தமிழனா இருந்தால் ஷேர் பண்ணு!!

Advertisement

Vishnu Priya

Writers Team
Tamil Novel Writer
தமிழனா இருந்தால்...ஷேர் பண்ணு!!
*************************************

********************************************
"தமிழனா இருந்தால் ஷேர் பண்ணு!!"
மேற்கூறப்பட்ட வாசகம் உங்களுக்கு ரொம்ப பரிச்சயமானதாக இருக்கலாம்.

ஆமாம் வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் மற்றும் இதர பல சமூக வலைத்தளங்களின் ஃபார்வர்ட் மெஸேஜ்களில் வரும் அதே வாசகம்!!

முழுதும் படிக்காமல்.. தலைப்பைப் பார்த்ததும் ஷேர் பண்ணனும்னு அவசியமில்லை. இறுதி வரை வாசித்து விட்டும் ஷேர் பண்ணலாம்!

உலகத்தின் மூத்த மொழி தமிழ் என்பதையும், தமிழ் அன்னையின் குழந்தைகள் இன்று உலகம் முழுவதும் பரவியிருப்பதைப் போலவே, அதன் மொழிச் சொற்களும் வேற்றுமொழிகளில் கலந்துள்ளது என்பதையும் மறுக்க யாராலும் முடியாது.

“கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்து வாளோடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க் குடி”என்னும் சொற்றொடர் தமிழ் பேசும் மக்களிடையே புழங்குவதும் இதனாலேயே ஆகும்.

இத்தனை சிறப்பு வாய்ந்த நம் தாய் மொழி தமிழின் ஆரம்பம், எழுச்சி பற்றி அறிந்து வைத்திருப்பது ஒவ்வொரு தமிழனின் தலையாய கடமை என்று யான், இப்பேதை கருதுகிறேன்.

இருப்பினும் இலக்கணமும், இலக்கியமும் ஒருங்கே எழுந்தது என்று சிற்சில வரலாற்றாசிரியர்கள் கூறுவதிலிருந்து, “சங்க காலம்”தமிழில் காதலும், வீரமும் முக்கியம் வாய்ந்ததை உணர்த்தும் காலம் என்று ஒரு முடிவுக்கு வரலாம்.

அக்கால தென்னகத்திலே, முடியுடை மூவேந்தர்களாகிய சேர, சோழ, பாண்டியன் என்னும் பேரரசர்களும், காரி, பாரி முதலிய சிற்றரசர்கள் பலரும் வேங்கடம் முதல் குமரி வரை உள்ள பிரதேசத்தை எல்லையாகக் கொண்டு ஆட்சிய நடத்திய தமிழின் பொற்காலம் சங்ககாலம் எனக் கொள்ளப்படுகிறது.

கி. பி முதல் மூன்று நூற்றாண்டுகளை சங்ககாலம் என வரையறுக்கிறது தமிழ் கூறும் நல்லுலகு!

சங்ககாலத்து மக்கள் தம் வாழ்வு முறைகளை செய்யுள் அமைத்து பாடிய நற்காலம் அது.

அத்தகைய சீரும், சிறப்புமிக்க சங்ககாலத்திலே ஈழத்தமிழர்களின் பங்கு என்ன?
அதைத் தான், “தமிழனா இருந்தால்.. ஷேர் பண்ணு!!”என்னும் இக்கட்டுரை பேசப்போவதை நீவிர் காணலாம்.

முதல்ச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என முச்சங்கம் அமைத்து , இயல், இசை , நாடகம் என முத்தமிழ் வளர்த்த சங்கத்திலே ஐநூறுக்கும் மேற்பட்ட புலவர்கள் தமிழ் நாட்டின் பற்பல இடங்களில் இருந்தும் வந்து, பல செய்யுட்களையும், தனிப்பாக்களையும் இயற்றினர் என்பார் பேராசியர். வீ. செல்வநாயகம் அவர்கள்.

அந்தப்பாக்களில் கடற்கோள்களினால்... அதாவது சுனாமிகளினால் அழிந்தது போக எஞ்சியவற்றின் அருமை, பெருமைகளை உணர்ந்து பிற்காலத்தில் வந்த புலவர்கள் அதை எட்டுத் தொகை , பத்துப்பாட்டு என்று தொகுத்தனர் என்பர் ஆன்றோர் .

அத்தகைய நூல்களில் நாட்டம் கொண்டு, நான் பித்துப் பிடித்து அலைந்த பொழுதினிலே என் கண்களுக்கு விருந்தாக சிக்கியவர் தான் “ஈழத்துப் பூதன்தேவனார்”.

தன் பெயரடையிலேயே “ஈழத்தை”த் தாங்கி நிற்பவர் ஈழத்துத் தமிழர் என்று கொள்வது தானே தகும்? அதையே பேராசியர். ஆ. வேலுப்பிள்ளையும் கூறுகிறார்.

ஈழமும், தமிழகமும் அந்தாடிக்காவும், ஆர்ட்டிக்காவுமா என்ன? இல்லை அயல் நாடுகள் அல்லவா?

ஈழத்திலிருந்து பாண்டிய நாடாம் மதுரையை நோக்கி தன் தந்தையோடு விரைந்தவர்... அங்கே இருந்த கடைச்சங்கத்தில் சேர்ந்து பாக்கள் இயற்றினார் என்கிறார், நற்றிணைக்கு தெளிவுரை எழுதிய பேராசியர். அ. நாராயணசாமி.

இவரது பாடல்களாக அகநானூற்றில் மூன்றும், குறுந்தொகையில் மூன்றும், நற்றிணையில் ஒன்றுமாக மொத்தம் ஏழு பாடல்களை நாம் காணலாம்.

ஈழத்தின் இலக்கிய வளர்ச்சியின் முன்னோடியாகத் திகழும் இப்புலவர், பாலை நிலத்தின் உடன் போக்கையும், குறிஞ்சியின் புணர்தலையும் அழகாய் உணர்த்தும் காதல் ரசம் சொட்டும் பாடல்கள் இயற்றியிருப்பதைக் காணலாம்.
அதற்கு சிறு எடுத்துக்காட்டாக கீழ்வரும் பாடலைக் கூறலாம்.

“நினையாய் வாழி தோழி” என்னும் எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில், முன்னூற்றி எண்பத்தி மூன்றாவது பா அது.

தலைவனுடன், தலைவியை உடன்போக்கு, அதாவது அக்கால வழக்கப்படி, ஊர் மக்கள் அனைவரும் அறியா வண்ணம் “அப்ஸ்கான்ட்” ஆக வேண்டி..தலைவிக்கு ஆலோசனை கூறுகிறாள் தோழி.
hcxukpy2.jpg

அதுவும் எப்படியாப்பட்ட தோழி? மதிநுட்பம் நிறைந்த தோழி.

“நீ தலைவனுடன் உடன் சென்று வாழ்!” என்று வெறுமனே கூறாமல், அழகான உள்ளுறை உவமம், (வெளிப்படையாக ஓர் உவமை இருக்க..மறை பொருளில் இன்னொரு உவமையை உணர்த்துவது உள்ளுறை உவமம்) ஒன்றைக் கையாண்டு கூறுகிறாள் தோழி.

தன்னுடைய உப்பிய கன்னங்களில் மதநீரால் வழியச் செய்யும் யானைக் கூட்டத்துக்கு எல்லாம் தலைமையேற்கும்.. தலைமை யானை, தன்னை எதிர்க்க வரும் புலியொன்றை.. தான் எதிர்க்காமலேயே அழிந்துபடச் செய்கிறது.

யானையைத் தாக்கப் பாயும் புலி..யானையின் வெண் தந்தத்தின் கூர்மையில், சிக்கி.. வாய் பிளக்கப்பட்டு அநியாயமாக இறந்து போகிறது.
8w2lvkxz.jpg

அது போலவே உன் தலைவனும், தன்னை எதிர்ப்பவர்களை .. எதிர்க்காமலேயே அழிந்துபடச் செய்யக் கூடியவன்.

வருங்காலத்தை நிலனத்து.. பயப்படாமல் அவனுடன் உடன் சென்று கூடி வாழுமின் என்று ஆலோசனை கூறும் அழகிய பாடல் அது.

இது போன்ற இலக்கிய நயமும், கற்பனைக்கு தீனி போடும் அழகிய கற்பனை வளமும் நிறைந்த பாக்கள் ஈழத்துப் பூதன்தேவனாருடைய பாக்கள் என்பதையும் யாம் அறியலாம்.

ஈழத்தின் தமிழ் இலக்கிய வளர்ச்சியினைப் படிக்க நாட்டம் கொண்ட எவரும், இந்த “ஈழத்துப் பூதன்தேவனார்” என்னும் பெயரைக் கேட்காமல் அடுத்த கட்டத்துக்கு போயிருக்க மாட்டார்கள்.

ஆக, தமிழ் மொழியின் வளர்ச்சியில் ஈழத்தமிழர்களின் பங்கு என்பது இன்று நேற்றல்ல. சங்ககாலத்திலிருந்தே தொடங்கியது என்பதை இதனூடாக நீங்கள் அறியலாம்.

தமிழ் மொழியால் ஈழத்தை சிறக்கச் செய்த கற்பனை வளமும், சொல்வளமும் நிறைந்த ஓர் புலவன் பற்றி அறிந்த பின்னும், ஒரு தமிழச்சியாக இருந்தும், இதை ஷேர் பண்ணாமலும் இருக்க முடியுமா சொல்லுங்கள்?

அதன் விளைவே இந்த சிறு கட்டுரை.
நன்றி.
இப்படிக்கு,
ஈழத்திலிருந்து,

விஷ்ணுப்ரியா.
 
Last edited by a moderator:

n.palaniappan

Well-Known Member
தமிழனா இருந்தால்...ஷேர் பண்ணு!!
*************************************

தலைப்பைப் பார்த்ததும் என்ன ஏதுன்னு பதறாதீங்க மக்களே... நம்ம ஷெண்பாமேம் "சிருஷ்டி" ன்னுமின்னிதழ் ஆரம்பித்தது உங்களில் அநேகம் பேருக்கு தெரிந்திருக்கலாம்.. போன வருட மேமாத இதழுக்காக எழுதிய சின்ன ஆர்ட்டிக்கல் தான் இது!! உங்களாண்ட இதை சமர்ப்பிப்பதில் மகிழ்ச்சி

:: TVU ::
 
Chitrasaraswathi

Well-Known Member
இன்றும் ஈழத்து தமிழர்கள் தமிழை உலகளவில் வளர்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதும் உண்மைதான்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top