம்.அவரை எதிர்த்து, ஏதும் செய்ய தைரியம் இல்ல.. பேச மட்டும் தான் செய்வேன்.அதுவும், அவருக்கு தெரியாமா..அவரை எதிர்க்குற சூழ்நிலை வந்தா, உங்க பக்கம் இருக்க முடியுமா, தெரில..அப்படி வந்தா, என்னை வெறுத்துட மாட்டீங்க இல்ல.??."

"நிச்சயம் இல்ல..உன்னை வெறுத்தா, அது என்னையே வெறுகுற மாதிரி.."

சற்று எம்பி, அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

"என் மேல, இவ்ளோ அன்பு வச்சுருக்க உங்களுக்கு, என்ன செய்ய போறேன்?? தெரில…"

"பாதம், உந்தன் பாதம்
என்னோடு வந்தாலே, போதும் எப்போதும்.."
எப்பொழுதும் அவள் பாடுவாள்,இன்று அவன் பாடினான்.


அவன் பாடலை கேட்டு முகம் மலர்ந்தவள்.
"ஹ்ம்ம்..அப்புறம்..??"


"நீளமான கண்களே, நீண்டு வந்து தீண்டுதே!!
பாவை பாதம் பார்க்கவே, கூந்தல் இங்கு நீண்டதே!!
உளி வந்து தீண்டாமல், உருவான சிற்பம்!!
உன்னை நான் கண்டாலே,
உண்டாகும் வெப்பம்!!
நீ தானே ஆனந்த தெப்பம்..!!"


"செமையா பாடுறீங்க.."
அவன் புன்னகைத்தான்.


"ஆனா ஒன்னு..எங்க அப்பாவை எதிர்க்க முடியாட்டியும், உங்களை தவிர, வேற யாரும், என்னை நெருங்க முடியாது.."
அவள் கண்களில் ஒரு தீவிரம் தெரிந்தது.


"ச்சு.. பொம்மு நான் பார்த்துக்குறேன்..ரிலாக்ஸ் அஹ் இரு.."

"ஹ்ம்ம்…"

அன்று மாலை வரை, அங்கேயே இருந்து விட்டு,மொபைலை ரிப்பேர்க்கு கொடுத்து விட்டு,இருவரும் வழக்கம் போல் கிளம்பி வந்தார்கள்.

அவளை தெரு முனையில் இறக்கி விட்டு,கிளம்ப போனவனின் கை பிடித்துக் கொண்டாள்.

"சந்தோசமா..இரு..நான் இருக்கேன்..எதையும் குழப்பாதை மனசுல போட்டு.."

"ஹ்ம்ம்…"

"இன்னும் ஏன்?? உம்முன்னு இருக்க..சிரி.."

அவனை கஷ்டப்படுத்த விரும்பாமல் ,புன்னகைத்தாள்.

"இதான் என் பொம்மு.."
அவள் கன்னத்தில் தட்டி விட்டு,கிளம்பினான்.


அன்று இரவு, மாடியில் சந்தித்த போதும்,சரியாய் பேசாமல், மௌனமாய், அவன் தோளில் சாய்ந்திருந்தாள்.
எப்பொழுதும், வாய் வலிக்கப் பேசுபவள்,இன்று மௌனத்தின் பிடியில்.


அவளை சிரிக்க வைக்க, பார்த்தி பலதும் பேசி,மனதை மாற்ற முயற்சிதான்.
அதில் சற்று தெளிந்தவள்,


"போன் எப்போ கிடைக்கும்..??"

"நாளைக்கு, இல்ல நாள கழிச்சு தர்ரேன்னாங்க.."

"ஹ்ம்ம்.."

"இன்னிக்கு ,ரெம்ப அழகா இருக்கியே.."

"பொய் சொல்லாதீங்க.."

"கண்டுபிடிச்சுட்ட சரியா.."

"உங்களை.."

அவனை அடிக்க கை ஓங்கி,பின், அவன் மார்பில் முகம் புதைத்தாள்.

அவள் முகம் நிமிர்த்தி,அவள் இதழ்களை சிறை செய்தான்.

சில நிமிடங்களில், அவள் முகம் விட்டு விலகினான்.

முகம் சிவக்க, நிலம் பார்த்தாள்.

அவள் கன்னம் தட்டி,
"போ,போய் தூங்கு.."


அவன் முகம் பார்க்காமல்,தலை அசைத்து விட்டு,கீழ் இறங்கி சென்றாள்.

கனவு லோகத்தில் மிதப்பவள் போல..கண்கள் மயக்கத்தில் இருக்க..முகம் சிவக்க,முகத்தில் ஒரு மந்தகாச புன்னகையுடன், அறைக்குள் நுழைந்தாள்.


பார்த்தியும், அவள் இறங்கிச் சென்றதும்,இவனும் இறங்கிச் சென்றான்.முகத்தில் புன்னகை துலங்க,தலையை கோதிக்கொண்டு, தன் அறை நோக்கி சென்றான்.

இருவருக்கும் தெரியவில்லை.இது தான் அவர்கள், மொட்டை மாடியில் சந்திக்கும், கடைசி சந்திப்பென்று.

 
SINDHU NARAYANAN

Well-Known Member
#2
Nice update...

அய்யோ என்ன இப்படி
சொல்லீட்டிங்களே...

உன் பாதம் போகும் பாதை
நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசைப்பட்டு
பார்த்துப் பார்த்து நின்னேனே
உன் பாதம் போகும் பாதை
நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசைப்பட்டு
பார்த்து பார்த்து நின்னேனே

உன் முகம் பார்த்து நிம்மதி ஆச்சு
என் மனம் தானா பாடிடலாச்சு
என்னோட பாட்டு சத்தம்
தேடும் உன்னை பின்னாலே
எப்போதும் வந்து தொட்டு
பாடப்போறேன் தன்னாலே
 
Last edited:

Advertisement

New Episodes